Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

உன்னைத் தேடும் நெஞ்சம்!
உன்னைத் தேடும் நெஞ்சம்!
உன்னைத் தேடும் நெஞ்சம்!
Ebook115 pages40 minutes

உன்னைத் தேடும் நெஞ்சம்!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

கீர்த்தனா... அலுவலகம் புறப்பட தயாராகிவிட்டாள்.
 அர்ச்சனா அவசர அவசரமாய் இரண்டு இட்லிகளை விழுங்கினாள்.
 "பார்த்துடி... புரையேறிக்கப் போகுது!'' மங்களம் தண்ணீரை எடுத்து மகளிடம் கொடுத்தாள்.
 அதை வாங்கி பருகியவள். "பாலு எங்கேம்மா?" என்றாள்.
 "எதுக்கு கேக்கறே?" என்றாள் கீர்த்தனா.
 "வொய்ட் ஷு" பழசாயிடுச்சி! புதுசா ஒண்ணு வாங்கணும்!
 "அதை பாலுவை வாங்கிட்டு வரச் சொல்ல போறியா?"
 "ஆமாம்!"
 ''வேண்டாம் அர்ச்! நீயே போய் வாங்கிக்கறது பெட்டர்"
 "ஏன்?"
 "வேண்டாம்னா விடேன்! இந்த மாதிரி வேலையெல்லாம் அவனை செய்ய சொல்றது சரியில்லே! ஹாஸ்பிடல்லேர்ந்து வரும் போது நீயே கடைக்குப் போய் சரியா இருக்கான்னு பார்த்தே வாங்கிட்டு வரலாமே!''
 "டயர்டா வர நேரத்திலே... நடுவிலே இறங்கி... கடைக்குப் போய்... மறுபடி பஸ் ஏறி... ப்பா... நினைச்சாலே மலைப்பாயிருக்கு. பாலு வீட்லே சும்மாதானே இருக்கிறான்..."
 தங்கையை ஒரு கணம் உற்றுப் பார்த்தவள் பேசுவதற்கு நேரமில்லை என்பதை உணர்ந்து "சரி... என் சைஸ்தானே உனக்கும்? ஆபிஸ் முடிஞ்சு வர்றப்ப நானே வாங்கிட்டு வர்றேன்!"
 "அக்கா...

