Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Natchathira Iravu
Natchathira Iravu
Natchathira Iravu
Ebook126 pages33 minutes

Natchathira Iravu

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

எழுதி, எழுதி பண்பட்டு துலங்குகிறவர்கள் பலர். இவரோ, எழுதுகிறபோதே பிரகாசம் காட்டியவர். ஆனால், மின்னி மறையும் வீழ் நட்சத்திரமல்ல. விடாது ஜொலிக்கிற விடிவெள்ளி.
தமிழில் இன்று வெளிவருகிற அனைத்து முன்னணி வார, மாத இதழ்களிலும் இவரது கதை இடம் பெறுகிறது. குறுகிய காலத்தில் இமாலய வளர்ச்சி. காரணம் அதிர்ஷ்டம் அல்ல. உண்மை; உழைப்பு; ஒப்பிட முடியாத எழுத்து.
இந்த, ‘இவரின்’ பெயர் என். சி. மோகன்தாஸ்.
நண்பர் மோகன்தாசுக்கு உள்ளே பல பரிமாணங்கள் உண்டு. இளையவர்; இனியவர்; கவிஞர்; கலைஞர்.
மென்மை இவரின் தன்மை. இது இவரது எழுத்திலும் எதிரொலிக்கும். பகட்டு காட்டி பிரமிக்க வைக்கும் படாடோப எழுத்து அல்ல இவருடையது. மனசை வருடுகிற மயிற்பீலி எழுத்து.
வண்ணத்தமிழுக்கு வளம் சேர்க்கும் என். சி. மோகன்தாசை போற்றுகிறேன்!
சத்தமில்லாது சரித்திரம் படைக்கும் அவரது சாதனையை வாழ்த்துகிறேன்!
அன்புடன்,
அந்துமணி
Languageதமிழ்
Release dateMay 24, 2020
ISBN6580132405418
Natchathira Iravu

Read more from Nc. Mohandoss

Related to Natchathira Iravu

Related ebooks

Reviews for Natchathira Iravu

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Natchathira Iravu - NC. Mohandoss

    http://www.pustaka.co.in

    நட்சத்திர இரவு

    Natchathira Iravu

    Author:

    என்.சி. மோகன்தாஸ்

    NC. Mohandoss

    For more books

    http://www.pustaka.co.in/home/author/nc-mohandoss

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    வாழ்த்துரை

    எழுதி, எழுதி பண்பட்டு துலங்குகிறவர்கள் பலர். இவரோ, எழுதுகிறபோதே பிரகாசம் காட்டியவர். ஆனால், மின்னி மறையும் வீழ் நட்சத்திரமல்ல. விடாது ஜொலிக்கிற விடிவெள்ளி.

    தமிழில் இன்று வெளிவருகிற அனைத்து முன்னணி வார, மாத இதழ்களிலும் இவரது கதை இடம் பெறுகிறது. குறுகிய காலத்தில் இமாலய வளர்ச்சி. காரணம் அதிர்ஷ்டம் அல்ல. உண்மை; உழைப்பு; ஒப்பிட முடியாத எழுத்து.

    இந்த, ‘இவரின்’ பெயர் என். சி. மோகன்தாஸ்.

    நண்பர் மோகன்தாசுக்கு உள்ளே பல பரிமாணங்கள் உண்டு. இளையவர்; இனியவர்; கவிஞர்; கலைஞர்.

    மென்மை இவரின் தன்மை. இது இவரது எழுத்திலும் எதிரொலிக்கும். பகட்டு காட்டி பிரமிக்க வைக்கும் படாடோப எழுத்து அல்ல இவருடையது. மனசை வருடுகிற மயிற்பீலி எழுத்து.

    வண்ணத்தமிழுக்கு வளம் சேர்க்கும் என். சி. மோகன்தாசை போற்றுகிறேன்!

    சத்தமில்லாது சரித்திரம் படைக்கும் அவரது சாதனையை வாழ்த்துகிறேன்!

    அன்புடன்,

    அந்துமணி

    நட்சத்திர இரவு

    வீடு முழுக்க பட்டுப்புடவைகளும், பட்டுத் தாவணிகளுமாய் நிறைந்திருந்தன. அவரவர்கள் தங்களின் புன்னகையையும் பொன் நகைகளையும் அழகு காட்டிக் கொண்டிருக்க...

