Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

ஒரு வானம் இரு நிலவு..!
ஒரு வானம் இரு நிலவு..!
ஒரு வானம் இரு நிலவு..!
Ebook140 pages44 minutes

ஒரு வானம் இரு நிலவு..!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

சரண்யா, கலைக்கல்லூரியில் இரண்டாம் ஆண்டு இரசாயனம் படிப்பவள். கோபிகாவும் அதே வகுப்புதான்.
 கோபிகா, சரண்யா அளவுக்கு அழகோ, காண்போரைக் கட்டி நிறுத்தும் வசிகரமோ கொண்டவள் அல்ல.
 சுமார் ரகம்தான்.
 ஆனால் பயங்கர புத்திசாலி. கற்பூர புத்தி. ஒருமுறை சொன்னால் காந்தமாய்ப் பிடித்துவிடுவாள்.
 அந்த வகுப்பில் யாருக்கு சந்தேகம் வந்தாலும், கோபிகாதான் தெளிய வைப்பாள்.
 பேராசிரியர்களுக்கு கோபிகாவிடம் தனிப் பாசம் உண்டு! சரண்யாவுக்கு கோபிகா நெருங்கிய தோழி இல்லை. பாட சம்பந்தப்பட்ட பேச்சுகளில் மட்டும்தான் நெருக்கம்!
 சரண்யாவைச் சுற்றி ஒரு வசதி படைத்த வட்டம் இருக்கும்! கார், செல்போன் இத்யாதிகள் உண்டே!
 கோபிகா எதிலும் கலந்துகொள்ளமாட்டாள்.
 தானுண்டு, தன் பாடமுண்டு!
 அழகு அதிகம் இல்லாததால், மாணவர்கள் அவளை வட்டமிடுவதில்லை!
 நேற்று வரை சரண்யா, கோபிகாவை பார்த்த பார்வையே வேறு! இன்று கதை மாறிவிட்டது!
 'ஏன்... அவளும் என் அப்பாவால் உருவாக்கப்பட்டவள்!'
 'மூத்தவள்- எனக்கு அக்கா!'
 இரவு முழுக்க சரண்யா உறங்காமல்-
 காலையில் கல்லூரிக்கு வந்திருந்தாள்.
 பாடத்தில் கவனம் செலுத்த முடியவில்லைகோபிகாவை தனியாக அழைத்துப் போய்ப் பேசணும்.
 அவகிட்ட நிறையக் கேள்விகள் கேட்கணும்!
 அவளுக்கு எந்த அளவுக்கு உண்மைகள் தெரியும்?
 'இப்பவும் தன் அம்மா, தாலிகட்டிக்கொள்ளாமல் வாழுறது தெரியுமா?'
 'தெரிஞ்சா, அப்பாகிட்ட ஆத்திரம் வராதா?'
 'அப்பாவுக்கு சட்டபூர்வமா ஒரு குடும்பம் இருக்கிறது அவளுக்கு தெரியுமா?'
 கேள்வி மேல் கேள்வி வந்தது.
 சரண்யாவுக்கு மனசுக்குள் ஒன்று விழுந்துவிட்டால், அதை உடனே பேசித் தீர்த்துவிடவேண்டும்.
 இரகசியம் அவளிடம் தங்காது.
 மண்டை வெடித்துவிடும்!
 இடைவேளையில் வகுப்பைவிட்டு அனைவரும் வெளியே வர,
 கோபிகாவிடம் வந்தாள், சரண்யா.
 "சாப்பாட்டு நேரத்தில் நான் தனியா உங்கிட்ட பேசணும், கோபிகா!"
 "பேசலாமே!"
 "வேறு யாரும் இருக்கக்கூடாது! இது அந்தரங்கம்!"
 "சரி!"
 12.30 மணிக்கு உணவு இடைவேளை!
 இருவரும் கையில் சாப்பாடு- புத்தகத்துடன் மர நிழலுக்கு வந்துவிட்டார்கள்.
 "பாட சம்பந்தமான சந்தேகம். யாரும் கிட்டே வராதீங்க!" எனத் தடுத்துவிட்டாள், சரண்யா!
 சாப்பாட்டை ஐந்தே நிமிடத்தில் முடித்துக்கொண்டு, கை கழுவினார்கள். மீண்டும் உட்கார்ந்தார்கள்கோபிகாவை, சரண்யா உற்றுப்பார்த்தாள்.
 "ஏன் சரண்யா, அப்படி பார்க்கிறே! மிஸ்டர் விசுவநாதரோட முகச்சாயல் எங்கிட்ட இருக்கான்னு பார்க்கிறியா?"
 சரண்யாவுக்கு தூக்கி வாரிப் போட்டது

Languageதமிழ்
PublisherPocket Books
Release dateDec 21, 2023
ISBN9798223426431
ஒரு வானம் இரு நிலவு..!

