Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

ஐஸ்கிரீம் கனவுகள்
ஐஸ்கிரீம் கனவுகள்
ஐஸ்கிரீம் கனவுகள்
Ebook144 pages48 minutes

ஐஸ்கிரீம் கனவுகள்

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

ஸ்கூட்டரை கல்லூரி வளாகத்தில் நிறுத்தி பூட்டி விட்டு, மரத்தடியில் வந்து நின்றான். 


கடந்து போன சக மாணவர்கள் ஓரிரு வார்த்தைகள் பேசிவிட்டுப் போனார்கள். 


விஜய் மனதில் எதுவும் ஒட்டவில்லை! 


வாசலையே பார்த்தபடி இருந்தான். 


'ஏன் இன்னும் வரலை?' 


இனிமேல் வகுப்புக்குப் போகாமல் இங்கே நிற்பது சரியல்ல என்று தீர்மானித்து, நூலகத்துக்குள் நுழைந்தான். 


“விஜய்! க்ளாஸுக்கு வரலியா?” 


“கோட் நம்பர் கேட்டுட்டு, நான் வந்து அப்புறமா கம்ப்யூட்டர்ல போட்டுக்கறேன். எனக்குத் தெரியும்!”


அது கணிப்பொறி வகுப்பு! 


விஜய் கம்ப்யூட்டரில் கில்லாடி! மாஸ்டரே அசந்து போகுமளவுக்கு இயக்குவான். 


சுயமாக ப்ரோக்ராம் பிரமாதமாக அமைப்பான். 


ஓரிருவர் கேட்டுவிட்டுப் போய் விட்டார்கள். 


'இன்றைக்கு வரவில்லையா? என்ன பிரச்னை?’ 


புத்தகம் ஒன்றை வைத்துக் கொண்டு, நிம்மதியில்லாமல் உட்கார்ந்திருந்தான். 


தோளில் மெல்லிய கை! 


திரும்பினான். 


மதுமிதா நின்று கொண்டிருந்தாள். 


“ஏன் இவ்ளோ நேரம்?” 


“வெளில வா! சொல்றேன். இங்கே வேண்டாம்!” 


இருவரும் வெளியே வந்தார்கள். விஜய் ஸ்கூட்டரைத் தள்ளிக்கொண்டு கேட்டைக் கடந்து விட்டான். மது சற்று இடைவெளி விட்டு வந்தாள். 


சாலைக்கு வந்ததும் ஸ்டார்ட் செய்தான். 


மது அவன் தோளில் படர்ந்து சுவாதீனமாக ஒட்டிக் கொள்ள வேகம் பிடித்தான். 


வழக்கமான அந்த ஐஸ்க்ரீம் பார்லருக்குள் இருவரும் உள்ளே நுழைந்தார்கள். 


“ஒரு பட்டர்ஸ்காட்ச்... ஒரு டீ!” பேரர் போய் விட, “சொல்லு மது!” 


“அக்கா பொண்ணு வயசுக்கு வந்துட்டா” 


“அய்! ஜாலிதான்!”


“உதைபடுவே விஜய் நீ!” 


“நீ ஏன் கோபப்படற? நாளைக்கு பரிசம் போடவா வர்றேன்னு சொன்னேன்? ஊர்ல தெரிஞ்ச பொண்ணுங்க வயசுக்கு வந்தா, நமக்கொரு சந்தோஷம்!” 


“கொழுப்பைப் பாரு!” 


பட்டர் ஸ்காட்ச் ஐஸ்க்ரீம் வந்தது. மது ஆர்வத்துடன் சாப்பிடத் தொடங்கினாள். 


அவளும் அவனுடன் அதே எம்.சி.ஏ. வகுப்பில் படிப்பவள். 


அவனை விட மூன்று மாதங்களுக்கு இளையவள்! 


ஒரே இடத்தில் படித்தாலும், கடந்த ஏழெட்டு மாதங்களாகத்தான் நெருக்கம்! 


அது இப்போது காதலாக மலர்ந்து விட்டது. 


மது ஐஸ்க்ரீம் பைத்தியம்! 


விஜய்யின் பாக்கெட் மணி மொத்தமும் மதுவுக்கு ஐஸ்க்ரீம் வாங்கித் தந்தே தீர்ந்து போனது. 


சாப்பிட்டு முடித்தாள். 


“க்ளாஸுக்குப் போறியா விஜய்?” 


“நீ என்ன சொல்ற?” 


“ரிவிஷன்தான்! புதுசா எதுவும் இல்லை! படத்துக்குப் போகலாமா?”


“ஜாக்கிசான் படம் வந்திருக்கு மது!” 


