Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Thandanai
Thandanai
Thandanai
Ebook66 pages24 minutes

Thandanai

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

1956 ஆம் ஆண்டு விழுப்புரம் அருகில் கப்பியாம்புலியூர் என்ற கையலக கிராமத்தில் பிறந்தவர்.

கல்லூரி நாட்களிலேயே வாசகர் கடிதம் மற்றும் துணுக்கு எழுதும் ஆர்வம் ஏற்பட்டது. 1980 ல் முதல் சிறுகதை குமுதத்தில் பிரசுரமானது. இது வரை சுமார் 850 சிறுகதைகள் வந்துள்ளன.

சிறுகதை வெளிவந்த அதே ஆண்டு முதல் நாவல் மாலைமதி நாவலாக பிரசுரமானது. அதன் பிறகு ஐம்பது நாவல்கள் மற்றும் அதில் பாதி குறுநாவல்கள் வந்துள்ளன.

குமுதம், ஆனந்தவிகடன், கல்கி, குங்குமம், சாவி, இதயம் பேசுகிறது, கலைமகள், அமுதசுரபி, மங்கையர் மலர், குமுதம் சிநேகிதி உள்ளிட்ட ஏராளமான பத்திரிகைகளிலும் மின்னம்பலம் போன்ற இன்டர்நெட் பத்திரிகைகளிலும் கதைகளும், கட்டுரைகளும், பேட்டிகளும் பிரசுரமாகிக்கொண்டிருக்கின்றன. ஏராளமான சிறுகதை மற்றும் குறு நாவல் போட்டிகளில் பரிசுகள் பெற்ற பெருமிதமும் உள்ளது.

அமுதசுரபி நாவல் போட்டியில் முதல் பரிசு வென்றார். அது ‘கோலத்தில் சிக்கிய புள்ளிகள்’ என்ற தலைப்பில் அதில் தொடர்கதையாக வெளிவந்தது.

தொண்றூறுகளில் வந்த சீரியல்களில் கதை டிஸ்கஷனில் கலந்து கொண்ட அனுபவம் உண்டு. சினிமா டிஸ்கஷன்களிலும் பங்கேற்றிருக்கிறார்.

இவரின் நாடகம் ஒன்று விவேக் நடித்து தூர்தர்ஷனில் ஒளிபரப்பாயிற்று. பிரபல நாளிதழில் ஆன்மிகத் தொடர்கட்டுரைகள் எழுதிய அனுபவமும் உண்டு. தொலைக்காட்சிகளில் ஆன்மிகத் தொடர்பான சொற்பொழிவுகள் நிகழ்த்துகிறார்.

கடந்த நாற்பது வருடங்களாக முழு நேர ஜோதிடராகவும் உள்ளார். மாலைமதி, கல்கி, மங்கையர் மலர், தினகரன், பத்திரிகை டாட் காம் ஆகிய பத்திரிகைகளுக்குப் பல ஆண்டுகளாக வாரபலன்கள் எழுதி வருகிறார்.

சிஃபி டாட்காமில் ஜோதிடக் கட்டுரைகள் எழுதியதுடன் அவர்களின் ஜோதிடக்குழுவில் (panel) பங்கேற்றிருக்கிறார்.

Languageதமிழ்
Release dateNov 10, 2019
ISBN6580128404627
Thandanai

Read more from Vedha Gopalan

Related to Thandanai

Related ebooks

Reviews for Thandanai

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Thandanai - Vedha Gopalan

    http://www.pustaka.co.in

    தண்டனை

    Thandanai

    Author:

    வேதா கோபாலன்

    Vedha Gopalan

    For more books

    http://pustaka.co.in/home/author/vedha-gopalan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    1

    மாடி ஜன்னல் வழியே பார்வையைக் கீழே வீசியெறிந்தேன். ஒன்பது.. ஒன்பது ஐந்து... ஒன்பது பத்து... ஒன்பதேகால்...... சே.... இன்னும் வர வில்லையே. இருபத்து ஒன்றேகால் வயது அழகியாகிய நான், இத்தனை வர ஆவலோடு காத்திருக்க வேண்டுமானால் எதிர்பார்க்கப்படுபவர் யாராக இருக்க முடியும்! 'காதலன்' என்பீர்கள் டக்கென்று? தவறு. என் காதலர் இப்போது சென்னையில் இல்லை. பம்பாயில் ஒரு பிரம்மாண்டமான ஃபாக்டரியில் அதி பிரம்மாண்டமானதொரு மெஷினைக் கமிஷன் பண்ணப் போயிருக்கிறார். திரும்பி வர இரண்டு வாரமாவது ஆகும்.

