Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

காதல் தென்றல் வீசுமா?
காதல் தென்றல் வீசுமா?
காதல் தென்றல் வீசுமா?
Ebook110 pages38 minutes

காதல் தென்றல் வீசுமா?

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

அம்மா... நான் கோவிலுக்குப் போய்ட்டு வர்றேன்... அப்பா... வர்றேன்ப்பா!”
“போய் வாம்மா!” பட்டாபிராமன் மகளை வழியனுப்பி வைத்துவிட்டு சேரில் வந்தமர்ந்தார். கூந்தல் இடை தாண்டி சதிராட நடந்து சென்ற மகளையே பெருமையுடன் பார்த்தார். கூடத்தில் அமர்ந்தபடி தெருக்கோடி வரை பார்க்கலாம். அப்படியொரு காற்றோட்டமான பெரிய வீடு!
‘சித்ரா... எப்படி வளர்ந்துவிட்டாள்? செண்பகம் நேற்றுதான் பிரசவித்ததுப் போலிருந்தது. அதற்குள் என் மகளுக்கு பதினெட்டு வயதாகிவிட்டதா? என் செல்ல மகளை நல்ல வசதியான இடமாய் பார்த்து கல்யாணம் செய்து கொடுக்க வேண்டும். இப்பவிருந்தே வரன் பார்க்க ஆரம்பித்துவிடவேண்டும்’
பட்டாபிராமன் அந்த ஊரின் பெரிய மனிதர்களில் ஒருவர். அந்த காயல்பட்டணத்தில் ஏழெட்டு வீடுகள், நிலபுலன்கள் இருந்தது. வசதிக்கு குறைச்சலில்லை. விவசாயம்தான் அவரது தொழில்.
சித்ரா நன்றாகப் படிக்க கூடியவள். பள்ளியில் எல்லாப் பாடத்திலும் அவள்தான் முதலாவதாய் வருவாள். +2 வரை படித்தவள் மேற்கொண்டு படிக்க ஆசைப்பட்டாள். சுற்று வட்டாரத்தில் எந்த கல்லூரியும் இல்லை. வெளியூரில் ஹாஸ்டலில் தங்கியிருந்துதான் படித்தாகவேண்டும். மூன்று வருடம் மகளை பிரிந்திருக்க இரண்டு பேருமே சம்மதிக்கவில்லை. வேறு வழியின்றி சித்ராவும் அடம்பிடிக்காமல் பெற்றோரின் அன்புக்கு அடிபணிந்து அவர்களையே சுற்றி சுற்றி வந்தாள்.
செண்பகம் காபியுடன் கணவரின் அருகில் வந்தாள்.
“இந்தாங்க...”
பட்டாபிராமன் காபி டம்ளரை வாங்கிக் கொண்டார்இந்த சித்ரா... நான் எவ்வளவு எடுத்துச் சொன்னாலும் கேக்கவே மாட்டேங்கிறா... காலையிலே எந்திரிச்சி... வாசல் தெளிச்சு, கோலம் போடறா! அதானே! இதே டயலாக்கை தினசரி நீயும்தான் சளைக்காம சொல்றே! அவளும் சளைக்காம கோலம் போடத்தான் செய்யறா! அதைதானே சொல்ல வர்றே?”
“ம்...”
“செய்துட்டுப் போகட்டுமே செண்பகம்! அதையேன் தடுக்கறே? இன்னொரு வீட்டுக்கு வாழப்போகிறப் பொண்ணு... எல்லா வேலையும் செய்ய பழகிட்டாதான் நல்லது. அவளுக்கு சமைக்கவும் கத்துக்கொடுக்க ஆரம்பி!”
“என்னங்க சொல்றீங்க நீங்க? நம்ம சித்ரா சமைக்கறதா? இதோப் பாருங்க... அவ வாழப்போகிற இடத்திலேயும் மகாராணி மாதிரி வாழணும். அவ சிட்டிகை போட்டா ஏழெட்டு வேலைக்காரங்க வந்து கை கட்டி நிக்கணும். அப்பேர்ப்பட்ட இடத்திலேதான் என் பொண்ணை கட்டிக்கொடுக்கணும்!”
“அதுசரி...” என்று கூறிவிட்டு வாய்விட்டு பலமாக சிரித்தார்.
“நான் என்ன சொல்லிட்டேன்னு இப்படி சிரிக்கறீங்க?” முகம் சுருங்கிப் போயிற்று செண்பகத்திற்கு.
“கோவிச்சுக்காதே செண்பகம். ஊருக்கே ராணியானாலும் ஒரு பொண்ணுங்கறவ புருஷனுக்கு பொண்டாட்டிதானே? பொண்டாட்டி கையால சமைச்சி சாப்பிடதானே ஒவ்வொரு புருஷனும் ஆசைப்படுவான்? நம்ம வசதிக்கு சமைக்கறதுக்கு தனி ஆளேப் போட்டுக்கலாம். ஏன் போட்டுக்கலே? அதிலே எனக்கும் விருப்பமில்லே. உனக்கும் விருப்பமில்லே. இதெல்லாம் ஒரு தனி சுகம் செண்பகம். எல்லா ஆம்பிளைகளும் பொண்டாட்டிகிட்டே படுக்கை விஷயத்துக்கு அடுத்து எதிர்பார்க்கறது சமையல்ல கெட்டிக்காரியா இருக்காளான்னுதான் நீ என்னடான்னா சித்ராவை அலுங்காம, நலுங்காம ஒரு பொம்மை மாதிரி அனுப்பி வைக்கலாம்னு பார்க்கறியா? நமக்கு ஒரு பிள்ளை இருந்து... இப்படி ஒரு பொம்மையா மருமகள் வந்தா... நீ அனுசரிச்சு நடந்துப்பியா?”
“.....என்ன பேச்சைக்காணோம்? ஆசைகள், எதிர்பார்ப்புகள் ஆயிரம் இருக்கலாம். ஆனா, யதார்த்த வாழ்க்கை என்று வரும்போது... அத்தனையும் அடிபட்டுப்போயிடும். சித்ராவுக்கு சமைக்க சொல்லிக்கொடு? அந்த காலத்துல முறத்தால புலியை விரட்டினாளாம். வீரத்தமிழச்சி! நம்மப் பொண்ணுக்கு புளியையாவது கரைச்சு குழம்பு வைக்கற வீரமாவது வரட்டும்!”
செண்பகம் கவலையுடன் அவர் குடித்துவிட்டுத் தந்த காபி தம்ளரை வாங்கிக்கொண்டு சென்றாள்.
‘இப்பவே இப்படின்னா... பொண்ணுக்கும், புருஷனுக்கும் ஊடல் வந்து பொண்ணை கைநீட்டி இரண்டு அடி அடிச்சதை கேள்விப்பட்டா அப்பவே உயிரை விட்ருவாப்போலிருக்கே! ஹூம்... இவளை சமாளிக்கறதே பெரிய விஷயமாயிருக்கும் போல...’ சந்தோஷமும், கவலையுமாய் அங்கலாய்த்தார் பட்டாபிராமன்.
குளித்துவிட்டு இடுப்பில் டவலோடு கண்ணாடி முன் நின்றான் கதிரேசன்.
கருத்த தேகம். திண்ணென்று புடைத்த தோள்கள். சுருள்முடி. களையான முகம்.
‘என்ன குறை எனக்கு? சித்ராவிற்கு என்னை ஏன் பிடிக்கவில்லை? இந்த ஊரிலேயே எத்தனை வயசுப் பெண்கள் நான் அவர்களை நிமிர்ந்து ஒரு பார்வை பார்க்கமாட்டேனா என்று ஏங்குகிறார்கள்? அவர்கள் கண்களுக்கு மன்மதனாய் தெரிகிற நான் சித்ராவின் கண்களுக்கு மட்டும் குரங்காய் தெரிகிறேனா? ஏன் சித்ரா என் மனதைப் புரிந்துகொள்ள மறுக்கிறாய்? நான் உன்மேல் உயிரையே வைத்திருக்கிறேன் தெரியுமா?’

