Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Kaalam
Kaalam
Kaalam
Ebook281 pages1 hour

Kaalam

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

இறப்பதற்காகவே பிறந்து, காலச்சக்கரம் சுழலும் ஒவ்வொரு நொடியும் நம்பிக்கையை மட்டுமே முதலீடாய் கொண்டு நடத்தும் சாகச பயணத்தில், காரண காரியங்கள் எங்ஙனம் அறிந்து...! எங்கே...? எப்படி...? யாருடன் சேர்ந்து பயணிக்க...! அல்லது எக்கணம் எங்கே இறங்கி திசை மாற...? எதையும் அடையாத இலக்கில்...! யாரிடம் கேட்பது...? பலரின் முடிவுரைகள் தலைமுறைகள் கடந்தும் இத்தேசத்தில் ஒரு முறைக்கூட நினைக்கும் காலம் கைகூடுவதில்லை... காலத்தின் ஆழ்ந்த நித்திரையில்...!?!

ஒவ்வொரு புதிரையும் அவிழ்க்கும் நொடிகளில் கிடைக்கும் பரவச நிமிடங்கள் அதை கடந்த பின்னர் நினைத்தாலும் கைகூடுவதில்லை என்பதோடு அடுத்த புதிரில் சிக்கி தவிக்கும் நொடியில் யாதொன்றின் மேலும் மனம் லயிப்பதில்லை... ஆனால் வாழ்வில் எதிர்பாராதவிதமாக நடந்த ஒரு கோர விபத்தில் சிக்கிய மக்களை பற்றிய ஒரு குறுநாவல் இது. மக்களின் மனசாட்சியினை உலுக்கிய ஒரு உண்மை கதையை தழுவி எழுதப்பட்டது இந்த குறுநாவல்.

Languageதமிழ்
Release dateDec 31, 2022
ISBN6580159709334
Kaalam

Read more from Rakesh Kanyakumari

Related authors

Related to Kaalam

Related ebooks

Reviews for Kaalam

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Kaalam - Rakesh Kanyakumari

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    காலம்

    Kaalam

    Author:

    ராகேஷ் கன்யாகுமரி

    Rakesh Kanyakumari

    For more books

    https://www.pustaka.co.in/home/author/rakesh-kanyakumari

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    பகுதி-1

    பகுதி-2

    பகுதி-3

    பகுதி-4

    பகுதி-5

    பகுதி-6

    பகுதி-7

    பகுதி-8

    பகுதி-9

    பகுதி-10

    பகுதி-11

    பகுதி-12

    பகுதி-13

    பகுதி-14

    பகுதி-15

    பகுதி-16

    பகுதி-17

    பகுதி-18

    பகுதி-19

    பகுதி-20

    பகுதி-21

    பகுதி-22

    பகுதி-23

    பகுதி-24

    பகுதி-25

    பகுதி-26

    பகுதி-27

    பகுதி-28

    பகுதி-29

    பகுதி-30

    பகுதி-1

    தவறாக போகும் வாய்ப்புள்ளவைகள் அனைத்தும் தவறை நோக்கியே தொடக்கம் முதல் பயணிக்கும். அதை நிறுத்தும் எந்த கருவியும் இதுவரை மனிதர்களின் கையில் இயற்கை கொடுக்க பிரியப்படவில்லை. அப்படி பிரியப்படும் காலம் வரும் என்பதற்கு இதுவரை ஒரு சமிக்ஞை கூட அது காட்டியதும் இல்லை.

    அந்த அழகிய குளிர் நாளின் முள்முனை நடுக்கத்தில், வீட்டின் உள்ளே கட்டப்பட்டிருந்த பசுவின் முனகல் சத்தம் ஏனோ பால் கோவிந்த் யாதவின் தூக்கத்தை கொஞ்சம் கெடுக்க தொடங்கிய நொடியில், இரண்டாவது பசுவும், கொஞ்ச நாட்களுக்கு முன்னர் அது ஈன்ற கன்றின் சத்தத்திலும் எதோ வித்தியாசம் தோன்றியது.

