Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

என் கல்யாண வைபோகம் உன்னோடுதான்...
என் கல்யாண வைபோகம் உன்னோடுதான்...
என் கல்யாண வைபோகம் உன்னோடுதான்...
Ebook151 pages57 minutes

என் கல்யாண வைபோகம் உன்னோடுதான்...

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

க்திவேல் பெரும் பணக்காரர்!

ஊரே அவர் பின்புதான்!  

ஏதாவது அடிக்கடி, பிரச்சனை என்றால்... அந்த ஊர் மக்கள் காவல் நிலையம் செல்ல மாட்டார்கள். சக்திவேல் ஐயாவிடம் தான் வருவார்கள்.

நேர்மையானவர்! நியாயவாதி! பெரும் வள்ளல்!

இந்தத் தகுதிகள் போதாதா...? ஒரு ஊரையும், ஒரு பெரும் கூட்டத்தையும் கட்டிப் போட்டு வைப்பதற்கு! 

அவருடைய மகன்தான் ராகுல்! படிப்பு சரிவர ஏறாததால் பனிரெண்டாம் வகுப்போடு படிப்பை நிறுத்தி விட்டு தந்தையோடு பண்ணைக்கு விவசாயத்தைப் பார்வையிடச் சென்றான். பின் தந்தைக்கு வயசாக அவருக்கு ஓய்வு கொடுத்துவிட்டு முழு கணக்கு வழக்கு, பண்ணை நிர்வாகம் என்று பார்த்துக் கொண்டான்!

ராகுலின் மனைவி நித்யா! பத்து வயதில் பரத் என்று மகனிருக்கிறான்! 

சக்திவேல் ஐயாவின் இரண்டாவது பிள்ளை, மதிவதனா!

அவர் மனைவி கற்பகம் ராகுலைப் பெற்ற பின் நீண்ட நாட்கள் கருவுறாமல் இருந்து... பதினைந்து வருடம் கழித்து கருவுற்றாள். சக்திவேல் ஐயா மகிழ்ந்தார். மனைவியை உள்ளங்கையில் வைத்துத் தாங்கினார். 

பிரசவ வலி எடுத்து ஆஸ்பத்திரியில் கற்பகத்தைச் சேர்த்தனர். நீண்ட நாட்கள் குழந்தைபேறு இல்லாமல் இருந்ததாலும், வயதாகி விட்டதாலும், இடுப்பு எலும்பு நெகிழ்வு கொடுக்காமல் போக... பிரசவம் சிக்கலாகி மதிவதனா பூமியில் தவழ்ந்த அடுத்த நொடி விண்ணுலகு சென்று விட்டாள், கற்பகம். 

சக்திவேல் ஐயா சுடு மணலில் விழுந்தவராகத் துடித்துப் போனார்! மனைவியின் மரணம் அவரைப் படுக்கையில் தள்ளியது!

அவரை படுக்கையிலிருந்து எழுந்து நடமாட வைத்தது அவர் மனைவியின் ஜாடையை உரித்து வைத்துக் கொண்டு பிறந்த மதிவதனாதான்! 

'தாயை விழுங்கிக் கொண்டு வெளியே வந்த எமன்... தரித்திரம் பிடித்த சனியன்' என்று இது போன்ற குழந்தைகளை வெறுப்பவர்கள், ஏராளம்!

ஆனால், மாறாய் கற்பகம் ஜாடையில் இருந்த மதிவதனா மேல் அவர் மட்டற்ற அன்பும், பாசமும் கொண்டார்! தனது மனைவியே மீண்டும் மகள் உருவில் வந்து அவரோடு வாழ்வதாய் எண்ணி அந்தக் குழந்தைக்காக எழுந்து விட்டார், சக்திவேல் ஐயா!

ராகுலுக்கும் தங்கையென்றால் உயிர்! அவள் சொல்தான் அவனுக்கு வேதம்! 

தந்தையும், தமையனும் மாறி மாறி அன்பு, பாசம், நேசம் கொண்டு வளர்த்ததால் மதிவதனா ஒரு குட்டி இளவரசி கணக்காய் வளர்ந்தாள்.

மதிவதனா பிடிவாதக்காரி! எதையும் சாதித்தே பழகியவள்! 

இன்பத்தையே அறிந்தவள் ! துன்பத்தின், துயரத்தின் நிழல் கூட அறியாதவள்! 

