Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

நெஞ்சில் பதிந்த நிலவு!
நெஞ்சில் பதிந்த நிலவு!
நெஞ்சில் பதிந்த நிலவு!
Ebook131 pages46 minutes

நெஞ்சில் பதிந்த நிலவு!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

கருத்த வானில், மேகப்பொதிகள் திட்டுத் திட்டாய்ச் சிதறி மெல்ல மெல்ல நகரும் அழகை நட்சத்திரங்கள் கண் சிமிட்டியபடி ஆச்சரியமாய்ப் பார்த்துக் கொண்டிருந்தன.
 காற்றில் தவழ்ந்து வந்த பக்கத்து வீட்டின் முல்லைப் பூ மணம் நாசியை நிமிண்டியது.
 மாலினி, துணிகளை மடித்து அடுக்கி வைத்தபடி, அடிக்கடி ஜன்னல் பக்கம் எட்டிப் பார்த்தாள்.
 'நேரமாகிவிட்டதே... இவர் ஏன் இன்னும் வரவில்லை?' கவலை மனசை நிரடியது. சற்று நேரத்தில் அழைப்பு மணி அலறியது. ஓடிப்போய்க் கதவைத் திறந்தாள்.
 லேசாய்க் கண்கள் சிவந்திருக்க... அவளைப் பார்த்துத் தர்மசங்கடமாய்ச் சிரித்தபடி ரகு உள்ளே வந்தான். மாலினிக்குப் புரிந்தது. குடித்துவிட்டு வந்திருக்கிறான். சாப்பாட்டைச் சூடுபடுத்துவதற்காகச் சமையல் அறைக்குள் அவள் நுழைந்து கொள்ள... ரகு குளியலறைக்குள் புகுந்து கொண்டான்.
 ஐந்து நிமிடத்தில் சோப்பு மணம் கமழ... உடம்பைத் துடைத்தபடி மனைவியின் எதிரே வந்தமர்ந்தான்.
 "ஏங்க... இன்னைக்கு இவ்வளவு தாமதம்?"
 "நண்பன் வீட்டில் பிறந்தநாள் விருந்து. கட்டாயப்படுத்தியதால் கொஞ்சம் குடிச்..."
 "பரவாயில்லைங்க... அப்படியாவது உங்களுக்கு ஒரு சந்தோஷம் கிடைக்குதேங்கிற திருப்தி எனக்கு. அதே நேரம் உடம்பு கெட்டுவிடக் கூடாதேங்கிற பயமும் இருக்கு. அதிகமா குடிக்காதீங்க" என்றாள் கெஞ்சலாக.
 "சேச்சே... என்ன மாலினி நீ? நண்பன் கட்டாயப்படுத்தினதுக்காகத்தான் கொஞ்சம்..."
 "சரி. விடுங்க. வரத் தாமதமாச்சுன்னா வீட்டுக்கு ஒரு போன் பண்ணிச் சொல்லலாமே! இல்லாட்டி மனசு தேவையில்லாம கண்டதையும் நினைக்குது... பயப்பட வைக்குது."
 "எனக்கு என்னாகிடப்போகுது மாலினி! நீ கவலைப்படுறதும் பயப்படுறதும் உன் உடம்புக்கு ஆகாதுடா!""சரி... சாப்பிடுங்க!" தட்டு எடுத்து வைத்தாள்.
 "விருந்துக்குப் போனேன்னு சொன்னேனே! அங்கேயே சாப்பிட்டுட்டேன் மாலு!"
 "ஓ... மறந்துட்டேன்!"
 "நீ சாப்பிட்டியா?"
 "இல்லீங்க... நீங்க சாப்பிடாம நான் என்னைக்குச் சாப்பிட்டிருக்கேன்?"