    பால் கோவிந்த் எழுந்து எப்போதும் போல லாந்தர் விளக்கை கொஞ்சம் ஏற்றி வைத்துக்கொண்டு பசுக்கள் கட்டியிருந்த அறையின் உள்ளே நுழைந்தார். அவைகள் அனைத்தும் மிரட்சியுடன் எதோ ஒரு முன்னறிவு கிடைத்ததை போல விழித்து விழித்து மிரட்சியுடன் இவரை நோக்கியது. கொஞ்சம் தயக்கத்துடன் ஒவ்வொரு பசுவையும் தடவி கொடுத்தார். காடி வெள்ளம் மீதி தொட்டியில் இருந்தது. எருமைகள் அமைதியாக படுத்திருந்தது.

    வைக்கோலும் அதிகமாகவே மீதி கிடந்தது. ஆனால் சாப்பிடவில்லை. கொஞ்சம் வைக்கோலை கையில் எடுத்து சூலி பசுவின் வாய் அருகில் கொண்டு நீட்டினார். அது தலையை ஆட்டி சாப்பிட மறுத்தது.

    பேத்தியை அழைத்தார்... கரீமா, தூக்கத்தின் ஆழத்தில் எங்கயோ ஒலித்த தாத்தாவின் குரலை கேட்டு ஆவேசம் கொண்டு எழுந்து அமர்ந்தவள், மீண்டும் கேட்ட குரலிலிருந்த அழுத்தத்தால் உடனே வாசல் படியில் தோன்றினாள்.

    என்ன தாத்தா...

    கொஞ்சம் புண்ணாக்கு மட்டும் ஒரு கூடையில் எடுத்திட்டு வா... எல்லாருக்கும் வயிறு பசிக்கிறது போல. அதிகாலையிலேயே இப்படி கத்தி கூச்சல் போடுதுங்க.

    பேத்தி மறுப்பேதும் சொல்லாமல் தாத்தாவின் கட்டளைக்கு செவி சாய்த்து தூக்க கலக்கத்திலேயே அவர் சொன்னது போல கலக்கி மாடுகளுக்கு காட்டினாள்.

    உண்மையில் இந்த வருடம் குளிர் ஜாஸ்தி தான். கடந்த இரண்டு வருடங்கள் கம்பளி போர்வை மற்றும் ஒரு ரஜாய் போதும். ஆனால் இந்த வருடம் வேறு வழி இல்லாமல் வெப்ப உள்ளாடை வரைக்கும் போட வேண்டியிருந்தது. காலையில் எழுந்து பார்த்தாலும் பக்கத்தில் நிற்பவர்கள் கூட தெரிவதில்லை.

    பசுவின் சத்தம் கொஞ்சம் கம்மியானது. கழுத்தின் மணி ஓசை மட்டுமே கேட்க தொடங்கியதும் பேத்தி படுக்க போனாள். பால் கோவிந்த் அமைதியாக ஒரு பீடியை மூலையிலிருந்த இரும்பு அலமாரியின் மேல் இருந்ததை எட்டி எடுத்தார்.

    அந்த வருடத்தின் கார்த்திகை மாதம் தொடங்கி இரண்டு நாட்கள் தான் ஆனது. அதற்குள் இவ்வளவு குளிர். தூரத்தில் மனைவி ஜெய் தேவி குளிர் குறைய எரிந்துகொண்டிருந்த அடுப்பின் அருகில் கொஞ்சம் கதகதப்புடன் படுத்திருந்தாள். மருமகன் சுபம் யாதவ் போன வாரம் சண்டை போட்டு கிளம்பியப்பின், இதுவரைக்கும் கணவனிடம் வீம்புடன் பேசாமலே இருக்கிறாள். வீட்டில் இருக்கும் எருமைகளை, அவளை போல பார்ப்பதற்கு இனி ஒரு ஆள் இந்த வீட்டில் கிடையாது. அவள் குளிப்பாட்டுவதை காணும்போது ஒருவேளை எருமை வெள்ளை நிறம் ஆகிவிடுமோ என்ற சந்தேகம் தோன்றிவிடும். அவ்வளவு நேர்த்தி. அவ்வளவு விருப்பத்துடன், அவ்வளவு கருணையுடன். உண்மையில் அந்த பாலின் நிறத்து மனம் உடையவள். ஆனால் பால் நுரை போல அவ்வப்போது இப்படி பொங்கிய படி இரண்டு மூன்று நாள் சுற்றியப்பின் அமைதியாக சூடு ஆறவைத்த பால் மேல் படியும் பாலாடை போல மௌனமாகி விடுவாள். பின்னர் அவளை சமாதானம் செய்ய ஒரு சொம்பு லசி கேட்டாலே போதும். ஒருமுறை கூட இவ்வளவு நாள் வாழ்கையில் லசி கேட்டு இல்லை என சொன்னதே இல்லை அவள். காலையில் இரண்டு சொம்பு பால் கேட்டால் சில நாட்கள் ஒரு சொம்புடன் இல்லை என்பதை சொல்லி அதை பேரப்பிள்ளைகளுக்கு கொடுப்பது தெரியும்.

