Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Ingeyum Saaral Adikkum
Ingeyum Saaral Adikkum
Ingeyum Saaral Adikkum
Ebook149 pages1 hour

Ingeyum Saaral Adikkum

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

உதிரிப் பூக்கள் போல சில பெண்களின் வாழ்க்கை அமைந்து விடுகிறது. சமுதாயத்தால் ஒதுக்கப்பட்டு புறக்கணிக்கப் பட்டு, மெயின் ஸ்ட்ரீமில் ஒன்ற முடியாமல்படும் அவஸ்தையே இந்த நாவல். சந்தியா... தீபா... விலாசினி. இந்த மூன்று வித்தியாசமான பூக்கள், தங்களுக்கு நேர்ந்த சோகத்தை மிதித்து, தங்கள் வாழ்க்கையை எப்படி செப்பனிட்டு, சமூகத்தில் கலந்து தலை நிமிர்ந்து நடக்கிறார்கள் என்பதை பாருங்கள். அதற்கு எவ்வளவு போராடி இருப்பார்கள்! அவர்களுக்கு ஒரு ஹாட்ஸ் ஆப் கொடுங்களேன்.

Languageதமிழ்
Release dateApr 6, 2024
ISBN6580174610945
Ingeyum Saaral Adikkum

Read more from Sankari Appan

Related to Ingeyum Saaral Adikkum

Related ebooks

Reviews for Ingeyum Saaral Adikkum

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Ingeyum Saaral Adikkum - Sankari Appan

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    இங்கேயும் சாரல் அடிக்கும்

    Ingeyum Saaral Adikkum

    Author:

    சங்கரி அப்பன்

    Sankari Appan

    For more books

    https://www.pustaka.co.in/home/author/sankari-appan

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 1

    மதுரை விமான நிலையம். பத்து வருடம் கழித்து தன் சொந்த நாட்டில் கால் வைக்கிறாள் சந்தியா. காலை மணி பத்திருக்கும். விமான நிலையம் வெகுவாக மாறி இருந்தது. நவீனப் படுத்தியிருந்தார்கள். விரிவு படுத்தியிருந்தார்கள். சுத்தமாகவும் அழகாகவும் இருந்தது. அமெரிக்காவில் ஹார்வார்ட் பல்கலைகழகத்தில் எம்.எஸ் முடித்துவிட்டு பாஸ்டனில் பணியாற்றிக் கொண்டிருகிறாள் சந்தியா. அவள் கடந்து வந்த பாதை முட்கள் நிரம்பியது. அக்னி பிரவேசம் செய்து புது மனுஷியாக அவள் இன்று நடக்கும் பாதையில் ரோஜா மலர்கள் தூவி இருந்தது. முள்ளை மலராக மாற்றிய பெருமை அவழிக்க சாரும். எவ்வளவு போராட்டங்கள்.! கடந்து வந்திருக்கிறாள்.

    மகள் மதுவந்தி இன்று பன்னிரெண்டு வயது இளம் குருத்து. படிப்பில் கெட்டி. துரு துரு கண்கள். அம்மாவைப் போலவே அழகு. சிரித்த முகம். தெளிவான நோக்கு. கம்பீரம். தன்னம்பிக்கை என்று சின்ன வயதிலேயே ஒரு மலையின் உறுதி கொன்ட சிறுமி. பெட்டிகளை இழுத்துக் கொண்டு நிலையம் விட்டு வெளியே வந்தார்கள்.

    அம்மா...ரொம்ப சந்தோஷமா இருக்கு. எவ்வளவு வருடங்கள் கழித்து நாம் நம் மண்ணை மிதிக்கிறோம். உண்மையில் த்ரில்லா இருக்கு.

    சந்தியா மகளின் தலை கோதி சிரித்தாள். கேப் ஏறி அவர்கள் டவுன் ஹால் ரோடில் உள்ள ஒரு த்ரீ ஸ்டார் ஹோட்டலுக்கு சென்றனர். அவர்கள் இங்கு ஒரு மாதம் தங்கி இருக்கப்போகிறார்கள். ரூமில் நன்றாக ஓய்வு எடுக்க வேண்டும். குளித்துவிட்டு இருவரும் கட்டிலில் அருகருகே படுத்துக் கொண்டார்கள்.

