Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

கலங்காதே கண்மணியே!
கலங்காதே கண்மணியே!
கலங்காதே கண்மணியே!
Ebook137 pages49 minutes

கலங்காதே கண்மணியே!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

சென்னை மாநகரத்தின் பரபரப்பும், இரைச்சலும் இல்லாத சற்று ஒதுக்குப்புறமான பகுதி கல்யாணி நகர். புறநகர் பகுதி ஆள் நடமாட்டம் குறைந்த அமைதியான இடம். ஆங்காங்கே முளைத்திருந்த ஒன்றிரண்டு வீடுகளைத் தவிர மற்ற பகுதியெங்கும் சமீபத்தில் பெய்த மழைநீர் தேங்கி நிற்க, தூரத்தில் தெரிந்த நெடுஞ்சாலையில் மஞ்சள் நிற விளக்கொளியோடு -சென்று கொண்டிருக்கும் லாரிகள், பேருந்துகள் என அந்த இடம் புதிதாய் உருவான வீட்டு மனை பகுதி என்பதை பறை சாற்றியது. 

நெடுஞ்சாலையை விட்டு வெகுவாய் ஒதுங்கியிருந்த அந்த சிறிய வீட்டின் படுக்கையறையில் தாயின் வயிற்றின் மேல் கையைப் போட்டபடி உறங்கிக் கொண்டிருந்தாள் ஜீவிதா. டிசம்பர் மாத குளிருக்கு இதமாய் கம்பளிப் போர்வையை முகம் தவிர உடலை முழுவதுமாய் மூடியிருந்தாள். குறிப்பாய் காதுகளை அழுத்தமாய் போர்த்தியிருந்தாள். 

சாம்பல் நிற போர்வையின் நடுவே தெரிந்த வட்டமுகம், கார்மேகத்தின் ஊடே தெரிந்த முழு நிலவாய் பிரகாசிக்க, அந்த முகத்தில் பலவித உணர்வுகளை பிரதிபலித்தாள் ஜீவிதா. காதுகளை மறைத்துக் கட்டிய மப்ளர். அதற்கும் மேல் போர்வை என அழுத்தமாய் மறைத்திருந்தும் அதையும் மீறி அவளது காதில் அந்த ஒலி கேட்டது. 

"உய்ய்ங்ங்... உய்ய்ங்ங்... உய்ய்ங்ங்"- தூரமாய் கேட்ட ஒலி, மெல்ல மெல்ல தனது ஒலியின் வேகத்தை அதிகரித்துக் கொண்டே வர, ஜீவிதாவின் முகமெங்கும் வியர்க்கத் தொடங்கியது. நெற்றியை சுருக்கியவாறே விழிகளைத் திறக்க பயந்து தாயின் மேல் போட்டிருந்த கையை எடுத்து அவசரமாய் காதுகளை மூடிக் கொண்டாள். 

அப்போது அந்த ஒலி அவளை நெருங்க... இப்போது இதயம் தடதடவென அதிர்ந்து, உடலெங்கும் வியர்த்துக் கொட்டியது. மூடிய விழிகளுக்குள் நீலநிற சுழல் விளக்கோடு கூடிய வெள்ளை நிற மருத்துவமனை ஊர்தியும், இரத்தச் சகதியில் துடித்துக் கொண்டிருக்கும் உருவமும் தெளிவின்றி தெரிந்தது. 

தூக்கத்தில் ஒட்டியிருந்த உதடுகள் பிரிந்து "அப்பா... அப்பா..." என முனக, தலை இங்குமங்குமாய் அசைந்தது. இரத்த வெள்ளத்தில் துடிதுடித்துக் கொண்டிருந்த உருவத்தின் துடிப்பு மெல்ல மெல்ல அடங்கி விட, இப்போது அந்த வாகனத்தின் ஒலி ஆக்ரோஷமாய் காதைத் துளைக்க, "அப்பா ஆ" என வீறிட்டவாறே எழுந்தமர்ந்தாள் ஜீவிதா.. 

