Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Murintha Ambugal
Murintha Ambugal
Murintha Ambugal
Ebook222 pages1 hour

Murintha Ambugal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

கதை சொல்வது முதியவர்களின் அனுபவக்கொடை; கேட்பது இளையவர்களின் ஆனந்த நிலை. இது ‘நேற்று இன்று வந்தது அன்று’; ‘நெடும் பண்டைக்காலம் முதல் நேர்ந்து வந்ததாம்’, நாடோடிக் கதைகள், தெனாலிராமன் கதைகள், விக்கிரமாதித்தன் கதைகள், ஈசாப் கதைகள், 1001 இரவுகள் என்று பலப்பல பெயர்களில் கதைகள் கூறும் பாங்கும் போக்கும் பல்வேறு கால கட்டங்களில் உலகெங்கும் வளர்ச்சி பெற்றிருக்கின்றன. இந்தச் சிறுகதைகளின் சுவையையும் தேவையையும் உணர்ந்த இதிகாச, காப்பிய ஆசிரியர்களுக்கும்கூடச் சிறுகதைகளைக் கிளைக் கதைகளாக இணைத்துக்கொண்டு செல்ல வேண்டிய நெருக்கடிகளும் ஏற்பட்டிருக்கின்றன. சிறுகதை என்று எதைக் கூறுவது? எதற்காகக் கூறுவது? எப்படிக் கூறுவது? இவை, சொல்லப்பட்ட காலச் சூழலையும், கதை ஆசிரியனின் நோக்கத்தையும், கதை கேட்போரின் மனப்பக்குவத்தையும் பொறுத்தது. சிறுகதையின் சுவை குன்றாமல் உள்ள முறிந்த அம்பை வாசிக்கலாமா இந்திரா சௌந்தர்ராஜனின் பாணியில்...

Languageதமிழ்
Release dateJul 2, 2021
ISBN6580100706879
Murintha Ambugal

Read more from Indira Soundarajan

Related to Murintha Ambugal

Related ebooks

Reviews for Murintha Ambugal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Murintha Ambugal - Indira Soundarajan

    https://www.pustaka.co.in

    முறிந்த அம்புகள்

    Murintha Ambugal

    Author:

    இந்திரா சௌந்தர்ராஜன்

    Indira Soundarajan

    For more books

    https://www.pustaka.co.in/home/author/indira-soundarajan-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    மதிப்புரை

    பேராசிரியர் சாலமன் பாப்பையா,

    தலைவர் - தமிழ்த்துறை. அமெரிக்கன் கல்லூரி, மதுரை

    கதை சொல்வது முதியவர்களின் அனுபவக்கொடை; கேட்பது இளையவர்களின் ஆனந்த நிலை. இது ‘நேற்று இன்று வந்தது அன்று’; ‘நெடும் பண்டைக்காலம் முதல் நேர்ந்து வந்ததாம்’, நாடோடிக் கதைகள், தெனாலிராமன் கதைகள், விக்கிரமாதித்தன் கதைகள், ஈசாப் கதைகள், 1001 இரவுகள் என்று பலப்பல பெயர்களில் கதைகள் கூறும் பாங்கும் போக்கும் பல்வேறு கால கட்டங்களில் உலகெங்கும் வளர்ச்சி பெற்றிருக்கின்றன. இந்தச் சிறுகதைகளின் சுவையையும் தேவையையும் உணர்ந்த இதிகாச, காப்பிய ஆசிரியர்களுக்கும்கூடச் சிறுகதைகளைக் கிளைக் கதைகளாக இணைத்துக்கொண்டு செல்ல வேண்டிய நெருக்கடிகளும் ஏற்பட்டிருக்கின்றன.

    சிறுகதை என்று எதைக் கூறுவது? எதற்காகக் கூறுவது? எப்படிக் கூறுவது? இவை, சொல்லப்பட்ட காலச் சூழலையும், கதை ஆசிரியனின் நோக்கத்தையும், கதை கேட்போரின் மனப்பக்குவத்தையும் பொறுத்தவை.

    நண்பர் இந்திரா சௌந்தர்ராஜன் வயதில் இளையவர்தான். ஆனால் அண்மைக் காலத்தில் தமிழகத்து வார இதழ்கள் இவரது கதைகளை வெளியிடுவதில் பெருமை கொள்கின்றன. காரணம், இவரது கதைகளை இளையோரும், முதியோரும் ஒரு சேரப் படித்துச் சுவைக்கின்றனர். மதுரையில் T.V.Sன் ‘சுந்தரம் பாசனர்ஸ்’ என்னும் நிறுவனத்தில் பணிபுரியும் இந்த நண்பரை இதழ்களின் வாயிலாகவே அறிந்திருந்த நான், நேரடியாகக் கண்டு பழகும் வாய்ப்பினையும் பெற்றேன்.

