Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

மஞ்சம் வந்த தென்றல்!
மஞ்சம் வந்த தென்றல்!
மஞ்சம் வந்த தென்றல்!
Ebook119 pages40 minutes

மஞ்சம் வந்த தென்றல்!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

சாமி படங்களிலிருந்து பழைய பூச்சரத்தை அகற்றி, சாமந்தி பூச்சரத்தை அணிவித்தாள் ராஜேஸ்வரி. காமாட்சி விளக்கை ஏற்றி விட்டு சூடத்தை தட்டில் வைத்து ஏற்றினாள்.
ராஜேஸ்வரியின் இதயத்தில் அடைந்துக்கிடந்த வேதனையெல்லாம் வெப்பத்தில் உருகி கண்களில் துளிர்த்தது. உதடுகள் நடுங்க “தாயே... தாயே...” என்று உச்சரித்ததேத் தவிர அதற்குமேல் அவளால் எதையும் கேட்க முடியவில்லை. சூடத்தட்டை கீழே வைத்துவிட்டு கைகூப்பி வணங்கி நின்றபோதுதான் “வெண்ணிலா” என்றலறிய நீலமேகத்தின் “பதட்டக்குரல் பதட்டமாய் ஒலித்தது.
என்னவோ, ஏதோவென்று பதறிய ராஜேஸ்வரி பூஜையறையிலிருந்து ஹாலுக்கு ஓடிவந்தாள்.
“என்னங்க... என்ன ஆச்சு?”
“வெண்ணிலா மயங்கி விழுந்துட்டா! இந்து ஓடிப்போய் தண்ணிக் கொண்டுவா!”
“ஐயோ... கடவுளே... வெண்ணிலா... வெண்ணிலா!” என்று மகளின் கன்னத்தைத் தட்டினாள் ராஜேஸ்வரி.
இந்துமதி தந்த தண்ணீரை முகத்தில் தெளித்தார். கண்கள் அசைந்து முயற்சித்து திறந்தது.
“வெண்ணிலா... இங்கே பாரும்மா... அப்பாவைப் பாரும்மா!”
பார்த்தவள் சிரிக்க முயன்றாள்.
“என்ன வெண்ணிலா... என்னம்மா பண்ணுது?” என்றாள் ராஜேஸ்வரி.
அம்மாவைப் பார்த்ததும் அழுகை கொப்புளித்து வந்தது. புரிந்துக்கொண்டவராய் நீலமேகம் அவள் தலையை தடவிக் கொடுத்தார்வெண்ணிலாவை டிஸ்டர்ப் பண்ணாதே ராஜி! அவ ரெஸ்ட் எடுக்கட்டும்!” என்றவர் மகளை தாங்கிப்பிடித்தபடி அழைத்துச் சென்று கட்டிலில் படுக்க வைத்துவிட்டு மனைவியை தனியே அழைத்துச் சென்றார்.
“பாரு... ராஜி! அவள் செஞ்சது தப்புதான். அதுக்காக எப்பப் பார்த்தாலும் வார்த்தைகளால் கொன்னுட்டிருக்காதே! அவள் கண்ணீருக்குக் காரணம்... உன் உதாசீனம்தான். இந்த மாதிரியான நேரத்திலேதான் தாயோட அன்பும், அனுசரனையும் தேவை!
உன்னைப் பார்த்து பிரதீபனும் இந்துமதியும் கூட அவளை உதாசீனம் பண்றாங்க!”
“என்னங்க பண்ணமுடியும்? அவள் பண்ணிட்டுவந்த காரியம் அப்படி! நல்ல வழியிலே, கழுத்திலே தாலியோட அந்த கருவை சுமந்திருந்தா... அவளை நான் உள்ளங்கையிலே வச்சு தாங்குவேன்! இப்படி... எந்த ஆதாரமும் இல்லாம சுமந்திட்டு வந்திருக்காளே... எப்படி என்னை நான் சமாதானம் பண்ணிக்க முடியும்? பயமும், வெட்கமும் இல்லாம வளர்கிற பொண்ணுகளுக்கு நல்ல சாவு வராதுங்க!”
“ச்சட் என்ன பேச்சு பேசறே? நல்ல நாளும் அதுவுமா உன் வாயால் உன் பொண்ணை சபிச்சிடாதே!”
“இப்படி ஒரு அடங்காப்பிடாரியை பெத்ததுக்கு வாழ்த்தவா முடியும்? நாலு பேருக்கு தெரிஞ்சு அசிங்கப்படறதுக்குள்ளே கருவை கலைச்சிடலாம்னா... மாட்டேன்னு பிடிவாதம் பிடிக்கிறாளே! இவளைவிட பெரியவள் கல்யாணம் ஆகாம இருக்காளே... அவளுக்கு ஒரு வழி பொறக்கலே... இவ வந்து அடைச்சிட்டாளே!”
“எல்லாம் நல்லபடியே நடக்கும்ன்ற நம்பிக்கை எனக்கு இருக்கு ராஜி! யோசிச்சி. முடிவெடுப்போம்! அந்தப் பையன் பேரு என்ன சொன்னா?”
“என்னமோ கார்த்திக்காம்! பெரிய பணக்கார வீட்டுப்பிள்ளையாம். எனக்கு நம்பிக்கையில்லேங்க! பணக்காரங்களுக்கும், மனசாட்சிக்கும் ரொம்ப தூரம். அந்தப் பையன் இவகிட்டே எதுக்குப் பழகினானோ அது கிடைச்சிட்டப்பிறகு, மறுபடி வருவானா? அந்த வண்டு வேறப் பூவைத் தேடிப்போயிருக்கும்! இதோப்பாருங்க. இதெல்லாம் நடக்காதக் காரியம். உங்கப் பொண்ணுக்கிட்டே நீங்கதான் பக்குவமா பேசணும். நாளாயிடுச்சின்னா ஒண்ணும் பண்ணமுடியாது. இந்த மயக்கம்கூட மசக்கையால வந்ததுதான்! இவள்ஒருத்தியோட பிடிவாதத்துக்காக என் மத்த குழந்தைங்களோட வாழ்க்கையை பலிகொடுக்க நான் தயாராயில்லே... சொல்லிட்டேன்!” பிடிவாதமாய், உறுதியாய் சொன்னாள் ராஜேஸ்வரி.
நீலமேகம் கனத்த பெருமூச்சொன்றை வெளியிட்டார்.
அதேநேரம்... காலிங்பெல் அலறியது.
கல்லூரிக்கு கிளம்ப தயாராகிக்கொண்டிருந்த பிரதீபன் வாசலுக்குப் போக... கைநீட்டித் தடுத்த நீலமேகம் தானேச் சென்று கதவைத் திறந்தார்.
ஒரு இளைஞன் நின்றிருந்தான்