அவளது அலறலில் வலப்பக்கம் படுத்திருந்த ராதாவும், இடப்பக்கம் படுத்திருந்த அபிதாவும் பதறிக் கொண்டு எழ, அடுத்த அறையில் படுத்திருந்த மகேந்திரனின் தூக்கமும் கலைந்தது. 

உடல் மொத்தமும் வியர்த்துக் கொட்ட, நடுங்கிக் கொண்டிருந்த மகளை பதட்டமாய் அணைத்துக் கொண்டாள் ராதா. 

"ஜீவி! என்னம்மா! ஏன் கத்தின?" 

"அ... ம்...மா! அப்பாம்மா..." ஜீவிதாவின் வார்த்தைகள் நடுக்கமாய் வெளிவர, அபிதாவின் உறக்கம் சுத்தமாய் கலைந்தது. அவசரமாய் தமக்கையின் தோளைப் பற்றினாள். 

"அக்கா! என்னக்கா? ஏதாவது கனாக்கண்டியா?" 

"இ...ல்ல... அம்மா... ஆம்புலன்ஸ்... ஆம்புலன்ஸ் வருதும்மா!"

"என்ன...?" 

"ஆம்புலன்ஸ் சத்தம் கேட்குதும்மா. ஐயோ... பக்கத்தில கேட்குதும்மா! உங்களுக்கு கேட்கலையா? எனக்கு கேட்குதும்மா..." 

"ஆமா! இந்த அத்துவானக் காட்டுக்குள்ள உனக்கு மட்டும் ஆம்புலன்ஸ் சத்தம் கேட்கும். உனக்கு வேற வேலையே இல்லையா?"- எரிச்சலும் கோபமுமாய் கேட்டுக் கொண்டு வந்தான் மகேந்திரன். தூக்கம் கெட்டதில் கண்கள் சிவந்து கலைந்த தலையுடன் நின்ற தம்பியைக் கண்டதும் அவசரமாய் மறுத்தாள். 

"இல்ல தம்பி! எனக்கு கேட்குது. நம்ம அப்பா கூட அதுல படுத்து... அய்யோ... எவ்ளோ இரத்தம்..." 

"ஏய் ஏய்! வாயை மூடு. பத்து வருஷத்துக்கு முன்னால நடந்ததை இன்னும் உளறிட்டு இருக்கியே! உனக்கென்ன பைத்தியமா பிடிச்சிருக்கு?" 

"மகேந்திரா...?" 

"பின்னே என்னம்மா? வேலைக்கு போயிட்டு வர்றவனை நிம்மதியா தூங்க விடுறாளா? எப்பப் பாரு நடு ராத்திரியிலே முழிச்சு பிசாசு மாதிரி கத்திட்டு இருக்கா. இவளால தூக்கம் கெட்டு எனக்கும் பைத்தியம் பிடிச்சிடும் போலிருக்கு" 

"அண்ணா! அவ என்ன வேணும்னா இப்படியெல்லாம் செய்யுறா. நீ போய்த் தூங்கு. நாங்க பார்த்துக்கிறோம்." 

"இனிமே எங்கே தூங்குறது? விடிய விடிய உட்கார்ந்து புலம்பிட்டே இருப்பா. அவளும் தூங்க மாட்டா, நம்மளையும் தூங்க விடமாட்டா. பிசாசு! பிசாசு!"- எரிச்சலாய் திட்டி விட்டு அவன் அறையை விட்டு வெளியேறி விட, அபிதா எழுந்து சென்று தண்ணீர் எடுத்து வந்து தமக்கைக்கு புகட்டினாள். 

 

Languageதமிழ்
PublisherPocket Books
Release dateNov 7, 2023
ISBN9798223680024
கலங்காதே கண்மணியே!

Read more from Kalaivani Chokkalingam

Related to கலங்காதே கண்மணியே!

