Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Unnaiye Rathi Endru...
Unnaiye Rathi Endru...
Unnaiye Rathi Endru...
Ebook415 pages4 hours

Unnaiye Rathi Endru...

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

சிவராணிக்கு தாய்-தந்தை இல்லை. அண்ணா, அண்ணியுடன் இருந்தாள். சிவராணியின் நெருங்கிய தோழி லேகா, மிகவும் வசதி வாய்ந்தவள். லேகவிற்கு திருமணம் நிச்சயம் ஆகி, பின் அந்த திருமணம் சிவராணியால் நின்று விடுகிறது. லேகாவின் திருமணம் நிற்க காரணம் என்ன? சிவராணிக்கு இருக்கும் ஒரு சில பிரச்சனைகளால் அவளுடைய திருமணம் தடைபட்டு கொண்டே போகிறது. தன் வாழ்க்கையில் தனக்கு திருமணமே நடக்காது என முடிவுக்கு வந்துவிடுகிறாள் சிவராணி. இறுதியில் நடந்தது என்ன? சிவராணிக்கு திருமணம் தடைபட காரணம் என்ன? திருமணம் நடைபெற்றதா? இல்லையா? சிவராணியின் வாழ்க்கையில் ஏற்படும் பல திருப்பங்கள்...
Languageதமிழ்
Release dateNov 6, 2020
ISBN6580136706011
Unnaiye Rathi Endru...

Read more from S.A.P

Related to Unnaiye Rathi Endru...

Related ebooks

Reviews for Unnaiye Rathi Endru...

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Unnaiye Rathi Endru... - S.A.P

    http://www.pustaka.co.in

    உன்னையே ரதியென்று...

    Unnaiye Rathi Endru...

    Author:

    எஸ். ஏ. பி.

    S.A.P

    For more books

    http://www.pustaka.co.in/home/author//s-a-p

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    அத்தியாயம் 22

    அத்தியாயம் 23

    அத்தியாயம் 24

    அத்தியாயம் 25

    அத்தியாயம் 26

    அத்தியாயம் 27

    அத்தியாயம் 28

    அத்தியாயம் 29

    அத்தியாயம் 30

    அத்தியாயம் 31

    அத்தியாயம் 32

    அத்தியாயம் 33

    அத்தியாயம் 34

    அத்தியாயம் 35

    அத்தியாயம் 36

    1

    இந்தக் கதையை எழுதத் தொடங்குமுன், அதில் வரப்போகும் மனிதர்களைச் சந்தித்து இரண்டு வார்த்தை பேசிவிட்டு வந்தால் உபயோகமாக இருக்கும் என்று தோன்றியது.

    காலை வேளை, பூஷணம் - அவன் தான் கதாநாயகி சிவராணியின் தமையன்-அலுவலகத்திற்குப் புறப்படும் அல்லது பறக்கும் நேரம்.

    குனிந்து பூட்ஸ் நாடாவைப் பரபரப்போடு முடிந்து கொண்டிருந்தான்.

    நிமிரட்டும் என்று காத்திருந்தேன்.

    நிமிர்ந்தவுடனே... என்னைக் கவனியாமல்... காவேரி என்று குரல் கொடுத்தான், கைக் கெடியாரத்தைப் பார்த்துக் கொண்டே.

    அவன் குரலில் ஒருவித எரிச்சல் இருந்தது. அலுவலகத்துக்குப் புறப்படுகிற நேரத்தில் பெரும்பாலும் எல்லோரிடத்திலும் காணப்படக்கூடிய எரிச்சல்தான். பூஷண விஷயத்தில் வெப்பம் இரண்டு டிகிரி கூட.

    காவேரி! இம்முறை ‘கா’வில் அழுத்தம்.

    குழந்தை நந்தினி வாசலுக்கு வந்து... பூட்ஸப்பா... பாலிஷ் போட்டப்பா கதவுக்குப் பின்னால் வச்சிருக்காம் என்றாள், எதையோ மென்று கொண்டே.

    பூட்ஸைக் கேட்கவில்லை... என்று அவன் சொல்லி கொண்டிருக்கும் போதே, உள்ளே ஓடிப்போய் விட்டாள்.

    ஏய் நந்தினி! அம்மா என்ன பண்ணுகிறாள? கூப்பிடு.

    யோசித்தேன்.

    சாயங்காலம் வந்திருக்கலாமோ? வந்திருக்கலாம் தான். ஆனால் எப்போது முதல் அத்தியாத்தை எழுதி எப்போது அச்சுக் கோக்கக் கொடுத்து...

    செருமினேன்.

    இப்போதும் அவன் கவனிக்கவில்லை.

    சிவி! என்றான்.

    சிவி என்றால் சிவராணி! கதையின் ஹீரோயின்... ஆவலோடு எதிர்பார்த்தேன்.

