Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Moondraam Piraigal
Moondraam Piraigal
Moondraam Piraigal
Ebook308 pages1 hour

Moondraam Piraigal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Family Based Fiction Written By Stella Bruce
Languageதமிழ்
Release dateJun 2, 2019
ISBN9781043466756
Moondraam Piraigal

Read more from Stella Bruce

Related to Moondraam Piraigal

Related ebooks

Related categories

Reviews for Moondraam Piraigal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Moondraam Piraigal - Stella Bruce

    1

    இந்திய அரசாங்கத்தின் மிக முக்கியமான பிரமுகர் புதுடெல்லியில் காலமாகிவிட்டார் என்ற செய்தி ஒளி வேகத்தில் வெடித்துச் சிதறிய சிதறலில் சென்னை நகரிலும் இயக்கங்கள் நிலை குலைந்து ஸ்தம்பித்தன. நெருப்பின் புகை மூட்டம் போன்ற வன்முறைக் கும்பல்கள் ஆங்காங்கு வீதிகளில் பரவியதில் பல நிறுவனங்களின் கண்ணாடிக் காட்சி அமைப்புகள் நொறுங்கி அழிந்தன. சாலைகளின் போக்குவரத்து வாகனங்கள் முடக்கப் பட்டன. சில நாசம் செய்யப்பட்டன சொந்த ஊர்திகளில் செல்வதுகூட பாதுகாப்பற்ற நிலையாக மாற்றப்பட்டிருந்தன. அச்சமும் நிச்சயமின்மையும் எங்கும் கலந்தன. பாரிமுனை அரண்மனைக்கார வீதியில் தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரியும் தேவேந்திரன் நிலைமை கொஞ்சம் சீர் பெறுமாயென்று நடுப்பகல் வரைக்கும் காத்திருந்து பார்த்துவிட்டு, வீட்டுக்கு இனி நடந்தே செல்ல வேண்டியதுதான் என்ற தீர்மானத்திற்கு வந்தான். ஸ்கூட்டரை பூட்டி அலுவலக கட்டடத்தின் உள் வளாகத்திலேயே விட்டுவிட்டு வாசலில் நின்று வீதியின் இரண்டு பக்கமும் பார்த்தான். சிறு சிறு அணிகளாக பீதியுடன் அவரவர் குடியிருப்புகளை நோக்கிக் கிளம்பிக்கொண்டிருந்த ஆண்களின்- பெண்களின் பின்னணியில் நகர வாழ்க்கையே பதுங்கிப் போயிருந்தது.

    என்னங்க தேவேந்திரன், வீட்டுக்குக் கிளம்பீட்டிங்களா? பசுபதி உள்ளிருந்து ஓடி வந்து கேட்டான்.

    வேறென்ன பண்றது இங்கேயே இருந்து...? இதோ- இங்கேயே லாக் பண்ணி நிறுத்தி வச்சுட்டேன்.

    வீடு வரைக்கும் நடந்து போயிடுவீர்களா?

    எப்படியாவது போய்த்தானே ஆகணும். நடக்க முடியலைன்னா உருண்டுக்கிட்டாவது போக வேண்டியதுதான்...

    அப்ப ஒரு நிமிஷம் இருக்கீங்களா- உள்ளே போய் சொல்லிவிட்டு நானும் வந்துடறேன்...

    ஜல்தியா வரணும்.

    ஒரே நிமிஷம்.

    பசுபதி உள்ளே ஓடினான். தேவேந்திரன் அலுவலக வாசலில் எரிச்சலுடன் காத்திருந்தான். அவனுடைய மனம் சஞ்சலித்துக்கொண்டே இருந்தது. வீட்டுத் தொலைபேசி நேற்றில் இருந்தே பழுதாகிப் போயிருந்தது. குழந்தைகள் பள்ளியில் இருந்து எப்படி வீடு திரும்பினார்களோ? சிறிது உடம்பு சரியில்லாமல் இருந்த செல்வராணி டாக்டரிடம் போனாளோ என்னவோ? சந்துருவிற்கு இன்று மாலை பெண் பார்க்கப் போகிற விஷயம் என்ன ஆயிற்றோ?

