Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Kaiyil Oru Vilakku
Kaiyil Oru Vilakku
Kaiyil Oru Vilakku
Ebook126 pages51 minutes

Kaiyil Oru Vilakku

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

‘கையில் ஒரு விளக்கு' - இந்தக் கதை வெளி வந்தவுடன் புத்தகத்தை நண்பர்களின் கையில் கொடுத்து, 'டால்ஸ்டாயைப் படித்துப் பழக்கம் உள்ளவர்களுக்குத்தான் இதைப் படிக்க முடியும்' என்று சொன்னேன். அவர்தான் ஒவ்வொரு விஷயத்தையும் அதற்குரிய சரித்திர, சமூக, ஆன்மீக பரிமாணங் களோடு விளக்கியும் அவை ஒவ்வொன்றும் அவர் காலத்தில் என்ன அவலத்தில் வீழ்ந்து கிடந்தன என்று உணர்த்தியும் எழுதியிருக்கிறார்.

கல்விபற்றிய - புதியகல்வி பற்றிய விவாதங்களை என்னைச் சுற்றிலும் நிறைய நிகழ்கிறபொழுது, பள்ளிக்கூடமே போய் அறியாத நான் இப்படி ஒரு கதையை எழுதியிருப்பது எனக்கே வியப்புத் தருகிறது. இந்தக் கதையில் வரும் கல்வி அனுபவங் களெல்லாம் என்னுடைய கல்வி அனுபவங்கள் அல்லவென்பதை என்னை அறிந்த வாசகர்கள் எளிதில் புரிந்துகொள்ள முடியும். அவர்கள் மேலும் அறிந்துகொள்ள வேண்டியது என்னவென்றால் எனது கதைகளில் வருகிற எல்லா அனுபவங்களுமே இப்படித்தான்; அவை வெறும் சொந்த அனுபவங்கள் அல்ல. என்னைச் சேர்ந்தோரின், எனது கால மக்களின், என்னோடு சேர்ந்து வளர்ந்தும் வாழ்ந்தும் என்னையே மேன்மைப்படுத்தும் உங்களுடைய அனுபவங்களைத்தான் நீங்கள் அறியாமல் நான் அபகரித்துக் கொண்டுபோய் நன்கு அலங்காரம் செய்து மீண்டும் உங்களிடமே திரும்பத் தருகிறேன் என்பதுதான் அது. எனக்கு இந்தக் கதையைவிட அதில் வரும் கஸ்தூரி அம்மையாரைத் தான் பிடித்திருக்கிறது.)

Languageதமிழ்
Release dateJun 14, 2022
ISBN6580103906934
Kaiyil Oru Vilakku

Read more from Jayakanthan

Related to Kaiyil Oru Vilakku

Related ebooks

Reviews for Kaiyil Oru Vilakku

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Kaiyil Oru Vilakku - Jayakanthan

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    கையில் ஒரு விளக்கு

    Kaiyil Oru Vilakku

    Author:

    த. ஜெயகாந்தன்

    Jayakanthan

    For more books

    https://www.pustaka.co.in/home/author/jayakanthan-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    1

    அந்தப் பெண்கள் உயர்நிலைப்பள்ளி விழாக்கோலம் பூண்டிருந்தது. பள்ளித் தலைமை ஆசிரியை கௌரியம்மாள் இந்த ஆண்டு தேசிய நல்லாசிரியர் விருது பெற்றிருக்கிறார். கல்விக்களத்தில் பல துறைகளில் பணியாற்றிச் சாதனை புரிந்துள்ள விற்பன்னர்கள் பலர் முன்வரிசையில் அமர்ந்திருக்கின்றனர். கல்வி என்பது எப்போதும் காலத்தை எதிர்த்து மனிதன் ஓடுகிற ஓட்டமெனில், அந்த முன்வரிசையில் அமர்ந்திருப்போர் ஏந்தியிருக்கும் பதாகையைத் தங்கள் கையில் வாங்கிக்கொள்கிற தொடர் ஓட்டக்காரர்களாக ஆசிரிய - ஆசிரியைகளும் மாணவ - மாணவியரும் நாற்புறமும் வரிசை வரிசையாய் அமர்ந்திருந்தனர். இவர்கள் அனைவரின் ஞானத்தாயான கௌரியம்மாளைத் தரிசிக்க வந்த பக்தர்கள் போல் மாணவ மாணவியரின் பெற்றோர் ஒருபால் குழுமியிருந்தனர்.

