Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Adichuvadugal
Adichuvadugal
Adichuvadugal
Ebook283 pages1 hour

Adichuvadugal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

இந்த ‘அடிச்சுவடுகள்’ நாவலின் தனித்துவம், இது- ஓர் ஸானிடோரியத்தின் மறுக்க முடியாத- மறக்க முடியாத-சரித்திரமாக இருப்பதாகும். இதில் ஊடாடும் பல மனிதர்கள், சென்னை மாநகரில் இன்னமும் தங்கள் அடிச்சுவடுகளைப் பதித்துக் கொண்டுதான் இருக்கின்றனர். இதில் வரும் கதைமட்டுமே கற்பனையானது. மற்றவை மறுக்க முடியாத சத்தியங்கள்.

இதன் கதாநாயகி ‘சரயூ’ நோயின் உபாதை காரணமாக ஒரு கார்த்திகை மாதத்தின் இளம் காலைப் பொழுதில் மழையின் பூஞ்சாரல் விழுந்து கொண்டிருக்கையில் ‘ஸானிடோரியத்தில்’ நுழைகிறாள். நுழைகையில், வாழ்க்கையை வாழ்ந்து முடிந்துவிட்ட விரக்தியுடன், நிறைவேறா தாகங்களின் நிழலாக இருக்கிறாள். மீண்டும் அவள் வாழ்வில் தென்றல் வீச, புயலும் எழுகிறது.

இக்கதை முழுதும் ஸானிடோரியத்தில் துவங்கி ஸானிடோரியத்துக்குள்ளேயே முடிந்தும் விடுகிறது.

Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN9789352856213
Adichuvadugal

Read more from Hamsa Dhanagopal

Related to Adichuvadugal

Related ebooks

Reviews for Adichuvadugal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Adichuvadugal - Hamsa Dhanagopal

    http://www.pustaka.co.in

    அடிச்சுவடுகள்

    Adichuvadugal

    Author:

    ஹம்சா தனகோபால்

    Hamsa Dhanagopal

    For more books
    http://www.pustaka.co.in/home/author/hamsa-dhanagopal

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    அத்தியாயம் 22

    அடிச்சுவடுகள்

    என்னுரை

    என்னுள்ளிருந்து ஜனித்த எழுத்துக்களில் இது முற்றிலும் மாறானது.

    மருத்துவமனை தன்னுள் நூற்றுக்கணக்கான நோயாளிகளையும் டாக்டர்களையும் நர்ஸ்களையும் கொண்டு அதுவே ஒரு தனி உலகமாகிவிடுகிறது. மனிதர்கள் குழுமிவிடுகிற போது அங்கு பிரச்னைகள் சர்வ சகஜமாக ஜனிக்கின்றன.

    இந்த ‘அடிச்சுவடுகள்’ நாவலின் தனித்துவம், இது- ஓர் ஸானிடோரியத்தின் மறுக்க முடியாத- மறக்க முடியாத-சரித்திரமாக இருப்பதாகும். இதில் ஊடாடும் பல மனிதர்கள், சென்னை மாநகரில் இன்னமும் தங்கள் அடிச்சுவடுகளைப் பதித்துக் கொண்டுதான் இருக்கின்றனர். இதில் வரும் கதைமட்டுமே கற்பனையானது. மற்றவை மறுக்க முடியாத சத்தியங்கள்.

    இதன் கதாநாயகி ‘சரயூ’ நோயின் உபாதை காரணமாக ஒரு கார்த்திகை மாதத்தின் இளம் காலைப் பொழுதில் மழையின் பூஞ்சாரல் விழுந்து கொண்டிருக்கையில் ‘ஸானிடோரியத்தில்’ நுழைகிறாள்.

    நுழைகையில், வாழ்க்கையை வாழ்ந்து முடிந்துவிட்ட விரக்தியுடன், நிறைவேறா தாகங்களின் நிழலாக இருக்கிறாள். மீண்டும் அவள் வாழ்வில் தென்றல் வீச, புயலும் எழுகிறது.

    இக்கதை முழுதும் ஸானிடோரியத்தில் துவங்கி ஸானிடோரியத்துக்குள்ளேயே முடிந்தும் விடுகிறது.

