Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

தீயைச் சுடும் தென்றல்!
தீயைச் சுடும் தென்றல்!
தீயைச் சுடும் தென்றல்!
Ebook138 pages50 minutes

தீயைச் சுடும் தென்றல்!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

பலமான சிரிப்பும், அரட்டையும் மாடியை வெடி வைத்து தகர்ப்பதைப்போல் அதிர்ச்சியை உண்டாக்க - காபி தட்டுடன் உள்ளே நுழைந்தாள்.
 "இதான் நீங்க படிக்கிற லட்சணமா?"
 என்றபடி அவர்களின் நடுவில் இருந்த மேசை மீது காபி தட்டை வைத்தாள்.
 அரட்டையும், சிரிப்பும் நிமிடத்தில் நின்றன. ஆளுக்கொரு கோப்பையை எடுத்துக் கொண்டனர்.
 "நன்றிக்கா" என்றான், உமர்.
 "பேஷ்... பேஷ்... காபி ரொம்ப நல்லா இருக்கு" என்று ஒரு வாய் உறிந்து விட்டுச் சொன்னான், டேவிட்.
 அசோக் மட்டும் மவுனமாக காபியை இழுத்தான்.
 "அசோக் மட்டும் பரீட்சையில் பெயிலாகட்டும்... உங்க ரெண்டு பேரையும் தொலைச்சிடுறேன்னு அம்மா சொல்லி இருக்காங்க" என்றாள், காவேரி.
 "ஐய்யோ... அக்கா! நாங்க பெயிலானாலும் ஆவோமே தவிர, இவனைப் பெயிலாக விடமாட்டோம். எப்படியாவது 'பாஸ்' பண்ண வச்சுடுவோம்" பயந்தவனைப் போல் டேவிட் சொல்ல,
 "பாவம், அக்கா! நம்ம அரட்டையைப் பார்த்து பயந்துட்டாங்க" உமர் சிரித்தான்.
 "அடப்போங்கடா! இதெல்லாம் ஒரு அரட்டையா? கல்லூரி வாழ்க்கையில நாங்க அடிக்காத அரட்டையா? அதிலும் உன் அக்கா இருக்காளே ஆயிஷா. காலேஜ் காம்பவுண்டு வரைக்கும், இந்தப் பூனையும் பால் குடிக்குமாங்கிற மாதிரி வருவா. அப்புறம் பார்க்கணுமே... அவ பண்ணுற கூத்தை.
 டேவிட்டோட அக்கா பெமிலா மட்டும் என்ன? அவ, நான் ஆயிஷா மூணு பேரும் சேர்ந்துட்டா அந்த இடமே 'கலகல'ன்னு ஆயிடும். ம்... அதெல்லாம் ஒரு காலம். ஒரு தடவை எவனோ ஒருவன் பெமிலாவை கேலி பண்ணிட்டான். பெமிலா அவனை அந்த இடத்திலேயே நாலு அறை கொடுத்தா பாரு. அப்பா... எங்களுக்கே பயமா போயிட்டு. பெமிலாவோடத் துணிச்சல் யாருக்கும் வராது."
 காவேரி மலரும் நினைவுகளைக் கிளற - டேவிட் முழுவதும் காலி செய்த கோப்பையை மேசை மீது வைத்தான்.
