Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Andhi Nerathu Udhayam
Andhi Nerathu Udhayam
Andhi Nerathu Udhayam
Ebook442 pages3 hours

Andhi Nerathu Udhayam

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

உதயா அம்மாவை சின்ன வயதிலேயே இழந்து விடுகிறாள். அம்மாவின் அன்பு இல்லாமல் தவிக்கிறாள். தம்பியோ, ரெண்டுங்கெட்டான். இந்த நிலையில் வரும் சித்தி. அம்மா இல்லாவிட்டால் கூட பரவாயில்ல. அந்த வலி சிறிது என்று எண்ணும்படி உள்ளது சித்தி தரும் வலி.

உலகில் அவள் மட்டும் தான் வலி சுமப்பதாக நினைக்கிறாள். ஆனால் அவள் படிக்கும் கல்லூரி புரோபசர் சுமக்கும் வலி அதை விட பெரிது என்று புரிந்து கொள்கிறாள். வலி சுமந்தவர்கள் ஒன்றாக சேர்ந்து அன்பை பரிமாறிக் கொள்கிறார்கள். உதயா நேசிக்கும் துவிஜன் யார்? அவன் அப்பா கொடுக்கும் ஷாக்... உதயா போடும் எதிர்நீச்சல் அவளுக்கு வெற்றியை தந்ததா? வாருங்கள் அந்தி நேரத்து உதையத்துக்குள்... உங்களுக்கு மன நிறைவை தருவாள் உதயா.

Languageதமிழ்
Release dateMar 30, 2024
ISBN6580174610919
Andhi Nerathu Udhayam

Read more from Sankari Appan

Related to Andhi Nerathu Udhayam

Related ebooks

Reviews for Andhi Nerathu Udhayam

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Andhi Nerathu Udhayam - Sankari Appan

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    அந்தி நேரத்து உதயம்

    Andhi Nerathu Udhayam

    Author:

    சங்கரி அப்பன்

    Sankari Appan

    For more books

    https://www.pustaka.co.in/home/author/sankari-appan

    பொருளடக்கம்

    அத்தியாயம் - 1

    அத்தியாயம் - 2

    அத்தியாயம் - 3

    அத்தியாயம் - 4

    அத்தியாயம் - 5

    அத்தியாயம் - 6

    அத்தியாயம் - 7

    அத்தியாயம் - 8

    அத்தியாயம் - 9

    அத்தியாயம் - 10

    அத்தியாயம் - 11

    அத்தியாயம் - 12

    அத்தியாயம் - 13

    அத்தியாயம் - 14

    அத்தியாயம் - 15

    அத்தியாயம் - 16

    அத்தியாயம் - 17

    அத்தியாயம் - 18

    அத்தியாயம் - 19

    அத்தியாயம் - 20

    அத்தியாயம் - 21

    அத்தியாயம் - 22

    அத்தியாயம் - 23

    அத்தியாயம் - 24

    அத்தியாயம் - 25

    அத்தியாயம் - 26

    அத்தியாயம் - 27

    அத்தியாயம் - 28

    அத்தியாயம் - 29

    அத்தியாயம் - 30

    அத்தியாயம் - 31

    அத்தியாயம் - 32

    அத்தியாயம் - 33

    அத்தியாயம் - 34

    அத்தியாயம் - 35

    அத்தியாயம் - 1

    சூரியன் உதயமாகிக் கொண்டிருந்த இந்த நேரம் அழகாத்தான் இருந்தது. அந்த கிழக்கு திசை அதிர்ஷ்டம் செய்திருக்கிறது என்று நினைத்தாள் உதயா. அவளுடைய கிழக்கில் எப்பொழுதும் சூரியன் அந்தி நேரத்து உதயம் மாதிரி கொஞ்சம் வெளுச்சக் கருணையை காட்டிவிட்டு, அஸ்தமனமாகி விடுகிறது. பரவாயில்லை அந்தச் சின்ன உதயமே அவளை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்திவிடும் அது தான் அவள் இயல்பு. புறக்கணிக்கப் படுகிற வெளுச்சத்துக்காக ஏங்கி தவிப்பதில் என்ன லாபம்? அம்மா சுவாதி மறைந்து விட்டாள். ஆனால் அவள் நினைவுகள் அவளுள் இருந்து கொண்டே தான் இருக்கிறது. அது தான் அவள் அஸ்தமனச் சூரியனின் வெளிச்சம். உதயா காலை எழுந்ததும் அம்மாவின் பெருமை பேசும் பாடல் ஒன்றை கேட்டுவிட்டுத் தான் மறுவேலை பார்ப்பாள். பல் தேய்ப்பது கூட அப்புறம் தான். வேல்முருகனின் பாடலைத்தான் அவள் தினமும் கேட்டுவிட்டு எழுவாள்.

    "பத்து மாசம் என்னை சுமந்து பெத்தெடுத்த அம்மா.

    உன் பாசத்துக்கு முன்னாலே எல்லாமே சும்மா.

    உன் ரத்தத்தை எல்லாம் பாலா தந்து கொட்டி வளர்த்த அம்மா

    உன் அன்புக்கு முன்னாலே ஆகாசம் சும்மா..."

