Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

காலமெல்லாம் நான் வருவேன்
காலமெல்லாம் நான் வருவேன்
காலமெல்லாம் நான் வருவேன்
Ebook102 pages34 minutes

காலமெல்லாம் நான் வருவேன்

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

'பைக்'கை நிறுத்திவிட்டு வீட்டுக்குள் நுழைந்தான் அருண். முன் அறையில் புத்தகம் படித்தபடி 'சோபா'வில் அமர்ந்திருந்தார் பெருமாள்.
 வியர்த்த முகத்தை கைக்குட்டையால் துடைத்தபடி பதற்றத்தை மறைத்து அவரைக் கடந்து சென்றான்.
 பெருமாளின் மூக்கை என்னவோ நிரட... நிமிர்ந்தார். தன்னைக் கடந்து செல்லும் மகனை வியப்பாய் பார்த்தார்.
 "அருண்..."
 "எ... என்னப்பா?" என்றான் திடுக்கிட்டு!
 "இங்கே வா."
 வந்தான்.
 "என்னைப் பார்த்தும் பார்க்காத மாதிரி போறே?"
 "இ... இல்லப்பா! படிச்சிட்டிருந்தீங்க. தொந்தரவு பண்ண வேணாம்னு..."
 "ஆமா... கலெக்டருக்குப் படிச்சிட்டிருக்கேன் பாரு! பொழுது போகதானே புத்தகம் படிக்கிறேன். இந்த வீட்டுல நீயும், நானும்தான் இருக்கோம். நீ வர்ற வரைக்கும் தனியாத்தானே இருக்கேன்! ரெண்டு வார்த்தைப் பேசிட்டுப் போகணும்னுகூடத் தெரியல உனக்கு?"
 "அ... அப்படியெல்லாம் இல்லப்பா!"
 "சரி... அதைவிடு. உன்மேல ஏதோ வாசனை வருதே... ரோஜாப்பூ மணம் மாதிரி!"
 திடுக்கிட்டான்"அ... அது... 'சென்ட்டுப்பா!"
 "உனக்குதான் 'சென்ட்' போட்டுக்கிற பழக்கமெல்லாம் இல்லையே?" என்றார் நெற்றிச் சுருங்க..
 "எனக்குப்பிடிக்காதுன்னு தெரிஞ்சுதான் 'ஃபிரண்ட்' ஒருத்தன் விளையாட்டா 'ஸ்பிரே' பண்ணிட்டான்ப்பா..."- சொல்லி முடிப்பதற்குள் திணறிப் போய்விட்டான்.
 "பிடிக்காதுன்னு தெரிஞ்ச பிறகும் செய்யறான்னா... அப்படிப்பட்ட நட்பு தேவையா?"
 "இல்லேப்பா... சும்மா 'ஜாலி'க்காக!"
 "சரி... சரி... போ!" என்றபடி மறுபடி புத்தகத்தில் மூழ்கினார்.
 அதற்குள் வியர்த்துக் கொட்டிவிட்டது அருணுக்கு.
 'அப்பாடா... தப்பிச்சேன்' என்றெண்ணியபடி விரைந்து நடந்தான்.
 தன் அறைக்குள் நுழைந்து கட்டிலில் விழுந்தவனுக்கு, அன்று நடந்ததெல்லாம் கனவா... நனவா என்றே புரியவில்லை!