 "அக்கா... பெமிலாவோட துணிச்சலை நீங்கதான் மெச்சிக்கணும். இன்னைக்கு அவ ஒண்ணாம் நம்பர் கோழையா இருக்கா. புருஷனை எதிர்த்து ஒரு வார்த்தை பேசுறாளா? பயந்து சாகிறா. அவ தன் புருஷனை நாலு அறை கொடுத்துட்டு வந்தா, நான் சந்தோஷப்படுவேன்."
 "அடப்பாவி! என்னடா இப்படிப் பேசுறே?" மிரட்சியுடன் டேவிட்டைப் பார்த்தாள், காவேரி.
 "பின்ன என்னக்கா? பொம்பளைப் பிள்ளையைக் கல்யாணம் பண்ணிக் கொடுத்தோமோ... பிரச்சினை விட்டுதான்னு இருக்கணும். என்னைக் கேட்டா கல்யாணமே பிரச்சினைதான். சும்மா அதை வாங்கிட்டு வா, இதை வாங்கிட்டு வான்னு மாசத்துக்கு ரெண்டு தடவை பிறந்த வீட்டுக்கு அனுப்பி வச்சுடறான். அவ இங்க வந்து கண்ணைக் கசக்கிக்கிட்டு நிக்கிறா. இவனையெல்லாம் கட்டி வச்சு உரிக்கணும்க்கா."
 "டேவிட் என்ன இருந்தாலும் அக்கா புருஷனை இப்படி 'அவன் இவன்'னு பேசக்கூடாதுடா!"
 "அடப்போங்கக்கா! உங்க வீட்டுக்காரர் மாதிரி இருந்தா தலையில தூக்கி வச்சு கொண்டாடலாம். இவனையெல்லாம் என்ன வேணா சொல்லலாம். பொம்பளைங்களோட துணிச்சலெல்லாம் கல்யாணத்துக்கு முன்னாடிதான். அதுக்குப் பிறகு கோழையா ஆகிடுறாங்க" டேவிட் அலுத்துக்கொள்ள - உமர் இருக்கையில் சாய்ந்து, கைகளைப் பின்னால் கட்டிக் கொண்டு சொன்னான்.
 "அதனாலதான் என் அக்கா ஆயிஷா, கல்யாணமே வேண்டாம்னு சொல்றா. கல்யாணம்கற பேர்ல அடிமையா வாழ விரும்பலையாம்."
 "ஆமாம்ப்பா! ஆயிஷா அக்காவையாவது சுதந்திரமா வாழ விடுங்க. காலேஜில் வேலை. கை நிறைய சம்பளம். அவங்க இஷ்டப்படி வாழட்டுமே!" என்றான், அதுவரை பேசாமலிருந்த அசோக்ஆமாடா... சொல்லுவீங்க. உங்க ரெண்டு பேருக்கும் 'லயன் கிளியர்' ஆயிடுச்சு. எனக்குத்தான் நந்தி மாதிரி உட்கார்ந்திருக்கா என் அக்கா. இவ இப்படியே இருந்தா எனக்குக் கல்யாணம் எப்ப நடக்கிறது?" சோகமாகச் சொன்னான், உமர்.
 "படிப்பே முடியலையாம். அதுக்குள்ள கல்யாணம் பத்தி கவலையா? ஆளைப்பாரு. ஒழுங்கா படிக்கிற வேலையைப் பாருங்க மூணு பேரும்" என உமரின் மண்டையில் குட்டினாள், காவேரி.
 "ஐய்யோ..." என தலையைப் பற்றிக் கொண்ட உமர், "அக்கா... அத்தான் ஏன் வெளிநாட்டுக்கு ஓடினாருன்னு எனக்கு இப்பத்தான் புரியுது. இல்லாட்டி அவரைக் குட்டியே கொன்னுடுவீங்க" என்றான்.