Related ebooks

Related categories

Reviews for கலங்காதே கண்மணியே!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    கலங்காதே கண்மணியே! - Kalaivani Chokkalingam

    1

    சென்னை மாநகரத்தின் பரபரப்பும், இரைச்சலும் இல்லாத சற்று ஒதுக்குப்புறமான பகுதி கல்யாணி நகர். புறநகர் பகுதி ஆள் நடமாட்டம் குறைந்த அமைதியான இடம். ஆங்காங்கே முளைத்திருந்த ஒன்றிரண்டு வீடுகளைத் தவிர மற்ற பகுதியெங்கும் சமீபத்தில் பெய்த மழைநீர் தேங்கி நிற்க, தூரத்தில் தெரிந்த நெடுஞ்சாலையில் மஞ்சள் நிற விளக்கொளியோடு -சென்று கொண்டிருக்கும் லாரிகள், பேருந்துகள் என அந்த இடம் புதிதாய் உருவான வீட்டு மனை பகுதி என்பதை பறை சாற்றியது.

    நெடுஞ்சாலையை விட்டு வெகுவாய் ஒதுங்கியிருந்த அந்த சிறிய வீட்டின் படுக்கையறையில் தாயின் வயிற்றின் மேல் கையைப் போட்டபடி உறங்கிக் கொண்டிருந்தாள் ஜீவிதா. டிசம்பர் மாத குளிருக்கு இதமாய் கம்பளிப் போர்வையை முகம் தவிர உடலை முழுவதுமாய் மூடியிருந்தாள். குறிப்பாய் காதுகளை அழுத்தமாய் போர்த்தியிருந்தாள்.

    சாம்பல் நிற போர்வையின் நடுவே தெரிந்த வட்டமுகம், கார்மேகத்தின் ஊடே தெரிந்த முழு நிலவாய் பிரகாசிக்க, அந்த முகத்தில் பலவித உணர்வுகளை பிரதிபலித்தாள் ஜீவிதா. காதுகளை மறைத்துக் கட்டிய மப்ளர். அதற்கும் மேல் போர்வை என அழுத்தமாய் மறைத்திருந்தும் அதையும் மீறி அவளது காதில் அந்த ஒலி கேட்டது.

    உய்ய்ங்ங்... உய்ய்ங்ங்... உய்ய்ங்ங்- தூரமாய் கேட்ட ஒலி, மெல்ல மெல்ல தனது ஒலியின் வேகத்தை அதிகரித்துக் கொண்டே வர, ஜீவிதாவின் முகமெங்கும் வியர்க்கத் தொடங்கியது. நெற்றியை சுருக்கியவாறே விழிகளைத் திறக்க பயந்து தாயின் மேல் போட்டிருந்த கையை எடுத்து அவசரமாய் காதுகளை மூடிக் கொண்டாள்.

    அப்போது அந்த ஒலி அவளை நெருங்க... இப்போது இதயம் தடதடவென அதிர்ந்து, உடலெங்கும் வியர்த்துக் கொட்டியது. மூடிய விழிகளுக்குள் நீலநிற சுழல் விளக்கோடு கூடிய வெள்ளை நிற மருத்துவமனை ஊர்தியும், இரத்தச் சகதியில் துடித்துக் கொண்டிருக்கும் உருவமும் தெளிவின்றி தெரிந்தது.

    தூக்கத்தில் ஒட்டியிருந்த உதடுகள் பிரிந்து அப்பா... அப்பா... என முனக, தலை இங்குமங்குமாய் அசைந்தது. இரத்த வெள்ளத்தில் துடிதுடித்துக் கொண்டிருந்த உருவத்தின் துடிப்பு மெல்ல மெல்ல அடங்கி விட, இப்போது அந்த வாகனத்தின் ஒலி ஆக்ரோஷமாய் காதைத் துளைக்க, அப்பா ஆ என வீறிட்டவாறே எழுந்தமர்ந்தாள் ஜீவிதா..

    அவளது அலறலில் வலப்பக்கம் படுத்திருந்த ராதாவும், இடப்பக்கம் படுத்திருந்த அபிதாவும் பதறிக் கொண்டு எழ, அடுத்த அறையில் படுத்திருந்த மகேந்திரனின் தூக்கமும் கலைந்தது.

    உடல் மொத்தமும் வியர்த்துக் கொட்ட, நடுங்கிக் கொண்டிருந்த மகளை பதட்டமாய் அணைத்துக் கொண்டாள் ராதா.