    கீதா, அலங்கரிக்கப்பட்டு கைகொள்ளாமல் வளையல்களோடு மேடையில் அமர்ந்திருந்தாள். அவளுக்கு அன்று வளைகாப்பு. ஒன்பது மாத தாய்மையின் பூரிப்பு அவளது முகத்தில் பூசப்பட்டிருந்தது.

    வாசலிலிருந்த கலர் தோரணங்கள்! வாண்டுகள் இந்தப் பக்கமும் அந்த பக்கமுமாய் உலாத்தினர். நிலை கொள்ளாமல் ஓடி நிலைப்படியில் விழுந்து ‘பெரிசு’களிடம் அடிபட்டு அப்புறமும் ஓடினர்.

    தாய் பார்வதி, திண்ணையில் அமர்ந்திருந்த கனக சபையிடம் ஏங்க நாழியாறதே... இன்னும் நம்ம சந்துருவை காணோமே...! என்றாள் பதற்றத்துடன் வந்துடுவானில்ல...?

    அவன் வராட்டி என்ன... கழுதை எங்காச்சும் சுத்திகிட்டிருக்கும். நீ ஆரம்பிக்கச் சொல்லு!

    ஒரே மகன் அவனில்லாத சடங்கா...?

    அப்போது மருமகன் பிரசாந்த மாமா! என்று அவரை அணுகினான். வேலைக்கு வேண்டி நான் ஒரு லெட்டர் கொடுத்திருந்தேனே... சந்துரு அவரைப் போய் பார்த்தானா...

    சனகசபை பொரிந்து தள்ள ஆரம்பித்தார்.

    ம்கூம்...! யாருக்குத் தெரியும்! வரவர அவன் போக்கே சரியில்லை. வேண்டாத சிநேகம்! வேலையில்லைன்னுதான் பெயர்!

    ஆனால் சவரம் பண்ணிக் கொள்ளக் கூட அவனுக்கு நேரமில்லை. என்னதான் பண்ணுவானோ, எங்கேதான் போவானோ தெரியாது. வேளைக்கு வீட்டிற்கு வரதில்லை. ஏதாவது கேட்டால் கோபம் மட்டும் வரது! பொறுப்பில்லாத கழுதை! இவன் எப்படி உருப்படப் போறானோ தெரியலை

    கரிச்சுக் கொட்டாதீங்க. அவனுக்கு கிரகமே சரியில்லை. இந்த தை வந்தால் எல்லாம் சரியாப் போகும்!

    தை எப்போ வரது... அதுவரை வளை காப்பைத் தள்ளிப் போட முடியுமா...?

    சந்துரு வந்து விடுவான் என்ற நம்பிக்கை நல்ல நேரத்தையும் தகர்த்துக் கொண்டிருந்தது. பார்வதியே அரை மனதுடன் ஆரம்பிச்சுரலாமங்க என்க, வளையல் குலுங்க ஆரம்பித்தது.

    டவுனின் இரைச்சலை விட்டு சற்று ஒதுங்கியிருந்தது அந்த ஆரம்பப்பள்ளி. வாண்டுகள் கிரவுன்டில் யூனிபாரத்தை அழுக்கு பண்ணிக் கொண்டிருந்தனர்.

    அறைக்குள் மிஸ்கள் மீட்டிங்கில்.

    பியூன், மாலை பேப்பரை மடியில் வைத்துக்கொண்டு, ஓடும் பஸ்ஸில் கொள்ளை! ரயில் பாலம் வெடித்து தகர்ந்தது! ஏரோடிராமில் வெடிகுண்டு என்று தலைப்புகளை உரக்க படிக்க...

    அந்தப் பக்கம் வந்த டிரில் மாஸ்டர் ஏம்பா... வேற நல்ல நியூஸே பேப்பரில் இல்லையா...? என்றார் சலிப்புடன்,

    இருக்கிற நியூஸை தானே சார் படிக்க முடியும்... நாடு அவ்ளோ மோசமாப் போச்சு! என்று விசனப்பட்டான்.

    சரி, சரி... டையமாச்சு, சீக்கிரம் மணியடிச்சு பசங்களை வரச்சொல்

    பசங்கள் அசெம்பிள் பண்ணி ‘ஜனகனமன’ வை கடமைக்கு கோரஸ் பாடி முடித்த போது ஹெட்மிஸ் வந்து. ஒரு நிமிஷம் அப்படியே நில்லுங்கள் என்று உத்தரவு கொடுத்தார்.

    நாளைக்கு பிக்னி வரவங்களெல்லாம் கையை தூக்குங்க!