Languageதமிழ்
PublisherPocket Books
Release dateJan 13, 2024
காதல் தென்றல் வீசுமா?

Read more from ஆர்.மணிமாலா

Related to காதல் தென்றல் வீசுமா?

Related ebooks

Reviews for காதல் தென்றல் வீசுமா?

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    காதல் தென்றல் வீசுமா? - ஆர்.மணிமாலா

    1

    "அம்மா..." சிலிர்த்தாள் சித்ரா!

    அந்த அதிகாலையில் குளிர்ந்த நீர் அவளின் தளிர் உடம்பில் பட்டதும்... குளிரில் மயிர்க்கால்கள் குத்திட்டு நின்றன. என்றாலும் அது ஒரு சுகமான அவஸ்தையாக இருந்தது.

    பாத்ரூமின் வென்டிலேட்டர் வழியாக மார்கழி மாதத்துக்கே உரிய பனிப்புகை மாசுப்படாமல் உள்ளேப் புகுந்து கொண்டிருந்தது.

    கஸ்தூரி மஞ்சளும், பயத்தம் பருப்பு மாவும் கலந்த கலவையை உடல் முழுக்க தேய்த்து. ஐந்து நிமிடம் வரை ஊற வைத்தாள். சித்ராவிற்கு சோப்பு போட்டு குளித்துப் பழக்கமில்லை. அதனால்தானோ என்னவோ... வெயிலுக்குப் போட்டியாக... அவள் தங்கநிற மேனி மினுமினுவென்று ஜொலிக்கும் எப்போதுமே!

