Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Gangai Engey Pogiraal?
Gangai Engey Pogiraal?
Gangai Engey Pogiraal?
Ebook311 pages5 hours

Gangai Engey Pogiraal?

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

ஒரு பெண்ணுக்கோ, ஆணுக்கோ வாழ்க்கையில் விரக்தியும், சோகமும் முடிவாகி விட்டாலுங்கூட, அப்படியொரு விரக்தியில் ஒருவரின் வாழ்க்கை முடிவு பெற்று விடுவதை மனித மனம் கொண்டோர் விரும்ப முடியாதுதான். இக்கதையிலும் கங்கா திருமணம் செய்ய விருப்பமில்லாதவள். அவளின் வாழ்க்கையில் ஏற்படும் நிகழ்வுகள் என்ன? அவளுடைய விரக்தி என்ன? எங்கு நிம்மதி கிடைக்கும்? அந்த கங்கை எங்கே போகிறாள்? என்பதை தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

Languageதமிழ்
Release dateDec 6, 2021
ISBN6580103906917
Gangai Engey Pogiraal?

Read more from Jayakanthan

Related to Gangai Engey Pogiraal?

Related ebooks

Reviews for Gangai Engey Pogiraal?

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Gangai Engey Pogiraal? - Jayakanthan

    https://www.pustaka.co.in

    கங்கை எங்கே போகிறாள்?

    Gangai Engey Pogiraal?

    Author:

    த. ஜெயகாந்தன்

    Jayakanthan

    For more books

    https://www.pustaka.co.in/home/author/jayakanthan-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    அத்தியாயம் 22

    அத்தியாயம் 23

    அத்தியாயம் 24

    அத்தியாயம் 25

    அத்தியாயம் 26

    அத்தியாயம் 27

    அத்தியாயம் 28

    அத்தியாயம் 29

    அத்தியாயம் 30

    அத்தியாயம் 31

    முன்னுரை

    எனது வாசகர்களில் மிக அதிகமானவர், அதிக சந்தர்ப்பங்களில், பல தடவை பரிச்சயம் கொண்ட நாவல் சில நேரங்களில் சில மனிதர்கள். அந்த நாவலில் வருகிற கங்கா எனக்கே ஒரு கதாபாத்திரம் என்ற எல்லையை மீறி வாழ்க்கையில் பிரவேசிக்க முயல்கிற மாதிரி உயிர் பெற்றெழுகின்ற பாத்திரமாய்த் தோன்றுகிறது.

    அக்கினிப் பிரவேசம் என்ற சிறுகதையில் பெயர் கூட அவசியமில்லாத ஒரு ‘அவளா’ய்த் தோன்றிக் கங்கையில் சங்கமிக்கிறவரை ஒரு முழு வாழ்வு பெற்ற, பூரணத்துவம் பெற்ற ஒரு பாத்திரம் - ஒரு விசேஷமான, விபரீதமான யுகத்தில் தோன்றிய இந்தியப் பெண்களின் பிரதிநிதி. இவளை ஒரு விரக்தியுற்ற, வாழ்வின் உறுத்தல்களை மறக்க முயல்கிற மனோவியாதிக் காரியாகத்தான்சில நேரங்களில் சில மனிதர்கள் நாவலில் விட்டிருந்தேன். அது அவளுடைய முடிவாகிவிடுவதில் வாசகர்களுக்கோ எனக்கோ துளிக்கூடச் சம்மதமில்லாதிருந்தது போலும்...

    யோசித்துப் பார்த்தால், அதுவே ஒரு முடிவாகிவிடக் கூடாது - ஒரு பெண்ணுக்கோ, ஆணுக்கோ வாழ்க்கையில் விரக்தியும் சோகமும் முடிவாகிவிட்டாலுங்கூட, அப்படியொரு விரக்தியில் ஒருவரின் வாழ்க்கை முடிவு பெற்று விடுவதை மனிதமனம் கொண்டோர் விரும்ப முடியாதுதான் என்பதை நானும் உணர்ந்தேன். கங்கா கதையில் மட்டுமல்லாது கதாசிரியனுக்கும் ஒரு பிரச்சனையாகிப் போனாள்!

