Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Ithu Mounamana Neram
Ithu Mounamana Neram
Ithu Mounamana Neram
Ebook144 pages54 minutes

Ithu Mounamana Neram

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

1956 ஆம் ஆண்டு விழுப்புரம் அருகில் கப்பியாம்புலியூர் என்ற கையலக கிராமத்தில் பிறந்தவர்.

கல்லூரி நாட்களிலேயே வாசகர் கடிதம் மற்றும் துணுக்கு எழுதும் ஆர்வம் ஏற்பட்டது. 1980 ல் முதல் சிறுகதை குமுதத்தில் பிரசுரமானது. இது வரை சுமார் 850 சிறுகதைகள் வந்துள்ளன.

சிறுகதை வெளிவந்த அதே ஆண்டு முதல் நாவல் மாலைமதி நாவலாக பிரசுரமானது. அதன் பிறகு ஐம்பது நாவல்கள் மற்றும் அதில் பாதி குறுநாவல்கள் வந்துள்ளன.

குமுதம், ஆனந்தவிகடன், கல்கி, குங்குமம், சாவி, இதயம் பேசுகிறது, கலைமகள், அமுதசுரபி, மங்கையர் மலர், குமுதம் சிநேகிதி உள்ளிட்ட ஏராளமான பத்திரிகைகளிலும் மின்னம்பலம் போன்ற இன்டர்நெட் பத்திரிகைகளிலும் கதைகளும், கட்டுரைகளும், பேட்டிகளும் பிரசுரமாகிக்கொண்டிருக்கின்றன. ஏராளமான சிறுகதை மற்றும் குறு நாவல் போட்டிகளில் பரிசுகள் பெற்ற பெருமிதமும் உள்ளது.

அமுதசுரபி நாவல் போட்டியில் முதல் பரிசு வென்றார். அது ‘கோலத்தில் சிக்கிய புள்ளிகள்’ என்ற தலைப்பில் அதில் தொடர்கதையாக வெளிவந்தது.

தொண்றூறுகளில் வந்த சீரியல்களில் கதை டிஸ்கஷனில் கலந்து கொண்ட அனுபவம் உண்டு. சினிமா டிஸ்கஷன்களிலும் பங்கேற்றிருக்கிறார்.

இவரின் நாடகம் ஒன்று விவேக் நடித்து தூர்தர்ஷனில் ஒளிபரப்பாயிற்று. பிரபல நாளிதழில் ஆன்மிகத் தொடர்கட்டுரைகள் எழுதிய அனுபவமும் உண்டு. தொலைக்காட்சிகளில் ஆன்மிகத் தொடர்பான சொற்பொழிவுகள் நிகழ்த்துகிறார்.

கடந்த நாற்பது வருடங்களாக முழு நேர ஜோதிடராகவும் உள்ளார். மாலைமதி, கல்கி, மங்கையர் மலர், தினகரன், பத்திரிகை டாட் காம் ஆகிய பத்திரிகைகளுக்குப் பல ஆண்டுகளாக வாரபலன்கள் எழுதி வருகிறார்.

சிஃபி டாட்காமில் ஜோதிடக் கட்டுரைகள் எழுதியதுடன் அவர்களின் ஜோதிடக்குழுவில் (panel) பங்கேற்றிருக்கிறார்.

Languageதமிழ்
Release dateNov 10, 2019
ISBN6580128404702
Ithu Mounamana Neram

Read more from Vedha Gopalan

Related to Ithu Mounamana Neram

Related ebooks

Reviews for Ithu Mounamana Neram

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Ithu Mounamana Neram - Vedha Gopalan

    http://www.pustaka.co.in

    இது மௌனமான நேரம்

    Ithu Mounamana Neram

    Author:

    வேதா கோபாலன்

    Vedha Gopalan

    For more books

    http://pustaka.co.in/home/author/vedha-gopalan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    1

    அழகான மேகங்கள் லேசாய் மறைத்த வெயில் காலை

    பரபரப்பின் மறுவடிவான மவுண்ட் ரோடில் இருந்தது அந்த அலுவலகம்.

