Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Manasellam Unaiezhuthi...!
Manasellam Unaiezhuthi...!
Manasellam Unaiezhuthi...!
Ebook82 pages29 minutes

Manasellam Unaiezhuthi...!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

கணவனே பிரபல கார்ட்டியாலஜிஸ்ட் கணவரின் குடும்பத்திற்கு ஒரு நவீன மருத்துவமனையே சொந்தம். புகுந்தவீட்டில் தடுக்கி விழுந்தால் மருத்துவர்கள் அப்படியும் வானதிக்கு வந்த ப்ரச்னைதான் என்ன? அதிலிருந்து எப்படி மீள்கிறாள்? மனசெல்லாம் உனையெழுதி காத்திருக்கும் டாக்டர் எஸ்கேவைத் தொடருங்களேன்...

"கேம்ஷோ"

ஒரு பிரபல டி. வி சேனல் நடத்தும் ரியாலிட்டி கேம்ஷோவில் ஒரு பள்ளிமாணவி தன் கல்லூரிப்படிப்புக் கனவுக்காக கலந்து கொள்கிறாள்.

அந்தச் சிறுமியைச் சுற்றி நடக்கும் காதல் நாடகம் துரோகம் வாஞ்சையுடன் வஞ்சகமாய் காட்டப்படும் அப்பா பாசம் இவற்றில் மீண்டு இலக்கை அடைவாளா .?இனம்கண்டு மீள்வாளா? வீழ்வாளா? கனவு நனவாகுமா? இல்லை வாழ்வே அமுத விஷமாகுமா?

கேம்ஷோவின் கதாநாயகி சன்விதாவை காக்க நாமும் உள்நுழைவோமா?

Languageதமிழ்
Release dateJan 13, 2024
ISBN6580135410634
Manasellam Unaiezhuthi...!

Read more from J. Chellam Zarina

Related to Manasellam Unaiezhuthi...!

Related ebooks

Reviews for Manasellam Unaiezhuthi...!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Manasellam Unaiezhuthi...! - J. Chellam Zarina

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    மனசெல்லாம் உனையெழுதி…!

    Manasellam Unaiezhuthi...!

    Author:

    ஜே. செல்லம் ஜெரினா

    J. Chellam Zarina

    For more books

    https://www.pustaka.co.in/home/author/chellam-zarina

    பொருளடக்கம்

    மனசெல்லாம் உனையெழுதி...!

    கேம் ஷோ

    மனசெல்லாம் உனையெழுதி...!

    1

    எஸ்கே! நான் பார்த்தது உன் மனைவி வானதி தான்.

    எஸ்கே என்றழைக்கப்படும் சாய் குமார் எதிரிலிருந்தவனை கூர்ந்து பார்த்தான். மாதவனும் அவனும் ஒரே அறையை ஐந்து வருடங்களாகப் பகிர்ந்து கொண்ட நண்பர்கள். மெடிக்கல் காலேஜின் முதல் நாளிருந்து கடைசி வரையும் ரெட்டையர்களைப் போலவே சுற்றி வந்தவர்கள். இவன் கார்டியாலஜி ஸ்பெஷலைஸ்டு பண்ண மாதவன் யுரோலஜி எனும் சிறுநீரகவியலைத் தேர்வு செய்தான். ஆயினும் அவ்வப்போது சந்தித்து நட்பை வளர்த்துக் கொண்டனர். இப்போதுதான் நான்கைந்து வருடங்களாகத் தொடர்பு அறுந்திருக்க திடிரென அமைந்த இந்த சந்திப்பில் நட்பு தன்னைத்தானே புதுப்பித்துக் கொண்டது.

    இருவரும் ஒரு மெடிகல் செமினாருக்காக வந்திருந்த இடத்தில் ஐந்து நட்சத்திர ஹோட்டல் ஒன்றின் உணவகத்தில் அமர்ந்திருந்தனர்.

    ஆங்காங்கே பலரும் உணவருந்திக் கொண்டிருந்தனர். உணவைவிட பேச்சுக்களே அதிகம். கிசுகிசுப்பான சன்னஸ்தாயியில் முணுமுணுவென்ற நுனிநாக்கு ஆங்கிலம்.

    சாய் குமாரும் மாதவனும் ஓரமாய் எதிரெதிரான இருக்கைகளில் அமர்ந்திருந்தனர்.கண்ணாடி சன்னலினூடே நீச்சல்குளமும் சில குழந்தைகள் கூச்சலிடுவதும் ஊமைப்படமாய்த் தெரிந்தது.

    எஸ்கே! என்னிடம் உன் புது நம்பர் இல்லை. அது மிஸர்ஸ் வானதிதான். ஒரு குழந்தையின் ட்ரீட்மெண்டுக்காக வந்திருந்தாங்க. அந்த சமயம் பார்த்தேன். நம்ப பாட்ச்மேட் குஜ்ரால்தான் டாக்டர்.நீ வேணும்னா...