    போலாமா?- பசுபதி வந்து விட்டான்.

    அங்கே பார்... அந்த ஸ்கூட்டர்காரர் வயசானவர். அவரைக்கூட கீழே இறங்கிப் தள்ளிட்டுப் போகச் சொல்றானுங்க...

    இதையெல்லாம் கேக்கறதுக்குத்தான் ஆள் இல்லை.

    ஒருத்தன் செத்துடக்கூடாது. உடனே பஸ் ஓடாது ரயில் ஓடாது! ஸ்கூல் கிடையாது. ஆபீஸ் கிடையாது. மார்க்கெட் கிடையாது. ஹோட்டல் கிடையாது. ரெண்டு நாளைக்கு எவனும் வீட்டை விட்டு நகரக்கூடாது... சே...

    சரி... எப்படிங்க தேவேந்திரன் நடந்து போகலாம்?

    எப்படியாவது நடய்யா...

    எப்படி நடந்தாத்தான் என்னன்னு கேக்கறீங்களா?

    பின்னே என்ன... ஸ்கூட்டரை விட்டுட்டு வீட்டுக்கு நடந்தே போடான்னு சொன்னா என்ன அர்த்தம்... நெனைச்சாலே வயிறு எரியுது...

    ரொம்பத்தான் மூட் அவுட்டாகி இருக்கீங்க...

    என் ஸ்கூட்டரை நான் ஓட்டிட்டு போகக்கூடாதுன்னு சொன்னா- மூடு அவுட் ஆகாமே என்னய்யா செய்யும்?

    ஒண்ணு செஞ்சிருக்கலாம் நீங்க. செத்த தலைவரோட படத்தை ஸ்கூட்டர்ல மாட்டி, அதுக்கு ஒரு மாலையைப் போட்டுட்டு கிளம்பியிருந்தீங்கன்னா- பசங்க விட்டுருப்பாங்க... நாலைஞ்சு பேர் அந்த மாதிரி மாட்டிட்டு ரொம்ப ஈஸியா போயிட்டாங்க...

    ஆமா- எனக்கென்ன தலையெழுத்தா... கண்டவன் படத்தையும் மாட்டிட்டுப் போறதுக்கு...?

    ரெண்டு நாளைக்கு டி.வி. காரன்... ரேடியோகாரன் வேற அழுது கழுத்தை அறுப்பானுங்க...

    சும்மாவே அவனுங்க கழுத்தை அறுக்கிறவனுங்க...!

    எவனாவது செத்தா இந்த மாதிரி ஆர்ப்பாட்டம் பண்றது வேற எந்தத் தேசத்திலும் கிடையாது பசுபதி. இன்னும் நாம் அந்தக் காட்டுமிராண்டித்தனமான நிலையில் இருந்து இம்மிகூட முன்னேறலை...

    மெதுவா பேசுங்க தேவேந்திரன். காதில் விழுந்து எவனாவது வந்து சைக்கிள் செயினால ஒரு வாங்கு வாங்கிடப் போறான்...

    வாங்கினா வாங்கிட்டுப் போறான் போ...

    வாங்கினா வாங்கிட்டுப் போறானா... எனக்கு ஒண்ணும் கிடையாதுங்க தேவேந்திரன்... கட்டை பிரம்மச்சாரி. நான் செத்தா தூக்கிப் போடறதுக்குக்கூட ஆள் கிடையாது. நீங்க பாவம் பிள்ளைக்குட்டிக்காரர். யாரோ ஒருத்தர் செத்ததுக்கு- அநியாயமா உங்களுக்கு ஏதாவது ஆச்சுன்னா...?