    இந்தப் பாட்டின் ஒரு பாராவைக் கேட்ட பின் பாட்டை நிறுத்தினாள். ஒரு நாளின் தொடக்கம் அவளுக்கு இப்படித்தான் ஆரம்பமாகிறது. மம்மி, மம்மா, மா என்றெல்லாம் சொல்வதை விட தமிழின் இனிமையும் எளிமையும் கலந்த தீஞ்சுவை சொல்லான அம்மா என்பதில் எவ்வளவு அழகு இருக்கிறது! அப்படி அவள் ஆசை ஆசையாகக் கூப்பிட அவளுக்கு அம்மாவின் படம் தான் இருந்தது. முப்பத்தெட்டு வயதில் அவசரமாகப் போய்விட்டாள். உருண்டை உருண்டையாக கண்ணிலிருந்து நீர் இறங்கிற்று. அம்மாவின் படத்தைப் பார்த்தாள். சாமுத்திரிகா லட்சணம் நிறைந்த திவ்வியமான முகம். பட்டு மாதிரி மென்மையான கண்கள். மூக்குத்தியின் ஒளியுடன் கூர்ப்பு மூக்கு. இதழ் விரிக்காமலேயே புன்னகை சொரியும் செப்பு இதழ்கள்.அம்மா...ஐ...லவ்...யூ அம்மா. படத்திற்கு முத்தம் கொடுத்துவிட்டு எழுந்தாள் உதயா. சூரிய ரேகைகள் ஜன்னல் வழியே நுழைந்தது. காளியின் அவதார ரேகைகள் கதவு வழியே நுழைந்தது.

    என்ன...மகாராணியாரின் திருப்பள்ளி எழுச்சி ஒரு வழியாக நடந்திடுச்சா? வேணி இடுப்பில் கைகளை வைத்துக் கொண்டு கேட்டாள்.

    என்னக்கா நீ...வெறும் ராணின்னு சொல்லிட்டே...சண்டி ராணின்னு சொல்லு.

    என்று ஒத்து ஊதினாள் வேணியின் தங்கை வாணி. சட்டென்று அவளையும் அறியாமல் சிரித்துவிட்டாள் உதயா. அவள் சிரித்ததற்கு காரணம் இருந்தது. அவளும் அவள் தம்பி விசுவும் இவளைக் குறிப்பிடும்பொழுது ராணி என்று தான் சொல்லிக் கொள்வார்கள். கோட் வர்ட் அது. வேணியின் அதிகாரங்கள் அத்து மீறும் பொழுது ராணியின் கட்டளை இது என்று அக்காவும் தம்பியும் புலம்பிக் கொள்வார்கள். வேறு எப்படித்தான் மனசை ஆத்திக்கொள்வது?

    எதுக்குடி சிரிக்கிறே? எழுந்தோமா...பல்லு கில்லு தேச்சிட்டு, குளிச்சிட்டு வந்து சித்திக்கு அடுப்படியில் உதவி செஞ்ஜோமான்னு இல்லாம பத்து மாசம் சுமந்துன்னு பாட்டு கேட்டததோடல்லாமல், காலையில் தினமும் கண் விழித்தால் நான் கைதொழும் தேவதை அம்மான்னு வாய் விட்டுப் பாடி கூத்தடிச்சிட்டு இருக்கே. தினம் இதே பொழப்பாப் போச்சு.

    "அந்த ரெண்டு பாடலும் கேட்டும் பாடியும் முடித்து எழுந்தால் தான் கிழக்கு விடியும். அது உங்களுக்குத் தெரியாதா சித்தி?. அது தான் என்னுடைய தேசிய கீதம் என்றாள் உதயா.

    அப்போ எனக்கு உதவி செய்யணும்கற எண்ணமே உனக்கு வராது இல்லையா? தடி மாடு மாதிரி வளர்ந்து என்ன பிரயோசனம்?

    மீண்டும் சிரித்தாள் உதயா. இந்த முறை சற்று பாலமாக. பின்னே சிரிப்பு வராமல் என்ன செய்யும்? இவளுக்கே அடுப்படியில் ஒரு வேலையுமில்லை. வள்ளியம்மை ஆச்சி தான் முழுக்க முழுக்க சமையல். நீட்டாக வெளியே செல்லத் தயாராக இருப்பது போல் தினம் ஒரு புதுப் புடவை அணிந்து...அலங்காரத் தேவதை போல் டைனிங் டேபிளில் கொண்டு வந்து வைப்பாள். இதுக்கு ஒரு உதவியாளர் தேவையா?

    அக்கா...ரொம்ப கொழுப்புக்கா இவளுக்கு. நேத்து மொட்டை மாடியிலிருந்து படிச்சிட்டு இருந்தா. நான் கீழே நெல்லிக்காய் மரத்தினடியில் நின்னு மாம்பழம் சாப்பிட்டிட்டு இருந்தேன். கம்பு வச்சு நெல்லிக்காய்களை அடிச்சாளா...தொப்பு தொப்புன்னு நெல்லிக்காய்கள் தரையில் விழுது. என் தலையிலே விழுந்தா என்னாகும்? கண்களில் போலி பீதியுடன் கூறி முடித்தாள் வாணி. இப்போழுது வாய் விட்டே சிரித்தாள் உதயா.

    நெல்லிக்காய் தானே விழுந்தது. அதுவும் அருநெல்லிக்காய்...இடியா விழுந்தது வாணி? யாருக்கும் கொடுக்காம மாம்பழம் சாப்பிட்டா...ஜாக்கிரதை வாணி...இடி விழுந்தாலும் விழும்.

    பார்த்தியாக்கா...பார்த்தியாக்கா...எப்படி பேசறான்னு. அவளுக்கு கடவுள் நாக்கைக் கொடுக்கலை. சாட்டையை மடக்கி வாய்க்குள்ள அடைச்சி வச்சிட்டார். அப்பப்ப எப்படி நீளுது பார்த்தியாக்கா?

    நீ கிழே போ வாணி. இவ அப்பா வரட்டும் வச்சுக்குறேன் கச்சேரி. உதயா சிரிச்சது போதும். கீழே போய் குளி. சாப்பிடு. காலேஜ் போகனுமில்லே?...