    ஊஹூம். மறுபடி குழந்தைதான் வந்தாள். மென்று கரண்ட்,...பில்லப்பா ஷர்ட் பையில் இருக்காம்ப்பா என்றாள். வாயைச் சுற்றிப் பவுடர் அழிந்திருந்தது. ஏதோ எண்ணெய்ப் பலகாரம் போலும் தூது சொல்லிவிட்டு மறைந்து விட்டாள்.

    கொஞ்சமாவது அறிவு வேண்டாம்? ஏய் காவேரி! காலேஜ் லைப்ரரி புஸ்தகம் எங்கே?

    போய்விடலாமா என்று நினைத்தேன். பொறு என்றது மனம்.

    மறுபடியும் நந்தினி.

    லைப்ரரி புஸ்தகம்ப்பா... லைப்ரரி புஸ்தகம்ப்பா... வந்து... வந்து... மறந்து போய்விட்டது போலும். உள் பக்கம் திரும்பி அம்மா! லைப்ரரி புஸ்தகம் எங்கேம்மா இருக்குன்னு சொன்னே? என்றாள்.

    லைப்ரரி புஸ்தகமும் வேண்டாம். ஒரு மண்ணாங் கட்டியும் வேண்டாம்! ஆபீஸ் போய்த் தொலைக்கிறேன் திரும்பினான். யார்?

    கஷ்டப்பட்டுப் புன்னகையை வருவித்து கொண்டு, வணக்கம்! ‘உன்னையே ரதியென்று’ என்ற தலைப்பில் ஒரு தொடர்கதை எழுதுவதாக இருக்கிறேன். நீங்கள் கொஞ்சம் ஒத்தாசை செய்ய வேண்டும்... என்று சொல்லி கொண்டிருக்கும் போதே, என்னை மேலும் கீழும் பார்த்து விட்டு திரும்பி, நந்தினி! அம்மாகிட்டச் சொல்லிக் கதவைச் சாத்தித் தாழ் போட்டுச் கொள்ளச் சொல்லு என்று எச்சரித்துவிட்டு ஸ்கூட்டரில் ஏறி, ஒரே உதை சரியான உதை கொடுத்து அதை உயிர் பெற்றெழச் செய்து டபடபவென்று போய்விட்டான்.

    முகத்தில் வழிந்த வியர்வையைத் துடைத்துச் கொண்டேன்.

    சிவராணியைச் சந்திக்க வேண்டுமே...

    சிவி! என்று பூஷணம் கூப்பிட்டபோது பதில் ஒன்றும் வரவில்லையே. சிவராணி வெளியில் போயிருப்பாளோ?

    கதையே சிவராணியைச் சுற்றித்தான். அவளை இன்று சந்திக்கவில்லையானால், உரிய நேரத்தில் முதல் அத்தியாயத்தைக் கொடுக்க முடியாது.

    அப்போது தான் மாடியிலிருந்து அந்தப் பெண் இறங்கி வந்தாள். சிவராணியேதான்! என்னைக் கண்டதும் கண்ணில் கேள்விக்குறி உருவாயிற்று. நடுத்தரமான உயரம். மாநிறம் முகம் திருத்தமாக இருந்தது. சோபனா ரவி பாணியில் சேலைத் தலைப்பை இழுத்துப் போர்த்துக் கொண்டிருந்தாள். ஒருவகையான சிந்தனைப் பூச்சு- கவலை என்று கூடச் சொல்லலாம்- மெல்லிய திரை போல் முகத்தில் படர்ந்திருந்தது.

    நீங்கள் வீட்டில் இல்லையோ என்று பயந்துவிட்டேன் என்றேன.

    மாடியில் ரோசம்மாவுடன் பேசிக் கொண்டிருந்தேன் நீங்கள் யாரென்று தெரியவில்லையே?

    நான் எழுதப் போகும் கதைக்கு நீங்கள் தான் கதாநாயகி, என்றேன்.

    ஒரு வினாடி அவளுக்கு விளங்கவில்லை.

    புரிந்ததும், வியப்புற்றாள். கதாநாயகியாக இருக்க எனக்கு என்ன தகுதி இருக்கிறது!

    அப்படிப் பார்த்தால் கதை எழுத எனக்கு என்ன தகுதி இருக்கிறது?

    பதில் அவளுக்குப் பிடித்திருக்க வேண்டும்.

    புன்னகையின் சாயல்.

    உங்களிடம் ஒன்று கேட்கலாமா? என்றேன்.

    அண்ணா ஆபீஸ் போயிருக்கிறார், என்றாள்.

    சும்மாவா போனார்? போகிற போக்கில் என்னை ஒரு மாதிரியாய்ப் பார்த்து விட்டு, ‘வீடு பத்திரம்’ என்று அண்ணியை எச்சரித்துவிட்டுப் போனார்...

    ரொம்ப ஸாரி. நீங்கள் யாரென்று புரிந்து கொள்ளாமல்... ஆபீசுக்குக் கிளம்புகிற சமயம் எப்போதுமே கொஞ்சம் அவசரப்படுவார்... மன்னித்துக் கொள்ளுங்கள் உள்ளே வாருங்களேன். அண்ணியைப் பார்த்த மாதிரியும் இருக்கும்...