    பெண்ணின் வாழ்வில் ஒருசிலர் அக்கறை கொள்கின்றனர் என்றாலும் அவளை வாழவிடாமல் தடுக்கப் பலர் முன் வந்து நிற்கின்றனர். இது அன்றும் இன்றும் கண்டு வருகின்ற உண்மை. இது ‘என்றும்’ என்று இருந்துவிடக் கூடாதே என்பதுதான் என் பயம், கவலை எல்லாம்.

    இதில் இழையோடும் பற்பல சம்பவங்கள் நான் உணர்ந்து அறிந்த அனுபவமான உண்மைகளே. யாரையேனும் சாடவேண்டும் என்கிற எண்ணம் என் எழுது கோலுக்கு இல்லை யாரேனும் என்னால் எழுதப்பட்ட உண்மைகளால் சாடப்பட்டதாகவோ சங்கடப்பட்டதாகவோ கருதினால் அதற்கு நானே என் எழுதுகோலோ பொறுப்பில்லை. அப்படிப்பட்ட உண்மைகளுக்குக் காரணமான அவர்களே முழுப் பொறுப்பு.

    இங்கு என்னுடைய ஓர் எண்ணத்தை தெளிவுபடுத்தி விடவேண்டும். என்னை வாசகர்கள் கேட்கிறார்கள்: ‘தாங்களும் மற்ற பெண் எழுத்தாளர்களைப் போல ஆண்களைக் குற்றவாளிகளாக்கப் போகிறீர்களா’ என்று இல்லை. ஆணின் எல்லாக் குற்றங்களுக்கும் குறைகளுக்கும் பெண்தான் காரணம்.

    வாழ்வின் உயரத்தில் நிற்கும் ஆணின் பின்னால் ஒரு பெண் இருக்கிறாளாம். உண்மை, அவனது உயர்ச்சியாகட்டும் தாழ்ச்சியாகட்டும் அதன் பின்னணி ஒரு பெண்னே.

    பெண் தனக்குத்தானே விலங்காகிப் போனாளே தவிர மற்றவர்கள் அவளுக்கு விலங்கல்ல. பெண்களை அடிமைப்படுத்துவதாகக் குரல் எழுப்பும் அறிவு ஜீவிகளே கொஞ்சம் சிந்தியுங்கள். அப்படி இருக்கும் பட்சத்தில், டெல்லி மாநகர் அரியாசனத்தில் ஒரு பெண் உட்கார்ந்திருக்க முடியுமா. இது சாத்தியமா.

    பெண்களின் குற்றங் குறைகளை நான் எடுத்துக் காட்டுவதில் - எழுதுவதில்-எப்போதும் பின்வாங்கியதேயில்லை. என்னையும் மீறி என் எழுதுகோல் பெண்களைப் பற்றி எழுதுகையில் அவர்களின்பால் இரக்கமும் பரிவும் சுரக்கும் படி எழுதி விடுகின்றது. இதற்கு நான் என்ன செய்யட்டும்.

    இந்த நாவலில் பல உண்மைகளை நான் வெளிக் கொணர்ந்து காட்டி விட்டதால் என் மீது போர் தொடுக்க எழுபவர்களே, நீங்கள் எழுவதற்கு முன் கொஞ்சம் சிந்தியுங்கள்.

    நான் உண்மைகளையும் சத்தியங்களையும் மட்டுமே எழுதியுள்ளேன். அழகையும் அலங்கோலத்தையும் காட்டும் கண்ணாடிக்குப் பாரபட்சம் ஏது? என் எழுதுகோல் ஓர் கண்ணாடியே.

    மீண்டும் என் எழுத்துக்கள் அச்சில் பிறக்கக் காரணமாய் விளங்கும் என் மதிப்பிற்குரிய திரு. செ. செல்லப்பன் அவர்களுக்கும் திரு. குழ. கதிரேசன் அவர்களுக்கும் என் இதயம் கனிந்த நன்றிகள்.