    இருவரும் இறங்கிப் போனார்கள். அப்பாடா என்று நிம்மதி பெருமூச்சு விட்டாள் உதயா.

    உருண்டோடி விட்டன எட்டு வருடங்கள். இவள் பன்னிரண்டு வயதாக இருந்தபோது புதுப் பெண்ணாக...புது அம்மா என்கிற பேரில் அப்பாவுடன் காரில் வந்து இறங்கினாள் வேணி. அசந்து போய்விட்டாள் உதயா. சினிமா நட்சத்திரம் போல் சொக்கி விழ வைக்கிற அழகு! இருபத்திரண்டு வயது இளமைத் திமிறலுடன் பொற்சிலை போல் மாலையும் கழுத்துமாக அப்பாவுடன் ஜோடியாக நின்றபோது புரிந்தது—அப்பாவின் தவறு.

    அப்பா...ஏம்ப்பா ஒரு நாற்பது வயது விதவையாக பார்த்து கல்யாணம் பண்ணி இருக்கலாமே! அல்லது ஒரு டிவோர்ஸி கிடைக்கலையா? இப்படியா நாற்பது வயதில் பொருத்தமே இல்லாமல் இளம் பெண்ணுடன் இப்படியொரு கல்யாணமா? வருத்தமாகத்தான் இருந்தது. பெண்ணுக்கு இழைக்கப்படும் அநீதி. எட்டு வயது தம்பி விசுவுடன் அவள் நின்றிருந்தாள். சுற்றி சில நெருங்கிய உறவினர்கள் ஆரத்தி எடுத்த பின் வேணி வலது காலை எடுத்து வைத்து உள்ளே நுழைந்தாள். அந்தப் பிரவேசம் ஒரு அச்சத்தைக் கொடுத்தது.

    இது என் டாட்டர் உதயா. கான்வென்டில் படிக்கிறா. இது என் சன் விஸ்வநாதன். கொஞ்சம் அசமஞ்சம். வீட்டிலே டியூஷன் வாத்தியார் வந்து சொல்லித் தருகிறார். இன்னும் ஸ்கூலுக்குப் போகலை... வேணி மென்மையாகச் சிரித்தாள். பட படவென்று கண்கள் கொட்டியது. பார்க்க ரம்மியமாக இருந்தது. இந்த மென்மை போகப் போக காணாமல் போனது. ஆனால் பிறர் அதை தெரிந்து கொள்ளாமல் சாமர்த்தியமாக மறைக்க வேணியால் முடிந்தது. ஆனால் அப்பொழுது உதயாவுக்குப் பாவமாக இருந்தது. அந்த பரிதாபத்துக்குக் காரணம்...வேணிக்கு நேர்ந்த அநியாயம் தான். பொருந்தாத கல்யாணம். வயது வித்தியாசம் மட்டுமல்ல, ஏழ்மையால் வேறு வழியின்றி திணிக்கப்பட்ட உறவு. இந்தச் சமுதாயம் பெண்ணுக்கு ஏற்படுத்திய கொடுமை. வேணி பலியானது உதயாவுக்கு ஒரு வலிதான்.

    வாங்க வீட்டை சுத்திக் காட்றேன். என்று உதயா அன்புடன் அழைத்துச் சென்றாள். கீழே நான்கு அறைகள் இருந்தன. மிகப் பெரிய ஹால். ஒரு பெரிய சமையலறை. எல்லாம் நவீன உபகரணங்களுடன் பளிச்சென்று இருந்தது. சமையலறையை ஒட்டி ஒரு ஸ்டோர் ரூம். பின் வாசலில் இடது பக்கம் பாத்ரூம் இணைப்புடன் ஒரு பெரிய அறை. வள்ளியம்மை ஆச்சி இங்கு தான் தங்கிக் கொள்வாள். அம்மா உயிரோடு இருக்கும் பொழுதிலிருந்தே அப்படித்தான். அப்போவெல்லாம் ஆச்சி சமையல் பண்ணினாலும் அம்மா கூடவே நின்று காய் நறுக்கித் தருவாள். சட்னி அரைக்க மிக்சி ஜாரில் எல்லாப் பொருட்களையும் திட்டமாகப் போட்டு வைப்பாள். ஆச்சி அதை அரைத்து தாளித்ததும் சட்னி வாசம் சாப்பிடத் தூண்டும். வெந்த இட்டிலிகளை சூடாக எடுத்து அப்பாவிற்கு தன் கையால் பரிமாறுவாள் அம்மா. சமையலுக்கு ஆள் இருக்கு என்பதற்காக அம்மா சும்மா இருக்கமாட்டாள். சுறுசுறுவென்று தேனீ போல் வேலை செய்வாள்.

    சுவாதி...நீ சமயலறையில் வேலை பார்த்து கஷ்டப்படவேண்டாம் என்று தானே ஆள் ஏற்பாடு பண்ணினேன். நீ எதுக்கு அடுப்படியிலே வேகற? என்று அப்பா கடிந்து கொள்ளும்போதெல்லாம் அம்மா பதிலுக்கு சொன்னது உதயாவிற்கு இன்னமும் ஞாபகமிருக்கிறது.

    "அவளும் மனுஷி தானே! சின்னச் சின்ன உதவிகள் செய்வதால் என்ன வந்து விடப் போகிறது? ஒற்றை ஆளாய் சிரமப்படணுமா? நாம் எவ்வளவுக்கு எவ்வளவு இனக்கமாக நடந்து கொள்கிறோமோ அவ்வளவுக்கு அவ்வளவு சமையல் ருசியாக இருக்கும் இல்லையா?’

