Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

காதலே என் சுவாசமாய்…
காதலே என் சுவாசமாய்…
காதலே என் சுவாசமாய்…
Ebook178 pages1 hour

காதலே என் சுவாசமாய்…

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

றுநாள்...


பகலெல்லாம் சூரியனின் கதிர் வீச்சுத் தாங்காமல்... களைத்துச் சோர்ந்திருந்த பூமிக் குழந்தை... இரவு துடிப்பாய்... துள்ளலாய்... பனியில் நனைந்த புத்தம் புது ரோஜா போலக் காட்சியளித்தது. 


இன்று கௌசல்யா எட்டு மணியாகியும் வரவில்லை. தவிப்பில் அர்ச்சனாவின் நிமிடங்களைக் கரைத்து விட்டு... ஒரு எட்டரை மணி வாக்கில்... ஒரு இளைஞனுடன் டூவீலரில் வந்து இறங்கினாள். 


அந்த இளைஞன் அழகாய் இருந்தான். வண்டியைச் சர்ரென்று திருப்பிக் கையாட்டி விடை பெற்றது... அர்ச்சனாவின் இதயத்துள் பழையவற்றைக் கிளறிக் காயப்படுத்தியது. 


“கௌசல்யா... யாருடி அவன்?” பயத்துடன் கேட்டாள். 


“என் பிரண்ட்மா!” அலட்சியமாய்ப் பதில் வந்தது.


“பத்திரிகைக்காரங்க கண்ணில் பட்டால்... படமெடுத்துப் போட்டு... இல்லாதது பொல்லாததை எழுதிவைத்தால்... உன் அப்பாவுக்குத்தானே அசிங்கம்!” 


“அவன் வெறும் ப்ரண்ட்தான்! சும்மா கத்தாதேம்மா...! கடற்கரை போய்க் கொஞ்ச நேரம் பேசிட்டு வந்தோம்! அதைத் தப்பா எடுத்துட்டு... ஏன் பத்ரகாளியா ஆடறே?” 


“ஏய், இந்த கெட்டபழக்கத்தை விட்டுடு! எங்களைக் கொல்லாதேடி! அப்பாட்ட நீ லேட்டாய் வந்ததைச் சொல்ல மாட்டேன்! நாளையில இருந்து காலேஜ் விட்டதும்... நேரே வீட்டுக்கு வர வேலையைப் பார்! புரியுதா?” சீறிவிட்டுச் சென்றாள், அர்ச்சனா. 


அதற்கு அடுத்தநாள்... அன்புவும் வந்துவிட, கௌசல்யா வந்த பாடில்லை.


“கௌசல்யா இன்னுமா வரலை? ஏதாவது ப்ரண்டுங்க வீட்டுல பங்ஷன்னு போயிருப்பாளா?” பயந்து பதற்றத்துடன் கேட்டான். 


'இன்று அன்புவே கண்டு கொள்வான். கண்டதும் மகளை நினைத்து வருந்துவான். கடவுளே! அன்பு வருந்தாமல் காப்பாற்று! கௌசல்யா அந்தப் பையனோடு வந்து இறங்கக் கூடாது! கடவுளே... கடவுளே...!' மனதிற்குள் வேண்டிக் கொண்டிருக்க... 


அதே இளைஞனோடு ஜோடியா... டூவீலரில் கட்டிப் பிடித்துக் கொண்டு வந்து... இறங்கி... அன்பு அங்கே இருப்பதைக் கண்டு... அந்த இளைஞனுக்குக் காற்றிலே முத்தத்தைப் பறக்க விட்டு... அவன் திரும்பிப் போகும்வரை கையாட்டி... விடைகொடுத்து மெதுவாய் வந்தாள். 


எளிதில் கோபமடையாத அன்பு... அவள் அலட்சியம் கண்டு சட்டென்று கோபமானான். 


“என்ன கௌசல்யா...? ஏன் லேட்? கல்லூரி விட்டதும் நேரே வீடு வராமல்... சரி... யார் அந்தப் பையன்? உன்னோட படிக்கிறானா?” 


“இல்லே! காலேஜ்ல சீனியர்! மருத்துவம் நான்காவது வருடம் படிக்கிறான்!” 


“அவனோட எங்கே போன?”


“ம்... கடற்கரையில் கால் புதையப் புதைய... ஓடிப் பிடிச்சி காதல் விளையாட்டு விளையாடிட்டு வரேன்!” நக்கலாய்ப் பதில் வந்தது. 


