Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

En Vizhiyil Yen Vizhunthaai
En Vizhiyil Yen Vizhunthaai
En Vizhiyil Yen Vizhunthaai
Ebook116 pages52 minutes

En Vizhiyil Yen Vizhunthaai

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

R.Geetharani, an exceptional Tamil novelist, written over 150 novels, Readers who love the subjects Romance, social awareness and typical family subjects will never miss the creations of this outstanding author… She has her tamils readers spread over the globe…
Languageதமிழ்
Release dateJul 1, 2018
ISBN9781043466220
En Vizhiyil Yen Vizhunthaai

Read more from Geetharani

Related to En Vizhiyil Yen Vizhunthaai

Related ebooks

Reviews for En Vizhiyil Yen Vizhunthaai

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    En Vizhiyil Yen Vizhunthaai - Geetharani

    14

    1

    இந்த உலகத்தின் மொத்த சந்தோசத்தையுமே தனக்குள் தேக்கி வைத்துக் கொண்டிருக்கிறாற் போன்ற மலர்ச்சியுடன் காற்றின் மென்மையான அசைவிற்கேற்ப தலைசாய்த்து அசைந்தாடும் சிருங்கார வர்ண இதழ்கள் சுமக்கும் கர்வம் தாங்கி நிற்கும் அந்த ஆரஞ்சு நிற வர்ண ரோஜா மலரினைப் படுக்கையில் அமர்ந்தபடியே பார்த்து காலை வணக்கம் தெரிவித்தாள் சவுந்தர்யா.

    அவளின் காலை வணக்கத்திற்கு பதில் செப்புகிற விதமாக சற்றே கனத்து வீசிய காற்றலைக்கு ஏற்ப அசைந்தாடியது சவுந்தர்யாவிற்கு மலர் கூட பேசுமோ என விழி விரிய வைத்தது.

    லேசாய் கண்களை மூடினாள். அதிகாலை நேரத்தின் இதமான குளுமை மனசை வருடிற்று. மூடின இமைக்குள் சஞ்சய் வந்து நின்றான்.

    சவுந்தர்யா... விழித்துவிட்டாயா என் நேச நெஞ்சமே...! என கண்ணிமைத்து மீசை விரிய நிகோடின் கரை படிந்திராத உதடுகள் மலர ஒரு சிரிப்பு சிந்தினான்.

    சவுந்தர்யாவிற்கு மூடின விழிகளைத் திறக்க மனமே வரவில்லை. காதலனின் முகம் காணாது போக விரும்பவில்லையோ...?

    சஞ்சய். நீ கேட்ட கேள்விக்கு என் பதிலை இன்று நிச்சயம் சொல்லத்தான் காத்திருக்கிறேன்...! உள்ளுக்குள்ளேயே மென்மையாய் சொல்லிக் கொண்டாள்.

    சவுந்தர்யா... ம்மா எழுந்துட்டியா...? அப்பா மென்மையான குரலில் அழைத்தவாறு அறைக்குள் பிரவேசித்தார்.

    ம்... இப்போத்தான் எழுந்தேன்ப்பா. உங்களுக்கு உடம்பு பரவாயில்லையா...?

    ம்... நேத்திக்குக் கொஞ்சம் பரவாயில்லை போல இருக்கும்மா. இந்த ஊர் கிளைமேட்டுக்கு என் உடம்பு ஒத்துழைக்க மாட்டேங்குது. ஆனால்... இருந்துதானே யாகணும்...!

    "ப்ரமோஷன் ட்ரான்ஸ்ஃபர் வேண்டாம்ன்னு சொன்னேன். ஆனால்... நீங்கதான் கேட்கலை. எண்ணி ஒரே வருசத்துல மாத்திக்கிட்டு நம்மூர் போய் சேர்ந்துடலாம்ப்பா... கிடைக்கிற வரப்பிரசாதத்தை நழுவவிடுவானேன்னு தலைகீழா நின்னீங்க. உங்க ஆசையை ஏன் கெடுப்பானேன்னு நானும் வந்து ஜாயின் பண்ணிட்டேன். என்ன பெரிசா வருமானம் எகிறிக் குதிக்கப் போகுதா...? முழுசா நானூற்று எண்பது ரூபாய் தான் இந்த ப்ரமோசன்ல கூடுதல். அதுக்கு மூட்டை, முடிச்சை எல்லாம் கட்டிக்கிட்டு வந்திருக்கணுமான்னு தோணுது...!’

