Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Naan Endral Athu... Avanum Naanum!
Naan Endral Athu... Avanum Naanum!
Naan Endral Athu... Avanum Naanum!
Ebook154 pages54 minutes

Naan Endral Athu... Avanum Naanum!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

வாழ்க்கையைத் தேடுபவர்களை விட, வாழ்க்கையை இழந்துவிட்டு, அதன் நினைவுகளை தேடுபவர்கள் தான் பரிதாபமானவர்கள். இந்த நிலையில்தான் ரஞ்சிதம்மாள் தன் கணவரின் நினைவாக வைத்திருக்கும் பொருள் ஒன்றைத் தேடிச் செல்கிறாள். அப்பொருள் அவள் கையில் கிடைத்ததா? இல்லையா? என்பதைக் காண வாருங்கள் வாசிப்போம்...!

Languageதமிழ்
Release dateOct 28, 2023
ISBN6580140610228
Naan Endral Athu... Avanum Naanum!

Read more from R. Manimala

Related to Naan Endral Athu... Avanum Naanum!

Related ebooks

Reviews for Naan Endral Athu... Avanum Naanum!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Naan Endral Athu... Avanum Naanum! - R. Manimala

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    நான் என்றால் அது... அவனும் நானும்!

    (சிறுகதை தொகுப்பு - 3)

    Naan Endral Athu... Avanum Naanum!

    (Sirukathai Thoguppu - 3)

    Author:

    ஆர். மணிமாலா

    R. Manimala

    For more books

    https://www.pustaka.co.in/home/author/r-manimala

    பொருளடக்கம்

    குண்டு ஒண்ணு வெச்சிருக்கேன்!

    அப்பா என் மகனாய்...!

    சொல்லடி ஞானப்பெண்ணே!

    இதயம் பேசுகிறேன்

    நதியில்லா ஓடம்!

    ஒரு சொல் கொல்லும்

    வாராக்கடன்!

    தண்ணீர்... தண்ணீர்...

    என்... ஜன்னலில்!

    நான் பேச நினைப்பதெல்லாம்...!

    நான் என்றால் அது... அவனும் நானும்!

    நேற்றும்... இன்றும்!

    காதல் தேவதை சொன்னாள்

    இதுவும் கடந்து போகணும்...!

    காற்றடைத்த வீடு

    பூத்ததை யாரது பார்த்தது?!

    குண்டு ஒண்ணு வெச்சிருக்கேன்!

    நீ என் ஒய்ஃப் மட்டுமில்லே, க்ளோஸ் ஃபிரெண்டும்கூட. லவ் தப்பான விஷயமில்லை... நீ ஃப்ராங்க்காப் பேசலாம். அஃப்கோர்ஸ் எனக்கும் ஒரு லவ் அஃபேர் இருந்தது.

    படபடத்த மனசுக்குள் கொஞ்சம் வலிக்கவே செய்தது அவன் சொன்னது.

    அவ பேர் தேன்மொழி. ஹனின்னுதான் கூப்பிடுவேன். ரொம்ப அழகா இருப்பா... நீ அவளோட சாயல்ல இருக்கே. அதான் பார்த்ததும் ஓகே சொல்லிட்டேன். விசாகப்பட்டிணத்திலிருந்து நர்ஸிங் படிக்க இங்கே வந்தப்ப பழக்கம். என் ஃபிரெண்ட் வீட்டுக்கு எதிரே அவளோட ரிலேட்டிவ் வீட்ல தங்கியிருந்தா. என்னை ‘பாவா’ன்னு தான் கூப்பிடுவா. நான்னா அவளுக்கு அவ்வளவு பிடிக்கும். எனக்கு அதைவிட...

    ஒருநாள் பார்க்கலேன்னாலும் பித்துப்பிடிச்சிடற அளவுக்குக் காதல். அவ வீட்டுக்குத் தெரிஞ்சு ஜாதி, மொழின்னு சண்டையாகி அவளை சொந்த ஊருக்குக் கூட்டிட்டுப் போயிட்டாங்க. வீட்டுக்குத் தெரியாம மேரேஜ் பண்ணியிருக்கணும். பண்ணல... தப்பாப் போச்சு.

    அப்பப்பப் பேசிக்குவோம்... ரொம்பப் பாசமான பொண்ணு. மிஸ் பண்ணிட்டோம்ங்கிற வருத்தம் நிறையவே இருக்கு. என்னவோ தெரியலை, இப்ப எல்லாம் அவ பேசறதில்லை. போனும் ஸ்விட்ச் ஆஃப். ஆனா, உன்னைப் பாக்கறப்ப அவளே கிடைச்சிட்ட ஃபீல். சரி நீ சொல்லு, உன் ஆளோட பேர் என்ன? எப்படி பிரேக்கப் ஆச்சு?

    ரொம்பநாள் பழகியவனைப்போல படுகேஷுவலாகப் பேசியது திகைப்பைத் தந்தது.