“ஏய்...” என்று அர்ச்சனா கை ஓங்கி அருகில் போக...


“அர்ச்சனா...! நான் கேக்கறேன் இல்ல. நீ ஏன் அவசரப்படுகிறாய்? வாம்மா... வந்து உட்கார்!” என்று கௌசல்யாவை அமர வைத்து... அருகில் அமர்ந்தான். 


அலையலையாய்ப் பொங்கி எழுந்த கோபத்தை... எழுந்த வேகத்திலேயே தன்னுள் போட்டுப் புதைத்துக் கொண்டான். 


“அப்பாகிட்ட எந்தப் பயமோ... அச்சமோ வேண்டாம்! அலட்சியமும் வேண்டாம்! புரியுதா...? அந்தப் பையன் யார்?” மெதுவாய்க் கேட்டான். 


கௌசல்யா மௌனம் காத்தாள்.


“அவன் உன் நண்பனா? நண்பன்னால் அவனோட இவ்வளவு நேரம் பேசிட்டு வந்தது தப்பில்லே!”


“என்னங்க நீங்க?” - அர்ச்சனா இடைப்புக...


“கொஞ்சம் பொறு அர்ச்சனா! சின்னப்பிள்ளை! ஏன் இப்படிக் கோபப்படறே? சரி, கௌசல்யா... வெறும் ப்ரண்ட் மட்டும் தானா? உண்மையை மறைக்காமல் சொல். நான் உன்னை எதுவும் செய்ய மாட்டேன்! தப்பிருந்தா திருத்தி... உனக்குப் புரிய வைப்பேன்!”


“ப்ரண்ட் மட்டுமில்லே... என் காதலனும் கூட! நாங்க ஒருத்தரை ஒருத்தர் டீப்பா லவ் பண்றோம்!” கௌசல்யா மௌனம் கலைய... அர்ச்சனா அழுதாள். 


“என் தலையில் நெருப்பை அள்ளிக் கொட்றாளே! ஐயோ...!” 


“அர்ச்சனா! இப்போ என்ன நடந்துடிச்சின்னு அழறே? காதல் ஒண்ணும் தப்பில்லே! ஆனால் விபரம் தெரியாத வயதில் வரது காதலில்லே! இனக்கவர்ச்சி! மெடிக்கல் படிக்கிறே! ரொம்ப கஷ்டமான கோர்ஸ்! நீ படிப்பை மட்டும் பார்!” அன்பு அழுத்தமாய்ச் சொல்ல... 


“நான் அவனைக் காதலிப்பேன்! கல்யாணமும் பண்ணிப்பேன்!” 


“வேண்டாம் கௌசல்யா...!” அவள் முன் கண்ணீரோடு வந்த அர்ச்சனாவை அலட்சியமாய்ப் பார்த்தாள். 


“வேண்டாம்ன்னு சொல்ல... உனக்கு அருகதை இல்லேம்மா! உன் கல்யாணம் எப்படிப் பட்டதுன்னு கேட்டப்ப எல்லாம் லவ் மேரேஜ்ன்னு சொன்னீயே! என் அப்பா இறந்ததும்... இவரைக் கட்டிட்டு வாழறீயா? இது மட்டும் நல

Languageதமிழ்
PublisherPocket Books
Release dateFeb 7, 2024
காதலே என் சுவாசமாய்…

Read more from ஆர்.மகேஸ்வரி

Related to காதலே என் சுவாசமாய்…

Related ebooks

Reviews for காதலே என் சுவாசமாய்…

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    காதலே என் சுவாசமாய்… - ஆர்.மகேஸ்வரி

    1

    அழகிய இளம் இரவுப் பொழுதில்... நிலவு தேவதை... அவசர அவசரமாய்க் குளித்து, குழல் உலர்த்தி... பரபரப்பாய் வேலைக்குச் செல்லும் பெண்ணாய்... வானத்தை வலம் வரத் தொடங்கினாள். அப்போது நட்சத்திரங்கள் கண்சிமிட்டி... காலேஜ் இளைஞனாய்க் கலாட்டா செய்ய... நிலவுப் பெண் வெட்கத்துடன் மேகங்களில் மறைந்து மறைந்து ஓடினாள்.