    உனக்கு இப்போ... அப்படித்தானம்மா தோணும். அரையணா உத்யோகம்ன்னாலும் அரண்மனை உத்யோகம்தான் ஒசத்தி. இதுக்கு இருக்கிற செல்வாக்கு வேற எதுல இருக்கும்மா...?

    போங்கப்பா... சுத்த போர் வேலை. வெறுமே குப்பைக்கட்டுகளை கிளர்ற கிளார்க் வேலை. இதுல ஜூனியர் அஸிஸ்டெண்ட் உத்யோகத்துல இருந்து அஸிஸ்டெண்ட்ன்னு ஒரு ப்ரமோஷன்...!

    யம்மாடி... இந்த உத்யோகத்துக்காகத்தானம்மா அவனவன் படிச்சு முடிச்சுட்டு நாயா பேயா கிடந்தலையறான். உனக்கு ஒரே அட்டெம்ட்டுல சீட் கெடைச்சு எண்ணி மூணே வருசத்துல ஒரு ப்ரமோஷனும் கிடைச்சது ஏதோ பூர்வ ஜென்மப் புண்ணியம். நமக்கு சோறு போடற தெய்வம்மா நீ பார்க்கிற உத்தியோகம். என்னமோ என் தகுதிக்கு உன்னை இந்தளவு ஒசத்தினதே ரொம்பப் பெரிசுன்னு நினைக்கிறேன். என்ன, உங்கம்மா இருந்து பார்க்க கொடுப்பினையில்லாமப் போச்சுதேன்றதுதான் என்னோட வருத்தம்... எல்லாம்...!

    அ...ப்பா... காலையிலெ எதுக்கு அம்மாவைப் பற்றி. ஞாபகப்படுத்திக்கிட்டு...

    ம்... உன் கையால் காபி போட்டுக்குடும்மா சீக்கிரமா... நான் நாலரைக்கே எழுந்துட்டேன். பசி கப் கபன்னுது. தூங்கற பொண்ணைத் தொந்தரவு பண்ண வேணாமேன்னு விட்டுட்டேன்...!

    "என்னப்பா நீங்க...?’ சரட்டென்று படுக்கையை விட்டெழுந்தாள் சவுந்தர்யா.

    விடு விடு என்று சென்று சிமெண்ட் தொட்டியில் கிடந்த குளிர்ந்த நீரை வாரி முகத்திலடித்து கழுவின வேகத்திலேயே இடுப்பு வரை அடர்த்தியாய் வெட்டி விடப்பட்ட கேசத்தினை அள்ளி கோடாலி முடிச்சிட்டவளாய் சமையற்கட்டிற்குச் சென்று கேஸ் ஸ்டவ்வை பற்ற வைத்து குக்கரை அடுப்பில் ஏற்றினாள். தொட்டித் தண்ணீரில் கிடந்த பால் கவரை எடுத்து வந்து நீட்டினார் அப்பா.

    நான் பார்த்துக்க மாட்டேனாப்பா... போய் உட்காருங்க முதல்ல. ரெண்டே நிமிசத்துல காபியோட வர்றேன்...!

    சவுந்தர்யா சர்க்கரை டப்பாவையும் காபி பொடி டப்பாவையும் எடுத்து சமையல் மேடை மீது தயாராக வைத்து விட்டு பால் பொங்கும் முகம் பார்த்திருந்து டம்ளர்களை எடுத்து வைத்தாள்.

    தாமோதரன் கூடத்திற்கு வந்து வழக்கமான இடத்தில் அமர்ந்தவராய் அன்றைய செய்தித்தாளை விரித்து பார்வை பதித்தார்.

    வழக்கமான அரசியல் களேபரக் கூத்துகளின் கருத்துக் கணிப்பு, கொலை, கொள்ளை, இளம்ஜோடிகள் போலீஸ் ஸ்டேஷனில் திருமணம் என செய்தி தொடர்ந்து கொண்டே போயிற்று.

