Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Sirippin Mitcham
Sirippin Mitcham
Sirippin Mitcham
Ebook137 pages34 minutes

Sirippin Mitcham

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

"சிரிப்பின் மிச்சம்" எனும் இந்த சிறுகதைத் தொகுப்பில் முகநூலில் வெளியாகி பலர் படித்துப் பாராட்டிய சிறுகதைகள் இடம் பெற்றுள்ளன. பல தளங்களைத் தொட்ட சிறுகதைகள் இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ளன.

"சிரிப்பின் மிச்சம்" சிறுகதை பலரும் தங்கள் அனுபவத்தைப் பொருத்திப் பார்க்கக் கூடிய எளிய நிகழ்வை மையமாக வைத்து எழுதப்பட்டது. எறும்புகளின் வாழ்வியலை ஒற்றி எழுதப்பட்ட "உணவுச் சுழற்சி" சிறுகதை, இஸ்ரேல் பாலஸ்தீன சூழலைச் சுற்றிப் பின்னப்பட்ட "சமய விதி", நம்மை சுற்றி நிகழும் இறப்புகள் நம்மேல் ஏற்படுத்தும் தாக்கம் பற்றிய "இறந்த காலங்கள்", சுழற்சிக் கதை எனப் பல வகைகளாலான சிறுகதைகள் இதில் இடம் பெற்றுள்ளன.

Languageதமிழ்
Release dateJun 17, 2023
ISBN6580142510009
Sirippin Mitcham

Related to Sirippin Mitcham

Related ebooks

Reviews for Sirippin Mitcham

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Sirippin Mitcham - S. Ramesh Krishnan

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    சிரிப்பின் மிச்சம்

    (சிறுகதைகள்)

    Sirippin Mitcham

    (Sirukathaigal)

    Author:

    எஸ். ரமேஷ் கிருஷ்ணன்

    S. Ramesh Krishnan

    For more books

    https://www.pustaka.co.in/home/author/s-ramesh-krishnan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    முன்னுரை

    சிரிப்பின் மிச்சம்

    சமய விதி

    ஆலமரத்துக்கடை

    இறந்த காலங்கள்

    உணவுச் சுழற்சி

    விஷமக்காரக் கண்ணி

    ஒலக்கண்ணீஸ்வரர் கோவில்

    கையில வெண்ணைக்கட்டி

    பயிற்சி

    சுழற்சிக் கதை

    ஒரே ஒரு தோட்டா

    ஆசிரியர் குறிப்பு

    இயற்பெயர் எஸ். ரமேஷ் கிருஷ்ணன்.

    சென்னையில் கணிணி துறை தனியார் நிறுவனத்தில் பணி. மெல்லிசையிலும், வாசிப்பதிலும், எழுதுவதிலும் ஆர்வம் அதிகம். சில சிறுகதைகள் பத்திரிகைகளில் வெளியாகி உள்ளன. ஒரு இடைவெளிக்குப் பின் முகநூல் மற்றும் இணையம் மூலம் வாசகர்களைச் சென்றடையும் வசதியால் ஆர்வமுற்று மீண்டும் படைப்புகளை பகிர்ந்து வருகிறார். மேலாண்மை மற்றும் உளவியல் சார்ந்து தமிழில் எழுதிய இவரது கட்டுரைகள் வாசகர்களால் பாராட்டப் பெற்றன. இவற்றின் தொகுப்பு ஜோஹாரி ஜன்னல் எனும் தலைப்பில் புஸ்தகா நிறுவனம் மூலம் மின்னூலாக வெளிவந்துள்ளது. இவரது சிறுகதைகள் பலவும் முகநூலில் வெளியாகி பாராட்டுகளும் பரிசும் பெற்றுள்ளன.

    நூல் அறிமுகம்

    சிரிப்பின் மிச்சம் எனும் இந்த சிறுகதைத் தொகுப்பில் முகநூலில் வெளியாகி பலர் படித்துப் பாராட்டிய சிறுகதைகள் இடம் பெற்றுள்ளன. பல தளங்களைத் தொட்ட சிறுகதைகள் இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ளன.

    சிரிப்பின் மிச்சம் சிறுகதை பலரும் தங்கள் அனுபவத்தைப் பொருத்திப் பார்க்கக்கூடிய எளிய நிகழ்வை மையமாக வைத்து எழுதப்பட்டது.

    எறும்புகளின் வாழ்வியலை ஒற்றி எழுதப்பட்ட உணவுச் சுழற்சி சிறுகதை, இஸ்ரேல் பாலஸ்தீன சூழலைச் சுற்றிப் பின்னப்பட்ட சமய விதி, நம்மை சுற்றி நிகழும் இறப்புகள் நம்மேல் ஏற்படுத்தும் தாக்கம் பற்றிய இறந்த காலங்கள், சுழற்சிக் கதை எனப் பல வகைகளாலான சிறுகதைகள் இதில் இடம் பெற்றுள்ளன.