    அம்மாவின் லட்சணமான முகமும் லட்சணமான பேச்சும் எல்லா வேலைக்காரர்களுக்கும் பிடிக்கும். அதே சமயத்தில் மரியாதையுடணும் நடந்து கொள்வார்கள். ஆனால் வேணியிடம் எல்லோருக்கும் பயம் தான் இருந்தது. எங்கே வேலையை விட்டு துரத்திவிடுவாளோ என்கிற மிரட்சியுடனே பார்ப்பார்கள். ஐந்து வேலைக்காரர்கள் இருக்கிறார்கள். கார் டிரைவர் ஏகாம்பரம். தோட்டக்காரர் மாணிக்கம். பாத்திரம் விளக்கும் ராதா. சமையலுக்கு வள்ளியம்மை ஆச்சி. எடுபிடி வேலை செய்யும் செண்பகம். எல்லோரையும் அன்பால் கட்டிப் போட்டிருந்தாள் அம்மா. எல்லோரையும் பயத்தால் கட்டிப் போட்டிருந்தாள் வேணி. ஏதோ ஒரு நாட்டின் மகாராணி போல் அதிகாரக் கொடி பறக்க வலம் வந்தாள்.

    பின் வாசலை ஒட்டி பெரிய தோட்டம். மலர்கள். காய்கனிகள். ஒரு வித இம்மென்ற இயற்கை வாசம். உதயாவிற்கு பிடித்த இடமே இந்த தோட்டம் தான். தென்னை மரங்களின் அணிவகுப்பு. இரண்டு மாமரங்கள். வேம்பு கிளை பரப்பி நிழல் தந்தது. அதனடியில் ஒரு சிமெண்ட்டு பெஞ்ச். அம்மா சாயங்கால நேரம் இதில் அமர்ந்து, வீசும் காற்றையும் சாயங்கால மேகங்கள் பொன்னொளி வீச அசையும் அழகையும் ரசிப்பாள். அப்பொழுது அவள் முகம் குழந்தை போல் இருக்கும். பிறந்ததன் பயனை அடைந்தது போல் திருப்தியுடன் சிரிப்பாள். அவளுக்கும் விசுவுக்கும் நிறைய கதை சொல்வாள்.நல்லா படிக்கணும். உன் காலிலேயே நிற்கணும். தம்பியை நீ தான் நல்லா பார்த்துக்கணும். அப்பாவோட பணக்கார சூழலிலே திளைத்து சோம்பேறி ஆயிடாதே. இப்படியொரு வீட்டை நீயே வாங்கணும். இது உனக்கு வாடகை வீடு. சொந்த வீடல்ல... இந்த கருத்தை மாற்றி மாற்றி உதயாவிற்கு சொல்வாள் அம்மா. அம்மா போய் சேர்ந்துவிட்டாலும் அவள் சொல்லிய வார்த்தைகள் அவள் மனசில் தங்கிவிட்டது. வேணியின் கை பிடித்து அவள் சுற்றிக் காட்டும் இந்த தருணத்திலும் அவள் ஞாபகப்படுத்திப் பார்த்தாள். அம்மாவின் சொற்கள் கல்வெட்டு போன்றது.பன்னிரண்டு வயது உதயா தோட்டத்தைப் பெருமையுடன் காட்டி வேணியிடம் சொன்னாள்.

    எங்கம்மா உருவாக்கிய தோட்டம். அழகா இருக்கில்லே...

    ‘ஆமா...உங்கம்மா அழகா இல்லாட்டியும் தோட்டத்தை அழகாத்தான் உருவாக்கி இருக்காங்க..." என்று மட்டம் தட்டி உதயாவை சின்ன குருரச் சிரிப்புடன் பார்த்தாள் வேணி. வேணியின் கைகளை அன்புடன் பற்றியிருந்த உதயாவின் கை நழுவியது. ஏன் இப்படி மனதை காயப் படுத்துகிறாள் என்று அப்பொழுது அவளுக்குப் புரியவில்லை. பிரயாண களைப்பாக இருக்கலாம் என்று எண்ணியது அந்த பிஞ்சு மனம். அவளை ஆசையுடன் அம்மா என்று அழைக்க திட்டமிட்டிருந்தாள் உதயா. ஆனால் வேணி வீசிய சொற்களால் மனம் புண்பட்ட சிறுமி அந்த எண்ணத்தை ஒத்தி வைத்தாள். இவளின் சுண்டிய முகத்தை கண்டு கொள்ளாது, அங்கு வந்த அப்பா பேசியதைக் கேட்டு மேலும் முகம் வாடினாள் உதயா.

    என்ன வேணி...தோட்டத்தை பராமரிப்பது பற்றியெல்லாம் நீ கவலைப்படாதே. அதையெல்லாம் மாணிக்கம் பார்த்துப்பான். நீ உன்னை, உன் அழகைப் பராமரிச்சுக்கோ போதும்... என்று அப்பா ஹா ஹா என்று சிரித்த போது உதயா புரிந்து கொண்டாள், இவள் அப்பாவின் மனைவி. ஒரு போதும் இவர்களுக்கு அம்மாவாக இருக்க மாட்டாள்.அம்மா நீ ஏம்மா எங்களை விட்டுப் போனே? அதனால் தானே இந்த வேணி வலையில் அப்பா விழப் போகிறார். அவருக்கு நங்கள் இரெண்டாம் பட்சம் தான். சின்ட்ரெல்லாவுக்கு வந்த ஸ்டெப் மதர் கொடுமை படுத்துவாள். இவள் கொடுமை படுத்துவாளா இல்லை கொடுத்து வாழ வைப்பாளா தெரியவில்லை. உதயா அம்மா வளர்த்த ரோஜா செடிகளில் பூத்திருந்த ரோஜாக்களை பறித்து தன் தலையில் சூடிக் கொண்டாள். என்னவோ அம்மா அருகில் வந்து அணைப்பது போல் இருந்தது. அம்மா பூக்களில் சிரிக்கிறாள். கணியில் கணிகிறாள். மரங்களில் சாமரம் வீசுகிறாள்...இப்படி அவள் நினைத்துக் கொண்டிருக்கும் போதே வேணியின் ஆஆ...என்று கத்தும் சப்தம் கேட்டது. வேகமாக அங்கு சென்றாள் உதயா. வேணி அங்கு பூத்திருந்த மஞ்சள் ரோஜாவை பறித்திருக்கிறாள். முள் நன்றாக குத்திவிட்டது. மோதிர விரலில் ரத்தம் முத்து முத்தாக பூத்து புல் தரையில் சொட்டிக் கொண்டிருந்தது.என் பெண்ணின் மனசையா புண் படுத்துறே..." என்பது போல் அம்மா நட்ட ரோஜா செடியின் முள் வேணியின் கையை பதம் பார்த்துவிட்டது. உதயா இதழ்களில் புன்னகை மலர்ந்தது.