    மது...நீ எப்படி பீல் பண்றே? அமெரிக்காவின் சொகுசு சுற்றுபுரத்தில் இருந்து வந்து, இது உனக்கு அசௌகரியமாக இருக்கா?

    அப்படியெல்லாம் இல்லை. இது நம் நாடு தானே.? எப்படி இருந்தாலும் எனக்குப் பிடிக்கும். சந்தியா பெருமிதம் அடைந்தாள். மூன்று வயதில் அவள் மதுவை அவள் அம்மா சீதாலக்ஷ்மியிடம் விட்டு விட்டு ஹார்வார்ட் பல்கலைகழகத்தில் படிக்கப் போனாள். அப்பொழுது அவளுக்கு தன் உயிரையே பிரிவது போல் இருந்தது. மூன்று வயது மகளை பிரிவதென்றால் அது எவ்வளவு வலி என்று அனுபவித்தவர்களுக்குத் தான் தெரியும். அம்மா நன்றாக பார்த்துக் கொள்வாள் தான் என்றாலும் அவளுக்கு மகளை பிரிவதில் அவ்வளவு வருத்தம். பிரிந்து தானே ஆகவேண்டும்! பிரிவும் வலியும் வாழ்க்கையின் கதவுகள். திறக்கும் மூடும். தன்னம்பிக்கையும் விவேகமும் வாழ்க்கையின் ஜன்னல்கள். வெளிச்சம் இருக்கு என்பதை காட்டும். வெற்றி என்பது சுலபத்தில் கண்ணுக்குத் தெரியாத சொர்க்கம். பனி மூடி இருக்கும். திடமான மனம் எனும் சூரிய வெளிச்சம் பனி மூட்டத்தை விரட்டி வெற்றியைக் காட்டும்.

    அவள் இமயமலையை ஒற்றையாக ஏறிவிட்டாள். கைநிறைய சம்பாதித்துக் கொண்டு...கம்பீரமாக தலை நிமிர்ந்து பெண்மையின் பிரதிநிதி போல், எடுத்துக் காட்டு போல் ஒளி வீசுகிறாள். பத்து வருடம் முன் இருபத்திரண்டு வயது பெண்ணாக, படித்திருந்தும் தன்னம்பிக்கை இருந்தும் பயத்துடன் வாழ்ந்தாள். ராகவனை புரிந்து கொள்ள அவளுக்கு அந்தளவு சாமர்த்தியம் இருந்திருக்கவில்லை. வெளுத்ததெல்லாம் பால் என்று நம்பினாள். ராகவனின் அன்பு நிஜம் என்று நம்பினாள். எங்கே தவறு நிகழ்ந்தது என்று அவளால் இன்றும் புரிந்து கொள்ள முடியவில்லை. பழைய நினைவுகள் வந்தது பின்னோக்கி தன் வாழ்கையை ரீவைண்ட் பண்ணிப் பார்த்தாள்.

    நிதானமாக யோசிக்க முடிந்தது. அன்று உள்ள டென்ஷன், கவலை பயம் ஏதும் இல்லாமல் யோசிக்க முடிந்தது. அவளுக்கே அவளின் இருபத்திரண்டு வயது மனுஷி மேல் பரிதாபம் வந்தது. தோல்வியும் இக்கட்டும் அவளுக்கு மனிதர்களை புரிந்து கொள்ளும் வித்தையை கற்றுக் கொடுத்தது. ராகவன் அவர்கள் கல்யாணம் நிச்சயமான போதே அவளிடம்...