குரல் கேட்டு திரும்பினாள் கீர்த்தனா.
 பாலு நின்றிருந்தான்.
 இருபத்திரெண்டு வயது இளைஞன்! முகம் வசீகரமாயிருந்தது. ஜிம்மிற்கு சென்று உரமேற்றிய கட்டான உடல். விரிந்த மார்பு அணிந்திருந்த டி-ஷர்ட்டை மீறி தெரிந்தது. பி.எஸ்ஸியை முடித்து ஒரு வருடம் ஆகிவிட்டது. வேலை கிடைக்கவில்லை. அதற்காக எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை என்பதுதான் உண்மை! அவன் ஆர்வமெல்லாம் தமிழ்நாட்டிலேயே சிறந்த ஆணழகன் பட்டத்தை வெல்ல வேண்டும் என்பதுதான்! அதன் மூலம் ஏதாவது அரசுப் பணியில் அமர்ந்து விடலாம் என்பது அவன் கனவு! இரண்டு மூன்று முறை நடந்த சில போட்டிகளில் மூன்றாவது இடத்தை இருமுறை பெற்றபின் இன்னும் தீவிரமாக செயல்பட்டான்.
 கீர்த்தனா ஓரிருமுறை சொல்லி பார்த்தாள்.
 "இது வேண்டாமே பாலு! நானே எனக்கு தெரிந்தவர்கள் மூலம் உனக்கொரு நல்ல வேலையை எற்பாடு பண்ணித்தருகிறேன்."
 ''கவர்ன்மென்ட் ஜாப் வாங்கித்தர முடியுமாக்கா?" என்று எதிர் கேள்வி கேட்டான் கிண்டலாக.
 அத்தோடு வாயை மூடிக் கொண்டாள்.
 அவன் கேட்கும் போதெல்லாம் மறுபேச்சு பேசாமல் பணம் தருவாள்.
 இப்போதும் அதற்காகத்தான் நிற்கிறான் என்று புரிந்தது.
 "என்ன?" என்றாள்.
 ''ஆபீஸ்க்கு கிளம்பிட்டியாக்கா?"
 "உனக்கு என்ன வேணும்? அதைச் சொல்லு!" என்றாள் சிறு புன்னகையோடு.
 "நாளைக்கு கோயம்புத்தூர்ல ஒரு டோர்னமென்ட் இருக்கு.''
 "கோயம்புத்தூர் போகனுமா?'ம்…"
 "செலவுக்கு பணம் வேணும்! அவ்வளவுதானே! அதுக்கேன் நெளியறே! ஈவ்னிங் தர்றேன்!''
 "தாங்க்ஸ்க்கா!"
 "இதெல்லாம் உருப்பட்டா மாதிரிதான்!'' என்றாள் முணுமுணுப்பாக அர்ச்சனா.
 "என்ன... என்ன... முணுமுணுக்கறே?" கோபமாக கேட்டான் பாலு!
 "நீதான் ஃபஸ்ட் பிரைஸ் வாங்கப் போறேன்னு சொன்னேன்!" நக்கலாக சொன்னாள்.
 ''வாங்கிக் காட்டறேனா, இல்லையாப் பார்!''
 "முதல்ல அதை செஞ்சு காட்டுப் போ!"
 "ரொம்ப திமிர் பிடிச்சி ஆடறே? பெரிய மகாராணின்னு நினைப்பு!" என்று பேசிக் கொண்டே வெளியேறினான் பாலு!
 "ஏய்... எதுவா இருந்தாலும் என் முன்னாடி நின்னு, நிதானமா, தைரியமா பேசுடா!''
 ''உனக்கு உங்க ஹாஸ்பிடல்ல சீஃப் நர்ஸா ப்ரமோஷன் தரப்போறாங்கன்னு சொன்னேன்!''
 ''ராஸ்கல்... காதுல விழலேன்னு நினைச்சியா?''
 "பாலு... முதல்ல இடத்தை காலி பண்ணு! என்ன நீ... கொஞ்சம் கூட மரியாதை இல்லாம..." என்று அவனை அனுப்பிவிட்டு தங்கையைப் பார்த்து, "ஏய் அர்ச்சனா? உனக்கு இதெல்லாம் தேவையா? எதுக்காக அவன்கிட்டே வீண் சண்டைக்கு போகணும்?"
 "எத்தனை நாளைக்கு இப்படி தண்டசோறு சாப்பிட்டுக்கிட்டு ஊரை சுத்திக்கிட்டு, உடம்பை நிமிர்த்தி காட்டிக்கிட்டு வளைய வருவான்? நீயும் அவன் கேக்ககறப்பவெல்லாம் பணத்தை அள்ளித் தர்றே! அவன் கெடறதே உன்னாலதான்!"
 "உனக்கு அவனைப் பார்த்தாலே ஆகறதில்லே! அவன் உன் கூடப் பொறந்தவன்டி! ஆம்பளையா வளர்ந்து நிக்கறவன்கிட்டே தண்டசோறு அது இதுன்னு பேசலாமா?" மங்களம் கண்ணை கசக்கினாள்

Languageதமிழ்
PublisherPocket Books
Release dateDec 13, 2023
ISBN9798223541080
உன்னைத் தேடும் நெஞ்சம்!

Read more from R.Manimala

Related to உன்னைத் தேடும் நெஞ்சம்!

Related ebooks

Related categories

Reviews for உன்னைத் தேடும் நெஞ்சம்!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    உன்னைத் தேடும் நெஞ்சம்! - R.Manimala

    1

    சைக்கிள் மணி விடாமல் அடித்த ஒலி கேட்டு நிமிர்ந்தாள் மங்களம். அவள் நினைத்ததுப் போல் பேப்பர்காரன் எதிர் வீட்டில் பறக்கும் தட்டைப் போல் சர்ரென்று வீசிய நாளிதழ் தரையில் வழுக்கிக் கொண்டு சென்றது.

    அரைத்துக் கொண்டிருந்த மிக்ஸியின் சுவிட்சை அணைத்து விட்டு மங்களம் வாசலுக்கு வருவதற்கும் பேப்பர்காரன் வந்து நிற்பதற்கும் சரியாய் இருந்தது.

    தினந்தந்தி பேப்பரோடு, கண்மணி, ராணிமுத்து இதழ்களையும் சேர்த்து அவள் கையில் கொடுத்தான்.

    எல்லா வீட்டிலும் விசிறி எறிவது போல் மங்களம் வீட்டிலும் அப்படித்தான் எறிந்துக் கொண்டிருந்தான் முன்பெல்லாம்! ஒரு நாள் கழுவி விட்டிருந்த ஈரத் தரையில் அப்படி வீசியெறிந்து புத்தகங்கள் கிழிந்து போயின. அதைப் பார்த்ததும் அர்ச்சனாவுக்கு கோபம் பொங்கிக் கொண்டு வந்தது. அந்த புத்தகங்களை வேண்டாமென்று அவனிடமே திருப்பிக் கொடுத்து விட்டாள். அன்றிலிருந்து அவன் கையில் தான் கொடுப்பது வழக்கமாயிற்று.

