Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Devan Varuvara?
Devan Varuvara?
Devan Varuvara?
Ebook216 pages1 hour

Devan Varuvara?

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

இந்தத் தொகுதியில் இடம் பெற்றுள்ள கதைகள் அனைத்தும் ஏதோ ஒருவகையில் குழந்தைகளோடு சம்பந்தமுள்ள கதைகள்.

இந்தக்கதைகளுள் குழந்தைகளின் மனோ உணர்ச்சி, நடவடிக்கைகள் முதலியவற்றை மட்டுமே சித்தரித்துள்ள கதைகளும் உண்டு. எனினும், கதை என்பது வெறும் வர்ணனையோ, வர்ணப் படமோ அல்ல. கலைப் பணியில் வாழ்க்கையின் பிரச்சனைகளைத் தவிர்க்க விரும்புவது, நான் ஏற்றுக் கொண்டுள்ள கலைக் கொள்கைக்குப் புறம்பானது. வாழ்க்கையின் பிரச்சனைகள் எவ்வளவு இயல்பானதோ, அவ்வளவு இயல்பாக இலக்கியத்தில் பிரச்னைகள் தாமாகவே ஊடுருவி நிற்கும்போது அதை வடிகட்டித் தர எனக்கென்ன உரிமை?

Languageதமிழ்
Release dateFeb 8, 2022
ISBN6580103906925
Devan Varuvara?

Read more from Jayakanthan

Related to Devan Varuvara?

Related ebooks

Reviews for Devan Varuvara?

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Devan Varuvara? - Jayakanthan

    http://www.pustaka.co.in

    தேவன் வருவாரா?

    Devan Varuvara?

    Author :

    த. ஜெயகாந்தன்

    Jayakanthan

    For more books

    https://www.pustaka.co.in/home/author/jayakanthan-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    தேவன் வருவாரா?

    பொம்மை

    இரண்டு குழந்தைகள்

    குறைப் பிறவி

    பேதைப் பருவம்

    துறவு

    சோற்றுச் சுமை

    முச்சந்தி

    யந்திரம்

    தோத்தோ!

    நிறங்கள்

    முன்னுரை

    இந்தத் தொகுதியில் இடம் பெற்றுள்ள கதைகள் அனைத்தும் ஏதோ ஒருவகையில் குழந்தைகளோடு சம்பந்தமுள்ள கதைகள்.

    குழந்தைகளின் மனோ உணர்ச்சிகள், நடவடிக்கைகள், ஆசைகள், கனவுகள் முதலியவற்றைச் சித்தரித்து எழுத வேண்டுமென்ற முன்கூட்டிய திட்டத்துடன் எழுதப்பட்ட கதைகள் அல்ல இவை. அப்படிப்பட்ட ‘முன்கூட்டிய லட்சியத்துடன் சிலர் எழுதுவதையும், எழுதியவற்றைத் தொகுத்துத் தருவதையும் ஆவலோடு படித்திருக்கிறேன். அவர்களால் திட்டமிடப்பட்ட அந்த லட்சியத்தில் அவர்களே தோல்வியுறுவதைப் பார்த்தபோது, அப்படிப்பட்ட திட்டம் ஏதுமின்றி எழுதுவதற்கு அடிப்படையான குறிக்கோள் எது என்று எனக்குள்ளேயே எதை நான் தீர்மானித்திருக்கிறேனோ, அந்தத் தீர்மானத்தின்படி நான் எழுதிய பல கதைகளுக்குள் அவர்களுக்குக் கிடைக்காத வெற்றி, சில கதைகளில் எனக்குக் கிடைத்திருக்கிறதோ என்று நானே என் மனசுக்குள் ஒரு கேள்வியைப் போட்டுக் கொண்டு ‘பைலைப்’ புரட்டிப் பார்த்தபோது, குழந்தைகள் சம்பந்தப்பட்ட கதைகள் பல இருப்பதை நான் கண்டதன் விளைவே இத்தொகுதி.

