Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Nindru Thuditha Idhayam
Nindru Thuditha Idhayam
Nindru Thuditha Idhayam
Ebook124 pages43 minutes

Nindru Thuditha Idhayam

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

சகோதரி அகிலா ஒரு தமிழ் அறிஞர். என் மனைவியின் மூலம் அறிமுகமானார். அவரது அற்புதமான மன வலிமை, அவரது தெளிவு மற்றும் அவரது மொழி வெளிப்பாடுகள் எனக்கு ஆச்சரியமூட்டின. அவர்களுக்கு கடுமையான இதயநோய் இருப்பதை தெரிவிக்க வேண்டிய அந்த நாள் எனக்கு மிகவும் கடினமாக இருந்தது. அவர்களுடைய மன வலிமையை சோதிப்பதாக அமைந்தது. என்றாலும் அவருக்கு மேலும் ஒரு பரிச்சையை நான் வைக்க நேர்ந்தது. அவரின் பைபாஸ் அனுபவத்தை எழுத்து வடிவத்தில் வடிக்க கூறினேன். இந்த புத்தகத்தில் உள்ள முழு அனுபவமும் அவரது உரையாடலில் உங்களை ஒரு கண்ணுக்கு தெரியாத பார்வையாளராக ஆக்குகிறது.

“எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு”

என்கிற வள்ளுவ பெருந்தகையின் கூற்றிற்கு இணங்க சகோதரி அகிலா மெய்ப்பித்து மெய்யுணர்ந்து மெய்பொருள் கண்டு கூறியுள்ளார். அவரின் நகைச்சுவை உணர்வும் உரைநடையின் தெளிவும் அருமை. மருத்துவத்தின் மருந்தற்ற பகுதியை அழகாக எடுத்து உரைத்துள்ளார், மருத்துவத்தின் மகத்துவமே அம்மறைபொருள் தானே. அவரின் அனுபவமே மற்றவர்களுக்கு ஒரு விளக்க பாடமாக உள்ளது. நாங்கள் நோயாளிகளுக்கு ஆன்ஜியோக்ராம் மற்றும் பைபாஸ் சிகிச்சை பற்றி கூறுவதை இந்த புத்தகத்த்தின் வாயிலாக எளிதாக்கியுள்ளார். அவரின் எழுத்து பணி தொடர எனது வாழ்த்துக்கள்.

டாக்டர் கே சொக்கலிங்கம்,

இருதய மருத்துவர்,

ராயல் கேர் மருத்துவமனை,

கோயம்புத்தூர்.

Languageதமிழ்
Release dateMay 1, 2020
ISBN6580132905337
Nindru Thuditha Idhayam

Related to Nindru Thuditha Idhayam

Related ebooks

Reviews for Nindru Thuditha Idhayam

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Nindru Thuditha Idhayam - Ahila D

    http://www.pustaka.co.in

    நின்று துடித்த இதயம்

    Nindru Thuditha Idhayam

    Author:

    அகிலா

    Ahila

    For more books

    http://www.pustaka.co.in/home/author/ahila

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    நின்று துடித்த இதயம்

    பெண்ணும்

    இருதய அறுவை சிகிச்சையும்

    (என் அனுபவங்கள்)

    Every tree in the forest has a story to tell.

    Some of them were burnt but they endured the fire and got revived;

    some of them were cut, their barks injured,

    some people pick up their leaves to make medicines for their sicknesses,

    birds used their leaves to make their nests, etc.

    Upon all these, the tree is still tree!