    உன்னை ஒரு கல்யாண வீட்டில் பார்த்தேன். அது முதல் உன்னை இரண்டு வருஷமாக காதலித்து வந்தேன் என்பது உனக்குத் தெரியுமா? என்ற போது அவளுக்கு அது உண்மை என்று பட்டது. அப்பாடா நல்ல கணவன் கிடைத்திருக்கிறார். ஏதாவது ஒரு வேலையை இங்கு தேடிக்கொண்டு அழகாக இரண்டு குழந்தைகளைப் பெற்றுக் கொண்டு நிம்மதியாக வாழலாம் என்று அமைதி கொண்டாள். ஆனால் அது அப்படி அமையவில்லை.

    மதுவந்தி பிறந்து அவளுக்கு இரண்டு வயதானபோது, சென்னையில் குடித்தனம் ஆரம்பித்த போது அவள் ராகவனின் ஏடாகூடமான நடவடிக்கைகளால் நொந்து போனது தான் நிஜம். அந்த நாட்கள் சுகமானதாக இல்லை. பேந்தப் பேந்த அவள் விழித்த நாட்கள். சூரியன் போகாத இருட்டு அறை போன்ற நாட்கள். அந்த நாள் ஞாபகம் வந்தது. அவளின் மீ டூவை அவள் மன டயரியில் எழுதிப் பார்க்கிறாள். பிறர் கொடுக்கும் துன்பம் தான் மீ டூவா என்ன.? கட்டிய கணவனே கொடுக்கும் மீ டூ தான் அவளுடையது.

    ***

    சென்னை 2008

    காலை மணி ஏழு தான் ஆகியிருந்தது. சந்தியா தூக்கத்திலிருந்து விழித்துக் கொண்டாள். எழுந்து வாசற்கதவை திறந்து கொண்டு வெளியில் வந்து செய்தித் தாள் வந்துவிட்டதா என்று பார்த்தாள். இன்னும் வரவில்லை. பேப்பர் பையனிடம் சொல்லியிருந்தோமே...போட மறந்துவிட்டானா என்று தனக்குள் முணுமுணுத்துக் கொண்டாள். இன்று ஞாயறு தானே. ஒவ்வொரு ஞாயறும் போடச் சொல்லி சொல்லியிருந்தாளே. இரண்டு வாரம் வந்துகொண்டுதானே இருந்தது. இன்று என்னவாயிற்று? இந்த பசங்களே இப்படித்தான். பொறுப்பற்றவர்கள். சிறிது நேரம் கழித்து போன் செய்து கேட்க வேண்டும். மனதிற்குள் முடிவு பண்ணிக் கொண்டு சந்தியா வாசல் பெருக்கி கோலம் போட்டுவிட்டு வந்தாள். சமயலறையில் புகுந்து கொண்டாள். நேற்றைய பால் இருந்தது. காப்பி போட்டுக் குடித்தாள். அதற்குள் குழந்தை மதுவந்தி விழித்துக் கொண்டு அம்மா... என்று கத்திக் கொண்டு எழுந்தாள். பாட்டி சீதாலக்ஷ்மி குழந்தையை சமாதானப் படுத்தினாள்.

    அம்மா இங்க தான் இருக்கா குட்டிம்மா. நீ தூங்கு.

    விட்டிந்துவிட்டது. அவள் எங்கே தூங்கப் போகிறாள்? என்று சொல்லிக் கொண்டே குழந்தையை வாரி அணைத்து முத்தமிட்டாள் சந்தியா. அதற்குள் ராகவன் எழுந்துகொண்டான். அவன் பல் தேய்த்து வந்து காப்பி என்று குரல் கொடுத்தான். கணவனுக்கு காப்பி கலந்து கொண்டு வந்து கொடுத்துக் கொண்டே அம்மாவிடம் கேட்டாள்.

    அம்மா...நீ கன்டா பேப்பரை எடுத்தியா? பேப்பர் வரவில்லையே...

    நான் இப்ப தான் எழுந்துக்கறேன். தெரியாதே. ஒரு வேளை நேரம் கழித்து போடுவானோ என்னவோ. என்றாள் அம்மா.