 'நிஜம்தானா? எனக்கும், ஜீவிதாவுக்கும் பதிவுத் திருமணம் நடந்தது நிஜம்தானா? இவ்வளவு தைரியம் எங்கிருந்து வந்தது எனக்கு? இரண்டு வருடக் காதல் – திருமணத்தில் சுபமாய் முடிந்துவிட்டதா? 'சுபம்' என்றுகூடச் சொல்லிவிட முடியாது. எங்கள் காதலுக்கு ஒரு பாதுகாப்பு வளையத்தைப் போட்டுக்கொண்டோம். மற்றபடி திருமணம் நடந்தது இரண்டு வீட்டாருக்கும் தெரியாதே! தெரிந்து... பிரச்சினைகள் தீர்ந்து... அவர்கள் ஆசீர்வதித்தால் அல்லவா மங்களம் என்றுச் சொல்ல முடியும்?'
 'என் காதல் விஷயம் தெரிந்ததற்கே அப்பா அவ்வளவு எகிறினாரே! 'அவளை மறந்துவிடு' என்று திட்டவட்டமாய் கூறிவிட்டாரே! திருமணமாகிவிட்டது என தெரிந்தால் என்ன நடக்குமோ?'- நினைக்கும்போதே உடம்பு ஒரு முறை உதறி அடங்கியது.
 நிஜம்தான்! பெருமாளுக்கு மட்டும் விஷயம் தெரிந்தது... அவனை உண்டு... இல்லை என்று ஆக்கிவிடுவார்தன் தங்கை மகள் கஸ்தூரிதான் இந்த வீட்டு மருமகள் என்பது அவள் பிறந்த அன்றே அவர் எடுத்த முடிவு. அவரின் கொழுத்த சொத்து, வெளியாட்களிடம் சென்றுவிடக் கூடாது என்பதில் குறியாக இருந்தார்.
 தவிர, மகன் மீது அளவு கடந்த பாசம் வைத்திருந்தார். அவனை நல்லபடியாக வளர்த்து ஆளாக்க வேண்டும் என்பதற்காகத்தான் கண்டிப்பும், கறாருமாய் நடந்துகொள்வாறே தவிர வெறுப்பெல்லாம் காட்டமாட்டார். திருமணமாகி ஆறேழு வருடமாய் குழந்தைப் பிறக்காமல், கோவில் கோவிலாய் சுற்றி தவம் இருந்து வாய்க்கப் பெற்ற பிள்ளை.
 அவன் பிறந்த கையோடு தாய் கோமதி ஜன்னி வந்து இறந்துவிட்டாள்.
 பெருமாளின் திரண்ட சொத்துக்கு ஆசைப்பட்டு எத்தனையோ பேர் அவருக்கு இரண்டாம் தாரமாய் பெண் தர ஆசைப்பட்டனர். ஆனால், குழந்தை எந்த இன்னலுக்கும் ஆளாகிவிடக்கூடாது என்ற ஒரே காரணத்துக்காக மறுமணம் என்ற பேச்சே தன்னுடைய வாசல் தாண்டி வீட்டின் உள்ளே வர அனுமதிக்கவில்லை!
 பெருமாள் சுயமாய் கஷ்டப்பட்டு சேர்த்த சொத்து. அதனால், மகனை ஆடம்பர வாழ்க்கைக்கு பழக்கப்படுத்தாமல் வளர்த்தார். கார் வைக்கவில்லை. வீட்டின் சுவர்களைப் பணத்தால் இழைத்து பல் இளிக்க வைக்கவில்லை.
 அவனை நன்கு படிக்க வைத்தார். அவரிடம் உள்ள பணத்துக்கு தனியே சொந்தமாய் தொழிலை அவனுக்கு உருவாக்கித் தந்திருக்க முடியும். ஆனால், கஷ்டத்தை அவன் உணர வேண்டும், உழைப்பின் வலி அறிய வேண்டும், சொந்தக் காலில் நிற்க வேண்டும் என்று ஆர்வப்பட்டார்.
 அருண் இப்போது தனியார் கம்பெனியில் பணிபுரிகிறான். மகன் யாரோ ஒரு பெண்ணுடன் ஊர் சுற்றுகிறான் என்று அறிந்ததும் அதிர்ந்து போனார். அதிலும் அவள் வேறு சாதியைச் சேர்ந்தவள் என்ற தகவலும் தெரிய வர... இடிந்து போனார்.