    இதோ நான் ஓடியே போய்விடுகிறேன். துணிந்து கேட்க வேண்டியது தான். உங்கள் முகத்தைப் பார்க்கும் போது... தப்பாக நினைத்துக் கொள்ளாவிட்டால்... ஏதோ ஒரு கவலை அரித்துக் கொண்டிருக்கிற மாதிரி தோன்றுகிறதே...

    தலைப்பை இழுத்துப் போர்த்துக் கொண்டே, அப்படி ஒன்றுமில்லையே. என்றாள். ஏதோ பெரிய கவலை இருக்கிறது என்பதும் அதை அவள் வெளியே சொல்ல விரும்பவில்லை என்பதும் புரிந்தது.

    சிவி! சிவி! அண்ணியின் குரல்.

    அண்ணி கூப்பிடுகிறார்கள். இதோ வந்து விட்டேன்.

    அவள் உள்ளே சென்றாள். நான் மெல்ல மாடிப் படியேறினேன்.

    ரோசம்மாவும் ஒரு முக்கிய பாத்திரமில்லையா?

    பக்கத்திலேயே தொலைபேசி; கையடக்காமான வானொலிப் பெட்டி; டி.வி.; அழகுச் சாதனங்கள்; திண்பண்டங்கள்; தண்ணீர்; புத்தகங்கள்; பேனாவும் நாட் குறிப்பும்; மாத்திரை மருந்து வகையறா-இப்படியாக, எழுந்து செல்ல வேண்டிய அவசியத்துக்கு இடம் தராமல் சாய்வு நாற்காலியில் அவள் எப்போதும் ஓய்வெடுத்துக் கொண்டிருப்பதை வைத்து. ரோசம்மாவுக்கு என்ன கொடுத்து வைத்த மகராசி. துபாயிலிருந்து அண்ணன்காரன் கற்றை கற்றையாய் நோட்டு அனுப்புகிறான். ஹாங்காங்கிலிருக்கும் தம்பி தாங்கு தாங்கென்று தாங்குகிறான். சொகுசாக நடக்கிறது வாழ்க்கை. என்று பொறாமைப்படுகிறவர்களின் பேச்சில் பாதிதான் உண்மை.

    இடுப்புக்குக் கீழ் விளங்காது அவளுக்கு. உடன் வசிக்கும் ஆயாவின் துணையின்றிக் குளியலறைக்குச் செல்ல முயன்று ஒருதரம் கீழே விழுந்து ஏற்பட்ட காயம் ஆறுவதற்கே இரண்டு மாதம் ஆயிற்று. உறவினர்களோ சினேகிதிகளோ அதிகம் இல்லாத-உண்டு பண்ணிக்கொள்ள விரும்பாத-நிலையில், கீழ் வீட்டில் குடியிருக்கும் பூஷணம் குடும்பத்தாருக்கு- குறிப்பாக அவனது தங்கை சிவராணிக்கு- உபயோகப்படுகிறது என்பதும், புதிய குரல்களைக் கேட்டு அதன் சொந்தக்காரர்களின் தோற்றம் எப்படி, குணம் எத்தகையதாக இருக்கும் என்று ஊகித்துப் பார்த்துப் பொழுதுபோக்க வாய்ப்பளிக்கிறது என்பதுமே டெலிஃபோனை அவள் தொடர்ந்து வைத்திருக்கக் காரணமாக இருக்குமோ?

    அதோ தொலைபேசி மணி.

    ரோசம்மா பேசுகிறேன், என்ன வேண்டும்? சிவராணியைக் கூப்பிட வேண்டுமா? கொஞ்சம் இரு.

    மேசையிலிருந்து ஓர் எவர்ஸில்வர் குவளையை எடுத்து, தரையில் தட்டினாள்.

    நான் ஒதுங்கி நின்றேன். வேகமாக மாடிப்படி ஏறி வந்த சிவராணி என்னைக் கவனிக்கவில்லை.

    ரோசம்மாவை நோக்கிப் புன்னகையிலேயே நன்றி தெரிவித்து விட்டு ரிஸீவரை எடுத்தாள்.

    வாசவியா? என்னப்பா?

    ஐந்து நிமிடம் பேசியிருப்பார்கள். ஒரே உற்சாகம். பேசப் பேச அவள் முகத்தில் ஒரு பொலிவு. ரிஸீவரை வைத்ததும்...

    என்னவாம்? -ரோசம்மா.

    லேகாவுக்கு கல்யாணமாம்!

    யார், அந்தக் கப்பல் காண்டிராக்ட் சதானந்தம் மகளா?

    ஊம்.

    மாப்பிள்ளை யார்?

    என்னவோ சுந்தரப்பிரசாத் என்று சொன்னாள்.

    முன்னதாக நான் கீழே வந்துவிட்டேன்.