 "இன்னுமா சாப்பிடலே! மணி பதினொண்ணு ஆயிடுச்சே! என்னம்மா நீ? உனக்கு எத்தனை முறை சொல்லியிருக்கேன்... எனக்காகக் காத்துக்கிட்டிருக்காதே, சாப்பிடுன்னு. ஏன் கேட்க மாட்டேங்கிறே? அதுவும் இன்னைக்குப் பிரதோஷம் வேறு. காலையிலேருந்து விரதம் இருந்திருப்பே! கொலைப் பட்டினி... அப்படித்தானே?"
 "……."
 "இந்த ஒரு விஷயத்திலேதான் உன்மேல கோபம் வருது. நாள், கிழமை ஒண்ணு விடுறதில்லே. வாரத்திலே அஞ்சுநாள்... சஷ்டி, செவ்வாய், துர்கை, ஆஞ்சநேயர்னு வரிசையா விரதமிருக்கே. கேட்டா, என் தாலி பலத்துக்காக என்கிறே. என்னம்மா இதெல்லாம்? எனக்கென்ன குறைச்சல்? தலைவலி, காய்ச்சல்னு என்னைக்காவது படுத்திருப்பேனா? உன் உடம்பை யோசிச்சுப் பார். தினம் தினம் உன்னைப் பத்திதானே கவலைப்பட்டுக்கிட்டிருக்கேன்! டாக்டர் என்ன சொன்னார்? நேரத்துக்குச் சாப்பிட்டு, மாத்திரை போடச் சொல்லலே?"
 "சரி... டென்ஷனாகாதீங்க! எல்லாப் பொண்ணுங்களும் ஒரே மாதிரிதான். புருஷன் மேல சின்னச் சிராய்ப்பு ஏற்பட்டால்கூட சாமிகிட்ட வேண்டிக்குவாங்க. என்ன... நான் கொஞ்சம் கூடுதலா என் கணவன் மேல பாசம் வச்சிட்டேன். மாத்திக்க முடியலே. மாத்தவும் முயற்சி பண்ணாதீங்க... விட்ருங்க!" என்றாள், கணவனின் கன்னத்தைச் செல்லமாய்த் தட்டியபடி.நாய்... நாய்டி நீ! நாய் வாலை நிமிர்த்த முடியுமா? சரி... சரி. நான் பரிமாறுகிறேன். நீ சாப்பிடு." தட்டை அவள் பக்கம் நகர்த்தினான்.
 "நீங்களா? வேணாங்க!"
 "ஏன்டி... விஷமா வைக்கிறேன்... இப்படி அலறுகிறே? ஒழுங்கா சாப்பிடு!" வலுக்கட்டாயமாய்ப் பரிமாற, சங்கோஜத்துடன் சாப்பிட்டாள், மாலினி.
 பளிச்சென்று ஒளிவீசிய விளக்கை அணைத்துவிட்டு இரவு விளைக்கைப் போட்டான்.
 "மித்ரா தூங்கி விட்டாளா?"
 "அவ ஒன்பது மணிக்கே தூங்கிட்டா?"
 "நேத்துதான் பிறந்த மாதிரி இருக்கு. அதுக்குள்ளே கிடுகிடுன்னு வளர்ந்துட்டா. பதினோரு வயசாயிடுச்சுல்ல, மித்ராவுக்கு!"
 "ஆனா, உங்களைப் பார்த்தா பதினோரு வயசுப் பொண்ணுக்கு அப்பா மாதிரியே தெரியலீங்க. புதுசா கல்யாணம் பண்ணிக்கப் போற இளவட்டம் மாதிரியே இருக்கீங்க!"
 "தத்துப்பித்துன்னு உளறாம தூங்கு. காலையிலே எந்திரிச்சு, வீட்டு வேலையில் பரபரப்பா இருப்பே... ஒரு வேலைக்காரி வச்சுக்கலாம்னா கேக்க மாட்டேங்கிறே..."
 "வேணாம்பா... இந்தக் காலத்துல வேலைக்காரிங்க சரி இல்லீங்க... நம்ம வீட்டுக்கு நான் ஒருத்தி போதும்!" அர்த்தத்துடன் சொல்லிவிட்டுப் படுத்துக் கொண்டாள்.

