Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Muganoolil Mugam Paarkirean - part 2
Muganoolil Mugam Paarkirean - part 2
Muganoolil Mugam Paarkirean - part 2
Ebook136 pages49 minutes

Muganoolil Mugam Paarkirean - part 2

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

விளையாட்டாய் முகநூலில் எழுத ஆரம்பித்தபோது... வெட்டியாய் அதில் நேரம் கழிக்கிறேன் என்று சிறு உறுத்தல் இருந்தது. என் நலம் விரும்பிகள் பலரும் அப்படித்தான் சொன்னார்கள்.

என் பதிவுகள் (எதனால் என்றே தெரியவில்லை!!) பலருக்கும் பிடித்துப்போயின. லைக்குகள் ஷேர்கள் என்று வரவர ஒருவித நாட்டம் அதிகமாயிற்று.

சில சமயங்களில் வேலைகள் தடைப்பட்டதாலும்... இரவுகளில் கண்விழித்து முகநூலில் செலவழிப்பதாக உறுத்தல் ஏற்பட்டதாலும்... அடிக்கடி deactivate செய்ய ஆரம்பித்தேன்.

அது பலருக்கு மிகுந்த வருத்தமளித்தது.

ஒரு சமயத்தில் நம் புஸ்தகா டாட்காமில் என் நூல்கள் தொடர்ந்த வெளியாகும்போது அது தந்த உந்துதல்+ உற்சாகம்+ ஊக்குவிப்பு காரணமாக என் பதிவுகளில் தேர்ந்தெடுத்த சிலவற்றை நூலாகத் தொகுத்தால் என்ன என்ற எண்ணம் தோன்றவும்...

மிகுந்த ஆர்வத்துடன் யெஸ் சொன்னார் புஸ்தகா நிறுவன ராஜேஷ் தேவதாஸ்.

அவருக்கு என் மனமார்ந்த நன்றிகள்.

நீங்கள் முகநூலில் இருக்கிறீர்கள் என்றால் இது பற்றிய விமர்சனத்தை அங்கே எழுதலாம்.

எனக்கே எழுத நினைத்தீர்கள் என்றால் vedhagopalan@yahoo.co.in என்ற மின்னஞ்சலுக்கும் எழுதலாம்.

மீண்டும் ராஜேஷ்ஜிக்கு நன்றி சொல்லி, நூல் தொகுப்புக்குள் உங்களை வரவேற்கும்

வேதா கோபாலன்

Languageதமிழ்
Release dateApr 14, 2021
ISBN6580128406856
Muganoolil Mugam Paarkirean - part 2

Read more from Vedha Gopalan

Related to Muganoolil Mugam Paarkirean - part 2

Related ebooks

Reviews for Muganoolil Mugam Paarkirean - part 2

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Muganoolil Mugam Paarkirean - part 2 - Vedha Gopalan

    https://www.pustaka.co.in

    முகநூலில் முகம் பார்க்கிறேன் - பாகம் 2

    Muganoolil Mugam Paarkirean - Part 2

    Author:

    வேதா கோபாலன்

    Vedha Gopalan

    For more books

    https://www.pustaka.co.in/home/author/vedha-gopalan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    என்னுரை..

    வைரஸ் ராஜ்ஜியம் - சுஜாதா (கற்றதும் பெற்றதும்)

    வீடு தேடிச் சென்று உதவி

    ஆடியோ புக்ஸ்..

    முந்தாநாள் ஒரு வீடியோ பார்த்தேன்.

    வாஷிங்டனில் திருமணம்.

    அக்கா அல்ல அம்மா…

    உலகப் புத்தக தினமாம்.

    முன்பொரு சமயம்…

    அரங்கு நிரம்பிய ஞாயிறு..

    தாராளப் பிரபு விமர்சனம்

    பிச்சைக்கும் பிட்சைக்கும் நிறைய வித்தியாசம் உண்டு.

    திரு ஜ ரா சுந்தரேசனின் ‘மருமகள் ராஜ்ஜியத்தில்’ நூல் பற்றிய ஒரு கண்ணோட்டம்..

    கார்த்திகா ராஜ்குமாரின் ’மாறிப் போனவைகள்’ பதிவுகள் பற்றிய ஒரு கண்ணோட்டம்..

    ரிஷி என்னுறும் இளைஞர்

    இசையரசியின் வாழ்க்கைப் பயணம்

    அமெரிக்க வெள்ளை மாளிகையில் ஒலித்த சுலோகம்

    ‘வேலை- டிராமா- சினிமா’

    மாஃபியா ராணிகள் புத்தக விமர்சனம்

    நாற்காலியின் நுனியில்கூட…

    டீ ஷர்ட் முதல் டீ கப் வரை

    ராதிகாவுக்கும் சுஹாசினிக்கும் டப்பிங்…

    இளையராஜாவின் ஆர்மோனியத்தில் வாசித்தேன்

    ஒரு கேமரா கடந்து வந்த பாதை

    காற்றில் விழுந்த ஆப்பிள்கள்

    முக நூலில் முகம் பார்க்கலாம்.…

    மோடிக்கு ஆரூடம் சொன்னவர்

    என்னுரை..

