Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Poongattre Nillu
Poongattre Nillu
Poongattre Nillu
Ebook99 pages34 minutes

Poongattre Nillu

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Family Based Fiction Written By R.Manimala
Languageதமிழ்
Release dateFeb 1, 2020
ISBN9781043466886
Poongattre Nillu

Read more from R.Manimala

Related authors

Related to Poongattre Nillu

Related ebooks

Related categories

Reviews for Poongattre Nillu

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Poongattre Nillu - R.Manimala

    1

    குக்கரில் பருப்பை வேகப் போட்டுவிட்டு, தயாராய் வைத்திருந்த காபி தம்ளரை எடுத்துக்கொண்டு பெட்ரூமை நோக்கி நடந்தாள் கார்த்திகா!

    அவளை அணு அணுவாக வர்ணித்தால் அவள் கணவன் ரகுராமன் கோபித்துக்கொள்வான் என்பதால் ஒரு வார்த்தையில் கூறிவிடலாம்.

    கார்த்திகா சந்தன நிற கோவில்சிலை. வயது இருபத்தி எட்டு என்றாலோ, பத்து வயது பெண் குழந்தைக்கு அம்மா என்றாலோ அடிக்க வருவார்கள். அப்படியொரு இளமை.

    கட்டிலில் ரகுராமன் ஒரு பக்கம், குழத்தை ஷைலஜா ஒரு பக்கமாகவும் உறங்கிக்கொண்டிருந்தனர்.

    காபியை டீப்பாய் மீது வைத்துவிட்டு கட்டில் முனையில் அமர்ந்தவள் இருவரையும் சிலகணங்கள் பார்த்து தனக்குத்தானே சிரித்து... கணவனின் தலைக்குள் கையைவிட்டுக் கலைத்து, நேரமாச்சு ரகு... எந்திரிப்பா...! என்றாள்.

    ம்... ம்... என்றபடி புரண்டு படுத்தான்.

    டேய்... கண்ணா... எந்திரிடா... அப்புறம், நேரத்துக்கு என்னை ஏன் எழுப்பலேன்னு... என்னை படுத்தாதீங்க... எந்திரிப்பா...!

    திடீரென்று எழுந்து நண்டுப் பிடி போட்டு தன்னை இழுத்து அணைத்து மூச்சுமுட்ட முத்தம் தருவான் என்று கார்த்திகா எதிர்பார்க்கவில்லை.

    ஐயோ... என்னங்க இது... விடுங்க...! திமிறிக்கொண்டு தன்னை விடுவித்துக்கொள்ள முயன்றாள்.

    ஆனால் ரகுராமன் விட்டால் தானே? அவன் பிடி மேலும் இறுகியது.

    திமிர்பிடிச்ச ராட்சசியே... தாலி கட்டிய புருசனை பேர் சொல்லி கூப்பிடறதே தப்பு. அதைவிட பெரிய தப்பு... வாடா, போடான்னு சொல்றது...! உன்னை...! ரகுராமன் மனைவியின் கன்னத்தை வலிக்காமல் கடித்தான்.

    ஸ்ஸ்... ஆ... வலிக்குதுங்க... விடுங்க பிளீஸ்!

    செய்த தப்புக்கு பரிகாரமா ஒரு முத்தம் கொடு... விட்டுடறேன்!

    நான் சொன்னதிலே தப்பேயில்லே... பிறகெப்படி முத்தம் தர்றதாம்?

    என்னது தப்பில்லையா?

    ஆமாம்... நல்லா நினைவுபடுத்தி பாருங்க... நீங்கதானே என்னிடம், கார்த்தி... கார்த்தி... நீ என்னை பேர் சொல்லி கூப்பிடுவியாம்.’டா’ போட்டு பேசுவியாம்னு... கொஞ்சினீங்களே..."

    அது... அது... கட்டில்ல இருக்கறப்ப மட்டும்தானே கூப்பிட சொன்னேன்?

    நல்லா கண்ணை திறந்து பாருங்க... இப்ப நான் எங்கே உட்கார்ந்திட்டு இருக்கேன்னு.

    ம்... ரொம்பதான் திமிர்டி உனக்கு. அது நைட்ல மட்டும்தான் சொல்லச் சொன்னேன்!

    ரூல்ஸ் போடறப்ப டே அன்ட் நைட் பத்தி எல்லாம் ஒண்ணும் சொல்லலே... என்றாள்.

    உன் வாயால டேய்னு சொல்றத கேக்கறப்ப... ஒரு கிளுகிளுப்பு ஏற்படவே செய்யுது... எங்கே இன்னொருவாட்டி சொல்லு...!

    ப்ச்... இதென்ன காலங்கார்த்தால உங்களோட ரோதனையா போச்சு! என்னமோ இப்பதான் கல்யாணமான புதுமாப்பிள்ளை போல...!

