Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

ஆசை ஊஞ்சலில் ஆடும் வேளையில்..!
ஆசை ஊஞ்சலில் ஆடும் வேளையில்..!
ஆசை ஊஞ்சலில் ஆடும் வேளையில்..!
Ebook101 pages33 minutes

ஆசை ஊஞ்சலில் ஆடும் வேளையில்..!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

மஞ்சு காவல் நிலையத்துக்குள் நுழைந்தாள்.
 போலீஸ் அதிகாரியிடம் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டாள்!
 அவர் உற்றுப் பார்த்தார்.
 அந்தப் பார்வையில் இருந்தது பரிதாபமா இல்லை எகத்தாளமா எனப் புரியவில்லை!
 அவர் அவளை உட்காரச் சொல்லவில்லை!
 எழுந்து உள்ளே போனார்!
 சில நொடிகள் கழித்து அவர் திரும்பிவந்தார்.
 பின்னால் இரண்டு கான்ஸ்டபிள்!
 மத்தியில் ஜெயன்!
 ஜெயன் மஞ்சுவை ஒரு நொடி பார்த்துவிட்டு சட்டென தன் தலையைத் தாழ்த்திக் கொண்டான்.
 அந்தக் கண்களில் ஒரு சோகம், லேசான குற்ற உணர்வு, பீதி எல்லாம் இருந்தது!
 "ம்! என்ன பேசணுமோ, உங்க சம்சாரத்துக்கிட்ட பேசுங்க!"
 ஜெயன் சுற்றிலும் விழிகளை சுழலவிட்டான்.
 தனிமை தரப்படவில்லை!
 'எல்லாருக்கும் மத்தியில் எப்படிப் பேசுவது?'
 மஞ்சு குரலைத் தழைத்துக் கொண்டாள்."கல்யாண மண்டபத்துக்குப் போகணும்! மாப்பிள்ளை வீட்டுக்காரங்களுக்கு எந்தத் தகவலும் தெரியாது! நான் இப்ப என்ன செய்யறது?"
 முடிக்கும்போது அழுகை வந்தது!
 ஜெயனால் ஒன்றுமே பேச முடியவில்லை!
 மஞ்சு திரும்பி, அந்த அதிகாரியிடம் வந்தாள்.
 "சார்! இவரோட தங்கைக்கு நாளைக்குக் கல்யாணம்!"
 "தெரியும்மா! அரெஸ்ட் பண்ணினதும், அழுதுகிட்டு அதைத்தான் சொன்னார்!"
 "அதை நடத்தி வைக்க இவர் வரமுடியுமா?"
 "ஸாரிமா! அதுக்கான வாய்ப்பே இல்லை! இவர் ஏறத்தாழ நாலு வருஷங்களா கள்ளக் கடத்தல் தொழில்ல ஈடுபட்டிருக்கார். ரொம்ப சாமர்த்தியமா நாலஞ்சு பேரா அதை நடத்தறாங்க! சட்டத்தோட கண்ல மண்ணைத் தூவிட்டு, எக்ஸ்போர்ட் பிஸினஸ்னு பேருக்கு ஒரு ஆபீசை திறந்து, அதுக்கான லெட்டர் பேட் எல்லாம் தயார் பண்ணி, வங்கிக் கணக்கு திறந்து ரொம்ப சாதுர்யமா நடத்தறாங்க! இப்பத்தான் நாங்க பிடிச்சிருக்கோம். இதோட பின்னணில என்னல்லாம் இருக்குனு அலசத் தொடங்கியிருக்கோம்."
 மஞ்சு மிரண்டாள்.
 "இவரை வெளில விட்டா தடயங்களைக்கூட கலைக்கக்கூடும். அதனால இவருக்கு ஜாமீன் கூட தர முடியாது!"
 "சார்... கல்யாணம்?"
 "இப்படி ஒக்காருங்கம்மா!"
 "இருக்கட்டும் சார்!"
 "இன்னிக்கு ராத்திரிக்குள்ளே உங்க வீட்டை சோதனை போடப்போறோம். எது அகப்பட்டாலும், அது சட்டபூர்வமல்லாததா இருந்தா, முடக்கிடுவோம்!"
 மஞ்சு மிரண்டாள்

Languageதமிழ்
PublisherPocket Books
Release dateDec 7, 2023
ISBN9798223111740
ஆசை ஊஞ்சலில் ஆடும் வேளையில்..!

Read more from Devibala

Related to ஆசை ஊஞ்சலில் ஆடும் வேளையில்..!