    என்ன உங்க பெண் சிரிக்கிறாள். எனக்கு ரத்தம் வருவது அவளுக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது... அப்பா மகளை கோபமாகப் பார்த்தார்.

    என்ன உதயா சிரிக்கிறே? உன் அம்மா ஸ்தானத்தில் வந்த பெண்ணிடம் இப்படி மோசமா நடந்துக்கிறே? அவள் பயந்துவிட மாட்டாளா? கொஞ்சம் அனுசரணையாக நடந்து கொள்...ஸாரி சொல்லு.

    அப்பா நான் படிக்கணும். பரீட்சை நெருங்குகிறது. என்று கூறிவிட்டு அழுது கொண்டே வீட்டினுள் ஓடிவிட்டாள். அப்பா சொல்வது கேட்டது.

    விடு வேணி. அவள் சின்னப் பெண்தானே. போகப் போக சரியாகிவிடும்.இந்த மஞ்சள் ரோஜாவை விட உன் முகம் ரொம்ப அழகு...மஞ்சள் முகமே வருக...

    அப்பாவின் ரொமான்ஸே மகளின் உள்ளத்தை குடைந்தெடுத்துவிட்டது.

    அக்கா...யாரக்கா அந்த பொம்பளை? என்று கேட்டபடி ஓடி வந்தான் விசு.

    தெரியலை விசு. நமக்கு நேரம் சரியில்லை. அவங்க நமக்கு அம்மாவாம்.

    அய்...புது அம்மாவா? ஜாலி...,., என்று கை தட்டினான் விசு.

    சரி வா...உனக்கு ஆரஞ்ஜூஸ் பிழிந்து தரட்டுமா? விசுவுக்கு ஆரஞ்ஜூஸ் என்றால் கொள்ளை பிரியம். மூன்று ஸ்பூன் சர்க்கரை போட்டு ஜில்லென்று ஐஸ் போட்டு தந்தால் ரசித்துக் குடிப்பான். உதயா ஜூஸ் பிழித்து கொண்டு வந்தாள்.இந்தா குடி விசு... விசு அதை வாங்கும் பொழுது வேணி அங்கு வந்தவள் அந்த கப்பை பிடுங்கிக் கொண்டாள்.

    சாப்பிடுகிற நேரம் என்ன ஜூஸ் வேண்டி இருக்கு? விசு அம்மா சொல்றேண்டா இப்ப குடிக்காதே. உனக்கு பருப்பு பாயாசம் செய்யச் சொல்லி இருக்கேன். நீ குடிக்கலாம் சரியா... வேணியின் குரலில் இழைந்த அன்பும் அக்கறையும் கண்டு உதயாவே அசந்துவிட்டாள். விசு இரண்டும் கெட்டான். வேணியின் குரலுக்கு மகுடிக்கு மயங்கும் நாகம் போல் மயங்கிவிட்டான்.

    சரிம்மா...போ அக்கா...எனக்கு ஜூஸ் வேண்டாம்... சொன்னவன் சிரித்துக் கொண்டே வேணியின் கையை பிடித்துக் கொண்டு தொங்கினான். அப்பா அவனை குட் பாய் என்று பாராட்ட விசு அப்பா...ஸ்வீட் அப்பா... என்றான். மூவரும் வீட்டினுள் கை கோர்த்துக் கொண்டு போனார்கள்.

    என்ன உதயா? உன் தம்பிக்கு நான் தான் அம்மா... என்று ஏளனமாக அவளைப் பார்த்து சிரித்துவிட்டுப் போனாள் வேணி.

    உதயா நொறுங்கிப் போனாள். ஒரே நாளில் அப்பாவையும் தம்பியையும் அவளிடமிருத்து பிடுங்கிக் கொண்டாளே இந்தப் புதியவள்! அம்மா...நீ இதை தடுக்க மாட்டியா? என்று கேள்வி எழுப்பினாள். மெளனமாக அழுதாள்.