    ~ Israelmore Ayivor

    பொருளடக்கம்

    நின்றும் துடிக்கும் இதயம் - – நாஞ்சில் நாடன்

    மெய்ப்பொருள் - டாக்டர் சொக்கலிங்கம்

    பெண்ணும் இருதய அறுவை சிகிச்சையும் - என்னுரை

    வீடும் மருத்துவமனையும்

    காத்திருப்பு

    இதய சாய நிழற்படம்

    இரண்டாவது அபிப்பிராயம்

    அறுவை சிகிச்சைக்கு முன்

    நாளும் கிழமையும்

    தீவிர சிகிச்சை பிரிவு 1

    தீவிர சிகிச்சை பிரிவு II

    அறுவை சிகிச்சைக்கு பின்

    மருத்துவமனையிலிருந்து வீடு

    உணவு ஒவ்வாமை

    பெண்ணுடல்

    பெண்ணின் இருதயம்

    நலம் நலமே

    நூலாசிரியர் - அகிலா

    நின்றும் துடிக்கும் இதயம்

    - நாஞ்சில் நாடன்

    'நின்று துடித்த இதயம்' எனுமிந்த நூலை ஒரு மருத்துவக் கையேடு அல்லது வழிகாட்டி போலக் கருதாமல், ஒருவரின் அனுபவப் பதிவுகள் எனக்கொளல் வேண்டும்.

    உருதுப் பழமொழி ஒன்று சொல்வார்கள். கப்ருஸ்தானில் இருந்து கண்ணுக்குத் தெரியாத பாதை, யாவர் வீட்டு முற்றத்திற்கும் வந்து சேர்கிறது என்று. அதன் பொருள், மரணம் என்பது பக்கத்து வீட்டுக்காரன், எதிர்வீட்டுக்காரன் வாசலுக்குத்தான் வரும், நம் வீட்டு முற்றத்தில் கால் பதிக்காது என்று அறியாத்தனமாக நினைத்து விடாதே என்பது. அந்தப் பழமொழியை அப்படியே இதய நோய்க்கும் பொருத்திக் கொள்ளலாம்.

    சமீபத்தில் ஜப்பான் போயிருந்தபோது சொன்னார்கள். அந்த நாட்டுப் பெண்களுக்குப் பிரசவத்தின் போது சிசேரியன் அறுவையே இல்லை என்று. நமக்கோ பிரசவம் என்றாலேயே சிசேரியன் தான். எனக்கு உடனே கேட்கத் தோன்றியது. உயர் அல்லது தாழ்வு இரத் அழுத்தம், நீரிழிவு நோய்கள் உண்டா என.

    நமது அனுபவம் அப்படியல்ல. இந்தியக் குடிமக்களின் பெருந்தொகையினர் நீரிழிவு நோயுள்ளவர் அதன் சகோதரி இரத்த அழுத்தம். அவற்றின் செல்ல வளர்ப்பு மகள் இதய நோய் என்று சொல்கிறார்கள். எங்கு சாவு நடந்தாலும், முதலில் கேட்கப்படும் கேள்வி, ' ஹார்ட் அட்டாக்கா?' என்பது. தமிழ்நாட்டில் ரஜினிகாந்த், கமலஹாசன், விஜயகாந்துக்கு அடுத்தபடியாக அறியப்பட்ட பெயர், Heart attack அதற்காக அவர்களை நாம் இதய நோயுடன் ஒப்பிடுகிறோம் என்ற புரிதல் வேண்டாம்.

    இதயம் எதற்கு நம்மைத் தாக்க வேண்டும்? அது நமக்கு பகையா? நாம் தமிழ் என்றால் இதயம் இந்தியா? அதற்கென்ன வாழ்நாள் விரதமா நம்மைத் தாக்கி அழிக்க வேண்டும் என்று? விடை காணப் புகுந்தால், அஃதோர் ஆய்வு நூலாகிவிடும் எனும் அச்சத்தால், அவசரமாக அதனின் நீங்குகிறேன்.

