Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Uyir Poo
Uyir Poo
Uyir Poo
Ebook74 pages27 minutes

Uyir Poo

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

உயிர்ப்பூ.. பாசத்தையும்,வாழ்வதின் சுவாரஸ்யத்தையும், நேர்மறை எண்ணங்களின் வலிமையையும் அற்புதமாக நமக்குள் இறக்கி விட்டிருக்கிறது. நேசிப்பு ஒன்றே சுவாசமான அம்மா, இப்படி ஒரு பெண் நம் வீட்டுக்கு வரமாட்டாளா என்று ஏங்க வைக்கும் புவனேஸ்வரி, கௌரி, வசந்தி, அம்முக்குட்டி என்று ஒவ்வொருவரும். உயிர்ப்பூதான்.

Languageதமிழ்
Release dateApr 2, 2021
ISBN6580111306800
Uyir Poo

Read more from Rishaban

Related to Uyir Poo

Related ebooks

Reviews for Uyir Poo

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Uyir Poo - Rishaban

    http://www.pustaka.co.in

    உயிர்ப்பூ

    Uyir Poo

    Author:

    ரிஷபன்

    Rishaban

    For more books

    https://www.pustaka.co.in/home/author/rishaban-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    1

    அலிபிரி. திருப்பதி.

    அம்மாவைப் பார்த்தேன். எனக்குத்தான் கொட்டாவி வந்தது. அம்மா உச்சியைப் பார்த்தாள் தலைக்கு மேல் கை உயர்த்தி கோவிந்தா என்றாள்.

    போலாமாடா

    அம்மா. இப்ப கூட லேட் இல்லை. உன்னால முடியுமான்னு யோசி

    சுரங்கப்பாதை மாதிரி அமைப்பு. இருபக்கமும் கையேந்திக் கொண்டிருந்தார்கள். அலுமினியத் தட்டில் சில்லறைகள் சப்தித்தன. அவர்களில் சிலர் அருகில் காசுப் பொட்டலம். 100 ரூபாய் கொடுத்தால் 90 ரூபாய்க்கு சில்லறை. அடுத்த ஆளுக்குப் போடுவதற்கு வசதி.

    அம்மா ஏற்கெனவே மாற்றி வைத்திருந்தாள். சிலருக்குத் தட்டில் போட்டாள். இன்னொரு முறை கை உயர்த்தினாள். நடக்க ஆரம்பித்து விட்டாள்.

    அம்மாவின் இந்தப் பிடிவாதம் எனக்குப் பழகிப் போனது. இல்லாவிட்டால் இத்தனை வருடங்களில் தனி ஒருத்தியாய் என்னை வளர்த்து ஆளாக்கி இருப்பாளா. வேட்டியை மடித்துக் கட்டிக் கொண்டு கூடவே நடக்க ஆரம்பித்தேன்.

    ‘அஞ்சு மணிக்கு ஏற ஆரம்பிச்சுட்டா ஒம்பத்துக்குள்ர மேலே போயிரலாம். உங்க தரிசன நேரம் ரெண்டு மணிக்குத்தான்.’

    ரேகை வைத்ததும் கிடைத்த நேரம் பார்த்து வாய் விட்டு யோசித்ததும் யாரோ அருகில் சொன்னார்.

    ‘முடியுமா’

    அம்மா சொன்னார். ‘வரவச்சது அவன். நேரம் கொடுத்தது அவன். தரிசனம் தரப் போறதும் அவன்’

    அம்மா கொஞ்சம் ரெட்டை நாடி. உரலில் அரைத்து முடிப்பதற்குள் வியர்த்துக் கொட்டும். ‘நீ தள்ளு’ என்று அரைத்துத் தந்திருக்கிறேன். டேபிள் டாப் கிரைண்டர் வருவதற்கு முன். அம்மாவின் ஒவ்வொரு சிரமத்தையும் இயந்திரங்களால் மாற்றித் தந்தபோது அப்படி ஒன்றும் புளகாங்கிதம் அடையவில்லை.

    ‘மிக்ஸி என்னாச்சும்மா’

    வாங்கி இரண்டு வருஷம் தான் ஆகியிருந்தது. காக்கா ஊச் ஆகி இருந்தது. ‘ரமா கஷ்டப்படறாளாம்’ அந்த ரமா சொந்தம் ஒன்றும் இல்லை. அம்மா இல்லாத பெண். பிரசவத்திற்கு அட்மிட் ஆனதும் அம்மாவுக்குத்தான் தகவல் வந்தது. ஓடினாள். சிஸெரியன். இப்போது நினைத்தால் மலைப்பாய் இருக்கிறது. எனக்கும் சமைத்து வைத்து விட்டு அவளுக்கும் உதவிக் கொண்டிருந்தாள்.

    அந்தப் பெண் குழந்தை வளர்ந்து இன்றைக்கும் பரிட்சை என்றால் முதல் நாளே அம்மாவிடம் வந்து ஆசி வாங்கிக் கொண்டு போகும்.

    ஒன்றா இரண்டா பிரமிப்புகள். இதோ இந்த நிமிஷம் மலை ஏறும் போது எங்களுக்கு முன் ஒரு தம்பதி.. மனைவி படிகளுக்கு மஞ்சள் குங்குமம் அப்பிக் கொண்டு.. பின்னால் கணவன் சூடம் வைத்தபடி.. அவர்களின் பெண் ஒரு மெழுகுவர்த்தியால் அதை ஏற்றிக் கொண்டு.

    ரகம் ரகமாய் மனிதர்கள். எல்லா சைசிலும். யாரிடமும் அலுப்பில்லை. விமர்சனம் இல்லை. மேலே ஏறிப் போனதும் பத்து செகண்டில் ஜரிகண்டி. இதற்கா இத்தனை பாடு என்கிற குயுக்தி இல்லை. அவன் பார்த்துப்பான்.

    ‘ரொம்ப நாள் வேண்டுதல்டா. போயிட்டு வந்துரலாமே’

    அம்மா தான் தார்க்குச்சி போட்டுக் கொண்டே இருந்தாள். இதோ அதோ என்று நாளைக் கடத்தி கடைசியில் வந்தே சேர்ந்தாகி விட்டது.

    350 படி ஏறிட்டோம் என்றேன் குழந்தை போல்.

    படியில் செதுக்கி வைத்திருந்தது. எங்களுக்கான மாற்றுத் துணிப் பை

    Enjoying the preview?
    Page 1 of 1