Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Theruvil Oruvan
Theruvil Oruvan
Theruvil Oruvan
Ebook152 pages1 hour

Theruvil Oruvan

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Family Based Fiction Written By Stella Bruce
Languageதமிழ்
Release dateJun 2, 2019
ISBN9781043466756
Theruvil Oruvan

Read more from Stella Bruce

Related to Theruvil Oruvan

Related ebooks

Related categories

Reviews for Theruvil Oruvan

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Theruvil Oruvan - Stella Bruce

    தெருவில் ஒருவன்

    அவன் இந்தத் தெரு வழியாக அடிக்கடி போகிறவன்தான். பல நாட்கள் மேலே சட்டை இல்லாமல் வேஷ்டி மட்டும் கட்டிப் போவான். வாயில் எப்போதும் சிகரெட் அல்லது பீடி புகைந்து கொண்டிருக்கும். எப்போதுமே கொஞ்சம் வேகமாகத்தான் செல்வான். நின்று யாரோடும் பேசுவதில்லை. அவன் பாட்டுக்கு இயல்பாக போவான் வருவான். யாரிடமும் பேசவே மாட்டான் என்பது போலவும் அவனுடைய தோற்றம் இராது. சாதாரணமாகத்தான் இருப்பான். ஆனால் சுத்தமாக இருக்கமாட்டான். அவனின் அசுத்தமே - அவனை மேலும் கறுப்பாகக் காட்டியது. சில சமயங்களில் தெருவின் மறுபுறம் இருக்கிற கால்வாயை நோக்கிப் போவான். உயர்ந்த செடிகளின் மறைவில் மலம் கழிக்க அமர்வான். அப்போதும்கூட பீடிப் புகையோ சிகரெட் புகையோ மேலே மிதந்து சென்று கொண்டிருக்கும்.

    அன்றைக்கும் ஒரு நாள் எப்போதும் போல நீண்ட தெருவில் நடந்து வந்து கொண்டிருந்தான். அப்போது ஒரு வீட்டின் காம்பவுண்டு சுவர் வழியாக சில எச்சில் இலைகள் வெளியில் போடப்பட்டன. உடனே இரண்டு ஆடுகள் ஆர்வத்துடன் இலைகளை நோக்கி ஓடி சுவைக்கத் துவங்கின. நாய் ஒன்றும் வேகமாக ஓடி இலைகளை ஆடுகள் தின்று விடாதபடி குறுக்கிட்டது. ஆடுகள் தயங்கி நின்றன. இலைகள் வேண்டாம் என நகர்ந்து போய் விடவும் முடியவில்லை. நாயிடம் இருந்து இலைகளை மீட்கவும் தெரியவில்லை. நாயும் இலைகளை ஆடுகள் பறித்துவிடாமல் மிகக் கவனமாய் மீதியிருந்த உணவுகளை அவசர அவசரமாக நக்கிக் கொண்டிருந்தது. அந்தக் காட்சியை பீடி புகைத்தபடி பார்த்துக்கொண்டே வந்தவன் சட்டென நின்றான். கையால் மார்பைத் தடவியபடியே கவனித்தான். பின் சுற்றிலும் பார்த்தான். ஒரு பெரிய பலாப்பழம் அளவுள்ள கல் தெருவின் மறு ஓரத்தில் கிடந்தது. அவன் எந்த வேகமும் காட்டாமல் நிதானமாய் நடந்து போய் குனிந்து இரண்டு கைகளாலும் கல்லை எடுத்தான். பீடி அவனுடைய வாயில் புகைந்து கொண்டிருந்தது. கல்லைத் தலைக்கு மேல் தூக்கி உயர்த்தியபடி அவன் நாயை நோக்கிப் போனான். நாயின் கவனம் எச்சில் இலைகளில் கிடைத்த உணவுகளிலேயே இருந்தது. அவன் நாயின் பின்னால் போய் நின்றான். அப்போதும் நாய் அவனைக் கவனிக்கவில்லை. அவசரப்படாமல் நிதானமாக குறி பார்த்து நாயின் தலையின் மேல் அந்தக் கல்லைப் போட்டான். ஆடுகள் சிதறி ஓடிவிட்டன. நாய் கொஞ்சங்கூட ஓசை எழுப்பவில்லை. அந்த இடத்தில் விழுந்து பரிதாபமாய் கால்களை உதைத்தது. அவன் குனிந்து கல்லை எடுத்தான். மறுபடியும் நாயின் தலையில் ஓங்கிப் போட்டான். நாயிடம் இருந்து சப்தமே வரவில்லை. உதைத்து இழுத்துக் கொண்டிருந்த அதன் கால்கள் ஓய்ந்தன. அவன் மறுபடியும் மறுபடியும் கல்லைத் தூக்கித் தூக்கி நாயின் தலையில் போட்டான். தெருவில் நின்றோர் போனோர் யாரும் குறுக்கிடாமல் அதிர்வுடன் அவனுடைய செய்கையைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். அவன் கல்லைத் தூக்கி சுவர் ஓரமாய் எறிந்தான்.

