Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Verpidi Man
Verpidi Man
Verpidi Man
Ebook144 pages49 minutes

Verpidi Man

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Family Based Fiction Written By Akilan Kannan
Languageதமிழ்
Release dateNov 1, 2020
ISBN9781043466640
Verpidi Man

Related to Verpidi Man

Related ebooks

Reviews for Verpidi Man

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Verpidi Man - Akilan Kannan

    36

    ஆசிரியர் அறை

    தமிழ் இலக்கியத்தில் தங்க சிம்மாசனம் போட்டு அமர்ந்த நாவல்களில் ‘பாவை விளக்கு’, ‘சித்திரப் பாவை’, ‘வாழ்வு எங்கே?’, ‘கயல்விழி’ போன்ற பல புதினங்கள், சிறுகதைகள், மொழிபெயர்ப்பு நூல்கள், பயண நூல், நாடகம் என எழுத்தில் ஒரு பேரரசராக இருந்தவர் எழுத்தாளர் அகிலன். அவருடைய மகன்தான் அகிலன் கண்ணன்.

    ‘கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவி பாடும்’ என்கிறபோது எழுத்தாளர் அகிலனின் வீட்டுக் காளை கதை எழுதாமல் இருக்குமா... இவரும் நாவல்கள், சிறுகதைகள், கட்டுரைகள் எழுதுவதோடு ‘தமிழ்ப் புத்தகாலயம்’ என்ற பதிப்பகமும் நடத்தி வருகிறார். பழகுவதற்கு இனிமையானவர். தமிழ்நாடு புத்தக வெளியீடு மற்றும் விற்பனையாளர் சங்கத்தின் தலைவராகவும் இருந்திருக்கிறார்.

    இவரது தந்தை அகிலன் ஐயாவிற்கு அந்நாளைய பிரபலங்கள் நண்பர்களாக இருந்தார்கள். முன்னாள் முதல்வர்கள் - கலைஞர், புரட்சித் தலைவர், புரட்சித் தலைவி போன்றவர்களின் குடும்ப நண்பராக இருந்தவர்.

    எம்.ஜி.ஆர். நடித்த ‘மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்’ திரைப்படம் இவரது தந்தை அகிலன் எழுதிய ‘கயல்விழி’தான். பாரம்பரிய எழுத்தாளர் குடும்பம் இவருடையது. இவருடைய நாவலை வெளியிடுவதில் நானும் பெருமைப்படுகிறேன். வழக்கமாக ஆசிரியர் அறையில் பொது விஷயங்களை எழுதுவேன். இந்த முறை நாவலின் நாயகனை முன்னோட்டமிட்டதால் ஒரு சிறிய மாற்றம்.

    அப்புறம்... மக்களின் தலையாயப் பிரச்னைகளில் ஒன்றாக பிக்பாஸும், சித்தி2ம் மாறிவிட்டது. இரவு ஒன்பது மணிக்கு மேல் மக்கள் இவைகளில் சங்கமித்து விடுகிறார்கள். இதனால் பரபரப்பாக இருந்த 20/20 கிரிக்கெட் கூட இரண்டாவதாக மாறிவிட்டது.

    சென்னை சூப்பர் கிங்ஸ்... இந்த முறை இப்படித் தோல்விகளைத் தோளில் தூக்கி வைத்துக் கொண்டார்களே என்று வருத்தப்படலாம், ஆனால் கோபப்படக் கூடாது.

    ஐ.பி.எல்லில் இதுவரை ஆடிய அணிகளிலேயே நம்ம சென்னை சூப்பராக இருந்தது. பழசை மறக்கக் கூடாது என்பது இங்கும் அர்த்தமாகும்.

    தீபாவளியைச் சிறப்பாகக் கொண்டாடுங்கள் என்று சொல்லுவதை விட, பாதுகாப்பாகக் கொண்டாடுங்கள். நான் சொல்வது, வெடி விஷயத்தில் மட்டும் பாதுகாப்பாக அல்ல... நோய்த் தொற்று ஏற்படாதவாறு முகக் கவசம் அணிவதுடன், சமூக இடைவெளியை கண்டிப்பாகவும், கடமையாகவும் கடைப்பிடியுங்க.

