Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Thodathoda Malarnthathenna...!
Thodathoda Malarnthathenna...!
Thodathoda Malarnthathenna...!
Ebook59 pages20 minutes

Thodathoda Malarnthathenna...!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

காவலன் அவன்! கல்லூரிக் காலத்தின் சொல்லாத காதல் காலம் கடந்து அவளைப்பார்க்கையில் அவளின் நிலைமை... மீண்டும் காதல் ஆழ்கடல் அமைதியில் மூழ்கி விடுமா? சிப்பியிலிருந்து வெளிவந்து ஒளி விடுமா? இன்னொரு சிக்கலாய் பின்னிவரும் மற்றொரு ஜோடிக் காதலேனும் கைகூடுமா? இல்லை இன்னமும் சிக்கலாக்கிக் கொள்ளுமா?

Languageதமிழ்
Release dateDec 11, 2023
ISBN6580135410416
Thodathoda Malarnthathenna...!

Read more from J. Chellam Zarina

Related to Thodathoda Malarnthathenna...!

Related ebooks

Reviews for Thodathoda Malarnthathenna...!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Thodathoda Malarnthathenna...! - J. Chellam Zarina

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    தொடத்தொட மலர்ந்ததென்ன...!

    Thodathoda Malarnthathenna...!

    Author:

    ஜே. செல்லம் ஜெரினா

    J. Chellam Zarina

    For more books

    https://www.pustaka.co.in/home/author/chellam-zarina

    பொருளடக்கம்

    இதழ் - 1

    இதழ் - 2

    இதழ் - 3

    இதழ் - 4

    இதழ் - 5

    இதழ் - 6

    இதழ் - 7

    இதழ் - 1

    கண்ணெதிரே தோன்றினாள்

    கனிமுகத்தைக் காட்டினாள்

    நேற்றுவரை ஏமாற்றினாள்...

    - கவிஞர்கண்ணதாசன்

    பட்ஸ்வேர்ல்டுஎன்ற பலகையிருந்த வீட்டின் கேட் முன்னே நின்றான் அவன். சுவரெல்லாம் கார்ட்டூன் சித்திரங்களால் நிறைந்து கண்ணைப் பறித்தது.ஸார்...ஸார்...என்று அழைத்தான்.

    உள்ளிருந்து பெண்ணொருத்தி வந்தாள்

    சூர்யப்ரகாஷ் ஸாரைப் பார்க்கனும். நான் பாண்டியன். சொக்கநாதப் பாண்டியன்

    அவள் கேட்டைத் திறந்து விட்டாள். கேட்டிலிருந்தே பக்கவாட்டில் ஒரு நடைபாதை பிரிந்து சென்றது. அங்கிருந்து லேசாய் சிறு குழந்தைகளின் கூச்சல் கேட்டது. அந்திப் பொழுதில் மரங்களில் கூடடையும் பறவைகளின் ஒலியே போல்’ கிச்கிச் ‘ சத்தம் கேட்டது.பெரிய வேப்பமரம் நிழல் பரத்தியிருக்க ஊஞ்சலும் ஸீஸாவும் கண்ணில் பட்டது. ஒரு க்யூட் குட்டிஏஞ்சல் குட்டிகுட்டிப்பாதத்தோடு வெளியே ஓடிவந்து எட்டிப்பார்க்க முன்னே போன அந்தப்பெண் அவளை ஒரு விரல் ஆட்டி செல்லமாய் மிரட்டினாள். அதுவோ அவளைப்போலவே விரல்நீட்டி காட்டிவிட்டு உள்ளே ஓடியது. இவள் முகம் மலர்ந்து சிரித்தது. இவனை ஹாலில் அமரச் சொல்லி விட்டு செல்போனில் அழைப்பும் விடுத்தாள்.

    இவள் அழைப்பை கட் செய்யும்போதே மாடியினின்றும் இறங்கி வந்த சூர்யப் பிரகாஷைக் கண்டு உட்காரப் போனவன் எழுந்து நின்று விறைப்பாக நின்றான்.

    ஹேய்! பாண்டியன்.!உட்காருங்க.

    என்றபடியே கைகுலுக்கி அருகிலமர்த்திக் கொண்டான் சூரியப்பிரகாஷ்.

    செல்விக்கா ரெண்டு காபி

    என்று உள்நோக்கி குரல் கொடுத்தவன்

    தென் பாண்டியன்...!மராட்டிய நாட்டை விட்டு கொங்கு நாட்டுக்கு வந்துட்டீங்க. இங்கே குவார்ட்டர்ஸ் இன்னும் அலாட்டாகியிருக்காதே.

    இங்கே அக்கா இருக்கிறாங்க ஸார். குழந்தைகளோடு தனியேதான் இருக்காங்க. ஸோ அவங்களோடு தங்கிக்கிடுவேன். உங்க எதிர்வீடுதான்.ப்ரச்னையில்லை

    வாவ்...கமலினி மேம் வீடா

    எஸ்ஸார். இதுலே இந்தக்கேஸ் பத்தின டீடெயில்ஸ் மொத்தமும் இருக்கு ஸார். இவனுங்க திடீர்னு மும்பையை ஏன் கழட்டிவிட்டுட்டு இங்கே காம்ப் போடறானுங்கன்னு தான் தெரியலை

    நம்பகமான தகவல்தானா பாண்டியன்

    ஹண்ரண்ட் பெர்சண்ட் ஸார்.

    இவனுங்களும் நம்மை ஸ்டேட் விட்டு ஸ்டேட் ஓடிப்பிடிச்சு ஆட்டம் காட்றானுங்க பாண்டியன். ஹையர் லெவல் ப்ரஷர் வேற.

    என்றவன் திரும்பிப் பார்க்க. அந்தப்பெண் கையில் காபிகோப்பைகளுடன் ஒரு ட்ரேயை சுமந்து வந்தாள்.

    சந்தியா! ஏண்டா? நீ இதையெல்லாம் எடுத்து வரே? செல்விக்கா எங்கே

    என்றபடியே எழுந்துவந்து அந்த ட்ரேயை கையில் வாங்கிக் கொண்டு அவளை சோபாவில் அமரவைத்தான்.

    செல்விக்கா மார்க்கெட்டு போயிட்டாங்கண்ணா. அம்மாவும் அப்பாவும் கோயிலுக்குப் போயிருக்கிறாங்க.

    பாண்டியன் அவளைப் பார்த்தான். பீச்நிற லாங்

    Enjoying the preview?
    Page 1 of 1