    அவனுடய மொபைல் இசைக்க எக்ஸ்க்யூஸ் மீஎன்று நகர்ந்து விட்டான்.கையில் குளிர்பானத்துடன் ஓரமாய் ஒதுங்கியவனுக்குள் ஏதேதோ எண்ணங்கள் அலையடித்தன.

    .குஜ்ரால் வைசாக்கில் தானே வேலை பார்க்கிறான். அப்போ வானதி வைசாக்கில் இருக்கிறாளா? வைசாக்கில் இவளுக்கு யாரைத் தெரியும்.? இவளுக்கு மொழிகூடத் தெரியாதே ? எப்படி? யாருடன் போனாள்? என்ன குழந்தை? யாருக்கு வைத்தியம். இவள் பொள்ளாச்சியைத் தாண்டியதே கல்யாணத்தின் போதுதானே. என்னிடமே சொல்லியிருக்கிறாளே. தலையை உலுக்கிக் கொண்டான்.

    இப்படித்தான் ஒருநாள் இதே போல் டில்லிக்கு ஒரு மெடிக்கல் கான்ஃப்ரன்சுக்கு போயிருந்த சமயம். காணாமல் போனாள். எங்கு தேடியும் கிடைக்காமல் உண்ணவோ உறங்கவோ முடியாமல் காரணமும் புரியாமல் கையில் ஒரு வயது நிசப்தியோடு பேரவஸ்தையாய்...பைத்தியம் பிடிக்காதது ஒன்றுதான் குறை. ‘தாயைத்தேடித் தவிக்கும் குழந்தையோடு எத்தனை அவதி பட்டேன். நானும்தானே நிசப்தி போலவே தாய்மடி தேடும் கன்றாய் ஏங்கியழுதேன்.’

    இப்போதுமே அப்படித்தான் சிந்தனை அலமந்து போனது.

    ‘எங்கெங்கெல்லாமோ தேடினேனே முட்டாளைப்போல். தமிழ்நாட்டை விட்டு நகரச் சான்சேயில்லை என்று நான் நினைக்க இவள் மாநிலம் விட்டு மாநிலம் போய் விட்டாளா...?’

    மனமெல்லாம் கரித்துக் கொண்டு வந்தது. கட்டிய கணவனை நம்பவேயில்லை...அவன் காதலையும் மதிக்கவேயில்லை. அவனை நினைக்கவுமில்லை.பெற்ற குழந்தையும் கூட தேவையில்லை...!

    கண்ணோரம் கசிந்தது. தனிமை தேவை பட்டது எஸ்கேவுக்கு. சட்டென்று எழுந்து கொண்டவன் யாருடைய கவனத்தையும் ஈர்க்காமல் சட்டென்று வெளியேறி காரிலேறிக் கொண்டான். இலக்கற்ற பயணம். எங்கே போகிறான்... எதைத்தேடி போகிறான்?...?

    மனம் மட்டும் வானதியை சுற்றி வந்தது.

    ***

    பாட்டிக்கு உடல்நலமில்லையென்று அவர் ஊருக்கு வந்த நேரம். அப்பாவைப் பெற்றவர். அவரை சாய்குமாருக்கு மிகவும் பிடிக்கும். மகனுடைய நிழலில் தங்கப் பிரியப் படாமல் தனியே கம்பீரமாய் கணவரோடு வாழ்ந்த வீட்டிலேயே இப்போதும் வாழ்ந்துவரும் மகாராணி. வைதவ்யம் கூட தங்கம் போல ஜ்வலிக்கும் என்று அவரைக் கண்டபின்பே உணர்ந்தான்.

    பொள்ளாச்சியருகே இருக்கும் என்டிஎம் என்று சுருக்கமாய் அழைக்கப்படும் நல்லதங்கச்சி மடம் என்னும் டவுன். பாய் விரித்துக் கிடக்கும் பசுமைப் போர்வை. மலைக்குன்றுகளின் காரணமாய் அணைத்துக் கொள்ளும் மழைத்தூவல்களினால் குளுமை.மரகதப் பச்சை கண்வழியே மனசுக்குள் இறங்கி சாய் குமாரைக் குளிர்வித்தது.

    சென்னையில் வளர்ந்தவனுக்கு இந்தப் பசுமையும் லேசான குளிர்காற்றும் அத்தனை சந்தோஷம் தந்தது.

    பாட்டியின் நலம் விசாரித்து விட்டு மறுநாளே திரும்பிவிட நினைத்தவனை கட்டிப்போட்டது ஊரின் இயற்கையழகு மட்டுமல்ல. ஒரு தாவணி போட்ட கிளியும் தான்.

    நீளமான சாட்டைப் பின்னலும் மாநிறத்துக்கு மேலான நிறமும் வட்டக்கருவிழியும் இடதுபக்க சிவப்புக்கல் மூக்குத்தியும் இழுத்துக் கட்டிய தாவணிக்கட்டும் தோளில் தவழ்ந்தாடும் மல்லிப்பூச்சரமும் அவன் கண்ணில் பட்ட மறுகணமே அவனை திக்குமுக்காட வைத்தது. சென்னையில் பார்க்காத

    Enjoying the preview?
    Page 1 of 1