    முதுமை, வெற்றிலைப் பெட்டி, அல்லது தொடர் சிகரெட், ஜிப்பா என்று என் கற்பனையில் வடிவெடுத்திருந்த இந்திரா சௌந்தராஜனுக்கு எதிராக இளமையும் அளவான பேச்சும், அடக்கமான சிரிப்பும் கொண்ட சௌந்தர்ராஜனின் உண்மையான தோற்றத்தில் என் கனவு கலைந்து தான் போனது. அவரோடு கூடப் பயணித்தது, பழகியது, பேசியது எல்லாம் அவரை நான் அறிந்துகொள்ளப் பெரிதும் உதவின. அந்த நட்பில் நடை தளராமல் அவரது கவிதைச் சோலையில் மலர்ந்த மலர்களை ஒரு பார்வை பார்க்கத் தொடங்கினேன்.

    இப்போதெல்லாம் ஒரு வார இதழைப் பார்த்த உடனேயே அதன் அமைப்பு மட்டும் அன்று; அதற்குள் அடங்கியிருக்கும் சரக்கும் எப்படி இருக்கும் என்று எளிதில் சொல்லிவிடலாம். எந்த இதழுக்கு எப்படி எழுதினால் எளிதாகத் தன் படைப்பு வரும் என்பதை இன்றைய எழுத்தாளர்கள் மிக நன்றாகவே தெரிந்திருக்கிறார்கள்.

    இந்தக் கதை ஆசிரியரும் அப்படி இருப்பாரோ என்று ஒரு பருந்துப் பார்வை பார்த்து நான் ஏமாந்து போனேன். தன் வழி தனி வழி என்று இவர் காட்டிவிட்டார். ஆனந்தவிகடன், கல்கி, இதயம், சாவி, ஜனரஞ்சனி, கலைமகள், ராஜம், அமுதசுரபி, புதிய உமா, ராணி, தேவி, மங்கை, என்று வெவ்வேறு கோணங்களில் வரும் இதழ்களில் எல்லாம் எழுதியிருக்கிறார். ஆனால் தூங்காத தர்மங்கள் இவருடைய கதையில் மட்டும் அன்று; இவருடைய மனத்திலும் தூங்காமல் குதி போட்டுக்கொண்டே இருக்கின்றன என்பதைக் கண்டு வியந்துபோனேன்.

    ஆள்வதும் ஆழப்படுவதும் பற்றிய அரசியல் சாம்ராஜ்ஜியத்தின் ஆழ, நீள, அகலங்களின் அரிச்சுவடிகூடத் தெரியாத அப்பிராணி மக்கள் எனும் மந்தை வெளியில் தந்திரக் கடை பரப்பித் தனி வியாபாரம் செய்யும் கட்சி அரசியல் வியாபாரிகள்; அந்த வியாபாரிகளின் மொத்த வடிவமே பிரகாசம். சொந்தக் காலில் நின்று மக்களுக்குச் சுந்தரமும் சுதந்திரமும் தந்துவிட வேண்டும் என்ற தர்ம ஆவேசந்தான் சுயேட்சை சுந்தரம். அவனது தர்ம மந்திரம், மாங்காய் பறிக்கும், மாயம் செய்யாமல் போகவே உண்ணாவிரதப் போரில் உயிர்நீத்து விடுகிறான்!

    இது கட்சி அரசியல்வாதிகளை நம் கண் எதிரே தோலுரித்துக் காட்டித் தொங்கவிடும் சாதனைதான்; இதைப் படிக்கும்போது இந்த வகைத் தேர்தல் அமைப்பில் எங்கோ ஒரு கோளாறு இருக்கிறது என்பதை நாம் எளிதாக விளங்கிக்கொள்ளுமாறு ஒரு தேர்தல் அரசியல் பற்றிய விமர்சனம் தெளிவான கதையாக வந்துவிட்டதே!

