Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Poovum Naanum Veru...
Poovum Naanum Veru...
Poovum Naanum Veru...
Ebook103 pages37 minutes

Poovum Naanum Veru...

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

மகேந்திரன் தன் மனைவிக்காகவும், தன் இரண்டு குழந்தைகளுக்காகவும் வாழ்ந்து வருகிறான். இவர்களது குடும்பம் நல்ல பேர், புகழுடன் வாழ்ந்து வந்தனர். அதில் ஓர் பூகம்பமாய் வந்தான் ஜேம்ஸ். யார் அந்த ஜேம்ஸ்? ஜேம்ஸால் மகேந்திரன் வாழ்வில் ஏற்பட்ட மாற்றம் என்ன? வாசிக்காலாமா...

Languageதமிழ்
Release dateNov 17, 2021
ISBN6580140606449
Poovum Naanum Veru...

Read more from R. Manimala

Related to Poovum Naanum Veru...

Related ebooks

Reviews for Poovum Naanum Veru...

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Poovum Naanum Veru... - R. Manimala

    https://www.pustaka.co.in

    பூவும் நானும் வேறு…

    Poovum Naanum Veru…

    Author:

    ஆர். மணிமாலா

    R. Manimala

    For more books

    https://www.pustaka.co.in/home/author/r-manimala

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author. All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    1

    வோல்டேஜ்

    குறைந்த பல்பாய் மழை மேகங்களின் நடுவே முகம் காட்டினான் கதிரவன். மகேந்திரன் குனிந்து ஜன்னல் வழியே வானத்தைப் பார்த்து யோசனையாய் நெற்றியைத் தேய்த்தான்.

    'மழை வருமோ?’

    யோசித்தபடி சட்டை பட்டன்களைப் போட்டுக் கொண்டு பேன்ட்டிற்குள் இன் பண்ணிக் கொண்டான். சுவரில் தொங்கிக் கொண்டிருந்த தினசரி காலண்டரில் நேற்றைய நாளைக் கிழித்துச் சுருட்டி ஜன்னல் வழியே வீசியெறிந்தான். முதல் தேதி பளிச்சிட்டது.

    அகிலா...

    இங்கிருந்தபடியே குரல் கொடுத்தான்.

    என்னங்க?

    "கேரியர் ரெடி பண்ணிட்டியா? டைமாய்டுச்சு

    இதோ… ஆச்சுங்க! என்றபடி மூன்றடுக்கு டிபன் கேரியரோடு வெளிப்பட்டாள் அகிலா.

    இடுப்பு சேலையை தூக்கி சொருகிக் கொண்டு, கலைந்த கேசமும், களைத்த முகமுமாய், ஒப்பனை இல்லாமலே மிக அழகாய் இருந்தாள் அகிலா.

    சட்டென அவள் இடுப்பில் மெல்ல கிள்ளினான் மகேந்திரன்.

    ஐயோ... என்னங்க இது? சிணுங்கினாள்.

    மகேந்திரன் அவள் இடுப்பை இரு கைகளாலும் வளைத்துப் பிடித்தான்.

    விடுங்க… கையிலே கேரியர் இருக்கு... விழுந்துடப் போகுது!

    தெரியும்! இப்ப தான் உன்னால தடுக்க முடியாதுன்னு எனக்கு நல்லாவே தெரியும். கேரியரை பத்திரமா பிடிச்சுக்க! நான் உன்னைப் பிடிச்சுக்கறேன்! மகேந்திரன் அகிலாவின் முகம் நோக்கி குனிந்தான்.

    அகிலாவினால் தடுக்கத்தான் முடியவில்லை.

    சில நொடிகள் இறந்தன.

    அகிலாவை விடுவித்தான்.

    ச்சீ... ரொம்ப மோசம்! முகம் சிவந்து போயிற்று.

    இந்த வார்த்தையைச் சொல்லும்போது நீ ரொம்ப அழகாயிருக்கே அகிலா! நீ எப்பவும் இப்படியே சொல்லிக்கிட்டிருக்கணும்! கண்ணடித்து விட்டுச் சிரித்தான்.

    நான் எப்பவும் இப்படியே சொல்லிக்கிட்டிருந்தா... நீங்க வேலைய ரிஸைன் பண்ணிட்டு வீட்லேயே உட்கார்ந்துக்க வேண்டியதுதான்!

    ரொம்ப நல்லதாப் போச்சு! வீட்டு வாசல்லேயே ஒரு பெட்டிக்கடை வச்சிட்டு... அப்பப்ப உன்னை முகம் சிவக்க வச்சிட்டுப் போவேன்!

    ஆபீஸ்க்கு டயமாய்டுச்சு... இப்படியே பேசிக்கிட்டிருக்காம... ஒழுங்கா கிளம்பற வழியப் பாருங்க!