    இந்தக்கதைகளுள் குழந்தைகளின் மனோ உணர்ச்சி, நடவடிக்கைகள் முதலியவற்றை மட்டுமே சித்தரித்துள்ள கதைகளும் உண்டு. எனினும், கதை என்பது வெறும் வர்ணனையோ, வர்ணப் படமோ அல்ல. கலைப் பணியில் வாழ்க்கையின் பிரச்சனைகளைத் தவிர்க்க விரும்புவது, நான் ஏற்றுக் கொண்டுள்ள கலைக் கொள்கைக்குப் புறம்பானது. வாழ்க்கையின் பிரச்சனைகள் எவ்வளவு இயல்பானதோ, அவ்வளவு இயல்பாக இலக்கியத்தில் பிரச்னைகள் தாமாகவே ஊடுருவி நிற்கும்போது அதை வடிகட்டித் தர எனக்கென்ன உரிமை?

    அதனால்தான் இந்தக் கதைகளில் வரும் பெரும்பாலான குழந்தைகள் பூம்பஞ்சு மேனியோடு பொக்கை வாய் காட்டிச் சிரித்து மயக்கும் பிறத்தியார் வீட்டுக் குழந்தைகளாய் மட்டும் காட்சியளிக்காமல், வருங்கால வாழ்க்கைக்கு உத்தரவாதமில்லாமல் - வாழவே உரிமை பெறாதவர்கள் - பெற்றுப் போட்டுவிட்ட சமூக அனாதைகளாயத் திரியும், என் சொந்த ரத்தமாகவும் காட்சியளிக்கிறார்கள்.

    ஏன் இப்படிச் சொல்கிறேன் என்றால், எனது குழந்தைப் பருவமே ஏறத்தாழ அப்படித்தான் இருந்தது! என்னோடு சேர்ந்து விளையாடிய குழந்தைகளின் நிலைமை அந்தக் காலத்திலும் சரி, இன்றும் சரி - பெரும்பாலானவர்களின் பிறவியே அர்த்தமற்றது போல் தான் இருக்கிறது.

    குழந்தை என்பது கதைப்பொருள் மட்டுமல்ல; அது ஒரு சமுதாயப் பிரச்னையும்கூட...

    என்னதான் இந்நாட்டுப் பிரதமர், குழந்தைகளை, ‘பாரதத்தின் புஷ்பங்கள்’ என்று வர்ணித்தாலும், ஆண்டிற்கு ஒருமுறை ‘குழந்தைகள் தினம்’ கொண்டாடினாலும், அந்தப் புஷ்பங்கள், வளர்ந்து சமூகத்தின் காலடியில் மிதிபட்டு நசுங்கிச் சாகும் பிரத்தியட்ச வாழ்க்கையைக் காணும்போது வயிறு பற்றி எரிகிறது! ‘ஓ’ வென்று கதறியழத் தோன்றுகிறது!...

    குழந்தைகளில் - பெற்றவள் பிச்சைக்காரியானாலும், விபசாரியானாலும், கூலிக்காரியானாலும், பைத்தியக்காரியானாலும் - எனக்குப் பேதங்கள் தோன்றவில்லை. யாருக்கும் தோன்றாது. மனிதன் மனிதனை வஞ்சிக்கப்போய், தன் இதயம் பேதம் பாராட்டாமல் நேசிக்கக்கூடிய குழந்தைகளின் நிலையைத் திரும்பிக் கூடப் பார்க்காமல் ‘தன் குழந்தை’ என்ற கூட்டுக்குள் பாசத்திற்கு இரை தேடிக்கொள்வதன் மூலம் சிறுமைப்பட்டுப் போனான்.