    இது பாவமாகுமா? தெரியாமல் நடந்ததுதானே? ‘இதெல்லாம்கூட வேள்விதான்’ - கதையை மேலோட்டமாகப் பார்க்கும்போது இப்படித்தான் நினைக்கத் தோன்றும். ஆனால் மனசாட்சியுள்ள பௌராணிகர் பத்மநாபன்; அவருடைய மனைவிக்குத் தெரியாமல் நிகழ்ந்துவிட்ட அந்தச் சாவைப் பச்சைப் படுகொலையாகக் கருதி அந்த மனிதன் குற்ற உணர்வால் குமுறுவதும்; பிள்ளையை இழந்த துக்கம் ஒரு பக்கம்; பௌராணிகர் கதை சொல்வது தடைப்பட்டுப் போகுமோ என்ற தவிப்பு மறுபக்கம்; இரண்டிற்கும் இடையில் கல்லாத ஒரு சலவைத் தொழிலாளி துடிப்பதும்; தன் கண்ணான பிள்ளையைக் கடைநிலைச் சாதியாளருக்குத் தத்தம் பண்ணுவதா என்று பங்கஜகாமாட்சி பரிதவிப்பதும்; அப்பாவின் மனப் போராட்டத்திற்கு ஒரு முடிவுகட்டப் புராணச் சான்றுகளைப் புதுப்பிக்கும் கலாதரன் கொள்ளிச்சட்டியுடன் நடக்கும் நடையும் சாதி, பாசம் ஆகியவற்றின் பெருமையிலும் தர்மத்தின் மேன்மை பெரிது என்று காட்டிவிடுவது மட்டும் அல்ல; இதில் எவர் செய்த வேள்வி பெரிது என்றல்லவா நம்மை எண்ணத் தூண்டி விடுகிறது. சாதியால் அல்ல; தர்மச் சாதனையால் இவர்கள் அனைவரும் மேன்மக்கள் ஆகிவிட்டார்களே!

    இந்தச் சாதியின் புன்மையை அல்லது மேன்மையை ‘காதலின் நிறங்கள்’ என்ற கதையிலும் காட்ட முயல்கிறார். சாதியைக் காப்பதற்கு என்றே மகளின் ஆசையை அறிந்திருந்தும் ஒரு தவறான திருமணத்தை அவளுக்குச் செய்து வைத்து விட்டார் ஊரின் பெரியதனக்காரர் ஒருவர். அவருடைய மகள்தான், மனக்கதவை மூடத் தெரியாத அன்னமயில். ராச மாணிக்கத்தின் ஆசை வெளிகளில் நடந்து பழகிவிட்ட அவளது நேசம் மிக்க நெஞ்சத்தைப் புரிந்துகொண்ட புலிப்பாண்டிக்குள்ளும் எத்தகைய காதல்! காதலரை ஒன்று சேர்த்து விட நினைத்த காதலிலே அவன் ஆடிய ஆட்டங்கள் தான் எத்தனை? ஒவ்வொருவர் காதலுக்குத்தான் எத்தனை எத்தனை நிறங்கள் என்று வியக்க வைத்து விட்டாரே. இந்தக் கதையிலும் சாதியச்சுவர் மெல்லக் கிழடு தட்டிச் சரியத் தொடங்கிவிடுகிறது. சனாதனச் சாதியச்சதுப்பு நிலத்தை புதிய சிந்தனையாம் மலைப் பாறைகளை இட்டுக் கெட்டிப்படுத்துகிறார்.

    ‘கோயில் பூசை செய்வான் சிலையைக் கொண்டு விற்றல் போலும்’ என்று பாரதி எதை ஆதாரமாகக்கொண்டு பாடினானோ தெரியவில்லை; அவனது காலத்திற்குப்பின் சிலையைக் கடத்தும் கலையில் தமிழகம் தலைமை பெற்று வருகிறது. ‘கண்ணாத்தா’ அப்படித்தான் கடத்தப்படுகிறாள். கடவுளா? அவளுக்கே இந்தக் கதிதானா என்ற கெக்கலிப்பு நம்மைக் கொஞ்சம் கஷ்டப்படத்தான் செய்துவிடுகிறது. இல்லை; அவள் அப்படி விடமாட்டாள் என்ற ஆவேசத்தின் ஓவியந்தான் இந்தக் கதை.

    இதே ஆவேசந்தான் ‘தூங்காத தர்மங்கள்' ஆகவும் மலர்ந்திருக்கிறது. ‘இவ நெருப்பாச்சே... தொட்றவன் சர்வ நாசமாயிடுவானே’ என்ற பொன் குறிஞ்சியின் பதிலும் சரி; ‘உலகையே பராமரிக்கிற நீ நிஜம்னா என் பிரார்த்தனைக்கும் வேண்டுகோளுக்கும் இரங்கு’ என்ற மதிவாணனின் பிரார்த்தனையும் சரி அநீதியை ஆண்டவன் பொறுப்பதில்லை என்று சாதுக்களுக்கு மன தைரியம் தரும் நேற்றைய கதைகளின் நிழல்களே; நிஜங்களே.