    ஹம்சா தனகோபால்

    ‘சரணலயா’

    சேலம்-636007

    1

    எலெக்டிரிக் டிரெயின் ‘போயிங்’ எனப் பெரிதாக ஊதி விட்டுப் புறப்பட்டுச் செல்கிறது. அதன் சத்தம் இங்கே கேட்கிறது. என் மனக் கண்ணில் ஒரு கணம் அந்த மின் வண்டியும், அதில் இடம் கிடைத்தும் கிடைக்காமலும் தொற்றிச் செல்லும் நூற்றுக்கணக்கானோர்களும் தோன்றி மறைகின்றனர். யாருக்கு என்ன அவசரமோ.

    அவசரம்...அது என் வாழ்க்கையில் இனியில்லை. மெல்ல மிக மெல்ல... இல்லை செய்யாமல்கூட எதையும் நான் விடலாம். என் வாழ்க்கையில் எந்தச் சுமையுமில்லை. அதேபோல் எனக்காகக் காத்திருப்போரும், கவலைப் படுவோரும்கூட யாருமில்லை. என் இதழ்கள் விரக்தியுடன் விகசிக்க வேண்டும்போலத் துடிக்கின்றது. முடியவில்லை. எதிரே இளம் தாய் அழுகின்ற குழந்தையை அடக்கப் பார்க்கிறாள்.

    இங்கே அந்தக் குழந்தையின் அழுகை-இந்த அமானுஷ்ய நிசப்தத்தில் பெரிய பூதமாக எழுந்து மருட்டுகிறது. வரிசையாக எதிர் எதிரே நாற்காலிகள். நடுவே நடப்பதற்குப் பெரிய இடம். ‘இங்கே துப்பவும்’-தொட்டியில் யாரோ ஒரு நோஞ்சான் வாலிபன் இருமித் துப்புகிறான். அந்த இளம் தாய் முகத்தைச் சுளித்துப் பயத்துடன் குழந்தையை மார்போடு அணைக்கிறாள்.

    எனக்குச் சிரிக்க வேண்டும் போலிருக்கிறது. இவள் இப்படி தடுப்பதாலேயே அது வராமல் இருந்துவிடுமா. அன்றி வரவேண்டும் என்றால் வந்துவிடுமா. இரண்டுமில்லை. எங்கே யாருக்காக எப்போது எது காத்திருக்கிறதோ யாருக்குத் தெரியும்.

    ஐந்து வருடங்களுக்கு முன் இப்படி ஒரு டி.பி. சானிடோரியத்தில் காத்திருப்பேன் எனத் தெரிந்திருந்தால்... அண்ணாவை இன்னும் காணோம். எங்கள் குடும்ப டாக்டர் ராம் பிரகாஷுடன் பெரிய டாக்டரைப் பார்க்கப் போனேன். போய் அரை மணி இருக்குமா.

    உம்...எதிரே சீராக வெட்டிவிடப்பட்ட குரோட்டன்ஸ், பெரிய பெரிய அரச மரங்கள். வேப்ப மரங்கள். காக்கைக் கூட்டங்கள் நொடிக்கொரு தடவை கரைந்து சிறகடித்துப் பறக்கின்றன. அவையிட்ட எச்சங்களின் சுவடுகள் பார்வைக்கு எட்டின தூரம் வரை தெரிகின்றன. அதன் நாற்றம் குடலைப் புரட்டுகின்றன. பாவம். இந்தச் சகிக்க முடியாத நாற்றத்தைப் பொறுத்துக் கொண்டு டாக்டர்களும் நர்ஸ்களும் தொற்று நோய் எனத்தெரிந்தும் இங்கே எப்படித்தான் வேலை செய்கிறார்களோ.

    அவர்களைப் பார்த்து இரக்கப்படுகிறேனே, நானும் இங்கே இருக்கத்தானே வந்திருக்கிறேன். என்னைப் பார்த்து யார் இரக்கப்படப் போகிறார்கள். இல்லை அந்த இரக்கம் வந்து என்னைக் குணப்படுத்தி விடத்தான் போகிறதா.