Languageதமிழ்
PublisherPocket Books
Release dateDec 20, 2023
ISBN9798223845577
காலமெல்லாம் நான் வருவேன்

Read more from R.Manimala

Related to காலமெல்லாம் நான் வருவேன்

Related ebooks

Reviews for காலமெல்லாம் நான் வருவேன்

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    காலமெல்லாம் நான் வருவேன் - R.Manimala

    1

    வண்டிகள் வஞ்சனையின்றி டீசல் புகையைக் கக்கிக்கொண்டு விரைந்தோடின. பலதரப்பட்ட மனிதர்கள்... விதவிதமான முகங்கள்.

    ஒன்றுடன் ஒன்று சம்பந்தமில்லாமல் எப்படி முடிந்தது பிரம்மனால்? ஒவ்வொரு மனிதனையும் உருவாக்க எங்கே இருந்து கிடைத்தது. இத்தனை ‘மாடல்’களும்?

    ‘டென்ஷன்’... கூடவே கவலையும் போட்டிப் போட... விரைந்த ஆட்டோக்களில் தெரிந்த முகம் தென்படுகிறதா என்று தேடினான், அருண்.

    ம்கூம்!

    கவலை இன்னும் கூடியது.

    இடம் சென்னை பெரியமேடு பதிவுத் திருமண அலுவலகம்.

    அவனோடு பத்து இளைஞர்களும், நான்கு இளைஞிகளும் நின்றிருந்தனர்.

    வானத்தில். மேகக்கூட்டம் சோம்பிக் கிடந்தது. சில மணி நேரங்களில் உறுமலோடு மழை பெய்யும் என்பதில் சந்தேகமில்லை!

    ஜீவிதாவை இன்னும் காணோமே பிரதீப்? என்றான் அருண்.

    வந்துடுவா... கவலைப்படாதே!

    ஒருவேளை வீட்ல மாட்டிக்கிட்டாளோ?

    பயப்படாதே... அப்படியெல்லாம் ஒண்ணும் ஆகியிருக்காது. நம்ம ஊரு ‘டிராஃபிக்’ பத்தி தெரியாதா உனக்கு? அதுல மாட்டிக்கிட்டிருப்பாங்க.

    ஒரு போனாவது பண்ணிச் சொல்லலாமில்லே? நான் பண்ணினா ‘ரிங்’ போகுது... எடுக்கமாட்டேங்கிறா. என்னன்னு நினைக்கிறது?

    அட... மாப்பிள்ளை இப்படி ஒரேடியா ‘டென்ஷன்’ ஆனா என்னாகறது? ‘போன் சைலன்ட்’ல இருக்கலாம். கொஞ்சம் பொறுப்பா... வந்துடுவா-கிண்டலாய் சிரித்தான் ஸ்ரீதர்.

    என் அவஸ்தை உனக்கு உளறலாத் தெரியுதா?

    கோவிச்சுக்காதே! அதோ... உன் ஆள் வந்தாச்சு.

    வாடகைக் காரில் இருந்து ஜீவிதாவும், அவள் தோழிகள் இருவரும் இறங்குவதைப் பார்த்த பின்பே நிம்மதியாய் மூச்சுவிட்டான், அருண்.

    அவள் பட்டுச் சேலையும், நகைகளும், தலை நிறையப் பூவுமாய் மணப்பெண் கோலத்தில் இருப்பதைப் பார்த்து வியந்தான்.

    வா... ஜீவி! ஏன் இவ்வளவு லேட்? பயந்துட்டேன்! வீட்ல யாரும் சந்தேகப்படலையே?

    அவனது பதற்றத்தை ரசித்தபடி முறுவலித்தாள் அவள்.

    ஒரு பிரச்சினையும் இல்ல! எப்பவும் போல ‘காலேஜூக்கு கிளம்பற மாதிரி கிளம்பினதால யாருக்கும் சந்தேகம் வரல. சித்ராதான் அவளோட ‘ஹாஸ்டலு’க்கு கூட்டிட்டுப் போய் ‘கல்யாணம்னா இப்படியா இருப்பாங்க?’ன்னு அவளோட சேலை-நகைகளைத் தந்தா. வழியில ‘டிராஃபிக்’ வேற! ‘பொண்ணுக்காக மாப்பிள்ளைத் தவிக்கட்டும்’னு இவளுங்க ‘செல்போனை’ப் பிடுங்கி வச்சிட்டாளுங்க... பேசவிடாம!

    நல்லாதான் துடிக்க விட்டிருச்சுங்க. உங்களுக்கும் கல்யாணம் ஆகுமில்லே... அப்பப் பார்த்துக்கிறேன்.

    டேய்... ரொம்பதான் பதறுறே? அதான் உன் ஆளு வந்தாச்சுல்ல? என்றான் பிரதீப்.

    டேய்... காதலிச்சிருந்தா என் ‘டென்ஷன்’ தெரிஞ்சிருக்கும் உனக்கு. வீட்டுக்குத் தெரியாம ‘ரிஜிஸ்டர் மேரேஜ்’ பண்ணி இருந்தா சகலமும் புரிஞ்சிருக்கும். சாமியாருக்கு என்னடா தெரியும்... காதலைப் பத்தி?- கேலியாய் கேட்டான்.

    சரி... உனக்குத்தான் ‘தில்’ இருக்கே! கல்யாணத்துக்கு உங்க அப்பாவைக் கூப்பிட வேண்டியதுதானே?

    அதானே?- பிரதீப்புக்கு ஒத்தூதினான் கவுதம்.

    திருட்டுக் கல்யாணம் பண்றதுக்குக்கூட ஒரு ‘தில்’ வேணும்.