Languageதமிழ்
PublisherPocket Books
Release dateDec 17, 2023
ISBN9798223389972
தீயைச் சுடும் தென்றல்!

Read more from R.Sumathi

Related to தீயைச் சுடும் தென்றல்!

Related ebooks

Related categories

Reviews for தீயைச் சுடும் தென்றல்!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    தீயைச் சுடும் தென்றல்! - R.Sumathi

    1

    கதிரவன் மெல்ல எழுந்தான். காலைப் பொழுதை சிவப்பு நிறம் தீட்டி, தன்னை - ஓவியனாக அறிமுகப்படுத்திக் கொண்டான். அவன் தொடுத்த, கணையில் அன்றைய மொட்டுகளெல்லாம் சோலையில் அவிழ்ந்தன. முகம் மலர்ந்து சிரித்தன.

    மன்மதனை மயக்கத் தொடங்கின. பறவைகள் பண்ணிசைத்து, விண்ணில் பறந்தன.

    கண்களைக் கசக்கி எழுந்தாள், காவேரி. தோட்டத்தில் ஆட்டம் போடும் குருவிகளின் ஓசை கேட்டது. ஓசையின்றி ஜன்னல் கதவைத் திறந்தபோது ஒளியும், ஒலியும் உள்ளே வந்து - ஒருக்களித்துப் படுத்திருந்த பூர்ணிமாவைப் புரளவைத்தன. மூடிய சிப்பி போலிருந்த இமைகள், சூரியக் கதிர்களால் சுருக்கம் காட்டின.

    சின்னஞ்சிறு முகம் சிவந்தது. குட்டி குட்டிக் கால்களும், கைகளும் தங்கத்தின் வார்ப்பாக மின்னின. கலைந்த உடையும், அலைந்த கேசமும் அவளைப் புதுக்கவிதையாகக் காட்டின.

    குழந்தையைப் பார்த்தாள். பேரமுதமாகப் பிறந்தவளல்லவா, பூரணி. ஆசையுடன் அவளருகே அமர்ந்தாள். அழகு முகம் முகர்ந்தாள். முத்தமிட்டாள்.

    பிள்ளையின் பட்டுக்கன்னத்தில் முத்தமிட்ட நிமிடத்தில் உள்ளக் கிண்ணத்தில் ததும்பினான், அன்பழகன். வீணையின் நரம்பு ஒன்றை ‘வெடுக்’கென மீட்டதைப் போல் உள்ளம் சிலிர்த்தாள்.

    ‘அன்பு... என்றைக்கு வருவீர்கள்? ஒவ்வொரு நாளும் நீங்கள் இல்லாமலே ஏமாற்றமாக விடிகிறதே...?’

    மடியில் கிடக்கும் மழலையைப் பார்க்கும் போதெல்லாம் அவனுடைய மடியில் தவழ்ந்து, மார்பில் கண்மூடி மூத்த சுகம் அனுபவித்த இன்பமான நிமிடங்கள் அவளுக்குள் புரண்டு அலைக்கழித்தன. ஒவ்வொரு விடியலும் அவனிருக்கும்போது எப்படியெல்லாம் இருந்தது? எழவிடாமல் இழுத்து அணைப்பான். வாசல் தெளிக்கும் எண்ணம் மறந்துபோக - வாரி வழங்குவான் அன்பை. கோலம் போட வேண்டும் என்று சொன்னால், அவனே அந்த வேலையை அவள் மேனி முழுவதும் செய்வான். இதழால் புள்ளி வைத்து, விரல்களால் கோலமிடுவான்.

    பூபாள வேளையைக் கோலாகலமாகக் கொண்டாடியது போதாதென்று, சிற்றுண்டி செய்ய விடாமல் வந்து அவளைப் பற்றிக் கொள்வான். சமையல் கலை மறந்து, ‘மையலை’ப் பயில வேண்டி வரும். அந்த இன்பத் தொல்லைகள் நினைவுக்கு வந்து மனத்தை இறுக்க - அருகே அவன் இல்லை என்ற எண்ணங்கள் உறைக்க - வேதனையுடன் எழுந்தாள்.

    உள்ளத்து ஏக்கங்களை உதறிக் கொண்டவள், கடிகாரத்தைப் பார்த்ததும் பதறினாள்.

    ‘மணியாகி விட்டதே!’

    அவசரமாக வெளியே வந்தபோது - அம்மா, வாசல் பக்கமிருந்து கோலமாவு கிண்ணத்துடன் திரும்பினாள். வாசலில் ‘பளிச்’சென கோலம் சிரித்தது.

    அம்மா... நீங்க ஏன் வாசல் தெளிச்சீங்க? நான் செய்ய மாட்டேனா? என்றாள்.

    சீக்கிரம் எழுந்துட்டேன். அதான் நானே செய்துட்டேன் சிவகாமி சொன்ன அதே நிமிடம் - அவள் போட்ட கோலத்தை உரசிக் கொண்டு ஒரு ‘பைக்’ வந்து நின்றது.

    வந்துட்டானுங்க, கடன்காரங்க சிவகாமி புன்னகையை மறைத்துக் கொண்டு எரிச்சல் காட்டினாள்.