“எனக்குப் பிடிக்கலை தமிழ்ப் படம் போகலாம். புதுசா ஒரு லவ் சப்ஜெக்ட் ஹிட் ஆகியிருக்காம்!” 


“உல்டா பண்ணியிருப்பான். லவ்வுல் புதுசா என்ன இருக்கு? எல்லாம் பழைய லவ்வுதான்!” 


“ஏன் விஜய் இப்படி இருக்கே?”


“சினிமால போய் நேரத்தை வீணடிச்சுகிட்டு? ரெண்டு பேரும் லவ்பண்றம். பிராக்டிகலா ஏதாவது செஞ்சாலும்...” 


“உன்னை...”: 


“அடப்போம்மா! நான் எதையோ சொன்னா, நீ வேற எதையோ நெனச்சுக்கறியா?” 


“யூ டர்ட்டிஃபெலோ” 


அவன் மார்பில் குத்தினாள். 


“பீச்சுக்குப் போகலாம் வா! கொஞ்ச நேரம் பேசலாம். உங்கக்கா பொண்ணு வயசுக்கு வந்த...” 


அவள் முறைக்க,  எழுந்து ஓடினான். 

Languageதமிழ்
PublisherPocket Books
Release dateFeb 3, 2024
ஐஸ்கிரீம் கனவுகள்

Read more from தேவிபாலா

Related to ஐஸ்கிரீம் கனவுகள்

Related ebooks

Reviews for ஐஸ்கிரீம் கனவுகள்

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    ஐஸ்கிரீம் கனவுகள் - தேவிபாலா

    1

    அலாரம் அடிக்க சுகுமார் கஷ்டப்பட்டு கண்களைத் திறந்தான்.

    காலை நாலரைமணி!

    படுக்கையில் எழுந்து உட்கார்ந்த போது மண்டை பாரமாக இருந்தது.

    இரண்டாவது ஷிப்ட் முடிந்து பதினொரு மணிக்குத்தான் வீடு திரும்பியிருந்தான். படுக்கும்போது பன்னிரண்டு. நாலரைக்கு அலாரம் அடித்து விட்டது.

    மெல்ல எழுந்து பாத்ரூம் போய் பல் தேய்த்தான். பாலை பாத்திரத்தில் ஊற்றி அடுப்பில் வைத்தான்.

    ஏனோ இன்று சுத்தமாக முடியவில்லை!

    ஆனாலும் கஷ்டப்பட்டு வேலைகளைத் தொடங்கி விட்டான். குளித்து முடித்து, குக்கர் வைத்து ஏழரை மணிக்குள் சகலமும் தயார் செய்து விட்டான்.

    படுக்கையறைக்குள் நுழைந்தான்.

    விஜய்குமார் லுங்கி அவிழ தாறுமாறாகக் கிடந்தான்.

    போர்வை கொண்டு அவனை மூடிவிட்டு,

    விஜய்! எழுந்திருப்பா! காலேஜூக்கு நேரமாச்சு!

    விஜய் புரண்டு படுத்தான்.

    எழுந்திரு கண்ணா! நேரமாச்சு! சீக்கிரம்!

    விஜய் எழுந்து உட்கார்ந்தான். கண்களைக் கசக்கிக் கொண்டான். அண்ணன் ஷிப்ட் முடிந்து வரும்வரை படித்துக் கொண்டிருந்தான். இருவருமாக சாப்பிட்டு விட்டு படுப்பதற்கு தாமதமாகிவிட்டபடியால், தூக்கக் கலக்கம் பாக்கியிருந்தது.

    போய்க் குளி, ராஜா! வென்னீர் ரெடியா இருக்கு!

    விஜய் எழுந்து பாத்ரூமுக்குள் நுழைந்தான்.

    விஜய் தன் பட்டப்படிப்பை முடித்து விட்டு இப்போது எம்.சி.ஏ. படிப்பின் இறுதிக் கட்டத்தில் இருக்கிறான்.

    அழகான விஜய், அதிபுத்திசாலி! பளிச்சென எதையும் பிடித்துக் கொள்ளும் ஆற்றல் படைத்தவன்.

    விஜய்க்கும், சுகுமாருக்கும் ஒன்பது வயது வித்யாசம்.

    சுகுமாருக்கு இப்போது முப்பது! சிறுவயதில் தகப்பனை இழந்தவர்கள். தாயார் தையல், சமையல் வேலை என படாதபாடு பட்டு வளர்த்தாள்.

    சுகுமாருக்கு வறுமை புதிதல்ல!

    அம்மாவுடன் சேர்ந்து அதை நிறையவே அனுபவித்தாகி விட்டது.

    விஜய்க்கு அது அத்தனை தெரியாமல் வளர்த்து விட்டார்கள்.