    ஹாய்... ஆபீசுக்குக் கிளம்பியாச்சா? போனில் கேட்ட விநோதாவின் குரலுக்குச் சிரிப்பு வந்தது அவளுக்கு.

    கிளம்பியாச்சு... வந்துக்கிட்டே இருக்கேன்... ஆபீஸ் வாசல்ல இருக்கேன்...போதுமா? மொபைலை அணைத்தாள். ஆபீசுக்குள் நுழைந்தததாள்.

    ஹப்பாடா... வந்துட்டியா? சிரித்தவாறு வரவேற்றாள் மாலினி.

    சீ போ... ரெண்டு நிமிஷத்ல பார்த்துக்கப் போறோம். அதுக்குள்ள என்னயா போன்? செல்லமாய்க் கடிந்து கொண்ட தோழியை உற்றுப்பார்த்தாள் மாலினி.

    உங்கிட்ட ஒரு சந்தோஷ சமாசாரம் சொல்லணும்

    சொல்லிடு தன் கம்ப்யூட்டரில் பாஸ்வேர்டைப் போட்டவாறு அதட்டிச் சிரித்தாள்.

    அயம் இன் லவ்.

    மாலீ! எவண்டீ மாட்னான்? அய்யோ பாவம்.... சிரித்தவாறு மெயில் பாக்ஸ் திறந்தாள்…

    இந்த முறை யாரு? தனுஷ்? கார்த்தி?

    மாலிக்குச் சின்னப்பிள்ளை மாதிரிக் கோபம் எழுந்தது.

    ஏன்பா அப்டி கேட்கற?

    பின்னே... சின்னப்பிள்ளைல... என்ன வயசு சொன்ன? நாலா...அஞ்சா... ஜெமினி கணேசனை லவ் பண்ணினதா சொன்ன... ஸ்கூல் படிக்கும்போது எம் ஜி ஆர்… சிவாஜி... பிறகு கனவில் ஜெய்... அப்புறம் அது ரஜினி கமலாய் மாறியாச்சுன்னு உருகின. பிறகு அஜீத்தைப் பார்த்ததிலேயிருந்து ராத்தூக்கம் போயிடுத்துன்ன... அப்புறம் யாரு சொன்ன?

    தலைகுனிந்து குழந்தை போல் சொன்னாள் மாலினி. அஜித்...பிறகு விஜய்...

    ஆங்.அப்புறம் யாரு சூரியாவா?

    சீசீ இல்ல... விக்ரம் அப்புறம்தான் சூரியா...கடைசியாய் விஜய் சேதுபதி

    தோடா சட்டென்று சிரித்தாள் அந்த சிநேகிதி.

    சரி இப்ப யாரு சொல்லுமா சொல்லு

    ஆதவன்...

    அது யாரு ஆதவன்? புதுப்படத்துல கையெழுத்துப் போட்டு புக் ஆனதும் நீ புக் பண்ணியிட்டியா?

    ஆபீசில் வேலை பாட்டுக்கு ஒரு பக்கம் நடந்துகொண்டிருக்க, கணினியில் ஒரு கண்ணும் பக்கத்து சீட் சிநேகிதியின் மேல் ஒரு கண்ணுமாகச் சொன்னாள் மாலினி.

    இவர் எக்ஸ்போர்ட் கம்பெனி சூபர்வைசர். ஐ டி மாறப்போறார்.

    அப்டிப் போடு அறிவாள... அதெப்படிடீ சினிமாக் கதாநாயகனை விட்டுட்டு... சாதாரண ஆளை...

    ஆள் பார்க்க சினிமாக் கதாநாயகன் மாதிரிதான் பா இருப்பார்... சமாதானம் செய்யும் குரலில் சொன்னாள்.

    அட்ரா சக்கை அட்ரா சக்கை... எத்தனை நாளாய்?

    எத்தனை மாசமாய்னு கேளு...

    ஐயோ மாசமா? பொங்கிச் சிரித்தாள் தோழி.

    சீ அசிங்கமாப் பேசாத... நான் அவரை மனசில் வெச்சு மாசக் கணக்காய்ப் பூஜை செய்துக்கிட்டிருக்கேன்.