Related ebooks

Related categories

Reviews for ஆசை ஊஞ்சலில் ஆடும் வேளையில்..!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    ஆசை ஊஞ்சலில் ஆடும் வேளையில்..! - Devibala

    1

    வேதாவின் கல்யாணத்துக்கு இன்னும் பத்து நாட்களே இருந்தன!

    அண்ணன் ஜெயன் பரபரப்பாக இருந்தான்.

    மஞ்சு! எல்லாம் தயாராயிடுச்சா? எதுவும் விட்டுப் போயிடுச்சா பாரு!

    இல்லீங்க! முதல்லயே பட்டியல் தயார் பண்ணியாச்சு! நான்தான் செக் பண்ணிட்டே வர்றேனே! - எல்லாம் வாங்கியாச்சு! வீடியோ, போட்டோ, மேளம், சமையல் கான்ட்ராக்ட் எல்லாத்தையும் மறுபடியும் ஒரு தடவை ஞாபகப்படுத்திடுங்க!

    வேதா புறப்பட்டுக் கொண்டிருந்தாள்.

    அன்று அவள் வேலைக்குப் போகும் கடைசிநாள்!

    வரப்போகும் புகுந்த வீடு வசதியானது! வேதாவை ‘வேலை பார்க்க வேண்டாம் - ராஜினாமா செய்துவிடு’ என்று உறுதியாகச் சொல்லிவிட்டார்கள்.

    ஏழாயிரம் ரூபாய் சம்பளம். பதவி உயர்வுக்கெல்லாம் வாய்ப்புள்ள நல்ல வேலை! வேதாவுக்கு ராஜினாமா செய்யவிருப்பமில்லை!

    அண்ணனும், அண்ணியும் கூடிப் பேசினார்கள்.

    மாப்பிள்ளை நல்ல படிப்பு! அடிக்கடி வெளிநாட்டுக்குப் போய் சம்பாதிக்கும் வேலை!

    சொந்த வீடு, கார் என சகல வசதிகளும் உள்ள குடும்பம்! இந்த வாய்ப்பை விடக்கூடாது! நாளைக்கு அங்கு வாழத்தொடங்கி, அவர்கள் மனதில் இடம் பிடித்துவிட்டால், அவர்கள் சம்மதித்தால் வேறு வேலைகூடத் தேடிக் கொள்ளலாமே!

    வேதாவை சம்மதிக்க வைத்துவிட்டார்கள்.

    அவர்கள் பெரிய இடம் என்பதால், எதிர்பார்ப்பும் பெரிதாக இருந்தது!

    ஐம்பது சவரன் நகை - கையில் ஐம்பதாயிரம் ரொக்கம் மற்றும் பாத்திரங்கள், துணி வகைகள், கட்டில், பீரோ இத்யாதிகள் - பெரிய ஏஸி மண்டபம் - ஆயிரக் கணக்கில் மக்கள் வருவார்கள் என சொல்லிவிட்டார்கள்.

    ஜெயன் கணக்குப் போட்டான். எட்டிலிருந்து பத்து லட்சம் வரை வந்தது!

    அந்த அளவுக்கு செலவழிக்க வேண்டாம் என வேதா தடுத்தாள்.

    ஜெயன் கேட்கவில்லை!

    எங்களுக்கொரு குழந்தை இல்லை. மகளைப் போல உள்ளது நீதான். உனக்குச் செய்யாம வேறு யாருக்குச் செய்யப் போறோம்?

    அண்ணி மஞ்சுவுக்கும் நல்ல மனசு!

    வேதாவை தன் மகளைப் போலதான் மஞ்சு கருதி வந்தாள்.

    அந்தப் பாசத்துக்காக எதைச் செய்யவும் மஞ்சு தயாராக இருந்தாள்.

    நாலு வருஷங்களுக்கு முன்புவரை ஜெயன் சாதாரண உத்யோகத்தில்தான் இருந்தான்!

    நண்பர்கள் இருவருடன் கூட்டு சேர்ந்து எக்ஸ்போர்ட் பிஸினஸ் ஆரம்பித்தான்!

    முதலில் மஞ்சுவின் நகைகளை விற்று, இருந்த வேலையைவிட்டு அதில் கிடைத்த பணத்தையும் போட்டுத்தான் இறங்கினான்.

    மஞ்சுகூட பயந்தாள்.

    இந்த பிஸினஸ் தேறாவிட்டால் தெருவுக்குத்தான் வரவேண்டும் என்ற நிலை!

    ஆனால் அதிர்ஷ்டம் இருந்தது. சூடு பிடித்துக் கொண்டது!