    இல்லாவிட்டால் குழந்தையின் தலைவிதி, பரிதாபகரமான பட்டினியால் செத்துக் கொண்டிருக்கிற பெற்றோர்களின் பொறுப்பில் மட்டும் விடப்பட்டிருக்குமா? மனித உயிருக்குத் தன் சுவையைத் தான் சுமக்கும் வரையாவது உத்தரவாதம் வேண்டாமா?

    கிறிஸ்தவர்கள் ‘தேவன் வரப் போகிறார்’ என்ற ஒரு திருநாளை எதிர் பார்த்திருப்பதுபோல் மனித சமூகம் ஒரு பொன்மயமான எதிர்காலம் வரப்போகிறது என்ற நம்பிக்கையில்தான் வாழ்கிறது.

    எதுவும் வானத்திலிருந்து குதிக்காது; குதித்ததுமில்லை. மண்ணில், மனிதனால்தான் ஸ்தாபிக்கப்பட வேண்டும். தேவனும் மனித உருவில்தான் வருவார். சகல தத்துவார்த்திகளும், அவதார புருஷர்களும், மெய்ஞ்ஞானிகளும் தாயின் கருவில் உதித்துப் பிறந்து, முலைசுவைத்து, புழுதியளைந்து விளையாடி வளர்ந்த குழந்தைகளாய் இருந்தவர்கள்தான்.

    ஒரு சிசுவின் பரிதாபகரமான மரணத்தை, வறுமைக்குப் பலியான கோரத்தைக் காணும்தோறும் ‘இந்த வாழ்க்கையின் ஈயத் தன்மையையே மாற்றிப் பொன்மயமாக்க வந்த ஒரு தேவனை, ஒரு அவதார புருஷனைப் பிறக்கும் போதே கொன்று விட்டோமோ’ என்றுதான் நெஞ்சு பதைக்கிறது.

    இப்படிப்பட்ட நெஞ்சுப் பதைப்பிலும், பெற்ற குழந்தையை வளர்க்க வேண்டுமென்ற சில தாய்மார்கள் படும் சிரமங்களைக் கண்ட பொருமலிலும், அவர்கள் தோல்வியுற்றுக் கலங்கித் திசை தெரியாமல் நிற்பதை கண்ட தவிப்பிலும் உருவானவை சில கதைகள்.

    உலகையே ஒரு விசித்திரமாய் விழித்து நோக்கி திகைப்போடு உங்களைப் பார்த்து. ‘களுக்’கென இதழ்கள் மலரச் சிரித்து உங்களை நோக்கிக் கைகளை நீட்டித்தாவும் இனிமையான குழந்தைக் கதைகளும் இதில் உண்டு.

    அந்தக் கதைகள், ஏதேதோ உணர்வுகளில் உருவாகி அவ்வப்போது பல பத்திரிகைகளில் வெளிவந்தவை.

    இவற்றினுாடே ஒரு பொதுத்தன்மை இருப்பதைப் பின்னால்தான் நான் உணர்ந்தேன். இந்தக் கதைகளுக்கு அப்படி ஒன்றும் பொதுத் தன்மை கிடையாது என்று நீங்கள் கருதினாலும் அது ஒரு பிரமாத காரியமில்லை; விட்டு விடலாம்.

    இவையனைத்தும் கதைகள் - எதோ ஒரு வகையில் குழந்தைகளோடு சம்பந்தப்பட்ட கதைகள் என்பதில் ஆராய்ச்சிக்கு இடமில்லை. விமர்சனக்காரருக்கும் வேலையில்லை.

    என் கதைகளைப் பற்றி இந்த முன்னுரையில் இவ்வளவே நான் சொல்லக்கூடியது.

    தேவன் வருவாரா, நிறங்கள் - அமுதசுரபியிலும், பொம்மை, குறைப்பிறவி, தோத்தோ - ஆனந்தவிகடனிலும், பேதைப் பருவம், துறவு, முச்சந்தி - சரஸ்வதியிலும், சோற்றுச் சுமை - கல்கியிலும், யந்திரம் - தாமரையிலும், இரண்டு குழந்தைகள் - புதுமையிலும் வெளிவந்தவை.