    ஏனோ இருவருக்குள்ளும் லசி ஒரு மறைமுக அன்பு பரிமாற்ற உணவு திருமணம் நடந்த நாள் முதலே. சிறு பிராயத்தில் லசி குடித்து முடித்தவுடன் உருவாகும் வெண் மீசையினை, அவளது நாக்கின் நுனியால் நக்கி உண்ண சொல்லும்போதெல்லாம் தவிர்த்து விடுவாள் கூச்சத்தால். அதை நினைத்தபோது சிரிப்பு தான் வந்தது பால் கோவிந்துக்கு. சாந்தமாக தூங்கிக்கொண்டிருந்த ஜெய் தேவியின் முகத்தை உற்று நோக்கியவர் அமைதியாக தன் கயற்று கட்டிலின் மேல் சாவதானமாக ஏறி படுத்தார். ரஜாய் எடுத்து தலை வரைக்கும் முழுமையாக மூடியபோதும் குளிர் எதோ சிறிய ஓட்டையின் வழியே உள்ளே நுழைந்துக்கொண்டே இருந்தது. அதையும் மீறி தூக்கம் ஆரத்தழுவியது.

    எதோ, என்னவென்றே அறியமுடியாத ஒரு சங்கடம் மனதை வருத்தியது.

    ***

    அப்பா… இன்னைக்கு எப்போ வருவீங்க என்ற பேத்தி ரேணுகாவின் தலையை வாஞ்சையுடன் கோதியபடி வீட்டின் வாசல் கதவை தாண்டி கிளம்பினார் குலாம் தஸ்தகிரி..

    அப்பா போவதையும் அம்மாவின் முகத்தையும் மாறி மாறி பார்த்துக்கொண்டே இருந்தவள் அடுத்த வீட்டில் வாழும் திவ்யாவை தேடி ஓடி மறைந்தாள்.

    குலாம் தஸ்தகிரி மெதுவாக அந்த ரயில்வே காலனியை கடந்து ரயில் நிலையத்தை நோக்கி மெதுவாக நடக்கத்தொடங்கினார். மேகம் கொஞ்சம் மூட்டமாகவே இருந்தது. இரண்டு கிலோமீட்டர் என்பது கொஞ்ச நாட்கள் முன்பு வரைக்கும் மிக பக்கமாக தெரிந்தது இப்போதெல்லாம் இருபது கிலோமீட்டர் போல தோன்ற செய்கிறது. வயதாவதை உடம்பு மறக்காது போல, உள்ளம் மறந்தாலும். கல்பனா என்றுமே எதையும் சொல்லமாட்டாள் இவர் வீட்டை விட்டு கிளம்பும்போது.

    பேத்தி, தாத்தாவை அப்பா என்று கூப்பிடுவதை இல்லையென்றால் உடனே தடுத்திருப்பாள். பல முறை உருட்டி, மிரட்டி, அடித்தாலும் ரேணுகா தாத்தாவை அப்பா என்றே அழைப்பது பல விதங்களில் கல்பனாவுக்கு சங்கடத்தை தான் கொடுக்கிறது.

