Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

என் வசம் நான் இல்லை...
என் வசம் நான் இல்லை...
என் வசம் நான் இல்லை...
Ebook140 pages47 minutes

என் வசம் நான் இல்லை...

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

கார் வருவதைக் கண்டதும் அவசர அவசரமாய் கேட்டைத் திறந்தான் காவலாளி. திறந்த கையோடு ஒரு 'சல்யூட்' வைத்தான்.
 கார், போர்டிகோவில்... ஏற்கெனவே இருந்த மூன்று கார்களுக்குப் பக்கத்தில் போய் நின்று, மூச்சை நிறுத்தியது. ஓட்டுநர் இறங்கி, பின்பக்கக் கதவைத் திறந்துவிட...
 கம்பீரமாய் அருண் இறங்கினான்.
 ஆறடி உயரத்தில், உடைத்த கோதுமை நிறத்தில், திண்ணென்று புடைத்த புஜங்களோடு, கவர்ச்சி நிரம்பிய முகத்தில், சதைப் பிடிப்பான உதடுகளும், மேலுதடை மறைத்த மீசையும் கூடுதல் கவர்ச்சியைத் தர, மோவாயின் பள்ளம் அழகுக்கு அழகு சேர்த்தது.
 பசுமையான தாவரங்களுக்கிடையில், ஒவ்வொரு அங்குலமும் பணத்தால் இழைத்துக் கட்டப்பட்டிருந்தது, அந்த பிரமாண்ட பங்களா. உள்ளே... ஆடம்பர, அலங்காரப் பொருட்கள் சமர்த்தாய் அதனதன் இடத்தில் அமர்ந்திருக்க... அதுக்கு கொஞ்சமும் சம்பந்தமின்றி, எவ்விதப் பரபரப்புமின்றிப் படு அமைதியாய் இருந்தது, வீடு.
 "வணக்கம் ஐயா!" சமையல்காரர் முத்துவின் தோளில் படுத்துக்கிடந்த துண்டு கண்ணிமைக்கும் நேரத்தில் இடுப்புக்கு வந்தது.
 "ம்... அத்தை எங்கே இருக்காங்க?"
 "அவங்க அறையிலேதான் ஓய்வெடுத்துக்கிட்டிருக்காங்க. ஐயா!"
 "சாப்பிட்டாங்களா?"
 "பிடிக்கலே... வேண்டாம்,'னு அடம் பிடிக்கிறாங்க"நீ எடுத்துக்கிட்டு வா!" என்றவன் அத்தையின் அறை நோக்கிச் சென்றான்.
 கட்டிலில் படுத்திருந்தவளின் கண்கள் விதானத்தில் தொங்கிக் கொண்டிருந்த கொத்து விளக்கில் நிலைத்திருந்தன.
 "அத்தை"
 திரும்பியவளின் உதடுகள் புன்னகையில் விரிந்தன.
 "வாப்பா அருண்... எப்ப வந்தே?"
 "இப்பதான்... எப்படி இருக்கீங்க அத்தை? மறுபடியும் உங்களுக்கு உடம்புக்கு முடியாம இருக்குன்னு 'போன்' வந்தப்ப, நான் சூரத்துல இருந்தேன். அவசரமா எல்லா வேலையையும் முடிச்சிட்டு ஓடிவந்தேன்."
 "அதுக்காக, தொழிலைச் சரியா கவனிக்காம வந்துட்டியா, அருண்? உன் ஒருத்தனை நம்பி இரண்டாயிரம் தொழிலாளர்கள் இருக்காங்களே...! நான்தான் நல்லாயிட்டேனே? அப்புறம் என்ன?" குரல் நெகிழ்ச்சியுடன் வெளிப்பட்டது, வரலட்சுமிக்கு. ஆனாலும், களைப்பின் மிகுதி முகத்தில் தெரிந்தது.
 "தொழிலைக் கவனிக்க நிறைய உதவியாளர்கள் இருக்காங்க, அத்தை! எனக்கு உங்க நலன் முக்கியம். அதுக்காகத்தானே இங்கேயே இருக்கேன்! நேற்று உங்களுக்கு என்னாச்சு... அதைச் சொல்லுங்க?"
 "உடம்பிலே சர்க்கரையின் அளவு குறைஞ்சு போயிட்டதால... மயங்கி விழுந்துட்டேன்ப்பா... வேறு ஒண்ணும் பயப்படும்படி இல்லை!"
 "இதுவே பயப்படுற விஷயம்தானே! நீங்க சரியாகவே சாப்பிடுறதில்லை. அதனால வர்ற பிரச்சினைதான் இதெல்லாம். உடம்புல சர்க்கரை அளவு குறையக்கூடாது. இந்த மயக்கம் 'கோமா'வில் போய் முடியுறதுக்கு எவ்வளவு நேரமாகும்? இவ்வளவு கவனக்குறைவாக இருக்கிறது ரொம்ப தப்பு, அத்தை!"
 "ஐயா... கொண்டு வந்திட்டேங்க" முத்து கோதுமைக் கஞ்சி கொண்டு வந்திருந்தான்.
 "வச்சிட்டுப் போ!"
 போய் விட்டான்இதை முதல்ல குடியுங்க!"
 "பார்த்தாலே குமட்டுது. அருண். வேண்டாம்ப்பா!"
 "இப்படி பிடிவாதம் பிடிக்கிறதாலதான் உடம்புக்கு முடியாம படுத்துடுறீங்க. எனக்காகக் குடியுங்க. காரை விட்டிறங்கி நேரே உங்களைத்தான் பார்க்க வந்திருக்கேன். இன்னும் குளிக்கலே... ஒரு தம்ளர் காப்பிகூட குடிக்கலே. எதுக்காக? அதைப் புரிஞ்சுக்கிட்டு முதல்ல குடியுங்க. குடிக்க கஷ்டமாக இருந்தா... நானே..."
 "பரவாயில்லை அருண்!" என்றவள், கோப்பையைக் கையில் எடுத்துக் கொண்டாள்