    ஒரு வழியாய் குளித்து முடித்து... வெட வெடவென்று உடல் நடுங்கியபடி வெளியே வந்தாள்.

    ஹாலின் கடிகாரம் இன்னும் ஐந்தைத் தொடவில்லை. ஜன்னல்... வெளிச்சத்திற்காக காத்திருந்தது.

    வீட்டின் அமைதி, இன்னும் அம்மாவும், அப்பாவும் எழவில்லை என்றது.

    சிவப்பு நிற பாவாடை ஜாக்கெட் அணிந்து, சந்தன நிற தாவணியை உடுத்திக் கொண்டாள். சாண்டல் பவுடரை கொஞ்சமாய் உள்ளங்கையில் கொட்டி... இரு கைகளில் பரபரவென தேய்த்து, முகம், கழுத்துப்பகுதியில் பூசிக்கொண்டாள். செந்நிற சாந்துப்பொட்டை புருவத்தின் மத்தியில் வைத்துக்கொண்டாள்.

    தன்னை நிலைக்கண்ணாடியில் முழுவதுமாய் ஆராய்ந்தாள்.

    திறமையான ஓவியனால் வரையப்பட்ட அழகிய ஓவியம் போல், அற்புதமான சிற்பியால் செதுக்கப்பட்ட சிலை போல்... அவளே வியப்பில் மூச்சடைப்பது போல் உணர்ந்தாள்.

    நான் இவ்வளவு அழகானப் பெண்ணா? தெருவில் நடந்தால் ஆண்கள் மட்டுமின்றி, பெண்களும் திரும்பி திரும்பி பார்ப்பதற்கு காரணம் இல்லாமலில்லை.

    நிறமா, கண்களா, உதடா, மூக்கா, கன்னமா, சிரிப்பா, எதை எதனோடு ஒப்பிடுவது? மற்றதை ஒப்பிட சித்ராவை ஒரு உதாரணமாய் சொல்லலாம்! அவள் ஒரு நந்தவனம். எல்லாப் பூக்களையும் ஒரு சேர ஒரேப் பெண்ணிடம் பார்க்க முடியுமென்றால் அது சித்ராவிடம் மட்டுமேதான் இருக்கமுடியும். அதனால்தான் பிரம்மனே பிரம்மித்துப்போய் அவளின் வலதுபுற செவ்விதழின் கீழ் திருஷ்டிப் பொட்டாய் மிளகு சைஸில் மச்சம் வைத்திருந்தான்.

    ஹால் கடிகாரம் ஐந்து முறை ஒலித்தது.

    ‘அட... எவ்வளவு வேலையிருக்கு? கோலம் போட வேண்டும், கோவிலுக்குப் போகவேண்டும்... நான் பாட்டிற்கு மசமசவென்று நின்றிருக்கிறேனே...’ சுறுசுறுப்பு உடம்பில் வந்து அணைத்துக்கொள்ள… தலையில் சுற்றியிருந்த ஈர டவலை உருவி, நீண்ட தலைமுடியின் நுனியில் முடிச்சிட்டுக்கொண்ட சித்ராவிற்கு அழகான பதினெட்டு வயது.

    கோல மாவு கிண்ணத்தை எடுத்துக்கொண்டு வாசலுக்கு விரைந்தாள். முன்பே பெருக்கி தண்ணீர் தெளித்திருந்த வாசலில் புள்ளி வைத்து அழகான கோலம் வரைய ஆரம்பித்தாள். தாமரைப் பூக்கோலம். நிமிடத்தில் வரைந்துவிட்டு... அதற்கேற்ற வண்ணப்பொடிகளை இட்டு மேலும் அழகுப்படுத்தினாள்.

    மூன்று வீடு தள்ளி... திண்ணையில் அமர்ந்திருந்த கதிரேசன் இவளையே பார்த்துக்கொண்டிருந்தான். இது இன்று நேற்றல்ல... பல வருட பழக்கம். உலகிற்கு விடிகிறதோ, இல்லையோ... அதற்கு முன்பே கதிரேசன் விழித்து விடுவான். காரணம்... சித்ரா... விடியற்காலையில் கோலம் போட வருவாள்.