    அன்புடன்,

    ஜி.அசோகன்

    அகிலன் கண்ணன்

    மாயன் எனும் புனைபெயரில் கணையாழி, தீராநதி, தீக்கதிரில் கவிதைகள் எழுதி வருகிறார். முன்னர், தேன்மழை, கண்ணதாசன், ஞானரதம், தீபம், சோதனை இதழ்களில் கவிதைகள் எழுதியுள்ளார். தேன்மழை மாத இதழின் ஆசிரியர் குழுவில் பணியாற்றியுள்ளார். பபாஸி, (தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர் சங்கம், தமிழ் பதிப்பாளர் சங்கம் இவற்றில் பெரும் பங்காற்றி உள்ளார். ‘வேர்பிடி மண்’ இவரது முதல் நாவல்! அடுத்து இரு நாவல்களில் பயணித்து வருகிறார்.

    வேர்பிடி மண்

    1

    (எச்சரிக்கை: தமிழகத்தில் கணினியோ செல்பேசியோ அதிகம் அறிமுகமாகாத - புழக்கத்திற்கு வராத காலத்தில் ஆரம்பமாகும் நாவலிது!)

    ‘சார், சுந்தரமுத்து சார் இரண்டுமுறை பேசிவிட்டார்; அவசரமாம். நீங்க வந்தவுடனே அவருக்குப் பேசணுமாம்!’ - எனது மேலாளர் சங்கரன்.

    ‘சரி’ எனத் தலையசைத்த நான், உடன் தொலைபேசியில் சுந்தரமுத்துவைத் தொடர்பு கொண்டேன்.

    காத்திருந்த காதலன் போல் முதல் அழைப்புக்கே எடுத்து என்னை முந்திக்கொண்டு பேசினார் சுந்தரமுத்து.

    ‘வணக்கம் குமார்! தலைமைச்செயலகத்திலிருந்து செயலர் மணிகண்டன் ஆபீசிலிருந்து பேசினாங்க. போய்ப் பார்த்துட்டு வந்துடலாமா? ஒரு மணி நேரத்தி’தயாராயிருங்க. நான் வந்து உங்களை அழைச்சுக்கிட்டுப் போயிடறேன். ‘

    ‘நான் தயாராயிடறேன்; வந்துடுங்க. போய்ட்டு வந்துட்லாம் ‘என்றேன்.

    யோசிப்பதற்கே இடந்தராமல், தாமே திட்டமிட்டு நிகழ்ச்சியை உறுதி செய்துவிடுகிறார். மிக முக்கியமாகவும் அவசரமாகவும் இருந்தால் மட்டுமே இப்படி. மற்ற வேளைகளானால், ‘குமார் உங்க வசதி, வேலை நேரம் எப்படி ‘என்றெல்லாம் எனது’ ‹ழலுக்கு முன்னுரிமை தந்த பின்பே சங்கத்தின் சார்பான வெளி வேலைகளைத் திட்டமிடுவார்.

    சுந்தரமுத்து பதிப்பாளர் சங்கத் தலைவர்; குமார் ஆகிய நான் அச் சங்கச் செயலர். அவருக்கு வயது ஐம்பதுக்கு மேல். சு.மு நல்ல உயரம்; அதற்கேற்ற திடமான உடல்வாகு. எனக்கு முப்பதுக்கு சற்று மேல். அவர் எப்போதும் எதிலும் நிதானம்தான்; பதட்டமும் வேகமும் எனது பாணி!

    எனது பதிப்பக மேலாளர் சங்கரன் என்னை விட வயதில் மூத்தவர். ஈடுபாடு கொண்ட, நம்பகமான பணியாளர். ‘பின் தூங்கி முன்னெழும் பத்தினி போன்று’ என்றெல்லாம் சொல்லிக் கொச்சைப்படுத்த மாட்டேன். எனக்கு முன் வந்து, தான் தாள் திறந்து நான் இல்லம் கிளம்பிய பின் பதிப்பகத்தைப் பூட்டிச் செல்பவர். என்னிடமுள்ள பதிப்பக மாற்றுச் சாவிக்குப் பெரும்பாலும் வேலை தராதவர்.