Languageதமிழ்
PublisherPocket Books
Release dateDec 20, 2023
ISBN9798223346005
என் வசம் நான் இல்லை...

Read more from R.Manimala

Related to என் வசம் நான் இல்லை...

Related ebooks

Related categories

Reviews for என் வசம் நான் இல்லை...

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    என் வசம் நான் இல்லை... - R.Manimala

    1

    நேர்த்தியாய் அளவு வைத்துக் கோடு போட்டது போல் மழை நேர்கோடாய்ப் பூமியைத் துளைத்துக் கொண்டிருந்தது.

    சீக்கிரம் எழுதி முடியுங்க, என்ற பவித்திரா, எழுந்து, வாசலுக்கு வந்தாள்.

    ஆணும், பெண்ணுமாய்ப் பள்ளிக் குழந்தைகள் அவளிடம் பாடம் படித்தன.

    மழை ஆவேசமாய்ப் பெய்தது. சுழன்றடித்த காற்றில் மரங்கள் பேயாட்டம் போட்டன. தோட்டத்துச் செடிகள் குளிருக்கு நடுங்கி, ஒன்றுடன் ஒன்று சாய்ந்து ஒட்டிக் கொண்டிருந்தன.

    ‘பாவம் அப்பா... குடை கூட எடுத்துப் போகவில்லை. நனைவாரே! மாலை நான்கு மணிக்குப் போனவர் திரும்பி வர ஏன் இவ்வளவு தாமதம்?’

    அதி பயங்கர வெளிச்சத்தோடு மின்னலொன்று வானில் முகம் காட்டிவிட்டுப் போனது. அடுத்த சில கணங்களில் ‘டமடம்’வென்று இடிச் சத்தம். தெருக்களில் மழைநீர் தேங்கி நிற்கவில்லை. காணும்போது மனதில் ஒரு மகிழ்ச்சி முளைவிட்டது.

    அரசின் திட்டத்தால்... மழை நீர் சேமிப்பாகிப் பூமிக்குச் சென்று கொண்டிருக்கிறது. அடுத்த சந்ததியினருக்கு வீடு, நிலம், சொத்து, ஆஸ்தி, அந்தஸ்து என்று விட்டுச் செல்லுகிறோமோ, இல்லையோ... அவர்கள் பயன்படுத்தக் குடிநீரை விட்டுச் செல்லுகிறோம் என்ற நிம்மதி, நெஞ்சில் நிழலாடியது.

    அக்கா... பயமா இருக்குக்கா... காதைப் பொத்திக்கொண்டு அழத் தயாரானான். ஐந்து வயதுக் கார்த்திக்.

    உள்ளே வந்து பக்கத்தில் அமர்ந்து செல்லமாய் அவன் கன்னத்தைத் தட்டினாள்.

    பயப்படக்கூடாது. மழை பெய்தால் மின்னலடிப்பதும், இடி இடிப்பதும் இயல்புதானே! இன்னும் கொஞ்ச நேரத்தில் உன்னை அழைத்துச் செல்ல அம்மா வந்துடுவாங்க, சரியா?

    அக்கா, என்னை? பரிதாபமாய்க் கேட்டாள், நான்கு வயதுச் சிறுமி ரேகா.

    இந்தத் தங்கக் குட்டியைக் கூட்டிச் செல்லத் தாத்தா வருவாராம்! அவளைப் பிடித்து முத்தமிட்டாள்.