    பேப்பர் வந்துடுச்சாம்மா? என்றபடி சோப்பு மணம் கமழ எதிரே வந்து நின்றாள் கீர்த்தனா.

    இப்பதான் வந்தது! என்று அவளிடம் கொடுத்தாள் மங்களம்.

    ஆவலாய் வாங்கி பிரித்துப் பார்த்துக் கொண்டிருந்த மகளை மனம் கனக்க கண்களால் அளந்தாள்.

    கீர்த்தனாவிற்கு நல்ல சுருள்முடி! தலை குளித்திருந்தாலும் விடாப் பிடியாய் ஸ்பிரிங் போல் சுருண்டிருந்த முடிகள் அவள் முகத்திற்கு ரம்மியமான அழகை கொடுத்தது. ஐந்தடி உயரத்தில், பூசினாற் போன்ற உடல் வாகோடு, மாநிறத்தில் உயிர் பெற்ற கோவில் சிலை போலிருந்தாள். என்னவொரு வித்தியாசம். இந்த சிலை இள நீல நைட்டியில் நாகரிக சிலையாய் நின்றிருந்தது. சத்தியம் பண்ணினால் கூட இவளுக்கு இருபத்தேழு வயதாகிறது என்பதை நம்ப மாட்டார்கள்.

    கணவர் விட்டுச் சென்ற கையளவு சொத்தில் பங்கு பிரித்து இவளுக்கு செய்ய வேண்டிய அத்தனை சீர் செனத்தியையும் கைநிறைய கொடுத்துதான் மகளை புகுந்த வீட்டிற்கு அனுப்பி வைத்தாள். ஆனால், அனுப்பிய வேகத்தில் சுவற்றில் எறியப்பட்ட பந்தாய் பிறந்த வீட்டிற்கே வந்து சேர்ந்து விட்டாள். அது ஒரு தனிக்கதை!

    ‘‘இந்தாம்மா... காபி!" அம்மா நீட்டிய காபி தம்ளரை வாங்கிக் கொண்டவள் ஒரு சிரிப்பை நன்றியாக உதிரவிட்டு ரசித்து குடிக்க தோதாக சோபாவில் அமர்ந்து கொண்டாள் கீர்த்தனா.

    என்னம்மா டிபன் பண்றே?

    "இட்லியும், தக்காளி சட்னியும்தான்...!’’

    "குட் காம்பினேஷன்!’’

    ‘‘மதியத்துக்கு முள்ளங்கி சாம்பார், புடலங்காய் கூட்டு, உருளைக்கிழங்கு பொடி மாஸ், தயிர் சாதம்!’’

    போதுமா? அடப்போம்மா... சிம்ப்ளா தயிர் சாதம், ஊறுகாய்னு செய்யறதை விட்டு எதுக்காக... சாப்பாடுக் கடைக்கு சமைக்கற மாதிரி இத்தனை அயிட்டமும் சமைக்கறீங்க? உன்னால ஆபிஸ்ல என்னை எல்லோரும் கிண்டல் பண்றாங்கம்மா! கீர்த்தனா செல்லமாய் அம்மாவை கோபித்துக் கொண்டடாள்.

    ‘‘என்னால் உன்னை கிண்டல் பண்றாங்களா? என்னம்மா சொல்றே?" மங்களம் குரலில் பதற்றம் இருந்தது.

    இத்தனை அயிட்டத்தையும் ஒரே பாக்ஸ்லேயா அடைக்க முடியும்? நாலடுக்கு கேரியர்ல வச்சுக் கொடுத்துடறே! சாப்பாடு போதுமாங்கன்னு கிண்டல் பண்றாங்கம்மா!

    "பொறாமையில பேசறாங்க! அதைப் போய் ஏம்மா பெரிசா நினைக்கறே? பிறக்கும் போது கையோட எதையாவது கொண்டு வந்தோமா? இல்லே போகும் போது எதையாவது கொண்டுதான் போகப் போறோமா? பாவ புண்ணியத்தைத் தவிர! வயித்துக்கு துரோகம் பண்றதும் பாவம்தான் கீர்த்தனா! கஷ்டப்பட்டு சம்பாதிக்கறோம். மனசுக்கு நிறைவா சாப்பிடறோம். இதுலே கேலிக்கும், கிண்டலுக்கும் என்ன வந்தது? பேசறவங்க பேசட்டும் அதைப் பத்தி கவலையில்லே. என் குழந்தைங்க வயிராற சாப்பிடணும். எனக்கு அது முக்கியம்!’’

