Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

பூவும், நானும் வேறு...
பூவும், நானும் வேறு...
பூவும், நானும் வேறு...
Ebook103 pages37 minutes

பூவும், நானும் வேறு...

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

மகேந்திரன் கார்ப்பரேஷனில் கிளார்க்காக வேலை செய்து கொண்டிருக்கிறான்.
நல்ல மனிதன், நல்ல கணவன், நல்ல தந்தை! குழந்தைகள் மீதும், அகிலா மீதும் அளவு கடந்த அன்பை வைத்திருக்கிறான். மனைவி சந்தோஷமும், குழந்தைகள் சந்தோஷமும்தான் அவனுக்கு முக்கியம்.
அகிலா தனக்கு மனைவியாய் கிடைத்தது தன் முன்னோர்கள் செய்த புண்ணியம் என்றே கருதினான்.!
மகேந்திரனுக்குப் பெற்றோர் இல்லை. தாய்மாமனின் பராமரிப்பில்தான் வளர்ந்து, படித்து, உத்யோகத்திற்குப் போனான்.
அவர் தான் அகிலாவைப் பார்த்து கல்யாணம் செய்து வைத்தார்.
அகிலா பேரழகி! அடர்த்தியான நீண்ட கூந்தல் அவள் முக அழகை இன்னும் அதிகப்படுத்திக் காட்டியது.
மகேந்திரன் கறுப்பு! ஆனால் மனசு வெள்ளை. பார்க்க களையாக இருக்கும் சராசரி ஆண்மகன்.
மாமா தனக்கு கிடைத்தற்கரிய பொக்கிஷமாய் அகிலாவைத் தேடிப்பிடத்து ஒப்படைத்திருப்பதாகக் கருதிய மகேந்திரன் அவளை உள்ளங்கையில் வைத்துத் தாங்கினான். அவளுக்கு என்னவெல்லாம் பிடிக்கும் என்பதறிந்து அவள் கேட்கும் முன்பே வாங்கி வந்து அவள் மகிழ்வதைப் பார்த்து பூரித்துப் போகும் அன்பான கணவன்.
பதினோரு வருட தாம்பத்தியத்தில் அவன் ஒரு நாள் கூட, கடிந்தோ, முகம் சுருக்கியோ பேசியதில்லை. பெற்றோரை சிறிய வயதிலேயே இழந்து விட்ட மகேந்திரன் மனைவியை தாயாகவும் நேசித்தான்.
நிஜத்தில் சொல்லப் போனால் மகேந்திரனை விட, அவனை கணவனாய் அடைந்த அகிலாதான் அதிஷ்டசாலி எனலாம்.
அன்று அலுவலகத்தில் சம்பளத்தோடு சேர்த்து தீபாவளி போனஸும் தந்தனர்உடனே மகேந்திரன் அதை எப்படி செலவழிக்கலாம் என்று பட்ஜெட் போட ஆரம்பித்தான்...
ஒரு குறிப்பிட்ட தொகையை ரேவதியின் கல்லூரிப் படிப்பிற்கு உதவும் திட்டத்தில் பேங்கில் போட்டான். மீதிப் பணத்தில் அகிலாவுக்கும், குழந்தைகளுக்கும் தீபாவளி பண்டிகைக்கென துணிகள் எடுத்தான். அகிலாவிற்குப் பிடித்த பாதாம் அல்வாவை அரைகிலோ வாங்கிக் கொண்டு உற்சாகமாய் வீட்டிற்கு வந்தான்.
“அகில்... அகில்... மை டியர் அகில்”
“என்ன... ஐயா ரொம்ப துள்ளிக் குதிச்சிட்டு வர்றீங்க?” சிரித்தபடி வெளிப்பட்ட அகிலா தன்னை விசேஷமாய் அலங்கரித்துக் கொண்டிருந்தாள். தலை நிறைய ஜாதி மல்லிகை ப்ரூட் பாடி ஸ்ப்ரேயின் நறுமணம். மெல்லிய ஷிபான் சேலை.
“வாவ்!” என்று இடுப்பில் கைவைத்தபடி அவளை ஏற இறங்கப் பார்த்தான்.
“என்ன அப்படிப் பார்க்கறீங்க?”
“வாயடைக்க வச்சுட்டியே அகில்! ரேவதியும், ப்ரீத்தியும் - எங்கே?” அக்கம் பக்கம் பார்த்தபடி அவளை நெருங்கினான்.
அவன் எண்ணத்தைப் புரிந்து கொண்ட அகிலா குறுஞ்சிரிப்புடன் பின்னே நகர்ந்தாள்.
“வந்ததும் வராததுமா என்ன இதெல்லாம்? ரேவதி ட்யூஷனுக்குப் போயிருக்கா... ப்ரீத்தி பக்கத்து வீட்லே விளையாடிட்டிருக்கா...!”
“அப்புறமென்ன?” இன்னும் நெருங்கினான்.
“ஹலோ... சார்! நான் உங்க பொண்டாட்டி! எப்பவும் உங்க கூடவே இருக்கிற பொண்டாட்டி. இந்த விளையாட்டெல்லாம் நைட்ல வச்சுக்குங்க! உடம்பெல்லாம் கசகசன்னு இருக்கீங்க. மொதல்ல குளிச்சிட்டு வாங்க!” அவன் மார்பில் கைவைத்து விளையாட்டாய் தள்ளிவிட்டாள்.
“ஹூம்...” பெருமூச்சு விட்டபடி பாத்ரூமை நோக்கி நகர்ந்தான்