    அவள் தடவைக்கு இரண்டு படியாகத் தாவி இறங்கி வந்தாள்.

    நீங்கள் இங்கேயா இருக்கிறீர்கள்?

    இன்னும் நீங்கள் என் கழுத்தைப் பிடித்துத் தள்ளவில்லையே. கடைசியாக ஒரு கேள்வி.

    கேளுங்கள்.

    சுந்தர பிரசாதைச் சந்தித்திருக்கிறீர்களா?

    லேகா கல்யாணம் பண்ணிக்கொள்ளப் போகிறாளே, அவரையா? இல்லை. நீங்கள் பார்த்திருக்கிறீர்களா?

    அடுத்த ஸ்டாப் அவன் வீடுதான். மணிகண்டனைத் தெரியுமா?

    அவளுக்குத் தெரியவில்லை.

    விடைபெற்றுக் கொண்டு புறப்படும்போது எனக்குச் சிரிப்பாய் வந்தது. அவளது எதிர்கால வாழ்க்கையில் முக்கியப் பங்கு வகிக்கிப் போகிறவர்கள் இருவர். இரண்டு பேரையுமே அவளுக்குத் தெரியவில்லை!

    ஸைலன்ஸ்! ஸைலன்ஸ் ப்ளீஸ்!

    கலாட்டாவும் கும்மாளமுமாக இருந்த அந்த அறையில் சங்கரின் அறிவிப்பு ஓரளவு அமைதி ஏற்படுத்தியது.

    இவர் யார் தெரியுமா?

    எல்லோர் கண்களும் என் மேல் திரும்பின. ‘இவரா! இவரைத் தெரியாதவர்கள் உண்டா!’ என்று எல்லோரும் என்னைச் சூழ்ந்து கொள்ளவில்லை.

    ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள்.

    எனக்கு என்னவோ போலிருந்தது. ஒருவன் உற்சாகம் இல்லாமல் ஹாய், என்றான்.

    நானும் ஹாய், என்று சொல்லி வைத்தேன். அல்லது சொன்னதாக நினைத்துக் கொண்டேன்.

    இவர் ஒரு நாவல் எழுதப் போகிறார். அது குமுதத்தில் தொடர் கதையாக வரவிருக்கிறது. கதா நாயகன் யார் தெரியுமா? இடைவெளி விட்டான் சங்கர். நம்ம பிங்க்கி - அதாவது, சுந்தரப்பிரசாத்!

    விஷயத்தை விளங்கிக் கொள்ள அரை வினாடிக்கு மேல் ஆகியிராது. அவ்வளவுதான். ‘ஹோ’ வென்ற இரைச்சல், கைதட்டல், கொண்டாட்டம். மதுகிளாஸ்கள் தொட்டுக் கொள்ளும் கிளிங்க் ஓசை.

    ஒருவன் என் கையில் ஒரு கிளாஸைக் கொடுத்தான். அப்படியே கட்டி அணைத்துத் தூக்கப்பட்டேன். சிலர் கொடுத்த முத்தத்தில் என் கன்னம் நனைந்து விட்டது.

    இதோ பிங்க்கி வந்து விட்டான்! பிங்க்கி வந்து விட்டான்!

    வலு ஏறிய உடம்பு, நகை பண்ணக்கூடிய நிறம். கண்ணில் கூர்மையும் துணிச்சலும் தெரிந்தன.

    பிங்க்கி! இன்றைக்கு இரண்டு நல்ல செய்தி. லேகாவைக் கல்யாணம் செய்து கொண்டு ஒரு கோடீசுவரனுக்கு மருமகன் ஆகப் போகிறாய் என்பது ஒன்று. இரண்டாவது... உன்னை வைத்து இவர் பத்திரிகையில் ஒரு தொடர்கதையே எழுதப் போகிறார்!

    அப்படியா? என்றான் சுந்தரப்பிரசாத். திகைப்போ வியப்போ ஏற்பட்டதாகக் காட்டிக் கொள்ளவில்லை. நன்றி கூறுவதற்குப் பதிலாக என்னைக் கண்களால் எடை போட்டான். ‘ஓகே. என்னை உபயோகப்படுத்திக் கொள்ள உத்தேசமா?’ என்று அவன் கேட்பது போல் எனக்குள் குறுகுறுப்பு.

    பிரெண்ட்ஸ்! இன்றைக்கு என் வாழ்க்கையில் ஒரு முக்கியமான நாள் என்றான்.

    ஷியர்! ஷியர்! என்றது ஒரு குரல். அது ஷியர் ஷியர் அல்ல. ஹியர் ஹியர். மதுவின் மழலை.

    அடுத்தாற்போல் ஒரு வாக்கியம் சொன்னான். அது ஏற்படுத்திய பாதிப்பை வர்ணிப்பது கடினம்.

    வெடிகுண்டு வெடித்தால் சத்தம் எவ்வளவு கடுமையானதாக இருக்கும் என்று ஊகிக்கலாம். அவன் சொன்னதை அடுத்து ஏற்பட்ட மௌனம் அதைவிடக் கடுமையாக இருந்தது.

