Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Narthamalai
Narthamalai
Narthamalai
Ebook251 pages1 hour

Narthamalai

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

கி.பி. 13-ஆம் நூற்றாண்டு வரை நகரத்தார் மலை என்றழைக்கப்பட்ட நார்த்தாமலை மலையில் சிவ வழிபாடு சிறப்பு பெற்றிருந்தது. மேல் மலையில் இன்றளவும் கலைப்பெட்டகமாகக் காணப்படும் விஜயாலய சோழீச்சுவரம் என்ற சிவன் கோவிலும் ஊரின் வடக்கே உள்ள ஆளுருட்டி மலை என்ற குன்றின் கீழுள்ள கடம்பவனேஸ்வரர் சிவன் கோவிலும் சிறப்பு பெற்றிருந்தன.

வடக்கில் இருந்து மதுரை நோக்கி சென்ற மாலிக்காபூர் என்ற இஸ்லாமிய தளபதி வருகைக்குப்பின் நகரத்தார் மலையில் சிவ வழிபாடு மங்கி சக்தி வழிபாடு செழித்தோங்கியதாக நாவல் எழுதப்பட்டுள்ளது. இன்று நார்த்தாமலை மலையில் மாரியம்மன் கோவில் மட்டுமே பிரபலமாக உள்ளது.

புனைவு நாவல்தான் என்றாலும் முழுவதும் கற்பனை அல்ல.

Languageதமிழ்
Release dateJun 17, 2023
ISBN6580167710012
Narthamalai

Related to Narthamalai

Related ebooks

Reviews for Narthamalai

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Narthamalai - N. Solaiyappan

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    நார்த்தாமலை

    (ஒரு சிவஸ்தலம் சக்திஸ்தலமாக மாறியக் கதை!)

    (புனைவு நாவல்)

    Narthamalai

    Author:

    ந. சோலையப்பன்

    N. Solaiyappan

    For more books

    https://www.pustaka.co.in/home/author/n-solaiyappan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    என்னுரை

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    அத்தியாயம் 22

    அத்தியாயம் 23

    அத்தியாயம் 24

    அத்தியாயம் 25

    அத்தியாயம் 26

    அத்தியாயம் 27

    அத்தியாயம் 28

    அத்தியாயம் 29

    அத்தியாயம் 30

    என்னுரை

    வாழிய தமிழ்!

    வாழிய வையம்!

    வணக்கம். இது என்னுடைய இரண்டாவது நாவல். புதுக்கோட்டையைப் பற்றி முழுவதும் எழுத எனது ஒரு பிறவிப் போதாது. இருக்கும்வரை புதுக்கோட்டையையும், அதன் சிறப்புகளையும் வெளிக்கொண்டு வர என்னாலான முயற்சிகளை மேற்கொள்வேன். எனது முதல் நாவலான மண் உப்பு நண்பர்கள் மத்தியில் நல்ல விமர்சனங்களைப் பெற்ற நிலையில் எனது இரண்டாவது நாவலான நார்த்தாமலையும் உங்களுக்கு பிடிக்கும் என்று நம்புகிறேன்.

    ஒரு பிரசித்தி பெற்ற, திராவிடக் கட்டிடக்கலைக்குச் சான்றாக ஆயிரம் ஆண்டுகளைத் தாண்டியும் கம்பீரமாக நின்றுகொண்டிருக்கும் விஜயாலயச் சோழீச்வரம் கோயில் என் மனதில் பல வினாக்களை தொடர்ந்து எழுப்பிக் கொண்டேயிருந்தது.

    முத்தரைய மன்னர்களால் எழுப்பப்பட்டு, சோழமன்னர்களால் ஆதரிக்கப்பட்ட அந்த எழில் ஓவியம் ஏன் வழிபாடின்றி ஓய்ந்தது? என்று இந்த வினா இடையறாது என்னுள் எழுப்பிய அதிர்வுகளே இந்த கதையின் விதையானது.