    சன்னமான இருட்டிலும்... இடைப்பிரதேசம் பளிச்சென அழகு காட்டுவதை பார்ப்பதற்காக மட்டுமல்ல... தினமும் அவள் முகத்தில் விழித்தாக வேண்டும் அவனுக்கு! அந்தளவிற்கு அவள் மேல் காதல்,

    இப்படி அப்படி என்று பார்த்தால்... சித்ராவிற்கு கதிரேசன் தூரத்து சொந்தம்தான். முறைமாப்பிள்ளைதான், ஆனால் பெற்றோர் இல்லாத, வேலை வெட்டியில்லாத, முக்கியமாய் அவளுக்கு ஈடான அந்தஸ்தில்லாத தனக்கு... ‘அவளை காதலிக்க என்ன தகுதியிருக்கு?’ இந்த கேள்வி அவனுள் எழாமலில்லை. என்றாலும், இதெல்லாம் ஒரு காரணமா? அப்பா, அம்மா செத்துப்போனது அவர்கள் தலையெழுத்து, இன்றோ, நாளையோ கவர்ன்மெண்ட் வேலை கிடைத்துவிடத்தான் போகிறது. என்ன பெரிய அந்தஸ்து? நினைத்தால் சம்பாதித்து விடப்போகிறோம். அட... சித்ரா என் மனைவியானால் அத்தனை சொத்தும் எனக்குத்தானே? நான் சித்ராவை காதலிக்கிறேன். அவள் மேல் உயிரையே வைத்திருக்கிறேன். அவளை என் உயிரில் வைத்துத் தாங்குவேன். அவளுக்கு கணவனாக இதைவிட என்ன தகுதி வேண்டும்? ஒரு பெண்ணிற்கு அன்பான கணவன்தானே மிகப்பெரிய சொத்து? இப்படித்தான் தனக்குத்தானே சமாதானப்படுத்திக்கொள்வான்... கதிரேசன்.

    கதிரேசன் திண்ணையை விட்டிறங்கினான். தெருவில் வேறு யாரும் இன்னும் விழிக்கவில்லை.

    கொல்லைப்புறம் சென்றான். மலர்ந்து சிரித்துக் கொண்டிருந்த பூசணிப்பூக்களில் மூன்றை பறித்துக்கொண்டான்.

    அவளை நோக்கி நடந்தான்.

    சித்ரா... அழைத்தான்.

    குரல் கேட்டு நிமிர்ந்தவள், இருட்டில் மசமசப்பாய் நின்றிருந்த அவனை அலட்சியமாய் பார்த்துவிட்டு கோலத்தைப் போட்டு முடித்துவிட்டு கிண்ணத்தோடு எழுந்து நின்றாள்.

    என்னன்னு கூட கேட்கமாட்டியா?

    என்ன? என்றாள் வெறுப்பாய்.

    இந்தா...!

    என்னது?

    பூசணிப்பூ... கோலத்துக்கு நடுவே... வைச்சா... ரொம்ப அழகாயிருக்கும்... உன்னைப்போல...

    என்னமோ... தேவலோகத்திலேர்ந்து பாரிஜாதப்பூவை கொண்டு வந்துட்ட மாதிரி நினைப்பு... சொல்லியபடியே வீட்டினுள் செல்ல, திரும்பினாள்.

    ப்ளீஸ் சித்ரா... இந்தப்பூவை வாங்கிக்கிட்டா நான் சந்தோஷப்படுவேன்.

    இதை உன் காதுல சொருகிக்கிட்டா அதைவிட அதிகமா நான் சந்தோஷப்படுவேன்! கிண்டலாய் சொல்லிவிட்டு சென்றுவிட்டாள் சித்ரா.

    அவமானத்தில் உடல் சிறுத்துப்போக அப்படியே நின்றிருந்தான் கதிரேசன்.

    "நேத்தெல்லாம் சளி பிடிச்சிட்டு, தும்மிக்கிட்டு அவஸ்தைப்பட்டுக்கிட்டிருந்தே! இன்னைக்கு ஒரு நாளாவது லேட்டா எந்திரிக்கக் கூடாதா? விடியம்பற எந்திரிச்சி, வாசல் பெருக்கி, தண்ணி தெளிச்சி, கோலம் போடலேன்னு யார் அழுதா?" செண்பகம் மகளின் மேல் ஒரு கண்ணும், பொங்கி வரும் பாலின் மேல் ஒரு கண்ணுமாக செல்லமாய் கோபப்பட்டாள்.

    சித்ரா அம்மாவின் தோளில். இரு கைகளையும் கோர்த்து, தொற்றிக்கொண்டாள்.

    "ஒவ்வோர் வீட்லே... வயசுப் பொண்ணுங்க காலையிலே எந்திரிச்சி வேலைப் பார்க்கறதில்லேன்னு அம்மாங்க... திட்டித் தீர்க்கறாங்க! நீயும் என்னை திட்டி எனர்ஜியை வேஸ்ட் பண்ணக்கூடாதேன்னு நான் காலையிலே எந்திரிச்சு வாசல் பெருக்கி

    Enjoying the preview?
    Page 1 of 1