    அப்படி ஏதாவது ஆச்சுன்னாகூட தேவலை பசுபதி. நெனைச்சா-சனியன் ஏண்டா பிறந்தோம்னு இருக்கு...

    ஹும்... நீங்களே இப்படி சொன்னா நாங்கள்ளாம் எங்கே போறது?

    அட போய்யா... உனக்கென்ன தெரியும் நான் படற பாடு...

    அப்ப வாழ்க்கையில யாருமே பரிபூர்ண சந்தோஷமா இருக்கவே முடியாதா?

    ஏன் இருக்க முடியாது...? தாராளமா இருக்கலாம். ஆனா அப்படி இருக்கிறதுக்குத்தான் யாரும் யாரையும் விடறது கிடையாது. இன்னிக்கு எங்க அப்பா செத்துட்டார்னா அதுக்கு நான் அழறது நியாயம். நீயும் சேர்ந்து என் கூட அழனும்னு சொன்னா- அது நியாயமா... நீயே சொல்லு...

    அதெப்படி?

    இப்ப அப்படித்தானே நடக்குது... யாரோ ஒத்தர் செத்துட்டார் என்கிறதுக்காக நான் என்னோட சொந்த ஸ்கூட்டரையே விட்டுட்டு நடந்து போகனும்னு சொன்னா- போலீஸ் என்னத்துக்கு இருக்கு? கவர்ண்மெண்ட்னு ஒண்ணு என்னத்துக்கு இருக்கு?

    இப்படி ஃபோர்ட் ஸ்டேஷன் வரைக்கும் போய் - அப்படியே நேரா நடந்துரலாமா?

    எப்படியாவது போலாம்னுதான் அப்பவே சொல்லிட்டேனே பசுபதி... என்னத்துக்கு அப்புறம் திருப்பித் திருப்பிக் கேக்கறே...?

    ஸாரிங்க... சிறிது நேரம் தேவேந்திரன் மௌனமாக நடந்தான். நடந்தே பழக்கமில்லாததால் வியர்த்துக் கொட்டியது. வாய்க்குள்ளேயே என்னவோ முணங்கிக் கொண்டான். வாகனங்கள அற்ற சாலைகளின் சந்திப்புகள் வெறிச்சோடிக் கிடந்தன.

    இந்தத் தை மாதம் தனிக்குடித்தனம் போனாலும் போயிடுவேன்னு சொல்லிட்டு இருந்தீங்களே தேவேந்திரன்- என்ன ஆச்சு அது? பசுபதி நினைவு வந்து கேட்டான்.

    அநேகமா அது நடக்காதுன்னுதான் நினைக்கிறேன்.

    ஏன்... பத்து நாளைக்கு முன்னாடிகூட சொல்லிட்டு இருந்தீங்களே...?

    பத்து நாளைக்கு முன்னாடி அப்படித்தான் நினைச்சிட்டு இருந்தேன்... தேவேந்திரன் கொஞ்சம் இழுத்தபடியே சொன்னான்.

    உங்க அப்பா அதுக்கு ஒத்துக்கலையா?

    இல்லை இல்லை... விஷயம் எங்க அப்பா வரைக்கும் போறதுக்கான டெவலப்மெண்ட்டே ஆகலையே...

    அப்படியா?

    என் ரெண்டாவது தம்பி சந்துரு இருக்கானே அவனோட கல்யாணத்துக்கு எங்க வீட்ல பெண் பாக்கிறாங்க...

    அன்னிக்கே சொன்னீங்க

    அவனுக்குக் கல்யாணமாயிட்டா நாங்க இப்ப எல்லோருமா சேர்ந்து இருக்கிறதுக்கு எங்களோட இந்த வீடு கொஞ்சம் இடம் போதாது.

    வீடு- உங்க சொந்த வீடுதானே?

    சொந்த வீடுதான். அதுக்காக இடம் போதாவிட்டாலும் அங்கேயே அடைஞ்சு கிடக்கனும்னு சட்டமா?

