Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Ennuyire…
Ennuyire…
Ennuyire…
Ebook62 pages1 hour

Ennuyire…

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

1956 ஆம் ஆண்டு விழுப்புரம் அருகில் கப்பியாம்புலியூர் என்ற கையலக கிராமத்தில் பிறந்தவர்.

கல்லூரி நாட்களிலேயே வாசகர் கடிதம் மற்றும் துணுக்கு எழுதும் ஆர்வம் ஏற்பட்டது. 1980 ல் முதல் சிறுகதை குமுதத்தில் பிரசுரமானது. இது வரை சுமார் 850 சிறுகதைகள் வந்துள்ளன.

சிறுகதை வெளிவந்த அதே ஆண்டு முதல் நாவல் மாலைமதி நாவலாக பிரசுரமானது. அதன் பிறகு ஐம்பது நாவல்கள் மற்றும் அதில் பாதி குறுநாவல்கள் வந்துள்ளன.

குமுதம், ஆனந்தவிகடன், கல்கி, குங்குமம், சாவி, இதயம் பேசுகிறது, கலைமகள், அமுதசுரபி, மங்கையர் மலர், குமுதம் சிநேகிதி உள்ளிட்ட ஏராளமான பத்திரிகைகளிலும் மின்னம்பலம் போன்ற இன்டர்நெட் பத்திரிகைகளிலும் கதைகளும், கட்டுரைகளும், பேட்டிகளும் பிரசுரமாகிக்கொண்டிருக்கின்றன. ஏராளமான சிறுகதை மற்றும் குறு நாவல் போட்டிகளில் பரிசுகள் பெற்ற பெருமிதமும் உள்ளது.

அமுதசுரபி நாவல் போட்டியில் முதல் பரிசு வென்றார். அது ‘கோலத்தில் சிக்கிய புள்ளிகள்’ என்ற தலைப்பில் அதில் தொடர்கதையாக வெளிவந்தது.

தொண்றூறுகளில் வந்த சீரியல்களில் கதை டிஸ்கஷனில் கலந்து கொண்ட அனுபவம் உண்டு. சினிமா டிஸ்கஷன்களிலும் பங்கேற்றிருக்கிறார்.

இவரின் நாடகம் ஒன்று விவேக் நடித்து தூர்தர்ஷனில் ஒளிபரப்பாயிற்று. பிரபல நாளிதழில் ஆன்மிகத் தொடர்கட்டுரைகள் எழுதிய அனுபவமும் உண்டு. தொலைக்காட்சிகளில் ஆன்மிகத் தொடர்பான சொற்பொழிவுகள் நிகழ்த்துகிறார்.

கடந்த நாற்பது வருடங்களாக முழு நேர ஜோதிடராகவும் உள்ளார். மாலைமதி, கல்கி, மங்கையர் மலர், தினகரன், பத்திரிகை டாட் காம் ஆகிய பத்திரிகைகளுக்குப் பல ஆண்டுகளாக வாரபலன்கள் எழுதி வருகிறார்.

சிஃபி டாட்காமில் ஜோதிடக் கட்டுரைகள் எழுதியதுடன் அவர்களின் ஜோதிடக்குழுவில் (panel) பங்கேற்றிருக்கிறார்.

Languageதமிழ்
Release dateOct 4, 2019
ISBN6580128404592
Ennuyire…

Read more from Vedha Gopalan

Related to Ennuyire…

Related ebooks

Reviews for Ennuyire…

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Ennuyire… - Vedha Gopalan

    http://www.pustaka.co.in

    என்னுயிரே…

    Ennuyire…

    Author:

    வேதா கோபாலன்

    Vedha Gopalan

    For more books

    http://pustaka.co.in/home/author/vedha-gopalan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    1

    நிருபமா அந்தச் சுடிதாரை ஆசையுடன் பார்த்தாள். அற்புதமான ஆலிவ் பச்சையில் மின்னியது. முன்புற டிசைனில் விலை உயர்ந்த எளிமையும் எழிலும் சேர்ந்து இருந்தது.