    ஜீவி! என்னம்மா! ஏன் கத்தின?

    அ... ம்...மா! அப்பாம்மா... ஜீவிதாவின் வார்த்தைகள் நடுக்கமாய் வெளிவர, அபிதாவின் உறக்கம் சுத்தமாய் கலைந்தது. அவசரமாய் தமக்கையின் தோளைப் பற்றினாள்.

    அக்கா! என்னக்கா? ஏதாவது கனாக்கண்டியா?

    இ...ல்ல... அம்மா... ஆம்புலன்ஸ்... ஆம்புலன்ஸ் வருதும்மா!

    என்ன...?

    ஆம்புலன்ஸ் சத்தம் கேட்குதும்மா. ஐயோ... பக்கத்தில கேட்குதும்மா! உங்களுக்கு கேட்கலையா? எனக்கு கேட்குதும்மா...

    ஆமா! இந்த அத்துவானக் காட்டுக்குள்ள உனக்கு மட்டும் ஆம்புலன்ஸ் சத்தம் கேட்கும். உனக்கு வேற வேலையே இல்லையா?- எரிச்சலும் கோபமுமாய் கேட்டுக் கொண்டு வந்தான் மகேந்திரன். தூக்கம் கெட்டதில் கண்கள் சிவந்து கலைந்த தலையுடன் நின்ற தம்பியைக் கண்டதும் அவசரமாய் மறுத்தாள்.

    இல்ல தம்பி! எனக்கு கேட்குது. நம்ம அப்பா கூட அதுல படுத்து... அய்யோ... எவ்ளோ இரத்தம்...

    ஏய் ஏய்! வாயை மூடு. பத்து வருஷத்துக்கு முன்னால நடந்ததை இன்னும் உளறிட்டு இருக்கியே! உனக்கென்ன பைத்தியமா பிடிச்சிருக்கு?

    மகேந்திரா...?

    பின்னே என்னம்மா? வேலைக்கு போயிட்டு வர்றவனை நிம்மதியா தூங்க விடுறாளா? எப்பப் பாரு நடு ராத்திரியிலே முழிச்சு பிசாசு மாதிரி கத்திட்டு இருக்கா. இவளால தூக்கம் கெட்டு எனக்கும் பைத்தியம் பிடிச்சிடும் போலிருக்கு

    அண்ணா! அவ என்ன வேணும்னா இப்படியெல்லாம் செய்யுறா. நீ போய்த் தூங்கு. நாங்க பார்த்துக்கிறோம்.

    இனிமே எங்கே தூங்குறது? விடிய விடிய உட்கார்ந்து புலம்பிட்டே இருப்பா. அவளும் தூங்க மாட்டா, நம்மளையும் தூங்க விடமாட்டா. பிசாசு! பிசாசு!- எரிச்சலாய் திட்டி விட்டு அவன் அறையை விட்டு வெளியேறி விட, அபிதா எழுந்து சென்று தண்ணீர் எடுத்து வந்து தமக்கைக்கு புகட்டினாள்.

    தண்ணி குடிக்கா!- என்றவளிடம் மறுக்காமல் ஜீவிதா நீரை அருந்த, ராதா தலைமாட்டில் இருந்த திருநீறு பொட்டலத்தை பிரித்து மகளின் தலையில் சிறிது தூவி விட்டு நெற்றியில் பட்டையாய் பூசினாள். இப்போது ஜீவிதாவின் நடுக்கம் சற்று குறைந்திருக்க, மகளைப் படுக்க வைத்தாள்.

    படுத்துக்கம்மா!

    அம்மா!

    என்னம்மா?

    என் பக்கத்திலேயே இரும்மா!

    சரி!

    அபி! நீயும் படுத்துக்கோ!

    ம். நீயும் தூங்குக்கா

    இல்ல... நீங்க தூங்குங்க. இன்னும் கொஞ்ச நேரத்தில விடிஞ்சிடுமில்ல? எனக்கு இனிமே தூக்கம் வராது

    மணி ரெண்டுதாங்க்கா ஆகுது. தூங்கு- என்றவாறே இருவரும் படுத்துக் கொள்ள, ஜீவிதாவின் இமைகள் மூட மறந்தன. மூடினால் மீண்டும் அதே காட்சிகள் தொடருமா என்ற அச்சம் அவளை வெகுவாய் மிரட்டியது.

