Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Thanga Thaamarai Penney!
Thanga Thaamarai Penney!
Thanga Thaamarai Penney!
Ebook140 pages50 minutes

Thanga Thaamarai Penney!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

மயக்க மருந்து கடத்தி, குற்றவாளிகள் பிடிபட்ட உண்மைச் சம்பவத்தை வைத்துப் புனையப் பட்டதே இந்தப் புதினம்.

Languageதமிழ்
Release dateMay 1, 2020
ISBN6580132405258
Thanga Thaamarai Penney!

Read more from Nc. Mohandoss

Related to Thanga Thaamarai Penney!

Related ebooks

Reviews for Thanga Thaamarai Penney!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Thanga Thaamarai Penney! - NC. Mohandoss

    http://www.pustaka.co.in

    தங்கத் தாமரை பெண்ணே!

    Thanga Thaamarai Penney!

    Author:

    என்சி. மோகன் தாஸ்

    NC. Mohandoss

    For more books

    http://www.pustaka.co.in/home/author/nc-mohandoss

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    வாழ்த்துரை

    நான் திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்தவன். எங்கள் மாவட்டத்தைச் சேர்ந்த எழுத்தாளர் திரு. என். சி. மோகன்தாஸ் அவர்களின் எழுத்துக்கு நான் விசிறி.

    சிறுகதை, புதினம், வாழ்வு முன்னேற்றக் கட்டுரைகள் என்று பல்துறைகளிலும் தன் எழுத்து முத்திரையைப் பதித்து வருபவர் திரு. மோகன்தாஸ்.

    ஆரம்பம் முதலே மோகன்தாஸின் வளர்ச்சியை கவனித்து - கணித்து - களித்து - ஊக்குவித்து வருபவன் நான்.

    எழுத்தை வெறும் சம்பாத்தியத்திற்கும் - பெயர் - புகழுக்கும் மட்டும் பயன்படுத்தாமல் இதைக் களமாக்கி குவைத் ‘FRONTLINERS' மூலம் இவர் செய்துவரும் நற்பணிகளையும் நானறிவேன்.

    குவைத்தில் இந்தியர்களை ஒருங்கிணைத்து நம் அருமை - பெருமை - திறமைகளைப் பிற நாட்டினரும் அறிந்து கொள்ளும் வண்ணம் வருடந்தோறும் இவர் வெளியிட்டு வரும் 'FRONTLINERS' புத்தகத் தொகுதிகள் மிகப் பிரபலம்.

    இப்புத்தகத்தின் 7ஆம் தொகுதி வெளியீட்டிற்காக திருமதி. மேனகாகாந்தி, நல்லி செட்டியாருடன் நானும் சென்று வந்தது மறக்க முடியாத அனுபவம்

    பல பிரபலங்களையும் குவைத்திற்கு அழைத்து கௌரவித்து நிகழ்ச்சிகள் நடத்தி அதன் மூலம் இதுவரை ஒரு கோடி ரூபாய்க்குமேல் பல நல்ல காரியங்களுக்கும் 'FRONT LINERS' உதவி இருக்கிறது. அத்துடன் போலி ஏஜண்ட்கள் மூலம் ஏமாற்றப்பட்டு குவைத்திற்கு வந்து கஷ்டப்படும் தொழிலாளர்களுக்கும் இந்தியத் தூதரகத்துடன் சேர்ந்து 'FRONT LINERS’ உதவி வருகிறது.

    இந்தப் புதினம் தொடராக வந்தபோதே நான் படித்து மகிழ்ந்தேன்.

    அன்புடன்,

    (ஏ. நடராஜன்)

    முன்னாள் இயக்குநர்

    சென்னைத் தொலைக்காட்சி

    *****

    அமெரிக்க வாசகத் தம்பதிகளின் வாழ்த்துரை!