    ‘எவ்வளவு தைரியமாய் இவர் காதல் கதையைச் சொல்கிறார். எனக்கொரு காதல் இருந்ததை மறைக்கவே முடியாதபடி நம்புபவரிடம் எப்படி இல்லை என்று சொல்வது? பிறகு என்றாவது தெரிய வந்தால்?’

    ஃபர்ஸ்ட் நைட் அதுவுமா இதைப் பற்றி பேசறேன்னு பயமா?

    இ... இல்ல... நான் எல்லாத்தையும் மறந்துட்டேன்.

    புரியல.

    அர்விந்தை...!

    அர்விந்த்? ஓ... உன் ஆள் பேரா?

    ப்ளீஸ், உன் ஆள் அப்படி இப்படின்னு வேண்டாமே!

    ஓ... தட்ஸ் குட். மேலே சொல்லு.

    அவள் சொன்னது நிர்மலுக்குப் பிடித்திருந்தது. இன்னும் நெருங்கி அமர்ந்தான்.

    என்ன பண்றார்?

    அவரும் விஜயவாடாதான்.

    ஓ... தெலுங்கா?

    ஆமாம்... ஆனா சொல்லிக்கிற அளவுக்கு எதுவுமில்லை!

    இப்ப அவர் என்ன பண்றார்?

    அவள் காதலை சுயநலமாய் பயன்படுத்தியவன் என்பதால் அவள் வரையில் காதலோடு சேர்த்து குழிதோண்டி புதைக்கப்பட்டவன். அதனால், ஹீ இஸ் நோ மோர் நவ். ஆக்ஸிடெண்ட்ல...

    திடுக்கிட்டுப் போனான் நிர்மல். ஆனால் மனசு ‘ஹா’வென நிம்மதியாய் மூச்சுவிட்டது.

    சரி... இதுக்கு மேல டைமை வேஸ்ட் பண்ண வேண்டாம். பட், ஒரே ஒரு விஷயம். எனக்கு உன்னை ரொம்பப் பிடிச்சிருக்கு. உனக்கு என்னை பிடிச்சிருக்கா? பால், பழம், ஊதுபத்தி சமாச்சாரங்களுடன் கட்டமைக்கப்பட்ட அந்தக் கேள்வியுடன் விளக்குடன் அவளையும் அணைத்தான்.

    ***

    நிர்மல் இப்படியொரு ஜென்டில் மேனாக இருப்பான் என்று சுகமதியே எதிர்பார்க்கவில்லை. அர்விந்த் பற்றி அதன்பிறகு மறந்தும்கூட பேசியதில்லை. அன்பை அள்ளி வாளி, வாளியாக அவள்மீது கொட்டினான். விதவிதமாகப் பரிசளித்தான். தனிக்குடித்தனம் வேறு... அரைநாள் லீவுக் கிடைத்தாலும் அவளை அமர்த்திக்கொண்டு ஊரைச் சுற்றினான்.

    ஆனால், அவளுக்கு வேறு விதத்தில் அவஸ்தையைத் தந்தான்.

    ***

    அன்று... சீக்கிரமே வீட்டிற்கு வந்தான் நிர்மல்.

    என்னங்க சீக்கிரமா வந்துட்டீங்க?

    பர்மிஷன் போட்டுட்டு வந்தேன் ஏன் தெரியுமா?

    ஏன்?

    என் செல்ல பொண்டாட்டிக்கு ட்ரீட் தரப்போறேன்.

    அவள் முகம் ஆச்சரியத்தில் விரிந்து அடுத்த கேள்வி கேட்கும்முன் முந்திக்கொண்டான்.

    நோ... நோ... ப்ரமோஷன் அது இதுன்னு கற்பனை பண்ணாதே! இது வேற சஸ்பென்ஸ்! டிரெஸ் சேஞ்ச் பண்ணிட்டு கிளம்பு...!

    அடுத்த சில நிமிடங்களில் உற்சாகமாய் பயணித்தாள்.

    கேண்டில் லைட் டின்னர்.

    அவளுக்குப் பிடித்த கேஷுவ்நட் புலாவ்வுடன் நிறைய உணவு பதார்த்தங்கள்.

    ருசித்தபடி கேட்டாள்... சொல்லுங்க, எதுக்கு இந்த ட்ரீட்?

    இன்னைக்கு என்ன டேட்?

    ஜூலை 19.

    என் ஹனியை இந்த நாள்லதான் ஃபர்ஸ்ட் டைம் மீட் பண்ணினேன்.

    முந்திரி, தொண்டையில் முள்ளாய் குத்தியது. இருமினாள்.

    ‘தண்ணிக் குடி சுகி... ஒவ்வொரு வருஷமும், இந்த நாளை பண்டிகை நாள் மாதிரி கொண்டாடுவோம். நம்மள மாதிரி புருஷன் பொண்டாட்டி யாரும் இருக்க மாட்டாங்க சுகி. நமக்குள்ள எந்த ஒளிவு மறைவும் இல்லாம உணர்வுகளுக்கு மதிப்பு கொடுத்து பரஸ்பரம் அப்படி அப்படியே ஏத்துக்கிட்டோம். நீயும் என்னை நல்லா புரிஞ்சுக்கிட்ட நம்பிக்கையான தோழி நீ! வேற என்ன சாப்பிடறே?