Languageதமிழ்
PublisherPocket Books
Release dateJan 13, 2024
மஞ்சம் வந்த தென்றல்!

Read more from ஆர்.மணிமாலா

Related to மஞ்சம் வந்த தென்றல்!

Related ebooks

Reviews for மஞ்சம் வந்த தென்றல்!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    மஞ்சம் வந்த தென்றல்! - ஆர்.மணிமாலா

    1

    பச்சை மரங்களுக்குள் பதுங்கியிருந்த பறவைகள் மெல்லிசை கச்சேரியை ஆரம்பித்திருந்தது. விரைந்து பரவத்தொடங்கிய வெளிச்சம் மனிதர்களை கொட்டாவிவிட்டபடி எழ வைத்தது.

    தூக்கம் வராமல் புரண்டு புரண்டு படுத்து நேரங்கழித்தே உறங்கிய ராஜேஸ்வரி பழக்க தோஷத்தில் அதிகாலையிலேயே விழித்துக் கொண்டாள். கண்கள் திறந்ததும் நடந்த சம்பவங்கள் அத்தனையும் நினைவை கவ்வ... எதிர்காலத்தைப் பற்றிய பயம் பூதாகரமாய் எழுந்தது.

    பெருமூச்சுவிட்டபடி பக்கத்தில் பார்த்தாள். சின்னவள் இந்துமதி லேசாய் வாய்பிளந்தபடி ஒருக்களித்து படுத்திருந்தாள். நீண்ட அடர்த்தியான, மடித்து ரிப்பனால் கட்டப்பட்ட இரட்டை பின்னல்களில் ஒன்று அவள் கழுத்தை பாம்பு போல் கவ்வியிருந்தது. அவளுக்கு அடுத்து படுத்திருந்தாள் வெண்ணிலா.

    ராஜேஸ்வரியின் உறக்கம் கெட்ட காரணமான சூத்திரதாரி. பத்தொன்பது வயசுக்குரிய மதமதப்பு அவள் உடலெங்கும் செழுமையாய் அப்பிக்கிடந்தது. அணிந்திருந்த நைட்டி முழங்கால்வரை மேலேறியிருக்க, மல்லாந்து படுத்திருந்ததில் நளினமில்லா திமிர் தெரிந்தது.

