Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Kattil Pazhakkam
Kattil Pazhakkam
Kattil Pazhakkam
Ebook87 pages28 minutes

Kattil Pazhakkam

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Family Based Fiction Written By Devibala
Languageதமிழ்
Release dateMay 2, 2020
ISBN9781043466930
Kattil Pazhakkam

Read more from Devibala

Related to Kattil Pazhakkam

Related ebooks

Reviews for Kattil Pazhakkam

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Kattil Pazhakkam - Devibala

    1

    "யாரந்த பையன்?"

    அம்மா...! நீ... நீ...?

    கேட்ட கேள்விக்கு பதில்! யாரந்த பையன்? எத்தனை நாளா உனக்குப் பழக்கம்?

    சரயு அம்மாவை பீதியுடன் பார்த்தாள்.

    அஞ்சாறு மாசமாவே பழக்கம்.

    கம்ப்யூட்டர் சென்டர் வச்சு நடத்தறார். பேரு அஸ்வின்!

    அவனோட குடும்பம்?

    அப்பா ஃபுட் கார்ப்பரேஷன்ல வேலை பாக்கறார். அம்மா ஸ்கூல் டீச்சர்! அது மட்டும்தான் தெரியும்!

    இவன் படிச்சிருக்கானா?

    ம்! பி.காம் முடிச்சிட்டார். கம்ப்யூட்டர் தெரியும். வேலை தேடி ஒரு வருஷமா எதுவும் சரியா கிடைக்கலை! பேங்க் லோன் வாங்கி, இந்த கம்ப்யூட்டர் சென்டர் வச்சிருக்கார்!

    அம்மா சரயுவையே பார்த்தாள்.

    சரி! நாளைக்கு ஈவினிங் அவனை இங்கே வீட்டுக்குக் கூட்டிட்டுவா?

    சரிம்மா!

    மகள் உள்ளே போனதும் கவலையுடன் அவளைப் பார்த்தாள் ஆனந்தி!

    ‘கடவுளே! இருபது கூட நிரம்பலை! அதுக்குள்ள காதல் வந்தாச்சு! பையன் நல்லவனா இருக்கணும். கல்யாணம் வரைக்கும் இது போகுமா?’

    அம்மாவிடம் பாரத்தை இறக்கி வைத்ததில், சரயு லேசாகி விட்டாள்.

    சரயு பெண்கள் கல்லூரி ஒன்றில் இறுதி வருட கம்ப்யூட்டர் சயின்ஸ் படிக்கிறாள். தவிர எக்ஸ்ட்ரா டிப்ளமாக்களை வாங்க கம்ப்யூட்டர் வகுப்பில் ஒரு வருடம் முன்புதான் சேர்ந்தாள்.

    புத்திசாலிப் பெண்! பார்க்கவும் துருதுருவென்று அழகாக இருப்பாள்.

    எல்லாரிடமும் கலகலப்பாகப் பழகும் பெண்.

    பார்த்த பத்தாவது நிமிடம் பச்சக்கென ஓட்டிக் கொள்ளும் சுபாவம்!

    சரயுவை எல்லாருக்கும் பிடிக்கும்!

    அம்மா ஆனந்தி தனியார் நிறுவனமொன்றில் உயர் அதிகாரி! வயது நாற்பது. தோற்றத்தில் முப்பதுகளின் மத்தியில் இருப்பது போன்ற இளமை! இத்தனைபெரிய பெண்ணுக்கு அம்மா என்று சத்தியம் செய்தால் கூட நம்ப மாட்டார்கள்!

    சமீபத்தில் கட்டிய சொந்த வீடு! வீட்டில் ஓரளவு எல்லாவசதிகளும்!

    மகளுக்கு ஆனந்தி எந்தக் குறையும் வைக்கவில்லை!

    சரயு செல்லமாக, ஓரளவுக்கு பிடிவாதமாக வளர்ந்த பெண்தான்!

    அதே சமயம் நல்ல பெண்!