    தினமணி கதிரில் தொடர்கதையாகச் சி.நே.சி. மனிதர்கள் நாவலை எழுதி முடிக்கும் போது ‘காலத்தின் அலைகளால் எற்றுண்ட, மோதி மூழ்கிய, போக்கில் மிதந்த, எதிர்த்து ஓய்ந்த ஓர் ஆத்மாவின் கதை இது’ என்று இறுதியாகக் குறிப்பிட்டிருந்தேன். ஆனால் இந்த முத்தாய்ப்புக்கு வரவேண்டுமானால் இன்னும் சொல்லப்பட வேண்டியது இவள் வாழ்க்கையில் நிறைய இருக்க வேண்டும் என்று என்று எனக்கே தோன்றியது. அவ்வாறு நிறைய நிறைய இவளைப் பற்றி யோசிக்க யோசிக்க எனக்கு மிகுந்தது...

    எனக்குக் கதைகளை அல்ல; கதைக்கு ஆதாரமான வேர்களும் வித்துக்களுமான கதைமாந்தர்களைப் பற்றியும், வாழ்க்கைப் பிரச்சனைகளைப் பற்றியும் யோசித்துக் கொண்டிருப்பது மிகுதியும் பயன் தருகிறது. அந்த யோசனைகள் குருட்டாம் போக்கான கற்பனைகள் அல்ல. அவை சமூகத்தோடும் என்னோடும் சம்பந்தப்பட்ட என் கால வாழ்வுப் பிரச்சனைகள் என்பதால் அவற்றை யோசித்ததனாலேயே நான் பெரும் பயனடைகிறேன். எனவேதான் என்னை எழுதச் சொன்னால் அவற்றைப் பற்றியே தொடர்ந்து, பன்னிப் பன்னி எழுதுவதில் நான் சலிப்படைவதேயில்லை.

    ‘சில நேரங்களில்... ’ நாவலை ஒரு முழுமை என்று எல்லாரும் ஏற்றுக் கொண்டுவிட்ட பிறகுச் சாஹித்ய அகாடமி பரிசு தந்து விட்ட பிறகு (முடிவு பெறாத நாவலுக்கு அகாடமிக்காரர்கள் பரிசு தருவதில்லை) அதைத் தொடர்ந்து அதன் இரண்டாம் பகுதியாக இன்னொரு நாவலை நான் எழுதத் துணிந்தேன் எனில் ஒரு கதை, சமகாலமாந்தரைப் பற்றிய கதை, அவர்கள் உயிருடன் உள்ளவரை முடிந்து போனதாகாது என்பதால் மட்டுமல்ல; அந்தப் பாத்திரங்கள் பாதியில் விரக்தியுற்ற, குறைபட்ட, வடுப்பட்டவர்களாக இறுதியடையலாகாது எனும் நல்லெண்ணமே ஆகும். இந்த நல்லெண்ணம் ஏதோ காருண்ய உணர்ச்சியால் எழுந்தது அல்ல. வாழ்க்கை பற்றி நற்கருத்தும், நல்ல சித்தாந்தமும் உடையோர் தவிர்க்க வொண்ணாத தர்மம் அது. விரக்தியும், துன்பமும் வாழ்க்கையில் ஓர் இடைநிலைத் தோற்றம் தானே தவிர அதுவே இறுதியல்ல; முடிவு அல்ல என்ற கருத்துடையவர்கள், ‘கலை உருவத்துக்காகவும்’ ‘புதுமை’க்காகவும் ‘ஒரு மாற்றத்துக்காகவும் தப்பான செய்திகளை, அவ நம்பிக்கையை, விதைத்து அறுவடை செய்கிற முடிவுகளுக்குத் தங்கள் படைப்புகளை மனமொப்பித் தாரை வார்த்துவிட முடியாது.’