Languageதமிழ்
PublisherPocket Books
Release dateJan 13, 2024
பூவும், நானும் வேறு...

Read more from ஆர்.மணிமாலா

Related to பூவும், நானும் வேறு...

Related ebooks

Reviews for பூவும், நானும் வேறு...

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    பூவும், நானும் வேறு... - ஆர்.மணிமாலா

    1

    வோல்ட்டேஜ் குறைந்த பல்பாய் மழை மேகங்களின் நடுவே முகம் காட்டினான் கதிரவன். மகேந்திரன் குனிந்து ஜன்னல் வழியே வானத்தைப் பார்த்து யோசனையாய் நெற்றியைத் தேய்த்தான்.

    ‘மழை வருமோ?’

    யோசித்தபடி சட்டைப் பட்டன்களைப் போட்டுக் கொண்டு பேன்ட்டிற்குள் இன் பண்ணிக் கொண்டான். சுவரில் தொங்கிக் கொண்டிருந்த தினசரி காலண்டரில் நேற்றைய நாளைக் கிழித்துச் சுருட்டி ஜன்னல் வழியே வீசியெறிந்தான். முதல் தேதி பளிச்சிட்டது.

    அகிலா... இங்கிருந்தபடியே குரல் கொடுத்தான்.

    என்னங்க?

    கேரியர் ரெடி பண்ணிட்டியா? நேரமாய்டுச்சும்மா!

    இதோ... ஆச்சுங்க! என்றபடி மூன்றடுக்கு டிபன் கேரியரோடு வெளிப்பட்டாள் அகிலா.

    இடுப்புச் சேலையை தூக்கி சொருகிக் கொண்டு, கலைந்த கேசமும், களைத்த முகமுமாய், ஒப்பனை இல்லாமலே மிக அழகாய் இருந்தாள் அகிலா.

    சட்டென அவள் இடுப்பில் மெல்ல கிள்ளினான் மகேந்திரன்.

    ஐயோ... என்னங்க இது? சிணுங்கினாள்.

    மகேந்திரன் அவள் இடுப்பை இரு கைகளாலும் வளைத்துப் பிடித்தான்.

    விடுங்க... கையிலே கேரியர் இருக்கு... விழுந்துடப் போகுது!