    குழந்தை பால் பாட்டிலைச் சுவைத்துக்கொண்டு மெல்ல விழிகளை மூடி தூங்கப்பார்க்கிறது. அந்த இளம் தாய் என்னை அதிசயமாகப் பார்க்கிறாள். 'இவளுக்குப் போய் வியாதியா? இருக்காது; வேண்டியவர்களைப் பார்க்க வந்திருப்பாள்’ என நினைப்பாள்.

    பெரிதாகக் குரைத்துக்கொண்டு கறுப்பு நாயொன்று சங்கிலியை இழுத்துக்கொண்டு ஓடுகிறது. அதைத் தொடர்ந்து வெறும் டிராயரும் பனியனும் போட்டுக் கொண்ட பையனொருவன் ஓடுகிறன். ஒருவழியாக புலியைப் போன்ற அந்த நாய் அவன் பிடிக்குச் சிக்குகிறது.

    இந்த அண்ணா இன்னும் என்ன செய்கிறான். இதயம் ‘தடக்’ ‘தடக்’கென அடித்துக்கொள்கிறது. கை கால்கள் சில்லிடுகின்றன, என்னாகுமோ ஏதாகுமோ என்கிற கவலை பெரிதாக என்னுள் எழுகிறது. என்ன ஆனாலும் என்னால் என்ன செய்ய இருக்கிறது. ஏனிப்படி அஞ்சுகிறேன். குழந்தைப் பருவம் முதல் ஆஸ்பத்திரி என்றாலே முகம் சுளித்ததும் வெறுத்து வந்ததும் காரணமோ.

    ஹோயென்ற மரம் செடி கொடிகளுக்கு இடையே நடக்க நடக்க தள்ளிப் போய்க்கொண்டிருந்த இந்தக் கட்டிடங்களையெல்லாம் நெருங்க நெருங்க என் கைகால்கள் சில்லிட்டுவிட்டன. ஆங்காங்கே கட்டிடங்கள்-மரம் செடி கொடிகளுக்கிடையே மறைந்தும் தெரிந்தும் இதற்கும் பின்னால் சிறிய மலைக்குன்று. நாடகத்தில் திரை தொங்கவிட்டது போல, யாரோ பெரிதான நாமம் போட்டிருந்தார்கள். இங்கே வருபவர்கள் குணமடைய மாட்டார்கள் என்பதாலா, அன்றி இறையை நம்புங்கள், அவனைவிட பெரிய டாக்டர் இந்த உலகத்தில் யாருமில்லை என்றா.

    மனம் நூலிழையாக எதையெதையோ பின்னிப் பின்னிப்பார்க்கிறது. சில்லிட்ட கரங்களால் அந்த நாற்காலியை இறுகப் பிடித்துக் கொள்கிறேன். இதற்கு முன் இந்தக் கையொடிந்த நாற்காலியில் யார் யார் உட்கார்ந்திருந்தார்களோ? நோயாளிகளோ? நோயற்றவர்களோ?

    அந்த நோயாளிகள் நோய் தீர்ந்து வீட்டுக்குப் போய் இருப்பார்களா? அன்றி நோய் தீர்ந்துவிடும் என டாக்டரையும் மருந்துகளையும் கடைசிவரை நம்பி நம்பியே கண்களை நிம்மதியாக, நிரந்தரமாக மூடிக்கொண்டிருப்பார்களோ? இப்போது இந்த நாற்காலியில் உட்கார இருப்புக் கொள்ளவில்லை. பயத்தில் இதயம் பெரியதாக காதுக்குக் கேட்கும்படி அடித்துக்கொள்கிறது.

    எழுந்து நின்று கொள்கிறேன். நிற்க முடியவில்லை. உடல் லேசாக நடுங்குகிறது. அடுத்த நாற்காலியில் சாய்ந்து உட்காருகிறேன். இந்த நாற்காலியிலும் அதே சிந்தனைகள்... உடல் எழுந்து ஓடி துடிதுடிக்கிறது. என்னையே இமைக்காது பார்த்துக் கொண்டிருக்கும் அந்தப் பெண் என்ன நினைப்பாள். கைத்துண்டால் முகத்தைத் துடைத்துக் கொள்கிறேன்.