    அத்தியாயம் - 2

    அம்மாவுடன் வாழ்ந்த இனிமையான வாழ்க்கைக்கு ஒரு முற்றுப்புள்ளி விழுந்துவிட்டது. வேணியின் வருகை தன் வீட்டிலேயே தான் ஒரு ஒதுக்கப்பட்ட நபர் என்று புரிய வைத்துவிட்டது. அம்மா சொன்னது ஞாபகம் வந்தது. இது உனக்கு வாடகை வீடு தான். எவ்வளவு உண்மை! வாடகை வீட்டில் எவ்வளவு சௌகரியங்கள் இருந்தாலும் அது மனதை தொடாது. சொந்த வீடு, அது குச்சு வீடாக இருந்தாலும் அது இதம். ஏன் மாற்றம் வந்தது என்று புலம்பிக் கொள்வதை விட இந்த மாற்றத்தில் எப்படி முடிந்த வரை பொருத்திக் கொள்ள முடியும் என்று கணக்கு போட்டது மனது. ப்ளாட்டிங் பேப்பர் இங்கை உரிஞ்சிக் கொள்வது போல் வேணி தம்பி விசுவை உறிஞ்சிக் கொண்டு விட்டாள் என்று புரிந்தது. தன் கையை இழந்தது போல் உணர்ந்தாள் உதயா. அதற்குப் பிறகு உதயாவிற்கென்று ஒரு தனி உலகம் உருவாகிவிட்டது. உதயா அழகாக வரைவாள். தன் வீட்டின் தோட்டத்தையே வரைந்தாள். சிமென்ட் பெஞ்சில் அம்மா உட்கார்ந்து இயற்கையை ரசிப்பது போல் வரைந்திருந்தாள். சாயங்கால மேகங்கள் பூரண திருப்தியுடன் அடி வானத்துக்கு சிவப்பை தந்துகொண்டிருக்க, பறவைகள் வீ வடிவில் கூடு திரும்பிக் கொண்டிருக்கும்படி வரைந்திருந்தாள். ரொம்ப அழகாக இருந்தது. வள்ளியம்மை ஆச்சியிடம் காண்பித்தாள். ஆச்சிக்கு ஆச்சர்யம்.

    ரொம்ப அழகா இருக்கு உதயா. அப்படியே அம்மாவை நேரில் பார்க்கிறா மாதிரி இருக்கு. படத்தை சட்டம் போட்டு மாட்டிக் கொள். என் ராசாத்தி... என்று கொஞ்சினாள். உதயா பூரித்துப் போனாள். அது அதிகாலை நேரம். ஆச்சி பாலைக் காச்சிக் கொண்டிருந்தாள். அதற்குள் குளித்துவிட்டிருந்தாள்.

    ஆச்சி விசு எங்கே? அவனிடம் ஓவியத்தை காட்ட வேண்டும்.

    அங்கு வந்த வேணி என்ன அரட்டை காலங்கார்த்தாலே? விசு தூங்கறான் இப்ப வரமாட்டான். அவங்க அவங்க போய் வேலையே பாருங்க. என்று அதட்டினாள். அவள் பார்வை உதயாவின் கையில் இருந்த ஓவியத்தின் மேல் போனது.இதென்ன படம்? ஒ படிக்காமல் கிறுக்கிக் கொண்டிருந்தியா? உன்னை கான்வென்டில் சேர்த்தது தண்டம். பாடங்களை ஒழுங்கா படிக்கப் பாரு. தேர்வில் அறை குறை மார்க் வாங்க வேண்டியது...கேட்டா ஏதாவது சாக்கு சொல்லவேண்டியது. ஆயிரக்கணக்கில் உன் படிப்புக்காக செலவாகிறது என்று உனக்கு உறுத்தல் இருந்தா தானே. போ போ... ஓவியத்தை பிடுங்கி இரெண்டாக கிழித்தாள்.ஏம்மா கிழிச்சீங்க? நல்லாத்தானே இருந்தது. படம் வரையறது நல்ல விஷயம் தானேமா. ஆச்சி அவளையும் அறியாமல் சொல்லிவிட்டாள். வேணி அவளை முறைத்துப் பார்த்தாள்.

    எது நல்ல விஷயம் எது கெட்ட விஷயம் எல்லாம் எனக்குத் தெரியும். நீங்க அவளுக்கு ஆதரவா பேசறதாலே தான் அவள் என்னை மதிக்க மாட்டேங்கறா. முதல்ல உங்க வேலைய ஒழுங்கா பாருங்க. அய்யாவுக்கு காப்பி கலந்தாச்சா.? ஆச்சி பதிலேதும் பேசாமல் சூடான பாலில் டிகாஷன் கலந்து சர்க்கரை கலந்து பக்குவமாக ஆற்றி பவுன் நிறத்தில் காபி கலந்து கப்பில் தந்தாள். வேணி வாங்கிக் கொண்டு மாடி ஏறிப் போனாள்.

    அங்கு போய் தான் கலந்து கொண்டு வந்ததா சித்தி அப்பாவிடம் பெருமை பேசுவாள். என்று சிரித்தாள் உதயா. ஆச்சியும் சிரித்தாள்.

    போகட்டும் விடு. அய்யாவுக்குத் தெரியும் அது நான் கலந்தது தான் என்று. உன் சித்திக்கு பயந்து வெளியே சொல்ல மாட்டார். உன்னைப் போல் காப்பி கலந்து கொடுக்க உன்னால் மட்டும் தான் முடியும், என்று பாராட்டுவார். இல்லை உன் சித்தி அய்யாவை உண்டு இல்லை என்று ஆக்கிவிடுவாங்களே.

    என்ன சித்தியைப் பத்தி கோள் சொல்லிட்டிருகீங்க? சித்திக்கிட்டே சொல்லிடுவேன். என்று சொல்லியபடி வந்தான் விசு.

    விசு அக்கா ஒரு ஓவியம் வரஞ்சிருந்தா தெரியுமா? உங்கம்மாவை தத்ருபமாக வரஞ்சிருந்தா. உனக்கு காட்டணும்னு அக்கா துடிச்சிட்டிருந்தா...

    எங்கே அது?

    உன் சித்தி அதை கிழிச்சி போட்டுட்டா. தரையில் கிழிந்து கிடந்த ஓவியத்தை எடுத்துக் காட்டினாள் ஆச்சி. விசு பார்த்தான்.