    அதெப்படி அகிலா... எனக்கு நரைக்கவே ஆரம்பிச்சிடுச்சு... நீ மட்டும் நேத்துதான் கல்யாணமான பொண்ணு மாதிரி அப்படியே இருக்கே? அதுவும் ரெண்டு குழந்தைகளைப் பெத்த பிறகும்?

    நிஜமாகவா.. நான் அப்படியேவா இருக்கேன்?

    ஏன்... உன்னை நீ கண்ணாடியிலே பார்த்துக்கறதே இல்லையா? பெரிய பொண்ணு ரேவதிக்குப் பத்து வயசு ஆயாச்சு! அவ கிடுகிடுன்னு வளர்ந்துட்டா! உன்னையும் அவளையும் சேர்த்து வச்சுப் பார்த்தா, யாராவது அம்மா பொண்ணுன்னு சொல்வாங்களா? அக்கா தங்கைன்னுதான் சொல்வாங்க!

    ஆமாங்க... ரேவதி உங்களை மாதிரி வளர்த்தி! என்றாள் மெல்லிய வருத்தத்துடன்.

    நேத்துதான் கைக்குழந்தையா பார்த்த மாதிரி இருந்தது. அதுக்குள்ளே வளர்ந்துட்டா! காலம் ரொம்ப வேகமா ஓடுதில்லே?

    சரி... அதை விடுங்க! நான் உங்ககிட்டே எத்தனை முறை சொல்லியிருக்கேன்! உங்க தலையிலே அங்கங்கே நரைமுடி தெரியுது! டை அடியுங்கன்னு!

    ஏன் அகிலா... நான் இப்படியே உன்னோட வெளியிலே வர்றது உனக்கு அசிங்கமாயிருக்கா?

    சேச்சே... நான் அதுக்காக சொல்லலீங்க! முப்பத்தாறு முப்பத்தேழு வயசுதான் ஆகுது! ஆனா, நரைச்சிட்டதால... இன்னும் அதிக வயசான மாதிரி தெரியுது. அதுக்காகச் சொன்னேன்!

    அகில் குட்டி... உழைக்கிற ஆம்பளை எப்படி இருந்தா என்ன? பொண்டாட்டி அழகாயிருந்து... புருஷனை சந்தோஷப்படுத்தினா போதும்!

    நான் சொல்லி எப்ப கேட்டிருக்கீங்க? நீங்க ஆசைப்படற மாதிரிதானே... நானும் ஆசைப்படுவேன்? முகத்தை உம்மென்று வைத்துக் கொண்டாள்.

    அடடா... என் செல்லத்துக்குக் கோபமாக்கும்! இதோ பாருடா... நீ சொல்றது எனக்குப் புரியாமலில்லே! எனக்கு அதிலெல்லாம் விருப்பமில்லே! காலம் நமக்கு எந்தக் கோலத்தைக் கொடுத்தாலும் சந்தோஷமா ஏத்துக்கணும். தவிர, சிலபேருக்கு டை அடிச்சா... ஸ்கின் அலர்ஜியா ஆகிடும். எனக்கு அப்படியாகிடுச்சின்னா... அகோரமா இருக்குமே! தேவையா அதெல்லாம்? வீணா ரிஸ்க் எதுக்கு?

    நெகடிவ்வாகவே ஏன் நினைக்கணும்?

    சரி; அதை விடு! ரேவதி ஸ்கூலுக்குப் போய்ட்டாளா?

    அவ போய் அரைமணி நேரமாச்சு! அப்புறம் சொல்ல மறந்துட்டேன். கேஸ் தீர்ந்திடும் போலிருக்கு. போன் பண்ணிச் சொல்லிடுங்க! அப்பதான் ஒரு ரெண்டு நாளைக்குள்ளே சிலிண்டர் கொண்டு வந்து தருவான்!

    ப்ரீத்தி எந்திரிச்சிட்டாளா?

    பத்து மணிக்குக் குறைஞ்சு அவ என்னைக்கு எழுந்திருச்சிக்கா?

    இப்படியே பழக்கப்படுத்தாதே அகிலா! இன்னும் ஏழெட்டு மாசத்துல எல்.கே.ஜி.யிலே சேர்க்கப் போறோம். ஸ்கூல்ல போய் தூங்கி வழிவா!

    ஸ்கூலுக்குப் போனா சரியாய்டுவா! ஏங்க மழை வர்றமாதிரி இருக்கே? குடை எடுத்துட்டுப் போங்க!

    சரி... அப்புறம்... இன்னைக்கு ஒண்ணாந்தேதி! சம்பள நாள்! உனக்கு என்ன வேணும்னு சொல்லு.. வரும்போது வாங்கிட்டு வர்றேன்!

    "எனக்கு

    Enjoying the preview?
    Page 1 of 1