    சென்னை

    1-7-1961

    த. ஜெயகாந்தன்.

    தேவன் வருவாரா?

    பொழுது சாய்ந்து வெகுநேரமாகிவிட்டது கூலி வேலைக்குப் போயிருந்த ‘சித்தாள்’ பெண்கள் எல்லோரும் வீடு திரும்பிவிட்டார்கள். இன்னும் அழகம்மாளை மட்டும் காணவில்லை.

    குடிசைக்குள் - தனக்கும் அழகம்மாளுக்கும் சோறு பொங்கி, குழம்பு காய்ச்சும் வேலையில் அடுப்புப் புகையில் குனிந்திருந்த கிழவி ஆரோக்கியம் முந்தானையில் முகத்தைத் துடைத்துக் கொண்டு, குடிசைக்கு வெளியே வந்து தலை நிமிர்ந்து பார்க்கும் போது நிலவு கிளம்பி இருந்தது.

    நேரம் இருட்டிப் போச்சுதே, இந்தப் பொண்ணு எங்கே போனா? கிழவிக்கு நெஞ்சு படபடத்தது.

    இவ்வளவு நேரமாகியும் அவள் வீடு வந்து சேராமலிருந்ததில்லை.

    சேரித் தெருவில் யாரோ போவது தெரிந்தது.

    அதாரு? சின்னப் பொண்ணா... ஏ, சின்னப் பொண்ணு! எங்க அழகம்மா எங்கே? உங்க கூட வரலியா...?

    நாங்கல்லாம் ஒண்ணாத்தான் வந்தோம் ஆயா... வழியிலே எங்கனாச்சும் பூட்டாளோ என்னமோ, தெரிலியே...

    குடிசையின் கதவை இழுத்து மூடிவிட்டு, தெருவில் இறங்கி நடந்தாள் ஆரோக்கியம், எதிரில் வரும் பெண்களை எல்லாம் நிறுத்தி விசாரித்தாள்.

    எங்க அழகம்மாளைப் பார்த்தீர்களா, அழகம்மாளை?

    எல்லோரும் பார்த்ததாகத்தான் சொன்னார்கள். அவள் எங்கே என்றுதான் யாருக்கும் தெரியவில்லை.

    ‘சேரித்தெரு முனையில் உள்ள சாயபுக் கடையில் ஒரே கும்பல்...’ ‘அந்தக் கும்பலில் இருப்பாளே!’ - கிழவி சாயபுக் கடையை நோக்கி ஒடினாள். கடையில் பெண்கள் கூட்டம் நிறைந்திருந்தது; அழகம்மாளைத்தான் காணோம்.

    ஏ! ஐயா, கடைக்கார ஐயா... எங்க அழகம்மா இந்தப் பக்கம் வந்தாளா, பாத்திங்களா ஐயா?...

    அட போம்மா, ஒனக்கு வேறே வேலையில்லே... நீ ஒரு பைத்தியம், அந்தப் பைத்தியத்தைத் தேடிக்கிட்டுத் திரியறே? எங்களுக்கு வேறே வேலையில்லியா? என்று எரிந்து விழுந்தான் கடைக்கார சாயபு – அவனுக்கு வியாபார மும்முரம்.

    பைத்தியம்; - அந்த வார்த்தையைக் கேட்டதும் கிழவிக்கு நெஞ்சில் உதைத்தது போலிருந்தது.

    ஆமாம்; இரண்டு மாதத்துக்குமுன் அழகம்மாள் பைத்தியமாகத்தான் இருந்தாள். இதே தெருவில். குப்பைத் தொட்டிகளைக் கிளறிக்கொண்டு, எச்சில் இலை நக்கிப் பசி தீர்த்துக்கொண்டு, ‘ஆடைபாதி’ ‘ஆள்பாதி’க் கோலத்துடன் பைத்தியமாத் திரிந்து கொண்டிருந்தவள் தான் அழகம்மாள்.