    ஆங்... கற்பூரம் விலையெல்லாம் கூடிப்போச்சுன்னு பேப்பர்ல போட்டிருந்தது... இதனால்தானா?

    என் மனசுல இத்தனை நாளாய் ஆசை இருந்தாலும் அவர் வாயால வர்றதுக்கு இவ்ளோ காலம் ஆச்சுடீ

    அப்ப நீ முந்திக்கிட்டு சொல்லவேண்டியதுதானே?

    சொன்னபிறகுதான் இத்தனை காலம் காத்திருந்தேன்...

    தோபார்றா... ஆபீசே குலுங்கிக் குலுங்கிச் சிரித்தது.

    ‘கண்ணை காட்டு போதும்...நிழலாக கூட வாரேன் …என்ன வேணும் கேளு

    குறையாம நானும் தாரேன்..." என்று ஒருத்தி பாட… அன்றைக்கு லேடீஸ் லஞ்ச் ரூமில் கும்மாளம்தான்.

    எப்டிய்யா போயும் போயும் அந்தாளு உங்கிட்ட மாட்னான்? வாய் முழுக்க மசாலா மணக்கும் பிரியாணியைச் சுவைத்தவாறு சுவாரஸ்யமாய்க் கேட்டாள் தாரா

    இந்தா எனக்குக் கொஞ்சம் சாம்பார் சாதம் குடு அள்ளிய சிப்ஸுடன் கேட்டாலும் மீராவுக்கு சுவாரஸ்யமான கதை கேட்கும் ஆர்வம்தான் கண்ணில் நிறைந்திருந்தது.

    அவரை நான் சந்திச்சு சரியாய் ஏழு மாசம் ஆறுநாள் இருபது மணி நேர ஆச்சுப்பா

    நிமிஷம் செகண்ட் எல்லாம் எவன் சொல்வான்? உங்க மாமியாரா வருவாங்க? உச்சபட்ச சிரிப்புடன் கேட்டாள் சசிலதா.

    வருவாங்க வருவாங்க... இவ அவனை லவ் பண்றது தெரிஞ்சா துடைப்பத்துடன் வந்து மினிட்ஸ் கணக்கைச் சொல்லுவாங்க... எவடீ இவ புளியோதரை கலந்து சிரித்தாள் நிகிலா.

    ஆளாளுக்குக் கலாய்ப்புப் பணியைச் செய்ய...தன் காதல் கதையை விவரிக்க ஆரம்பித்ததாள் மாலினி.

    ***

    அன்றைக்கு அவள் அக்கா, அண்ணாவுடன் நைட்ஷோ போயிருந்தாள். அடுத்த நாள் ஞாயிற்றுக்கிழமை என்ற நிம்மதியில் கிளம்பியாயிற்று. வடபழனியில் இருந்தது தியேட்டர்.

    வரவர எல்லோரும் அக்கடாவென்று திருட்டு வி ஸிடியில் படம் பார்த்துவிடுவதால் தியேட்டரில் கும்பலே இருக்காது என்று தப்புக்கணக்குப் போட்டு இவர்கள் ஆடி அசைந்து கால்டாக்சி வைத்துக் கொண்டு போனபோது இவர்களைப் போலவே நினைத்துக்கொண்டு பலரும் வந்திருந்தார்கள்.

    அபிராமபுரத்திலிருந்து இவர்கள் போனபோதே ஹவுஸ்ஃபுல் மாலையை மாட்டிக்கொண்டுதான் தியேட்டர் இவர்களை வரவேற்றது.

    அண்ணா...எப்டியாவது படம் பார்த்தாகணும் அவள் அடமாய்ச் சொல்ல...

    இரு… வேற எப்டியாவது டிக்கெட் கிடைக்குதான்னு பார்க்கறேன் என்று சொன்னவன் பிளாக் டிக்கெட்டுக்கு முயல...

    அப்போதுதான் அந்த இளைஞன் கம்பீரமாய்,அழகாய், உயரமாய், வாட்டசாட்டமாய், அழகிய நெற்றியும் அடர்ந்த மீசையுமாய் இவர்களை நோக்கி வந்தான்.