    அக்கா... அப்பா இன்னும் வரலையாக்கா? உள் அறையில் படித்துக் கொண்டிருந்த பவித்திராவின் தம்பி ரகு, வராந்தாவுக்கு வந்தான்.

    இன்னும் இல்லையேடா... நானும் அப்பாவைத்தான் எதிர்பார்த்துக்கிட்டிருக்கேன், என்றவளின் அழகிய கண்களில் மெல்லிய கலக்கம் படர்ந்திருந்தது.

    பவித்திரா, இருபத்திரண்டு வயது இளம்பெண். அழகு தேவதை. பிறர் துன்பம் கண்டு துயர்ப்படுவதோடு நின்று விடாமல், தன்னால் முடிகிற உதவிகளைத் தயங்காமல் செய்கிற மென்மையான உள்ளம் படைத்தவள். பட்டதாரி. படித்த படிப்பு வீணாகிவிடாமல் இருக்க, தன் தெருவிலுள்ள குழந்தைகளுக்கு இலவசமாகப் பாடம் எடுப்பவள்.

    கற்ற கல்வியைப் பகிர்ந்து கொடுக்கும்போது அது இரட்டிப்பாகிறது அல்லவா?

    நான் குடை எடுத்துட்டுப் போய்ப் பார்த்துட்டு வரட்டுமா?

    பதற்றப்படாதே... மழை கொஞ்சம் விட்டதும் வந்துடுவார். எங்காவது ஒதுங்கி இருப்பார். ஒரு உதவி செய், கயல்விழியையும், செபாஸ்டியனையும் அவர்கள் வீட்டில் பத்திரமாகச் சேர்ப்பித்து விடுகிறாயா?

    ஏன், அவர்கள் வீட்டிலிருந்து யாரும் வந்து அழைத்துச் செல்லமாட்டார்களா?

    கயல்விழியின் அம்மாவுக்குக் காய்ச்சல்! பாவம், மழையில் வர வேண்டுமா? செபாஸ்டியனை எப்போதுமே அவனுடைய தாத்தாதானே அழைத்துச் செல்லுவார்? வயதானவர்! மழையில் அவரைக் கஷ்டப்படுத்தணுமா?

    சரிக்கா... என்றபடி இரண்டு குடைகளை எடுத்துக்கொண்டு குழந்தைகளுடன் அகன்றான், ரகு.

    அடுத்த பதினைந்து நிமிடத்தில் அத்தனை பிள்ளைகளையும் அவரவர் வீட்டிலிருந்து வந்து அழைத்துச் சென்றுவிட்டனர்.

    அப்பா இன்னுமாக்கா வரலை? திரும்பி வந்த ரகு, பதற்றமானான்.

    வந்துடுவாருப்பா... ஏன் பயப்படுறே? பவித்திரா சொல்லி முடிக்கும் முன்,

    அம்மாடி... ஒரு சொம்புல தண்ணி கொண்டுவாம்மா! என்றபடி வாசலில் வந்து நின்றார், ராகவன்.

    வந்துட்டீங்களாப்பா! ஆவலுடன் தண்ணீர் எடுத்துச் சென்றாள்.

    முழுக்க நனைஞ்சிட்டீங்களே! என்றான், ரகு.

    செருப்பைக் கழுவி, ஓரமாய் வைத்துவிட்டு, உள்ளே வந்தார்.

    இந்தாங்கப்பா... முதல்ல தலை துவட்டிட்டு துணியை மாத்துங்க! துண்டை நீட்டினாள், பவித்திரா.

    சிரித்தபடி உள்ளே சென்றவர், ஐந்து நிமிடத்தில் லுங்கியும், வெற்று மார்பில் துண்டுமாக வந்தமர்ந்தார்.

    எங்காவது ஒதுங்கி இருக்கலாமேப்பா... முழுக்க நனைஞ்சிட்டீங்க... முதல் மழை ஆகாதே உங்களுக்கு?

    நல்ல தண்ணியிலே திருப்தியா குளிச்சி எட்டு மாசம் ஆயிடுச்சேம்மா! அதெல்லாம் கோயம்புத்தூரோடு போயிடுச்சு. இந்தச் சென்னையிலே குடிக்கிறதுக்கே நல்ல தண்ணி கிடைக்கலே. கிடைக்கிற தண்ணியிலே காக்கா குளியல்தான் போட முடியுது. திடீர் விருந்தாளியா மழையைப் பார்த்ததும் ‘குஷி’ வந்துடுச்சு

    அதுக்காக சிறுபிள்ளையைப் போல் நனைவீர்களாக்கும்!