    பகலெல்லாம் சூரியனின் உக்கிரத்தால் வாடியிருந்த செடி, கொடி, மரங்களெல்லாம்... சுகந்தமான தென்றலின் தழுவலில் மயங்கி, சிலிர்த்து, சிங்காரமாய்த் தலையாட்டின.

    பள்ளி முடிந்து... படிப்பு, பாட்டு, பரதம், ஹிந்தி, கம்ப்யூட்டர் பயிற்சியென்று காலில் சக்கரம் கட்டாத குறையாய்... பறந்து பறந்து, அலைந்து, திரிந்த குழந்தைகள்... வீட்டுக்குள் புகுந்து... தாயின் மடியில் தஞ்சம் புகுந்து... தன் களைப்புகளை எல்லாம் விரட்டிக் கொண்டிருந்தனர்.

    அர்ச்சனா கடிகாரத்தில் மணி பார்த்தாள். இரவு 8.00 மணி.

    அவள் மனம் கலங்கிய குட்டையாய் இருந்தது. வீட்டிற்கும், வெளியுமாய்த் தவிப்புடன் நடந்து கொண்டிருந்தாள்.

    அர்ச்சனாவைக் காக்க வைத்த... கலங்க வைத்த... கவலை ரேகைகளை முகமெல்லாம் படிய வைத்த... இளம்புயல் கௌசல்யா... வீதியில் வேகமாய் நடந்து வந்து... வீட்டிற்குள் புகுந்தாள்.

    அர்ச்சனாவிற்கு நிம்மதிப் பெருமூச்சு வந்தாலும்... செந்தணலாய்த் தகித்த கண்களால் கோபத்தை வெளிப்படுத்தி... கௌசல்யாவை வாசலிலேயே பிடித்துக் கொண்டாள்.

    ஏய் கௌஷி... ஏன் இவ்வளவு லேட்? இவ்வளவு நேரமா கல்லூரி விடலை? உனக்குக் கொஞ்சமாச்சும் அறிவிருக்கா...? பயந்துட்டேன்! இத்தனை நேரமும் என் நெஞ்சில் நெருஞ்சியை வைத்துத் தேய்த்துவிட்டாயே! கழுதை... உன் அப்பா வர நேரம்! வந்ததும் உன்னைக் காணலேன்னு தவிச்சிடுவார். அப்புறமா... என்னிடம் சண்டைக்கு வந்துடுவார். குடும்பத்துல குழப்பம் பண்ணவே இருக்கேடி! வேகமாய்ச் சத்தம் போட்டாள்.

    நான் என்ன சின்னக் குழந்தையாம்மா...? வழி தெரியாமல் காணாமல் போக! வீணா ஏன் கவலைப்படறீங்க? கௌசல்யா அர்ச்சனாவிற்குப் பதிலடி கொடுத்தாள்.

    சின்னக் குழந்தைன்னா கூட கவலைப்படமாட்டேன்! நீயோ வயசுப்பெண்! அழகாய் மலர்ந்து மணம் வீசுகிறாய்! சிட்டியில் கொலை, கொள்ளை, கற்பழிப்புன்னு ஏகப்பட்டது மலிஞ்சி நடக்குது! முன்னே போல பெண் பிள்ளைங்க ரோட்ல நடந்துபோக முடியல! பசங்களோட கிண்டலும், கேலியும் கேட்க சகிக்கல! வீட்டுல காரும், டிரைவரும் இருக்க... உனக்கென்ன தலையெழுத்தாடி... பஸ்ல போய் அல்லாடறே! எது சொன்னாலும் கேட்காமல் இது என்ன அடம்? ம்? கார்ல போகாமல் ஏன்டி இப்படி இம்சிக்கிறே?

    போம்மா... கார் சுத்த போர்ம்மா!

    இருக்கும்... இருக்கும்டி! சொல்லமாட்டே பின்ன? காரும், வசதியும் இல்லாதப்ப... எத்தனை அடமும், ஆர்ப்பாட்டமும் செய்திருக்கிறாய்? எனக்கில்ல தெரியும்... உன் சின்ன வயதுத் தொந்தரவுகளை!

    பசிக்குதும்மா! வாசலிலேயே நிறுத்திக் கேள்வி மேல் கேள்வி கேட்கணுமா? கௌசல்யா சிணுங்க...

    ஏய்... நாளையில இருந்து நேரத்தோட வந்துருடி!

    ட்ரை பண்றேம்மா!

    தப்பு தண்டா ஏதும் பண்ணலீயே? அர்ச்சனா கவலையாய்க் கேட்க...