    மேலமலையின் மடியில் வடித்து வைத்த இந்த ஆலயத்தைப் புறந்தள்ளிவிட்டு, இன்று நார்த்தாமலையின் அடையாளமாக மாரியம்மன் வழிபாடு வந்தது எப்படி? இந்த வினாவும் என்னுள் இட்டுச்சென்றது.

    உண்மையில் இந்தகதையை நான் எழுதினேன் என்று கூறமுடியாது. எழுத பணிக்கப்பட்டேன் என்றுதான் கூறவேண்டும். என்னை, என் அறிவை மீறிய பல விஷயங்கள் இந்த நாவலில் இடம் பெற்றுள்ளதை நண்பர்கள் வாசிக்கும்போது அறிந்துகொள்ள முடியும்.

    மிகப்பெரிய பேராசிரியர்களிடம் நாவல் எழுதத் துவங்கும் முன்னர் நார்த்தாமலைக்கு மாரியம்மன் வழிபாடு வந்ததையும், அந்தக் கோவிலுக்கு ஏதேனும் வரலாறு உண்டா என்றும் கேட்டு, அப்படியொன்றும் இல்லையென்பதை உறுதிப்படுத்திக்கொண்டப் பின்தான் எழுத ஆரம்பித்தேன்.

    அதோடு கிபி 14 ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில் தமிழகத்தில் மாலிக்காபூரின் படையெடுப்பு மிகப்பெரியத் தாக்கத்தை ஏற்படுத்தியது.

    மாலிக்காபூர் மதுரைக்குச் செல்லும் வழியில் நார்த்தாமலைக்கு வந்தாரா என்பது குறித்து வரலாற்று அறிஞர்களிடம் இருவேறு கருத்துக்கள் உள்ள நிலையில் எனது நாவலில் மாலிக்காபூர் நார்த்தாமலைக்கு வருவதாக எழுதியுள்ளேன். அவர் நார்த்தாமலைக்கு வந்தாரா, வரவில்லையா என்ற இரண்டு நிலைப்பாடுகளில் வருகை புரிந்தார் என்ற நிலைப்பாட்டை நான் எடுத்து நார்த்தாமலை நாவலை எழுதி முடித்துள்ளேன்.

    புதுக்கோட்டையின் வரலாற்றை எழுதியவன் என்ற பெயர் ஒன்றே எனக்குப் போதுமானது. இதனைத் தொடர்ந்து அடுத்த நாவலும் புதுக்கோட்டையின் இன்னுமொரு வரலாற்றுச் செய்தியைத் தாங்கித்தான் வெளிவரப் போகிறது.

    இந்த நாவலை ஆரம்பத்திலேயேப் படித்து கருத்துக்கள் வழங்கிய எனது துணைவியார் தேவி (ஆசிரியர்) அவர்களுக்கும், தொடர்ந்து ஏராளமான புத்தகங்களை வாசித்துவரும் அருமை நண்பர் திரு. மனோகர் (சமுக நலத்துறை) அவர்களுக்கும், மிரட்டுநிலை அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் திரு.பழ. முத்துக்குமார் அவர்களுக்கும், அண்ணன் திரு.எஸ்.பி. இராஜேந்திரன் அவர்களுக்கும், நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் திருமதி. கற்பகம் அவர்களுக்கும், கவிஞர் ப. வெங்கடேசன் (கலை இலக்கிய மேடை) அவர்களுக்கும் எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    நண்பர்கள் எனது இந்த நார்த்தாமலை நாவலையும் வெற்றிப் பெறச் செய்ய வேண்டுகிறேன்.

    ஓம் சாய்ராம்

    ஸ்ரீ சாய்ராம்.

    என்றும் அன்புடன்,

    ந. சோலையப்பன்,

    திருவப்பூர், புதுக்காட்டை.

    அலைபேசி - 8248940633.

    நாவலாசிரியர் பற்றி...