    காலைக் கடன்கள் எல்லாம் முடிந்த பின் இட்டிலிகளை அவிக்கத் தொடங்கினாள் சந்தியா. இடையில் வெளியே போய் பேப்பர் வந்துவிட்டதா என்று பார்த்தாள். வந்திருக்கவில்லை.

    இன்னும் வரவில்லையே...போன் பண்ணிப் பார்க்கிறேன்.

    போன்னெல்லாம் பண்ண வேண்டாம்.நான் தான் போடவேண்டாம் என்று சொல்லிவிட்டேன். என்று ராகவன் சொன்னதும் சந்தியா ஆச்சர்யத்துடன்

    ஏன்? என்று கேட்டாள். அவன் பதிலேதும் சொல்லாமல் டி.வீ யை உயிர்பித்தான். அவளுக்குப் புரியவில்லை. என்னதான் நினைத்துக் கொண்டிருக்கிறான் என்றே தெரியவில்லை. அவளை வேலைக்குப் போகச் சொல்லி வற்புறுத்தியது அவன்தான். அதனால் தான் அவள் வாண்டட் காலம்ஸ் பார்க்க பேப்பர் போடச் சொல்லியிருந்தாள். இப்போ இப்படி செய்கிறான். ஏதாவது கேட்டால் கத்துவான். சந்தியா கவலையுடன் தன் வேலைகளை பார்க்க ஆரம்பித்தாள். என்னென்னவோ நடந்துவிட்டது. என்னென்னவோ நடக்கிறது. அவள் குடும்பத்தையே பிய்த்து தின்றுகொண்டிருக்கிறான். என்னதான் வேண்டுமோ அவனுக்கு!

    நேற்று சாயங்காலம் வேலையெல்லாம் முடித்துவிட்டு அவள் டி.வீயில் பாட்டு கேட்டுக் கொண்டிருந்தாள். ரிமோட்டை எடுத்து வேறு சானெல் மாற்றி விட்டான். அவளுக்குப் பிடித்த பாட்டு கேட்டுக் கொண்டிருத்தாள்.

    எதுக்கு சானலை மாத்தினீங்க? நான் பாட்டுக் கேட்டுக் கொண்டிருக்கிறேன்லே? என்று கேட்டாள் சந்தியா. அவன் பதிலேதும் சொல்லவில்லை. பிறகு அன்று இரவு தூங்கும்போது வேர்த்து வேர்த்து ஊத்தியது. விழித்துக் கொண்டாள். மின்விசிரியை யாரோ நிறுத்தி இருந்தார்கள் என்று தெரிந்தது. போய் சுவிட்சை போட்டுவிட்டு வந்து படுத்தாள். சிறிது நேரத்தில் மீண்டும் வேர்த்து ஊற்ற, விழித்தாள். மின்விசிறி நின்று போயிருந்தது. மீண்டும் சுவிட்சை போட்டாள். சுவிட்ச் போட்டும் இம்முறை மின்விசிறி இயங்கவில்லை. அது இரண்டு அறை கொன்ட பிளாட். ஒரு அறையில் அவளும் கணவனும் படுத்திருந்தார்கள். குழந்தையும் அவள் அம்மாவும் ஒரு அறையில். ஒருவேளை மின்சாரம் போய்விட்டது போலும் என்று எண்ணி, பேசாமல் ஒரு பத்திரிகையை விசிறியாக பயன்படுத்திக் கொண்டு தூங்க முயற்சித்தாள்.

    எப்பப்பார் கரண்ட் கட் பண்ணிவிடுகிறார்கள். ச்சே. என்று முணுமுணுத்தாள்.

    கரண்ட் கட்டாகவில்லை. நான் தான் மெய்னை அணைத்துவிட்டேன். என்று சொல்லிவிட்டு ராகவன் திரும்பி படுத்துக் கொண்டான்.

    உங்களுக்கும் தானே சிரமம்? ஏன் இப்படி பண்றீங்க? என்றாள். பதில் இல்லை. சந்தியா

    Enjoying the preview?
    Page 1 of 1