    போம்மா... போய் முதல்ல டிபன் எடுத்து வை. சாப்பிட்டுட்டே உன் கேள்விகளுக்கெல்லாம் தெம்பாய்ப் பதில் சொல்றேன்!

    லேட்டா வந்துட்டு... இதில் அதிகாரம் வேறா...? இட்லி வைத்துச் சாம்பாரை ஊற்றினாள்.

    கௌஷிம்மா... ஜாக்கிரதைடா! அப்பாவோட புகழை... பாராட்டுக்களைக் கண்டு... அதை எப்படியாவது கெடுக்கணும்ன்னு சில விஷமிகளின்... எதிரிகளின் தூண்டுதலால்... சில நாலாம்தரப் பத்திரிகைகளும், மீடியாக்களும்... எப்போ எப்போன்னு அலையறாங்க! கொஞ்சம் பார்த்து நடந்துக்கம்மா! ப்ளீஸ்... என்று கெஞ்ச...

    உன் புருஷனோட கௌரவத்துக்குப் பங்கம் வராப் போல நடந்துக்கமாட்டேன். நீ சின்னப் பிள்ளைக்குப் புத்தி சொல்றாப்போல எதுவும் சொல்ல வேண்டாம். நான் மெடிக்கல் காலேஜ் ஸ்டூடண்ட்! வளர்ந்துட்டேன்! எனக்கு எது நல்லது எது கெட்டதுன்னு தெரியும்! எதுனா வேலையிருந்தா போய்ப் பாரும்மா. அதை விடுத்து சதா தொண தொணக்காதீங்க! முகம் சுழித்துச் சொல்ல...

    ஏய் கௌசல்யா... உன் புருஷன்... உன் புருஷன்னு சொல்றீயே... அவர் உனக்கு அப்பா இல்லையா...?

    உனக்கு அவர் புருஷனில்லையா? மல்லுக்கு நின்று, சொன்னால் என்னம்மா தப்பு? என்று கௌசல்யா கேட்க...

    அர்ச்சனா முகம் வாடிச் சென்றாள்.

    அன்பு பிரபல முன்னணி டைரக்டர். கடந்த பத்தாண்டுகளாய் எவராலும் அசைக்க முடியாமல்... சக்ஸஸ்புல் டைரக்டராய் இருப்பவன். வருடத்திற்கு நான்கு, ஐந்து எனப் படம் பண்ணாமல்... வருடத்திற்கு ஒன்று என்ற கணக்கில் திட்டமிட்டு... நேர்த்தியாய்... கதையம்சத் தோடு... கலையம்சத்தோடு... மக்களுக்கு ஏதாவது புதுவிதச் செய்தியைச் சொல்லி... காதலில் கரைய வைத்து... யோசிக்க வைத்து... காயம்பட்ட இதயங்களைச் சுகமாய் மயிலிறகால் வருடுவதுபோலப் படமெடுப்பான். அவன் எடுத்த அத்தனை படங்களும் வெற்றிப் படங்களே!

    அவன் எடுத்த அத்தனை படங்களும் வெள்ளிவிழா... தங்கவிழா... வைரவிழா என்று கண்டு... விழாக்கொண்டாடிய படங்கள்!

    டைரக்டர் அன்பு என்றால் சினிபீல்டில் ஒரு பயம் கலந்த மரியாதை!

    படம் கிடைக்காமல்... நலிந்து... துவண்டு போன ஹீரோக்களுக்கு வாய்ப்புக் கொடுத்து... நான்கைந்து பேரை உச்சிக்குத் தூக்கிவிட்ட ஆபத்பாந்தவன்! இவன் அறிமுகப்படுத்திய... இளம்புதுமுக நடிகர்கள்... இதுவரை சோடை போனதில்லை. அத்தனை பேரும் நட்சத்திரங்களாய் ஜொலிக்கிறார்கள்.

    இத்தனை உயரத்திலிருக்கும் அன்புவை... கௌசல்யா கொஞ்ச நாட்களாய் அலட்சியப்படுத்துவதும்... அவமானப்படுத்துவதும்... கோபப்படுத்துவதுமாய் இருந்தாள்.

    காரணம் புரியாமல் அன்புவும், அர்ச்சனாவும் தவித்தனர். கௌசல்யாவின் தவிப்பை... அலட்சியத்தைத் தாங்கிக் கொள்ள முடியாமல்... தணலில் வெந்து தவிக்கும் புழுவாய்த் தத்தளித்தனர்.