    நானாக நனையவில்லை. பவிம்மா! போன வேலையை முடித்துக்கொண்டு பாதி, தூரம் வந்த பிறகுதான் மழையே வந்தது. ஆசை தீர நனைந்துவிட்டு ஒரு கடையோரம் ஒதுங்கினேன். பாரேன், பேசிக்கிட்டே இருக்கேன். சமைக்க வேண்டாமா? சப்பாத்தியும், கடலைக் குருமாவும் பண்ணட்டுமா? எழ முயன்றவரைத் தொட்டு அமர்த்தினாள், மகள்.

    எல்லாம் நானே முடிச்சிட்டேன். கோதுமைப் பிரியாணியும், கெட்டிச் சட்னியும் பண்ணிட்டேன்!

    உனக்கு ஏம்மா சிரமம்? நான் வந்து பண்ணமாட்டேனா?

    ஆச்சரியமா இருக்குப்பா! என்னை எந்த வேலையும் செய்யவிடாமல் நீங்களே செய்து... எதுக்குக் கஷ்டப்படணும்? இனி விடுவதாக இல்லை... நான்தான் எல்லா வேலையும் செய்வேன்!

    பார்த்துக் கொள்ளலாம்... பிள்ளைகள் எல்லோரும் போயாச்சா?

    ம்... அனுப்பியாச்சு... நீங்க போன காரியம் என்னாச்சு? என்ற மகளைப் பார்த்து, உதடு பிரிக்காமல் சிரித்தார்.

    என்னப்பா சிரிக்கிறீங்க?

    நான் உண்டு, என் வேலை உண்டுன்னு இருந்தவன் நான்! ஆனா, நீ யாருக்காவது சிறு பிரச்சினை என்றால் கூட அதை நிவர்த்தி பண்ணாம விடுறதில்லே. ‘தேவை இல்லாம எதுக்கு உனக்கு இந்த வேலையெல்லாம்’னு சொன்ன என்னையே இப்ப உன் கட்சியிலே சேர வச்சிட்டே விதிம்மா... எல்லாம் விதி!

    கிண்டல் பண்ணுறீங்களேப்பா! நம்மகிட்டே பணமில்லே. ஆனா, உதவி பண்ணுற மனசிருக்கு. வாழ வழியில்லாம தவிக்கிறவங்களுக்காக எத்தனையோ நல்ல காரியங்களை அரசாங்கம் ஏற்படுத்தித் தருது. அதை உரியவங்க பயன்படுத்திக்கிறதிலேதானே திட்டத்தின் வெற்றி அடங்கி இருக்கு? அதை எல்லோருக்கும் தெரியப்படுத்தணும். அதனாலதான் உங்களை அந்த அலுவலகத்துக்குப் போய் விவரங்களைக் கேட்டுத் தெரிஞ்சிட்டு வரச் சொன்னேன். அதுக்குப் போய்... முகம் வாடிப் போயிற்று.

    அடடா... நான் ஏனம்மா கிண்டல் பண்ணுறேன்? மகள் மிக மிக நல்லவளாய் இருப்பதைவிடப் பெற்றவர்களுக்கு வேறென்னம்மா பெரிய வரம் இருந்துவிட முடியும்? அதுவல்ல என் வருத்தம். உனக்குக் கல்யாண வயது வந்துவிட்டது. உன்னை ஒரு நல்லவன் கையில் ஒப்படைத்துவிட்டால், ‘ராமா கோவிந்தா’ என்று நிம்மதியாய் இருப்பேன் அல்லவா?

    கல்யாணமே வேண்டாம் என்றா சொன்னேன்? இப்போது வேண்டாம்ப்பா! படிப்பை முடித்து விட்டேன். ஒரு வேலைக்குப் போக வேண்டும். எனக்காகவோ, உங்களுக்காகவோ இல்லேப்பா! ரகுவுக்காக...! அவன் என்ஜினியர் ஆகணும்னு ஆசைப்படுறான். அந்தளவு செலவு பண்ண உங்களுடைய ‘பென்ஷன்’ பணம் இடம் தராது. என் தம்பியோட கனவை நான் நிறைவேத்தணும்ப்பா! சரி, விடுங்க... போன காரியம் என்னாச்சு?

    எல்லாம் வெற்றிதான்! நாளைக்கே இலவசப் பயிற்சியில் சேர நினைக்கிறவங்களை அழைச்சிட்டு வரச் சொல்லிட்டாங்க

    உண்மையாகவா? பூரித்துப் போனாள், பவித்திரா.

    ராகவன் ஓய்வு பெற்ற தபால்காரர்.

    சொந்த ஊர் கோயம்புத்தூர். ரகுவைப் பெற்றுப் போட்ட கையோடு கண்ணை மூடிவிட்டாள் மனைவி பர்வதம். தான் கஷ்டப்பட்டாலும் குழந்தைகளைக் கஷ்டம் தெரியாமல் வளர்த்தார், ராகவன்.

    அங்கேயே இருந்தால்

    Enjoying the preview?
    Page 1 of 1