Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Vizhi Pesum Mozhi Puthithu
Vizhi Pesum Mozhi Puthithu
Vizhi Pesum Mozhi Puthithu
Ebook103 pages36 minutes

Vizhi Pesum Mozhi Puthithu

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

மிகவும் ஆசைப்பட்டு.. எதிர்பார்ப்புடன் சுஜனாவைப் பெண் பார்க்கப்போனான் சிராஜ். திடீரென்று அந்தப் பெண் இவனை நிராகரிப்பாள் என்று கண்டானா? தன் நண்பனை மணக்க விரும்புவாள் என்று நினைத்துப் பார்த்தானா?


இவை அனைத்தும் நிகழ்ந்தும் அவள் இவனையே மணக்க நேர்ந்தது எவ்வாறு? சந்தர்ப்பமும் சூழ்நிலையும் விருப்பமில்லாத இரண்டு பேரை இணைத்துவிட்டது கொடுமை.


விருப்பம் இருந்தும் இல்லை என்று தோன்ற வைத்தது புதுமை.
சந்தோஷம் இல்லாமல் கல்யாணம் பண்ணிக்கொண்டு, சந்தோஷமாய் இருப்பதுபோல் மற்றவர் முன்னிலையில் நடிப்பது மிகவும் கஷ்டம் அல்லவா?


வேறு வழியின்றி அப்படி வாழும்போது கணவன் எவ்வளவு நல்லவன் என்ற உண்மை தெரிய வந்தது.


அன்பு முளைத்த…. சந்தேகம் தீர்ந்த சமயம் பார்த்து அந்த விபத்து நடக்கிறது.


கடைசியில் எல்லோருக்கும் உண்மை தெரிந்ததா?


விபத்தில் சிக்கியவன் பிழைத்தானா?
நாவலைப் படித்தால் புரியும்.

Languageதமிழ்
Release dateApr 14, 2021
ISBN6580128406855
Vizhi Pesum Mozhi Puthithu

Read more from Vedha Gopalan

Related to Vizhi Pesum Mozhi Puthithu

Related ebooks

Reviews for Vizhi Pesum Mozhi Puthithu

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Vizhi Pesum Mozhi Puthithu - Vedha Gopalan

    https://www.pustaka.co.in

    விழி பேசும் மொழி புதிது

    Vizhi Pesum Mozhi Puthithu

    Author:

    வேதா கோபாலன்

    Vedha Gopalan

    For more books

    https://www.pustaka.co.in/home/author/vedha-gopalan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 1

    கணவன் மனைவி ஒரு தராசை போல. சமமாக எப்போதும் இருக்க முடியுமா என்ன? ஒன்று ஏறினால் மற்றொன்று இறங்கி வந்தாக வேண்டும். விட்டுக் கொடுத்துப் பழக வேண்டியது மிகவும் முக்கியம்.

    துணையின் குணம் இதுதான் என்று தெரிந்த பிறகு, மீண்டும் மீண்டும் அதையே பெரிதுபடுத்திக்கொண்டு போவதில் என்ன லாபம் இருக்கிறது? குறைநிறைகளுடன்தான் ஏற்க வேண்டும்.

    மனைவியை தனது தாயாக நினைக்கும் கணவனும், கணவனைத் தனது தந்தையாக நினைக்கும் மனைவியும் இருந்தால், வாழ்வில் பிரிவென்பதே கிடையாது. ஆனால் எத்தனை பேரால் அப்படி இருந்துவிட முடிகிறது?

    தனது பலவீனம் எதுவோ அதை மனைவியிடம்/ கணவரிடம் வெளிப்படையாக அறிவித்து விடுவது பெஸ்ட். பிறகு அதை சுட்டிக்காட்டி சண்டை வராதே? (ஆனால் ஒப்புக்கொண்டதோடு கடமை முடிந்தது என்று கையைக்கட்டிக்கொண்டு இருக்காமல் அந்த பலவீனத்தை எவ்வாறு சரி செய்ய வேண்டும் என்று கொஞ்சமாவது முயற்சி செய்தாக வேண்டும்)

    துணையின் குறைகளை எந்த காரணத்திற்காகவும் யாரிடமும் பகிரக்கூடாது. தம்பதி சண்டையில் பெற்றோர்கூட நடுவில் புக அனுமதிக்கக்கூடாது. அவர்கள் எந்த ஒரு முடிவையும் எடுக்கப் போவது இல்லை! அப்படி எடுத்தாலும் அது பெரிய ஆபத்தில் கொண்டு விடும்.

    ரசனை நிரம்பிய அரசி ஒருத்தியைப் பார்த்துப் பார்த்து அலங்கரிப்பதுபோல் அடையாறு தனது வழக்கமான பரபரப்பை அணிந்து அழகுபார்த்துக்கொண்டிருந்தது. தினமும்போல் சுள்ளென்று வெயில் அடிக்காமல் சற்றே சிலிசிலுத்த காற்று, தென்னை ஓலையையும், மாந்துளிர்களையும், வேப்பங்கொழுந்துகளையும் வருடிய மாதிரியே, அனைத்து மனங்களையும் வருடிக் குளிர்ச்சியை விநியோகித்தது.