    எக்ஸ்க்யூஸ் மி... எத்தனை டிக்கெட் வேணும்?

    பிரமிப்பாய் இருந்தது மாலினிக்கு. அவளுக்குள் ரொம்ப நாளாய் ஒரு சின்னக் கனவு உறங்கிக் கொண்டிருந்தது. சரத்குமாரின் உயரமும்... அரவிந்த சாமியின் கம்பீரமும்… ரஜினியின் பரபரப்பும், கமலின் கண்களும் எனப் பலப்பல நடிகர்களிடம் இருந்த பலப்பல சிறப்பம்சங்களையெல்லாம் ஒருங்கிணைத்து இவளாகக் கற்பனை வடிவம் ஒன்றை வைத்திருந்தாள்.

    யாருக்கும் தெரியாமல் ஆபீஸ் கணினியில் அப்படி ஒரு உருவத்தைச் சேமித்து வைத்திருந்தாள். அந்த உருவம் இப்போது நேரில் எழுந்து வந்தது எப்படி என்றுதான் பிரமித்தாள்.

    எங்களுக்குப் பதினாறு டிக்கெட் வேணும் என்று அவனைப் பார்த்த பிரமிப்பில் உளறிய அவளை அக்கா கௌசல்யா பிடித்து உலுக்கினாள்.

    ஏய் லூ…. என்னடீ ஆச்சு உனக்கு? என்று இவளைப் பார்த்துக் கடிந்து கொண்டு... வந்த வாய்ப்பை நழுவ விடாமல் ஜஸ்ட் நாலே நாலு டிக்கெட்ஸ்தான் மிஸ்டர்...அதிகம் வேண்டாம். என்றாள் தன் ஆறு வயது மகனை இழுத்து அணைத்தவாறு.

    கள்ள டிக்கெட் விற்பவன் இத்தனை அம்சமாக இருப்பானா என்ன?

    அவள் யோசித்துக்கொண்டே இருந்தபோதே அவன் விடையைச் சொல்லிவிட்டான். நீங்க டிக்கெட்டுக்கான விலையைக் குடுங்க போதும். என் நாலு ஃப்ரெண்ட்ஸ் வர்றதா இருந்துது... புரொக்ராம் மாறிடுச்சு... அவங்க வரலை... நான் ஏற்கனவே ரிஸர்வ் செய்திருந்தேன்...

    படம் பார்க்கும்போது எதேச்சையாகவோ, திட்டமிட்டோ, மாலினி அவன் அருகில் உட்கார்ந்துகொண்டாள். அப்படி ஒன்றும் அங்கே ஒரு ரகசிய காதல் டிராமா அரங்கேறிவிடவில்லை. அவன் பாட்டுக்கு கோக் குடித்தான். கேக் கடித்தான். சிக்லெட் மென்றான். அந்தண்டை இந்தணடை திரும்பாமல் கடிவாளக் குதிரையாய் சினிமாவை ரசித்தான். இடைவேளையில் வெளியே போய்... சிகரெட் வாசத்துடன் திரும்பி...மீண்டும் சிக்லெட்.

    படத்தின் கடைசி சீன் முடிந்து போடப்பட்ட பெயர்ப்பட்டியலை இவள் படித்துக் கொண்டிருந்தபோதே அவன் எஸ் ஆகிவிட்டான்.

    அண்ணா வா... அக்கா சீக்கிரம் வா...டேய் வாண்டு... தூங்கிட்டியா- வேக வேகமாய் வெளியேறிய தங்கையை அவர்கள் வியப்புடன் பார்த்தனர்.

    வெளியே மக்கள் வெள்ளத்தைப் பார்த்து இதில் இனிமேல் அவனை எங்கே பார்க்கப் போகிறேன், என்று மனதுக்குள் வருந்திக்கொண்டிருந்தவளுக்கு, மீண்டும் ஒரு ஜாக்பாட்.

    தன் மோட்டார் சைக்கிளை எடுத்துக் கொண்டு அவன் வட்டமிட்டுத் திரும்பும்போது மாலினி

    Enjoying the preview?
    Page 1 of 1