    வாழ்க்கையில் ஒவ்வொரு காலகட்டத்திலும் தேடல்! அது கிடைத்துவிட்டால் வெற்றியின் பெருமிதம்-இல்லாவிட்டால் வெறுமை, ஏமாற்றம், விரக்தி - பிறகு அது பற்றின அலசல் - ஆய்வு அதிலிருந்து நாம் கற்றுக் கொண்ட பாடம் என்று இங்கு அனுபவங்களுக்கும் சம்பவங்களுக்கும் பஞ்சமேயில்லை.

    இந்தப் புதினத்தில் எழுத்தாளர் என்.சி.எம். - நம் வாழ்வின் வசந்த காலமாகிய கல்லூரி நாட்களை எடுத்துக் கொண்டிருக்கிறார். இளமையின் எழுச்சி - ராக்கிங் என்று சீனியர்கள் படுத்தும் பாடு, 'நான் அனுபவித்த கொடுமையை நீயும் அனுபவி' என்கிற ‘பெருந்தன்மை.’

    மெடிக்கல் படிப்பு டென்ஷனுக்கிடையே பசங்களின் போக்கிரித்தனம் - பொறுக்கித்தனம் - ஜாலியான வழிசல் - கடலை - மாணவிகளிடம் கையேந்தல் - வெட்டி பந்தா. இதனிடையே மென்மையாய் இழையோடும் காதல், சமூகத் தாக்கம், குடும்ப செண்டிமென்ட், நயவஞ்சகம், நம்பிக்கை துரோகம் - கொஞ்சம் மர்மம் - கொஞ்சம் நகைச்சுவை - கொஞ்சம் பந்த பாசம் - கொஞ்சம் மனிதாபிமானம் என்று எதையும் விட்டுவைக்காமல் விறுவிறுப்பாய் கதை செல்கிறது. அலட்டிக் கொள்ளாத - அனைவருக்கும் புரிகிற - போரடிக்காத - எளிய நடை என்.சி.எம்.மின் ஸ்பெஷாலிட்டி.

    கதை வேகமாய் செல்வது சரி, அதே வேகத்திலேயே முடித்திருக்க வேண்டுமா? இன்னும் சில அத்தியாயங்கள் நீட்டியிருக்கலாமே என்று தோன்றாமலில்லை.

    அன்புடன்,

    ஜெ. விஜய் ஆனந்த் & அபர்ணா

    பிட்ஸ்பர்க், யு.எஸ்.ஏ.

    *****

    1

    விடுமுறையின் சோம்பல் ஹாஸ்டல் மரங்களில் பனித்துளியாய் சொட்டிற்று. காக்கை, குருவிகள் சன்னமாய் படபடக்க, கட்டிடங்களின் ஒவ்வொரு பிரிவும் வெறிச்... அமைதிப் பூங்கா!

    தோட்டப் பையன் நீரூற்றுத் தொட்டியில் வாளியைக் கவிழ்த்து கோரி எடுக்க, வாட்ச்மேன் தன் கூண்டிலிருந்து எழுந்து ஓடிவந்து, ஏய், ஒனக்கு எத்தனை தடவை சொல்லியிருக்கேன்? இங்கே கூடாது. போய் பைப்ல புடிச்சுக்கோ. என்று விரட்டினான்.

    அதற்குள் வாசலில் வேன் உறுமி ஒலி எழுப்ப, இருப்பா வர்றேன் என்று ஓடிப் போய்த் திறந்தான்.

    என்ன லோடு? பால் மட்டும் தானா?

    இல்லை. வெண்ணெய், மோர், தயிர், நெய் என அத்தனையும் உண்டு. வேணுமா? என்று டிரைவர் மறுபடியும் ஒலி எழுப்பி உள்ளே பாய்ந்தார்.

    'ஹும்...! வாட்ச்மேன்னா எல்லாத்துக்கும் எளப்பமா போச்சு! கேட்டா இவனுங்களுக்குக் கோபம். கேட்காட்டி 'என்ன தூங்கறியான்னு' பிரின்ஸ்பால் குரைப்பார்!' முணுமுணுத்தபடி அவன் கதவை மூடினான்.