    உடனே காதலாகி இதை பாக் பண்ணுங்க... - என்று சொல்லிக் கொண்டிருந்தபோதுதான் அது நிகழ்ந்தது. அருகிலிருந்த முரட்டு வில்லன் சட் சட்டென்று அவளுடைய கைப்பையை ஒரே இழுப்பாக இழுத்ததில், வார் அறுந்து போயிற்று. உடனே பென் ஜான்சன் மாதிரி, பிடித்தான் ஒரு ஓட்டம்.

    முழுசாய் ஒரு நிமிஷம் கழிந்தப் பின்னர்தான் நிருபமாவுக்கும் அவள் சிநேகிதிகளுக்கும் உணர்வு திரும்பியது.

    அதற்கப்புறம் அவர்கள் கத்தியதற்கோ, அழுததற்கோ பயன் இல்லாமல் போயிற்று.

    அப்போதுதான் அசப்பில் ரிக்கி மார்ட்டின் போல இருந்த அந்த இளைஞன் அங்கு நுழைந்தான். நெருக்கமாக கிராப். மெல்லிசாய் உதடுகள்.

    கடையில் நிலவிய பதற்றச் சூழ்நிலையின் காரணம் புரியவில்லை.

    ஆனால் ஆளாளுக்குப் பேசிக்கொண்டதில் அத்வைதம் மாதிரி கொஞ்சூண்டு புரிந்தது.

    ஏன் அவனை ஓட விட்டீங்க? கடையில இத்தனை ஜென்ட்ஸ் இருக்கீங்க? கோபம் தெரிந்தது அவனின் விசாரிப்பில்.

    சட்டென்று நிருபமாவைப் பார்த்து எந்தப் பக்கம் ஓடினான்?

    பா... பாக்கலை.

    அழகான இளைஞன் வலிய வந்து விசாரித்ததில் சிநேகிதிகளுக்கு சந்தோஷம்.

    இதோ... இந்தப் பக்கம் போனான் சார். நாங்க பார்த்தோம்.

    அவன் நிமிஷ நேரம்கூடத் தயங்கவில்லை. சட்டென்று வெளியே பாய்ந்தான். மோட்டார் சைக்கிளை சீற்றமாய்க் கிளப்பினான். பத்து நிமிஷங்கள் கழித்து, உதட்டைப் பிதுக்கியவாறு திரும்பி வந்தான்.

    சந்தேகத்துக்கு இடமான முறையில யாரும் ஓடலை. ஒரு வேளை சாதாரணமாய் நடந்து போறானோ என்னவோ? ஆளை நான் பார்க்காததால ஐடியாவே இல்லை. ஒரு குழுவே இயங்கக்கூடும். கைப்பை கைமாறி இருக்கக்கூடும். என்றான் அழகான ஆங்கிலத்தில்.

    கிழிஞ்சுது... இதுக்காகத்தான் ஷாருக்கான் மாதிரி மோட்டார் சைக்கிள்ல பறந்தானாக்கும். கிசுகிசுப்பாய்ச் சொன்ன தன் சிநேகிதியைப் பார்வையால் முறைத்தாள் நிருபமா.

    அவள் சொன்னது இளைஞன் காதில் விழாது என்றுதான் நினைத்தாள்.

    "பரவாயில்லை மிஸ்... நான் உங்க சர்ட்டிஃபிகேட்டை பிரேம் பண்ணி மாட்டிக்கணும்னு மோட்டார் சைக்கிள்லபறக்கலை. உண்மையாவே கிடைச்சுடுமோங்கற நப்பாசைல போனேன். இத்தனை நேரம் அவன் பணத்தை எடுத்துக்கிட்டு பையைக் கடாசிட்டுக்கூடப் போயிருப்பான்னு மனசுக்குள்ள பட்டாலும் ஒரு முயற்சி பண்ணிப் பார்த்திடுவோமேன்னு

    Enjoying the preview?
    Page 1 of 1