    அவ்விதமான ஒரு முடிவினை முதல் பாகத்தின் இறுதியாகவும், இரண்டாம் பாகத்துக்கான ஆரம்பமாகவும் கொண்டது முழுமையான கதையோட்டத்தின் நடுவே நிகழ்ந்த இடைநிலைத் தோற்றமாயிற்று. சில நேரங்களில் சிலமனிதர்களின் இரண்டாம் பாகமே ‘கங்கை எங்கே போகிறாள்?’ எனினும் முன்னதை எழுதும் போது இரண்டாவது பற்றிய எண்ணமே எனக்கிருந்ததில்லை என்பதைச் சொல்லிவிட வேண்டும்.

    ஏற்கனவே இன்னொரு பத்திரிகையில் முதல் பாகத்தை எழுதி முடித்து ஐந்தாண்டுகளுக்குப் பிறகு மற்றுமொரு பிரபலமான பத்திரிகையில் வேறொரு தலைப்பில் இரண்டாம் பாகத்தை எழுதுகிற ‘மரபை’ எனக்கு முன் வேறு யாரும் செய்திருப்பதாகத் தெரியவில்லை. இது ஒரு சிறப்பு எனின் அதற்கு முழுப் பொறுப்பும் குமுதம் பத்திரிக்கைக்குச் சேர வேண்டும் என்று விரும்புகிறேன்.

    வாசகர்களுக்கு எனது வழக்கமான நன்றி என்றும் உண்டு.

    07.12.78

    சென்னை - 78

    த. ஜெயகாந்தன்

    கங்காவைப் பற்றி...

    கங்கா!

    அவள் பட்டதாரி. அரசாங்க அலுவலகம் ஒன்றில் பெரிய ஆபீசர்.

    விதவைத் தாயார் கனகத்துடன் தனித்து வாழ்கிறாள். சொந்த வீடு, நல்ல சம்பளம், எல்லா வசதிகளும் இருக்கிறது. இருந்தும் அவள் எதிலும் பிடிப்போ பற்றோ இன்றி வெறுமையில் நாட்களைக் கழித்துக் கொண்டிருக்கிறாள்.

    தனக்குக் கல்யாணம் ஆகாதென்றும் ஆகக்கூடாதென்றும் நம்புகிறாள் அவள். சதா தனது மனதிற்குள் ஆயிரம் யோசனைகளிலும் நினைவுகளின் மோதலிலும் உழன்று கொண்டிருக்கும் அவள், யாரையும் நிமிர்ந்து பார்ப்பதோ பேசுவதோ கிடையாது.

    அவளது அண்ணன் கணேசன் - அவளை வளர்த்தவன் - ஏதோ சொற்ப சம்பளம் வாங்கும் குமாஸ்தா குழந்தை குட்டிக்காரன். வாயாடி மனைவியின் தொணதொணப்பிலும் பற்றாக்குறை வருமானத்தின் கொடுமையிலும் சிக்கிக் கொண்டு, திருவல்லிக்கேணியில் முப்பது ரூபாய் வாடகைப் பொந்தில் ஒண்டுகக் குடித்தனம் நடத்திக் கொண்டிருக்கிறான்.

    கங்காவின் அபிமான எழுத்தாளரான பிரபல கதாசிரியர் ஆர்.கே.வி. வாரப்பத்திரிகை ஒன்றில் எழுதிய சிறுகதை ஒன்றினைக் கங்கா படிக்கிறாள். அந்தக் கதை அவளைக் குழம்பச் (Disturb) செய்கிறது.