    பிங்க்கி ஜோக் அடிக்கிறான்! ஹாஹ்ஹா!

    உஷ்! என்று யாரோ அடக்கினார்கள்.

    இல்லை. ஸீரியஸாகத்தான் சொல்கிறேன். இது வரைக்கும் எப்படியோ வாழ்ந்தாயிற்று. போதும். வாழ்க்கையில் வேறு சில அர்த்தங்களும் இருக்கும் என்று தோன்றுகிறது. அவற்றை ஆராய வேண்டும் என்று ஓர் ஆசை. கையில் விஸ்கி பாட்டிலை வைத்துக் கொண்டு அந்த ஆராய்ச்சியை நடத்த முடியாது... அவன் சிரித்தான். என் முடிவு உங்களுக்கு மகிழ்ச்சி தராது என்று எனக்குத் தெரியும் இதனால் உங்கள் நட்பை இழக்க நேரிட்டாலும் நேரிடலாம். அதுவும் எனக்குத் தெரியும். ‘ஸாரி’ சொல்லுவதை விட என்னால் செய்ய முடிந்தது. வேறு ஒன்றுமில்லை.

    சில வினாடி முன்பு வரை குதூகலத்தில் கூத்தாடிய அறையில் ஒரு மாறுதல்.

    நேரம் செல்லச் செல்ல ஒவ்வொருவராக நழுவினார்கள்.

    இனம் தெரியாத ஒருவகை எக்களிப்பு என் மனத்தில் தூக்கலாக இருந்தது.

    வருகிறேன், என்று கிளம்பினேன். உங்களுக்கு என் வாழ்த்துக்கள்.

    இனி மணிகண்டன் தான் பாக்கி. அவனைத் தேடிப் போனேன். வெளியூர் சென்றிருப்பதாகச் சொன்னார்கள். அவனுக்காகக் காத்திருக்க முடியாது.

    பேனாவையும் காகிதத்தையும் நாடி கைகள் துரு துருத்தன.

    2

    காலை பத்தரை மணி.

    லோகாவின் வீடு, இன்றைய நிலவரப்படி நாற்பத்தைந்து லகாரத்துக்குக் குறையாது. (ஒரு கிரவுண்ட் இரண்டு லட்சம்?)

    கால் மேல் கால் போட்டபடி ஆரஞ்சுச் சாறு அருந்திய குருபாதம் (லேகாவின் டாடி) காலி கிளாஸைப் பணியாள் பதவிசாக நீட்டிய தட்டில் வைத்துவிட்டு, அதிலிருந்த சலவைத் துண்டை எடுத்து வாயை இலேசாக ஒற்றிக் கொண்டு அதைத் திரும்ப வைத்தப்பின், அவன் குனிந்தபடி பின்னோக்கி நகர்ந்துக் கொள்ள, சற்று எட்டத்தில் நின்று கொண்டிருந்த இளம் செயலரை, ‘புறப்படலாமா?’ என்ற பாவனையில் நோக்கினார்.

    அந்தப் பார்வைக்காகவே காத்திருந்த ரமணன் பி.ஏ. (படிப்பு, வேலை இரண்டிலும்) வினயத்துடன், இப்போது புறப்பட்டால் சரியாக இருக்கும், என்றான்.

    கிண்டி ராஜ பவனத்தில் கவர்னருடன் அன்று பேட்டி.

    லேகாவின் கல்யாணம் நிச்சயமாகியிருக்கும் நற்செய்தியைச் சொல்லி, எந்தத் தேதியில் முகூர்த்தத்தை வைத்து கொண்டால் கவர்னருக்கு வர வசதிப்படும் என்று தெரிந்து கொண்டு பிறகு மற்ற ஏற்பாடுகளைத் துவக்க வேண்டும்.

    லேகா எங்கே? என்றார்.

    ரமணன், சோபாவுக்குப் பின்னால் நின்று கொண்டிருந்த சீதம்மாவிடம், ‘உன்னைத்தான் கேட்கிறார்,’ என்று கண்களால் சாடை காட்டினான்.

    சீதம்மா, முடி அலங்காரம் பண்ணிக் கொள்ள பியூட்டி பார்லருக்குப் போயிருக்கிறார்கள். வருகிற நேரம் தான், என்றாள்.

    லேகாவின் அம்மா தியாகவல்லி அப்பாவி. அதிகாரம் செலுத்த அவள் விரும்புவதில்லை. தெரியவும் தெரியாது. (லேகாவைக் கவனித்துக் கொள்ளும் பொறுப்பு, தூரத்து உறவான சீதம்மாவிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது.)

    குருபாதம் சிறிது தயங்கினார். அவரது மனச்சாட்சி அதாவது, எஞ்சிய பகுதி-குறுகுறுத்தது.