Read more from Devibala

Related to ஒரு வானம் இரு நிலவு..!

Related ebooks

Reviews for ஒரு வானம் இரு நிலவு..!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    ஒரு வானம் இரு நிலவு..! - Devibala

    1

    ஆத்திரத்துடன் உள்ளே நுழைந்தாள், சரண்யா!

    அம்மா, எதிரே வந்தாள்!

    முகத்தைக் கழுவிட்டு வாம்மா! உனக்குப் பிடிச்ச வெங்காய பக்கோடா சூடாக இருக்கு!

    கொண்டு போய்ச் சாக்கடையில கொட்டு!

    ‘சரக்’கென திரும்பினாள், சரண்யா!

    என்னடீ சொல்லுறே? வீடு திரும்புகிற மகளுக்கு ஆசையா பக்கோடா செஞ்சு வச்சிட்டு காத்திருக்கிற அம்மாகிட்ட இப்படியா பேசுவே?

    சரண்யா போய்க் கட்டிலில் ‘பொத்’தென விழுந்தாள்.

    அம்மா, பின்னாலேயே வந்தாள்.

    என்னம்மா? உடம்புக்கு முடியலியா?

    சரண்யா பேசவில்லை!

    அம்மா, கட்டிலில் உட்கார்ந்தாள்.

    மகளின் முதுகில் கையை வைத்து இதமாக அழுத்தினாள்!

    அந்த அழுத்தத்தில் உடைந்துபோன சரண்யா அழத் தொடங்கினாள்.

    ஏன்மா? ஏன் அழுறே? என்னாச்சு?

    அம்மா பதறினாள், சரண்யா, பதில் சொல்லாமல் அழுதாள்.

    என்னடீ? இந்த மாதிரி நீ அழும்போது எனக்கு பதற்றமா இருக்கு! சொல்லிட்டு அழும்மா!

    சரண்யா எழுந்து உட்கார்ந்தாள்!

    என் கூடப் படிக்கிற கோபிகா வீட்டுக்கு இன்னிக்குப் போனேன்ம்மா!

    எதுக்கு?

    பாடம் சம்பந்தமா சில சந்தேகங்கள் இருந்தது. ரெண்டுபேரும் சேர்ந்து படிக்கலாம்ன்னு போனேன்! அங்கே...

    அங்கே என்னம்மா?

    "நான் எப்படிம்மா சொல்லுவேன்? பல ஆண்டாக அப்பா உன்னை ஏமாத்திக்கிட்டு வர்றாரும்மா. நமக்கு துரோகம் செஞ்சிருக்கார். எனக்கும் அப்பா அவர்தான்னு படத்தைக்காட்டி கோபிகா சொன்னப்ப, ஒரு எரிமலையே எனக்குள்ளே வெடிச்சதும்மா.

    அங்கே ஒரு நிமிடம் கூட நிற்காம புறப்பட்டு வந்துட்டேன்! உங்கிட்ட எப்படி இதைச் சொல்லுறதுன்னு துடிச்சேன்!

    சொல்லாம இருக்க முடியலை."

    அம்மா பேசவேயில்லை!

    இந்த அதிர்ச்சியை உன்னால தாங்கிக்க முடியலியாம்மா? அதனாலதான் பேச வரலியா?

    அம்மா நிமிர்ந்து சரண்யாவைப் பார்த்தாள்.

    எனக்குத் தெரியும்டா!

    எ... என்னது? உனக்குத் தெரியுமா?

    எல்லாம் தெரியும். அந்தப் பொண்ணு உன்னைவிட மூத்தவளா இருப்பாள்!

    ஆமாம்மா! எப்படி சொல்றே?