அவளுக்கு படிப்பைத் தவிர... எந்த வேலையும் தெரியாது! 

தெரிந்தாலும் செய்ய வேண்டிய அவசியம் என்ன? காலால் இட்ட வேலைகளைக் கைகளால் செய்ய நிறைய வேலைக்காரர்கள் இருக்கும்போது! 

நன்றாக உடுத்திக் கொள்வாள்! பட்டுப்பாவாடை, தாவணி தான் அவளுக்குப் பிடித்தமான உடை! 

கல்லூரியில் தொளதொள, டைட்டான சுடிதாரில் வரும் பெண்களை விட... பட்டுப்பாவாடை, தாவணியில் அம்சமாய் வரும் இந்த அழகு தேவதையைத்தான் நிறைய கல்லூரி மாணவர்களுக்குப் பிடிக்கும்! 

அவளின் தந்தைக்கு இருந்த செல்வாக்கு அடுத்ததாய் தங்கைமேல் உயிரையே வைத்திருந்த ராகுல்மேல் பயம் என யாரும் அவளை நெருங்க மாட்டார்கள்!

அவளும் தான் உண்டு, படிப்பு உண்டு என்று இருப்பாள்!

மதிவதனா... ஐந்தரையடி உயர அழகுப் பெட்டகம்!

முழுநிலவு போன்ற அழகான வட்டவடிவ வதனம்!

காதளவு நீண்ட இரு பெரிய நயனங்கள்! அந்த வட்ட முகத்துக்கு ஏற்ற கூரிய நாசி! 

செங்காந்தள் மலரின் நிறத்தைக் கொண்ட அழகான இரு இதழ்கள்! ஒரு ஆப்பிளை இருகூறாய் வெட்டி வைத்தாற்போன்ற சதைப் பற்றான கன்னங்கள்!

சிற்பி வடித்த சிலையாய்... வடிவான மார்புடன்... சிறுத்த இடையுடன் கூடிய உடலமைப்பு!

அலையலையாய் நீண்ட சுருண்ட கருங்கூந்தல்!

ஆனால், அவளின் நிறம் மட்டும் மாநிறம்!

எல்லா அம்சங்களும் பொருந்திய அவளுக்கு தன் நிறம் மீது ரொம்பவே கவலை! அதை ஒரு குறையாய் எண்ணி எண்ணி மருகிப்போவாள்!

சிவப்பு தோல் மேல் பெரிதும் மோகம், அவளுக்கு! 

ராகுல் தங்கையின் அறைக்குச் செல்ல... அவளோ போர்வையை இழுத்துப் போர்த்திக் கொண்டு இருக்க தங்கையை தட்டி எழுப்பினான்.

Languageதமிழ்
PublisherPocket Books
Release dateFeb 7, 2024
என் கல்யாண வைபோகம் உன்னோடுதான்...

Read more from ஆர்.மகேஸ்வரி

Related to என் கல்யாண வைபோகம் உன்னோடுதான்...

Related ebooks

Reviews for என் கல்யாண வைபோகம் உன்னோடுதான்...

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    என் கல்யாண வைபோகம் உன்னோடுதான்... - ஆர்.மகேஸ்வரி

    1

    கல்வராயன் மலையடிவாரம்!

    மிதமான பனியின் தாலாட்டில் இன்பமாய் உறங்கிக் கொண்டிருந்தது ‘பூம்பொழில்’ என்ற அழகிய சிற்றூர்!

    பூம்பொழில் கிராமத்தில் மொத்தமே நூறு வீடுகள் தான் இருக்கும்! எல்லாமே கூரையும், ஓடும் வேய்ந்த வீடுகள்! அங்கு வசிப்பவர்களின் தொழில், விவசாயம்!

    காடு, கழனி, பண்ணை என்று நிலமிருப்பவர்களிடம் நிலமில்லாதவர்கள் அங்கே விவசாய கூலிகளாய் வேலை செய்து பிழைப்பு நடத்தினர்.

    சுற்றிலும் பெரிய காம்பவுண்ட் சுவர் எழுப்பி உள்ளே கலைநயத்தோடு, பெரும் வேலைப்பாடுகளுடன் அம்சமாய், காண்பவரைக் கவரும் வண்ணம், கம்பீரத்துடன் ஊரின் மத்தியில் பெரிய பங்களா பிரம்மாண்டமாய் எழுந்து நின்றிருந்தது!