    ‘ம்ஹும்! இனிமேல் கண்களை மூடக்கூடாது’ கண்களை நன்றாய் விரித்துக் கொண்டாள். அறையின் மத்தியில் ஒளிர்ந்து கொண்டிருந்த எல்.இ.டி. பல்ப்பின் உதவியால் அறையெங்கும் ஒளி நிறைந்திருக்க, பார்வையை மெல்ல மெல்ல நகர்த்தி, சுவரில் மாலையோடு தொங்கிய புகைப்படத்தைப் பார்த்தாள்.

    சற்றே வாடிய ரோஜாமாலைக்கு நடுவே புன்னகைத்துக் கொண்டிருந்த தந்தையின் உருவத்தைக் கண்டதும் கண்களில் சுறுசுறுவென கண்ணீர் சுரந்தது. பல வருடங்களுக்கு முன் ஒரு மாலைப்பொழுதில் தன் இருசக்கர வாகனத்தில் மகளை பள்ளியிலிருந்து அழைத்து வருகையில் அசுர வேகத்தில் எதிரே வந்த லாரியில் மோதி, சாலையில் விழுந்து ரத்த வெள்ளத்தில் துடித்த காட்சி கண் முன்னே வந்தது.

    பின்னால் அமர்ந்திருந்தவள் சாலையோரமாய் தூக்கி வீசப்பட்டிருக்க, என்ன நிகழ்ந்தது எனப் புரியும் முன் சூழ்ந்து கொண்ட கூட்டமும் அவர்களின் பரிதாபக் குரலும் செவியில் மங்கலாய் ஒலித்தது. கூட்டத்தில் யாரோ ஆம்புலன்சிற்கு போன் செய்தார்கள். ரத்த வெள்ளத்தில் துடித்த தந்தையை ஒருவரும் நெருங்கவில்லை.

    அப்பா! அப்பா!- என தான் மட்டும் அவரைக் கட்டிக் கொண்டு கதறியது நினைவிலிருந்தது. அப்பா வெகுநேரமாய் துடித்தார். போக்குவரத்து போலீசார் வந்து விசாரித்த பிறகே ‘உய்ய்க்க்... உய்ங்ங்க்க்...’- என்ற அபாய ஒலியோடு ஆம்புலன்ஸ் வந்து சேர, அதிலிருந்து இறங்கிய ஊழியர்கள் சாலையில் இரத்தமாய் கிடந்த தந்தையின் உடலை வண்டியில் ஏற்ற அதுவரை துடித்துக் கொண்டிருந்த துடிப்பு சட்டென அடங்கியது.

    அப்பா ஆஆ- என மீண்டும் அலறியவாறே எழ, விழித்தே இருந்த ராதா சட்டென எழுந்து மகளை அணைத்துக் கொண்டாள்.

    ஜீவிம்மா!

    அம்மா... அப்பாம்மா... எவ்ளோ இரத்தம்மா...

    ஜீவி! அம்மாதான் சொல்றேன்ல? அதையே நினைச்சிட்டு இருக்கக் கூடாது

    என்னால முடியலம்மா! உங்களையெல்லாம் கஷ்டப்படுத்துறேன்னு தெரியுது. ஆனா... எப்படியும்... அந்த நினைவு வந்திடுதே!

    இன்னிக்கு நேத்தா கஷ்டப்படுத்துற? பத்து வருஷமா இப்படித்தானே கொல்லுற? பக்கத்து அறையிலிருந்து மகேந்திரனின் குரல் எரிச்சலாய் ஒலித்தது. அவனும் இன்னும் தூங்கவில்லை எனத் தெரிந்ததும் ஜீவிதா மௌனமானாள். இனி ஒரு வார்த்தை பேசினாலும் கண்டிப்பாய் திட்டுவான்!

    "அம்மா! இனிமே என்னால தூங்க

    Enjoying the preview?
    Page 1 of 1