    போதும்ங்க!

    சாப்பிட்டதெல்லாம் நெஞ்சைத் தாண்டி இறங்காமல் அழிச்சாட்டியம் பண்ணி இம்சித்தது.

    ‘கல்யாணம் ஆன பின்பும் காதலித்தவளை மறக்காமல், சந்தித்த நாள், உட்கார்ந்த நாள், ஓடிய நாள் என்று எனக்கே ட்ரீட் தருபவரை என்னவென்று சொல்வது? இதுதான் ஆதர்ச தம்பதி என்பதன் அர்த்தமா? மனசு நிறைய அவளை சுமந்து...! பேசி விடலாமா இதைப் பற்றி?’

    வீடு திரும்பும்போதும் தேன்மொழி புராணம்தான். போதாதற்கு அவள் தலையில் கிரீடமும் சூட்டினான்.

    அடுத்தடுத்து நாகரிகப் பகிர்தல் என்ற பெயரில் அவன் தந்த ட்ரீட்டுகள் அவள் உள்ளத்தை ஈட்டியாய் தாக்கின.

    அவளுக்குப் பிறந்த நாள் என்று இவளுக்கு, அதுவும் தேன்மொழிக்குப் பிடித்த கலரில் உடைகள் வாங்கிக் கொடுத்து கடுப்படித்தான். இதெல்லாம் போதாதென்று அவளைப் பிரிந்த தினத்தை துக்க தினமாக அனுஷ்டித்து நாள் முழுக்கச் சாப்பிடாமல்... சுகியை நடுங்க வைத்தான்.

    சராசரி மனைவியைப்போல் கேட்க முடியாதபடி ஒரு சிறகை அவள் தலையில் சொருகி வைத்திருக்கிறானே... ஆனால், இதை இப்படியே விட்டுவிட முடியாதே! என்ன செய்யலாம்? யோசித்தாள்...

    ***

    அன்று... வழக்கம்போல் பாத்ரூமிலிருந்து கத்தினான் நிர்மல்.

    சுகி... சுகி...

    கொலுசு சத்தம் கேட்டதேயொழிய குரல் வரக் காணோம்.

    என்ன பண்றே? சீக்கிரம்...!

    வந்து நின்றாள்.

    டவல் வெக்கலையா?

    கதவை லேசாகத் திறந்து, நனைந்த கோழியாய் தலையை மட்டும் நீட்டிக் கேட்டான்.

    கையை உதறி ஓடியவள் டவலுடன் வந்தாள்.

    தேங்க்ஸ்.

    அவன் செல்போன் ரிங்கரித்தது.

    சுகி, விஸ்வநாதனாத்தான் இருக்கும். எடுத்து, பத்து நிமிஷத்துல வந்துடுவார்னு சொல்லு! நான் பேசினா லேட் ஆச்சுனு கத்துவான்.

    ம்ஹூம்.

    வாயைப் பொத்திக்கொண்டு மறுப்பாகத் தலையாட்டினாள்.

    என்ன?

    இடுப்பில் டவலுடன் வெளியே வந்தவன் புரியாமல் கேட்டான்.

    பல் வலியா? சொத்தைப் பல் இருக்கா என்ன?

    இல்லை, என்று தலையாட்டியதும் வியப்பாய் பார்த்தான்.

    அப்ப என்ன?

    போனும் கத்தி அடங்கிவிட்டது.

    சீக்கிரம் டிபன் எடுத்து வை! சீக்கிரம் கிளம்பணும் என்று சொல்லிவிட்டு வேகமாக உடையணிந்து அவள் பரிமாறிய பூரி மசாலாவைச் சாப்பிட்டான்.

    எக்ஸலன்ட்... நல்லா இருக்கு. நீ எப்படி பூரி சாப்பிடுவே? கஷ்டமா இருக்காது?

    நிஜமான வருத்தத்துடன் கேட்ட கணவனை நெற்றி சுருங்கப் பார்த்தாள்.

    பை சுகி... டேக் கேர். டின்னருக்கு வெளியே போகலாம், கஷ்டப்படுத்திக்காதே, முடியலேன்னா போன் பண்ணு!

    அவள் நெற்றியில் முத்தமிட்டு புறப்பட்டுவிட்டான்.

    ஒன்றும் புரியாமல் உதட்டைப் பிதுக்கி அடுத்த வேலைகளில் ஆழ்ந்து போனாள்.

    இரண்டு மணிநேரம் கடந்தபோது அவளது போன் கத்தியது. நிர்மல்தான்.

    எடுத்து, ம்ம்... என்றாள்.

    சுகி... என் ஆபீஸ் டிராயர் சாவி வீட்ல இருக்கா பாரு வர்ற வழியிலே மிஸ் ஆயிடுச்சோன்னு டவுட்.

    ம்... ம்... என்றவள் இங்கும் அங்கும் தேட... டைனிங் டேபிள்மீது

    Enjoying the preview?
    Page 1 of 1