Languageதமிழ்
PublisherPocket Books
Release dateDec 13, 2023
ISBN9798223361152
நெஞ்சில் பதிந்த நிலவு!

Read more from R.Manimala

Related to நெஞ்சில் பதிந்த நிலவு!

Related ebooks

Related categories

Reviews for நெஞ்சில் பதிந்த நிலவு!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    நெஞ்சில் பதிந்த நிலவு! - R.Manimala

    1

    மனசைக் கொத்திய காட்சி, அது!

    எதிர் வீட்டுக் கைப்பிடிச் சுவர்மீது அமர்ந்திருந்த இரண்டு புறாக்கள்... அலகால் உரசியபடி காதல் பண்ணின. உடல் பயிற்சி செய்து கொண்டிருந்த அஸ்வின், சற்று நேரம் நிறுத்திவிட்டு... அந்தப் புறாக்களையே பார்த்தான்.

    ‘கொடுத்து வைத்த புறாக்கள். எந்த வித இடர்ப்பாடும் இல்லாமல் காதலிக்கின்றன. சாதி வந்து பிரித்து விடும், பணம் வந்து தடுத்துவிடும் என்ற பயமில்லை; பிறந்தால் பறவையாய், விலங்காய்ப் பிறக்க வேண்டும்.’

    இன்னுமா முடியலே! என்றபடி மொட்டைமாடிக்கு வந்தாள், அன்னம்மாள். வாளி நிறையத் துவைத்த துணிகள் காயப்போட வந்திருந்தாள்.

    ‘முடிச்சாச்சு! இன்னைக்கு என்ன சாப்பாடு, பாட்டி!? குளிச்சிட்டு அவசரமா வெளியே போக வேண்டிய வேலை இருக்கு!"

    நேற்றிரவுதானேப்பா பெங்களூரிலேருந்து வந்தே? ஓய்வெடுக்காம வெளியே போறேங்கிறியே?

    ஆபீஸ் வேலை பாட்டி! ஒரு மணி நேரம்தான். முடிச்சிட்டு, மதியம் வந்து சாப்பிட்டுவிட்டுப் படுக்கப் போறேன். அதோடு நாளைக் காலையில்தான் எந்திரிப்பேன். சரி, என்ன சாப்பாடுன்னு கேட்டேனே?

    சேமியா கிச்சடி!

    ஐயோ பாட்டி... கிச்சடியா? இது உப்புமாவுக்கு அக்காதானே? வேணாம்...

    பார்த்தியா... உனக்காகத்தானே சமைச்சேன்? வேண்டாங்கிறியே...

    போ... பாட்டி! உன் சமையலே எனக்குப் பிடிக்கலே... தாத்தாவுக்குக் காரம் ஆகாது, புளிப்பு ஆகாதுன்னு உப்பு சப்பில்லாம சமைக்கிறே! அம்மா சமைச்சாங்கன்னா... கண்ணுல தண்ணி வரும். அவ்வளவு காரமா சமைப்பாங்க

    தாத்தாவுக்குத் தனியா, உனக்குத் தனியா சமைக்கிற அளவுக்கு எனக்கு உடம்புல பலமில்லே, அஸ்வின். உனக்குன்னு ஒருத்தி வந்துட்டா... அவகிட்டே உன்னை ஒப்படைச்சிட்டு அக்கடான்னு உக்காருவேன். நீதான் விடாப்பிடியா பொண்ணெல்லாம் பார்க்கா தேங்கிறே!

    உன்னைத்தான் பார்க்க வேணாம்னு சொன்னேன். நானே பார்த்துக்கிறேன்!

    கலி முத்திடுச்சு... இந்தக் காலத்துப் புள்ளைங்க எவ்வளவு தைரியமா பேசுதுங்க கூச்ச நாச்சமில்லாம எங்க காலத்துல...

    தாத்தா உன்னை முதலிரவுலதான் முதன் முதலா பார்த்தாருன்னு ஆயிரத்தெட்டாவது முறையா சொல்லப்போறே! அதானே! போரடிக்குது... விட்ரு பாட்டி! நான் முடிவே பண்ணிட்டேன்... காதலிச்சுதான் கல்யாணம் பண்ணிப்பேன்!

    அந்தக் கருமத்தையாவது சீக்கிரம் பண்ணித்தொலை!

    எங்கே பாட்டி... எனக்காகவே படைச்சவளைப் பிரம்மன் இன்னும் என் கண்ணுலே காட்டலியே!

    உலக அழகி போலத் தேடுறியாக்கும்!

