Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Whatsapp Ennum Vallal
Whatsapp Ennum Vallal
Whatsapp Ennum Vallal
Ebook317 pages1 hour

Whatsapp Ennum Vallal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

எல்லோருக்கும் எல்லா ஃபார்வேர்டும் வந்திருக்குமா என்ன? எல்லோரும் எல்லாவற்றையும் படித்திருப்பார்களா என்ன? வாட்ஸப் பதிவுகளைத் தொகுத்து வழங்கினால் என்ன? அந்த ஐடியாவின் ரிசல்ட் இதோ உங்கள் முன்பு!

இதில் பலவற்றையோ... சிலவற்றையோ... ஒன்றிரண்டையோ நீங்கள் படித்திருக்கக்கூடும். மற்றவை புதிதுதானே? படியுங்கள்... ரசியுங்கள்... சிலவற்றிற்கு வேதனைப்படுங்கள்... சிலவற்றிற்குக் கைதட்டுங்கள்... சிலவற்றிற்குச் சிரிக்கவும் செய்யுங்கள்...

Languageதமிழ்
Release dateJul 29, 2023
ISBN6580128409978
Whatsapp Ennum Vallal

Read more from Vedha Gopalan

Related to Whatsapp Ennum Vallal

Related ebooks

Reviews for Whatsapp Ennum Vallal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Whatsapp Ennum Vallal - Vedha Gopalan

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    வாட்ஸப் என்னும் வள்ளல்

    Whatsapp Ennum Vallal

    Author:

    வேதா கோபாலன்

    Vedha Gopalan

    For more books

    https://www.pustaka.co.in/home/author/vedha-gopalan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    என்னுரை

    தீர்வு

    கேட்டாம்பாரு ஒரு கேள்வி...

    அனைவரும் சமம் மற்றும் முக்கியமானவர்கள்

    குரு ஒரு வரம்

    காலங்கள் திரும்ப கிடைக்காது...!!

    அற்புதக் கலைஞன் பறந்து அரைநூற்றாண்டு ஆகிப்போச்சு...

    எவர்க்ரீன் பாட்டி எஸ்.என். லட்சுமி

    யாருக்கு என்ன செய்தது கர்மா?

    கர்ணன் திரைப்படம்

    பூவரசு...! பூவரசு...!

    இரண்டு முறை மட்டுமா கோபம்?

    இறைவன் உங்கள் நண்பன்...

    செய்யுங்கள்... செய்யாதீர்கள்...

    மாடு மேய்க்கும் இளைஞன் சொன்ன தத்துவம்

    ஆங்... நியாபகம் வந்துடுச்சு…

    ஆத்மார்த்தம்

    மகனின் கேள்வியும் தந்தையின் பதிலும்!

    அன்றும் இன்றும்

    எனது பயணத்தில் பாடம்!

    உண்மையான அனுபவம்

    வாழ்க்கை அழகாய் இருக்கும்

    புரிந்து கொள்ளுங்கள்...

    இறைவன் கிடைப்பாரா?

    பாலகுமாரன் சொன்னவை...

    மாடு நீ... முன்னால போற!

    வெளில சாப்பிடலாமா?

    எங்கிருந்து பணம் வந்தது?

    இதுபோன்ற சில ‘மருந்துகளும்’ உள்ளன...

    உங்களின் உடம்பை நேசியுங்கள்

    ரயில் ஓட்டுவது லேசா என்ன?

    முயற்சித்துத்தான் பாருங்களேன்?

    பிரியமான மொழி

    நல்லதே நடக்கும்

    சக்தி... சக்தி... சக்தி!

    கோவில்கள் சக்தியுடன் விளங்குவதன் காரணம்

    ஆதாரம் தேவை ஆனால்

    ஆஞ்சநேயருக்கான பரிகார பூஜையும் அதன் பலன்களும்

    உண்மை இதுதான்

    அன்னாசி வெந்நீர்...