    இப்ப இல்லியே... இப்பத்தான் அழகம்மாளுக்குப் பைத்தியம் தெளிஞ்சு போச்சுதே! கிழவியின் உதடுகள் முணுமுணுத்தன. எப்படித் தெளிந்தது? கிழவிக்கு மட்டுமல்ல; எல்லோருக்கும் அது ஓர் புரியாத, நம்ப முடியாத புதிர், பேராச்சரியம்!

    இரண்டு மாதங்களுக்கு முன் ஒரு ஞாயிற்றுக்கிழமை காலையில் கிழவி ஆரோக்கியம் மாதாகோயிலுக்கு போகும் போது, மாதாகோயில் சாலையின் ஓரத்தில் உள்ள மணல் திடலில், ஓங்கி வளர்ந்திருந்த இரண்டு ஒதிய மரங்களுக்கு இடைவெளியில் உடலை மறைத்துக்கொண்டு ‘ஆயா ஆயா’ என்று பரிதாபமாகக் கூவினாளே, அழகம்மாள்... அதன் பிறகுமா அவளுக்குப் பைத்தியம்?

    ஆயா, நானும் உன்னை மாதிரி ஒரு மனுசப் பிறவி தானே?... ஒரு பொம்பளைப் பொண்ணு கட்டத் துணி இல்லாம முண்டமா நிக்கிறேனே, பாத்துக்கிட்டே போறியே ஆயா... என்று கதறியழுதாளே, அழகம்மாள் அதன் பிறகுமா அவளுக்குப் பைத்தியம்?

    அழகம்மாளின் அந்தக் குரல்... பத்து வருஷங்களுக்கு முன் தன்னை வெறுத்துவிட்டு யாருடனோ எங்கோ ஓடிப்போய்விட்ட மகள் இஸபெல்லாவின் நினைவைக் கொண்டு வந்தது.

    கிழவி குரல் வந்த திக்கை வெறித்துப் பார்த்தபோது, இடுப்புக்குக் கீழே ஒரு முழக் கந்தைத் துணியை, எட்டியும், எட்டாமலும் இருந்ததால் பக்கவாட்டில் முடிந்து கட்டிக் கொண்டு. காதலனைத் தழுவுவதுபோல் மரத்தோடு மார்பைச் சேர்த்து இணைத்து மறைத்தவாறு, தலையை மட்டும் திருப்பிக் கழுவில் ஏற்றிய குற்றவாளி போல் நின்று கதறும் அவள் இஸபெல்லவா?... அழகம்மாளா?... யாராயிருந்தால் என்ன? பெண்!

    கிழவி அன்று மாதா கோயிலுக்குப் போகவில்லை. குடிசைக்கு ஓடோடியும் வந்து தன்னிடமிருந்த கந்தல் புடைவை ஒன்றை எடுத்துக் கொண்டுபோய் அவளிடம் கொடுத்தாள். உடுத்திக்கொண்டதும் கண்கள் கலங்க, கரம்கூப்பிக் கும்பிட்டவாறு, ஆயா, நீதான் எனக்குத் தாய், தெய்வம்... என்று கூவிக் காலில் விழுந்தாளே, அழகம்மாள் - அதன் பிறகுமா அவளுக்குப் பைத்தியம்?

    ஆரோக்கியம் அழகம்மாளை வாரி அணைத்துக் கொண்டு, நீதான் எனக்கு மகள்... என்று கண்கள் தாரையாய்க் கண்ணீர் பொழியக் கூறினாளே...

    இருவர்க்கும் இருவர் துணையாகி - நாளெல்லாம் மாடாய் உழைத்து, பிச்சை எடுத்து கால்வயிறு கழுவிக் கொண்டிருந்த கிழவி ஆரோக்கியத்திற்கு முழு வயிறு சோறு போடுகிறாளே, அவளா பைத்தியம்?