    டேய் மச்சான்... கல்யாணமாகப் போகிற தைரியத்துல சார் ரொம்ப ‘ஓவரா’ப் பேசுறாரு! சாட்சி கையெழுத்துப் போடுறதுக்கு நாங்க வேணும். அதை ஞாபகம் வச்சிக்கப்பா. வாங்கடா போலாம்.

    வெளியேற முயற்சித்த பிரதீப்பைக் கையைப்பிடித்து இழுத்தான் அருண்.

    மற்றவர்கள் இந்த விளையாட்டை சுவாரசியமாக வேடிக்கைப் பார்த்தனர்.

    ஒரேயடியா அலட்டிக்காதே... வாடா!

    ஆமாங்க... நேரமாயிடுச்சு. நல்ல நேரம் முடிஞ்சிடப் போகுது என்றாள் ஜீவிதா.

    அவள் சொன்னதுதான் தாமதம்...

    ஒரே நேரத்துல சொல்லி வைத்தது போல் ஹோய் என்று உற்சாகமாய் கத்தினார்கள்.

    கல்யாணப் பொண்ணு அவசப்படுறாங்கடோய்!

    அவள் வெட்கத்தில் முகம் சிவக்க தலை கவிழ்ந்தாள்.

    ஏய் என்னங்கடா... என் ‘டார்லிங்’கை இப்படி கிண்டல் பண்றீங்க?

    தோடா... கல்யாணமே ஆகல! அதுக்குள்ள பொண்டாட்டிதாசனா இவன் மாறிட்டான்டோய்.

    மறுபடியும் ஹோய் என்ற உற்சாகக் குரல்.

    போதும்ப்பா போதும்... வாங்க- சிரித்தபடி தலைக்கு மேல் இரு கைகளையும் உயர்த்தினான் அருண்.

    அடுத்த நிமிடம் அந்த இளம் பட்டாளம், பதிவு அலுவலகத்துக்குள் நுழைந்தது.

    அதிகாரி முன்பு... தங்கச் சங்கிலியில் கோர்த்த தாலியை ஜீவிதாவுக்கு அணிவித்தான் அருண். பிரதீப் உட்பட இன்னும் மூன்று நண்பர்கள் சாட்சிக் கையெழுத்துப் போட... அம்மி மிதிக்காமல், அருந்ததிப் பார்க்காமல், அட்சதைத் தூவாமல் எளிமையாய் திருமணம் நடந்து முடிந்தது.

    பாபு அந்தக் காட்சிகளை ‘கேமரா’வில் பதிவு செய்தான்.

    திருமணம் முடிந்த கையோடு ஆட்டோக்களில் ஏறி அண்ணாசாலையில் உள்ள நட்சத்திர ஓட்டலுக்குச் சென்றனர்.

    தடபுடலாய் விருந்து நடந்தது.

    எங்க கல்யாணத்துக்கு ஒத்துழைப்பு தந்த உங்களுக்கெல்லாம் எப்படி நன்றி சொல்றதுன்னே தெரியல... என்றாள் நெகிழ்ச்சியுடன் ஜீவிதா.

    என்ன... திடீர்னு அரசியல்வாதி மாதிரி பேச ஆரம்பிச்சிட்டே நீ? என்றான் பாபு.

    எதுக்கெடுத்தாலும் கிண்டல்தானா? உங்களோடு பெரிய தொல்லையாப் போச்சு!

    ஏம்மா சலிச்சிக்கமாட்டே? அதான் கல்யாணம் முடிஞ்சிடுச்சே! இனிமே நாங்க எதுக்கு உங்களுக்கு?

    இப்ப மட்டும் என்னாகிப் போச்சு? நேரே அருண் வீட்டுக்குப் போய்...’மிஸ்டர் கலியப்பெருமாள்! நீங்க மாமனார் ஆகிட்டீங்க. உங்களுக்குத் தெரியாம உங்கப் பிள்ளை, ஒரு பொண்ணை கல்யாணம் பண்ணி... மருமகளாக்கிட்டான்’னு சொல்லிட்டாப் போச்சு!

    டேய்... டேய்... ஏன்டா இப்படிப் படுத்தறீங்க? போங்கப்பா... கிளம்புங்க. அதான் கல்யாணம் முடிஞ்சு விருந்தும் சாப்பிட்டாச்சு இல்லே?

    "அட... விரட்டுறான் பாரு! இதோடு எங்க கடமை முடியலியே! சாந்தி

    Enjoying the preview?
    Page 1 of 1