    விளையாட்டாய் முகநூலில் எழுத ஆரம்பித்தபோது.. வெட்டியாய் அதில் நேரம் கழிக்கிறேன் என்று சிறு உறுத்தல் இருந்தது. என் நலம் விரும்பிகள் பலரும்கூட அப்படித்தான் சொன்னார்கள்.

    என் பதிவுகள் (எதனால் என்றே தெரியவில்லை!!) பலருக்கும் பிடித்துப்போயின. லைக்குகள் ஷேர்கள் என்று வரவர ஒருவித நாட்டம் அதிகமாயிற்று.

    சில சமயங்களில் வேலைகள் தடைப்பட்டதாலும்.. இரவுகளில் கண்விழித்து முகநூலில் செலவழிப்பதாக உறுத்தல் ஏற்பட்டதாலும்.. அடிக்கடி deactivate செய்ய ஆரம்பித்தேன்.

    அது பலருக்கு மிகுந்த வருத்தமளித்தது.

    ஒரு சமயத்தில் நம் புஸ்தகா டாட்காமில் என் நூல்கள் தொடர்ந்த வெளியாகும்போது அது தந்த உந்துதல்+ உற்சாகம்+ ஊக்குவிப்பு காரணமாக என் பதிவுகளில் தேர்ந்தெடுத்த சிலவற்றை நூலாகத் தொகுத்தால் என்ன என்ற எண்ணம் தோன்றவும்..

    மிகுந்த ஆர்வத்துடன் யெஸ் சொன்னார் புஸ்தகா நிறுவன ராஜேஷ் தேவதாஸ்.

    அவருக்கு என் மனமார்ந்த நன்றிகள்.

    நீங்கள் முகநூலில் இருக்கிறீர்கள் என்றால் இது பற்றிய விமர்சனத்தை அங்கே எழுதலாம்.

    எனக்கே எழுத நினைத்தீர்கள் என்றால் vedhagopalan@yahoo.co.in என்ற மின்னஞ்சலுக்கும் எழுதலாம்.

    விளையாட்டுப்போல் முதல் பாகம் ஒன்று வெளிவந்து மிகுந்த வரவேற்பைப் பெற்ற தைரியத்தில் இதோ.. இரண்டாம் பாகத்துடன் உங்கள் முன் பிரெஸன்ட்..

    மீண்டும் ராஜேஷ்ஜிக்கு நன்றி சொல்லி, நூல் தொகுப்புக்குள் உங்களை வரவேற்கும்

    வேதா கோபாலன்

    வைரஸ் ராஜ்ஜியம் - சுஜாதா (கற்றதும் பெற்றதும்)

    (அன்பர்கள் பலபேர் சுஜாதா இப்போது நம்மிடையே இருந்தால் கொரானா பற்றி சுவாரஸ்யமாக எழுதியிருப்பார் என்று அங்கலாய்த்தனர். கவலை வேண்டாம் அன்பர் Kaviyarasan Sk கற்றதும் பெற்றதும் புத்தகங்களில் அலசி இந்தப் பொருத்தமான பதிவை அனுப்பிவிட்டார். அவருக்கு நம் குழு சார்பாக நன்றிகள் பல -

    என் குறிப்பு என்று அடைப்புக்குள் இருப்பது மட்டும் நான் கூடுதலாகச் சேர்த்தது- ராம் ஸ்ரீதர்)

    இனி சுஜாதா எழுத்தில்:

    அறிவியலின் எட்டாவது கவலை - 'வைரஸ் கிருமிகள் அனைவரையும் அழித்து விடுமா?'

    வைரஸ் என்னும் நுண்கிருமி பாக்டீரியாவை விட சிறியது. அதற்கு உயிர் இருக்கிறதா என்றால் உயிர் என்றால் என்ன என்பதைப் பொறுத்தது.

    பாக்டீரியா போல வைரஸுக்குத் தன்னைத்தானே இரட்டிப்பு ஆக்கிக்கொள்ளும் தன்மை கிடையாது. ஆனால், அதற்கு ஆர்என்ஏ (RNA), டிஎன் ஏ (DNA) உண்டு. சுற்றிலும் கொஞ்சம் ப்ரோட்டீன் வைத்திருக்கிறது. இந்தப் ப்ரோட்டீனைப் பார்த்து மனித ஸெல்கள் ஏமாந்து போகின்றன. 'என்னடா நம்மிடம் உள்ளது போலவே இருக்கிறதே... நம் ஆள்தான் என்று வைரஸ் கிருமியை உள்ளே அழைத்துக் கொள்கிறது. உள்ளே நுழைந்ததும் இந்தச் சதிகார வைரஸுக்கு உயிர் வந்துவிடுகிறது. மனித ஸெல்லின் ஊட்டச் சக்திகளை பயன்படுத்தி, தன் இஷ்டத்துக்கு வளர்ந்து, ஸெல்களை மெல்ல, மெல்ல அழித்துத் தன் ராஜ்யத்தை நிறுவிக்கொள்கிறது.