    அர்ச்சனா... ஏதாவது கோபமாய்க் கத்தினாலும், ‘விடு. சின்னப்பெண்! விபரம் தெரியாதவள்!’ என்று அடக்கினான், அன்பு.

    ஆனால், அன்பு மனதளவில் வேதனை கொள்வது அர்ச்சனாவுக்குத் தெரியும்! அவன் தனிமையில் கௌசல்யாவின் சொல் வீச்சு தாங்காமல் கலங்குவதும், கஷ்டப் படுவதும் தெரியும்!

    ‘இழுத்து ரெண்டு அறைவிடாமல்... எதுக்குக் கொஞ்சறீங்க? படிப்புல கெட்டிக்காரியா இருந்து அலட்டிட்டாலும் பரவாயில்லை! சுமார்தான்! சாதாரண டிகிரியில சேர்த்துவிடாமல்... மெடிக்கல்தான் படிப்பேன்னு அடம் பண்ணியவளை... லட்சக்கணக்குல கொட்டி... தனியார் மெடிக்கல் காலேஜ்ல சேர்த்துவிட்டு இருக்கீங்க! காலேஜ் போனதிலேர்ந்து கொஞ்சம் திமிராத்தான் இருக்கா! அடக்கலன்னா சரிப்படமாட்டா. சொல்லிட்டேன்! அப்புறமா... அவளைக் கொஞ்சறதும்... கண்டிக்கறதும்... உங்க இஷ்டம்பா!" என்று அர்ச்சனா அடிக்கடி புலம்புவாள்.

    அர்ச்சனாவின் புலம்பலை அன்பு கண்டு கொள்வதே இல்லை!

    அன்பு காரைவிட்டு இறங்கிவர... வாசலுக்கு ஓடினாள். அவன் கையிலிருந்த பெட்டியை வாங்கிக் கொண்டாள். அன்பு ரொம்பவே களைத்துத் தெரிய... அர்ச்சனா மனது கலங்கியது.

    என்னங்க... ரொம்ப வேலையா...? களைச்சிப்போய்த் தெரியறீங்களே! எதுக்கு இவ்ளோ கஷ்டப்படணும்? அக்கறையாய்க் கேட்க... அவன் களைப்பெல்லாம் எங்கோ ஒடி ஒளிந்து கொண்டது போல இருந்தது.

    இன்று வெயில் ஜாஸ்தி இல்லையா? போய் ஃபேஸ் வாஷ்பண்ணினால்... களைப்பெல்லாம் நீங்கிடும்! ஆமா... கௌசல்யா சாப்பிட்டாளா? படிச்சாளா?

    போய்ப் படுத்துட்டா.

    ஏன் நேரத்திலே படுத்துட்டா? உடம்புக்கு எதுனாவா? பதற்றமாய்க் கேட்டான்.

    அதெல்லாம் இல்லீங்க! பசிக்குதுன்னு வந்த உடனே சாப்பிட்டாள். படுத்துகிறேன்னு சொல்லிட்டு படுத்துட்டாள்!

    நான் போய்ப் பார்த்துட்டு வரேன்!

    வேணாங்க! முதல்ல சாப்பிடுங்க. அப்புறமா போய்ப் பார்க்கலாம் ப்ளீஸ்...

    கௌசல்யா... அன்புவை ஏதாவது சொல்லி... கஷ்டப்பட வைத்து... பட்டினியாய்ப் படுக்க வைத்து விடுவாளோ என்று அர்ச்சனாவுக்குப் பயம்.

    முதல்ல என் செல்ல மகள்! அப்புறமாத்தான் சாப்பாடு... மற்றதெல்லாம்! என்று அர்ச்சனாவின் வார்த்தையை மீறிக் கதவைத் தட்டினான்.

    அம்மா கௌஷி... கௌஷிம்மா... நான் அப்பாடா! தூங்கறீயாடா செல்லம்? வாடா... வந்து உன் முகத்தை மட்டும் காட்டிட்டுப் போடா! என்று அன்பு ஆசையாய் அழைக்க...

    எனக்குத் தூக்கம் வருது! காலையில் பார்க்கலாம்! உள்ளிருந்து அலட்சியமாய்க் குரல் வந்தது.

    ப்ளீஸ் கண்ணா... ஒரே ஒரு நிமிடம்டா...