    சுகுமாருக்கு பதினாறு வயதாகும் போது அம்மாவுக்கு காசநோய் வந்து ஒரு வருடகாலம் சித்திரவதைப்பட்டு உயிரைவிட்டாள்.

    விஜய்க்கு அப்போது ஏழு வயது! அது முதல் அவனுக்கு எல்லாமே சுகுமார்தான்.

    யாரையோ சிபாரிசு பிடித்து அந்த ரசாயனத் தொழிற்சாலையில் சுகுமார் வேலைக்கு சேர்ந்து விட்டான்.

    வெறும் எஸ்.எஸ்.எல்.சி. படிப்பு சாதாரண மெஷின் ஆபரேட்டராக வேலைகிடைத்தது. அதிலேயே கடுமையாக உழைத்து, படிப்படியாக தன்னை வளர்த்துக் கொண்டு, இந்தப் பதினாலு வருடங்களில் சூபர்வைஸர் ஆகி விட்டான்.

    இப்போது மாசச்சம்பளம் ஏறத்தாழ பிடித்தம் போக கைக்கு அஞ்சாயிரம் வருகிறது.

    தம்பி என்ன கேட்டாலும் வாங்கித் தந்து விட வேண்டும்!

    அவனுக்கு எந்தக் குறையும் வரக்கூடாது.

    விஜய் ராஜா வீட்டுப் பிள்ளைப் போல வளர்ந்தான்.

    நாலு மாதங்களுக்கு முன்பு, அண்ணே! பஸ்ல ரொம்பக் கூட்டமா இருக்கு! ஏற முடியலை!

    சைக்கிள்ல போனா உன் காலேஜ் ரொம்ப தூரமாச்சேப்பா!

    ஸ்கூட்டர்ல...?

    சுகுமார் மறுநாளே அது தொடர்பாக எல்லாம் விசாரித்து, பேக்டரியில் லோன் போட்டு பத்தே நாட்களில் தம்பியை அழைத்துப் போய் புத்தம் புது ஸ்கூட்டரை ஏற்பாடு செய்து விட்டான்.

    எவ்ளோ அண்ணே ஆச்சு?

    முப்பதாயிரம்!

    அம்மாடீ... பணம்?

    மாசச் சம்பளத்துல ஆயிரம் ரூபா பிடித்தம் போகுது! அதைப் பத்தி உனக்கென்ன கவலை? ஜாலியா இரு! ஆனா ராஜா... ட்ராஃபிக் அதிகமா இருக்கு. பத்திரமா ஓட்டணும். புரியுதா?

    விஜய் நெகிழ்ந்து விட்டான்.

    என்னால உனக்கு எவ்ளோ கஷ்டம்?

    "ஷ்... நீ குழந்தை! பெரியவங்க பிரச்னை உனக்கு ஏன்! சந்தோஷமா வண்டியை ஓட்டு!

    தம்பி கேட்டு எதையும் மறுக்கக்கூடாது!

    விஜய் குளித்து விட்டு சாப்பிட் உட்கார்ந்தான். சுகுமார் பரிமாற வந்தான்.

    தடுமாறியது.

    அண்ணே! என்னாச்சு உனக்கு?

    ஒ...ஒண்ணுமில்லை! ஷிப்ட் முடிஞ்சு வந்து லேட்டா படுத்த காரணமா, தூக்கம் பத்தலை! சட்னி போட்ட்டுமா?

    நீ ஏன் எழுந்து வேலை செஞ்ச? நான் கேன்டீன்ல பார்த்துக்க மாட்டேனா?

    உனக்கு ஓட்டல் சாப்பாடு ஒடம்புக்கு சேராது விஜய்! இன்னொரு இட்லி போட்டுக்கோ!

    போதும்ணே! லீவு போட்ரு இன்னிக்கு. நான் போகலை!

    மூச்! இது கடைசி வருஷம். போகாம இருக்கக் கூடாது! நீ படிச்சு முடிச்சு வேலைக்கு வந்துட்டா, எனக்கென்ன கவலை?

    வேலைக்காரி அம்புஜம் உள்ளே வந்தாள்.

    பெரியதம்பி... முடியலியா? மூஞ்சியெல்லாம் ஜிவுஜிவுனு இருக்கு!

    அதெல்லாம் ஒண்ணுமில்லை!

    நான் சொன்னா, நீ கேக்கறியா? வயசு முப்பதாச்சு! ஒருத்தி இந்த வீட்டுக்கு வந்துட்டா, கஷ்டமே இல்லை! கைநிறைய சம்பாதிக்கறே! இன்னுமா தனியா கஷ்டப்படணும்?

    அம்புஜம்! நீ போய் வேலையை கவனி!

    சின்ன தம்பி! நீயாவது சொல்லக்கூடாதா?