    கிடந்த நாயை வாலைப் பிடித்துத் தூக்கி துணி துவைப்பது மாதிரி தரையில் பொத் பொத்தென்று போட்டு அடித்தான். பின் வாலைப் பிடித்து இழுத்தபடி கால்வாய் ஓரமாய் போனான். கவண்கல் சுழற்றுவது போல நாயின் உடலை அதன் வாலைப் பிடித்துப் பலமுறை சுற்றியபடியே அதை கால்வாயில் தேங்கியிருந்த சாக்கடை நீரில் வீசி எறிந்தான். நாயின் உடல் சாக்கடை நீரில் மூழ்கி மறைந்தது. அதன் பின் பீடி புகைத்தபடி சிறிது நேரம் நின்றான். இரண்டு உள்ளங்கைகளிலும் படிந்திருந்த தூசியைத் தட்டி உதறி விட்டு மெதுவாக நடக்கத் தொடங்கினான். அண்ணா; இன்னிக்கு நைட் ஒன் கனவுல அந்த நாய்தான் வரப்போகுது... இது அவனுடைய காதில் விழுந்ததோ இல்லையோ; ஒன்றும் சொல்லாமல் சட்டை அணியாத மார்பைத் தடவிக் கொண்டு மௌனமாய் நடந்தான். இப்போதும் தெரு வழியாக அடிக்கடி அவன் பீடியோ சிகரெட்டோ புகைத்தபடி போகிறான் வருகிறான். நாயை கல்லைத் தூக்கிப் போட்டுக் கொன்ற நாள் அவனுக்கு நினைவில் இருக்கிறதோ இல்லையோ...

    வேறு மாதிரியான மனிதர்கள்

    ஆண்களில் முக்கால்வாசிப் பேருக்கு இரண்டு பெண்டாட்டிகள் இருந்தால் தேவலை என்றிருக்கும் போலிருக்கிறது! பின்னே என்ன? எந்த கைரேகை பார்க்கிற கில்லாடியிடமும் போய் ஒரு ஆண் பிள்ளை கையைக் காட்டிக் கொண்டு நிற்கட்டும் - உடனே அவன் ஒருத்தர் பாக்கி இல்லாமல் எல்லோரிடமும் சகட்டு மேனிக்கு ‘ஒனக்கு ரெண்டு தாரயோகம் இருக்கு ஓய்...’ என்று சும்மாவாவது சொல்லி வைத்து விடுவான். உடனே கையைக் காட்டியவனின் ரெண்டு கண்ணிலும் ஒரு சந்தோசம் நிலா வெளிச்சம் போலத்தான் ஒரு நிமிஷம் வந்து போகுமே - அந்த லட்சணத்தில் தெரிஞ்சு போகும் அவனின் உள் மனசு. ஆனாலும் உண்மையை ஊர் அறிய மனசைத் திறந்து காட்டி விடுவான்களா பயல்கள்? மாட்டான்கள்...

    ‘அட போய்யா நீ ஒண்ணு: இன்னைக்கு இருக்கிற விலைவாசியில ஒருத்தியை வச்சிக் காப்பாத்தறதுக்கே தாளம் போடுதாம் - ததிங்கிணத்தோம்னு... இதுல போய் இன்னொருத்தியையும் கட்டிக்கிட்டா அம்புட்டுதான் என் நிலைமை; அஞ்சாறு மாசத்ல மஞ்சக் கடுதாசிதான் குடுத்தாகணும்...’ என்பான்கள், ஒரு புறங்கையை நல்லா தரையில் ஊன்றியபடி. ஏதோ கைரேகை பார்க்கிறவன் சொல்லக்கூடாததை சொல்லி விட்டாற் போலத்தான் ஒரு பார்வை வேறு கண்களில்! ஜோதிடர் அவரின் பங்குக்கு ‘இதை நீ சொல்லி என்னப்பு பிரயோசனம்?’ என்பார். அவரும்தான் லேசுப்பட்டவர் இல்லையே... இவன்களின் கண்ணையெல்லாம் நோண்டிப்பிடுவாரே நோண்டி!

    நான் சொல்லாமே வேற யாரு ஓய் சொல்றது? இந்தப் பயல்கள்.

    அந்த பிரம்மா சொல்லணும். ஒன் தலையில எழுதறவன் அவன் தான்- தெரிஞ்சிக்க- ஜோதிடர்.

    அப்ப நெசமாவா எனக்கு ரெண்டு தாரம்னு சொல்றே?

    பொய் சொன்னா நீயென்ன எனக்கு எட்டணா ஜாஸ்தியாவா குடுத்திடப் போறே?

    ஆமா... பிரம்மா எழுதினா சரியாயிடுமாக்கும்... அதுக்கு என் பெஞ்சாதி சரி சொல்ல வேணாமா? நீ இப்படி எனக்கு ரெண்டு தாரம்னு சொன்னது தெரிஞ்சாலே போதும் - பெரிய்ய கட்டையை எடுத்துப்பா - ரெண்டு கையிலேயும்... ஒனக்குத் தெரியாது என் பெஞ்சாதி பத்தி...