    அப்படி யார் சொல்ல முடியும்?

    அதனால எங்க சந்துருவுக்குக் கல்யாணம் முடிஞ்சதும், அதுதான் சாக்குன்னு சொல்லிட்டு தனிக்குடித்தனம் போயிடலாம்னு நானும் என் வொய்ப்பும் ப்ளான் போட்டோம். ஆனா எங்க ப்ளான் நடக்காது போல...

    ஏன் சார்?

    என் தம்பி சந்துருவுக்கு எங்களைவிட இன்னும் கொஞ்சம் வசதி அதிகமா இருக்கிற இடத்திலிருந்து ஒரு பெண் வந்திருக்கு- ஒரு கண்டிஸனோடு...

    என்ன கண்டிஸன்?

    அந்தப் பெண்ணைப் பிடிச்சு... கல்யாணத்துக்குச் சம்மதம்னா என் தம்பி அவங்க வீட்டோட மாப்பிள்ளையா இருக்கறதுக்கு முதல்ல நாங்க சம்மதிக்கணுமாம். அதுக்குச் சம்மதம் இருந்தாத்தான் பெண் பார்க்கவே வரணுமாம்.

    அப்புறம் என்ன ஆச்சு?

    இந்தக் கண்டிஸனுக்கு எங்க அப்பா ஒரு நாளும் ஒத்துக்கமாட்டார்னுதான் நெனைச்சோம்.

    அதானே- பயங்கரமான ஆளாச்சே உங்கப்பா...

    அவரும் முதல்ல இந்த சம்பந்தமெல்லாம் நமக்குச் சரிப்படாதுன்னு ஒரே வார்த்தையில் சொல்லிவிட்டார். திடீர்னு என்ன நெனைச்சாரோ... ஒரு வாரம் யோசிச்சுப் பார்த்திட்டு மனுஷன் சரின்னு சொல்லி - பல்டி அடிச்சிட்டார்...

    ஆச்சர்யமா இருக்கு சார்!

    எரிச்சலா இருக்கு எனக்கு. என்னவோ இவரே அந்த வீட்டோட மாப்பிள்ளையா போகப் போறாப்பலத்தான் பல்லைக் காட்டிக் காட்டி பேசிட்டிருக்கார்.

    அப்படி ஒரு வீட்டோட மாப்பிள்ளையா போய் இருக்கிறதுக்கு உங்க தம்பியும் சம்மதிச்சிட்டாரா?

    ஒண்ணு சொல்றேன் பசுபதி. எங்க வீட்ல ஒரு விஷயத்தைப் பத்தி எங்க அப்பா ஒரு அபிப்பிராயம் சொல்லியாச்சுன்னா அதுக்கு அப்பீலே கிடையாது.

    இல்லையே. வாழப் போறது உங்க தம்பியாச்சே...

    பெரிய பணக்காரனோட வீட்டுக்கு வீட்டோட மாப்பிள்ளையா போய் இருக்கிறதுக்கு கசக்குமாக்கும்? எனக்கும் அப்படி ஒரு சான்ஸ் அந்தக் காலத்தில் வந்திருந்தா நானும் தான் சரின்னு சொல்லியிருப்பேன்...

    அந்தப் பொண்ணைப் போய் பார்த்துட்டு வந்துட்டாங்களா?

    இன்னிக்கி ஈவினிங் நாலு மணிக்கு அந்தப் பொண்ணைப் போய் பாக்கறதா ப்ளான். இந்த நிலைமையில் போய் பார்ப்பாங்களோ இல்லையோ... தெரியலை.

    அதான் உலகப் பெரியவர் - போயிட்டாரே... பெண்ணைப் பார்க்க முடியுமா... இல்லை பிள்ளையைப் பார்க்கப் போகத்தான் முடியுமா?