    எனது சொந்தப் பதிப்பக வேலையைவிட, பதிப்பாளர் சங்கப் பணிகளில் அதிகம் ஈடுபாடு கொண்டு, நேரம் காலம் பார்க்காது அலைவது கண்டு, சில சமயங்களில் செல்லமாகக் கடிந்து கொள்வார். மஞ்சள் காமாலை நோய் வந்து நான் படுத்திருந்தபோது உங்க உடம்பைப் பார்த்துக்கிடாம வெளிவேலை சுத்தினதும் நேரா நேரத்துக்கு சாப்பிடாமப் போனதுனாலதான் இப்பிடி உங்களுக்கு உடம்புக்கு வந்துடுச்சுன்னு நெனைக்கிறேன்; இனிமேலயாவது அலைச்சலைக் குறைச்சுக்குங்க; உணவு நேரத்தையும் ஒழுங்குபடுத்திக்கிடுங்க என வருத்தப்பட்டு, அக்கறையுடன் ஆலோசனையையும் சொன்னவர்.

    இதே அக்கறை வெளிப்பாடு எனது மனைவி மக்களிடமிருந்து என் மீது வெளிப்படும்போது அவர்கள் மீது கோபங்கொள்ளும் நான் சங்கரனின் உபதேசங்களைக் காது கொடுத்துக் கேட்டுப் புன்சிரிப்பு உதிர்ப்பேன். பின்னர், தனித்திருக்கும்போது, சொந்த மனுஷங்களிடம் ஒரு மாதிரியாகவும் வெளி மனுஷங்களிடம் வேறு மாதிரியாகவும் எதிர்வினையாற்றும் - பழகும் - இங்கிதம் சார்ந்த எனது குணவெளிப்பாடு மாறுதல் மனசுள் வண்டெனக் குடையும்.’ மாற்றிக்கொள் ‘எனச் சொல்லும் அறிவு - உணர்வு வெளிப்பாட்டிலோ அவ்வறிவு, பாலில் தயிரெனப் பதுங்கிக் கொள்ளுகிறது.

    சங்கரன் சார், இன்னைக்குப் பதினோரு மணிக்கு ‘÷’அவுட் ஆர்டிஸ்ட் ‘வேலுவை வரச் சொல்லியிருந்தேன். இப்பவே அவருக்குப் ஃபோன் செய்து ‘இன்னைக்கு வரவேண்டாம்; நாளை காலைஃபோன் செய்துட்டு வாங்கன்னு சொல்லீடுங்க. நான் செயலகம் போயிடுவேன்; எப்போ திரும்பி வருவேன்னு தெரியாது. அவர் அனாவசியமா வந்து அலைய வேண்டாம் "என்றேன்.

    இறுதிப் பார்வைக்கு வந்திருந்த மெய்ப்புப் படியில் மூழ்கினேன். முந்தைய ஃப்ரூஃபில் இல்லாத புதிய பிழை ஒன்று திடீரெனக் கண்ணுக்குப் புலப்பட்டது. இது ஒரு வியாதி. எங்கு எப்படி ஒரு வாக்கியம் - வார்த்தை கண்ணுக்குப் பட்டாலும் அது சுட்டும் பொருள் மூளைக்குள் நுழையுமுன் அந்த வார்த்தை - வாக்கியம் பிழையின்றி உள்ளதா என்றே பார்க்கத் தோன்றுகிறது. ‘நக்கீரப் பரம்பரை ‘என இதழாசிரிய நண்பர் என்னைக் கேலி பேசுவார். பிழையைத் தேடும் புத்தியா? நிறைவைத் தேடும் மனசா? - அட, ஒரு பட்டிமன்றத் தலைப்புக் கிட்டிவிட்டது!

    பதிப்புத் துறை முன்னோடி ராமசாமி சொன்னது

    மனசில் பளிச்சிடுகிறது. திரு.வி.க. நினைவுக்கு வந்தார். திரு.வி.க. தனக்கு அனுப்பப்படும் அச்சுக்கோர்ப்புத் தாட்களில் பிழைகள் மலிந்திருந்தாலும், மறு மெய்ப்பில் பிழைகள் களையப்படாதிருந்தாலும் புதிய பிழைகள் கண்டாலும் பெருங்கோபங்கொள்வாராம். பிழைகள்

    Enjoying the preview?
    Page 1 of 1