    உங்க அப்பாவை நான் கல்யாணம் செஞ்சுகிட்டு இந்த வீட்டுக்கு வந்தப்ப, கல்யாணிக்கு- அதான், கோபிகாவோட அம்மாவுக்கு ஒரு மாசம்!

    அப்பவே தெரியுமா?

    தெரியும்மா!

    தெரிஞ்சும் எப்படீம்மா நீ சும்மா இருந்தே? உன் வாழ்க்கையில் இன்னொருத்தி எப்படி பங்குக்கு வரலாம்?

    இல்லம்மா! அவதான் முன்னால வந்தவ! நியாயமா, பங்குக்கு வந்தவள் நான்தான்!

    சரண்யா ஆடிப்போனாள்.

    ஒரு மனைவி இருக்கும்போது, அப்பா எப்படி உன்னைக் கல்யாணம் செஞ்சுகிட்டார்?

    "அவரைக் குறை சொல்ல முடியாது, சரண்யா. உங்க தாத்தா ரொம்பக் கெடுபிடி! இவருக்கு என்னைக் கல்யாணம் நிச்சயம் செய்யும்போது, உங்கப்பா கல்யாணிகூட பழகிக்கிட்டு இருந்தார். தன் காதலைப்பற்றி எடுத்துச் சொன்னார்.

    கல்யாணி ஏழை- அநாதை! அந்தஸ்து பத்தலைன்னு தாத்தா மறுத்துட்டார். மீறிக் கல்யாணம் செஞ்சுகிட்டா தற்கொலை செஞ்சுடுவேன்னு, மிரட்டினார். உங்க அப்பா வேறு வழியில்லாமல் கல்யாணத்துக்கு சம்மதிச்சார். கல்யாணி அங்கே கர்ப்பமா இருந்தா!"

    அப்பா அவங்களுக்கு தாலியே கட்டலியா?

    இல்லை! தாலி கட்டின சட்டபூர்வமான மனைவி நான்தான்!

    சரி! அப்பா எப்பத்தான் கல்யாணிக்குத் தாலி கட்டினார்?

    கட்டவேயில்லை! இப்பக்கூட கல்யாணி, தாலி கட்டாத மனைவிதான்!

    கடவுளே! எப்படி சம்மதிச்சாங்க?

    அம்மா பதில் சொல்ல வாய் திறக்க, வாசலில் கார் வந்து நின்றது!

    அப்பா விசுவநாதன் இறங்கினார்.

    சரண்யா! இதெல்லாம் உனக்குத் தெரிஞ்சதாக நீ காட்டிக்க வேண்டாம்... புரியுதா?

    ஏம்மா?

    சொல்லுறதைக் கேளு!

    அம்மாவின் குரலில் அதட்டல் இருந்தது.

    அப்பா உள்ளே வந்துவிட்டார்.

    தேவகி! குடிக்கத் தண்ணி கொண்டா! சரண்யா வந்துட்டியாடா?

    சரண்யா எதுவும் பேசவில்லை.

    பொதுவாக சரண்யா, அப்பாச் செல்லம். வயது பதினெட்டு கடந்தும், அப்பாவிடம் குழந்தை போல்தான் பழகுவாள். அவள் கேட்டு அப்பா எதையும் மறுத்ததே இல்லை!

    சரண்யாவுக்கு இப்போது அப்பா முகத்தைப் பார்க்கப் பிடிக்கவில்லை!

    ‘படக்’கென உள்ளே போய்விட்டாள்.

    தேவகி, தண்ணீருடன் வந்தாள்.

    குழந்தை ஏன் ஒரு மாதிரி இருக்கா? உடம்பு சரியில்லையா?

    அதெல்லாம் ஒண்ணுமில்லை! ஏதாவது வேணும்ன்னு பிடிவாதம் பிடிப்பா! நான் கண்டிப்பேன். சண்டை வரும்! இது எப்பவும் நடக்கிற கூத்துதானே? விடுங்க!

    எதுக்குக் குழந்தை மனசை நோகடிக்கிறே? கேட்டதைக் குடுத்துடு!

    அது தப்புங்க! பொண்களாகப் பொறந்தா நெனச்சதெல்லாம் நடந்துடாது! அப்புறம் எதிர்பார்த்தபடி நடக்கலைன்னா ஏமாற்றம் வரும். பக்குவப்படணும். இன்னொரு வீட்டுக்கு வாழப்போற பொண்ணு!