    லேகாவிடமிருந்து சுந்தரப்பிரசாத்தைப் பற்றிய ஒரு தகவலை மறைத்து விட்டாரே, அதனால் விபரீதம் ஏதும் விளைந்து விட்டால்?

    வரப் போகும் மாப்பிள்ளையைப் பற்றிய எல்லா விஷயங்களையும் அவர் மகளுக்கு மறைக்காமல் தெரிவித்திருந்தார்-ஒன்று தவிர, அது சுந்தரப்பிரசாத்தின் மதுப் பழக்கம்.

    ஒன்றுவிட்ட மாமா ஒருவரின் குடும்பம் அழிவதற்கு மதுவே காரணமாக இருந்தது என்று யாரோ அவளுக்குச் சொல்லிவிட்டார்கள். அன்று முதல் லேகாவுக்கு அதன் மேல் ஒரு வெறுப்பு.

    குருபாதத்தைப் பொறுத்த வரையில், சுந்தரப்பிரசாத்தின் நிறை குறைகளை எடை போட்டுப் பார்க்கையில், அது ஒரு பெரிய குறையாக அவருக்குப் படவில்லை. அவன் குடிக்கு அடிமையாகிவிடக் கூடியவன் அல்ல என்று புரிந்து கொண்டிருந்தார். தவிரவும், பிஸினஸ் துறையில் அந்தப் பழக்கத்தினால் பல அனுகூலங்கள் உண்டு என்பது அவர் அனுபவம். கல்யாணமாகி விட்டால் எல்லாம் சரியாகிப் போய்விடும் என்று அவர் நம்பினார். மாப்பிள்ளை சில மாதம் வரை லேகாவுக்குத் தெரியாதபடி பார்த்துக் கொண்டானானால் போதும் என்று அவருக்குத் தோன்றிற்று. அடுத்த சந்திப்பின்போது அது பற்றி அவனிடம் இரண்டு வார்த்தை சொல்லி வைக்க வேண்டும் என்றும் மனத்துக்குள் தீர்மானித்துக் கொண்டார்.

    ஆனால் தப்பித் தவறி விஷயம் லேகாவின் காதுக்கு எட்டிவிடப் போகிறதே என்ற அச்சம் அவருக்கு. அது சம்பந்தமாக ரமணன் மூலம் வேலைக்காரர்களுக்கும் ஏற்கெனவே எச்சரிக்கை செய்திருந்தார்.

    நேரமாகி விட்டது. எழுந்தார். ஒட்ட வெட்டிய முடி; ஒட்ட வெட்டிய மீசை-நரையானாலும் அதில் ஒரு மிடுக்கு மேற்கத்து உடை அவருக்கு வெகு பொருத்தமாக இருந்தது. தேவையில்லாத ஒரு மெல்லிய கைத்தடியை நாசுக்காகப் பிடித்தபடி, போர்டிகோவை நோக்கி நடந்தார்.

    சீருடை அணிந்திருந்த ஆறுமுகம், பென்ஸ் வண்டியின் பின்புறக் கதவைத் திறந்து வைத்துக் கொண்டு நின்றிருந்தான். அவன் ஏறி உட்கார்ந்ததும்-முன் இருக்கையில் ரமணன். கார் புறப்பட்டது.

    தோட்டத்து வாசலில் நின்றிருந்த காவலாளி - இன்றைய பெயர்: ஸெக்யூரிடிகார்ட், போலீஸ் பாணியில் ‘ரைட்’ கொடுக்கும் சமயம், எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் ஒரு சிறிய கார் விருட்டென்று எதிரில் வந்து விட்டது.

    ஆறுமுகம் உடனே பிரேக்கை மிதித்திராவிட்டால் சிறு விபத்தே நேர்ந்திருக்கும்.

    குலுக்கப்பட்ட அதிர்ச்சியில், வந்திருப்பது யார் என்று கவனிக்க அவகாசம் இல்லை இருந்திருந்தால் இடியட்! என்று முணுமுணுத்திருக்க மாட்டார் குருபாதம்.

    லேகா.

    அவள் புன்னகை செய்தபடி ஹாரனைப் பலமாக அழுத்தி, கையை அசைத்து, பின்னால் போ! என்று அதிகாரம் பண்ணினாள். என்ன செய்வது என்று புரியாமல்- ஒடுக்கமான பாதை, ஒதுங்க இடம் போதாது திணறினான் ஆறுமுகம்.

    குருபாதம், போயேன்! என்றார்.

    லேகாவின் கார் வழிமறித்துக் கொண்டிருக்கும் போது எப்படி முன்னே போக முடியும்?

    ஆறுமுகம் சந்தேகத்துடன் திரும்பிப் பார்த்தபோது தான் அவர் பின்னே போகச் சொல்கிறார் என்பது புரிந்தது.

    அவன் ரிவர்ஸ் கியரைப் போட்டான். பென்ஸைப் பழையபடி போர்டிகோவில் கொண்டு வந்து நிறுத்தினான்.