    திமிர்பிடித்தவள்தானே? என் வயிற்றில் பிறந்தவேறு எந்த ஜீவனுக்கும் இல்லாத திமிர் இவளிடம் மட்டும்தானே இருக்கிறது. அதனால்தானே இன்று பெற்றவர்களை தலைகுனிய வைத்திருக்கிறாள்?

    பெண்களை தெய்வீகமாக தோற்றம் செய்வது அடக்கம். பெண்களை மிகவும் பாராட்டும்படி செய்வது பணிவு. ஆனால் இவையிரண்டுமே இவளிடம் இல்லை. இருப்பதெல்லாம் அடங்காப்பிடாரித்தனம். தான்தோன்றித்தனம்.

    தன்னைவிட பெரியவள் ஒருத்தியும், இளையவள் ஒருத்தியும் இருக்கிறார்களே என்றுகூட எச்சரிக்கை உணர்வு இல்லாமல் காதல், கண்றாவி என்று குடும்பமானத்தை சந்தி சிரிக்கவைக்க நாள் குறித்தவள். செய்யறதையெல்லாம் செய்துவிட்டு கொஞ்சம்கூட பயமில்லாமல் நிம்மதியாய் தூங்குவதைப் பார்! ராஜேஸ்வரிக்கு அவளைப் பார்க்க பார்க்க எரிச்சல் மண்டிக்கொண்டு வந்தது.

    ஏய் எந்திரி... நேரமாகுதுப் பார்... வயசுப் பொண்ணா... லட்சணமா சூரியன் உதிக்கிறதுக்கு முன்னாடி விழிச்சோமா, நாலு பாத்திரம் தேய்ப்போமான்னு இல்லாம... தூங்குது பார்... மூதேவி... எந்திரி! வெண்ணிலாவை உலுக்கினாள்.

    லேசில் கண் திறக்கவில்லை.

    அடச்சீ... எந்திரி! என்று பட்டென்று தொடையில் அடித்தாள்.

    வாரிச்சுருட்டி எழுந்த வெண்ணிலா அதிர்ந்துப் போய் பார்த்தாள்.

    அம்மாவின் வெறுப்பு மண்டிய முகம்.

    அவளை நிமிர்ந்துப் பார்க்க திராணியற்று எழுந்துகொண்டாள்.

    என்ன மசமசன்னு நிக்கறே? மீதியெல்லாம் கேக்காம செய்யத் தெரியுதில்லை? வீட்டு வேலை மட்டும் சொன்னாலும் செய்யத் தெரியாது. இன்னைக்கு வெள்ளிக்கிழமை! போய் பூஜையறை சாமானை எல்லாம் விளக்கி வைச்சுட்டு, வீட்டையெல்லாம் கழுவிவிடு! அப்படியாவது பிடிச்சிருக்கிற சனியன் விலகுதான்னு பார்ப்போம்! ராஜேஸ்வரி எழுந்து பாத்ரூம் நோக்கிப் போனாள்.

    வெண்ணிலா கண்களில் தேங்கி நின்ற கண்ணீரோடு தலை குனிந்தாள்.

    பொட்டென்று விழுந்த கண்ணீர் தரையை பதம்பார்த்து சிதறிப்போனது.

    இதுவரை வேலை செய்தே பழக்கமில்லாத வெண்ணிலாவினால் அம்மாவின் எண்ணத்திற்கு ஈடுகொடுத்து செய்ய முடியவில்லை. நீள நீளமாய் வளர்த்து க்யூடெக்ஸால் பளபளத்த நகங்கள் மளக்கென உடைந்துபோயின. மனசே உடைந்துப்போனபின் நகம் எம்மாத்திரம்?

    வெண்ணிலா மதுரைக்கு வந்து ஒரு வாரம்தான் ஆகிறது. அவள் வளர்ந்தது, படித்ததெல்லாம் சேலத்தில். ராஜேஸ்வரியின் உடன்பிறந்த தங்கை புவனேஸ்வரி வீட்டில்.

    புவனேஸ்வரிக்கு குழந்தை பாக்கியம் இல்லை. இனி பிறக்க வாய்ப்பே இல்லை என்று டாக்டர்கள் கைவிரிக்க... குமைந்துப் போனாள். கணவர் சுந்தரம்தான் அவளை சமாதானப்படுத்தினார்.

    என்ன புவனா இது? சதா அழுதுக்கிட்டே இருந்தா என்னாகறது? குழந்தை பிறக்கலேன்னா என்ன? எத்தனை ஆசிரமம் இருக்கு? எத்தனை ஆயிரம் குழந்தைங்க இருக்கு? அதுல ஒண்ணோ, ரெண்டோ தத்து எடுத்துக்கலாம்! சரியா? என்று தலையை தடவிக் கொடுத்தார்.