    பார்... எவனோ ஒரு தனிநபர் சாகிறது எத்தனை தனி நபரோட வீட்டில் எத்தனை விதமான பாதிப்புகளைக் குடுக்கறதுன்னு...

    அதைச் சொல்லுங்க. ஒரு தனிநபர் சுதந்திரத்துக்கு சட்டம் இங்கே என்ன பாதுகாப்புத் தருதுன்னு?

    இந்தப் பெண்ணே பிடிச்சு... கல்யாணம் முடிஞ்சாச்சுன்னா என் தம்பி சந்துரு மாமனார் வீட்டோட போய் இருந்துடுவான். அப்புறம் நான் எந்தச் சாக்கை வச்சுக்கிட்டு தனிக்குடித்தனம் போக முடியும் சொல்லு. இந்த எரிச்சல்ல ஏற்கனவே ரெண்டு நாளா எனக்கு மூடு அவுட். இந்த லட்சணத்ல வீட்டுக்கு நடந்து வேற போடான்னு சொன்னா- எவனுக்குத்தான் ஆத்திரம் வராது...

    நான் கேக்கறேன்னு தப்பா எடுத்துக்காதீங்க தேவேந்திரன். தெரியாமேதான் கேக்கறேன். பெத்த அப்பா அம்மாகூட ஜாயிண்ட் ஃபேமிலியா இருக்கிறது அப்படியொரு பெரிய கஷ்டமா?

    கல்யாணம் பண்ணிக்காத பிரம்மச்சாரியா இருக்கிறதாலே உனக்குத் தெரியலை பசுபதி, அது யாராக இருந்தாலும் சரி... கல்யாணமாகாமே இருக்கிறவரைக்கும் தான்- அப்பாவும் அம்மாவும். கல்யாணம் ஆயாச்சுன்னா அடுத்த நிமிஷமே மனசு மாறிப் போயிடுது...

    அப்படியா சொல்றீங்க?

    இந்த அம்மாக்களையாவது ஒரு வகையில் சேர்த்துக்கலாம். ஆனா அப்பாக்கள் இருக்கானுங்களே - அவனுங்களை எந்த வகையிலும் சேர்த்துக்க முடியாது. யம்மா- வயசாக வயசாக அவனுங்க பண்ற அக்ரமம் இருக்கு பார்-- அதை வால்யூம் வால்யூமா எழுதலாம்... அவ்வளவு அக்ரமம் இருக்கு! அதுவும் வயசான காலத்தில் தன் பெண்டாட்டிகளை அவனுங்க படுத்தற பாடு இருக்கே- அதை எழுத உட்கார்ந்தா லேசில் முடியாது. அதுபாட்டுக்கு அனுமார் வால்மாதிரி நீண்டுக்கிட்டே போகும்.

    டி.வி.யில் காட்டினா- ஒரு வருஷத்துக்குக் காட்டலாம்னு சொல்கிறீங்க?

    நீ ஒண்ணு...! ஏழெட்டு வருஷம் காட்டலாம்...

    பாருங்க தேவேந்திரன்... பேசிட்டே நடந்ததில் நடந்த மாதிரியே தெரியலை. அதுக்குள்ளே அண்ணா ஸ்கொயர் வந்துட்டோம்...

    உனக்கென்னப்பா, ஆல் இண்டியா ரேடியோ தாண்டினா கட் பண்ணிப் போயிடுவே... நான் அப்புறமும் நடக்கணுமே...

    மந்தைவெளியில் செயிண்ட் மேரி ரோடு தானே, உங்க வீடு?

    ஆமா...

    அப்ப நானும் உங்க வீடு வரைக்கும் வந்துட்டுத் திரும்பட்டுமா?

    வேணாம் வேணாம் நானே போயிடுவேன்... பார்... எப்படி எனக்கு வேர்த்துக் கொட்டுதுன்னு...

    அப்ப ஒன்னு செய்யலாமாங்க தேவேந்திரன்?