    வைரஸால் வரும் வியாதிகளுக்கு நேரடியாக நிவாரண மருந்து எதுவும் கிடையாது. தடுப்பு ஊசி (வாக்ஸின்), தடுப்பு மருந்துதான் சாத்தியம். பாக்டீரியாவால் வரும் வியாதிகளுக்கு ஆன்டிபயாட்டிக்ஸ் கொடுத்து அந்தக் கிருமியை மேலும் வளர விடாமல் தடுக்கலாம். காரணம் - பாக்டீரியா என்பது தனியான அடையாளம் கொண்டது. ஆனால், வைரஸ் அப்படி அல்ல. ஸெல்லுக்கு உள்ளே நுழைந்து அட்டகாசம் செய்யும் அரக்கன். அதைக் கொல்ல நம் ஸெல்லையே கொல்ல வேண்டும். இதனால் நம்முடைய வைரஸ் தடுப்புச்சக்திகளை அதிகரிப்பதைத் தவிர வேறு எதுவும் வழி இல்லை. இப்படித்தான் போலியோ, ஃப்ளூ போன்றவை வைரஸால் வருபவை. அதற்குத் தடுப்பு மருந்து கண்டுபிடித்துவிட்டார்கள்.

    எய்ட்ஸ் (AIDS) வைரஸால் வரும் மிகப் பயங்கர வியாதி. அதைத் தடுப்பதற்கு மருந்து கண்டுபிடிக்க கோடிக்கணக்கில் செலவழிக்கிறார்கள்

    (என் குறிப்பு: இந்தக் கட்டுரையை சுஜாதா 1995-ல் எழுதினார். பின்னர், 2001/ 2002 இல் எய்ட்ஸ் நோய்க்கு ஸிடோவுடின் (Zidovudine) என்ற மருந்தை இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த பரோஸ் வெல்கம் (Burroughs Wellcome) என்ற பன்னாட்டு மருந்து நிறுவனம் RETROVIR என்ற பெயரில் சந்தையில் அறிமுகப்படுத்தியது. இதை, இங்கு, இந்தியாவில் ப்ரமோட் (promote) செய்தவர்களில் ஒருவன் என்ற முறையில் இந்த மருந்தைப் பற்றி எனக்கு நன்கு தெரியும். அறிமுகமான போது கும்பல், கும்பலாக மருத்துவர்களைச் சந்தித்து இந்த மருந்தின் மகத்துவம் பற்றி விளக்கியிருக்கிறோம். இப்போது, இதனுடைய மேம்படுத்தப்பட்ட மருந்துகள் சந்தையில் வந்துவிட்டன. இது பற்றி மேலும் நான் சொல்வதைவிட, நம் குழுவில் இருக்கும் மருத்துவர் பேராசிரியர் Muthu Psm அவர்கள் விளக்கினால் பொருத்தமாக இருக்கும்).

    வைரஸால் வரும் வியாதி மிக வேகமாகப் பரவக்கூடியது. காரணம் - வைரஸ் தன்னைத்தானே மாற்றிக்கொள்ளும் (Mutation) வேகம் சாதாரண ஸெல்லைவிட மிக அதிகம். ஒரு ஸெல் இரட்டிப்பாகும் போது (தன்னைப் போலவே) படியெடுப்பதில் நூறு கோடி முறைக்கு ஒரு தடவைதான் பிழை ஏற்படும். வைரஸ் கிருமியின் இரட்டிப்பில் அப்படியில்லை. மிக அதிகமாகப் பிழைகள். இரண்டாயிரத்துக்கு ஒரு முறை பிழைபட்டு புதிய வைரஸ் வந்துவிடும். இதனால், மனித இனம் புதுப்புது வைரஸ்களைச் சந்திக்க வேண்டியுள்ளது. உதாரணமாக, இன் ஃப்ளூவன்ஸாவுக்கான வைரஸ் வருடாவருடம் வேஷம் மாறுகிறது. புதுப்புது தடுப்பூசி தொடர்ந்து தேவையாக இருக்கிறது.

    எய்ட்ஸ் எப்படி வந்தது என்பது பற்றி பல கருத்துக்கள் உள்ளன. ஆப்ரிக்காவில் உள்ள ஒரு குரங்கில் இருந்து வந்திருக்கலாம் என்று சொல்கிறார்கள். அது மனிதனுக்கு வந்தது

    Enjoying the preview?
    Page 1 of 1