    அவள் சின்ன குழந்தை. அவளை போய் ஏன் எப்போதும் அதற்கு திட்டுகிறாய் என்பார் குலாம்.

    ஆமா… ஆமா… நாலு வயசு அப்படின்னா யாரு அப்பா, யாரு அம்மா அப்படின்னு தெரியாமல் போற வயசா. இதை அடுத்த வருசம் வாற பிறந்த நாட்களுக்கு முன்னமே மறக்க வைக்கணும். அவர்களுடைய தினசரி பேச்சை யோசித்துக்கொண்டே வந்த குலாமை, "சாப், என்ன…? இன்னைக்கு லேட் ஆயிடிச்சு போல…! சேரியின் திசையில் இருந்து வந்த குரலை நோக்கி திரும்பினார். அங்கே சலீம் பாய் சுவரில் சாய்ந்து நின்றுக்கொண்டே பல் விளக்கிக்கொண்டு இருந்தார்.

    ஆமா… இப்போ முன்னது போல நடக்க முடியல… சலீம்.

    ம்ம்… இப்போ பார்த்தாலும் பின்னால் மோப்பம் புடிச்சு வாற கன்று போல பொண்ணுங்க உங்களை தேடி வரும்… என்றவாறே சிரித்தார்.

    குலாம் அதை கேட்டு கொஞ்சம் கர்வத்துடனே… என்ன சலீம் … காலையிலே வா… ஆமா இஸ்திமாவுக்கு இந்த முறை கடை போட தொடங்கவில்லை?

    இல்ல… சாப். கொஞ்சம் காசு கைமாற்றாக கேட்டிருக்கேன். இன்றைக்கு அதை வாங்கிய பிறகு தான் அதை பற்றி முடிவு எடுக்க வேண்டும். ஆக்ரா வரைக்கும் போய் கொஞ்சம் பொருட்களும் எடுக்க வேண்டியது இருக்கு.

    இருவரும் பேசிக்கொண்டிருக்கும்போதே ரயில் ஓன்று வேகமாக பக்கத்தில் இருந்த ரயில் நிலையத்தில் கிளம்பி வேகம் எடுக்க தொடங்கியது. இவர்கள் நின்ற இடம் கொஞ்சம் குலுங்கியது.

    இது எந்த ரயில் இந்நேரம் வாரான்…?

    கோரக்பூர் - மும்பை ரயில். இப்போ தான் போறான் போல. நேற்று கொஞ்சம் பனிமூட்டம் அதிகம் தானே. ம்ம்… மாதம் தொடங்கியது தான். இப்போவே இவ்வளவு… இந்த வருசம் கடுமையான பனிதான் போல... என்றவாறே குலாம் கையை காற்றில் அசைத்து காட்டிவிட்டு ரயில் நிலையம் நோக்கி முன்னேறினார்.

    அனைத்து ரயில்களும் இனி நேரம் விடிந்து தான் வரிசையாக வரத்தொடங்கும் என்பதை உணர்ந்து வேகமாக நடந்தார்.

    ***

    தூரத்தில் தெரிந்த முதல் பொன் கதிர் அஸ்மிதா தொலமி-யின் காதுகளை ஊடுருவிய சிவப்பாக்கியப்படி முகத்தில் பரவி ஜொலித்தது. அவள் முன்னால் நின்று அவளது தோள்களின் மேலாக கைகளை போட்டுக்கொண்டு, இருவீட்டின் இடையே இருக்கும் ஒடுங்கிய சந்து போன்ற இடத்தில் நின்றவாறு பேசியது அவர்களது காதுகளுக்கு மட்டுமே கேட்டது. ஈஸ்வர் லால் கக்க்ஷபதி-யின் நீள நீல நிற கண்கள் அவளை மீண்டும் மீண்டும் நிலையிழக்க வைத்துக்கொண்டே இருந்தது.