    ஆர்.கே.வி.யின் அந்தக் கதை - ஒரு கல்லூரி மாணவி, ஒரு மழைக்கால மாலை நேரத்தில் பஸ்ஸுக்கு நின்று, ஒரு காரில் ‘லிப்ட்’ கிடைக்க, அதில் ஏறிச் சென்று, அவனிடம் தான் எதையோ பறி கொடுத்து விட்டதாக அழுதுகொண்டு வந்து அம்மாவிடம் நிற்கிறாள்.

    கதையில் வருகிற விதவைத் தாய் முதலில் கொதிக்கிறாள்; குமுறுகிறாள்; மானம் கெட்டு வந்து நிற்கும் மகளைக் கொண்டு போய்க் கடலில் தள்ளித் தானும் தற்கொலை செய்துகொள்ள எண்ணுகிறாள். இவள் தலையில் நெருப்பை வைத்தால் என்ன என்று கோபத்தால் எரிந்து தணிகிறாள். கடைசியில் அறிவு பூர்வமாக எல்லாக் கோணங்களிலிருந்தும் பார்த்து மகளை மன்னித்து, அறிவுரை கூறி ஆதரிக்கிறாள்.

    இந்தக் கதை கங்காவின் மனத்தில் புதிய சலனங்களை உண்டாக்குகிறது.

    ஏனெனில் அந்த ‘அக்கினிப் பிரவேச’ கதையின் நாயகி - வேறு யாருமில்லை; தானேதான் என்று அவள் புரிந்து கொள்கிறாள். அந்தக் கதையில் அவளது தாய் - அந்தப் பெண்ணின் அசட்டுத் தனத்தால் விளைந்த விபத்தின் விளைவுகள் பாதிக்காமல் அவளை மீட்டு, கறைகளைக் கழுவிப் புனிதமாக்கி, பழி சூழாது காப்பாற்றி, அவளுக்குப் புதிய ஞானம் தந்து உலகைப் பற்றிய தெளிவான பிரக்ஞையுடன் அவளை உலவ விடுகிறாள்.

    ஆனால் கங்காவின் வாழ்வில் பன்னிரண்டு வருஷங்களுக்கு முன் குறுக்கிட்டுவிட்ட விபத்தைப் பகிரங்கப்படுத்தி, அதன் விபரீத விளைவுகளுக்கு அவளைப் பலியாக்கி, மீளாத பழிக்குத் தானும் ஆளாகி விடுகிறாள் கனகம். கணேசன் அவளது உறவை ‘இல்லை’ யென்றாக்கி அவளை வீட்டைவிட்டு வெளியே துரத்தி விடுகிறான். மகளுடன் தாயும் வெளியேறுகிறாள்.

    கனகத்தின் அண்ணா - வயதில் மிகப் பெரியவரும், குழந்தைகள் இல்லாதவரும், தஞ்சாவூரில் பிரபலக் கிரிமினல் லாயருமான வெங்கு மாமா - கங்காவுக்குப் புகலிடம் தந்து அவளைப் பட்டதாரியாக்கி, அவள் இப்போது வகிக்கும் ஆபீசர் உத்தியோகத்திலும் அமர்த்தி வைக்கிறார்.

    இன்று கங்கா தாயுடன் தனியாக வாழ்கிறாள். கனகத்துக்கும் கங்காவைப் பற்றிப் பெருமை கொள்ள எவ்வளவோ இருந்தும் கூட, உலகத்தில் எல்லாப் பெண்களையும் போல் தன் மகள் வாழ்ந்து பெருகக் கொடுத்து வைக்கவில்லையே என்ற ஆறாத் துயரே மிகுந்திருக்கிறது. தன்னை ‘அம்மா’ என்று கூப்பிடுவதைக் கூட நிறுத்தி விட்ட மகளின் வைராக்கியம் அவளுக்குப் பிரமிப்பாகவே இருக்கிறது.

    ஆர்.கே.வியின் கதையைப் படித்த பிறகு கனகம் கங்காவின் வாழ்க்கை பாழானதற்குத் தானே பொறுப்பு என்று இப்போது புதிதாய் உணர்ந்து துயறுருகிறாள்.