    புவனேஸ்வரி நம்பமுடியாமல் பார்த்தாள்.

    ‘பேசுவது கணவர்தானா? எப்படா இதுபோல் ஒரு சந்தர்ப்பம் வாய்க்கும்? இரண்டாவதாய் ஒரு பெண்ணை கல்யாணம் பண்ணிக் கொள்ளலாம் என்று வாய்ப்புக்காக காத்திருக்கும் ஆண்கள் மத்தியில்... எனக்கே ஆறுதல் சொல்லி அனாதை குழந்தையை தத்து எடுத்துக் கொள்ளலாம் என்று ஆலோசனையும் கூறுகிறார் என்றால்... என் கணவர் எவ்வளவு உத்தமர்?’

    நெக்குருகிப் போய் கையெடுத்துக் கும்பிட்ட புவனேசுவரி அவர் மார்பில் சாய்ந்து குரலெழுப்பி அழுதாள்.

    என்னம்மா இது? எதுக்கு அழறே?

    என்னால தாங்கமுடியலேங்க? இப்படி ஒரு அற்புதமான மனுஷனுக்கு என் வயித்தில உங்க வாரிசை சுமந்து ஒப்படைக்க. எனக்கு வக்கில்லாம போச்சேன்னு கஷ்டமாயிருக்குங்க!

    உன் கஷ்டம் எனக்குப் புரியுது புவனா! ஆனா, என் வரலாறை - தோண்டிப் பார்த்தா விடையே கிடைக்காத பல கேள்விகள் இருக்கேம்மா! எங்கம்மா... அதான் என்னை வளர்த்தத் தாய்க்கு இதே மாதிரி ஒரு பிரச்சினை வந்த காரணமாகத்தான்... எங்கோ ஒரு தெருமுனையில பசி மயக்கத்தோட விழுந்துகிடந்த என்னை தன் சொந்த மகனா எடுத்து வளர்த்து ஆளாக்கி, சொத்து பத்தெல்லாம் உருவாக்கித் தந்து கண்ணை மூடிட்டாங்க. அம்மாவோட தனி முயற்சி மட்டுமில்லே, அப்பாவோட அன்பும், ஆதரவும் சரிசமமா கிடைச்சதால்தான் இன்னைக்கு ஒரு நல்ல மனுஷனா நடமாடுகிறேன். நாட்டில் பாதிபேர் என் அம்மா மாதிரி இருந்துட்டா... அனாதைங்கற வார்த்தையே அழிஞ்சுப் போயிடாதா புவனா?

    கண்டிப்பாங்க! நாளைக்கேப் போய் ஒரு குழந்தைய தத்து எடுத்துப்போம்!

    ஒண்ணுபோதுமா புவனா? நம்மவசதிக்கு இன்னொரு குழந்தையும் எடுத்து வளர்க்கலாமே!

    இல்லைங்க! எங்க அக்காவுக்கு மூணு பெண் குழந்தைங்க! பார்த்துக்க சிரமப்படறா! அதிலும் ரெண்டாவது பொண்ணு வெண்ணிலா இருக்கே படுசுட்டி! பயங்கர வாலு! அஞ்சு வயசிலேயே பத்து வயசுக்குரிய தைரியம். அச்சு அசப்புல பார்க்க என்னைப்போலவே இருக்கா! அவளை நாம வளர்க்கலாங்க! என்றாள் தயவாய்.

    நாம வளர்க்கலாம் சரி! உங்க அக்கா வீட்டிலே ஒப்புக்குவாங்களா?

    அக்காவே பலமுறை, ‘இவளை நீ கூட்டிட்டுப் போயிடு புவனா?. இதுபண்ற அட்டகாசத்தை தாங்கமுடியலே’ன்னு புலம்பறா! என்றதும் சிரித்தார் சுந்தரம்.

    ஐந்து வயதில் வெண்ணிலா சேலத்திற்கு அழைத்து வரப்பட்டாள். அடுத்த வாரமே ஆசிரமத்திலிருந்து செல்வி என்ற இரண்டு வயது குழந்தையை தத்து எடுத்து வந்து வளர்த்தனர்.

    வெண்ணிலாவிற்கு அம்மா வீட்டைவிட சித்திவீடு ரொம்பவே பிடித்துப் போனது. சின்னப்பாப்பா செல்வியையும் பிடித்துவிட்டது. புவனா அவர்களுக்கு கேட்பதை எல்லாம் வாங்கித் தந்தாள்.

    Enjoying the preview?
    Page 1 of 1