    கார்த்திகை மாதத்துக் கூதல்காற்று சில்லென உடலைத்துளைக்கப் பார்க்கிறது. பறக்கும் மயிரிழைகளைக் காதுப்பக்கம் ஒதுக்கிச் சேர்க்கிறேன்.

    எதிரில் வரை படங்களில், போர்டுகளில் குறிக்கப்பட்ட செய்திகளுக்குக் கண்கள் தாவுகின்றன. இந்த மருத்துவ மனையின் வரைபடம் தெள்ளத்தெளிவாக வரையப் பட்டிருக்கிறது. மற்றதில் எத்தனை நோயாளிகள், மருத்துவர்கள், நர்ஸ்கள் எண்ணிக்கை. ஒன்றில் மருத்துவர்களின் பெயர்களும், நர்ஸ்களின் பெயர்களும், மருத்துவர் குழுவின் தலைவர் டாக்டர் எஸ்.வி. மித்திரா, எம்.டி.,எப்.சி.சி.,பி., என் பார்வை தொடர்கிறது.

    அண்ணாவும், அண்ணாவைத் தொடர்ந்து எங்கள் குடும்ப டாக்டர் ராம் பிரகாஷும் வருகிறார்கள். பயத்தில் சில்லிட்ட கரங்களுடன் கண்கள் இருட்டிக்கொண்டு வருகின்றது. சமாளித்து நிற்கின்றேன்.

    மேடம், உங்க லக் இடம் கிடைச்சிருக்கு. மாசக் கணக்கா வெயிட்டிங் லிஸ்டிலே இருந்து சிபாரிசு செய்தா கூட இடம் கிடைக்கிறது இங்கே கஷ்டம் மேடம். டாக்டர் ராம் பிரகாஷ் என்னைப் பார்த்துச் சிரிக்கிறார்.

    ‘தேங்க் யூ’ சொல்ல முயல்கிறேன். முடியவில்லை. சிரிக்கப் பார்க்கிறேன், யாரோ என் இதழ்களைப் பசை கொண்டு ஒட்டவைத்தாற் போல இருக்கின்றது.

    எல்லாம் நம்ம டாக்டர் வந்ததாலேதான். அவர் இல்லேன்னா முடியாது. அண்ணா ராஜசேகரன் வாயெல்லாம் பல்லாகச் சிரித்துப் பேசுகிறான்.

    ‘சனியன் வீட்டை விட்டுத் தொலைந்தது, இனிமேல் வீட்டில் சச்சரவில்லை’ என நினைக்கிறானே.

    இந்தப் பக்கம் போறப்ப உங்கள வந்து பார்க்கிறேன் எதுக்கும் பயப்படாதீங்க. டாக்டர்.

    நான் தலையை மட்டும் அசைக்கிறேன்.

    என் பிரண்ட் ஒருத்தர் இங்கே இருக்கார். அவரப் பார்த்துட்டு நான் புறப்படறேன் மிஸ்டர் ராஜசேகர் டாக்டர் விடை பெறுகிறார்.

    அவர் கடமை முடிந்தது. முடிந்தது என்றா சொன்னேன். தப்பு, அப்படிச் சொல்லக்கூடாது. தன்னுடைய நோயாளி குணம் அடையவில்லை எனத்தெரிந்த பின்பும் கடைசிவரை குணப்படுத்த வேண்டும் என யார் நினைப்பார்கள். அந்த வகையில் ராம்பிரகாஷ் மிகவும் நல்லவர்.

    'உன் டிரஸ் மத்தது எல்லாம் கொண்டு வரலியே நாளைக்குக் கொண்டு வரேன். சரியா." அண்ணாவின் கேள்விக்கும் என் தலை அசைப்புதான் பதில்.

    காலையிலே நீ டிபன் சாப்பிடலியே. வா. அங்கே ஒரு காண்டீன் இருக்கு.

    அண்ணாவைப் பின் தொடர்கிறேன்.