    அனுபவ அறிவு

    இதில் என்ன ஆச்சரியம்?

    தீபாவளி ஸ்பெஷல்

    எது எப்போது ரிலீஸ்?

    என்ன செய்வீர்கள்...?

    சதுரங்கம் என்பதன் உண்மையான பொருள் என்ன?

    அகர வரிசைப் பாடல்

    ஆஹா அடைடா... அடை வெல்லம்டா

    வாழ்க்கை என்பது வியாபாரமல்ல

    இப்படித்தான் சொன்னாரு புத்தர்

    உயரத்தை தொட விரும்பும் பெண்கள்

    கலாம்... சொன்னதைக் கேட்... கலாம்

    உனக்கென இறைவன் இருப்பார்

    கழுகாக இரு

    ஓலாவில் ஒரு உபந்நியாசம்

    அவரவர் கர்ம வினை!

    உருகத் தொடங்கிய ஐஸ்கீரிம்...

    புகழ்

    ரயிலடிப்பிள்ளையார் கதை தெரியுமா?

    கோபம் என்னும் தீ...

    அப்பா என்றால் அன்பு

    சினிமா அப்பாக்கள்

    சொந்தம்

    நிம்மதிக்கு நாலு வழி...

    நல்லதே நடக்கும்

    எதிர்பாராததை எதிர்பாருங்கள்

    நீ மனிதனாகவே இரு

    வே என்றால் என்ன?

    அரியவை ஐந்து

    ஆரோக்யமே ஆனந்தமே!

    சொலவடைகள்

    இது ஒரு அழகியின் கதை

    கவியரசன் கண்ணதாசன் ஒரு மேதை

    பணமா பக்தியா?

    குடும்பம் வேணுமடி பாப்பா!

    நினைவூட்டல்

    பிளேடு சார் பிளேடு...

    சிரித்து வாழ்... சிரிக்க வாழாதே

    முடிந்த கணக்கு

    மாணவன் நினைத்தால்... நடத்திக் காட்டுவான்!

    ஏன் போடுது?

    செல்வம் நிலைத்து தரித்தரம் மறைய

    இன்டர்வியூவில் இன்னொரு வியூ

    அடி தூள்...

    படித்து வாங்கியது!!

    இதுதான் இல்லற இரகசியம்

    ஆடுவது எதற்காக?

    விநோதமான யோசனை

    காம்போ - வாக எடுத்துக்குறீங்களா?

    நீங்கள் நினைப்பதை விட மிக மிக கடினம்

    சந்தோஷம் என்பது...

    கோலமிடுகையில்

    ‘இலக்கியங்களும் திரைப்படப் பாடல்களும்’

    ஃபைவ் ஸ்டார் பிரசன்னாவும் புன்னகை இளவரசி சிநேகாவும்.

    உல்லாசம் பொங்கிய ஜெய தீபாவளி

    அழகனின் அழகி ப்ரியா என்ற பானுப்ரியா.

    ஆழ்வார் திருநகரி வங்கார தோசை

    விற்பனைப் பூட்டைத் திறந்த சாவி...

    நமது கலாசாரம்... நமது மொழி...

    இட்டிலியும் ism... களும்...

    தமிழோ தமிழ்...

    வெளிச்சம்... வெளிச்சம்... வெளிச்சம்...

    ஆனந்தமாக வாழ்கிறார் ஹாஜா ஷெரிப்

    காத்திரு... இப்படிக்கு சுஜாதா...

    என்னுரை

    நாலு வருடங்களுக்கு முன் எனக்கு வாட்ஸப் என்ற ஆப்(பு) பற்றி அயோட்டா அளவு கூடத் தெரியாது. உங்ககிட்ட வாட்ஸப் இல்லையா? அடடா என்று பலரும் ‘துக்கம்’ விசாரித்தபோதுதான் அது இல்லாமல் இருப்பது பெரிய கிரைம் என்றே புரிந்தது.