    ம்... ஹ்... என்னைக்கு அமைதியே உருவான ஒரு தேச செய்தியை தலைப்புச் செய்தியா வாசிக்கப் போறோமோ தெரியலைம்மா...? ஒவ்வொரு செய்தியும் அது உண்மையோ, பொய்யோ ஆனால் கொலை, கற்பழிப்புன்னு அகீர், பகீர்ன்னு மனசை அடைக்கிறாப்ல செய்தி வாசிக்கிறப்போ அது சம்பந்தப்பட்ட மனுஷங்க மனசு எப்படி கிடந்து அடிச்சுக்கும்ன்னு எனக்குள்ளே ஒரு துடிப்பும்மா சவுந்தர்யா...!

    சூடு பறக்கும் காபியை டபராவிற்கும், டம்ளருக்குமாக மாற்றி மாற்றி ஆற்றினவாறே அப்பாவின் முன் வந்து நின்றாள்.

    வெறும் செய்தியாவே பார்க்க பழகிக்கோங்கப்பா... அது போதும்...!

    ம்... இந்த மனோபாவம்தான்ம்மா ஏட்டுச்சுரைக்காய் மனிதர்களை தொடர்ந்து உருவாக்கிட்டிருக்கு. துடிப்பும், கொதிப்பும் தார்மீக ரீதியா வரணும்மா. அப்போத்தான் இந்த வாசிப்புக்கு அர்த்தம் இருக்கும். இல்லைன்னா... இது வெறும் பொழுது போக்கு. எவனோ செத்துட்டான்னு செய்தி வாசிச்சவனுக்கு என்ன புண்ணியம்...? இது மாதிரி ஒரு சம்பவம் இனி நிகழாத சம்பவம்ன்ற மாதிரி சமூகம் உருவாகணும்மா...! அது தான் கற்ற கல்விக்கு செலுத்தற மரியாதை. வெறும் கோவணத்தை கட்டிக்கிட்டு கோட், சூட் போட்ட வெள்ளைக்காரனை அடிபணிய வெச்சு சுதந்திரத்தை வாங்கிக் கொடுத்த அந்த மகான் மறுபடியும் பிறந்து வரணுமோ என்னமோ...? எங்கே பார்த்தாலும் வன்முறை, பணப்பித்து பிடித்த மனிதர்கள், பணத்துக்காக எதை வேணாலும் செய்யற படிச்ச தலைமுறை இதையெல்லாம் படிக்கிறப்போ எனக்கு வேதனையா இருக்கு சவுந்தர்யாம்மா...!

    ம்... காபி ஆறுது முதல்ல காபியை சாப்பிடுங்கப்பா. உங்க கோபம் நியாயமான ஒண்ணு தான். ஆனால், நடைமுறை வாழ்க்கையில் செயல்படுத்த முடியாதே...?

    ஏன்... ஏன்ம்மா முடியாது. சொல், செயல், எண்ணம் எல்லாம் ஒரே மாதிரி இருந்தா ஏனம்மா ஈடேற முடியாது சொல்றது ஒண்ணாவும், செய்யறது ஒண்ணாவும் இருக்கிற கண்ணாமூச்சி ஆட்டத்தினால்தான் கல் பொம்மைகளை கல்விக் கூடங்கள் உருவாக்கிட்டிருக்குன்னு சொல்வேன்...!

    எனக்கும் கூட இந்த சமூகத்து மேலே, மாறாத நியதிகள் மேலே, நியாயமான கோபம் உண்டுப்பா. போன வாரம் லெட்டர்ஸ் ட்டூ தி எடிட்டர் பேஜ்க்கு எழுதிப் போட்டேன். பப்ளிஷே ஆகலை இதுவரைக்கும்...!

    ஒரு வாரம் தானே ஆகறது. ஒரு வருசம் வரை பொறுமை வேணும்மா. பேனா பிடிக்கிறதுன்னா...?

    ம்... அடுத்த தலைமுறையே வந்துடும் அதுக்குள்ளே...!

    "மாற்றம் நிகழணும்ன்னா பொறுமை எல்லாச் செயல்கள்லயும் அவசியம் தேவைம்மா...! என்னோட ஆசைக்கு உன்னை வளர்த்தேன். உன் லட்சியம்ன்னு நீயும் பத்திரிகைக்கு விடாம எழுதிக் குவிக்கிறே.

    Enjoying the preview?
    Page 1 of 1