    நாவலாசிரியர் திரு. சோலையப்பன் அவர்கள் புதுக்கோட்டையில் திருவப்பூர் பகுதியில் வசித்து வருகிறார். இவரது கானல்நீர் காட்சிகள் என்ற தினமணி நாளிதழ் சிறுகதைப்போட்டியில் வெற்றிப்பெற்ற சிறுகதை, திருச்சியில் உள்ள பிரபலமான தனியார் கல்லூரியில் தமிழ் துறையில் இளங்கலைப் பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டையில் உள்ள மற்றொரு தனியார் கல்லூரியில் இவரது பூமராங் என்ற சிறுகதையும் தமிழ் துறையில் பாடமாக வைக்கப்பட்டுள்ளது.

    இவரது முதல் பரிசுக்குரிய இரண்டாம் பரிசு கதையைத் தேர்ந்தெடுத்தவர் அமரர் பிரபஞ்சன். தினமலரில் ‘என் பள்ளி’ என்ற சிறுகதை மூன்றாம் பரிசு பெற்றதும் குறிப்பிடத்தக்கதாகும்.

    தற்போது பிரபல நாளிதழில் 300-க்கும் மேற்பட்ட குறுங்கட்டுரை எழுதி, தொடர்ந்து கொண்டுள்ளார். அரசு நடுநிலைப்பள்ளியில் வரலாற்று பட்டதாரியாகப் பணியாற்றிவரும் எழுத்தாளர், தனது ஓய்வு நேரங்களை சமூக நோக்கத்தில் எழுதி கழித்துவருகிறார்.

    1

    கடவுள் என்பது என்ன? - அந்த பாலகன் எழுப்பிய அந்தக் கேள்வி, அவர்கள் அமர்ந்திருந்த இடத்திற்கு எதிரேயிருந்த மேலமலைக்குன்றில் மோதி, பழியிலி ஈச்சரம் என்றழைக்கப்பட்டு தற்போது விஜயாலயச் சோழீச்சரம் என்றழைக்கப்படும் அந்த சிவன் கோயிலின்மீதும் பட்டு, அவர்களின் மேலேயே திரும்ப வந்து விழுந்தது.

    கோவிலுக்கும் நந்தி மண்டபத்திற்கும் இடைப்பட்ட அர்த்த மண்டபத்தில் தனது சீடர்களோடு அமர்ந்திருந்த சிவானந்த பட்டரை அந்தக் கேள்வி மிகப்பலமாகத் தாக்கியது.

    மனிதகுலம் தோன்றியபோதே எழுந்துவிட்ட கேள்விதான் அது என்றாலும், அவரது பால்யத்திலிருந்தே பலமுறை அவரிடம் பலரால் கேட்கப்பட்டக் கேள்விதான் என்றாலும், தன்னிடம் வேதம் பயிலவந்த பாலகன் ஒருவனுக்கு இத்தனை காலம் கழித்து இந்த வினா எழுவது அவரிடம் மிகப்பெரிய வேதனையை உண்டுபண்ணியது.

    தன்னெதிரே இடதுகையை குறுக்கேக் கட்டி, வலதுகையை நிமிர்த்தி உள்ளங்கையால் வாயைப் பொத்தியபடி பணிவாக நின்றபடி அந்த வினாவை எழுப்பிய ஈஸ்வரனை கூர்மையாகப் பார்த்தார் சிவானந்தப்பட்டர்.

    கடந்த சில மாதங்களாக அவனது வினாக்கள் வெகு கூர்மையாக இருக்கின்றன. தனது குருவும், தனது தந்தையின் பால்ய சிநேகிதருமான தன்னிடம் எவ்வித அச்சமும் இன்றியும், அதே சமயம் பழையப்பணிவு துளியளவும் குறையாத வண்ணமுமாக அவன் எழுப்பும் வினாக்கள் பிற மாணவர்களிடம் எவ்விதத் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது புரியவில்லை.