    கங்காவைப் பற்றி அவதூறு பேசித் திரிகிற கணேசனிடம் ஓயாமால் சண்டைக்கு நிற்கிறாள். கங்கா இப்படி இருப்பதில் ஏதோ ஒரு சோகம் இருந்த போதிலும் அதையும் மீறி ஏதோ ஒரு பெருமையும் அந்தத் தாய்க்கு இருக்கிறது.

    கங்காவின் இப்போதைய வாழ்வை விடச் சிறப்பாக, எதுவும் அமையாது. அமையவும் கூடாது என்று நினைக்கிறார் வெங்கு மாமா. சகல விஷயங்களிலும் மகா மேதையாக, சிரேஷ்டராக இருக்கிற மாமா - ஏனோ இந்தக் கங்கா விஷயத்தில் மட்டும் மன வக்கரிப்புக்கு ஆளாகி அவளைத் தனக்கே சொந்தமாக்கிக் கொண்டு விடமுடியும் என்கிற சபலத்திலும் சொந்தமாக்கிக் கொள்ள வேண்டுமென்கிற நோக்கத்திலும் காத்திருக்கிறார். தஞ்சாவூரிலிருந்து ஹைகோர்ட்டுக்கு வேலையிருக்கிற சாக்கில் வந்து கங்காவுடன் தங்குவார்.

    முன்பின் தெரியாத எவனிடமோ தன் அறியாமையினால் வடுப்பட்டு விட்ட கங்காவின் உணர்வுகள் மாமாவின் உள்நோக்கத்தை ஸ்பஷ்டமாகவே புரிந்து கொண்டு எச்சரிக்கையுடன் சிலிர்த்து நிற்கின்றன. சர்க்கஸ்காரன் புலியைப் பழக்குவது போலும் அதனிடம் பழகுவது போலவும் அவள் பக்குவமாக நடந்து கொள்கிறாள்.

    தனது இன்றைய நல்ல நிலைமைக்கும் தனக்குள்ள அறிவு முதிர்ச்சிக்கும் மனமுதிர்ச்சிக்கும் மாமாவின் உறவும் பாசமுமே அடிப்படைக் காரணம் என்று உணர்ந்து அந்த நன்றி உணர்ச்சியுடன் மாமாவின் அந்தச் சிறு பலவீனங்களைப் பெரிது படுத்திப் பாராட்டாமல் சகிக்கிறாள் கங்கா. அதனால் தான் ‘you can only be a concubine, not a wife,’ என்று சொன்னதை அவளால் சகிக்க முடிகிறது; ‘சரிதானே’ என்றும் தோன்றுகிறது. ஆர்.கே.வி.யின் கதையைப் படித்து மனம் கலங்கிக் கண்ணீர் பெருக்கிக் கொண்டிருந்த கனகத்தைக் கண்டித்து அடக்குகிறார் மாமா. கதையில் வருகிற தாயே மோசமானவள் என்றும் கனகம் செய்ததே சரி என்றும் அவளுக்கு உணர்த்துகிறார். மாமாவின் வாதத்திறமைக்கு முன்னால் கனகத்தின் தாய்ப்பாசம் கூடத் தோற்றுப்போகிறது. கங்காவுக்குச் சமர்த்து இருந்தால் அவனையே கண்டுபிடித்து அவனோடு வாழட்டுமே என்று இடித்துக் காட்டுகிறார். இதை எதேச்சையாகக் கேட்டு விடுகிறாள் கங்கா. அந்தக் கணத்திலிருந்து அவள் மனம் அந்த ‘அவனை’ப் பற்றிச் சிந்திக்க ஆரம்பிக்கிறது.