    சில இதயங்களைத் தவிர…

    அண்ணா யூனிவர்சிட்டிக்கும், சி எல் ஆர் ஐக்கும்.. பள்ளிக்கூடங்களுக்கும்… கேன்சர் இன்ஸ்டிட்யூட்டுக்கு வருகிறவர்களும் போகிறவர்களும் பலவித மன நிலைகளில்.. முக பாவங்களில் அந்தப் பகுதியைக் கடந்துகொண்டிருந்தார்கள். அந்த ஏரியாவில் எப்போதுமே வாகன நெரிசலுக்குப் பஞ்சம் இருக்காது. இன்றைக்கும் அப்படியே.

    சற்றே திரும்பி உள்ளே வந்தால்..

    காந்தி நகரில் இருந்த அந்த பிரம்மாண்ட பங்களாவில், சில மணி நேரங்களுக்கு முன் வேலைக்காரப் பெண்மணி வாசல் தெளித்து அழகாய்ப் போட்டிருந்த கோலமும்.. காம்பவுண்டுக்குள் சீராய்ப் பல வண்ண ரோஜாக்களும் சிரித்தன.

    கிட்டத்தட்ட நட்சத்திர ஹோட்டலின் அழகுடன் இன்டீரியர் அலங்காரங்கள் பார்த்துப் பார்த்துச் செய்யப்பட்ட வீட்டில் தெய்வீகமும் உடன் நிலவியது. ஆளுயர விநாயகர் சிலை பொன்னிறத்தில் வாசலில் மின்னியது. அதற்கு முன்பாக தண்ணீர் ஊற்றப்பட்ட வெண்கல உருளியில் வட்ட வட்டமாகப் பூக்கள் சிரித்தன.

    சிராஜ்..இன்னிக்கு ஆபீஸுக்கு லீவு போட முடியுமா?

    அம்மாதான் கேட்டாள். ஐம்பதைத் தாண்டிய கம்பீர முகம். முன்னுச்சியில் ஓரிரண்டு வெண் முடிகள் அழகு சேர்த்தன.

    குரலை விரயம் செய்யாமல் புருவம் உயர்த்தி ‘ஏன்’ பாவம் காண்பித்தான் சிராஜ்.

    அம்மா கேட்பதற்கு முன்னாலேயே அயர்ன் செய்த க்ரீம் நிற பேன்ட்டையும் சாம்பல் நிற ஃபார்மல் ஷர்ட்டையும் அணிந்தாயிற்று. அடுத்து டைனிங் மேஜையில் அவசரமாய் அமர்ந்து வேகமாய் பிரேக்ஃபாஸ்ட்டைக் கொறித்துக் கிளம்ப வேண்டியதுதான். நல்ல நாளிலேயே ருசி தெரியாது.. இப்போதெல்லாம் அடியோடு…

    போகிற போக்கில் எதேச்சையாய் முகம் பார்க்கும் கண்ணாடியைக் கண்கள் ஒரு மின்னல் வேகத்தில் சந்தித்து மீண்டன. முன்பிருந்த சிரத்தையுடன் இப்போது தலைவாரிக்கொள்ளவில்லை என்று அது அறிவித்தது. முகத்தின் வாட்டத்தைக் காண்பித்தது. தளர்ந்த தோள்களை அப்பட்டமாகத் தெரிவித்தது-

    சுஜனாவின் வீட்டில் வரச் சொன்னாங்கப்பா... சம்பந்தி போன் செய்தாரு… ஏதோ…. சம்பிரதாயமாம்..தாலி பிரிச்-

    அம்மா இவனுக்கு விருப்பமான வகையில் சாண்ட்விச் தயாரித்து பூப்போட்ட பீங்கான் தட்டில் இவன் முன் வைத்தாள்.

    ஆபீஸ்ல மீட்டிங். ஸாரி.. அவசரமாக உணவை விழுங்கிச் சொன்னான். உணர்வையும்தான்.

    இதபாரு.. இது மாதிரி சடங்கு சம்பிரதாயத்துக்கெல்லாம் புருஷன் பெண்டாட்டி சேர்ந்துதான் பேகணும்.. அம்மா அழுத்திச் சொன்னபோது மில்லிமீட்டர் அளவு நப்பாசை எழுந்தது.

    ஒரு வேளை தன் பிறந்த வீட்டுக்குப் போக வேண்டும் என்ற காரணத்துக்காவது கிளம்புவாளோ? அவளுடன் ஒன்றாய்ப் பயணம் செய்ய ஒரு வாய்ப்பு கிடைக்குமோ?

    அம்மா எதிரில் எந்த டிராமாவும் நடைபெறக்கூடாது என்பதில் கவனமாக இருந்தான்.

    தன்னைக் குனிந்து பார்த்துக்கொண்டான். அடடா. இன்னிக்கு முக்கியமான மீட்டிங்.. இந்த ஷர்ட் போடுவது அபத்தம்.. இரு மாத்திக்கிட்டு வரேன்

    இதை சாக்காக வைத்து..

    உள்ளே போனான்.

    டிரஸ்ஸிங் மேஜை முன்னால் அமர்ந்திருந்த சுஜனாவைப் பார்த்தான்.

    அழகிய ஒல்லியான தேகம் என்றாலும் கவரும்

    Enjoying the preview?
    Page 1 of 1