    கேட்டிலிருந்து பங்களாவிற்கு செல்ல பெரிய சிமெண்ட் பாதை! அதன் ஒருபுறம் சிவப்பு ரோஜாக்கள் மறுபுறம் மஞ்சள் ரோஜாக்கள் என்று மங்களகரமாய் ரோஜாச் செடிகளின் அணிவகுப்பு மனதை அள்ளும்!

    மல்லிகை, முல்லை, இருவாட்சி, ஜாதிமல்லிகை என தோட்டம் நந்தவனமாய் காட்சியளிக்கும்! தோட்டத்தின் கடைசியில் இயற்கையாய் சிறுகுளம் அமைத்து... அதில் நீரை நிரப்பி... தாமரை, அல்லிமலர்களை மலர விட்டிருந்தனர்.

    அதிகாலை நான்கு மணி! நித்யாவிற்கு விழிப்பு வந்து விட்டது. கணவன் ராகுல் அருகில் நல்ல நித்திரையில் இருந்தான். அவன் கால் தொட்டு வணங்கி விட்டு படுக்கையறையை விட்டு வெளியே வந்தாள். எப்பேர்ப்பட்ட பனியானாலும், மழையானாலும் நித்யா எழுந்து விடுவாள்.

    தலையோடு குளித்தாள். தலையைத் துவட்டி அவளின் நீண்ட கூந்தலின் அடியில் சிறு முடிச்சிட்டாள். மஞ்சளில் மினுமினுத்த முகத்தில் லேசாய் பவுடர் ஒற்றி... கருஞ்சாந்து பொட்டு வைத்துக் கொண்டாள்.

    போர்டிகோவில் நீரைத் தெளித்து சிறு கோலமிட்டாள். பின் பங்களாவின் கேட்டைத் திறந்து மெயின் வாசலுக்கு சாணம் தெளித்து, பெருக்கி... இழையிழையாய் அழகான ரங்கோலி கோலமிட்டாள் கலர்பொடியைத் தூவி கோலத்திற்கு மேலும் அழகு கூட்டினாள்!

    சிறு சாண உருண்டையில் பீர்க்கம் பூவை செருகி கோலத்தின் மத்தியில் வைத்தாள்.

    கோலத்தின் அழகை கண்களை விரித்து விழிகளில் வாங்கிக் கொண்டாள்!

    அவள் நாள்தோறும் ரசிப்புடன் விரும்பிச் செய்யும் வேலைகளில் ஒன்று!

    பூஜையறைக்கு வந்தாள். நேற்றே பிரிட்ஜில் தொடுத்து வைத்திருந்த மல்லிகைச் சரங்களை சாமி படங்களுக்கு வைத்தாள். காமாட்சியம்மன் விளக்கையும், குத்து விளக்கையும் ஏற்றி பூஜை செய்தாள்.

    நெற்றியிலும், வகிட்டிலும், தாலியிலும் குங்குமத்தை வைத்துக் கொண்டு வெளியே வந்தாள்.

    காபி தயாரித்து பெரிய பிளாஸ்கில் ஊற்றிக் கொண்டு மாடியேறிப் போய் தனது நாத்தனார் மதிவதனாவின் அறைக்குள் சென்றாள்.

    மதிவதனா என்ற அழகு சிலை தலை முதல் கால் வரை போர்வையை இழுத்து போர்த்திக் கொண்டு நன்கு உறங்கிக் கொண்டிருந்தது.

    வதனா... ஏய் மதிவதனா... மணி ஐந்தாச்சி! எழுடி!

    நித்யா மதிவதனாவைப் பிடித்து உலுக்கினாள்.

    அண்ணி… என்னை இன்னும் கொஞ்ச நேரம் தூங்க விடுங்க! நல்ல கனவு அண்ணி! என் கனவுல அழகான வெள்ளைக் குதிரை வந்தது! என்று மதிவதனா சிணுங்க...

    வெள்ளைக் குதிரை கனவுல வந்தால் நல்லதுதான்! நீ தூங்கினது போதும்! எழு.