    பன்னிரண்டு வருஷத்திற்குப் பிறகு ஊர் பேர் தெரியாத அந்த எவனையோ தேடிக் கண்டுபிடிக்கிற அசாத்திய முயற்சியில் அவள் ஈடுபடுகிறாள். அப்போது ஒருவேளை ஆர்.கே.வி.தான் அந்த ‘அவனோ’ என்று விநோதமான சம்சயம் அவளுக்குத் தோன்றுகிறது. இருவர் மட்டுமே சம்பந்தப்பட்ட ஒரு நிகழ்ச்சியை அத்தனை தத்ரூபமாக எழுதியவர் அதில் சம்பந்தப்பட்ட இன்னொரு நபராகத்தானே இருக்க முடியும் என்று அவள் நினைக்கிறாள். ஆயினும் ஆர்.கே.வி.என்ற இன்றைய அறிவு ஜீவியை அந்த எவனோ ஒருவனாக நினைத்துப் பார்க்க அவள் மனம் தயங்குகிறது. எனினும் அந்த ஆர்.கே.வியைச் சந்தித்து விடுவது என்று தீர்மானிக்கிறாள். ஆர்.கே.வி. கங்காவின் பழைய கல்லூரியில் லைப்ரரியில் வேலை செய்கிறவர் என்றும் அறிகிறாள்.

    ஆர்.கே.வி.யின் வீட்டில் அந்தக் கதையைப் பற்றி அவருடன் விவாதித்துக் கொள்கிற சாக்கில் அவளுக்கு அந்தக் கதையின் நாயகன் பற்றிய - அதாவது அவள் வாழ்வில் விதியாய்க் குறுக்கே வந்து புகுந்த அந்தப் பிரபுவைப் பற்றிய - விவரங்கள் முழுவதுமே கிடைக்கிறது. அவன் ஏற்கனவே திருமணம் ஆனவன். மூன்று குழந்தைகளுக்குத் தந்தை. மூத்த பெண் மஞ்சு அதே காலேஜில் படிக்கிறாளாம்.

    கங்கா அவனைச் சந்திக்கிறாள். அவன் இப்போது நிஜமாகவே ஒரு கனவான் என்று ஆர்.கே.வி. இந்தப் பிரபுவைப் பற்றிக் கூறியதன் உண்மையை உணர்கிறாள். அவனைப் பற்றிய எல்லா விவரங்களையும் கங்கா தெரிந்து கொள்கிறாள்.

    அவனுடைய மனைவி மக்களின் அன்புக்கும் மரியாதைக்கும் பாத்திரமாகிற வாய்ப்புகளை இழந்து நிற்கிற அவன்பால் கங்காவுக்கு ஒரு Compassion - பரிவு ஏற்படுகிறது. தன் தாயிடம் கூட ஒட்டாமல் வாழ்ந்து வருகிற அவள், அவனிடம் தனக்குள்ள பந்தத்தை உள்ளூர உணர்கிறாள். மனைவியின் உதாசீனத்திற்கும், தந்தையின் நம்பிக்கைகளை இழந்துவிட்ட துர்ப்பாக்கியத்துக்கும் ஆளாகிவிட்ட அவன் குழந்தைகளின் அன்பையும் அருகாமையையும் பெறக்கூட அருகதை அற்றவன் போல் நடத்தப்படுகிறான்.

    பிரபு போன்ற ஒரு பொறுப்பில்லாத தான்தோன்றியின் விஷயத்தில் எந்த அளவு முன் ஜாக்கிரதையும் அதிகபட்சமானதாகி விடாது என்றும் கங்கா உணர்கிறாள். இழப்பதற்கு எதுவும் இல்லாத அவள், எல்லா மனித மரியாதை மதிப்புகளும் பறிக்கப்பட்டு விட்ட அவனது வறண்ட வாழ்க்கையில் தனது அப்பழுக்கற்ற தோழமையினால் பசுமை கூட்டுகிறாள்.