    என்ன?

    ஒரு பதினைஞ்சு நிமிஷம் பீச்ல உக்காந்து ரெஸ்ட் எடுத்துக்கிட்டு அப்புறமா நடக்கலாம்!

    வெயிலா இருக்கே பசுபதி...

    அந்தப் புல்வெளியில் நல்ல மரத்தடியா பார்த்து உக்காந்துப்போம்...

    அப்படியா சொல்றே?- தேவேந்திரன் இரட்டை மனத்துடன் கேட்டான்.

    யோசிக்காமே வாங்க. கொஞ்ச நேரம் உக்காரலாம்!

    சரி வா. வீட்ல போயும் என்ன பண்ணப் போறோம்?

    இருவரும் போய் சிறிய மரத்தின் கீழ் உட்கார்ந்தார்கள். புல்பரப்பு இதமாக இருந்தது. கைகளை தலையின் பின்புறம் பின்னியபடி தேவேந்திரன் கால்களை நீட்டிப் படுத்தான். அப்பாடா என்றிருந்தது. கடற்புரத்தில் இருந்து மெல்லிய காற்று வந்து கொண்டிருந்தது. நீண்ட கடற்கரைச் சாலை, வாகனக் குறுக்கீடுகள் இன்றி மந்தகாசமான சித்திரம் போல் காட்சி அளித்தது.

    மந்தைவெளி செயிண்ட் மேரி தெருவில் இருக்கும் தன்னுடைய வீட்டில் தேவேந்திரன் நுழைந்தபோது மணி நான்கு இருபதாகி இருந்தது. ஹாலில் விளையாடிக்கொண்டிருந்த அவனின் மகனும் மகளும், அப்பா வந்தாச்சு அப்பா வந்தாச்சு என்று உரக்கக் கத்தியபடி அவனை நோக்கி ஓடி வந்தார்கள். மறு விநாடியே ஹாலில் தேவேந்திரனின் மனைவி செல்வராணியும் தோன்றினாள்.

    அப்பா அப்பா, நாங்கள்ளாம் டி.வி.யில் பாக்யராஜ் பார்த்தோமே...

    ரஜினிகூட காட்டினாங்கப்பா...

    என்னங்க- ஸ்கூட்டர் இல்லாமே இப்படி நடந்து வர்ரீங்க?

    ஹும்... ஸ்கூட்டரை காயலான் கடையில் போட்டுட்டேன். அதனாலே நடந்து வரேன். இவ ஒருத்தி...

    இல்லையே. உங்க தம்பிங்க ரெண்டு பேரும் அவங்க அவங்க ஸ்கூட்டர்ல அப்போவே வந்துட்டாங்களே... அதனாலே கேட்டேன்...

    அவனுங்க வருவானுங்க. பக்கத்ல ஆபீஸ். எங்சு பேரிஸ் கார்னர் ஏரியான்னா சும்மான்னு நெனைச்சியாவார் நடந்த இடம் மாதிரி இருக்கு போய் பாரு...

    டி வியிலதான் பாத்தோமே...

    அதுசரி... வீட்ல எங்கே யாரையும் காணோம்?

    அந்த இந்திரா நகர் பொண்ணைப் பாக்கறதுக்கு பத்து நிமிஷம் முன்னாடிதான் கிளம்பிப் போனாங்க...

    ஹும்... அடாது மழை பெஞ்சாலும் விடாது போயிடுங்கள் போலிருக்கு! ஒரு பொண்னணப் பாக்கிறதுக்கு இப்படி எல்லா சனியன்களுமா போகணும்?

    உங்க முதல் தம்பியும் குழந்தையும் போகலை. குழந்தையை அழைச்சுக்கிட்டு அவர் அடுத்த தெரு ப்ரண்ட் வீட்டுக்குப் போயிருக்கார். ரேவதி மட்டும் அவங்ககூட இந்திரா நகர் போயிருக்கா...

