Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Vaa... Pon Mayile
Vaa... Pon Mayile
Vaa... Pon Mayile
Ebook132 pages1 hour

Vaa... Pon Mayile

Rating: 5 out of 5 stars

5/5

()

Read preview

About this ebook

வா பொன் மயிலே... நாவலின் நாயகி அதிதி ஒரு பேரழகி... ஒரு நர்ஸாய் வேலை பார்ப்பவள்... அனாதை ஆசிரமத்தில் வளர்ந்த பெண் இவள்... ஒருதலையாய் வருணை நேசிக்கிறாள். கருணை மனம் கொண்ட வருண் ஒரு இளைய ஜமீன்தாரர்!
ஒரு கட்டத்தில் படுத்த படுக்கையாய் கிடக்கும் வருணை யாராலும் காப்பாற்ற முடியாது. இவள் வந்தால் மட்டுமே அவனை காப்பாற்ற முடியும் என்று கெஞ்சி மன்றாடி இவளை அரண்மனைக்கு அழைத்துப் போகிறார்கள் வருணின் பெற்றோர்கள்...
அதற்கு என்ன காரணம்? அரண்மனையில் நிலவிய மர்மம் என்ன? வருணின் நிலைமைக்கு யார் காரணம்? அதிதியின் ஒருதலைக் காதல் என்னவானது? அதிதியால் ஆருயிர் காதலன் வருணை மீட்க முடிந்ததா? வசித்து தெரிந்து கொள்ளுங்கள்.
Languageதமிழ்
Release dateFeb 7, 2020
ISBN6580102604982
Vaa... Pon Mayile

Read more from Lakshmi Praba

Related to Vaa... Pon Mayile

Related ebooks

Reviews for Vaa... Pon Mayile

Rating: 5 out of 5 stars
5/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Vaa... Pon Mayile - Lakshmi Praba

    http://www.pustaka.co.in

    வா… பொன் மயிலே

    Vaa... Pon Mayile

    Author:

    லட்சுமி பிரபா

    Lakshmi Praba

    For more books

    http://www.pustaka.co.in/home/author/lakshmi-prabha-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    1

    ‘கருணை உள்ளம்' ஆசிரமம்...! பெரிய மரகேட்டை திறந்ததும்... மண்பாதை நேராய்ப் போகும். இருபுறமும் நெருக்கமாய் மரங்கள்... அடர்ந்த தோப்புக்குள் அமைதியாய் ஒளிந்திருந்தது ஆசிரமம்...! வெளியிலிருந்து பார்த்தால்... இப்படியொரு ஆசிரமம் இருப்பதே யாருக்கும் தெரியாது.

    வத்தலக்குண்டு ஊரைத் தாண்டி... மேற்கு தொடர்ச்சி மலையை சற்று ஒட்டினாற் போல் அமைந்த இடம் இது...!

    பெற்ற பிள்ளைகளால் நிராகரிக்கப்பட்ட பெற்றோர்கள்... ஆதரவற்ற முதியோர்கள்... இளம் பெண்கள்... சிறுவர், சிறுமியர்கள்... ஊனமுற்றவர்கள் என்று ஏராளமானவர்களுக்கு அடைக்கலம் தந்திருந்தது ‘கருணை உள்ளம்’ஆசிரமம்...!

    முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக இந்த ஆசிரமத்தை நடத்தி வருகிறார் பொன்னையன் ஐயா...! பெயருக்கு ஏற்றாற்போல் தங்கமான மனம் படைத்த மனிதர்... இவர் அப்படியொன்றும் பெரிய பணக்காரர் அல்ல...! ஆனால் பெரிய மனம் படைத்தவர். ஒற்றை மனிதராய் போராடி ஆசிரமத்தை நடத்தி வருகிறார். நல்ல உள்ளம் கொண்டவர்கள் அவ்வப்போது நன்கொடை அளிப்பார்கள்... இவராக சில செல்வந்தர்களிடம் உதவி நாடியதும் உண்டு...

