Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

துவாரகா மயி
துவாரகா மயி
துவாரகா மயி
Ebook94 pages33 minutes

துவாரகா மயி

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

துவாரகேஷ் அவசர வர்த்தகக் கூட்டத்தை முடித்து விட்டு, தன் அறைக்கு வரும்போது பிற்பகல் மூன்றுமணி.
 உதவியாளன் உள்ளே நுழைந்தான்!
 "சார்! லஞ்ச் கொண்டு வரட்டுமா?"
 "வேண்டாம். ஜூஸ் மட்டும் குடுங்க!"
 "சார்! நீங்க காலைலகூட வெறும் டீதான் சாப்பிட்டீங்க. ஒடம்பு கெட்டுப் போகும்!"
 "வேணும்னு தோணலை தாஸ்! என்னைக் கொஞ்சம் தனியா விடுங்க ப்ளீஸ்."
 கண்மூடி சாய்ந்து உட்கார்ந்தான் துவாரகேஷ்.
 காலைச்சம்பவம் கண்களில் ஆடியது.
 'நான் செத்துட்டா, கொள்ளி போடவாவது வருவியா தம்பி?'
 தலையைச் சிலுப்பிக் கொண்டான்.
 மேஜையை ஒரு முறை கவனித்தான்.
 அவனும், மாதவியும் ஜோடியாக இருக்கும் அழகான வண்ணப்படம் ஒன்று உயிரோட்டமாக!
 அதைக் கையில் எடுத்துப் பார்த்தான்.
 முத்துப் பற்கள் பளீரிட அழகாகப் புன்னகைக்கும் மாதவி!
 'நீ மறு கல்யாணம் செஞ்சுக்கணும்! அதுவும் உடனே நடக்கணும். ஏற்பாடு செய்.'
 எழுந்து விட்டான்.
 'முடியுமா மாதவி! நீ இருந்த இடத்துக்கு இன்னொருத்தி வர முடியுமா?அது உனக்கு நான் செய்யக் கூடிய துரோகமில்லையா?'
 மறுபடியும் புகைப்படம் பார்த்தான்.
 'ஒரு வருஷ காலம் இவனைச் சமாளிக்க முடியாது! அதுவரைக்கும் நான் இருக்கமாட்டேன். இவனுக்கொரு தாயைக் குடுத்துட்டு, நீ போ!'
 அந்த அறைக்குள் நடக்கத் தொடங்கினான் துவாரகா!
 'ஒரு வருடகாலம் அதிகம்தான்.'
 'குழந்தை சாது அல்ல. முரட்டுத்தனமான பிள்ளைதான். யாருக்கும் அடங்குவதில்லை. அதிகமாக அழுதால் பிட்ஸ் வருகிறது! அது அதிகமாகி, பிள்ளை உயிருக்கே உலை வைத்துவிட்டால்?'
 'யாருக்காக இந்த வாழ்க்கை?'
 'மாதவிகூட இல்லை!'
 'இந்தப் பிள்ளையை - விக்னேஷை - என் மகனை நான் ஒருக்காலும் இழக்கக்கூடாது.'
 இன்ட்டர்காம் ஒலித்தது. எடுத்தான். பி.ஏ.தான்.
 "உள்ளே வரலாமா சார்?"
 "வாங்க!"
 அந்தப் பெண் உள்ளே நுழைந்தாள்.
 "பயண ஏற்பாடுகள் பக்கா! ராத்திரி 12.30க்கு விமானம் சார்! எல்லாத்தையும் ஒருதடவை சரி பாத்துறீங்களா சார்?"
 "ஆபீசர்ஸ் எல்லாரையும் கூப்பிட்டு அவசர மீட்டிங்குக்கு ஏற்பாடு பண்ணுங்க! இப்பவே!"
 "சரி சார்!"
 அடுத்த இருபது நிமிடங்களில் பதினொரு பேர் கான்ஃபரன்ஸ் அறையில் கூடிவிடதுவாரகேஷ் உள்ளே நுழைந்தான்!
 "வெல்! கடைசி நேரத்துல ஒரு மாற்றம். பர்சனல் பிராப்ளம் காரணமா, நான் ஆஸ்திரேலியா போக முடியாது!"
 " சார்! எல்லா ஏற்பாடுகளையும் செஞ்சு வச்சாச்சே! நிறைய நஷ்டங்கள் ஏற்படுமே!"
 "கொஞ்சம் நஷ்டப்பட்டுத்தான் தீரணும்! ரொம்ப அடிபடாம. நான் பேசி சரிக்கட்றேன். ஒரு மாசத்துல நான் போயிட்டா, பிரச்னை இருக்காது. பயணத்தை ஒரு மாச காலம் தள்ள வேண்டிய நிர்பந்தம். ஆஸ்திரேலியால உள்ள நம்ம பார்ட்னர்கிட்ட இப்பவே பேசிடுங்க. தள்ளிப் போடத் தேவையான ஏற்பாடுகளைச் செய்யுங்க. டிக்கெட்டை உடனே கேன்சல் பண்ணுங்க."
 "சரி சார்!"
 துவாரகேஷிடம் திறமையான அதிகாரிகள் இருந்ததால் எதையும் சாதிக்க முடியும்! ஒரு கோடிகாட்டுவதற்குள் பிடித்துக் கொண்டு விடுவார்கள்.
 அதிலும் குணா மகா திறமைசாலி! துவாரகேஷ் நினைப்பதற்குள் அதை நடத்திக் காட்டும் புத்திசாலி.
 குணாதான் அந்த நிறுவனத்தின் ஜெனரல் மானேஜர்.
 குணாவைத் தாண்டித்தான் எதுவுமே துவாரகேஷை வந்து அடையும். அந்த அளவிற்கு நம்பகமானவன் குணா.
 குணா திருமணம் ஆகாதவன்.
 துவாரகேஷின் மனைவி மாதவி இறந்து, குழந்தையுடன் பெற்றவர்கள் படும் பாடு குணாவுக்குத் தெரியும்!
 மாலை ஆறு மணிக்குள் பயணத்தை ரத்து செய்து - வேறு பல ஏற்பாடுகளையும் செய்து விட்டு குணா, துவாரகேஷின் அறைக்குள் வந்தான்.