    அன்பு செலுத்தக் கங்கா கிடைத்துவிட்ட பிறகு, அவனது நல்ல இயல்புகள் மீசிரமாகத் தெரிகின்றன. எந்த மனக் கூச்சமும் நிர்ப்பந்தமும் இல்லாத ஒரு சூழ்நிலையை அவள் இனிமையாக அவனுக்கு அளிக்கிறாள். ஆனால் அதனாலேயே அவள் தன்னிலும் மிகமிக உயர்ந்த தெய்வதாஸ்தானத்தில் இருப்பதாக அவன் உணர்ந்து அவளை வழிபடுவது போல் அன்பு செலுத்துகிறான்.

    தனது பொறுப்பற்ற திமிரினாலும் அவளது அசட்டுத்தனமான பேதைமையினாலும் வெறுமையாகி விட்ட அவளது வாழ்வின் தலைவிதியையே அழித்து அவளுக்கு உரிமையான வாழ்வின் சோபனங்களை மீட்டுத் தந்துவிட அவன் அவசரப்படுகிறான். கங்கா போன்ற ஒரு angel (தெய்வீகமான பெண்) கல்யாணம் செய்து கொண்டு மங்களகரமாக வாழ வேண்டுமென்று பெற்ற பெண்ணைக் குறித்து ஒரு நல்ல தகப்பன் படுகிற இருதயத் துடிப்பில் கங்காவுக்காக ஏதாவது செய்ய வேண்டுமென்று அவன் மனம் பரபரக்கிறது.

    இப்ப நீயும் எனக்கு மஞ்சு போலத்தான் என்று அவன் அவ்வப்போது கூறுவது கங்காவை நெகிழ வைக்கிறது. தன் நினைவு தெரிந்து பார்த்தறியாத தன் தந்தையின் அன்பை அவனது பாசத்தில் அவளால் உணரமுடிகிறது. இருந்தாலும் அவன் எவ்வளவு நல்லவன் என்று புரியப் புரிய, கங்காவுக்கு அவன் மீது காதலே பிறந்து விடுகிறது.

    எதன் பொருட்டும் அவனது நட்பை அவள் இழந்து விடத் தயாராக இல்லை. அவனது உறவுக்காகத் தன் வாழ்வின் ஒரே பற்றுக்கோடான தாயின் உடனிருப்பைக் கூட அவள் இழக்கிறாள். அவன்பால் அவள் கொண்டு விட்ட காதல்தான் ஒரு கட்டத்தில் வெங்கு மாமாவை நிறுத்தி வைக்க வேண்டிய எல்லையில் நிறுத்தி வைக்கிற வல்லமையும் வலிமையும் அவளுக்குத் தருகிறது. வெங்கு மாமாவை அவள் அவமதித்து விரட்டவேண்டிய சூழ்நிலையை அவரே உருவாக்கிக் கொடுக்கிறார்.

    வெங்கு மாமா அவள் வாழ்க்கையிலிருந்தே ஒதுங்கிக் கொள்கிறார். அதன் பிறகு மாமாவைப் பற்றி ஒரு விவரமும் தெரியவில்லை. கங்கா ஒரு போதிலும் தனக்கும் பிரபுவுக்கும் நேருகிற காதலை முழுமையாக அறிந்திருக்கவில்லை. பிரபுவின் உறவையே அவள் முற்றாக இழந்துவிடுகிற அபாயம் நேர்கிற போழ்தில் தான் இந்தக் காதல் முழு வேகத்தில் அவள் அறிவில் மோதி உறைகிறது.

    ஆர்.கே.வி. கங்காவுக்கு ஒரு வரன் பார்த்துக் கொண்டு வந்து சம்பந்தம் பேசப் போக, கங்கா அதை முளையிலேயே கிள்ளி எறியத் தெரிந்திருந்தும் விளையாட்டாக வளரவிட்டு விடுகிறாள். அவள் எதிர்பார்த்ததற்கு மாறாக அவளது அண்ணன், அம்மா, மன்னி எல்லோருமே இந்தக் கல்யாணத்துக்கு உடன்பட்டு அதில் மகிழ்ச்சி கொண்டு கங்காவும் அதற்குச் சம்மதிக்க வேண்டுமென்று எதிர்பார்த்து அவளிடம் அது பற்றிப் பூரிப்புடனும், தர்க்க ரீதியாகவும், கெஞ்சியும், கண்டித்தும் பேசுகிறார்கள். பிரபுவோ அந்தக் கல்யாணத்தைத் தவிர வேறு சிந்தனை எதுவுமே அற்றவனாக இருக்கிறான்.