    ஏற்கனவே இந்த நார்த்தாமலையையும், அதனைச் சுற்றியுள்ள கிராமங்களிலும் வசிக்கும் மக்களில் பலர் மெல்ல தென்கிழக்கேயுள்ள கலசமங்கலம் என்ற புதிய ஊரை நோக்கி நகரத் தொடங்கியுள்ள நிலையில் இருக்கும் ஐம்பது குடும்பங்கள் மட்டுமே உள்ள வேதியர் குடியிருப்புகளிலிருந்து வரும் இருபது மாணவர்களையும் இவன் எழுப்பும் வினாக்கள் சிதறடித்துவிடுமோ என்ற அச்சம் அவரிடம் மிகப்பெரிய பெருமூச்சை வெளியேற வைத்தது.

    வடக்கில் இருந்து மிகப்பெரிய மிலேச்சப்படை ஒன்று தெற்கே பாண்டியர்களின் நாட்டைத் தாக்க நகரத் தொடங்கியுள்ள நிலையில் மக்களை அமைதிப்படுத்தவும் வரும் ஆபத்துகளை எவ்வாறு மிகப்பெரிய சேதங்களின்றி காத்துக்கொள்வது என்று தானும், கிராமப் பெரியவர்களும் சிந்தித்துவரும் நிலையில் இந்தச் சிறுவன் இப்படி வினாக்கள் எழுப்புவது மாணவர்களிடம் குழப்பத்தை ஏற்படுத்திவிடுமோ என்ற அச்சத்தை அவருக்குள் உண்டுபண்ணியது. காரணம் போனவாரம் அவன் எழுப்பிய வினா மாணவர்களிடையேகூட சலசலப்பை உண்டுபண்ணி விட்டது.

    ஏன் கடவுள் சிலைகளைத் தொட்டு பூஜிக்கவும், வேதங்கள் கூறவும் பிராமணர்களாகிய நாம் மட்டும் தகுதியுடையவர்களாக உள்ளோம்? என்ற அவனது வினா, வேதம் படிக்காமல், வராமல், விடிந்தும் பல நாழிகைகள் உறங்க எண்ணிய சில மாணவர்களிடையே உற்சாகத்தையே ஏற்படுத்திவிட்டது.

    இதற்கு எப்படி பதிலளிப்பது? பத்து வயது பாலகனுக்கு எப்படி இதற்குரிய விளக்கம் புரியும்? அப்படியும் கூறினார்.