    சித்திக்கு பிடிக்கலையா? அப்ப எனக்கும் பிடிக்காது. ஓவியத்தை மேலும் கிழித்து குப்பைத் தொட்டியில் போட்டுவிட்டுப் போய்விட்டான் விசு. மளுக்கென்று உதயா கண்ணில் நீர் கோத்தது. ஆச்சி சமாதானப் படுத்தினாள்.

    உதயா...வருத்தப்படாதே. அவன் புரிந்தா பேசறான். நீ தான் பொறுமையா இருக்கணும். எல்லாம் சரியாகிவிடும். என்று அன்புடன் சொன்னாள்.

    இல்ல ஆச்சி சித்தி வந்து ஒரு மாசம் கூட ஆகலை அதுக்குள்ளே அவனை என்னிடமிருந்து பிரிச்சிட்டாங்க. என் ஒரே ஆறுதல் அவன்தான். நாங்க எவ்வளவு க்ளோசா இருந்தோம். இப்ப...

    ஆச்சி என்ன சொல்வதென்று தெரியாமல் விழித்தாள். பாலைக் கலந்து கொடுத்தாள்.குடி...பள்ளிக்கு நேரமாகிறது. அதுக்கு வேற உன் சித்தி வந்து கத்தப் போறாங்க. உங்கம்மா ஒரு அன்பான மனுசி. கொடுத்து வைக்கலை.

    உதயா குளிக்க ஓடினாள். பள்ளிக்கு நேரமாகி விட்டது என்பது உண்மை தான். குளித்து பள்ளிச் சீருடை அணிந்துகொண்டு சாப்பாட்டு மேஜை முன் அமர்ந்தாள். அதற்குள் ஆச்சி சூடான இட்டிலிகளை ஹாட் பாக்ஸ்யில் கொண்டு வந்து வைத்திருந்தாள். சட்னியும் சாம்பாரும் எடுத்து வந்து வைத்தாள் உதயா. ஜக்கில் நீர் பிடித்து வைத்தாள். அப்பாவும் சாப்பிட வந்தார். சித்தியும் வாணியும் கூடவே வந்தார்கள்.

    அத்தான்...உங்களுக்குத் தெரியுமா? உதயா படிக்காமே படம் வரைஞ்சிக்கிட்டு இருந்தாள். அக்கா சொல் பேச்சு கேக்கவே மாட்டேங்கறா. என்று வத்தி வைத்தாள். வாணி உதயாவை விட நாலு வயது பெரியவள். பதிமூன்று வயது உதயாவை தனக்கு போட்டியாகவே நினைத்தாள்.

    என்ன உதயா? வாணி சொல்றது நிஜம் தானா? சயன்ஸ் சப்ஜெக்டில் உன் மார்க் என்பது தான். இந்த லட்சணத்தில் உனக்கு எப்படி மெடிக்கல் சீட் கிடைக்கும்? நல்லா படிம்மா. உன் அம்மா ஆசைப்பட்ட மாதிரி நீ டாக்டர் ஆகவேண்டாமா? வேணி தட்டில் வைத்த இட்டலிகளை சட்னியுடன் தொட்டு சாப்பிட்ட வண்ணம் பேசினார் சங்கரலிங்கம்.

    அப்பா...அம்மா என்னை நல்லா படி என்று தான் சொல்லியிருக்காங்க. டாக்டருக்கு படின்னு சொல்லலை.

    அப்ப மாடு மேக்கச் சொன்னாங்களா? என்று கிண்டலாக வேணி கேட்க வாணி குலுங்கி குலுங்கி சிரித்தாள். விசுவும் அக்கா மாடு மேய்க்கப் போறா...அக்கா மாடு மேய்க்கப் போறா... என்று கூறிச் சிரித்தான். முடிந்த மட்டும் அழுகையை அடக்கிக் கொண்டு உதயா சொன்னாள்.

    எவ்வளவோ நல்ல கோர்ஸ் இப்ப வந்திருக்கு. நான் சூஸ் பண்ணி எனக்கு பிடித்ததில் சேருவேன். மாடு மேய்க்க லாயக்கு வாணி தான். சூடாக சொல்லிவிட்டு கை கழுவ எழுந்து சென்றுவிட்டாள் உதயா. அங்கு அமைதி நிலவியது. அது நல்ல அமைதி இல்லை என்று ஆச்சி பயம் கொண்டாள்.

    சங்கரலிங்கம் அலுவலகத்துக்கு தயாராகி கீழே இறங்கி வந்த போது கார் டிரைவர் வண்டியை போர்டிகோவில் வந்து நிறுத்தி இருந்தான். வழக்கம் போல் உதயா காரில் ஏறி அமார்ந்தாள். அலுவலகம் போகும் வழியில் உதயாவை பள்ளியில் விட்டு விட்டு போவது தான் வழக்கம்.

    உதயா இறங்கு. நீ இன்று நடந்து கொன்ட முறை எனக்குப் பிடிக்கலை. பள்ளிக்கு பஸ்சில் போ. இந்தா பஸ்ஸுக்கு காசு. அவள் பதிலை எதிர்பார்க்காமல் கார் கதவை திறந்து விட உதயா இறங்கினாள். கார் விரைந்து போய்விட்டது.விசு ராணியின் வேலையைப் பார்த்தியா? என்று அவள் தம்பியிடம் சொல்ல சித்தி உன்னை ராணின்னு சொல்றா அக்கா. என்று கத்திக் கொண்டே உள்ளே ஓடினான். வேணி விஷமமாக சிரித்துக் கொண்டே வெளியே வந்தாள்.இனிமே துடுக்கா பேசினே இது தான் கதி.