    முன்னுரை

    முகநூலில் வெளியாகிப் பலரின் பாராட்டுகளைப் பெற்ற சிறுகதைகளின் தொகுப்பான இந்நூலை முதலில் பதிப்பித்த பேச்சிடெர்ம் நிறுவனத்துக்கும், தற்போது மறுபதிப்பாக வெளியிட இருக்கும் புஸ்தகா நிறுவனத்துக்கும் என் மனமார்ந்த நன்றிகள். இக்கதைகளைப் பலரும் படித்துப் பாராட்டுக்களையும், கருத்துக்களையும் பகிர களம் அமைத்துக்கொடுத்த சங்கப் பலகை முகநூல் குழுமத்தையும், தன் அமைப்பாளர்களையும் இத்தருணத்தில் நன்றியுடன் நினைவு கூர்கிறேன்.

    அன்புடன்

    எஸ். ரமேஷ் கிருஷ்ணன்

    சிரிப்பின் மிச்சம்

    ஒரு கிளையண்ட் ஆபிசில் நாளை நடக்க இருக்கும் ஆடிட் சம்பந்தமான முன்னேற்பாடுகளை முடித்துவிட்டு தன் ரூமுக்குப் போக பஸ் ஸ்டாப்பில் வந்து நின்ற விமல் வாட்சில் மணியைப் பார்த்தான். மணி நாலரை ஆகியிருந்தது. ஒரு ஆடிட் நிறுவனத்தில் அசிஸ்டண்டாக வேலை பார்த்துக்கொண்டிருந்தான்... அந்த நேரத்தில் அவளை அங்கு எதிர்பார்க்கவில்லை.

    சிம்பிளான ஒரு பச்சைப் புடவைதான் கட்டி இருந்தாள். அதிக அலங்காரமில்லை. ஆனால் அதிலும் தேவதை மாதிரி அவன் கண்ணுக்குத் தெரிந்தாள். அவனை கவனித்த மாதிரியே தெரியவில்லை. யாரையோ எந்திரப்பார்வை பார்த்துக் கொண்டிருப்பவள் போலத் தோன்றியது.

    தைரியத்தை வரவழைத்துக்கொண்டு அவள் பக்கத்தில் போய், ஹலோ! என்ன ஒங்களுக்கு ஞாபகம் இருக்கா. அதன் அன்னிக்கு லைப்ரரில... அப்புறம் ஒரு நாள் கல்யாண மண்டபத்திலே பார்த்தோமே... நீங்க கூட... தடுமாறியபடி உளறினான்.

    சீரியஸான முகத்துடன், உங்களை நான் எங்கேயும் பார்த்ததில்லே. நீங்க யாருன்னே எனக்குத் தெரியல.

    மறந்துட்டிங்களா...

    நெஜமாவே உங்கள பாத்த ஞாபகம் இல்லங்க. சாரி.

    மேலே பேச முற்படுவதற்குள் அவன் முதுகில் பளாரென்று ஒரு அடி விழுந்தது. தடுமாறியவன் கையில் இருந்து ஃபைல் கீழே விழுந்து பேப்பர்கள் சிதறின. பஸ் ஸ்டாப்பில் நின்றுகொண்டிருந்த ஒரு முரட்டு மீசை ஆள் அவன்மேல் திடீர் தாக்குதல் நடத்துவான் என்று யாருமே எதிர்பார்க்கவில்லை.

    பஸ் ஸ்டாப்ல நிக்கற பொண்ணுன்னா நீ கூப்ட ஒண்ணே வந்துருவான்னு நெனப்பா குடித்திருப்பான் போல.

    அய்யய்யோ அடிக்காதிங்க. அவரு எங்கிட்ட தப்பால்லாம் நடக்கலைங்க என்று பதறினாள்.

    சுற்றி இருந்தவர்களும் வந்து விலக்கிவிட்டு, கீழே சிதறிய பேப்பர்களை எடுத்துக் கொடுத்தார்கள்.

    அதற்குள் அவன் போக வேண்டிய பஸ் வரவும், நொந்தவனாய் பஸ்ஸில் ஏறியவனை அவள் பார்த்த பார்வையில் பரிதாபம்.

    ***

    ரூமிற்குள் வந்து படுத்தவன் மனதில் ஒரு பின்னூட்டம்.

    வழக்கமாக அவன் செல்லும் லெண்டிங் லைப்ரரிக்கு அன்றும் போயிருந்தான். வேறெங்கேயோ பார்த்தவாறு லைப்ரரி வாசலில் நுழைய முற்பட்டபோது, திரும்பிப் பார்த்த நொடியில் எதிரில் அவள். பிங்க் நிற சேலையில் ஜொலித்தவாறு வந்தவள் முகத்தில் அப்படி ஒரு புன்னகை.

    கிறங்கி நின்றவன் பதிலுக்கு லேசாகப் புன்னகைப்பதற்குள் அவனைக்

    Enjoying the preview?
    Page 1 of 1