    பக்கத்து வீடுகளில் வாழ்ந்தபோது உருவாகாத காதல் எதோ ஒரு வழிச்சாலையில் வழி கேட்க, பின்னாலிருந்து அழைத்தபோது திரும்பிய இவனது முகத்தை பார்த்தவுடனே இனம்புரியாத ஒரு புன்முறுவலும், அதேநேரத்தில் முதன்முதலாக நெஞ்சு புடைக்கவும் செய்தது. பின்னர் அவனை கேட்டு, தேடிய வழிக்கு போவதற்கு பதிலாக இருவரும் பேசிக்கொண்டே வேறு ஏதோ வழியில் நடந்து நடந்து... இன்று இந்த குறுகிய சந்தில்... நல்லதொரு குளிர் நாளில்... கொஞ்சமாய் எழும்பி சூரியன் சொன்ன வணக்கத்தை ஏற்றுக்கொள்ளும் மகிழ்ச்சியில்...

    ஈஸ்வர் லாலுக்கு இவளது அழகிய மூக்குத்தி மேல் அவ்வளவு பித்து. அருகில் இருக்கும் நிமிடங்கள் ஒவ்வொரு முறையும் சுட்டுவிரலால் தொட்டு விளையாடுவது. ஒருமுறை கையை பிடித்து நெஞ்சின்மேல் வைத்தவள் இதை கூட கசக்கிக்கொண்டு இரு. ஆனால் இனிமேல் மூக்கின் மேலே கை வைக்காதே. வலிக்குது... மூக்கு வீக்கம் ஆயிடும் போல தெரியுது. தயவுசெய்து... ப்ளீஸ் பா... என்றாள் சிரித்துக்கொண்டே.

    இந்த காலை வேளையிலும் சுமார் நூறு முறைக்கு மேல் மூக்குத்தியை தொட்டு விட்டான்... இது என்ன புது விதமான பைத்தியம்... ஒரு நாளும் தீராது போல...

    இருவரது புன்முறுவல்களும் கொஞ்சம் கொஞ்சமாய் மறைந்தது. ஈஸ்வர் என்ன பண்ண திட்டம். வீட்டில் அம்மா தற்கொலை பண்ணிய நிமிடம் முதல் குடும்பத்தில் அவள் பேயாக அனைவரையும் கொல்ல தக்கம் பார்த்து நிற்கிறாள் என்று பூசாரி சொன்ன நாள் முதல் அஸ்மிதாவின் திருமணம் பற்றி தான் ஒரே பேச்சு.

    அவளும் முடியுமட்டும் முயன்று பார்க்கிறாள். அவளது பேச்சு யாரும் கேட்பதாக தெரியவில்லை. அப்பாவும் பூசாரி சொல்வதை தான் திரும்ப திரும்ப சொல்வது தான் அவர் மேலான கோபம். அம்மா எப்போதும் நமக்கு துணையாக தான் இருப்பார் இறந்தாலும்.

    வீட்டில் தினமும் சண்டை. நான்கு தங்கைகளையும், ஒரே தம்பியையும் காலையில் எழுந்து குளிப்பாட்டி, உணவு கொடுத்து பள்ளிக்கு கொண்டு விடுவது வரைக்கும் தனியாக தான் செய்ய வேண்டும். உண்மையில் ஈஸ்வர் லாலின் நெருக்கம் அல்லது அந்த அன்பு மட்டும் தான் அவளுக்கு கிடைக்கும் ஆகப்பெரிய நல்நிமிடங்கள். அந்த சிறிய ஒரு தித்திப்பும், சந்தோசமும் வேண்டி தான் இவ்வளவு பெரிய துணிச்சலுடன் அவனை அதிகாலையில் காண கிளம்பி வர சொன்னாள். அவனுக்கும் உள்ளுக்குள் பயம் இருந்தாலும் அவளது உதடுகள் காதுகளின் கீழாக ஒற்றி எடுக்கும் அந்த நொடி தருணத்துக்காக மட்டுமே அதிகாலை குளிரிலும் முப்பத்திநாலு கிலோமீட்டர் நண்பனின் இருசக்கர வாகனத்தை இரவல் வாங்கி வருகிறான்...