Languageதமிழ்
PublisherPocket Books
Release dateDec 14, 2023
ISBN9798223791478
துவாரகா மயி

Read more from Devibala

Related to துவாரகா மயி

Related ebooks

Reviews for துவாரகா மயி

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    துவாரகா மயி - Devibala

    1

    துவாரகேஷ் கார் சாவியை எடுத்துக் கொண்டு புறப்பட்டான்! வாசலை நெருங்கும்போது காலை நடைப் பயணத்தை முடித்துக் கொண்டு அப்பா உள்ளே வந்தார்.

    சீக்கிரமே புறப்பட்டாச்சா தம்பி?

    வேலை நிறைய இருக்குப்பா! இன்னிக்கு ராத்திரி விமானத்துல ஆஸ்திரேலியா போகணும். அதுக்கான ஏற்பாடுகள் பாக்கியிருக்கே!

    நீ வெளிநாடு போனா திரும்பிவர எத்தனை நாளாகும்?

    ஒரு வருஷமாகும்பா! பெரிய கான்ட்ராக்ட் இது! நல்லபடியா முடிச்சிட்டா, பல கோடிகளுக்கு லாபம் வரும்!

    குழந்தை அழும் ஓசை கேட்டது.

    மூன்று வயது சிறுவன் விக்னேஷைத் தூக்கிக் கொண்டு அம்மா மூச்சிறைக்க வந்து நின்றாள்!

    இவனைப் பிடிங்க! சமாளிக்க முடியலை!

    ஏன் தங்கம்?

    கேள்வியா கேக்கறீங்க? அம்பத்தி அஞ்சு வயசு, புள்ளை வளர்க்கற வயசா? முடியலீங்க!

    துவாரகேஷ் திரும்பினான்!

    இவனைப் பாத்துக்க ஆள் போட்டிருந்தேனே? என்னாச்சு?

    இதுவரைக்கும் நாலு பேர் மாறியாச்சு! யாராலயும் சமாளிக்க முடியலை! இவன் அடம் புடிச்சு அழுது அழுது பிட்ஸ் வருது. இல்லைனா, இவனோட முரட்டுத்தனம் தாங்காம வந்தவங்க தலைதெறிக்க ஓடுறாங்க!

    நீ தாராளமா பணம் தரணும்!

    பணத்தைக் காட்டி இப்பல்லாம் யாரையும் மயக்க முடியலை துவாரகா!

    இதப்பாரு தங்கம்! நீ சமாளிச்சுத்தான் ஆகணும். இன்னிக்கு தம்பி ஆபீஸுக்கு போனா, வர ஒரு வருஷத்துக்கு மேல ஆகும்!

    அதுவரைக்கும் நான் உயிரோட இருக்கமாட்டேன்!

    என்னம்மா பேசற?

    முடியலைடா! கோடிக் கணக்கான பணம் இருக்கு. வசதிகளோட அக்கடானு சாஞ்சு படுக்க எனக்கு மட்டும் குடுத்து வைக்கலை. இவனை நான்தான் பாத்துக்க வேண்டியிருக்கு. பேரப்புள்ளை! விடவும் முடியலை!

    நான் பிஸினஸை கவனிக்கலைனா எப்படீம்மா? படிச்ச படிப்பும், தொழில் அறிவும் முடங்கிப் போகலாமா?

    சரிப்பா! எங்களால மறுக்க முடியாது! உங்கம்மா படுத்துட்டா எப்படி இந்தப் புள்ளையை வளர்க்கறது?

    அப்படியெல்லாம் நடக்காதுப்பா...

    அம்மா கடுப்பாகி விட்டாள்.