    ஊகூம்... மனசு அழகா இருக்கிற... என் தாத்தா, பாட்டியைப் பாரமா நினைக்காத, அன்பான உள்ளூர் அழகியைத்தான் தேடுறேன். நேரமாச்சு... நான் குளிக்கப் போறேன்!

    மாடிப்படியில் தடதடத்துக் கீழிறங்கி ஓடிய பேரனைச் சின்னச் சிரிப்புடன் பார்த்துக் கொண்டிருந்தாள், பாட்டி.

    ஐந்து ஆண்டுகளுக்கு முன் கோவிலில் எவனோ ஒரு தீவிரவாதி வைத்த வெடிகுண்டால் சிதறிய சின்னாபின்னமான முப்பது பேர்களில் இவனைப் பெற்றவர்களும் அடக்கம்.

    அன்று முதல் தாத்தா, பாட்டியிடம் தஞ்சமடைந்தான். பெற்றோரின் இழப்பால் அவன் மனதில் மலையளவு சோகம் இருந்தது. அதை வயதான இவர்கள் முன் வெளிப்படுத்திக் கொள்ள மாட்டான். வேண்டுமென்றே சீண்டிக் கிண்டலும், கேலியுமாய்த் தன்னை ஆனந்தமாய் இருப்பவனைப் போல் காட்டிக் கொள்வான். அவனது புன்னகை பூத்த முகத்தைப் பார்த்துதான் மகன், மருமகளின் கொடூர மரணத்தை நெஞ்சத்தின் அடியில் போட்டுப் பூட்டி நிம்மதியாய் இருந்தனர், பெரிசுகள்.

    அஸ்வின், ஒரு தனியார் நிறுவனத்தில் சம்பளத்தில் இருந்தான். விரைவில் பதவி உயர்வு காத்திருக்கிறது. அலுவல் விஷயமாக மாதத்தில் பாதி நாள் பெங்களூருக்குப் போய் வருவான்.

    எந்தப் பெண்ணையுமே வசீகரிக்கக் கூடிய அழகுடன், கம்பீரமாய் இருப்பான், அஸ்வின். பேரன் அழகாய் இருப்பதால் அன்னம்மாளுக்கு ஏகப் பெருமை.

    கொடியில் வந்தமர்ந்த காக்கையை விரட்டிவிட்டுச் சரிந்திருந்த முல்லைக் கொடியை இழுத்துக் கட்டினாள். மொட்டைமாடியில் பாதி இடத்தைத் தோட்டமாய் மாற்றிய பெருமை அஸ்வினையே சேரும். அவனுக்குத் தோட்டக் கலையில் மிகுந்த ஆர்வம் உண்டு. அக்கம் பக்கத்தில் இடைவெளியின்றி வீடுகள் இருந்ததால், கீழே பூமியில் செடிகள் வளர்க்கும் வாய்ப்பில்லை. அதனால் ஆசையை மொட்டை மாடியில் தீர்த்துக் கொண்டான்.

    மல்லி, முல்லை, ரோஜா, சாமந்தி, சூரியகாந்தி, நிறம் மாறும் ரோஜா என்று பலவகைப் பூச்செடிகளும், வெண்டை, பாகை, புடலங்காய், கத்திரி, தக்காளி, மிளகாய் மற்றும் கீரை வகைகளுமாய்... பார்க்கவே ரம்மியாய் இருக்கும்.

    எதுக்குப்பா இவ்வளவு செடி கொடிகளும்? நீ ஊர்ல இல்லாத நாள்ல பராமரிக்கச் சிரமமா இருக்கு!

    இதோ பாரு அன்னம்... என் தோட்டம் கொஞ்சம் வாடினாலும் உன்னைச் சும்மா விடமாட்டேன், ஆமாம்!

    காய்கறி, சமைக்கிறதுக்கு சரி... இதெல்லாம் எதுக்கு? இந்த வயசான காலத்துல பூச்சூடி அலங்காரம் பண்ணிக்கவா?

    ஆசையைப் பாரு... இங்கே பூக்கிற பூவெல்லாம் என் அப்பா... அம்மா படத்துக்குப் போடறதுக்கு... புரிஞ்சுதா?

    அவன் விளையாட்டாய்ச் சொன்னாலும் தினமும் பூத்தொடுத்துப் படங்களுக்கு மாலை போடும்போது நெஞ்சம் கனத்துப் போகும், அன்னம்மாளுக்கு.