    அவ்வளவு ஏன்? வாட்ஸப் என்று பலர் பேசிக்கொள்ளும்போது ‘வாட் ஈஸ் அப்?’ என்ற வாக்கியமாகத்தான் அதைப் புரிந்துகொண்டிருக்கிறேன்.

    பக்கத்து வீட்டில் உள்ள பிரின்சிபால் தோழி எனக்கு இரண்டே நிமிஷத்தில் வகுப்பெடுத்து வாட்ஸப்பைப் புரியவைத்து... டவுன்லோட் செய்து கற்றுக் கொடுத்தபோது அதை ஆரம்பத்தில் ஒரு தொந்தரவாகவே நினைத்தேன்.

    குட் மார்னிங் என்றும் குட் நைட் என்றும் கடமை மாதிரி அனுப்பவே பலர் அதைப் பயன்படுத்தினர்.

    சதுர வடிவில் நான்கு வீட்டின் குப்பைகளை அடுத்தடுத்த வீட்டில் கொட்டும் படம் மாதிரி நமக்கு வந்ததை உடனே தூக்கி மற்றவர்களுக்கு அனுப்பும் சாதனமாக அலுப்பேற்படுத்திய வாட்ஸப்பில் அவ்வப்போது சில ரத்தினங்களும் வராமல் இல்லை.

    அதை ஆசையாய் யாருக்கேனும் அனுப்பும்போது அய்ய... இது நாலு வருஷத்துக்கு முந்தியே வைரலா வளைய வந்துச்சு. இதைப் போய் இப்போ அனுப்பியிருக்கியே... என்று சொல்லும் அதே தோழி அதே விஷயத்தை அடுத்த நாளே அனுப்பும்போது சிரிப்பு வந்தாலும்...

    ஒரு ஞானோதயமும் பிறந்தது.

    எல்லோருக்கும் எல்லா ஃபார்வேர்டும் வந்திருக்குமா என்ன? எல்லோரும் எல்லாவற்றையும் படித்திருப்பார்களா என்ன? வாட்ஸப் பதிவுகளைத் தொகுத்து வழங்கினால் என்ன?

    அந்த ஐடியாவின் ரிசல்ட் இதோ உங்கள் முன்பு!

    இதில் பலவற்றையோ... சிலவற்றையோ... ஒன்றிரண்டையோ நீங்கள் படித்திருக்கக்கூடும். மற்றவை புதிதுதானே?

    படியுங்கள்... ரசியுங்கள்... சிலவற்றிற்கு வேதனைப்படுங்கள்... சிலவற்றிற்குக் கைதட்டுங்கள்... சிலவற்றிற்குச் சிரிக்கவும் செய்யுங்கள்...

    குட் லக்.

    உங்கள் அன்பு

    வேதா கோபாலன்

    (தேதி: 2023ஆம் வருடத்தின் சுட்டெரிக்கும் மே மாதத்தின் 29ம் நாள்)

    தீர்வு

    கேரளாவில் ஒரு பெரிய தொழிற்சாலை கட்டப்பட்டு, அந்த ஆலை கட்டும் போது பெரும் பிரச்சனை ஏற்பட்டது.

    பிரச்சனை என்னவென்றால் ஆலையில் கட்டப்பட்ட ஆழமான குழியின் அடிப்பகுதியில் மிகவும் கனமான இயந்திரம் வைக்கப்பட வேண்டும், ஆனால் இயந்திரத்தின் எடை ஒரு சவாலாக இருந்தது.

    இயந்திரம் தளத்திற்கு வந்துவிட்டது. ஆனால் 30 அடி ஆழமான குழியில் அதை எவ்வாறு இறக்குவது என்பது பெரும் சிக்கலாக மாறிவிட்டது.

    சரியாக நிறுவப்படவில்லை என்றால், அடித்தளம் மற்றும் இயந்திரம் இரண்டும் மிகவும் பாதிக்கப்படும்.