    அறத்தின் பால், ஒழுக்கத்தின் பால், பொது நலத்தின் பால், எந்தப் பார்வையும் இன்று நமக்கு இல்லை உடலின் மீது, மகிழ்ச்சி என நாம் கருதும் விடயங்கள் யாவும் உண்மையில் மகிழ்ச்சி தானா என்ற கேள்வியும் இல்லை. ' காலா' திரைப்படம் ஆயிரம் கோடி ஈட்டினால் பெருமகிழ்ச்சி நமக்கு. பேட்டரிக்கட்டைகள் வாங்கிக் கொடுத்தவன் இருபத்தெட்டு ஆண்டுகள் சிறையில் கிடப்பதைப் பற்றி ஒரு மறுப்பும் இல்லை. நாம் செய்யும் கல்லாப் பிழையும் கருதாப் பிழையும் அனுமதித்துக் கொண்டே இதயம் மட்டும் ஆயிரம் ஆண்டுகள் முடித்துக் கொண்டே இருத்தல் வேண்டும்!.

    மரணம் எந்த வடிவத்திலேனும் வந்தே தீரும். துஞ்சினார் எனயெடுத்துத் தூற்றப்பட்டார் அன்றி, எஞ்சினார் எவருண்டு என்று கேட்கிறது நாலடியார், விபத்தால், மருந்தும் தடுப்புக் கண்டறிப்படாத உயிரிகளால், புற்று நோயால், கொலையால், விபத்தால், பாம்புக்கடியால், நாய்க்கடியால், அரசுக் கொலைகளால், விடங்களால், தற்கொலையில் என சாவுக்கு நீண்ட பட்டியல் உண்டு. முதுமையினால் எவரும் சாவதில்லை ஏதேனும் நோயினால் சாகிறார்கள்.

    இந்தியன் இன்று சாகும் காரணங்களில் முதன்மையானது இதய நோய். இதய நோய்க்கான காரணங்கள் பல்வகை. மூலக்காரணங்களைப் புறக்கணித்துவிட்டு, காரியங்களை ஆய்வு செய்கிறோம். கோடிகள் செலவு செய்து, எவர் இதயத்தையும் காத்து விட முடியும் என்றால் இந்த நாட்டில் அரசியல்வாதிகளுக்கு உயரதிகாரிகளுக்கும் சாவே வராதல்லவா!

    ஆக இளையதாக இதயநோய் என்னும் முள்மரம் கொல்ல நாம் முயற்சி செய்ய வேண்டும். இந்த நூல் மூலம் அகிலா, இதய அறுவை சிகிச்சை செய்து கொண்ட தனது அனுபவத்தைச் சுவைப்படச் சொல்கிறார். அவர் கையாலும் மெலிதான அங்கதம் ' இதய நோய் வராதா?' என்று பலரையும் ஏங்க வைக்கக் கூடும். பலரும், எனக்குப் போய் இப்படி வந்து விட்டதே!' என்ற கழிவிரக்கத்தில்தான் சிக்கிச் சுழல்கிறார்கள். துன்பமான அனுபவத்தைப் பயனுள்ள பதிவாக மாற்றி இருக்கிறார் நூலாசிரியர்.

    பெண்கள், குறிப்பாக நாற்பது வயதைக் கடந்தவர்கள் கற்றறிந்து கொள்ள, இந்நூலில் சில செய்திகள் உண்டு. கலவரப்படாமல், திகில் தக்கபடி தகவமைத்துக் கொள்ள அகிலாவின் அனுபவங்கள் உதவும்.

    ' நின்று துடித்த இதயம்' எனுமிந்த நூலில், தனது அனுபவங்களுக்கு துணையாக, மருத்துவ விஞ்ஞானத் தரவுகளையும் அகிலா சேகரித்துத் தந்துள்ளார். மிகையின்றி, கற்பனையின்றி, அலங்காரங்கள் இன்றிப் பேசுகிறார். ஆணைவிட நுண்ணுணர்வுகள் கொண்டவர் பெண் என்பதால் அனுபவங்கள் நுட்பமாகப் பகிர்ந்து கொள்ளப் பட்டிருக்கின்றன. இந்த நூல் மூலம் அவர்

    Enjoying the preview?
    Page 1 of 1