    குளித்து முடித்து உடை மாற்றிக் கொண்டான், அஸ்வின். அவனைப் பார்த்ததும் படித்துக் கொண்டிருந்த தினத்தந்தியுடன் எழுந்தார் பெருமாள்.

    வா... வா... உனக்காகத்தான் காத்துக்கிட்டிருந்தேன்.

    எனக்காகக் காத்திருந்தீங்களா? ஏன் தாத்தா?

    சாப்பிடுறதுக்குத்தான். அன்னம்... தட்டு எடுத்து வை! இன்னைக்குக் கிழவி சூப்பரா கிச்சடி பண்ணியிருக்கா! என்றார், தாத்தா சப்புக் கொட்டியபடி.

    சூப்பரா... ம்... அதை நீங்களே சாப்பிடுங்க. நான் மித்ரா வீட்டுலே சாப்பிட்டுக்கிறேன், என்று புறப்பட்டான்.

    அடுத்த வீட்டுச் சமையல் உனக்கு உசத்தியாய்ப் போயிடுச்சா? ரொம்ப மாறிட்டேடா... என் பொண்ணு உயிரோடு இருந்திருந்தா... இப்படி...

    உஷ்... கணவனை அதட்டினாள், அன்னம்மாள்.

    என்னங்க நீங்க... பழசை ஞாபகப்படுத்திப் பேசிக்கிட்டு...

    பின்னே என்ன? வயசான காலத்துல நீ எவ்வளவோ கஷ்டப்பட்டுச் சமைக்கிறே! வீணாகுதில்லையா?

    இருக்கட்டும், விடுங்க... அவன் சுவைக்கு ஏத்த மாதிரி, பாவம், புள்ளையோட நாக்கு செத்துப் போயிருக்கும். அவனுக்கு ஒரு கல்யாணத்தைப் பண்ணிவச்சிட்டா நிம்மதியா மூச்சுவிடலாம்! என்றாள், அன்னம்மாள்.

    "சீக்கிரம் மாலினி, ஆபீசுக்கு நேரமாயிடுச்சு. தாமதமாகும்னா சொல்லிடு... வெளியே சாப்பிட்டுக்கிறேன்."

    ஆமா... நீங்க வெளியே சாப்பிட்டுக்குங்க. அதோ... உங்க சீமந்த புத்திரி இருக்காளே... அவளும் நேரமாயிடுச்சு... ஒரு தம்ளர் பால் மட்டும் கொடுங்கன்னு குடிச்சிட்டு ஓடட்டும். சமைச்சதையெல்லாம் தூக்கி என் தலையிலே கொட்டிக்கிறேன்! சமையலறையிலிருந்து கோபமாய்க் குரல் கொடுத்தாள் மாலினி.

    பேசிட்டிருக்கிற நேரம் சமைச்சு முடிக்கலாம்! கடிகாரத்தைப் பார்த்தபடி பேசினான், ரகு.

    அதுக்கு... நீங்க வாயைக் கொஞ்சம் மூடிக்குங்க... பொங்கல் செய்யுறேன்னேன். வேண்டாம்னீங்க... மாவு இருக்கு, இட்லி பன்றேன்னாலும், ‘எப்பப் பார்த்தாலும் தோசையும், இட்லியும் தானா? பரோட்டா, கோழிக் குருமா சாப்பிடணும் போலிருக்கு மாலினி!’ன்னு ஆசைப்பட்டிருக்கக் கூடாது. சரின்னு அவசர அவசரமாச் செய்தா... ஆயிரத்தெட்டுக் குறை சொல்றது. இதோ... குருமாவை இறக்கியாச்சு மித்ராவைக் கூப்பிடுங்க. மித்ரா... மித்ரா!

    மித்ரா! ரகுவும் குரல் கொடுத்தான்.

    அம்மா... மேசை மேலே நோட்டு வச்சிருந்தேனே பார்த்தியா? அறைக்குள்ளிலிருந்து குரல் மட்டும் வந்தது.

    "ஆமாம்டி... சமையலைப் பார்க்கிறதுக்கே நேரம் போதலே.

    Enjoying the preview?
    Page 1 of 1