    இப்போது, மிக அதிக எடையைத் தூக்கக்கூடிய கிரேன்கள் எல்லா இடங்களிலும் கிடைக்காத காலம் இது. கிடைக்கக்கூடியவர்கள் இயந்திரத்தை தூக்கலாம், ஆனால் அதை ஆழமான குழியில் தரையிறக்குவது அவர்களின் திறனுக்கு அப்பாற்பட்டது.

    இறுதியாக, ஆலை கட்டும் நிறுவனம் கைவிட்டு, இந்த பிரச்சனைக்கு தீர்வு காண டெண்டர் விடப்பட்டது.

    இதனால், ஏராளமானோர், இந்த இயந்திரத்தை குழிக்குள் பொருத்தி, தங்கள் சலுகைகளை அனுப்பினர்.

    கிரேன் வரவழைத்து இயந்திரத்தை பொருத்தி விடலாம் என நினைத்தனர்.

    அதன்படி, பணியை முடிக்க, 10 முதல், 15 லட்சம் ரூபாய் வரை கேட்டனர். ஆனால் அந்த மக்களிடையே ஒரு ஜென்டில்மேன் இருந்தார்.

    மெஷின் தண்ணீரில் நனைந்தால், ஏதாவது பிரச்சனை வருமா? என்று நிறுவனத்திடம் கேட்டார்.

    இது இயந்திரத்தில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது என்று நிறுவனம் பதிலளித்தது.

    அதன்பின், டெண்டரையும் நிரப்பினார்.

    அனைத்து சலுகைகளையும் பார்த்தபோது, அந்த நபர் வேலையை முடிக்க 5 லட்சம் ரூபாய் மட்டுமே கேட்டுள்ளார்.

    எனவே வெளிப்படையாக, இயந்திரம் அமைக்கும் வேலை அவருக்கு வழங்கப்பட்டது.

    ஆனால் விசித்திரமான விஷயம் என்னவென்றால், இந்த நபர் இந்த வேலையை எப்படி செய்வார் என்பதை பகிர்ந்து கொள்ள மறுத்துவிட்டார்.

    மேலும் அதைச் செய்வதற்கான திறமையும் சரியான குழுவும் தன்னிடம் இருப்பதாக மட்டுமே கூறினார்.

    இந்த வேலையைச் செய்ய வேண்டிய தேதி மற்றும் நேரத்தைச் சொல்லுமாறு அவர் நிறுவனத்திடம் கேட்டார்.

    அந்த நாள் இறுதியாக வந்தது.

    ஒவ்வொரு ஊழியரும், மேலாளரும், நிறுவனத்தின் முதலாளியும், சுற்றியிருந்தவர்களும் கூட, அந்த மனிதன் இந்த வேலையை எப்படிச் செய்வான் என்று தெரிந்துகொள்ள ஆர்வமாக இருந்தனர்! அவர் தளத்தில் எந்த தயாரிப்பும் செய்யவில்லை.

    சரி, முடிவு செய்த நேரத்தில், நிறைய லாரிகள் அந்த தளத்தை அடைய ஆரம்பித்தன. அந்த லாரிகள் அனைத்தும் பனிக்கட்டிகளால் ஏற்றப்பட்டிருந்தன. அவை அனைத்தும் குழிக்குள் நிரப்பப்பட்டன.

    குழி முழுவதுமாக பனியால் நிரம்பியதும், இயந்திரத்தை நகர்த்தி பனி அடுக்குகளின் மேல் வைத்தனர். இதற்குப் பிறகு, ஒரு சிறிய தண்ணீர் பம்ப் சுவிட்ச் ஆன் செய்யப்பட்டு, குழியில் ஒரு குழாய் செருகப்பட்டது.

    இதனால் தண்ணீர் வெளியே எடுக்கப்பட்டது. பனி உருகியது, தண்ணீர் தொடர்ந்து கொட்டியது, இயந்திரம் கீழே செல்லத் தொடங்கியது.