    அப்படியானால் நீதியைச்செய்வதை மட்டுமே நாம் எடுத்துக்கொண்டு, அநீதியை அழிப்பதை ஆண்டவனிடமே விட்டுவிட்டு அமர்ந்துவிடலாமா? இல்லை; கூடாது. ஆண்டவனே தன் சொந்த லோகத்தை விட்டுவிட்டு இந்த லோகத்திற்கு வந்து அநீதியை அழித்த பாடங்களை நாம் மறந்துவிடலாமா? சொந்த லாபத்திற்காக அல்லாமல் ‘லோக க்ஷேமத்’திற்காக அநீதி வடிவங்களை வேரறுக்கும் வேலையை நாமும் செய்துதான் ஆக வேண்டும். இதைத்தான் ‘தனி ஒரு மனிதனுக்கு உண(ர்)வில்லையெனில்’ தொடங்குகிறார். தியாகி வீட்டுப் பிள்ளைதான்; இன்றைய அமைச்சர் வீட்டுப் பிள்ளையாக ஆடுகிறான்; அவனது அக்கிரமங்களே அவனைக் கொல்லும் என்று பெரிய கருப்பத்தேவர் விட்டு விடவில்லை; ‘மனசுக்குத் தீவைத்த போதெல்லாம் தாங்கி’க்கொண்டவர் ‘தேசிய கீதத்தை நொறுக்கிய போது’ மட்டும் ருத்ரமூர்த்தியாகி மகனையே கொன்றுவிடுகிறார். ஒரு நவீன மனு உருவாகிவிட்டார்.

    ‘அக்கினிசாமி’ அவன்தான் எத்தகைய கொடியவன்? நகர வாழ்க்கையில் ஒரு நரக மனிதன். அவனது அராஜகத்தை ஆண்டவனிடம் சொல்ல யாருக்கும் தெரியவில்லை; அரசோ (போலீஸோ) கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கிட்டுப் போங்க சார்’ என்கிறது. அட்ஜஸ்ட் பண்ணுகிற விஷயமா இது. மகளின் மான விஷயம்! கருணாகரன் துணிந்துவிட்டார். ‘கையாலாகாத கோழையா மூச்சு விடறதைவிட மனசாட்சி முன்னால ஒரு குற்றவாளியா நிக்கறது மேல்னு’ முடிவெடுத்து ஒரு டாக்டராகச் செயல்படாமல் கொலைகாரனாகவே நின்றுவிட்டார்.

    அக்கினிசாமி மட்டும் அன்று; ‘ஒரு பாரத தேசத்து வீதி’யின் சாரங்கனும் இந்த ரகந்தான். கட்டுப்பாடற்ற ஜனநாயக வளர்ச்சியில் வெடித்த கள்ளி இவன். இவனை யார் திருத்துவது? திருத்தத்தான் முடியாதே! ‘கொலையிற் கொடியாரை வேந்தொறு’க்க வேண்டும். அதுவே தடம் புரண்டு கிடக்கும் போது யார் தான் இவனை ஒறுப்பது? ஒரு பிச்சைக்காரன் அந்த வேலையைச் செய்துவிடுகிறான். ‘தண்டனை கொஞ்சம் அதிகப்படிதான்; ஆனால் வேறவழி இல்ல’ என்ற பிறகுதான் இந்த முடிவு என்று சமாதானமும் தருகிறார்.

    ‘இதெல்லாம் கூட காதல் தான்’ என்ற கதையில் இன்னொரு வகையான கொடியவன் வருகிறான். வின்சென்ட்; கட்டிய மனைவி இருக்க, அவளை மட்டும் அல்ல; காதலின் மேன்மையை அறியாத அறியாமைப் பெண்ணை - வித்யாவை - அக்கிரம வலைக்குள் சிக்கிய பறவையாய் ஆக்கிவிடுகிறான். பாசப்பிணைப்புகளைப் பாழடித்துக்கொண்டு நேசம் என்ற பெயரில் மோசம் போகும் ஆசைச் சகோதரியின் அறியாமையை அகற்ற முடியாத சூரிய நாராயணன் அதற்கும் ஒரு முடிவு கட்டுகிறான், வின்சென்டின் கொலையில்.

    நரகாசுரர்கள் காடுகளில் வாழ்ந்ததாகத்தான் இதிகாசங்கள் கூறின. இப்போதோ தெருக்களுக்கே வந்துவிட்டார்களே; அவர்களை வதம் செய்யத்தானே வேண்டும்? அதற்காகவே படைக்கப்பெற்ற வீமன்களைத்தான் இந்தக் கதைகளில் நாம் காண்கிறோம். இந்த நரகாசுரர்களின் வதையில் நம்மில் யாருக்கும் வருத்தம் உண்டா? இல்லையே; நாம் அந்த வீமனாக முடியவில்லையே என்ற வருத்தந்தான் வருகிறது. ‘பாதகம் செய்பவரைக் கண்டால் - நாம், பயங்கொள்ளல் ஆகாது - மோதி மிதித்து விடு பாப்பா’ என்ற பாரதியும் நம் முன் அடிக்கடி தோன்றுகிறார்.