    பெண்கள் விடுதி.

    இரண்டாம் பிரிவு கட்டிடம்.

    அறைக்குள் பார்கவி அரை நிஜாருடன், கொசுவலைக்குள் சுருண்டுக் கிடக்க, குளியல் அறையில் தண்ணீரின் சலசலப்பு. கதவு திறந்து திடீரென அந்தச் சலசலப்பு அதிகமாக - ஏய்... சுஷ்மா! என்னடி இழவு பண்றே...? என்று பார்கவி முனகினாள். உன்னோட பெரிய ரோதனை!

    குளியல் என்று தலை துவட்டினாள். முதுகிலிருந்த ஈர முத்துக்களை ஒத்தி எடுத்து அந்தப் பக்கம் திரும்பி அலமாரியிலிருந்து தாவணி எடுத்தாள்.

    காலங்கார்த்தால - லீவுல கூட விடமாட்டியே!

    வந்து... பிரின்ஸ்பால்கிட்ட காலேஜ் மேகஸின் புரூப்பை கொடுக்கணும்!

    ஹையோ! எப்போ பார் படிப்பு! எழுத்து! என்ன பிறப்போ போ நீ!

    ரொம்ப சலிச்சுக்காத! ராத்திரி முழுக்க படம் பார்க்கறது! எவனோடயாவது சாட்டிங்! அப்புறம் பகல்ல பீடை மாதிரி தூக்கம்! சரி சரி முறைக்காதே! இதோ ஆச்சு!

    சுஷ்மா தலையை வாரிக்கொண்டு கதவை மூடிவிட்டு வெளியேறினாள்.

    சுரேஷ், பாத்ரூமிலிருந்து தலையைத் துவட்டிக்கொண்டு வெளியே வந்தபோது செல்போன் ஒருமுறை அலறி நின்று போயிற்று. எடுத்துப் பார்த்தான் பிரின்ஸ்பால் மிஸ்ட்கால்! அவர் எப்போதுமே அப்படித்தான்.

    சிக்கனம் - கச்சிதம். சுரேஷிற்கு அந்தக் கல்லூரியும், ஹாஸ்டலும் புதிதல்ல. அங்கு அவன் அடிக்காத லூட்டியில்லை. அங்கே பி.டி.எஸ்! பிறகு வேறு கல்லூரியில் தட்டுத்தடுமாறி இடம் கிடைத்து எம்.டி.எஸ்! சில காரணங்களால் கிளீனிக் வைக்க முடியவில்லை. அந்த முயற்சி தோல்வி.

    வேறு வழியில்லாமல் இங்கே வேகன்ஸி இருப்பது அறிந்து அணுக, பிரின்ஸ்பால் அவனை விடவில்லை. ஹாஸ்டலிலும் வார்டன் பொறுப்பு ஏற்றுக் கொண்டால்தான் வேலை என்று கிடுக்கிப்பிடி பிடித்தார்.

    அவன் படித்த போதிருந்த அதே பிரின்ஸ்பால்; மறுக்க முடியவில்லை. கல்லூரியில் லெக்ச்சரர் என்று மரியாதையான பதவி, பசங்கள் வகுப்புகளில் வாலாட்டினாலும் லேப், இன்டர்னல் அசெஸ்மெண்ட் என அவர்களின் கடிவாளம் இவர்கள் கையில்! ரொம்ப எகிறமாட்டார்கள்.

    ஹாஸ்டல் அப்படியில்லை. வகுப்பறையில் கட்டுண்டுக் கிடப்பவர்கள் இங்கு எகத்தாளம்! நான்கு பிளாக்குகள். ஒவ்வொன்றிலும் ஆறு ப்ளோர்கள்! ப்ளோருக்கு இருபது அறைகள்!

    அறைகளில் இரண்டு பேர் அல்லது சீனியர் என்றால் ஒருவர் மட்டும்!

    எல்லோரையும் எப்போதும்

    Enjoying the preview?
    Page 1 of 1