    ‘இல்லை: என் அழகம்மா பைத்தியமில்லை’ என்று தீர்மானமாய்த் தலையை ஆட்டிக்கொண்டாள் கிழவி. பிறகு மாதா கோயில் சாலைவழியே தன் அழகம்மாளைத் தேடி நடந்தாள்.

    அந்த இடம் ரொம்ப அழகான பிரதேசம். பிரபலமாகப் பேசப்படும் காஷ்மீராகட்டும், கன்னியாகுமரியாகட்டும் அல்லது உலகின் பேர்போன எந்த உல்லாசபுரியாகட்டும் - அங்கெல்லாம் பிறக்காத ஒரு லயிப்பு, ஒவ்வொரு மனிதனுக்கும் ஏதாவது ஒரு வரண்ட பிரதேசத்திலோ, சந்து பொந்திலோ ஏற்பட்டுவிடத்தான் செய்யம். மற்றவர் கண்ணுக்கு ‘இது என்ன அழகு’ என்று தோன்றும், இந்த இடம் ஒருவனுக்கு இந்திரலோகமாகத் தோன்றும். அம்மாளுக்கும் அப்படித்தானா? அவள் பைத்தியமாக இருக்கும்போதுகூட அந்த இடத்தில்தான் அடிக்கடிக் காணப்படுவாள். மரங்களும், சிறு கற்பாறைகளுள், மணற்குன்றுகளும் நிறைந்த அந்தத் திடலில், கண்ணுக்கெட்டிய தூரம் காடாகக் கிடக்கும் அந்தத் திடலின் ஒரு ஓரத்தில், இரண்டு ஓதிய மரங்கள் ஒன்றில் ஒன் இணைந்து வளர்ந்திருக்கும் அந்த இடத்தில் அவள் சாய்ந்தும், கிடந்தும், இருந்தும், நின்றும் பொழுதைக் கழிப்பாள்.

    அதோ…

    நிலா வெளிச்சத்தில் சாலையோரத்தில் நெருங்கி வளர்ந்து நிற்கும் இரட்டை மரத்தில் சாய்ந்திருப்பது யார்...?

    அழகம்மா... அழகம்மா...

    - பதிலில்லை.

    கிழவி மரத்தினருகே ஓடினாள். அழகம்மாளேதான்! கன்னிமேரித்தாய் போல, தெய்வீக அழகாய் நின்றிருந்தாள் அழகம்மாள். ஆரோக்கியம் வந்ததைக்கூடக் கவனிக்காமல் சந்திரனில் என்னத்தைத் தேடுகிறாள்! அவள் முகத்தில் புன்னகையும் நிலவும் பொங்கி வழிகின்றன.

    அழகம்மா... கிழவி அவள் காதருகே குனிந்து மெல்ல அழைத்தாள்.

    ஆயா... நிலவில் பதிந்த பார்வை பெயராமல் குரல் மட்டும் வந்தது: கிழவிக்கு உயிரும் வந்தது.

    ‘தெய்வமே, அவளுக்குப் புத்தி பேதலித்து விடவில்லை...’ கிழவி தன் உடலில் சிலுவைக் குறி இட்டுக்கொண்டாள்.

    ஆயா இப்பொழுதும் பார்வை நிலவில்தான் இருந்தது.

    என்னாடி கண்ணே...

    அதோ நெலாவிலே பாரு... கிழவியின் வரி விழுந்த முகத்தில் இடுங்கிக் கிடந்த ஒளியிழந்த விழிகள் நிலவை வெறித்து விழித்தன.

    அதோ நெலாவிலே பாரு... நான் தெனம் ஒன்னைக் கேப்பேனே, ‘தேவன் வருவாரா’ன்னு... - கிழவிக்குத் தினசரி தன்னிடம் அவள் கேட்கும் அந்தக் கேள்வி

    Enjoying the preview?
    Page 1 of 1