    மறுநாள் கல்லூரி முடிந்து பிற்பகல் 3 மணிக்கு கம்ப்யூட்டர் வகுப்புக்கு சரயு வந்தபோது அஸ்வின் காத்திருந்தான்.

    அஸ்வின்! நீயும் நானும் லவ் பண்றது அம்மாவுக்கு எப்படியோ தெரிஞ்சு போச்சு!

    அப்படியா?

    நானும் சொல்லிட்டேன். இனி மறைக்க முடியாது. மறைக்கவும் கூடாது!

    ரொம்ப திட்டினாங்களா?

    எங்கம்மா அப்படியெல்லாம் அநாகரீகமா நடந்துக்க மாட்டாங்க! உன்னைக் கூட்டிட்டு வரச்சொன்னாங்க!

    எப்ப?

    இன்னிக்கு ஈவினிங்!

    சரி! போகலாம்!

    பளிச்சென அவனிடமிருந்து பதில் வந்தது.

    சற்று கழித்துக் கேட்டான் மெதுவாக.

    ரொம்பக் கண்டிப்பானவங்களா உங்கம்மா?

    ஓரளவு! ஆனா நியாயமானவங்க!

    சரி! நான் வர்றேன்!

    ஆனந்தி அலுவலகம் முடிந்து வீடு திரும்ப இரவு ஏழு மணியாகும். ஆபீஸ் கார் அவளை இறக்கி விட்டுப் போகும்!

    சரயு கம்ப்யூட்டர் வகுப்பு முடிந்து ஆறுக்கே வந்து விடுவாள். இரவு உணவுக்கான ஏற்பாடுகளைச் செய்து விடுவாள். ஆனந்தி, களைத்து வரும்போது சூடான காபி தயாராக இருக்கும்!

    நீ எதுக்குடா ராஜா கஷ்டப் படற? அம்மா... நான் வந்து செஞ்சுக்க மாட்டேனா?

    பாவம்மா நீ! கஷ்டப்படற! இதைக் கூட உனக்கு நான் செய்யலைனா எப்படி? நானும் எப்ப கத்துக்கறது?

    சரயுவுக்கு புத்தி அதிகம்!

    சமையல் வகைகளை செய்யக் கற்றுக்கொண்டு விட்டாள்...

    அஸ்வினுடன் ஆறரைக்கு சரயு வர, ஆனந்தி அப்போதுதான் வந்திருந்தாள்.

    சீக்கிரம் வந்துட்டியாம்மா?

    ஆமாண்டா! சரி வா! வாங்க தம்பி! ஒக்காருங்க!

    அஸ்வின் கூச்சத்துடன் நாற்காலி நுனியில் உட்கார்ந்தான்.

    ஆனந்தி நைட்டிக்கு மாறி, முகம் கழுவிக் கொண்டு டவலால் துடைத்தபடி உள்ளே வந்தாள்.

    அதற்குள் சரயு இருவருக்கும் காபி கொண்டுவந்துவிட்டாள்.

    அதைப் பருகி முடித்த ஆனந்தி நிமிர்ந்தாள்.

    சொல்லுங்க தம்பி! கம்ப்யூட்டர் சென்டர் நல்லா ஓடுதா?

    இன்னொரு கிளை கூட எங்கயாவது தொடங்கலாம்னு இருக்கேன்!

    வருமானம் எப்படி இருக்கு?

    எல்லா செலவும் போக, சுலபமா பதினஞ்சாயிரம் ரூபா நிக்குது ஆன்ட்டி!

    உங்கப்பா, அம்மா ரெண்டு பேரும் வேலை பாக்கறாங்க இல்லையா?

    ஆமாம்!

    கூடப் பிறந்தவங்க?

    ஒரு அண்ணன் இருக்கான்! பேங்க்ல வேலை பாக்கறான். என்னை விட அஞ்சு வயசு மூத்தவன்! இப்ப இருபத்தியெட்டு ஆச்சு!

    "அவர்

    Enjoying the preview?
    Page 1 of 1