Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Mithrahasini
Mithrahasini
Mithrahasini
Ebook98 pages33 minutes

Mithrahasini

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

விரிந்துபட்ட மௌரியப் பேரரசின் சக்ரவர்த்தி சந்திரகுப்தனின் புதல்வன் பிந்துசாரன்.ஆசார்யர் சாணக்கியனின் பிரதம சீடன். தந்தையைப்போன்றே வல்லமையும் புத்திக் கூர்மையும் உடையவன். இவன் மீது மகதத்தின் இளவரசி ப்ரவல்லிகா தேவி மையல் கொள்கிறாள். வணிககுலத்தைச் சேர்ந்த மித்ரஹாசினியும் காதல் கொள்கிறாள். யுத்தபூமியில் களம் கண்டு வெற்றி கொண்டவனின் தடந்தோள்களில் எந்தப் பேரழகி மணமாலை சூடி காதலில் வாகைமாலை சூடப்போகிறாள்.? மித்ரஹாசினியை வாசித்தால் விடை தெரிந்து விடும்.

Languageதமிழ்
Release dateDec 27, 2021
ISBN6580135407913
Mithrahasini

Read more from J. Chellam Zarina

Related to Mithrahasini

Related ebooks

Related categories

Reviews for Mithrahasini

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Mithrahasini - J. Chellam Zarina

    pustaka_logo-blue_3x

    https://www.pustaka.co.in

    மித்ரஹாசினி

    Mithrahasini

    Author:

    ஜெ. செல்லம் ஜெரினா

    J. Chellam Zarina

    For more books

    https://www.pustaka.co.in/home/author/chellam-zarina

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    1. வீதியில் நிகழ்ந்த விபரீதம்

    2. பட்டுத்துகில் சொன்ன கதை

    3. விநாசகாலே விபரீத புத்தி

    4. பூந்தோட்டத்தில் ஒரு பூகம்பம்

    5. பெண் சிங்கங்கள்

    6. மகாகாலேஷ்வர் ஆலயம்.

    7. பிணைக்கைதியானான் பிம்பிசாரன்

    8. கானகத் தலைவன்

    9. அடவியில் நடந்த சந்திர பூஜை

    10. சக்ரவர்த்தியும் சாணக்கியரும்

    11. சேனாதிபதியின் கேள்வி

    12. காதலின் வேதனை

    13. குங்குமப் பிரசாதம்

    14. கன்னிப் போர்

    15. பட்டினப் பிரவேசம்

    16. நேசப் பயணம்

    பின்னுரை

    1. வீதியில் நிகழ்ந்த விபரீதம்

    மாலை நேர ஞாயிற்றின் செங்கதிர்கள் உஜ்ஜையின் மாகாணத்தையே தங்கம் போல மாற்றிக் கொண்டிருந்தன. கோட்டை வாயிலில் குழுமியிருந்தோரிடம் ஏதோ ஒரு பரபரப்பு கண்ணுக்குத் தெரியாத விசையாக ஆட்டிப் படைத்துக் கொண்டிருந்தது.

    உஜ்ஜையின் மாகாணத்துள் மெதுவே நடைபோட்டு நுழைந்தது அந்த வெண்ணிறப் புரவி. கோட்டை வாசலிலேயே மக்கள் குவிந்து கிடக்க நகரிக்கா

    * சொல்படி அதிகாரிகள் விசாரித்து உள்ளே அனுமதித்தனர். அந்த முன்னந்தி மாலையிலேயே இத்தனை கெடுபிடி நடக்கக் காரணம் இன்று ஆசாரியரும் பேரரசரும் வருகைதர உள்ளனர் என்ற செய்தியே.

    ***

    * நகரிக்கா- நகர அதிகாரி.

    புரவி வீரனும் அதிகாரி கேட்ட கேள்விகளுக்கு உரிய விடையைத் தந்தாலும் சற்றுத் தள்ளி நின்று இவனைக் கவனித்த நகரிக்காவுக்கு அவன் தோரணையும் அந்த உயர்ந்த ஜாதி அசுவமும் யாரோ பிரபுத்துவ குடும்பத்தைச் சார்ந்தவனாகத் தோன்ற மிகவும் சோதிக்காமல் அனுமதியைத் தரவே செய்தான்.