    ‘பைக்’கினின்றும் இருவர் இறங்கினர். இருவர் கையிலும் புத்தகங்கள். வாலிப சுறுசுறுப்பும், குறுகுறுப்பும் பரவிய உடல்வாகு.

    அக்கா, அம்மா என்ன முணுமுணுக்கிறாங்க? எங்களோட வருகை அவங்களுக்கு பிடிக்கலைன்னு நினைக்கிறேன் கையிலிருந்த புத்தகத்தை விரல் நுனியில் வைத்து சுழற்றியவாறே சொன்னான், நெடுநெடுவென வளர்ந்து - செக்கச் செவேல் என்றிருந்த, உமர்.

    டேய்... அம்மா நம்மைப் பார்த்ததுமே அக்காக்கிட்ட ‘தம்பிங்க வந்துட்டாங்க. போய் ‘ஸ்டிராங்கா’ காப்பி போடுன்னு சொல்லி இருப்பாங்க. என்னம்மா நான் சொல்றது? கண்களைச் சிமிட்டி சிரித்தான், டேவிட்.

    ஆமாடா... காப்பிதான் போடச் சொன்னேன். எப்ப பொழுது விடியும்னு பார்த்துக்கிட்டு இருப்பீங்களா? இல்லே... எங்க வீட்டு காப்பி மூணு தெரு தாண்டி உங்க வீட்டுப் பக்கம் வாசனை அடிக்குதா? நீங்க ரெண்டு பேரும் சேர்ந்து என் புள்ளை படிப்பைக் கெடுத்துடுவீங்க போலிருக்கே?

    மச்சான் இந்தக் காலத்துல நல்லதே செய்யக்கூடாது. இந்த அசோக் பய எல்லாப் பாடத்திலேயும் ‘வீக்.’ நம்ம நண்பன் பெயிலானா நமக்குத்தானே கேவலம்னு நாங்க ரெண்டு பேரும் வீடு தேடி வந்து அவனுக்குச் சந்தேகத்தையெல்லாம் சரி பண்ணிட்டுப் போறோம். ஆனா... நமக்கு இப்படியொரு கெட்ட பெயர் உமர் சிணுங்கினான்.

    அப்படியா... அப்படின்னா நாளையிலேருந்து நீங்க ரெண்டு பேரும் இங்க வரவேண்டாம். அசோக்கை உங்க வீட்டுக்கு அனுப்பி வைக்கிறேன். அங்கேயே படியுங்க?

    ஐய்யய்யோ... அந்தத் தப்பை மட்டும் செய்துடாதீங்க. இவனால ஒரு பெரிய மதக்கலவரமே வந்துடும்.

    ஏன்டா?

    தெருவுக்குள்ள வரும்போதே எதிர்வீட்டு நூர்ஜகான் எப்படி இருக்கா? பக்கத்து வீட்டு பேகம் எப்படி இருக்காள்ன்னு விசாரிக்கிறான்.

    அம்மா குபீரென சிரித்து விட்டாள்.

    ஓ.கோ... நீங்க ரெண்டு பேரும் ஒழுங்கோ? என் தம்பிதான் மோசமா? முந்தாநாளு மூணாவது வீட்டு சுபாகிட்ட என்னமோ பேசிக்கிட்டு இருந்தியே... என்னவாம்? உமரைப் பார்த்துக் கேட்டாள், காவேரி.

    ஐய்யோ... சத்தியமா நீங்க நினைக்கிற மாதிரி எதுவும் இல்லை. பரிட்சைசெயல்லாம் நெருங்கிடுச்சே! படிச்சிக்கிட்டு இருக்கியா? ஏதாவது சந்தேகம் இருந்தா என்கிட்ட கேளுன்னு சொன்னேன். அவ்வளவுதான்.

    பாடத்துல சந்தேகம். நீ விளக்கப் போறே? ஒரு தட்டு பிரியாணியில முழு ஆட்டையே மறைக்கிறியேடா, உமர்

    காவேரி கலகலவென சிரித்தாள். அந்தச் சிரிப்பில் அம்மாவும் சேர்ந்து கொண்டாள்.