    அப்பாவின் சத்தம் மேலே இருந்து கேட்டது... மீண்டும் பெயர் சொல்லி அழைக்கும் சத்தம் கேட்டவுடனே இவனுக்கு ஆழமாக ஒரு முத்தத்தை அவனது வலது காதில் பதித்துவிட்டு மனிதர்கள் நுழையவே முடியாத சந்தின் மறு திசையில் அவளது உடம்பை வளைத்து வளைத்து கடந்து சென்றாள்…

    பகுதி-2

    பால் கோவிந்த் மெதுவாக எழுந்து உட்கார்ந்தார். நேரம் கொஞ்சம் கொஞ்சமாக கலங்கிய வாய்க்கால் நீர் தெளிவதை போல, வானம் தெளிந்து வெளிச்சம் பரவத்தொடங்கியது.

    ஜெய் தேவி இவர் எழுந்த சத்தம் கேட்டு எழுந்தாள். நேராக ஒரு சொம்பு நிறைய நீரை எடுத்தவள் தேவதாரு மரங்களின் இடையில் நுழைந்து மறைந்தாள். பால் கோவிந்த் எழுந்து நேராக பசுக்களிடம் தான் சென்றார், அவைகள் இப்போது கொஞ்சம் புத்துணர்ச்சியுடன் நின்றிருந்தன. தாய் பசுவின் பின் பகுதியை தொட்டு கண்களில் ஒற்றிக்கொண்டார். வெளியே வந்தவர், ஜெய் தேவி வெட்டி அடுக்கி கட்டி தார்ப்பாய் விரிப்பின் அடியில் இருந்த தூணின் ஓரத்தில் தொங்கவிடப்பட்டிருந்த வேப்பங்குச்சியில் ஒன்றை எடுத்துக்கொண்டு, வெளியில் இருந்த சிறிய இரண்டு மூன்று ஓட்டைகள் இருந்த அலுமினிய பாத்திரத்தையும் எடுத்துக்கொண்டு திரும்பும்போது ஜெய் தேவி எதிரில் வந்துக்கொண்டு இருந்தாள்.

    அந்த பொண்ணை எழும்ப சொல்லு… நேரம் ஐந்து தாண்டி இருக்கும்… என்றவாறே ஜெய் தேவியின் முகத்தை பார்க்காமல் மரங்களுக்கு இடையில் புகுந்தார்.

    ஜெய்தேவி ஒவ்வொரு எருமை, பசு மற்றும் கன்று என ஒவ்வொன்றையும் அவிழ்த்து வீட்டின் வெளியே கொண்டு வந்து கட்டினாள். பிளாஸ்டிக் சாக்கை கொடியில் இருந்து எடுத்து வந்து சாணியை அள்ளி உள்ளே அடைக்க தொடங்கினாள். கரீமா … கரீமா… எழுந்து வாம்மா…

    ...

    கரீமா… தாத்தா இப்போ வருவார். சீக்கிரம் எந்திரிச்சு வாமா…

    கரீமா, சத்தத்தை கேட்டவுடன் மீண்டும் அழுத்தி இழுத்து ரஜாய்யை முகத்துடன் மூடி கொண்டாள்.

    சிறிது நேரத்தில், கரீமா… எழுந்து புண்ணாக்கு கலக்கு என்ற பால் கோவிந்த் குரல் சன்னமாக ஒலித்தது.

    வாரேன் தாத்தா… என்றவாறே எழுந்து சென்றாள்.

    கையை அலம்பி விட்டு பேத்தி தன் வேலைகள் செய்து முடித்தவுடன் பால் கறக்க கீழே தோதாக அமர்ந்துகொண்டார் பால் கோவிந்த்.

    பத்து நிமிடத்தில் சூடான மடியில் இருந்து கறந்த பாலை ஒரு சொம்பில் நிறைத்து பேத்திக்கு நீட்டினாள் ஜெய்தேவி.

    பல்லு விளக்காமல், மறைவுக்கும் போகாமல் எதுக்கு கொடுக்குற. போய் சீக்கிரம் வா… அப்புறம் அருந்து என்றார் தாத்தா.

    கறந்து முடித்த பின்னர் எழுந்து சென்று மாட்டை வைக்கோலை சாப்பிட வைத்தார். காலையில் போஹாவை தயார் செய்ய ஆயத்தமாக அடுப்பு பக்கம் நகர்ந்தாள் ஜெய்தேவி.