    இல்லை துவாரகா.. என்னால முடியலை. ஒருவருஷம் நீயில்லாம, சமாளிக்க முடியாது! நீ ஆஸ்திரேலியா போக வேண்டாம்!

    நான் இருந்தாலும் வீட்லயா இருப்பேன்? காலைல போனா, ராத்திரிதானே வருவேன்.

    சரி! வருவேனு ஒரு தைரியம் இருக்குல்ல? ஏதாவது பிரச்னைனா, ஃபோன் பண்ணினா, நடுவுல வருவே! நீ யார்கிட்டேயும் கைகட்டி வேலை பார்க்கலியேப்பா. நீ ஆயிரம் பேருக்கு சம்பளம் குடுக்கற முதலாளி!

    சரிம்மா! இந்த அந்தஸ்து நிலைக்கணும்னா, வெளிநாட்டுல கூட்டுறவு உண்டாக்கி, வர்த்தகத்தை நான் பெருக்கணும்மா! போய்த்தானே ஆகணும்?

    தாராளமா போ! இது தாயில்லாக் குழந்தை! இதுக்கொரு தாயை ஏற்பாடு பண்ணிட்டுப் போ!

    உன்னை விட ஒரு நல்ல தாய் வேற யாரும்மா?

    இல்லை துவாரகா! நான் நேரா விஷயத்துக்கு வர்றேன்! நீ மறுகல்யாணம் செஞ்சுகணும். அதுவும் உடனே நடக்கணும்! ஏற்பாடு செய்!

    விளையாடறீயா நீ?

    இல்லைப்பா! உன்னைப் பெத்த நான், இன்னும் கொஞ்சக்காலம் உயிரோட இருக்கணும்னு நீ கருதினா, விரும்பினா, கல்யாணம் செஞ்சுகோ! அம்மா சாகட்டும்னு நினைச்சா, விட்ரு! ஒரு வருஷத்துக்கு நீ போயிட்டா நடுவுல நான் போயிடுவேன்! எனக்குக் கொள்ளி போடவாவது வருவியா துவாரகா?

    வாய் விட்டு அம்மா தங்கம் அழத் தொடங்க,

    அப்பா துரைசாமி கலக்கத்துடன் மனைவியைப் பார்க்க, பாட்டி அழுவதைப் பார்த்து குழந்தை விக்னேஷ் இன்னும் பெரிதாக அழ,

    துவாரகேஷ் நிலைகுலைந்து நின்றான்.

    மனைவி இறந்த பிறகு, விக்னேஷ் தாயில்லாப் பிள்ளையான பிறகு - தினசரி இந்தப் பிரச்னைதான்!

    இன்று தீவிரமாகி விட்டது!

    விக்னேஷ் பிறந்து ஒண்ணரை வருடம் வரை மாதவி நன்றாகத்தான் இருந்தாள்!

    கோவிலுக்கு ஒரு நாள் போய்விட்டு வரும்போது ஒரு பைக் மோதி தூக்கியடிக்கப்பட்டு, பிளாட்பார ஓரத்தில் தலைமோதி ஆஸ்பத்திரிக்கு போய், உயிரை விட்டாள்.

    அன்று முதல் குடும்பம் ரணகளமாகி விட்டது.

    அம்மாதான் பேரனை வளர்க்கிறாள்.

    முடியாத நிலைக்கு அம்மா வந்தாகி விட்டது.

    ஃபோன் அடிக்க, துவாரகா எடுத்தான்.

    வந்துட்டேன். பதினைஞ்சு நிமிஷத்துல அங்கே இருப்பேன்!

    அப்பா துரைசாமி அருகில் வந்தார்.

    நீ புறப்படு தம்பி! முடிஞ்சா, உன் பயணத்தைத் தள்ளிப் போடு... முடியலைப்பா!

    துவாரகேஷ் அவசரமாக காரில் ஏறி வேகமாக அதை இயக்கினான்.

    குழந்தை அழுகையை நிறுத்திவிட்டு விளையாடத் தொடங்க,

    இதப்பாரு தங்கம்! நீ அழுது ரகளை பண்ணி என்ன லாபம்?

    அவன் வெளிநாட்டுக்குப் போகக் கூடாது!

    நிறுத்துவான்னு நினைக்கறியா? எனக்குத் தோணலை! அவன் இங்கேயிருந்தாலும், நம்ம பிரச்னைகள் தீரப் போறதில்லை!

    இல்லீங்க. ஒருத்தி இந்த வீட்டுக்கு வந்தேயாகணும்! நானும் பிடிவாதம் புடிச்சாத்தான் இது நடக்கும்

    நம்ம மேல துவாரகேஷûக்கு வெறுப்பு வந்துராம இருக்கணும் தங்கம். ஒரே பிள்ளை. பணம் இருந்தாலும், அவனோட ஆதரவு இல்லைனா எங்கே போவோம்?

    நீங்க பேசாம இருங்க! இதை நான் பாத்துக்கறேன்!

    Enjoying the preview?
    Page 1 of 1