    மனம் என்னென்னமோ நினைத்துக் கொண்டிருந்தாலும் கண்கள் என்னமோ தன் கடமையைச் செய்து கொண்டிருக்கின்றது. ஒரு வார்டுக்கும் மற்றொரு வார்டுக்கும் நீண்ட இடைவெளி. ஆண்கள் வார்டு. படுத்தும் நின்றும் உட்கார்ந்தும் இருமியும் துப்பியும்...அந்தச் சிகப்பு வேட்டியிலும் வெள்ளைச் சட்டையிலும் அவர்களைப் பார்க்கவே எப்படியோ இருக்கிறது. இவர்கள் இங்கே வந்து விட்டார்களே, இவர்கள் வீட்டில் இவர்களை எதிர்நோக்கியிருக்கும் கடமைகள் எல்லாம் என்னாகும்.

    குழந்தைகள் வார்டு. சிறிதாக, கச்சிதமாக இருக்கிறது. ஒன்றோடு ஒன்று பேசிச் சிரித்து விளையாடி...உலகம் குழந்தையாகவே இருக்கக் கூடாதா. அவர்களுக்கு என்ன வந்திருக்கிறது. அவர்களுக்கே தெரியாது. அவர்களைப் பார்த்துக் கொள்ளும் அன்னை மார்கள்...அவர்கள் முகத்தில் தான் ஊர்ப்பட்ட கவலை அப்பிக்கொண்டிருக்கிறது.

    இந்த-சுற்றிலும் கம்பி வலையிட்ட மிருகங்களை அடைத்திருக்கும் காட்சி சாலையைப் போன்றிருக்கும் வார்டு என்னைக் கலக்குகிறது. ஒரே ஒரு சிறிய கதவு. சுற்றிலும் முட்கம்பி வலை. உள்ளே பெரிய வார்டு. பல நோயாளிகள், உடன் போலீஸ்காரர்கள் வேறு. கைதிகளா... ஒரு சிலர் கைகள் பிணைக்கப்பட்டிருக்கின்றன. நோய் தரும் அவதியில் இது வேறா.

    நான் நடந்து கொண்டேயிருக்கிறேன். மரங்கள் அடர்ந்த பாதை, கரடு முரடாக சிலயிடங்களில் மர வேர்கள் தரைக்கும் மேலாக நீட்டிக்கொண்டு நடைக்குத் தடைகளாகின்றன. அந்த கான்டீன் கண்ணுக்குத் தெரிகிறது. பெயருக்குத்தான் கான்டீன். சின்ன இருண்ட குடிசை. தென்னம் ஒலைகளால் வேயப்பட்டது. உள்ளே கறுத்துப்போய் அழுக்கண்டின நீள மரப் பெஞ்சுகள். நீள ஒற்றையடி மேசைகள். அவைகளில் யார் யாரோ காப்பி குடித்தும் உப்புமாவை சாப்பிட்டும், உட்கார்ந்திருக்க, ஈக்கள் மொய்க்கின்றன. இதில் பீடிப்புகை மண்டிச் சூழ்ந்திருக்கிறது.

    அந்த அழுக்கடைந்த கண்ணாடித் தம்ளர்களையும், தூசு படிந்து காய்ந்து சருகான டிபன் இலைகளையும் பார்க்கும் போது எனக்கு வயிற்றைப் புரட்டிக்கொண்டு வருகிறது. இந்த காப்பியும் டிபனும் இல்லையென்று யார் அழுதார்கள்.

    என் முன் வைக்கப்பட்ட காப்பி என்கிற பெயருடைய அந்தப் பானத்தை இரண்டு முறை உறிஞ்சுகிறேன். என்னால் தொடர்ந்து குடிக்க முடியவில்லை. பெஞ்சில் உட்கார்ந்து ஈக்களைப் பற்றிக் கொஞ்சம்கூட கவலைப்படாமல் சுவைத்துக்கொண்டிருக்கும் அம்மனிதர்கள் என்னை விசித்திரமாகப் பார்க்கிறார்கள். கரிய மண் சுவற்றில் அட்டை தொங்குகிறது. ‘வியாதியஸ்தர்கள் உள்ளே வரக்கூடாது.’

    கல்லாப்பெட்டியருகில் உட்கார்ந்திருக்கும் மனிதரின் ஒருகால் பெரிதாக வீங்கிக் கொண்டிருக்கிறது.