    4 - 5 மணி நேரத்திற்குள் வேலை முடிந்து மொத்த செலவு ரூ.1 லட்சத்திற்கும் குறைவாகவே வந்தது.

    இயந்திரம் கச்சிதமாக பொருத்தப்பட்டு, அந்த நபருக்கு ரூ.4 லட்சத்துக்கு மேல் லாபம் கிடைத்தது.

    வணிகம் உண்மையில் மிகவும் சுவாரஸ்யமான விஷயம்.

    பிரச்சினைக்கு எளிய தீர்வைக் கண்டறிவது ஒரு கலையாகும். இது மனிதனின் விவேகம், புத்திசாலித்தனம் மற்றும் நடைமுறை புரிதலைப் பொறுத்தது.

    கஷ்டமான பிரச்சனைகளுக்கு கூட விவேகத்தின் மூலம் எளிய தீர்வுகள் கிடைக்கும்...

    கேட்டாம்பாரு ஒரு கேள்வி...

    உருகி உருகி பிரார்த்திக்கும் முருகேசுக்கு, கடவுளிடம் ஒரு நாள் பேச சந்தர்ப்பம் கிடைத்தது.

    முருகேசு: கடவுளே...! நான் உங்க கிட்டே ஒரு விளக்கம் கேட்கலாமா?

    கடவுள்: தாராளமாகக் கேள் மகனே...

    முருகேசு: பொறுமையாக, கோபப்படாமல் பதில் சொல்வீர்களா...?

    கடவுள்: கண்டிப்பாக...

    முருகேசு: இன்றைய தினம், ஏன் எனக்கு இப்படி ஒரு மோசமான நாளைக் கொடுத்தீங்க...?

    கடவுள்: என்னப்பா சொல்ற நீ...?

    முருகேசு: எப்பவும் சரியா எழுந்திருக்கிற நான் இன்னைக்கு எழுந்திரிச்சதே லேட்...!

    கடவுள்: ஆமாம்...! அவசரத்துல என்னைக் கூட கும்பிடாம ஆபீஸ்க்கு புறப்பட்டுட்ட...

    முருகேசு: கிளம்பினதே லேட்... இதுல என் பைக் வேற பஞ்சர் ஆகியிருந்தது...

    கடவுள்: ஆமாம்... எனக்குத் தெரியும்.

    முருகேசு: சரி, பஸ்ல போலாம்னு பஸ்ஸை பிடிச்சா வழியில ஏதோ ஆக்சிடெண்ட் போல... ஒரே டிராஃபிக் ஜாம். ஆபீஸ்க்கு நான் ஒரு மணிநேரம் லேட்.

    கடவுள்: ஆமாம்...! தெரியுமே...

    முருகேசு: மதியம் சாப்பிட கொஞ்சம் லேட் ஆயிருச்சு. அதுக்குள்ளே கேண்டீன்ல சாப்பாடு காலியாயிருச்சு. கடைசில பசிக்கு ஏதோ கிடைச்சதை அரைகுறையா சாப்பிட்டுட்டு வந்தேன்.

    கடவுள்: ஆமாம், அதுவும் தெரியும்.

    வங்கியில் பர்சனல் லோன் அப்ளை பண்ணியிருந்தேன். அது விஷயமா ஒருத்தர்கிட்டே இருந்து நான் ஃபோனை எதிர்பார்த்திருந்தேன். சாயந்திரம் வீட்டுக்கு திரும்பும்போது அவர்கிட்டேயிருந்து எனக்கு கால் வந்தது. பேட்டரியில சார்ஜ் இல்லாம மொபைல் அந்த நேரம் பார்த்து ஆஃப் ஆயிடிச்சு.

    கடவுள்: ஆமாம், தெரியும்.