    தெரியும்! இப்பதான் உன்னால தடுக்க முடியாதுன்னு எனக்கு நல்லாவே தெரியும். கேரியரை பத்திரமாக பிடிச்சுக்க! நான் உன்னைப் பிடிச்சுக்கறேன்! மகேந்திரன் அகிலாவின் முகம் நோக்கி குனிந்தான். அகிலாவினால் தடுக்கத்தான் முடியவில்லை. சில நொடிகள் இறந்தன.

    அகிலாவை விடுவித்தான்.

    ச்சீ... ரொம்ப மோசம்!

    முகம் சிவந்து போயிற்று.

    இந்த வார்த்தையைச் சொல்லும் போது நீ ரொம்ப! அழகாயிருக்கே அகிலா! நீ எப்பவும் இப்படியே சொல்லிக்கிட்டிருக்கணும் கண்ணடித்து விட்டுச் சிரித்தான்.

    நான் எப்பவும் இப்படியே சொல்லிக்கிட்டிருந்தா... நீங்க வேலைய ரிஸைன் பண்ணிட்டு வீட்லேயே உட்கார்ந்துக்க வேண்டியதுதான்!

    ரொம்ப நல்லதாப் போச்சு! வீட்டு வாசல்லே ஒரு பெட்டிக்கடை வச்சிட்டு... அப்பப்ப உன்னை முகம் சிவக்க வச்சிட்டுப் போவேன்!

    ஆபீஸ்க்கு டயமாய்டுச்சு... இப்படியே பேசிக்கிட்டிருக்காம... ஒழுங்கா கிளம்பற வழியப் பாருங்க!

    அதெப்படி அகிலா... எனக்கு நரைக்கவே ஆரம்பிச்சிடுச்சு... நீ மட்டும் நேத்து கல்யாணமான பொண்ணு மாதிரி அப்படியே இருக்கே? அதுவும் ரெண்டு குழந்தைகளைப் பெத்த பிறகும்?

    நிஜமாகவா... நான் அப்படியேவா இருக்கேன்?

    ஏன்... உன்னை நீ கண்ணாடியிலே பார்த்துக்கறதே இல்லையா? பெரிய பொண்ணு ரேவதிக்கு பத்து வயசு ஆயாச்சு! அவ கிடுகிடுன்னு வளர்ந்துட்டா! உன்னையும் அவளையும் சேர்த்து வச்சுப் பார்த்தா யாராவது அம்மா பொண்ணுன்னு சொல்வாங்களா? அக்கா தங்கைன்னுதான் சொல்வாங்க!

    ஆமாங்க... ரேவதி உங்களை மாதிரி வளர்த்தி! என்றாள் மெல்லிய வருத்தத்துடன்.

    நேத்துதான் கைக் குழந்தையா பார்த்த மாதிரி இருந்தது. அதுக்குள்ளேயே வளர்ந்துட்டா! காலம் ரொம்ப வேகமா ஓடுதில்லே?

    சரி... அதை விடுங்க! நான் உங்ககிட்டே எத்தனை முறை சொல்லியிருக்கேன்! உங்க தலையிலே அங்கங்கே நரைமுடி தெரியுது! டை அடியுங்கன்னு!

    ஏன் அகிலா... நான் இப்படியே உன்னோட வெளியில வர்றது உனக்கு அசிங்கமாயிருக்கா?

    சேச்சே... நான் அதுக்காக சொல்லலீங்க! முப்பத்தாறு முப்பத்தேழு வயசுதான் ஆகுது! ஆனா, நரைச்சிட்டதால... இன்னும் அதிக வயசான மாதிரி தெரியுது. அதுக்காகச் சொன்னேன்!

    அகில் குட்டி... உழைக்கிற ஆம்பளை எப்படி இருந்தா என்ன? பொண்டாட்டி அழகாயிருந்து... புருஷனை சந்தோஷப்படுத்தின போதும்!

    நான் சொல்லி எப்ப கேட்டிருக்கீங்க? நீங்க ஆசைப்படற மாதிரி தானே... நானும் ஆசைப்படுவேன்? - முகத்தை உம்மென்று வைத்துக் கொண்டாள்.