    சப்ளையரா அந்தப் பையன். அளவுக்கதிகமாகச் சொறிந்து கொண்டிருக்கிறான். என்னால் அங்கே உட்கார முடியவில்லை. அந்த இருட்குகையிலிருந்து வெளிவந்து நின்று பெரிதாக அடைபட்ட மூச்சை இழுத்து விடுகிறேன்.

    அண்ணா வருகிறான்.

    பல வார்டுகளைக் கடந்து நடக்கிறோம். நர்ஸ்கள் வெண் புறாக்களாக முன்னும் பின்னும் வேகமாகப் போகிறார்கள். அவர்கள் முகத்தில் எந்த அருவருப்பும் இல்லை. இரண்டு பேர்களாகப் போகையில் பேசி, சிரித்துக் கொண்டும் போகிறார்கள். பெண்கள் வார்டுக்கு முன்னால் தபால் பெட்டி செந்நிறத்தில் சிரிக்கிறது. அதன் சிகப்பு இப்போது பயத்தைத் தருகிறது. இந்தத் தபால் பெட்டிக்கு எதற்குச் சிகப்பு பெயிண்ட் அடிக்கிறார்கள். பச்சை ஊதா இப்படி அமைதியான, சஞ்சலம் கொடுக்காத நிறங்களாக அடிக்கக் கூடாதா.

    அண்ணா ஏதேதோ பேசிக்கொண்டே நடக்கிறார். எதுவும் என் உள்ளத்தைத் தொடவில்லை.

    வார்டு நெம்பர் 24. இதுதானே என் அட்மிஷன் ஷீட்டில் போட்டிருக்கிறது. நான் நிற்கிறேன். அண்ணா என்னை உள்ளே வரும்படி தலையாட்டிவிட்டு உள்ளே நுழைகிறான்.

    இந்த வார்டு குன்றுக்குக் கீழாக இருக்கிறது. அதனல் சுற்றிலும் சிமெண்ட்டில் பெரிதாகத் தொட்டிபோல கட்டி அதன் நடுவே இந்த வார்டைக் கட்டியிருக்கிறார்கள். இது யுனிவர்ஸல் வார்டாம். சுத்தமாக எண்ணி பத்தே பெட்கள் இருக்கின்றன. நர்ஸிடம் அண்ணா ஏதோ பேசுகிறான்.

    அந்த நர்ஸ்-கறுப்பாக அம்மைத் தழும்பு முகத்துடன்-என்னை முறைத்துப் பார்க்கிறாள்.

    வெஜிடேரியனா...நான் வெஜிடேரியனா...

    அவள் கேள்விக்கு அண்ணா பதில் சொல்கிறான்.

    வெஜிடேரியன். முட்டை கூட சாப்பிடமாட்டாள்.

    நல்லாருக்கு. நோய் எப்படிப் போறதாம். அவள் சிடுசிடுக்கிறாள். அவளுக்குப் பக்கத்தில் ஒரு இளம் பெண் மேசையில் குனிந்தபடி அண்ணா சொல்லச் சொல்ல டயட் ‘ஷீட்டில்’ குறித்துக் கொண்டிருக்கிறாள்.

    அறைக்கு வெளியே-ஆயாவா அது. வெற்றிலைப் பாக்கை மென்றுகொண்டே என்னைப் பார்க்கிறாள். வெள்ளைப் புடவையும் சோளியும் பம்மென்று, மயிரைக் கொண்டையிட்டு, கண்கள் முகத்தில் ஆழத்தில் உள்ளன.

    அண்ணா என்னருகே வருகிறான்.

    இன்னிக்கு முடியாது. எல்லாத்தையும் நாளைக்கு எடுத்துட்டு வரட்டுமா. இந்தா செலவுக்கு வெச்சுக்கோ ஒரு பத்து ரூபாத்தாளை மடித்துத் தருகிறான்.

    அவனுக்கு விடை கொடுக்கும் வண்ணம் தலையாட்டுகிறேன். ஆயா வந்து அந்த கட்டில் தாம்மா சொல்லிப் போகிறாள்.

    வார்டு மிகப் பெரிதாக இருக்கிறது.

    Enjoying the preview?
    Page 1 of 1