    நீயே புதுப்பொண்ணாட்டம் மின்னறப்ப... நான் புதுமாப்பிள்ளையாக மாட்டேனா? சரி... சரி... சீக்கிரம் ஒண்ணு கொடுத்துடு...

    விடுங்க... ஷைலஜா எந்திரிச்சிக்க போறா... காபி ஆறிடப் போகுது... மொதல்ல குடியுங்க...!

    நான் சூடா இருக்கேனே கார்த்தி...! என்றான் ஒரு மாதிரியாக பார்த்து... அவள் கழுத்தில் முகம் புதைத்து...

    காலையிலே என்ன டாடி சண்டை போட்டுக்கிட்டு? அப்போதுதான் கண்விழித்த ஷைலஜா கண்களை முழுதாய் திறக்காமலேயே கேட்டாள்.

    சட்டென பிரிந்தனர் இருவரும். கார்த்திகாவிற்கு சிரிப்பை அடக்க முடியவில்லை. ரகுராமன் அசடுவழிய சிரித்தான். ரிக்ஷாக்காரன் மணியடித்து சத்தமெழுப்ப... ஷைலஜா அவசர அவசரமாய் சாப்பிட்டுக்கொண்டிருந்ததை பாதியோடு விட்டுவிட்டு கைகழுவி புத்தகப் பையை தோளில் மாட்டிக்கொண்டாள்.

    என்ன ஷைலு... சரியாக்கூட சாப்பிடாம... வருத்தமாய் கேட்டாள் கார்த்திகா.

    டைமாயிடுச்சேம்மா... ரிக்ஷா வந்தாச்சு! அரக்கப் பரக்க ஓடினாள்.

    மதிய சாப்பாடையாவது மிச்சம் வைக்காம சாப்பிடணும்... என்ன?

    சரிமம்மி... வரட்டுமா? பை டாடி... டாட்டா காண்பித்துவிட்டு ரிஷாவில் ஏறி அமர்ந்தாள்.

    ஹூம்... குழந்தை சரியாக்கூட சாப்பிடாம ஓடறா!

    நீ கொஞ்சம் சீக்கிரமாகவே எழுத்து டிபன் பண்ணியிருக்கலாமே. கார்த்தி! சாப்பிட அமர்ந்த ரகுராமன் கேட்டான்.

    ஏன் கேக்கமாட்டீங்க எல்லாம் உங்கனாலதான்!

    என்னது... என்னாலயா? - அதிர்ச்சியாய் பாவனை காட்டினான்.

    ஒண்ணும் தெரியாத மாதிரி நடிக்காதீங்க. நான் சீக்கிரமாகத்தான் எழுந்தேன். ஆனா, காலையிலே என்னை ரெண்டு முறை குளிக்க வச்சதுக்கு யார் காரணம்? அதனால சமையலை முடிக்க லேட்டாயிடுச்சி... சின்னப்பிள்ளை மாதிரி அடம்பிடிக்க ஆரம்பிச்சிட்டீங்க!

    எப்பவும் உன்கூடவே இருக்கணும்போல ஆசையா இருக்கு கார்த்திகா!

    கடவுளே! செல்லமாய் தலையில் அடித்துக்கொண்டாள்.

    ஓக்கே... ஓக்கே... இதென்ன சட்னி சரியா மசியலே போலிருக்கே... நறதறன்னு இருக்கு!

    ஆமாங்க... மிக்சி ரிப்பேர்... வாங்கி நாலஞ்சு வருடமாயிடுச்சில்லையா?

    அப்படியா? முன்பே சொல்றதுக்கென்ன? அடுத்தவாரம் புதுசா ஒரு மிக்சி வாங்கிடலாம்!

    அதெல்லாம் எதுக்கு? இதை ரிப்பேர் பண்ணிட்டா சரியாகிடும்!

    பழசானா... என்ன ரிப்பேர் பண்ணாலும் மக்கர் பண்ணும். புதுசாவே வாங்கிடலாம்!

    பணம்!

    அந்தக் கவலையெல்லாம் உனக்கெதுக்குடா...? என்றபடி தட்டில் கையை கழுவினான் ரகுராமன்.

    2

    "கார்த்தி... இன்னைக்கு ஈவ்னிங் நீயும், ஷைலுவும் ரெடியாயிருங்க! நான் ஆபீஸ்லேர்ந்து வரும்போதே டிக்கெட் ரிசர்வ் பண்ணிட்டு வந்திடறேன். மூணு பேரும் சினிமா போகலாம்!" என்றான் ரகுராமன்.

    இன்னைக்கு வேண்டாங்க. இன்னொரு நாளைக்குப் போகலாம்!

    ஏன்... இன்னைக்கென்ன?

    "துணியெல்லாம் ஊறவச்சிருக்கேன். துவைக்கணும். துவைச்சி, அலசி, காயப்போட்டு எடுக்கறதுக்குள்ளே பொழுது போயிடும்.

    Enjoying the preview?
    Page 1 of 1