    அடுத்ததா அந்த வெள்ளைக்குதிரை மேல ஒரு அழகான ராஜகுமாரன் அமர்ந்து வந்தான்! அந்த ராஜகுமாரன் எப்படி இருந்தான், தெரியுமா? மூக்கும், முழியுமா நல்ல சிவந்த நிறத்துல இருந்தான்! எவ்வளவு பெரிய தினவெடுத்த பரந்த தோள்கள்! சிறுத்த இடுப்பு! நீள நீளமாய் கைகளும், கால்களும் அப்பப்பா... எவ்வளவு அழகு தெரியுமா? அந்த ராஜகுமாரனோட உதட்டுக்கும் மேலே இருந்த கருத்தடர்ந்த மீசை எவ்வளவு அம்சம் தெரியுமா?

    நித்யாவிற்கு அவள் பேச்சு எரிச்சலைத் தந்தது.

    உன் பாழாப் போன கனவும், மண்ணும்! எழுந்து படிடி முண்டம்! அதட்டினாள்.

    அந்த ராஜகுமாரன் வெள்ளைக்குதிரையை வேகமாக விரட்டிட்டு வந்து... நடந்து போயிட்டு இருந்த என்னை அப்படி அலாக்காத் தூக்கி தன் முன்னாடி உட்கார வைத்து குதிரையை வேகமாக விரட்டிட்டுப் போய் ஒரு கோயில் வாசல்ல நிறுத்தி என் கழுத்துல தாலி கட்டிட்டார்! இந்தக் கனவுக்கு என்ன அண்ணி அர்த்தம்?

    மதிவதனா ஆர்வமாய் கேட்க... நித்யா சுள்ளென்று சொன்னாள்.

    உன் கனவுக்கான அர்த்தத்தை ஏதாவது கிழம் கட்டையைப் பார்த்துக் கேளு! அர்த்தம் சொல்லுவாங்க, நீ என்னைக் காலையிலே ரம்பம் கொண்டு அறுக்காதே, தாயே! எழுந்து படி!

    காபியை குவளையில் ஊற்றி... ஸ்டூல் மீது வைத்தாள்.

    படிப்பை அப்புறம் படிச்சிக்கலாம், அண்ணி! கண்ட கனவை மீண்டும் தொடர்ந்து காண முடியுமா? முடியாதில்ல...? அதனால் தூங்கப்போறேன்! கனவு தொடருமில்ல?

    உன் அண்ணன் கிட்ட சொல்லிடுவேன், மதிவதனா! படிக்கற வயசுல ராஜகுமாரன் கனவுல வந்தான், தாலி கட்டினான்னு உளறி திரியறான்னு! இவ படிப்பை நிறுத்தி... கல்யாணம் பண்ணி அனுப்பற வேலையைப் பாருங்கன்னு சொல்லிடுவேன்!

    சொல்லுங்க... நான் கல்யாணம் பண்ணிக்க ரெடி தான்!

    ஒரு காபி போடக்கூடத் தெரியாத நீ கல்யாணம் செய்துட்டு என்னடி செய்வே? உன்னைக் கட்டிட்ட பாவத்துக்கு உன் கணவன், குழந்தையெல்லாம் பட்டினி கிடந்து தான் சாகணும்!

    நான் எதுக்கு சமைக்கணும்?

    அப்போ அரிசி, பருப்பு காய்கறிகளையெல்லாம் பச்சையா சாப்பிடுவீங்களா?

    வீட்டோட மாப்பிள்ளையா இருக்க சம்மதிப்பவனைத் தான் கட்டிக்குவேனாக்கும்!

    மதிவதனா இப்படிச் சொல்லவும். நித்யாவின் முகம் மலர்ந்தது.

    அவன் சம்மதிக்கலேன்னால் என்னடி செய்வே?

    சம்மதிக்கறவனைத்தான் கட்டிப்பேன்! என்று கூறவும் நித்யா தனது தம்பி. இளங்கோவையும், மதிவதனாவையும் மாலையும் கழுத்துமாய் அருகருகே மணவறையில் நிறுத்தி கற்பனை செய்தவள்... அந்தக் கற்பனை தந்த தித்திப்பில் மதிவதனாவின் கன்னத்தில் அழுந்த முத்தமிட்டு விட்டு வெளியேறினாள்!

    மதிவதனாவோ மீண்டும் போர்வையை இழுத்துப் போர்த்திக் கொண்டு கண் மூடி அவள் ராஜகுமாரனை சந்திக்க கனவு லோகம் சென்று விட்டாள்!

    2

    சக்திவேல் பெரும் பணக்காரர்!

    ஊரே அவர் பின்புதான்!