    மேடையில் அமர்ந்திருந்த கௌரியம்மாள் தன் முன்னால் குழுமியிருந்த கூட்டத்தினர் ஒவ்வொருவரையும் தனித்தனியே அந்நியோன்யமாய் விசாரிப்பது போல் பரிவுடன் பார்த்துப் புன்னகை செய்து கொண்டிருந்தார்.

    இங்கே கல்வி பயின்ற மாணவியர் உலகெங்கிலும் பரவியிருக்கின்றனர் என்பதற்குச் சாட்சியாக இதோ ஒருத்தி... உமா!... ஜெர்மனியில் பேராசிரியையாகப் பணியாற்றுகிறாள். இவளுக்குத் தலை நரைத்திருந்த போதிலும் கூடக் கௌரியம்மாளின் கண்களில் அந்தப் பழைய மாணவியின் தோற்றம்தான் மங்காமல் ஒளிவிடுகிறது. இன்னொருத்தி சந்திரா! தேர்ந்த மருத்துவ விஞ்ஞானி... அவளுக்குப் பக்கத்தில் ஒரு எஞ்சினீயர்... அவளுக்குப் பக்கத்தில் ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரி, ஒரு பள்ளி நிர்வாகி, பாடப்புத்தகக் கமிட்டியின் அதிகாரி ஒருத்தி... ஓவியம், சிற்பம், ஆடல், பாடல் என்று ஒவ்வொரு துறையிலும் தேர்ச்சி பெற்றவர்கள் இன்னும் சிலர்... விளையாட்டு வீராங்கனைகள், அரசியல்வாதிகள், சமூகசேவகிகள்; மதம் - மொழி, இனம், வர்க்கம் ஆகியவற்றால் இவர்கள் பலதரப்பட்டவர்கள் எனினும் இந்தப் பள்ளியின் பழைய மாணவர்கள் என்ற பதாகையின் கீழ் தனது மாணவியர் என்ற ஒரே வர்க்கமாக ஒன்று கூடி நிற்கும் அந்தக் காணரும் காட்சியில் மெய்மறந்து அமர்ந்திருக்கிறாள் கௌரியம்மாள்.

    கௌரியம்மாளுக்கு அந்தப் பள்ளியிலும் ஊரிலும் வழங்குகிற பெயர் ‘அத்தை’ என்பதே. இளம்வயதிலேயே பெற்றோர்களை இழந்துவிட்ட கௌரியம்மாள் தனது அண்ணனால் வளர்க்கப்பட்டவள். அண்ணன் மகன் ராமதுரை, கௌரியை ‘அக்கா’ என்று அழைக்கத்தக்க வயது வித்தியாசம் உடையவன்... எனினும் அவளை ‘அக்கா’ என்று அழைக்காமல் வகுப்பிலும் பிறர் முன்னிலையிலும் ‘அத்தை’ என்றே அழைத்ததால் பள்ளிப் பருவத்திலேயே கௌரிக்கு ‘அத்தை’ப் பட்டம் வந்துவிட்டது. இப்போது நினைத்துக் கொள்ளும்போதுகூட அவளுக்குச் சிரிப்பு வரும்... மழலை மாறாத பருவத்தில் ராமதுரை அவளை ‘அட்டை’ என்று அழைப்பான்.