    ஒரே வருடத்தில் நகைகளை மீட்டு, கடன்களையும் அடைத்துவிட்டான்.

    அடுத்த வருஷமே ஆயிரம் சதுர அடியில் சின்னதாக ஒரு ஃப்ளாட்டும், மூன்றாவது வருஷம் ஒரு சான்ட்ரோ காரும் வாங்கிவிட்டான்!

    இதோ தங்கை கல்யாணத்துக்காக பணம் திரட்டுகிறான்.

    திரும்பிப் பார்ப்பதற்குள் குடும்பம் நல்ல நிலைக்கு வந்துவிட்டது!

    வேதாவும் இந்த நாலு வருஷங்களில் ஒரு ராஜகுமாரி போலதான் இருக்கிறாள்.

    அவள் சம்பாதிக்கும் பணம்கூட அவள் சேமிப்பில்தான்.

    இன்னும் பத்து நாட்களில் கல்யாணம்!

    தேனிலவுக்கு சிங்கப்பூருக்கு தங்கையை அனுப்பலாம் என்று ஜெயன் யோசித்துக் கொண்டிருக்கிறான்.

    வேதா அலுவலகம் வந்துவிட்டாள்.

    உயர் அதிகாரியிடம் தன் ராஜினாமா கடிதத்தைக் கொடுத்தாள்.

    வேதா! நீ ராஜினாமா செய்யத்தான் வேணுமா?

    பிறந்த வீடு, புகுந்த வீடு ரெண்டு பேரும் சொல்லும்போது நான் எதிர்த்து நிக்க முடியுமா சார்? சரி! தேவைப்பட்டா நாளைக்கு இதே கம்பெனில வேலை காலியா இருந்தா சேர்ந்துக்கறேன்!

    சரி! இப்ப உன் ராஜினாமாவை நான் ஏத்துக்கலை! நீ தேனிலவெல்லாம் முடிச்சிட்டு வீடு திரும்பி செட்டில் ஆக ஒரு மாசம் ஆகுமா? அதுவரைக்கும் இதை லீவா எடுத்துக்கறேன்! அப்புறம் உன்னை விடுவிச்சிர்றேன்!

    வேதா சிரித்தாள்.

    உங்களுக்கு என்னை விட விருப்பமில்லையா?

    நீ புத்திசாலி - நல்ல வேலையாள்! உன்னை மாதிரிப் பெண்களை இழக்கக்கூடாது! அது மட்டுமில்லை...! கோடீஸ்வரனுக்கே வாக்கப்பட்டாலும், ஒரு பெண் தன் கால்ல நிக்கறதுதான் அவளுக்கு பாதுகாப்பு. இது என்னோட தாழ்மையான அபிப்ராயம்!

    வேதா சிரித்தாள்.

    கல்யாணத்துக்கு வரும்படி மறுபடியும் எல்லாருக்கும் அழைப்பு விடுத்துவிட்டுப் புறப்பட்டாள்.

    கொஞ்சம் கடை வீதியில் வேலைகளை முடித்துக் கொண்டு, மிச்சமிருந்த ஓரிருவருக்கு அழைப்பிதழைக் கொடுத்துவிட்டு வீடு திரும்பினாள்!

    அண்ணன் ஜெயன் பேக் செய்து கொண்டிருந்தான்!

    என்னண்ணே! வெளியூரா?

    ஆமாம்மா! நாலு நாளைக்கு சிங்கப்பூருக்குப் போக வேண்டிய அவசர வேலை! நிறுத்த முடியலை! ஓடி வந்துர்றேன்!

    கல்யாணத்துக்கு பத்து நாட்கள்தான் இருக்கு! அது முடிஞ்சிட்டு போகக்கூடாதா?

    எனக்கு அக்கறையில்லையா மஞ்சு! இந்த நாலு நாள் போயிட்டு வந்தா, ஒரு லட்சம் ரூபா கிடைக்கும். வேதாவுக்கு ஏதாவது செய்யலாமில்லையா?

    வேதா பூரிப்புடன் அண்ணனைப் பார்த்தாள்.

    ‘எந்த நேரமும், என் ஞாபகம்தான்.’

    ‘நான் ரொம்பக் கொடுத்து வச்சிருக்கேன். இந்த சுதந்திரமும், சந்தோஷமும் எனக்கு அங்கே கிடைக்குமா?’

    ஜெயன் புறப்பட்டுவிட்டான்!

    இங்கே மஞ்சுவுக்கு நிறைய வேலைகள் இருந்தன!

    திரும்பிப்

    Enjoying the preview?
    Page 1 of 1