Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Kaadhalal Valarnthean!
Kaadhalal Valarnthean!
Kaadhalal Valarnthean!
Ebook101 pages1 hour

Kaadhalal Valarnthean!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Anuradha was born in 1947 in Thanjavur, Tamil Nadu. Her grandfather R. Balasubramaniam was an actor who inspired Anuradha to become a writer. Anuradha started her career as an artist before making several unsuccessful attempts to get a job with popular magazines. This prompted her to join Mangai, a Tamil magazine after the editor found her writings very interesting. Anuradha's literary career started in 1977 while working for the magazine.

Apart from her literary contributions, she was well known for her "anti-divorce counselling" work. In a career that spanned over 30 years, Anuradha wrote nearly 800 novels and 1,230 short stories. Her works were mainly centered on family and everyday happenings. One of her early works Sirai, won a gold medal for the best short story from Ananda Vikatan. It was adapted into a film of the same name. Following this, her other novels Kootu Puzhukkal, Oru Malarin Payanam and Oru Veedu Iruvasal were adapted into films in various languages such as Tamil, Telugu and Kannada. Oru Veedu Iru Vasal, directed by Balachander won the National Film Award for Best Film on Other Social Issues in 1991. The 1988 Telugu film Oka Baarya Katha based on her work won five Nandi Awards. In addition to films, many of her stories such as Archanai Pookal, Paasam and Kanakanden Thozhi have been adapted into Television serials. She was awarded a gold medal by M. G. Ramachandran, the then Chief Minister of Tamil Nadu.

Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580110003851
Kaadhalal Valarnthean!

Read more from Anuradha Ramanan

Related to Kaadhalal Valarnthean!

Related ebooks

Reviews for Kaadhalal Valarnthean!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Kaadhalal Valarnthean! - Anuradha Ramanan

    http://www.pustaka.co.in

    காதலால் வளர்ந்தேன்!

    Kaadhalal Valarnthean!

    Author:

    அனுராதா ரமணன்

    Anuradha Ramanan

    For more books

    http://www.pustaka.co.in/home/author/anuradha-ramanan-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    1

    'எத்தனை வயசிலிருந்து காதலிக்கிறோம்....'

    சுந்தரம், மனசுக்குள் தோராயமாய் ஒரு கணக்குப் போட்டுப் பார்க்கிறான்......

    ‘இருபது....?’

    'ஊம்ஷூம்....'

    ‘பதினைந்து....?'

    ‘நோ....’

    ‘பின்னே?'

    ‘ச்சீ.... வெளியில சொன்னா சிரிப்பாங்க....'

    ‘அட.... வெளியில் யாருக்குத் தெரியப் போறது.... நமக்குள்ளேயே துருவிப் பார்த்துக்கறோம். இதுல என்ன வெட்கம்?’

    'சரி… எட்டு வயசுல லவ் பண்ண ஆரம்பிச்சிருப்பேனா....'

    ‘கரெக்ட்… எட்டு வயசுலதான்....’

    ‘யாரை லவ் பண்ணினே....?

    ‘உதைப்பேன்டா.... அப்ப என்னோட காதலி என்னோட கிளாஸ் டீச்சர் கல்யாணி இல்லே?'

    சுந்தரத்துக்கு சிரிப்பு வருகிறது. எதிரில் தெரிந்த கண்ணாடியில் தன்னை ஒருமுறை உற்றுப்பார்க்கிறான்.

    அழகு என்று சொல்வதற்கு பிரமாதமாய் எதுவுமில்லை. ஆனாலும் அந்த உயரமும் சற்றே பெண்மை கலந்த கண்களும்....

    ‘இதுலதான் அவ மயங்கினாளா....''

    அவளைப் பற்றி நினைக்கும் போதே - நெஞ்சுக்குள் ஐஸ்கிரீமை - வைத்து மூடினாற்போல தண்ணென்ற குளிர்ச்சி.

    எட்டு வயசிலிருந்து சுந்தரம்தான் காதலித்திருக்கிறானே தவிர.... எவளும் நேற்று வரையில் அப்படியொரு வார்த்தையை அவனிடம் சொன்னதில்லை.

    எட்டு வயசில் கல்யாணி டீச்சர்....

    மாநிறமாய் - எப்பொழுதும் லைட் கலரில் ஃபுல்வாயில் புடவை அணிந்திருப்பாள். காதில் பெரிய வளையம், அடர்த்தியான கூந்தலை அலட்சியமாய் கறுப்பு உல்லன் நூலினால் முடிந்திருப்பாள். கிட்டப் போனால் சந்தன சோப் வாசனை கிறங்கடிக்கும்....

    அவனைச் செல்லமாய் ‘சுந்தர்' என்று அழைப்பாள், எப்பொழுதாவது அவனை மடியில் தூக்கி அமர்த்திக் கொண்டு முதுகைத் தடவிக் கொடுப்பாள்.

    குட் பாய்!

    அதுவும் பரீட்சையில், முதல் ராங்க் வாங்கினால் இந்தப் பரிசு நிச்சயம் கிடைக்கும்.