    மனிதர்களின் உணர்வுகள் புலன்கள் சார்ந்தவை. புலன்கள் அலைபாயக் கூடியவை. கண் எதனை அதிகம் பார்க்கின்றதோ அதையே விரும்புகிறது. காதுகள் எவற்றை அதிகம் கேட்கின்றனவோ, அதனையே விரும்புகின்றன. எந்த வாசனையைத் தொடர்ந்து நுகர்கின்றோமோ அந்த வாசனையையே நாசிகள் நேசிக்கின்றன. எந்த சுவையை நா அதிகமாக சுவைக்கின்றதோ அதனை உண்ணவே நாக்கு விரும்புகின்றது. எந்த ஸ்பரிசத்தை அதிகம் ஸ்பரிசிக்கின்றனவோ அந்த ஸ்பரிஸத்தையே உடல் விரும்புகின்றது. ஒவ்வொரு புலனையும் செலுத்துவது மனிதனின் மனம். அந்த மனத்தைப் பழக்குவது புலன்கள். இப்படி புலன்களும் மனமும் ஒன்றையொன்று பிணைந்துகிடப்பதால் புலன்களால் மனமும், மனதால் புலன்களும் அலைபாய்கின்றன. அந்த அலைபாய்தலே மனித உயிரின் ஆற்றலை வீணடிக்கக் காரணமும் ஆகின்றது. அப்படி புலன்களால் மனமும், மனதால் புலன்களும் பிணைந்து உயிர் ஆற்றல் வீணாவதைத் தடுக்கவேண்டுமென்றால், கவனக்குவிப்பு தேவை. கவனம் ஒரேப்புள்ளியில் குவிய வேண்டுமென்றால், சுவாசம் சீராக வேண்டும். சுவாசம் சீராகவேண்டுமென்றால் சுவாசத்தை இடைவிடாமல் கவனிக்கவேண்டும். சுவாசத்தை கவனிக்கத் தொடங்கினால் சுவாசம் சீராகும். மெல்ல உயிர்வளியை உள்ளிழுத்து, பாம்புச்சீறலாய் மூச்சுக்காற்றை வெளியிடும்போது உள் உறுப்புகள் புத்துணர்வு பெறுகின்றன. மூளை கூர்மையாகிறது. காரணம் மூளைக்கு உணவென்பது பிரபஞ்ச சக்தி. அந்த பிரபஞ்ச சக்தியை காற்றோடு முழுதாக உள்ளிழுக்க மூளை பலம் பெறுகிறது. மூளை நிகழ்காலத்தை ஊன்றிக் கவனிக்கிறது. மூளை நன்றாக கூர்மையடைந்து உள்ள நிலையில் மனம் ஒடுங்குகிறது. மனம் ஒடுங்க ஒடுங்க எண்ணங்கள் தோன்றுவது நின்றுபோகிறது. மனம் ஒரு புள்ளியில் ஒடுங்கும்போது கவனக்குவிப்பு நடக்கிறது. எவன் ஒருவனுக்கு கவனக்குவிப்பு அடிக்கடி ஏற்படுகிறதோ, அவன் பஞ்சபூதங்களின் சூட்சுமத்தை அறிந்துகொள்கிறான். வீசும் காற்றை முகர்ந்து பார்த்து எத்தனை நாட்களில் மழை பெய்யும். எத்தனை நாள் பெய்யும் என்று கணிக்கிறான். மண்ணை எடுத்து நாவில் வைத்து சுவைத்துவிட்டு அந்த மண்ணில் என்னென்னச் சத்துக்கள் உள்ளன என்றும், அதில் என்னப் பயிர் போடலாம் என்று கணிக்கிறான். கிராமத்து மக்களுக்குச் சொல்கிறான். கை நாடி பார்த்து நோயுற்றவனின் இரத்தவோட்டத்தின் நிலையைத் தெரிந்துகொள்கிறான். மருந்து தருகிறான். இதெல்லாம் அனைத்து மனிதர்களாலும் முடியாது. அதிகாலையில் எழுந்து உடல் உஷ்ணம் போக குளித்து, வேதம் எனப்படும் பாடத்தை அர்த்தம் மனதில் ஓட கூறி பாராயணம் செய்யும் பிராமணர்களுக்கே இயலும். ஒரு செயலை வெற்றிகரமாக செய்து முடிக்க உடல் குழுமையாக இருக்க வேண்டும். உடல் குழுமையாக இருக்க நேர்மறை எண்ணங்களே மனதில் இருக்கவேண்டும். எளிதில் ஜீரணமாகும் உணவு, நீர் நிறைந்த இடங்களில் ஜபதபம் என்று பிராமணர்கள் தங்களை குளுமையாக வைத்துக் கொள்கின்றனர். ஊர் நன்மைக்காகவும், நாட்டில் ஸ்திரத்தன்மை ஏற்படுவதற்காகவும் காலை மாலைகளில் கடவுளைப் போற்றி வேதங்களைப் பாடுகிறார்கள். கடவுளிடம் இடைவிடாது பிரார்த்தனை செய்பவன் வேறு எங்கு போவான்? கோவிலுக்குத்தான் போவான். கோவிலில் உள்ள கடவுள் சாந்தமோ, கொடூரமோ, பூஜிக்கும் மனிதன் சாதாரணமாக இருக்க வேண்டும். அத்தகைய சாந்தம் உள்ள பிராமணனை கடவுளைத் தொட்டு பூஜிக்க அனுமதித்திருக்கிறார்கள். இப்படிதான் நீண்டதொரு விளக்கம் கொடுத்து... அவனுக்குப் புரிந்ததா, இல்லையா என்பது தெரியவில்லை. இன்றைக்கு இப்படி இன்னொரு கேள்வியை எழுப்பியுள்ளான்.