    பின்னே? ‘சைட்’ அடிச்சேன்னு சொல்றீங்களா? இந்தத் தெருவுல உள்ள பொண்ணுங்களெல்லாம் பார்க்கிற மாதிரியா இருக்கு. பரங்கிக்காய்க்கு சேலை கட்டின மாதிரியும், முருங்கைக் காய்க்கு ‘ஜீன்ஸ்’ போட்ட மாதிரியும். ஐய்யோ... அக்கா நான் சொன்னது உங்களையும், அம்மாவையும் தவிர்த்துத்தான்.

    அக்கா! இவன்கிட்ட போய் பேச்சுக் கொடுத்துக்கிட்டு. நீங்க காபி போட்டுட்டு ஒரு குரல் கொடுங்க. ஆமா... அசோகர் என்ன பண்ணுறார்?

    ம்... சாலையோரங்களில் மரம் நட்ட அசதியில் தூங்கறார். போய் திருப்பள்ளி எழுச்சி பாடுங்க என்று கூறிவிட்டு உள்ளே சென்றாள், காவேரி. இளைஞர்கள் இருவரும் மாடிக்கு ஓடினர்.

    மறுகணம் - இந்த அசோக் ‘மார்க்’ மட்டும் ஒழுங்கா எடுக்கலை? அப்புறம் இவனுங்களை என்ன செய்யறேன் பாரு சிவகாமி முணுமுணுத்தாள்.

    காவேரி காப்பி கலக்கினாள். காபியின் மணம் ‘கம்’மென்று இழுத்தது.

    மணத்திற்கும், மனத்திற்கும் நிறைய தொடர்பு உண்டு. மனம் உற்சாகமடைய முதல் காரணமாக இருப்பது மணம் தான்.

    ‘காலைத் தென்றலின் மணம், அதனுடன் கலந்து வரும் பூக்களின் நறுமணம், மழையின் மணம், மழையினால் உண்டாகும் மண்ணின் மகத்துவ மணம், காபியின் மணம், காதலியின் கைக்குட்டையின் காதல் மணம், கணவனின் வியர்வை மணம், கட்டிலில் கசங்கிய பூவின் - பூவையின் மணம், தாளிக்கும் மணம், தாலிக்கொடியின் மஞ்சள் மணம், தாவி வரும் குழந்தையின் பால் மணம்...’

    இப்படி மனத்தை உற்சாகப்படுத்தும் மணங்கள் எத்தனை? எத்தனை?

    ஒரு மணத்தை நுகரும்போது அது சம்பந்தப்பட்ட நபர், சம்பந்தப்பட்ட இடம், அந்நேரத்து உணர்வுகள் மனிதனைப் புதிதாக உயிர்ப்பித்து வைக்கின்றன.

    அப்படித்தான் காவேரியின் உணர்வுகளும் உயிர்ப்பித்தன. ‘கமகம’க்கும் காபி மணம், அமிழ்த்து வைத்த பந்து மறுபடியும் மேலெழுந்ததைப் போல அன்பழகனை ஞாபகப்படுத்தியது.

    காபி கோப்பையை ஒரு கையிலும், அவளை மறு கையிலுமாக அணைத்துக் கொண்டு அவன் கொஞ்சும் கொஞ்சல்கள்...!

    ‘சேச்சே! ஏன் இப்படி என் உணர்வுகள் தறிகெட்டுப் போகின்றன?’ தன்னைத் தானே தன்னிலைப்படுத்திக் கொள்ள முயற்சித்தாலும், மனம் என்னவோ திசைமாறி ஓடும் காளையாகவே இருந்தது.

    என்ன செய்கிறோம்... எவ்வளவு போடுகிறோம் என்பது கூடத் தெரியாமல் அவள் பாட்டுக்கு சர்க்கரையை அள்ளிக் கொட்டி, காபி கலக்கினாள்.

    அன்பழகனின் எண்ணத்திலேயே லயித்தவளாக காபியை எடுத்துக் கொண்டு, மாடிக்கு அனிச்சையாக நடந்தாள்.

    2

    பலமான சிரிப்பும், அரட்டையும் மாடியை வெடி

    Enjoying the preview?
    Page 1 of 1