    முருகேசு: அதை பிடிச்சி... இதை பிடிச்சி... முட்டி மோதி வீட்டுக்கு வந்து, கொஞ்ச நேரம் ரூம்ல ஏ.சி.யில உட்கார்ந்து. டி.வி.யை பார்த்து ரிலாக்ஸ் பண்ணலாம்னா ஏ.சி. ரிப்பேர் போல. வேலையே செய்யல...

    இன்று எனக்கு எதுவுமே சரியில்லையே...! ஒரு நாள் உங்களைக் கும்பிட மறந்ததுக்கு இவ்ளோ கஷ்டங்களா கடவுளே...?

    (கடவுள் பலமாக சிரிக்கிறார். சில வினாடிகள் கழித்து பேச ஆரம்பிக்கிறார்)

    கடவுள்: இன்னைக்கு உன் கர்மாவின்படி மிகவும் மோசமான நாள். நீ காலை அசந்து தூங்கிகிட்டிருக்கும்போதே மரணதேவன் உன்னை நோக்கி வந்துவிட்டான். அவன் கூட வாக்குவாதம் பண்ணி உன்னை காப்பாற்ற வேண்டி உன்னை கொஞ்சம் அதிக நேரம் தூங்க வெச்சேன்.

    முருகேசு: (அதிர்ச்சியுடன்) ஓ...!!!

    கடவுள்: உன் பைக்கை பஞ்சராக்கினேன். ஏன்னா, நீ ஆபீஸ் போகும்போது... நீ போற ரூட்ல பிரேக் பிடிக்காம தாறுமாறா ஓடுற வேன் ஒன்னு உன் மேல இடிக்கிறதா இருந்தது. அந்த வேன் ஆக்சிடெண்ட்டாகி தான் டிராபிக் ஆச்சு. நீ பைக்ல போயிருந்தா அந்த வேன் மரணதேவன் கணக்குப்படி உன் மேல இடிச்சிருக்கும்...

    முருகேசு: (அடக்கத்துடன்) ஓ...

    கடவுள்: மதியம் உனக்கு சாப்பாடு கிடைக்காம போனதுக்கு காரணம், கடைசியா மிச்சமிருந்த குழம்புல எலிக்கு வெச்சிருந்த எலி பாஷாணம் எப்படியோ தவறி விழுந்துடிச்சு...! யாரும் அதைக் கவனிக்கல. அதை நீ சாப்பிட்டிருந்தா என்னாயிருக்கும்...?

    முருகேசு: (கண்கலங்கியபடி) ம்ம்...!!!

    கடவுள்: சாயந்திரம் உன் அலைபேசி சுவிச் ஆப் ஆனதுக்குக் காரணம், அந்த நபர் உனக்கு தவறான வாக்குறுதிகள் கொடுத்து இக்கட்டில் மாட்டிவிட இருந்தார். எனவே அதிலிருந்து காப்பாற்ற வேண்டி, உன் ஃபோனை...

    முருகேசு: ம்ம்...

    கடவுள்: அப்புறம், அந்த ஏ.சி. மெஷின் எர்த் கோளாறு ஏற்பட்டு அதில் முறையற்ற முறையில் கரண்ட் வந்துகொண்டிருந்தது. ஒருவேளை முகம் கழுவிக்கொண்டு ஈர கைகளுடன் எப்போதும் போல நீ சுவிட்சை தொட்டிருந்தால், அந்தக் கணமே தூக்கி எறியப்பட்டிருப்பாய். ஆகையால் அதை செயலிழக்கச் செய்தேன்.

    என்னை வணங்க மறந்ததால் அன்று முழுதும் நீ சோதனையை சந்தித்தாய் என்று என்னை தவறாக நினைத்துகொண்டாய். ஆனால் அனுதினமும் நீ என்னை வணங்கி வந்த காரணத்தால் நீ என்னை மறந்த அன்றும் கூட நான் உன்னை காக்க மறக்கவில்லை.

    முருகேசு: இத்தனை ஆபத்துலேர்ந்து என்னை காப்பாத்துனீங்களே...! ஆனா என் கல்யாணத்தன்னிக்கு எங்க போயிருந்தீங்க??