    அதுவும் அடிப்படையையேத் தகர்க்கும் கேள்வி.

    கடவுள் என்பது என்ன?

    சிவானந்தப்பட்டர் நிமிர்ந்து அந்தப் பாலகன் ஈஸ்வரனை பார்த்தார். அவன் இன்னும் அதே வலது கையை வாயில் பொத்தியபடி நின்றுகொண்டிருந்தான். கண்களில் மட்டும் இன்னும் தாங்கள் எனது கேள்விக்கு பதில் கூறவில்லையே என்ற வினா படர்ந்திருந்தது.

    சிவானந்தப்பட்டர் திரும்பி விஜயாலயச் சோழீச்வரரை வணங்கினார். மாணவர்கள் பக்கம் திரும்பினார்.

    குழந்தைகளே இன்று ஈஸ்வரன் கேட்ட வினா மிகவும் அற்புதமான வினா. கடவுள் என்பது என்ன? இந்தக் கேள்வியை கேட்டதற்காக அவனை நான் பாராட்டுகிறேன். ஆனால் கடவுள் என்பது என்னால் என்னவென்று கூறமுடியும். ஆனால் இந்த வயதில் உங்களால் அதனை உள்வாங்கிக்கொள்ள முடியுமா என்று தெரியவில்லை. ஆனால் வினாவொன்று எழுந்தப் பின்னர் விடை கூறவில்லையென்றால் இந்த குரு சிஷ்ய அமைப்பிற்கு அர்த்தமில்லை. எனவே என்னால் முடிந்த அளவிற்கு உங்களால் புரிந்துகொள்ளும் வகையில் விடைதர முயல்கிறேன் என்று கூறியவர், எழுந்தார்.

    திரும்பி விடுவிடென்று விஜயாலயச் சோழீச்வரம் என்ற அந்த சிவாலயத்திற்குள் நுழைந்தார். வட்ட வடிவமானக் கருவறையின் மையத்தில் இந்த பிரபஞ்சத்தின் சிருஷ்டி கர்த்தாவான சிவனை வணங்கினார். மெல்லப் பின்னடைந்தார். பிரகாரத்தை ஒரு சுற்று சுற்றிவிட்டு உயரமானப் படிகளில் மெல்ல இறங்கினார். கண்களைச் சுருக்கி விமானத்தை வணங்கினார். கிருஷ்ணப்பருந்து அந்த கோவிலில் கோபுரக் கலசத்தை சுற்றிக்கொண்டிருந்தது. மனதிற்குள் சிவனின் நாமத்தை ஜெபித்தபடியே அப்பருந்தை வணங்கினார். மீண்டும் மேற்கேத் திரும்பி வானைப் பார்த்து, உயர்ந்து நின்றிருந்த கொடிமரத்தை வணங்கினார்.

    மீண்டும் திரும்பி நின்று தன்னைக் கேள்விக்கேட்ட ஈஸ்வரனைப் பார்த்தார். அவன் முகம் முழுவதும் பதிலை எதிர்பார்த்தபடி பணிந்து நின்றுகொண்டேயிருந்தான்.

    "இறை என்னவென்று ஒரு வார்த்தையில் கூறிவிட முடியுமா? ஒரு வார்த்தையில் அடங்கக்கூடிய பிரம்மாண்டமா இறை? இந்த உலகம், நட்சத்திரங்கள் அடங்கிய இந்தத்தொகுதி முழுவதும்

    Enjoying the preview?
    Page 1 of 1