    லேகா, தன் வண்டியிலிருந்து இறங்கித் தந்தையிடம் விரைந்து, முகத்தை உள்ளே நீட்டித் தலையலங்காரத்தை காட்டியபடி, பியூட்டி பார்லரில் ஒன்றரை மணி நேரம் உட்கார வைத்து விட்டாள் டாடி. நன்றாகப் பண்ணியிருக்கிறாளா? என்றாள். பிறகு, டாடி! கல்யாணத்துக்கு ஸாரீஸ் ஸெலக்ட் பண்ணும்போது, நீங்கள் வர வேண்டாம் டாடி! என் பிரண்ட்ஸ் வாசவி, சிவி இவர்களைக் கூட்டிக் கொண்டு போகிறேன். ஓ.கே? என்றாள்.

    குரலை அமைதியாக வைத்துக் கொண்டு, கவர்னருடன் எனக்குப் பேட்டி. பத்து நிமிடம் கூட இல்லை, என்றார் குருபாதம்.

    அவள் முகம் கூம்பிற்று.

    ஸாரி, மன்னித்துக் கொள்ளுங்கள். வேகமாக வீட்டுக்குள் போய் விட்டாள். கோபம்.

    லேகா! டார்லிங்! என்று கதவைத் திறந்துக் கொண்டு இறங்கப் போன குருபாதம், சார்! ராஜ் பவன்... என்று ரமணன் நினைவுபடுத்தியதும் சாய்ந்து உட்கார்ந்து கொண்டார்: ஆறுமுகம்! சீக்கிரம்!

    கார் அனடயாறு பாலத்தில் சென்று கொண்டிருக்கும்போது ஏதோ ஞாபகம் வரப் பெற்றவர், ரமணா! எல்லோரிடமும் எச்சரித்து வைத்திருக்கிறாய் அல்லவா? என்றார்.

    ரமணன் திரும்பினான். அவர் எதைக் குறிப்பிடுகிறார்?

    மாப்பிள்ளை விஷயம்...

    பெரு விரலைச் சற்றே உயர்த்தி ‘குடி’ என்று காட்டினார்.

    ஓ! என்றான் அவன். எல்லோரிடமும் கண்டிப்பாகச் சொல்லி வைத்திருக்கிறேன்.

    என்னப்பா பூஷணம், டல்லடித்துப் போய் உட்கார்ந்திருக்கிறாய்? மானேஜருடன் தகராறா? இல்லாவிட்டால் ஆபீஸ் பியூன் தண்ணீர் காட்டுகிறானா? என்றார் மார்க்கபந்து.

    அதெல்லாம் ஒன்றும் இல்லை சார்.

    பின்னே என்ன சமாசாரம்? ஒன்றுமில்லாவிட்டால் பீச்சுக்கு வர மாட்டாயே!

    மனைவி மீது கோபம் என்றாலோ, மனத்தில் ஏதேனும் சுமை ஏற்பட்டாலோ அலுவலகத்திலிருந்து நேரே வீட்டிற்குப் போகாமல் எட்டு மணி வரையில் கடற்கரையில் உட்கார்ந்து பொழுதைப் போக்கிவிட்டுச் செல்வது பூஷணத்தின் வழக்கம். அவன் பணியாற்றும் நிறுவனத்திலேயே வேலை செய்து ஏற்கெனவே ஓய்வு பெற்றிருந்த மார்க்கபந்து மயிலாப்பூரில் குடியிருப்பவர். அவருக்கு வீட்டில் தினசரி பிடுங்கல். தவறாமல் வந்து விடுவார் கடற்கரைக்கு. காந்தி சிலைக்கு அருகே மூன்றாவது குறுக்குப் பாதையில் உள்ள வலது பக்க இரண்டாவது பெஞ்சுக் குத்தகைக் அவருடையது.

    பெருமூச்சு விட்டபடி, சிவியை நினைத்தால் தான் சார் கவலையாக இருக்கிறது, என்றான் பூஷணம். அப்பா பாட்டுக்கு அவளை என் தலையில் கட்டிவிட்டுப் போய்விட்டார். எவன் கையிலாவது பிடித்துக் கொடுத்து விடலாம் என்றால் நடக்கவில்லை.

    சேலத்தில் யாரோ ஒரு சினேகிதனுடைய மைத்துனனோ எவனோ இருக்கிறான் என்றாயே! மாட்டுவது தானே? வாசனைப் புகையிலையை எடுத்து உள்ளங்கையில் வைத்துத் தேய்த்துத் திரட்டி வாயில் போட்டுக் கொண்டே கேட்டார்.

    பெரிய பட்டாளம் சார் அது. சிவி மாதிரி நாலு பெண் நிற்கிறது கல்யாணத்துக்கு, வரிசையாக. இவன் தான் மூத்த பிள்ளை. அப்பா இல்லை.

    தள்ளு கழுதையை. அந்த இஞ்சினியர் பையன் என்ன ஆனான்? ஒட்டைச் சிவிங்கிக் கணக்காக இருப்பானே?