    கோட்டையினுள் நுழைந்து கடைவீதி வழியாக சற்றே வேகமெடுத்து செலுத்தினான். நல்லதொரு சத்திரத்தில் தங்கி ஓய்வெடுத்துக் கொண்டு நாளை தான் வந்த அலுவலைத் துவங்க எண்ணமிட்டபடியே செலுத்த புரவியும் சீராகவே நடை போட்டது. வணிகர்களின் கூச்சலும், சுமை தூக்குபவர்களின், பேச்சும் வாங்குகிறவர்களின் கூப்பாடுமாக இருந்தாலும் சுற்றிச் சுற்றி வந்து நிலைமையைக் கையிலெடுத்துக் கொண்டு மக்களை அடக்கியபடியே வரிசையைக் கணித்த மௌரிய வீரர்களை மெச்சிக்கொண்டான் அந்த வீரன். வீதியின் முனையில் திரும்ப யத்தனித்த சமயம் தான் அந்த விபரீதம் நடந்தது.

    இவனுக்கு இடது புறமாக முத்துச் சிவிகையொன்று நகர்ந்தது. முத்தும் கற்களும் பதிக்கப்பட்டு சீனத்துப்பட்டின் மென்துகில் இருபுறமும் பட்டுநூலால் கட்டப்பட்டிருக்க பார்த்ததுமே தெரிந்தது எவரோ அரசகுலப் பெண்டிரின் பால்கியென. சிவிகையினுள்ளே பயணித்தவரின் வதனம் மேகத்தினிடையே மறைந்து மறைந்து தெரியும் முழுமதி போல அந்தத் திரைச்சீலைக் கிடையே தெரிந்து தெரிந்து மறைந்தது.

    ***

    *பால்கி- பல்லக்கு.

    பெண்களைக் கூர்ந்து கவனிக்கிற பழக்கம் இல்லாத இளைஞனோ அதை கவனத்தில் கொள்ளாமல் முன்னேறினான். சிவிகைக்குப் பாதுகாவலாக முன்னும் பின்னும் குதிரை வீரர்கள் சிலர் நடைபோட, எதிர்த்திசையில் வந்த ஒரு அந்தர் விம்சகாவின்* பழுப்பு நிறப் புரவி வெகு வேகமாக வர, இடையில் ஒரு பத்து வயது சிறுவன் அகப்பட்டுக் கொண்டான். அவன் தாயார் போலும். அவள் கூக்குரலிட்டு அலறினாள்.

    ***

    *அந்தர் விம்சகா- காவலர் தலைவன்.

    புரவி இளைஞன் நொடியில் நடப்பதை ஊகித்தவனாக தன் புரவிக்கு அழுத்தம் தர, மின்னலைப் போல புரவி இடைபுகுந்துவிட, கண்ணிமைக்கிற நேரத்தில் புரவியையும் நழுவவிடாமல் சேணத்தைக் காலால் ஊன்றிப் புரவியின் மேலிருந்தவாறே கீழே விழுந்த சிறுவனை ஒரே கையால் குனிந்து தூக்கி குதிரையின் மீது அமர்த்திக் கொண்டு சில அடி தூரம் முன்னே பாய்ந்துவிட்டான்.

    சிவிகைப் பெண்மணி வியப்பு மேலிடப் பார்த்தாள். அந்தர் விம்சகாவோ நன்றியோடு குதிரை வீரனைப் பார்த்துவிட்டுநன்றி நண்பா! என்றபடியே அந்தத் தாயையும் வணங்கியபடியே விரைந்தான்.

    மன்னித்துவிடுங்கள் தாயே! என்ற சொல்லும் தேய்ந்து மறைந்தது.

    அந்த காவலர் தலைவனின் செயலும் கோரிக்கையும் அந்த இளைஞனைப் பெருமை கொள்ள வைத்தது.

    அத்தனை இக்கட்டிலும் அந்த வீரன் செலுத்திய வணக்கமும் கேட்ட மன்னிப்பும் கர்வம் தந்தது. மௌரியப் பேரரசின் கட்டமைப்பும் நாகரிகமும் இன்னும் பலம் கூட்டுபவை என்றெண்ணிக் கொண்டான்.

    சிறுவனைத் தாயிடம் ஒப்படைத்தவன் வீதியின் திருப்பத்தில் மறைந்து போனான்.

    சிவிகை அரண்மனை வீதியில் பெரிய மாளிகையின்

    Enjoying the preview?
    Page 1 of 1