    அடடா... என் செல்லத்துக்குக் கோபமாக்கும்! இதோ பாருடா... நீ சொல்றது எனக்குப் புரியாமலில்லை! எனக்கு அதிலெல்லாம் விருப்பமில்லே! காலம் நமக்கு எந்தக் கோலத்தைக் கொடுத்தாலும் சந்தோஷமா ஏத்துக்கணும். தவிர, சிலபேருக்கு டை அடிச்சா... ஸ்கின் அலர்ஜியா ஆகிடும். எனக்கு அப்படியாகிடுச்சின்னா... அகோரமா இருக்குமே! தேவையா அதெல்லாம்? வீணா ரிஸ்க் எதுக்கு?

    நெகடிவ்வாவே ஏன் நினைக்கணும்?

    சரி; அதை விடு! ரேவதி ஸ்கூலுக்குப் போய்ட்டாளா?

    அவ போய் அரைமணி நேரமாச்சு! அப்புறம் சொல்ல மறந்துட்டேன். கேஸ் தீர்ந்திடும் போலிருக்கு. போன் பண்ணிச்சொல்லிடுங்க! - அப்பத்தான் ரெண்டு நாளைக்குள்ளே சிலிண்டர் கொண்டு வந்து தருவான்!

    ப்ரீத்தி எந்திரிச்சிட்டாளா?

    பத்து மணிக்குக் குறைஞ்சு அவ என்னைக்கு எழுந்திரிச்சிருக்கா?

    இப்படியே பழக்கப்படுத்தாதே அகிலா! இன்னும் ஏழெட்டு மாசத்துல எல்.கே.ஜி. சேர்க்கப் போறோம். ஸ்கூல்ல போய் தூங்கி வழிவா!

    ஸ்கூலுக்குப் போனா சரியாய்டுவா! ஏங்க மழை வர்றமாதிரி இருக்கே? குடை எடுத்துட்டுப் போங்க!

    சரி... அப்புறம்... இன்னைக்கு ஒண்ணாந்தேதி! சம்பள நாள்! உனக்கு என்ன வேணும்னு சொல்லு... வரும்போது வாங்கிட்டு வர்றேன்!

    எனக்கு என்ன பிடிக்கும்னு உங்களுக்குத் தெரியாதா என்ன? - அவன் சட்டைப் பட்டன்களை ஒழுங்காய் போட்டு விட்டபடி கண்கள் படபடக்கக் கேட்டாள்.

    அவள் கண்கள் அவனை என்னமோ செய்தது. கை கால்களை கட்டிப் போட்டு உள்ளே இழுத்துக்கொண்டது.

    யப்பா... பவர்ஃபுல் ஐஸ்!

    என்னங்க அப்படிப் பார்க்கறீங்க?

    ஒண்ணுமில்லை... கிளம்பட்டுமா?

    சரி... இந்தாங்க குடை! பார்த்துப் போங்க! சிரித்தபடி டிபன் கேரியரை எம்.ஐ.டி பஜாஜில் பத்திரப்படுத்தினான்.

    என்னங்க?

    அகிலா?

    ஆபீஸ்லே லோன் போட்டு புதுசா ஒரு பைக் வாங்குங்களேன்!

    ஏம்மா... இந்த வண்டி நல்லாத்தானே இருக்கு?

    எனக்கென்னமோ இந்த வண்டி பிடிக்கலைங்க... பைக்குன்னா பார்க்கவே கம்பீரமாயிருக்கும்!

    இந்த வண்டி என்ன மாதிரின்னுசொல்லு!

    சேச்சே! என்னங்க நீங்க? - பதறினாள்.

    "சும்மா விளையாட்டுக்குச் சொன்னேன்! இன்னும் கொஞ்ச நாள் போகட்டும் அகிலா! வீணா செலவு பண்ண வேண்டாம்னு

    Enjoying the preview?
    Page 1 of 1