    கங்காவின் மனநிலையைப் பிரபு கூடப் புரிந்து கொள்ளாது போகிற துர்ப்பாக்கியம் நிகழ்ந்து விடுகிறது. அவள் அவனிடம் வெளிப்படையாகத் தன்னை மனைவியாக - துணைவியாக ஸ்வீகரித்து விட மன்றாடுகிறாள். மஞ்சுவிடம் போல் அவளிடம் வாத்ஸல்யம் பாராட்டிக் கொண்டிருந்த பிரபுவுக்கு அது நாராசமாய் ஒலிக்கிறது.

    அவளிடமிருந்து அவனும் விலகிப் போய்விடுகிறான். கங்காவைப் பற்றி அவனுக்கிருந்த உன்னதமான அபிப்பிராயங்களெல்லாம் தகர்ந்து போகின்றன. அவனது மனத் தரத்திற்கேற்ப, அறிவுத் தரத்திற்கேற்ப ஒரு நல்ல மனதின் துயரங்களுக்கு உட்பட்டு அவன் வாழ்க்கையிலேயே விரக்தி அடைகிறான். அவனுக்கு விரக்தியானாலும் குதூகலமானாலும் ஒரே வழி ‘குடி’ தான்.

    பிரபுவின் பொருட்டு, தனது எஞ்சியிருந்த உறவுகளையும் துறந்துவிட்ட கங்கா தனிமரமாகிறாள். தன் காதலுக்குரிய பாத்தியக்காரனான அந்தப் பிரபுவையே தன்னுள் ஸ்வீகரித்துக் கொண்டுவிட்டது போல் அவனது சில பழக்கங்களுக்குத் தன்னைப் பழக்கிக் கொண்டு கங்கா, தானே அவன் போல் ஒரு பிரமையில் வாழ்கிறாள்.

    தாயும், அண்ணனும், மன்னியும் இந்தக் கங்காவை இப்போதும் தூற்றத்தான் செய்கிறார்கள். ஆனால் இப்போது அவளிடம் அவர்கள் பயப்படவும் செய்கிறார்கள். இனி...

    1

    Gulp... baby, Gulp it...

    கல்... பேபி, கல்ப் இட்... எரியறதே!...

    எரியும்... கசக்கும்... குமட்டும்... தட் இஸ் லைஃப்...

    அசிங்கமான, கசப்பான பத்திண்டு எரியற, பார்த்தாக் குமட்டிண்டு வருகிற வாழ்க்கையை வாழ்ந்துண்டிருக்க மோன்னோ? வயசை, வருஷங்களை முழுங்கிண்டிருக்க மோன்னா? அது மாதிரி முழுங்க வேண்டியது தான்!

    லெட் மி கல்ப் இட்...

    என்னைப் பத்தியே யோசிச்சி யோசிச்சி எனக்குச் சலிச்சிப் போறது... போர்டம்... லோன்லினெஸ்... பர்ப்பஸ் லெஸ்... ஹெல்! நரகம்... வெறுமை தனிமை... போர்டம்...

    ஹ்ஹோ! கல்ப் இட்... முழுங்கு கொழந்தே முழுங்கு - நன்னா சொல்லுவாளே எங்க அம்மா - அவள் ரொம்பச் சுலபமா அடிக்கடி சொல்றா: ‘செத்துப்போ செத்துப் போ’ன்னு. இப்படி நேக்கு ஒரு

    Enjoying the preview?
    Page 1 of 1