    அக்கம் பக்கத்தில் இருப்பவர்கள்... இந்த ஆசிரமத்தைப் பற்றி கேள்விப்பட்டு... பிறந்த நாள், திருமணநாள், தீபாவளி, பொங்கல், புத்தாண்டு போன்ற விசேஷங்களுக்கு வருகை தந்து... ஒரு நாள் சாப்பாட்டு செலவை ஏற்றுக் கொள்வது வழக்கம்...! அந்த ஒரு நாளில்... உபயதாரர்கள் ஆசிரமத்திற்கு வந்திருந்து ஒரு வேளை உணவை உண்டு... சில மணி நேரங்கள் தங்கிச் செல்வார்கள். உபயதாரர்களின் பெயரில்... ஆசிரமத்தில் கூட்டுப் பிரார்த்தனை நடக்கும்...

    ஆசிரமத்தில் பிரார்த்தனை கூடம் ஒன்று விஸ்தாரமாய் இருக்கும். நடு நாயகமாய் தேர் போன்ற அமைப்பில்... பெரியதாய் வள்ளலாரின் படம்! ‘அருட்பெருந்சோதி... தனிப்பெரும் கருணை!’ என்ற வாசகம்... படத்தின் கீழ் எழுதப்பட்டிருக்கும். படத்தின் எதிரே... மண்ணாலான மிகப்பெரிய அகல் விளக்கு சுடர் விட்டு சதா பிரகாசிக்கும். கூடத்தின் மூன்று சுவர்களிலும் சித்தர்களின் படங்கள் வரிசையாய் மாட்டப்பட்டிருக்கும்.

    வள்ளலாரின் படத்திற்கு கதம்ப மாலையை கவனமாய் சாற்றினாள் அதிதி. அதன் கையாலேயே பறித்து நெருக்கமாய் தொடுத்த மாலை என்பதால்... சாற்றி முடித்ததும் சற்றே எட்ட நின்று பூ மாலையை ரசனையுடன் பார்த்தாள். இந்த மலர்கள் அனைத்தும், ஆசிரம வளாகத்தில் பறிக்கப்பட்டவை தான்...!

    செம்பருத்தி, செண்பகம், இருவாட்சி, சம்பங்கி, அடுக்கு மல்லி, ஜாதி மல்லி, செவ்வரளி, வெள்ளை அரளி, ரோஜா, முல்லை, சாமந்தி, பன்னீர் புஷ்பம், சங்கு புஷ்பம், பாரிஜாதம், துளசி, மரிக்கொழுந்து என்று ஏகப்பட்ட மலர்கள்...!’மூங்கில் கூடையில் இவைகளைப் பறித்து... காலை ஆறு மணிக்குள் அழகாய் தொடுத்தும் வைத்து விடுவாள்.

    பெரிய மண் அகலில் எண்ணெய் ஊற்றி திரியை நன்கு தூண்டி விட்டாள் அதிதி. அவள் இந்த ஆசிரமத்தில் வளர்ந்த பெண் தான்...

    இவளது விருப்பப்படி பிளஸ் டூ முடித்ததும்... நர்ஸிங் கோர்ஸில் சேர்த்து படிக்க வைத்தார் பொன்னையன் ஐயா. இவளும் முதல் வகுப்பில் தேறினாள். படிப்பு முடித்த கையோடு... மதுரையில் பிரபல மருத்துவமனையில் வேலை கிடைத்து விட்டது. கை நிறைய சம்பளம்... நல்ல இடத்தில் வேலை என்பதால்... இவளும் மகிழ்ச்சியோடு விடைபெற்றுச் சென்றாள்.

    விடை பெறும் போது... ஐயா! என்னை ஆசீர்வாதம் பண்ணுங்க ஐயா...! இது காலம் வரை உங்க கருணையாலே வளர்ந்தேன்...படிச்சேன்... நல்ல இடத்துல வேலை கிடைச்சிருக்கு... அங்கே வேலை செய்தா எனக்கு எக்ஸ்பீரியன்ஸ் கிடைக்கும்... என்றாள்.

    என் ஆசிர்வாதம் எப்பவும் உனக்கு உண்டு அதிதி...!

    உங்களையும் ஆசிரமவாசிகளையும் நான் வளர்ந்த ஆசிரமத்தையும் விட்டு பிரிஞ்சு போறேன். அதை நெனச்சாத்தான் எனக்கு தாங்கலை ஐயா! பொன்னையனுக்கு வள்ளலார் மீது தீவிர பக்தி. சித்தர்கள் எழுதிய பாடல்கள் என்றால்... அப்படியொரு ஈடுபாடு...!