    கேட்டாம்பாரு ஒரு கேள்வி...

    கடவுள் குடுத்தாரு பாரு ஒரு பதில்...

    மவனே நீ சாமி கும்பிட ஆரம்பிச்சதே, கல்யாணத்துக்கப்பறம் தானே!!

    அனைவரும் சமம் மற்றும் முக்கியமானவர்கள்

    நீங்கள் சேர்ந்த குழுவில் நட்பை எவ்வாறு பேணுவது.

    1. எல்லாவற்றையும் நகைச்சுவையாக எடுத்துக் கொள்ளுங்கள்.

    2. குழுவில் உள்ளவர்களை விட யாரும் பெரியவர்கள் இல்லை.

    3. குழுவில் அனைவரும் முக்கியமானவர்கள். ஆனால் குழுவிற்கு யாரும் முக்கியமானவர்கள் அல்ல.

    4. ஒவ்வொருவரும் அவரால் முடிந்த பங்களிப்பைச் செய்ய வேண்டும்.

    5. எதுவுமே ஒரிஜினல் இல்லை... அனைத்தும் ஃபார்வர்டுகள், (நீங்கள் இப்போது படிக்கும் செய்தி உட்பட).

    6. எனவே எதிர்வினையாற்ற வேண்டிய அவசியமில்லை. சில சமயங்களில் மீண்டும் மீண்டும் பலரால் ஒரு செய்தி வரும். தொந்தரவு செய்யாதீர்கள், அவர்களை வரவேற்கிறோம். எல்லா இடங்களிலும் இது இயல்பானது.

    7. யாரும் பணம் பெறுவதில்லை, எனவே இது அன்பு மற்றும் தன்னார்வ முயற்சிகள்.

    8. உங்கள் இயல்பான வாழ்க்கையை வாழுங்கள்,

    நீங்கள் தனித்துவமானவர்,

    உங்களில் சிலர் இல்லாமல் குழு சலிப்பாக இருக்கும்.

    9. மற்றவர்கள் மட்டுமே பதிவுகள் இட வேண்டும் என்று ஒருபோதும் எதிர்பார்க்காதீர்கள். ஆனால் உங்களால் முடிந்த பங்களிப்பை வழங்குங்கள்.

    10. குழுக்கள் எப்பொழுதும் பொழுதுபோக்காக இருக்கும். எனவே இடுகையிடப்படும் அனைத்தையும் படித்து மகிழ்வோம். ஒரு இடுகையைப் படித்து, அதை வளப்படுத்த ஒரு கருத்தை இடுங்கள்.

    11. ஒவ்வொரு அரட்டையையும் பெரிதாக எடுத்துக் கொள்ளாதீர்கள், ஏனென்றால் நாம் அனைவரும் குழுவில் வேடிக்கை பார்க்க, கற்றுக்கொள்ள, ஒருவரையொருவர் மகிழ்விக்க இருக்கிறோம்.

    12. கடைசியாக, ஒருவர் போடும் இடுகையை நீங்கள் விரும்பாத நேரங்கள் இருக்கலாம்.

    அதைப் பாராட்டக் கூடிய வேறு யாராவது குழுவில் இருக்கலாம்.

    13. குழு என்பதே முன்பின் தெரியாத பலர் இணைந்து கருத்துக்களை பரிமாறிக்கொள்வது தான்.

    14. குழுவில் வரும் நகைச்சுவைப் பதிவுகளை ஜாலியாக படித்து விட்டு கடந்து செல்லுங்கள் அவை சிரிப்பதற்காக மட்டுமே சிந்திப்பதற்கு அல்ல. உணர்ச்சிவசப்பட்டு எதிர் கேள்விகள் கேட்காதீர்கள்.

    15. ஒரு பதிவுக்காக பதிவிட்டவருடனோ மற்ற

    Enjoying the preview?
    Page 1 of 1