    "எதற்கும். அளவை கொஞ்சம் குறைச்சிடும்மா! இந்த பத்துநாள்ல ரெண்டு கிலோ வெயிட் போட்டுட்டேன்! கிண்டல் பண்றாங்க...’’

    எந்த கழுதை கிண்டல் பண்றது? என் முன்னாடி இழுத்துட்டு வா! வாயிலேயே ரெண்டு போடறேன்! பொண்ணுங்கன்னா... இப்படித்தான் இருக்கணும்னு போய் சொல்லு!

    ஐயோ... அம்மா... ஏன் திட்டறே? நான் சும்மா விளையாட்டுக்குச் சொன்னேன்! அவசரமாய் குறுக்கிட்டாள்.

    ‘என்ன கீர்த்தி... இஷ்டத்துக்கு வெட்டறே போலிருக்கே! இடுப்புல டன்லப் விழுந்துருக்கு இந்த ரேஞ்சுல போனா. கட்டியணைக்க என்னோட ரெண்டு கைகள் போதாதே!’ என்று கிண்டலடித்த அபிஷேக் குரல் இப்போதும் காதில் ஒலிக்க... உதடுகள் புன்னகையில் விரிந்தன.

    "பாலு வந்துட்டானா கீர்த்தனா?’’

    இன்னும் ஜிம்முலேர்ந்து வரலியேம்மா... ஏன் கேக்றே?

    கேஸ் தீர்ந்து போய் ஒரு வாரமாகுது. எத்தனையோ முறை போன் பண்ணியும் இதோ, அதோன்னு இழுத்தடிக்கிறான்களேத் தவிர, கொண்டு வந்து போடற பாடாத் தெரியலே! ஏஜென்சிக்கே நேர்லேயே போய் சொன்னாத்தான் கேஸ் வரும் பாலுவை ஒரு நடைபோய்ட்டு வரச் சொல்லனும்!

    அதை நான் பார்த்துக்கறேன்ம்மா! பாவம் அவனை ரொம்ப வேலை வாங்காதே! படிச்சிட்டு, வேலை கிடைக்காத நம்ம பாலு மாதிரியான பசங்களை இப்படி வீட்டுக்காரியம் பண்ண சொன்னா... அவங்களுக்குள்ளே ஒரு தாழ்வு மனப்பான்மை வந்துடும்மா! தண்டசோறு திங்கறதாலதானே... வேலை காட்டறாங்க! வேலைக்குப் போனா. இந்த வேலையெல்லாம் செய்ய விடுவாங்களான்னு... இல்லாததையெல்லாம் கற்பனை பண்ணிப்பாங்க...

    நம்ம வீட்டு வேலைதானே? இதுலே தப்பா நினைக்கறதுக்கு என்ன இருக்கு? மங்களம் புரியாமல் கேட்டாள்.

    விடும்மா... கிச்சன்ல ஏதோ தீயற வாசனை வருதே? மூக்கை சுருக்கியபடி சொன்னாள்.

    அடடா... உருளைக்கிழங்கை போட்டுட்டு வந்தேன்...’’ என்று ஓடியவள் மறுபடி நின்று, அம்மாடி. நேரமாயிடுச்சு, அர்ச்சனாவை போய் எழுப்பி விட்டுடும்மா!" என்று கெஞ்சலாய் கூறிவிட்டு சமையலறை நோக்கி ஓடினாள் மங்களம்.

    கீர்த்தனா சிரித்தபடி அம்மாவைப் பின்தொடர்ந்து சமையலறைக்குள் நுழைந்தாள்.

    என்ன கீர்த்தனா?

    உன் பொண்ணு காபி முகத்துலதான் விழிப்பான்னு தெரியாதா? முதல்ல காபியக் குடு! என்றபடி அவளே காபியை கலந்து எடுத்துச் சென்றாள்.

    அழாதே... வலிக்காது! கண்ணை மூடிக்க... ஏன் கத்தறே? அவ்வளவு தான்! தலைக்கிருந்த தலையணை முதுகருகில் இருக்க... இரண்டு கைகளையும் தலைக்கு வைத்து தூங்கிக் கொண்டிருந்த அர்ச்சனா... பிதற்றிக் கொண்டிருந்தாள்.

    கீர்த்தனாவுற்கு சிரிப்பு கட்டுப்படுத்த முடியவில்லை. பொங்கி வந்த சிரிப்பை அடக்க... படாதபாடு

    Enjoying the preview?
    Page 1 of 1