    தேவேந்திரன் களைப்புடன் சோபாவில் சாய்ந்து உட்கார்ந்தான். தொலைக்காட்சிப் பெட்டியில் இறந்த பிரமுகரின் பூதவுடலைக் காட்டிக் கொண்டிருந்தார்கள்.

    ராணி... முதல்ல அந்த டி.வி. சனியனை ஆஃப் பண்ணித் தொலை. தலைவலி எனக்கு மண்டையைப் பிளக்குது...

    செல்வராணி போய் தொலைக்காட்சி இயக்கத்தை அணைத்தாள்.

    சூடா காப்பி கொண்டு வந்து தரட்டுமா?

    இரு இரு. ஒரு பத்து நிமிஷம் போகட்டும். நடந்து வந்தது பயங்கர டயர்டா இருக்கு

    அவ்வளவு தூரம் எப்படிங்க நடந்து வந்தீங்க?

    உனக்கு ஜுரம் எப்படி இருக்கு?

    நல்லவேளை- அப்பவே விட்டுருச்சி

    பசங்க எப்படி ஸ்கூல்ல இருந்து வந்தாங்க?

    நான்தான் உடனே ரிஷா வச்சு அழைச்சிட்டு வந்துட்டேன்...

    டெலிபோனை சரி பண்றதுக்கு யாரும் வரலையே?

    இன்னிக்கி எப்படி வருவான்?

    இல்லாட்டி வந்துருவான்! இவனுங்களை நம்பி போன் வச்சுக்கறதுக்கு சும்மா இருந்துட்டுப் போகலாம். அதுசரி... எப்படி இதுகள் இந்தக் கலாட்டாவிலும் அந்தப் பெண்ணைப் பாக்கறதுக்குக் கிளம்பிப் போயிடுச்சுகள்... சொல்லி வைத்திருந்த அந்த டாக்ஸிக்காரனும்தான் எப்படி தைரியமா வண்டியை எடுத்திட்டு வந்தான்...?

    அந்த டாக்ஸிக்காரனெல்லாம் வரலை. சிந்தாதிரிப் பேட்டையில் இருந்து அவன் எப்படி வருவான்? பெண் வீட்டுக்காரங்களே அவங்களோட காரை அனுப்பிட்டாங்க...

    அடேங்கப்பா... அவங்களோட காரையே அனுப்பற அளவுக்கு வந்திருச்சா?

    - தேவேந்திரன் சில விநாடிகளுக்கு மௌனமாகிவிட்டான். அவனுக்குள் பொறாமை தீ பற்றி எரிந்தது.

    கார் வந்ததும் உங்க அப்பாவோட முகத்தைப் பார்க்கணுமே... ஓடிப்போய் முதல் ஆளா அவர்தான் ஏறி உட்கார்ந்துக்கிட்டார்...

    அவரை விடு. அந்த வெட்கங்கெட்டவன்களைச் சொல்லு. எம் பி.ஏ. மாப்பிள்ளைன்னதும் பெண்ணைப் பாக்கறதுக்கே காரை அனுப்பி வைக்கிறானுங்க பார். நல்லவேளை... பொண்ணையே இங்கே அனுப்பி வைக்காமே இருந்தானுங்களே...! ஆனா ஒண்ணுமட்டும் உறுதி ராணி: நானும் என் அனுபத்தில் பார்த்துட்டேன் இந்த மாதிரி மாமனார் வீட்டோட போய் இருக்கிற பசங்க எவனும் வாழ்க்கையில் சந்தோஷமா இருந்ததா சரித்திரமே கிடையாது. என்ன சொல்றே?