    ‘பூ பாரத்தைப் போக்கவும்’ ‘உலகின் பாவத்தைச் சுமந்து தீர்க்கவும்’ அவதாரங்கள் வந்துவிட்டன. ஆனாலும் இந்தப் பெண் ஜென்மங்கள், காலம் எல்லாம் சுமக்கும் கஷ்டங்களைப்போக்க மட்டும் அவதாரங்களே வரவில்லையே. அப்படி என்ன அவர்கள்படும் துயரங்கள் சாமான்யமானவை தாமா? இல்லையே. ‘முறிந்த அம்புகள்’ காட்டும் ஊமைச் சாரதா; ‘இனியாவது’ தரும் கனகு; ‘இளமை எத்தனங்கள்’ சொல்லும் இளம் பெண்; ‘வீதிக்கு ஒரு தர்மா’ படைத்த சாரதா; ‘நீலவேணி’ ‘சிரிப்பார்கள்’ வடிக்கும் செண்பகம். இந்தப் பெண்களை எல்லாம் படித்தபிறகு அவர்களோடு நம் தாயை, பிள்ளையை ஒப்பிட்டுக்கொள்ளும் போது நம் இதயத்தில் இரத்த வேர்வை ஏற்படவில்லையா?

    இவர்களை விடுவிப்பது தான் எப்படி? சாரதாவைக் கோபாலின் கொலை வளையத்துள்ளிருந்து மீட்கும் ராமரத்தினம் மட்டும் போதாது; அவளைத் தன் மருமகளாகவே ஆக்கிக்கொள்ளும் ராமரத்தினம் இந்த மாற்றத்தை ஏற்றுக்கொள்ளும் சாரதா, ராஜு சமூகம் என்ற புதிய பரிணாம வளர்ச்சியும் வேண்டும் என்று காட்டிவிடுகிறார். சீதாராமன் மீது வெறும் எரிச்சலும் ஏச்சும் கொட்டுவது மட்டும் போதாது. அவனது மோசடியை மோசடியாலேயே முடித்துவிடும் தர்மாவும் வேண்டும்; தர்மாவிற்குத் துணை போகும் டாக்டர் சாந்தாவும் வேண்டும். கட்டியவளைக் கட்டி அணைப்பதில் மட்டும் கருப்பில் வெறுப்பு; அவள் கை தொட்டுத் தன் கால் பிடிக்க மட்டும் மனதில் விருப்பு; இப்படி ஒரு மனித மன்மதன் ராஜேந்திரன்! ‘அவன் திகைக்கும்போது நான் கைகொட்டிச் சிரிக்கணும்’ என்ற தவிப்பில் புதுமை படைக்கும் செண்பகம். இவர்களை எல்லாம் இன்றைய தலைமுறை நாளைய தலைமுறையின் நல்வாழ்விற்கு அடித்தளம் போடும் சிற்பிகளாய் அங்கீகரித்துத்தான் ஆகவேண்டும்.

    கற்பூர ஜோதியாக இருக்க வேண்டிய திருமண பந்தம், இடுகாட்டில் இடப்படும் கொள்ளியாக மாறுமானால் இன்றைய பெண்மை எத்தகைய மாற்றத்திற்கும் தன்னைத் தயார்ப்படுத்திக்கொள்ள வேண்டும் என்ற அறிவுரையைத்தான் மிக நாகரிகமாக, ரகசியமாக நம்முன் வைக்கிறார்.

    ராஜா வீட்டுச் சேவகமாய் அதிகாரக் குதிரையில் சவாரி செய்யும் மூளை, உடல் உழைப்பாளர்கள் அனைவரும் கட்டாயம் படிக்க வேண்டிய கதை ‘வரப்பில் பெய்யும் மழை.’ ‘ஏழைங்க அதிகம் சாமி இந்த நாட்டுல... கொஞ்சம் கருணை செய்யுங்க’ என்னும் வரிகளைப் படித்தபோது வரப்பில் அல்ல; என் கண்களில் ஆனந்த மழை பெய்தது. கல்வியாளர்களும் அதிகாரிகளும் கற்றுக்கொள்ள வேண்டிய புதிய திருக்குறள் இது.

    Enjoying the preview?
    Page 1 of 1