    கோபம் பீரிட்டது பூஷணத்திடமிருந்து: அவனா! அவன் கேட்கிற தொகைக்கு மைசூர் மகாராஜாதான் வர வேண்டும், அவராலேயும் இன்றைக்கு இருக்கிற நிலையில் சமாளிக்க முடியுமா என்பது சந்தேகம்தான்.

    பலர் போய் வந்து கொண்டிருந்தார்கள். விட்டால் ஓடி விடுவாளோ என்று பயந்தோ என்னாவா ஒருவன் தன் மனைவியைக் கெட்டியாகப் பிடித்தபடி நடந்து கொண்டிருந்தான்.

    எனக்குத் தெரிந்த பையன் ஒருவன் இருக்கிறான், என்றார் மார்க்கபந்து.

    ஆவலோடு, சொல்லுங்கள் சார், என்றான் பூஷணம்.

    சீர் செனத்தி அதிகம் எதிர்பார்க்க மாட்டான்.

    ஆச்சரியம்தான். என்ன செய்து கொண்டிருக்கிறான்?

    அவர் எழுந்து புகையிலையை உமிழ்ந்துவிட்டு வந்தார்.

    யூ.டி.சி. நல்ல குணம்.

    நீங்கள் சொல்லிக் கொண்டே வருகிறதைப் பார்த்தால் கடைசியில் எங்கோ ஒரு இக்கு வைக்க போகிறீர்கள் என்று பயமாக இருக்கிறது.

    அதெல்லாம் ஒன்றும் இல்லை. பெண்ணும் உத்தியோகத்துக்குப் போகிறவளாக இருந்தால் நல்லது என்று அபிப்பிராயப்படுகிறான்.

    அவன் முகத்தைச் சுளித்தான்.

    சிவிதான் போகவில்லையே!

    ஏம்ப்பா? தனியார் பாங்க் ஒன்றில் அப்போதே சேர்த்து விட்டாயே! அவள் போகவில்லையா?

    அதை ஏன் சார் கேட்கிறீர்கள்? சும்மா டெம்பரரியாகச் சேர்த்துக் கொண்டான். ஆறு மாதம் ஆனால் பெர்மனெண்ட் ஆக்க வேண்டுமே? கரெக்டாக ஐந்தாவது மாதம் வீட்டுக்கு அனுப்பிவிட்டான்.

    தரித்திரப் பசங்க.

    சாஸ்திரி பவனில் எனக்கு வேண்டியவன் ஒருத்தன் இருக்கிறான். ஏதோ உத்தியோகம் கிடைக்கிறது என்றான். கிட்டமுட்டப் போனால் உப்பள மேஸ்திரி வேலையாம். சிவி ஜீப்பில் தினமும் கோவளத்துக்குப் போக வேண்டுமாம்.

    தள்ளு கழுதையை! விடாமல் அப்ளிகேஷன் போட்டுக் கொண்டிருக்கச் சொல்லு. அப்புறம், ஏதாவது லாட்டரி சீட்டு ஒன்று இரண்டு வாங்கிக் கொண்டே இரு.

    சிறிது நேரம் மௌனம்.

    நானும் பார்க்கிறேன், சார்... அவன் தொடையில் தட்டிக் கொண்டு பேசினான்: ... இந்த நாட்டில் மனிதன் சம்பாதிப்பதெல்லாம் பெண் இல்லாவிட்டால் தங்கை இதுகள் கல்யாணத்துக்குத்தான் சரியாக இருக்கும் போல் இருக்கிறது. மேல் நாட்டில் இப்படியா?

    ஊஹூம்... என்றார் மார்க்கபந்து. ... நான் கேள்விபட்டவரை அங்கே மனைவியுடன் தகராறு வந்துவிடுமாம். விவாகரத்து பண்ணிக் கொள்வார்கள் அவள் வேறு கல்யாணம் செய்து கொள்ளாமல் கழுத்தறுப்பாள். இவன் சம்பாதிப்பதெல்லாம் முன்னாள் மனைவிக்கு ஜீவனாம்சம் கொடுப்பதற்கே சரியாக இருக்குமாம்... அவர் மறுபடி புகையிலை போட்டுக் கொண்டார். எது தேவலை?

    அவன் சிரித்தான்.

    பார்த்தியா, மறந்து போய்விட்டேன் பையிலிருந்து ஒரு காகிதத்தை எடுத்துக் கொடுத்தார் மார்க்கபந்து சினிமாவுக்குப் பாஸ் கிடைத்தது. குடும்பத்தோடு போய்விட்டு வா.

    எதுக்கு சார். உங்கள் வீட்டில் எல்லோரையும் அழைத்துக் கொண்டு நீங்கள் போய் வாருங்கள்.

    பாஸ் நாலு பேருக்குத் தானே? என்றார் அவர். "...பாக்கி இருபத்தாறு பேரை என்ன செய்வது? தள்ளு

    Enjoying the preview?
    Page 1 of 1