    நாம சொன்னா இந்த வீட்டில யார் மதிச்சுக் கேக்கறா? உங்கப்பாவுக்கு ரெண்டாவது மகனும் மூணாவது மகனும்தான் உசத்தி. நமக்குத்தான் இந்த வீட்ல மரியாதை இல்லையேன்னு தனிக்குடித்தனம் என்கிற பேர்ல ஒதுங்கிக்கலாம்னு பார்த்தாலும் முடியுதா? அதுவும் முடியலை. பெரியவர் உசிரோட இருக்கறப்ப ஒரு பிள்ளை மட்டும் தனியா போயிடறது குடும்பத்துக்கு பெரிய கௌரவ குறைச்சலாம்... சமயம் கிடைத்து செல்வராணியும் பொங்கிக் கொண்டாள்.

    பெரிய கௌரவ குறைச்சல். ஜாயிண்ட் பேமிலியா ஒரே வீட்ல எல்லாரும் ஒண்ணா வாழ்றோம்ங்கிற பிக்ச்சரைக் காட்டிக்கிட்டு... மனசுக்குள் இப்படி ஒருத்தருக்கு ஒருத்தர் பிடிக்காமே ஒருத்தரை ஒருத்தர் வெறுத்துக்கிட்டு வாழ்றதில் மட்டும் கௌரவ குறைச்சல் இல்லை போலிருக்கு. அது சரி ராணி... இந்தப் பொண்ணே முடிவாகி கல்யாணமும் ஆகி சந்துரு அவங்களோட வீட்டுக்குப் போயாச்சுன்னா அப்புறம் மாதா மாதம் அவனோட சம்பளப் பணம் யார் வீட்டுக்குப் போகும்?

    என்னைக் கேட்டா...? உங்க அப்பா வந்ததும் அவரையே கேளுங்க. சும்மா வாயை மூடிட்டு இருந்துடாதீங்க... முதல்லேயே எல்லாத்தையும் கட் அண்ட் ரைட்டா பேசிடணும்.

    ஆமா... அப்படி கட் அண்ட் ரைட்டாத்தான் எங்கப்பாகிட்டே பேசித் தொலைய முடியாதே... அதானே ப்ராப்ளம். பெரிய சர்வாதிகாரி மாதிரி அவரா ஒரு முடிவு பண்ணி ‘டிக்ளேர்’ பண்ணிச் சொல்லிடுவார். அதை எல்லாரும் கையைக் கட்டி நின்னு சரி சாமின்னு கேட்டுக்கணும். ஒருத்தரும் வாயைத் திறந்து அவரை எதிர்த்து ஒரு வார்த்தை சொல்லிட முடியாது. சே... இந்த மனுஷனுக்குப் பேர் அப்பா! இந்த இடத்துக்குப் பேர் தான் வீடு! சனியன்கள்... நம்ம வீடு மட்டும் தான் இப்படி இருக்கோ... இல்லை எல்லா பயல்களோட வீடுமே இப்படித்தானோ...?

    ஆயாசத்துடன் தேவேந்திரன் சோபாவில் கால்களை நீட்டிப் படுத்துக் கொண்டான். மறுபடியும் மறுபடியும் அவனுடைய மனத்தில் சந்துருவின் இந்தப் பெண் பார்க்கப் போயிருக்கிற விஷயமே சுழன்று கொண்டிருந்தது. பெண் வீட்டார் அவர்களின் செல்வத் தகுதியைக் காட்டி தூண்டில் போடுகிறார்கள். திருமண ஒப்பந்தங்கள் இந்த அடிப்படைகளில் தான் எழுதப்படுகின்றன. இது ஒரு பண்டமாற்றம். பண்டங்கள் பழகிப் போனதும் வசீகரங்கள் காணாமல் போய் விடுகின்றன. தேவேந்திரன் வாட்ச்சில் மணி பார்த்தான்.

    மணி சரியாக ஐந்து.

    "கொஞ்சம் சீக்கிரமா வீட்டுக்கு வந்துட்டாலும் பொழுது போக மாட்டேன்கிறது. பெண் பார்க்கப் போனதுகள்

    Enjoying the preview?
    Page 1 of 1