    அந்த விழாக் கோலச் சந்தடிகளின் நடுவே அவளுக்கு ராமதுரையின் நினைப்பும், இனி தனது வாழ்க்கையை அவனது குடும்பத்தோடுதான் பிணைத்துக் கொள்ள வேண்டும் என்கிற எண்ணமும் ஏற்பட்டது. இதுகாறும் கல்விக்கே அர்ப்பணிக்கப்பட்ட அவளது வாழ்க்கை அந்தச் சூழ்நிலையிலேயே பிணைக்கப்பட்டிருந்தது. எப்போதேனும் விடுமுறை நாட்களில் பட்டணம் சென்று ராமதுரையின் குடும்பத்தோடு அவள் இருந்திருக்கிறாள். ஆனாலும் இனி இருக்கப் போவது அது போலவா? என்ற எண்ணத்தில் தனது புதிய வாழ்க்கை முறையைப் பற்றி ஏதோ யோசித்துக் கொண்டிருந்தாள் அத்தை.

    இந்தப் பள்ளியை விட்டுப் பிரிகிறோம் என்ற உணர்வில் அவள் கண்கள் சற்றே கலங்கின...

    ‘பள்ளி’ என்று சொன்னால், பல மாடிகளைக் கொண்ட, பல கட்டிடங்கள் நிறைந்த, தாவர இயல் போதிக்க வசதியாக ஒரு நோக்கத்துடன் பயிரிடப்பட்டு, அடர்ந்து வளர்ந்துள்ள அழகிய தோட்டப் பகுதிகளும் எல்லா வசதிகளும் கொண்ட விசாலமான விளையாட்டு மைதானங்களும், ஒரு நீச்சல் குளமும் உள்ளடங்கிய இந்தப் பள்ளியின் மிகப் பரந்த வளாகத்தை அல்ல; அதை இயக்கும் சூத்திரதாரியான, அதன் இதயமும் மூளையும் போன்ற, அன்பும், ஆற்றலும் உறுதியுடன் வடிவெடுத்துத் திகழும் பள்ளியின் தலைமை ஆசிரியை கௌரியம்மாள் என்றே பொருள்படும். அளவுக்குக் கடந்த முப்பதாண்டுக் காலமாக இந்தப் பள்ளியின் மேன்மைக்கும், வளர்ச்சிக்கும் அயராது பாடுபட்டு வந்திருக்கிறாள் இந்த அத்தை. இந்தப் பள்ளியின் மாணவி என்பது ஒன்றே பெரும் நற்சான்றாக எல்லோரும் ஒப்புக் கொள்ளும்படி விளங்கிய இந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியைக்குக் கிடைத்த தேசிய விருது ஒவ்வொருவரின் மனத்திலும் பாராட்டு உணர்வைத் தூண்டியது. நன்றியும், பக்தியும் கலந்த சிரத்தையுடன் தத்தம் மனத்துள் போற்றி வந்த தங்கள் ஞானத் தாய்க்கு அதன் மக்கள் இன்று ஊரறிய விழா எடுத்து அவர்தம் புகழை உலகறியப் பிரகடனப்படுத்திக் கொண்டிருக்கின்றனர். அனைத்து மாணவரின் மனத்திலும் உயர்ந்த பீடத்தில் வீற்றிருந்த கௌரியம்மாளின் இதயசிம்மாசனத்தில் வீற்றிருந்தவரோ அவரது குருவான கஸ்தூரி அம்மையாரே ஆவார். இளமையில் அவர் கல்வி பயின்ற அந்த எளிய பள்ளியின் தலைமை ஆசிரியையான அந்தக் கஸ்தூரி அம்மையாரின் தோற்றப் பொலிவும் குண நலன்களும் கௌரியம்மாளிடம் அப்படியே குடி கொண்டுவிட்டன. ஊரெல்லாம் ‘அத்தை’ என்று பேரெடுத்த இந்தக் கௌரியம்மாளுக்குப் பிறகு... யார்?...