    காலையிலும், மாலையிலும் தியானம் செய்வார். தியானத்தில் அமர்ந்து விட்டால்... சாமானியத்தில் அவர் எழுந்து கொள்ளவே மாட்டார். அவராக எழுந்தால் தான் உண்டு... யாரும் அவரை இடைஞ்சல் செய்யவே மாட்டார்கள். தியானம் முடிந்து அவர் எழும் போது... முகத்தில் தனி தேஜஸ் தெரியும். ஆசிரமவாசிகளுக்கு உடம்பு முடியாவிட்டால்... இவர் தான் மூலிகை மருந்துகள் கொடுப்பார்.

    வயதான பெண்மணி இவரை நாடி வந்தால்... என்ன தாயீ? காய்ச்சலா? தலைவலி தாங்கலையா? இந்த மருந்தை ரெண்டு வேளைக்கு போடுங்க... ராத்திரி சரியாயிடும் என்பார்.

    இளம் பெண் வயிற்றுவலி தாளாமல் துடித்தால்... இந்தா... இந்தப்பவுடரை வெந்நீரிலே கலந்து குடி...! உடனே நிவாரணம் கிடைக்கும் என்று கூறுவார். அவர் சொன்னது போலவே குணமாகிவிடும். மருந்தை தந்து விட்டு... விபூதியை எடுத்து அவர் பூசி விடுவார். ‘குணமாவது மட்டுமில்லை. அவர் சொல்வது அப்படியே பலிதமாகியும் இருக்கிறது’ என்று ஆசிரமவாசிகள் கூறுவார்கள்.

    அனுபவப்பட்டவர்கள் கூறுவதை இவள் ஆர்வமுடன் செவிமடுத்திருக்கிறாள்.

    ஆசிரமத்தை விட்டு விடை பெறும் முன் ஆசீர்வாதம் பெற பொன்னையனை இவள் நாடிய போது... அது தான் நடந்தது.

    உன்னாலே அங்கே தாக்கு பிடிக்க முடியாது. கூடிய சீக்கிரமே இங்கே திரும்பி வந்துடுவே அதிதி...! என்றார்.

    அதிதிக்கு ஒன்றும் புரியவில்லை.

    ‘ஐயா ஏன் இப்படி சொல்கிறார்? தியானம் முடித்த கையோடு இதை சொல்கிறார்... மற்ற ஆசிரமவாசிகள் சொல்வது போல்... இது பலித்து விடுமா? இவரது வாக்குக்கு ஒரு சக்தி உண்டு என்று அனைவருமே சொல்கிறார்களே? பிரபலமான மருத்துவமனையில் வேலை... கை நிறைய சம்பளம்... என் மனதுக்கு மிகவும் பிடித்து தானே அங்கு செல்கிறேன்? நான் ஏன் திரும்பி இங்கு வரப் போகிறேன்?’உள்ளூர கேள்விகள் முளை விட்டன.

    இவள் திகைத்து நின்றாள்.

    வேற...?

    நீங்க சொன்னது... எனக்கு புரியலைங்க ஐயா!

    மந்தகாசமாய் சிரித்தார் பொன்னையன்.

    இத்தனை வயசுல... எத்தனை எத்தனை அனுபவங்கள்? எனக்கே இன்னமும் புரிபடலை... சின்னப் பொண்ணு நீ...! உனக்கு எப்படி புரியும்?

    ஐயா...!

    போதாயீ...! எல்லாத்தையும் எடுத்து வச்சுக்கிட்டியா?

    வச்சுக்கிட்டேன் ஐயா...! போயிட்டு வர்றேன் ஐயா...!

    கைகளைக் கூப்பினாள்.

    இவளை ஒருமுறை தீர்க்கமாய் பார்த்தார்.

    உம்... வாம்மா...! என்றார்.

    ‘வாம்மா’ என்ற வார்த்தையில் ஒரு தனி அழுத்தம் தொனித்தாற் போலிருந்தது.

    இவளும்

    Enjoying the preview?
    Page 1 of 1