    சட்சட்டென கைகள் உயர்ந்தன கை தூக்கினவங்க மட்டும் இருங்கள். மற்றவர்கள் போகலாம்!

    உடன் மூன்றில் இரண்டு பாகம் கரைந்தது. ஹெட்மிஸ் டிரில் மாஸ்டரிடம் கண் காட்ட அவர், நாளைக்கு காலைல எட்டு மணிக்கு எல்லோரும் சாப்பாடு பொட்டலத்தோடு வந்திரணும். எட்டு பத்துக்கு சரியா இங்கிருந்து கிளம்பி ஸ்நேக் பார்க் மியூசியம், பீச் Zoo அரண்மனையெல்லாம் பார்த்துட்டு மாலை 5 மணிக்கு திரும்பிடறோம். இதுல யாருக்கும் எந்த சந்தேகமும் இல்லையே! என்றார் விரட்டலுடன்.

    ஒரு பொடியன், அரண்மனைல என்ன இருக்கு சார்...?என்றான்.

    சொல்றேன். அங்க பழைய ராஜாக்கள் உபயோகிச்ச சிம்மாசனம் இருக்கு அவரோட உடைகள், பல்லக்கு, நகைகள், ஆயுதங்கள், கட்டில் இன்னும் என்னென்னமோ இருக்கு. சொன்னது ஞாபகமிருக்கில்லே... நாளை காலை எட்டு மணி! லேட்டா வரவங்க வீட்டுக்குத் திரும்பிப் போக வேண்டியதுதான்!

    குட் ஈவினிங் சார்! குட் ஈவினிங் மிஸ்! என்று அவர்கள் கலைந்து போகும்போது சுரேஷ் என்று பையன் தன் நண்பனிடம் அந்த அரண்மனைக்கு நான் முன்பே போயிருக்கேன். அங்கே குகை, நீச்சல் குளம், கரடி புலி யெல்லாம் இருக்கு! என்று கரடி விட்டான்.

    குகையா...? என்ன குகை... மகேஷ் வாய் பிளந்தான்.

    அந்த காலத்துல ராஜாக்கள் பாதுகாப்பாய் ஊர் விட்டு ஊர் போறதுக்கு ரகசிய வழி! அந்த அரண்மனை யோட குகை அமெரிக்கா வரை போகுதாம் என்று தொடர்ந்து கேஸட் போட ஆரம்பித்தான்.

    அப்படியா...?

    ஆமாம்... வாயேன். நான் காட்டறேன்! என்றான் பெருமிதத்துடன்

    சந்துரு ராத்திரி பத்து மணிக்குதான் வீட்டுக்கு வந்தான் அவன் முகம் ஒட்டிப் போய் கண்களில் அயர்ச்சியுடனிருந்தான். தாடி பிசிறி அசிங்கம் பேசிற்று. சட்டையின் முதுகுபக்கம் வியர்வையில் வெளுத்திருந்தது. வெளியே பனியின் பிசிறல் குளிர்காற்றின் ஜில்.

    எல்லோரும் அலுப்புடன் படுத்திருக்க பார்வதிதான் எழுந்து கதவை திறந்து விட்டாள். சந்துரு! எங்கேடா போயிட்டே... சாப்பிட்டாயா... என்றாள் பரிவுடன்.

    அவன் அதற்கு பதில் சொல்லாமல் கீதா தூங்கிப் டாளா... என்று உள்ளே நடந்தான்.

    தெரில, போய் பாரு

    அதற்குள் கீதாவே வயிற்றைப் பிடித்துக் கொண்டு வெளியே வந்தாள். அவள் இன்னமும் அலங்காரத்துடன் தானிருந்தாள். கண்களை கசக்கிக் கொண்டு என்னண்ணா இப்படி பண்ணிட்டே... கடைசிவரையிலும் நீ வருவாய் வருவாய்ன்னு பார்த்துட்டிருந்தோம்

    கீதா! உன் கையை நீட்டேன்

    எதுக்கு...?

    நீட்டேன்! என்று இடது கையைப்பிடுங்கி விரலில் மோதிரம் ஒன்றை செருகினான்.

    ஏதுன்னா...?

    என் சம்பாதியம்...

    எந்த வழில...

    அதைப்பற்றி உனக்கு ஏன்? உனக்கு வேண்டி நானே கஷ்டப்பட்டு சம்பாதிச்சது. என் உழைப்பின் பரிசு!

    "எதுக்குண்ணா

    Enjoying the preview?
    Page 1 of 1