    ***

    வான் பொய்ப்பினும் தான் பொய்யா வற்றாத காவிரி நதிக்கரையில் அமைந்திருந்தது தவமும் திருவும் நீங்காது உறையும் அந்த அழகிய சிற்றூர்... அப்பரும் சம்பந்தரும் பாடிய திருத்தலம்... நாதப் பிரம்மமாம் தியாகப் பிரம்மம் பஞ்சரத்தினக் கீர்த்தனைகளால் பாடிப் பரவிய புனிதத்தலம்... ஸப்தரிஷி மண்டலமாய்ப் பிரபஞ்ச வெளியில் நிலைத்திருக்கும் மாமுனிவர் எழுவரும் அங்கு எழுந்தருளியுள்ள ஈசனெனும் சிவப்பொருளை வழிபட்டு உய்ந்த பெருந்தலம்... ஈசன் தன் ஜடாமுடியில் தேக்கி வைத்த கங்கையைப் பெருகவிட்ட சிவகங்கையைத் தன்னுள் அடக்கிய திருக்கோயில்... அறிவே பெருஞ்செல்வம் என்கிற அழியாத சத்தியத்தை அம்பிகையின் வடிவில் நின்று பராசக்தி அறிவுறுத்தும் ஞானத்தலம்... ஆழ்ந்து நோக்குபவர்களின் அகக்கண்களுக்கே புலப்படும் கீர்த்திகளையெல்லாம் தன்னுள் அடக்கிய அமைதியில், ஆடம்பரக் கோலாகலம் எதுமின்றிப் பரசிவமாய் எளிமையில் எழிலாய் மலர்ந்திருக்கும் தவத்தலம். மானுட வாழ்வில் இயல்பேயாகிவிட்ட ஏற்றத் தாழ்வெனும் சூறாவளியின் இடைப்பட்டும் தன்னை இழந்துவிடாது, தன் நாமம் மறைத்து ஏதோ ஒரு பெயரில் உறைந்திருக்கும் செம்மை குடியிருக்கும் சிற்றூர்.

    மின்சாரம் என்கிற மகாசக்தி ஓர் ஒற்றை அதிசயமாக ஊர்ப் பஞ்சாயத்துத் தலைவரின் வீட்டில் மின்மினிபோல் கண்சிமிட்டிக் கொண்டிருந்த காலம் அது. விவசாயத்தையே நம்பி வாழ்கிற மக்கள் நிறைந்திருந்த அவ்வூரில் கல்விமான்களுக்கும் அறநெறியாளர்களும் பஞ்சமில்லாதிருந்த காலம் ஒன்று இருந்தது. பின்னர் ஆங்கில ஆட்சியின் அடிமை இருளில் பாரத பூமி தடுமாறிய நாட்களில் எல்லையற்ற காலத்தின் பரிணாம வளர்ச்சியை எந்த ஏகாதிபத்திய வெறியரும் தடுத்து நிறுத்திவிட முடியாதென்பதைப் பறையறைவிப்பதே போல் பள்ளிகளும் கல்லூரிகளும் ஆங்காங்கே அப்போதே அந்த அடிமைக் காலத்தில் உருவாயின. அடிமைகளை உருவாக்குவதற்கென்றே திட்டமிட்டு வகுத்துப் பயிற்றுவிக்கப்பட்ட அந்த ஆங்கிலக் கல்வியையே கசடறக் கற்று, அதனையே அடிமைத்தளையின் ஆணிவேரைக் கெல்லி எறியும் ஆயுதமாக்கிக் கொண்ட தவப்புதல்வர்கள் தோன்றித் தாயின் கை விலங்குகளைத் தறிக்க முற்பட்ட காலம் அது...

    "வீதிதோறும் இரண்டொரு பள்ளி, வீடுதோறும்

    Enjoying the preview?
    Page 1 of 1