    வெளியே வந்து பார்த்தபோது பேத்தி பூனைக்கு அந்த பாலை ஊற்றி கொடுத்துக்கொண்டே இருந்தாள். உனக்கு குடிக்க எடுத்து வைத்ததை இப்படி வீணடிக்குற… கோபமாக கத்தினாள். பெரிய வாளியில் பாலை அளந்து ஊற்றிக்கொண்டிருந்த பால் கோவிந்த், இவளது கத்தலை கேட்டு கொஞ்சமாக தலை திருப்பி பார்த்துவிட்டு மீண்டும் அவர் வேலையில் கவனம் செலுத்தினார்.

    சிறிது நேரத்தில் போகாவும், முந்தைய நாள் இரவில் செய்த ஜிலேபியின் மேலாக கெட்டி தயிரை ஊற்றி அதையும் ஒரு சிறிய கிண்ணத்தில் பேத்தியின் முன்னால் வைத்தாள்.

    இன்னும் கொஞ்ச நாளில் உன் அப்பாவும், அம்மாவும் உன் அக்காமாரும், அண்ணன்களும் இங்கே வருவாங்க. அப்போ நீ இப்படி ஓல்லிகுச்சியாக எதுவும் சாப்பிடாமல் இருந்தால் நாங்க தான் உன் அப்பன்கிட்ட திட்டு வாங்கணும்.

    இல்ல பாட்டி… நான் மொத்தமும் சாப்பிடுறேன்.

    ம்ம்… சரி. கொஞ்சமாக சூரியன் வந்தால் இன்று கொஞ்சம் வெந்நீர் வைத்து பசுக்களையும், கன்றையும் கழுவி விடணும்.

    ஆமா பாட்டி… நேற்றும் கழுவவில்லை.

    இருவரும் பேசிக்கொண்டு இருக்கும்போதே பால் கோவிந்த் பால் வாளியை சைக்கிள் முன்னால் தொங்கவிட்டுக் கொண்டு ரயில் நிலைய கேன்டீன் நோக்கி ஓட்டிசெல்ல தொடங்கினார்.

    ***

    குலாம் தஸ்தகிரி உள்ளே நுழையும்போதே ஹரிஷ் துர்வே உள்ளே அமர்ந்திருந்தார். கிளம்புவதற்கு தயார் நிலையில் இருப்பது தெரிந்து என்ன சார், உங்களுக்கு பிடித்த காபி குடிக்கல போல…

    ஆமா… குலாம். பால் இதுவரைக்கும் வரல்ல அப்படியென்று இப்போ தான் சோட்டு(சிறுவன்) வந்து சொல்லிக்கிட்டு போறான்.

    இப்போ வந்திருக்கும். நான் உள்ளே வரும்போது பால் கோவிந்த் தூரமாக போறதை பார்த்தேன்.

    அப்போ குடித்தபிறகு கிளம்பலாம். வீட்டில போனால் பால் தனியா… காபி தனி தனியா தான் போட்டு கொடுப்பா… மருமக… அதுக்கு இந்த கேண்டீன் காபி தேவல.

    சார்… நீங்க வீ.ஆர்.எஸ்… பற்றி யோசிக்கிறதா பேச்சு அடிபடுது.

    குலாம், நான் வேலைக்கு வாறது வீட்டில் இருக்கவேண்டாமே என்ற சந்தோசத்தில். அப்படி ஏதாவது வாங்கினா மருமக வாயில் இருப்பதை மட்டுமல்ல… மகன் வாயில் இருப்பதையும் கேட்க வேண்டியதாகும். நான் நைட் ஷிப்ட் விரும்பி வாங்குறதே காலையில் போய் சாப்பிட்டுவிட்டு படுத்தால் மதிய உணவை தவிர்க்கலாம். அல்லது மருமகளிடம் அதற்கும் காத்து கிடக்க வேண்டும். நீங்க வேற…! குலாம்… நான் சொல்றேன்னு தப்பா நினைச்சிக்க வேண்டாம்.

    உண்மையில்

    Enjoying the preview?
    Page 1 of 1