    சொல்லாமலா இருக்கேன்? அண்ணன் கேட்டாத்தானே? கல்யாணம்னாலே காததூரம் ஓடறாரு!

    விஜய்! நேரமாச்சு! நீ புறப்படு!

    விஜய் உடைமாற்றிக் கொண்டு வெளியே வந்தான்.

    சுகுமார் விஜய்க்கு மதிய உணவு எடுத்து வைத்தான். பர்ஸ் பார்த்து பணம் வைத்தான்.

    விஜய்! ஷூவுக்கு பாலீஷ் போட்டாச்சு

    சரிண்ணே!

    பார்த்துப் போ கண்ணா!

    வாசல்வரை வந்தான் சுகுமார்.

    விஜய் ஸ்கூட்டரை இயக்கி, கையசைத்து வேகம் பிடித்தான். சுகுமார் உள்ளே வந்தான்.

    அம்புஜம் பல வருடங்களாக அந்த வீட்டில் வேலைக்காரி.

    நீ ஒக்காரு பெரியதம்பி! நாளைக்கு காலைல சீக்கிரம் வந்து நான் சமையல் பண்றேன்!

    தம்பி சாப்பிட மாட்டான். என் சமையல்தான் அவனுக்குப் புடிக்கும்!

    நீயும், உன் தம்பியும்!

    இதப்பாரு அம்புஜம்! கல்யாணம் அது இதுன்னு தொடங்காதே!

    ஏன்? நீ கட்டிக்கவே போறதில்லையா?

    வர்றவ என் தம்பிகிட்ட அன்பா இல்லைனா?

    சின்னதம்பி பச்சக் குழந்தையா? அதைக் குளிப்பாட்டி விட்டு ஒருத்தர் கவனிக்கணுமா?

    தபாரு! வர்றவ, அவனுக்கு அம்மாவா இருக்கணும். அப்படி யாரும் இருப்பாங்கனு எனக்குத் தோணலை! கல்யாணம் ஆனா புள்ளை குட்டி பொறக்கும். எனக்குனு மட்டும் இருக்ககூடாது பாரு! தம்பி நிலைமை என்னாகும்

    அதுக்கும் வேலை கிடைச்ச உடனே ஒரு பொண்ணைப் பார்த்துக் கட்டி வச்சிரு

    அவன் குழந்தை! கொஞ்ச நாள் போகட்டும்!

    உன்னைத் திருத்தவே முடியாது பெரியதம்பி

    சுகுமார் சாப்பிட உட்கார்ந்தான். பிடிக்கவில்லை!

    சுகுமார் விஜய் அளவுக்கு அழகில்லா விட்டாலும், பார்க்க கம்பீரமாக இருப்பான்.

    பல பேர் பெண் கொடுக்க முயற்சி செய்தாகி விட்டது.

    பயனில்லை!

    சுகுமாருக்கு அந்த நாட்டமே இல்லை!

    தனக்கும், தம்பிக்கும் மத்தியில் ஒரு இடைவெளி ஏற்பட்டு விடும் என்ற பயம் இருந்தது. அதனால் அந்த யோசனையே இல்லை!

    நாம் ஒன்று நினைக்க, தெய்வம் வேறொன்றை நினைக்கிறது.

    சுகுமாரையும் அந்த விதி விட்டு வைக்கவில்லைதான்!

    2

    ஸ்கூட்டரை கல்லூரி வளாகத்தில் நிறுத்தி பூட்டி விட்டு, மரத்தடியில் வந்து நின்றான்.

    கடந்து போன சக மாணவர்கள் ஓரிரு வார்த்தைகள் பேசிவிட்டுப் போனார்கள்.

    விஜய் மனதில் எதுவும் ஒட்டவில்லை!

    வாசலையே பார்த்தபடி இருந்தான்.

    ‘ஏன் இன்னும் வரலை?’

    இனிமேல் வகுப்புக்குப் போகாமல் இங்கே நிற்பது சரியல்ல என்று தீர்மானித்து, நூலகத்துக்குள் நுழைந்தான்.

    விஜய்! க்ளாஸுக்கு வரலியா?

    கோட் நம்பர் கேட்டுட்டு, நான் வந்து அப்புறமா கம்ப்யூட்டர்ல போட்டுக்கறேன். எனக்குத் தெரியும்!

    அது கணிப்பொறி வகுப்பு!

    விஜய் கம்ப்யூட்டரில் கில்லாடி! மாஸ்டரே அசந்து போகுமளவுக்கு இயக்குவான்.

    சுயமாக ப்ரோக்ராம் பிரமாதமாக அமைப்பான்.

    ஓரிருவர் கேட்டுவிட்டுப் போய் விட்டார்கள்.

    ‘இன்றைக்கு

    Enjoying the preview?
    Page 1 of 1