    சரி சரி! ஆரம்பிக்காதே! நான் இராத்திரி வந்து குழந்தையை சமாதானப்படுத்திக்கிறேன். இப்பக் குளிச்சிட்டு வெளியில கிளம்புறேன்!

    அவர் உள்ளே போனார்.

    தேவகி, கூடவே வந்தாள்.

    மகளிடம் போனாள்.

    சரண்யா! அப்பா சந்தேகப்படும்படியா நடந்துக்காதே! புரியுதா?

    தேவகி, கணவனிடம் போய்விட்டாள்.

    அவருடன் இருந்து துண்டு, வேட்டி, சட்டை, எடுத்துக் கொடுத்து; குளித்து முடித்து வந்ததும் காப்பி தந்து அவர் காரில் ஏறும் வரை கூடவே இருந்தாள்.

    சரண்யாவுக்கு எரிச்சல் வந்தது.

    ‘எப்படி அம்மாவால் இதை சகிச்சுக்க முடியுது?’

    அம்மா அருகில் வந்தாள்.

    சரண்யா முகத்தை ‘வெடுக்’கென இழுத்துக்கொண்டு உள்ளே போய்விட்டாள்.

    அம்மா பெருமூச்சுவிட்டாள்.

    ‘இத்தனை நாள் கட்டிக் காத்த இரகசியம் உடைந்துவிட்டதே!’

    ‘சரண்யாவால் மனசுக்குள் எதையும் வச்சுக்க முடியாது!’

    ‘தடுத்தாலும் அப்பாகிட்ட பேசத்தான் போகிறாள்!’

    ‘இது எங்கே போய் முடியும்?’

    2

    சரண்யா, கலைக்கல்லூரியில் இரண்டாம் ஆண்டு இரசாயனம் படிப்பவள். கோபிகாவும் அதே வகுப்புதான்.

    கோபிகா, சரண்யா அளவுக்கு அழகோ, காண்போரைக் கட்டி நிறுத்தும் வசிகரமோ கொண்டவள் அல்ல.

    சுமார் ரகம்தான்.

    ஆனால் பயங்கர புத்திசாலி. கற்பூர புத்தி. ஒருமுறை சொன்னால் காந்தமாய்ப் பிடித்துவிடுவாள்.

    அந்த வகுப்பில் யாருக்கு சந்தேகம் வந்தாலும், கோபிகாதான் தெளிய வைப்பாள்.

    பேராசிரியர்களுக்கு கோபிகாவிடம் தனிப் பாசம் உண்டு! சரண்யாவுக்கு கோபிகா நெருங்கிய தோழி இல்லை. பாட சம்பந்தப்பட்ட பேச்சுகளில் மட்டும்தான் நெருக்கம்!

    சரண்யாவைச் சுற்றி ஒரு வசதி படைத்த வட்டம் இருக்கும்! கார், செல்போன் இத்யாதிகள் உண்டே!

    கோபிகா எதிலும் கலந்துகொள்ளமாட்டாள்.

    தானுண்டு, தன் பாடமுண்டு!

    அழகு அதிகம் இல்லாததால், மாணவர்கள் அவளை வட்டமிடுவதில்லை!

    நேற்று வரை சரண்யா, கோபிகாவை பார்த்த பார்வையே வேறு! இன்று கதை மாறிவிட்டது!

    ‘ஏன்... அவளும் என் அப்பாவால் உருவாக்கப்பட்டவள்!’

    ‘மூத்தவள்- எனக்கு அக்கா!’

    இரவு முழுக்க சரண்யா உறங்காமல்-

    காலையில் கல்லூரிக்கு வந்திருந்தாள்.

    பாடத்தில் கவனம் செலுத்த முடியவில்லை!

    கோபிகாவை தனியாக அழைத்துப் போய்ப் பேசணும்.

    அவகிட்ட நிறையக் கேள்விகள் கேட்கணும்!

    அவளுக்கு எந்த அளவுக்கு உண்மைகள் தெரியும்?

    ‘இப்பவும் தன் அம்மா, தாலிகட்டிக்கொள்ளாமல் வாழுறது தெரியுமா?’

    ‘தெரிஞ்சா,

    Enjoying the preview?
    Page 1 of 1