    ஆமா, உன் பெஞ்ஜாதி ஒருத்திதான் கட்டையை எடுத்துப்பா. ஊர்ல இருக்கிற மத்தவன் பெஞ்சாதியெல்லாம் ஆரத்தித் தட்டைத்தான் எடுத்துப்பா! நீயும் ஒங்க அண்ணன்காரனைப் போலத்தானே விவரம் இல்லாமே பேசறே - எவன் பெஞ்சாதியா இருந்தாலும் சரி - தன் புருசன்காரனுக்கு இன்னொருத்தி இருக்கானு தெரிஞ்சா முதல்ல ஊரைக் கூட்டி கத்தி, கலாட்டாதான் பண்ணுவா. ஆனா அந்தக் கலாட்டால்லாம் எத்தனை நாளைக்குன்னு நெனைக்கிறே...? எண்ணி நாலே நாலு நாளுக்குத்தான்.

    அவளைக் கூட்டியாந்து என் கண்ணு எதிரே நிக்காதே. எங்கேயாவது கொண்டு போய் கண் மறவா வச்சிக்க...ன்னு அப்புறம் ரெண்டு நாளைக்கு குப்புற கிடந்து ஒப்பாரி வச்சிட்டு வாயை மூடிப்பாளுங்க. ஏன்னு கேளு; அதுக்கும் மேல புலம்பி கலாட்டால்லாம் பண்ணினா- அவ பாடுல்ல பெரிய பாடா போயிடும்...! ரெண்டு தாரம்னு நான் சொல்றது - ஒனக்கு பொம்பளை யோகம் இருக்கு என்கிறதைச் சொல்றதுக்குத்தான். ஏன்னா- ரெண்டாவதா வர்றவ பெஞ்சாதியாத்தான் இருக்கணும்னு கட்டாயம் எதுவும் - கிடையாதே... இப்படியெல்லாம் என் தாத்தாவிற்கு யாரும் ஜோசியம் சொன்னார்களா இல்லையா என்பதெல்லாம் எனக்குத் தெரியாத சமாச்சாரம். ஆனால் மனைவி என்ற அந்தஸ்தில் இல்லாத தங்கமணி என்ற பெண்மணியுடன் நெருக்கமான சிநேகம் இருந்தது மட்டும் ஊர் பூராவும் தெரிஞ்சதுதான், ஊர் பூராவும் தெரிஞ்ச விசயம் வீட்டிற்குத் தெரியாமல் போயிடுமா? அதில்லை பெரிய விசயம். தாத்தாவின் இந்த தங்கமணி சமாச்சாரம் பேரப் பிள்ளைகளாகிய எங்கள் வரைக்கும் வந்து சேர்ந்து விட்டது. விசயம் முதன் முதலில் வீட்டிற்குத் தெரிஞ்சதும் எங்கள் பாட்டி செஞ்ச முதல் காரியம் தாலியைக் கழட்டிக் கிடாசியதுதானாம். ஆனால் ஒண்ணு! தன் புருசனுக்கு இன்னொருத்தியும் இருக்கிறாள் என்கிற கோபத்திலெல்லாம் பாட்டி தாலியைக் கழட்டி வீசவில்லையாம். பேரப் பிள்ளைகளே வந்துவிட்டார்கள். மூத்த பேரனுக்கும் (நான்) வயது பத்து ஆகிவிட்டது. இப்பப் போய் இந்த மனுசருக்கும் புத்தி இப்படி தட்டுக் கெட்டுப் போகிறதே என்ற அவமானத்தில்தான் தாலியைக் கழட்டி வீசிப் போட்டாளாம். பாட்டி பாவம் - பேரப் பிள்ளைகளிடம் அவளுக்கு அப்படியொரு பிரியம். ஆனால் ஒண்ணு! எங்கள் மேல் பிரியம் வைத்திருந்ததில் தாத்தாவும் பாட்டிக்கு குறைந்தவர் கிடையாது. அப்படிப்பட்ட பிரியம் இருந்ததால்தான் பேரப் பிள்ளைகளையெல்லாம் தாத்தா அந்தத் தங்கமணியின் வீட்டுக்குக் கூட்டிக்கொண்டு போனது. இப்படிப்பட்ட ஒரு மனுசர் வேறு எங்கேயாவது இருப்பார்களா? எங்கேயும் இருக்கமாட்டார்கள். ஏனென்றால் அவ்வளவு பெரிய விசயம் – ஒருத்தர் தன்னுடைய வைப்பாட்டியின் வீட்டுக்கு தன் பேரப் பிள்ளைகளையும் கூட்டிக்கொண்டு போவது...

    முதலில் யாருக்குமே தெரியாமல் இருந்த சமயத்தில் தாத்தாவும் தலையில் துண்டைப் போட்டுக்கொண்டு இருட்டின அப்புறம் தங்கமணியின் வீட்டுக்குப் போய் வந்திருப்பார் போலிருக்கு. ஆனால் சங்கதி தேங்காய் உடைத்த மாதிரி ஆகிவிட்ட பிறகு எதற்கு அப்படி

    Enjoying the preview?
    Page 1 of 1