    அதற்காகவே சுந்தரம் ஒவ்வொரு முறையும், எல்லாப் பாடத்திலும் நூற்றுக்கு நூறு வாங்குவான்.

    'மெத்து மெத்’தென்ற கையினால், முதுகில் அவள் தடவும் அந்த நேரம் - சொர்க்கம்!

    நான் பெரியவனானதும் டீச்சரைத்தான் கல்யாணம் செஞ்சுப்பேன்.... டீச்சர், என்னை மடியில் தூக்கி வச்சுட்டு, தினமும் குட் பாய் சொல்லி தடவிக் கொடுப்பாங்க....

    பழைய நினைவுகளைக் கிளறிப் பார்க்கையில், சிரிப்பு அலையலையாய் பொங்கிக் கொண்டு வருகிறது அவனுக்கு....

    எட்டு வயசுல டீச்சர்.... பத்து வயசுல நடிகையர் திலகம் சாவித்திரி....

    ‘ஐயோ, டவுன் ஹைஸ்கூலுக்கு எதிர்த்தாப்பல, சினிமா போஸ்டர் ஒட்டுவானுங்க. அதுல சாவித்திரி படத்தைப் பார்த்தபடி, எத்தனை மணி நேரம் நின்னிருப்பேன்....'

    'ஸ்கூல் மணி அடிச்சதும் விழுந்தடிச்சிட்டு ஓடுவேனே....'

    அந்த நாளுல என்னிக்காவது ஒரு நாள், போஸ்டர்லே சிரிக்கிற சாவித்திரியோட உதட்டைத் தொட்டுப் பார்க்கணும்கறதுதான் என் லட்சியமா இருந்தது....

    யோசித்துப் பார்த்த சுந்தரத்துக்கு, இருபது வயசில் எத்தனைக் குழந்தைத்தனமாய், எத்தனை பெண்கள் மனசாரக் காதலித்திருக்கிறோம் என்கிற நினைப்பு - லஜ்ஜைக்குரிய விஷயமாகத்தான் இருக்கிறது.

    பதினாறு வயசு வரையில், காதல் என்றால், நமக்குப் பிடித்த பெண்ணின் மடியில் தலை வைத்துப்படுப்பது தான் என்கிற எண்ண ம்....

    பதினெட்டு வயசில், சினேகிதன் உன்னிகிருஷ்ணன், இவனை தாமிரபரணிக் கரைக்கு அழைத்துப் போய் விலாவரியாகச் சொன்னான்.

    எந்தா மோனே.... பிரேமிக்கத் தெரியாது?

    எல்லாம் தெரியும்… இவன் பெரிய இவன்… சொல்லித் தர வந்துட்டான்....

    உன்னிகிருஷ்ணன், வெள்ளையாய் சிரித்தான்.

    சுந்தரம்.... ஆ டீச்சர்மேல, நீ காணிச்சது பிரேமம் இல்லையாக்கும். அது பிரியம். சாவித்திரி, மீனாகுமாரி இதெல்லாம் அதே ரேஞ்ச்தான். ஒரு பெண் குட்டியை நோக்கியால் ஸ்பரிசிக்கணும் போல தோணுனா - அது பிரேமம். கட்டிப் பிடிச்சு முத்தம் கொடுக்கணும் போல இருன்னால்.... அது மோகம்.... ஆ பெண் குட்டிகூட சயனிக்கணும்னு தோணுனா… அது காமம்.... இது எல்லாத்தினும் இங்கிலீஷ்ல ஒரே வார்த்தை 'லவ்'வாக்கும். தமிழ்லேயும் மலையாளத்துலேயும் நூறு வார்த்தை. அதாக்கும் நம்ம லேங்வேஜ்ஜோட மகிமை....

    அன்று, சுந்தரம் பிரமித்து நின்றான். இருபது வயசில் தன்னுடன் படித்த. தன்னைவிடவும் ஒரு வருஷம் சீனியரான மாலதி என்கிற பெண்ணிடம் இவன் கொண்ட காதல், ஓரளவுக்கு வெளியில் சொல்லிக்கொள்ளத் தகுதி வாய்ந்ததாகத்தான் இருந்தது.

    மாலதிக்குத் தெரியுமோ, தெரியாதோ....

    இவன், அவளை ஒரு தேவதை மாதிரிதான் நினைத்தான்.

    திருநெல்வேலியில், தனக்கு காதல் பாடம் நடத்திய உன்னிகிருஷ்ணன் - மட்டும் அப்போது, இவன் பக்கத்தில் இருந்திருந்தால், கேட்டிருப்பான்....

    'இது லவ்வுல என்ன செக்ஷன்டா உன்னி?’

    'மாலதிய, நீ கல்யாணம் கழிக்க நினைக்கறியா…'

    ‘ஆமா....’

    'முத்தம் தர விருப்பமுண்டோ?’

    'என்னடா நீ அசிங்கம் பிடிச்ச மனுஷனா இருக்கே....’

    நான் கேட்டதுக்குப் பதில்.... முத்தம்....

    ஒ. கே. எனக்கு ஆசை தான்....

    'எவிட?'

    'புரியலே....’

    'நீ

    Enjoying the preview?
    Page 1 of 1