    போங்க டாடி! உங்களுக்கு வேற வேலையில்லையா? டிஸ்டர்ப் பண்ணாதீங்க! நான் தூங்கணும்!

    எவ்வளவு நேரம் கதவைத் தட்டியும் கௌசல்யா திறக்காமல் போக... அன்பு வேதனையுடன் முகம் வாடி வர...

    உங்களுக்கு வேற வேலையே இல்லையா? வாங்க! அவள் ராங்கிக்காரி! பிடிவாதக்காரி! எல்லாம் நீங்க கொடுத்த செல்லத்தால்தான் துள்ளறாள்! வந்து சாப்பிடுங்க. நீங்கதான் மகள் மகள்ன்னு பாசத்துல உருகிப் போறீங்க! அவளைக் காலேஜ்ல சேர்த்ததுல இருந்தே... அவள் போக்கே சரியில்லை!

    அர்ச்சனா சொல்ல... மனசெல்லாம் வலிக்க... வந்த மர்ந்தவன் பாதிச் சாப்பாட்டிலேயே கையைக் கழுவினான்.

    அர்ச்சனா அவனைக் கவலையாய்ப் பார்த்தாள்.

    2

    மறுநாள்...

    பகலெல்லாம் சூரியனின் கதிர் வீச்சுத் தாங்காமல்... களைத்துச் சோர்ந்திருந்த பூமிக் குழந்தை... இரவு துடிப்பாய்... துள்ளலாய்... பனியில் நனைந்த புத்தம் புது ரோஜா போலக் காட்சியளித்தது.

    இன்று கௌசல்யா எட்டு மணியாகியும் வரவில்லை. தவிப்பில் அர்ச்சனாவின் நிமிடங்களைக் கரைத்து விட்டு... ஒரு எட்டரை மணி வாக்கில்... ஒரு இளைஞனுடன் டூவீலரில் வந்து இறங்கினாள்.

    அந்த இளைஞன் அழகாய் இருந்தான். வண்டியைச் சர்ரென்று திருப்பிக் கையாட்டி விடை பெற்றது... அர்ச்சனாவின் இதயத்துள் பழையவற்றைக் கிளறிக் காயப்படுத்தியது.

    கௌசல்யா... யாருடி அவன்? பயத்துடன் கேட்டாள்.

    என் பிரண்ட்மா! அலட்சியமாய்ப் பதில் வந்தது.

    பத்திரிகைக்காரங்க கண்ணில் பட்டால்... படமெடுத்துப் போட்டு... இல்லாதது பொல்லாததை எழுதிவைத்தால்... உன் அப்பாவுக்குத்தானே அசிங்கம்!

    அவன் வெறும் ப்ரண்ட்தான்! சும்மா கத்தாதேம்மா...! கடற்கரை போய்க் கொஞ்ச நேரம் பேசிட்டு வந்தோம்! அதைத் தப்பா எடுத்துட்டு... ஏன் பத்ரகாளியா ஆடறே?

    ஏய், இந்த கெட்டபழக்கத்தை விட்டுடு! எங்களைக் கொல்லாதேடி! அப்பாட்ட நீ லேட்டாய் வந்ததைச் சொல்ல மாட்டேன்! நாளையில இருந்து காலேஜ் விட்டதும்... நேரே வீட்டுக்கு வர வேலையைப் பார்! புரியுதா? சீறிவிட்டுச் சென்றாள், அர்ச்சனா.

    அதற்கு அடுத்தநாள்... அன்புவும் வந்துவிட, கௌசல்யா வந்த பாடில்லை.

    கௌசல்யா இன்னுமா வரலை? ஏதாவது ப்ரண்டுங்க வீட்டுல பங்ஷன்னு போயிருப்பாளா? பயந்து பதற்றத்துடன் கேட்டான்.

    ‘இன்று அன்புவே கண்டு கொள்வான். கண்டதும் மகளை நினைத்து வருந்துவான். கடவுளே! அன்பு வருந்தாமல் காப்பாற்று! கௌசல்யா அந்தப் பையனோடு வந்து இறங்கக் கூடாது! கடவுளே... கடவுளே...!’ மனதிற்குள் வேண்டிக் கொண்டிருக்க...

    அதே இளைஞனோடு ஜோடியா... டூவீலரில் கட்டிப் பிடித்துக் கொண்டு வந்து... இறங்கி...

    Enjoying the preview?
    Page 1 of 1