    ஹும்! அவருக்கென்ன, முதல்வகுப்பு டிக்கெட்டிலிருந்து முதல் தர ஹோட்டலில் தங்குவது வரை எல்லா வசதிகளையும் கொட்டிக்கொட்டிக் கொடுக்கத் கம்பெனி தயாராயிருக்கிறது.

    அவர்: உயரம், சிவப்பு, அழகு எல்லாம் வடக்கத்திக்களை... சம்பளம் நாலு இலக்கம். பெயர்-பாஸ்கர்.

    நான் மிதமான உயரம், ரோஸ், மஞ்சள் இரண்டையும் கலந்தால் தேறும் நிறம், மொத்தத்தில் அவருக்குப் பொருத்தமானவள். பெயர் - ராதா.

    மறுபடியும் ஜன்னல் வழியே வெளியே பார்க்கிறேன். ஆ! நான் எதிர்பார்த்தவர் வந்துவிட்டார். படபடவென்று மாடிப் படிகளில் இறங்குவதற்குள் மிஞ்சி விட்டது.

    போஸ்ட்மேன் (!) அப்பாவிடம் கடிதங்களைக் கட்டுக் கட்டாகக் கொடுத்து விட்டுப் போய்விட்டான். மைகாட்! அப்பாவிடம் எனக்கு வந்த லெட்டரும் சிக்கியிருந்தால் என்ன செய்வது? நல்ல வேளையாய் அப்பா ஏதோ அவசரத்திலிருந்தார். பரபரவென்று வெளியே கிளம்பிக் கொண்டிருந்தார். உயரத்துக் கேற்ற பருமனில், செங்கல் நிற ஸ்ட் அணிந்திருந்தார். ஏதாவது கட்சிக்காரரைப் பார்க்கப் போகிறார் போலும் - வக்கீல்.

    என் அப்பா பெயர் ரங்கராஜன். தங்கக்கட்டி. ஆயினும் இன்னும் என் ' விஷயத்தை அப்பாவிடம் சொல்ல வில்லை. பாஸ்கரின் அனுமதி கிடைத்த பிறகு தான் சொல்ல வேண்டும்.

    மைகாட்! அப்பா அத்தனை கடிதங்களையும், லாக்கரில் வைத்துப் பூட்டி சாவியைக் 'கோட்’ பாக்கெட்டில் வழுக்கித் தள்ளினார்.

    "ராதாம்மா! என்ன ஒரு மாதிரி. இருக்கிறாய்? வாட் இஸ் த மேட்டர்?'' அப்பா அவசரத்திலும் என்னை விசாரிக்கத் தவறவில்லை.

    ஒ.... ஒன்றுமில்லையப்பா.... வந்து... போஸ்ட்மேன் லெட்டர்ஸ் கொண்டு வந்து கொடுத்தான் போலிருக்கே....

    பின்னே...போஸ்ட்மேன் வெற்றிலை பாக்கா கொண்டு வந்து கொடுப்பான்?

    ''ஹிஹ் ஹி... நல்ல ஜோக் டாடி.... வந்து.... லெட்டர்ஸ் வந்ததே. ஒருவேளை என் தோழிகள் யாராவது போட்ட லெட்டர்கள் எதுவும் அதில் கலந்திருக்குமோ என்பதற்காகக் கேட் டேன்.'' நன்றாகவே வழிந்தேன்.

    "அதனால் என்னம்மா.... இன்னும் இரண்டே மணி நேரத்தில் திரும்பி வந்துவிடுவேன். பிறகு நானே எடுத்து லெட்டரை உன்னிடம் தருகிறேன். போதுமா? பைபை'' ஷவின் லேஸை முடியிட்டவாறு பேசினார். ப்ரீஃப்கேஸை எடுத்துக் கொண்டார். கிளம்பிவிட்டார். இனிமேல் பிரம்மாவின் செக்ரட்டரியே

    Enjoying the preview?
    Page 1 of 1