    ஏதாவது அடிக்கடி, பிரச்சனை என்றால்... அந்த ஊர் மக்கள் காவல் நிலையம் செல்ல மாட்டார்கள். சக்திவேல் ஐயாவிடம் தான் வருவார்கள்.

    நேர்மையானவர்! நியாயவாதி! பெரும் வள்ளல்!

    இந்தத் தகுதிகள் போதாதா...? ஒரு ஊரையும், ஒரு பெரும் கூட்டத்தையும் கட்டிப் போட்டு வைப்பதற்கு!

    அவருடைய மகன்தான் ராகுல்! படிப்பு சரிவர ஏறாததால் பனிரெண்டாம் வகுப்போடு படிப்பை நிறுத்தி விட்டு தந்தையோடு பண்ணைக்கு விவசாயத்தைப் பார்வையிடச் சென்றான். பின் தந்தைக்கு வயசாக அவருக்கு ஓய்வு கொடுத்துவிட்டு முழு கணக்கு வழக்கு, பண்ணை நிர்வாகம் என்று பார்த்துக் கொண்டான்!

    ராகுலின் மனைவி நித்யா! பத்து வயதில் பரத் என்று மகனிருக்கிறான்!

    சக்திவேல் ஐயாவின் இரண்டாவது பிள்ளை, மதிவதனா!

    அவர் மனைவி கற்பகம் ராகுலைப் பெற்ற பின் நீண்ட நாட்கள் கருவுறாமல் இருந்து... பதினைந்து வருடம் கழித்து கருவுற்றாள். சக்திவேல் ஐயா மகிழ்ந்தார். மனைவியை உள்ளங்கையில் வைத்துத் தாங்கினார்.

    பிரசவ வலி எடுத்து ஆஸ்பத்திரியில் கற்பகத்தைச் சேர்த்தனர். நீண்ட நாட்கள் குழந்தைபேறு இல்லாமல் இருந்ததாலும், வயதாகி விட்டதாலும், இடுப்பு எலும்பு நெகிழ்வு கொடுக்காமல் போக... பிரசவம் சிக்கலாகி மதிவதனா பூமியில் தவழ்ந்த அடுத்த நொடி விண்ணுலகு சென்று விட்டாள், கற்பகம்.

    சக்திவேல் ஐயா சுடு மணலில் விழுந்தவராகத் துடித்துப் போனார்! மனைவியின் மரணம் அவரைப் படுக்கையில் தள்ளியது!

    அவரை படுக்கையிலிருந்து எழுந்து நடமாட வைத்தது அவர் மனைவியின் ஜாடையை உரித்து வைத்துக் கொண்டு பிறந்த மதிவதனாதான்!

    ‘தாயை விழுங்கிக் கொண்டு வெளியே வந்த எமன்... தரித்திரம் பிடித்த சனியன்’ என்று இது போன்ற குழந்தைகளை வெறுப்பவர்கள், ஏராளம்!

    ஆனால், மாறாய் கற்பகம் ஜாடையில் இருந்த மதிவதனா மேல் அவர் மட்டற்ற அன்பும், பாசமும் கொண்டார்! தனது மனைவியே மீண்டும் மகள் உருவில் வந்து அவரோடு வாழ்வதாய் எண்ணி அந்தக் குழந்தைக்காக எழுந்து விட்டார், சக்திவேல் ஐயா!

    ராகுலுக்கும் தங்கையென்றால் உயிர்! அவள் சொல்தான் அவனுக்கு வேதம்!

    தந்தையும், தமையனும் மாறி மாறி அன்பு, பாசம், நேசம் கொண்டு வளர்த்ததால் மதிவதனா ஒரு குட்டி இளவரசி கணக்காய் வளர்ந்தாள்.

    மதிவதனா பிடிவாதக்காரி! எதையும் சாதித்தே பழகியவள்!

    இன்பத்தையே அறிந்தவள் ! துன்பத்தின், துயரத்தின் நிழல் கூட அறியாதவள்!

    அவளுக்கு படிப்பைத் தவிர... எந்த வேலையும் தெரியாது!

    தெரிந்தாலும் செய்ய வேண்டிய அவசியம் என்ன? காலால் இட்ட வேலைகளைக் கைகளால் செய்ய நிறைய வேலைக்காரர்கள் இருக்கும்போது!

    நன்றாக உடுத்திக் கொள்வாள்! பட்டுப்பாவாடை, தாவணி

    Enjoying the preview?
    Page 1 of 1