    அப்படியா? பரவாயில்லை நடந்தே போகிறேன். எனக்கு ஒன்றும் கஷ்டமில்லை. உதயா நடக்கத் துவங்கினாள். போய் சேர அரை மணியாகும். முதல் பிரியட் முடிந்துவிடும். அவள் நேரம் கழித்து வந்ததற்காக ஒரு மணி நேரம் வெயிலில் நிற்க வேண்டி வரும். பரவாயில்லை வேணியின் நமட்டு சிரிப்பின் தாக்கத்தை விட இது ஒன்றும் பெரிய கஷ்டத்தை தரப் போவதில்லை. அப்பா எதற்கு இந்த வேணியிடம் இப்படி பயப்படுகிறார் என்றே அவளுக்குப் புயயவில்லை.எல்லாம் உன் சித்தியின் இளமையும் அழகும் படுத்தும் பாடு. என்று யாரோ ஒரு உறவினர் முன்பு சொன்னது அவளுக்கு ஞாபகம் வந்தது. என்ன அழகோ...அம்மா மட்டும் அழகாக இல்லையா என்ன? சதா அம்மாவோடு அப்பா சண்டை போட்டது தான் அவளுக்கு நினைவிற்கு வருகிறது. இவ்வளவுக்கும் அம்மா அமைதியானவள். வாழ்க்கையின் பக்கங்கள் பிடிபடவில்லை. அனுபவம் இல்லாத பிஞ்சு வயது...உதயாவிற்கு எல்லாம் மர்மமாக இருந்தது. அவள் இப்பொழுது நயன்த் ஸ்டாண்டர்ட் படிக்கிறாள். ஆனால் வாழ்க்கை பாடத் திட்டம் கல்லூரி ஸ்டாண்டர்டில் இருக்கிறது. அவளுக்கு எப்படி புரியும்? மெல்ல நடக்கிறாள் உதயா. விஷ் விஷ் என்று ஓடிக்கொண்டிருக்கும் வாகனங்கள். அதையும் தாண்டி மெல்லிதாக வீசும் காலைத் தென்றல். மரங்களின் பசுமை குளிர்ச்சி, எல்லாம் மனதை ஈர்க்கிறது. நடப்பது கூட சுகமாகத் தான் இருந்தது. கலையிடம் சொல்லவேண்டும் அவள் வரைந்த ஓவியத்தைப் பற்றி. கலைச்செல்வி தான் அவள் தோழி. அவளை ஓரளவிற்கு புரிந்து கொள்ளக் கூடியவள். அவளுடன் சேர்ந்து கேம்ஸ் பீரியடில் விளையாடுவது உதயாவிற்கு பிடித்தமான விஷயம். காற்று போல் ஆடி ஓடி ரிங் டென்னிஸ் ஆடும் போது வரும் சுகமே அலாதி. மனசே சந்தோஷத்தில் துள்ளி குதிக்கும். அவளுக்குப் பிடித்தமான விளையாட்டு. கலைச் செல்வியும் அவளும் டபிள்ஸ் விளையாடி ஜெயித்து அவர்கள் வகுப்பிற்கு பெருமை சேர்த்திருக்கிறார்கள். இவளும் தனியாக விளையாடி சாம்பியன் பட்டம் பெற்றிருக்கிறாள். அம்மா இருந்த சமயம் அவளின் வெற்றிகளை கொண்டாடுவாள். திருஷ்டி சுற்றிப் போடுவாள். அப்பா கூட பெருமையாகப் பேசுவார்.என் பெண் ஒலிம்பிக்ஸ்ஸில் விளையாடி ஜெயிக்கப் போகிறாள் பார்... அப்பாவிற்கும் அம்மாவிற்கும் அவள் தான் பாலமாக இருந்தாள். இருவரும் அவளை கண் போல் பார்த்துக் கொண்டார்கள். அவர்களுக்குள் ஆயிரம் சன்டைகள் வரும், ஆனாலும் இருவரும் அவள் மேல் அன்பை பொழிந்தார்கள். விசுவை அம்மா கூடுதல் பிரியத்துடன் பார்த்துக் கொள்வாள். ஒரு அழகிய வட்டத்தில் முக்குளித்து வாழ்ந்த வாழ்க்கை இன்று இல்லை. என்ன செய்வது? அம்மா இறந்த பின் ஒரு வருஷம் சித்தி வருவதற்கு முன் உதயா தான் விசுவிற்கு ஆறுதலாக இருந்தாள். அவன் அம்மாவை தேடி அழும்போது இதமாக சொல்வாள் விசு அழக்கூடாது. இனி நான் தான் உன் அம்மா. விசு பேந்தப் பேந்த விழிப்பான்.

    அம்மா வரமாட்டாளா? ஏன் செத்துப் போனா? நீயும் செத்துப் போயிட்டா நான் என்ன செய்றது? என்று அவள் மடியில் படுத்து அழுவான்.

    ச்சே...ச்சே நான் சாகமாட்டேன். ப்ராமிஸ். ஜாலியா இரு...போதுமா? என்னென்னவோ நினைத்துக் கொண்டு நடந்ததில் பள்ளி வந்துவிட்டது கூட தெரியாமல் இருந்தாள். அவள் வகுப்பிற்குள் போக முடியவில்லை. வெயிலில் நிப்பாட்டப்பட்டு முதல் பிரியட் முடிந்ததும் தான் வகுப்பிற்குள் அனுமதிக்கப் பட்டாள். கலையிடம் அவள் ஓவியத்தைப் பற்றியும் சித்தி அதை கிழித்ததைப் பற்றியும் சொன்னாள்.

    "நீ பேசாமாலா இருந்தே? நானா இருந்தா அவங்க புடவையை

    Enjoying the preview?
    Page 1 of 1