Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Kannathil Muthathin Eeram!
Kannathil Muthathin Eeram!
Kannathil Muthathin Eeram!
Ebook161 pages58 minutes

Kannathil Muthathin Eeram!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

பிரமோத்தும், மாதங்கியும் காதலித்து திருமணம் செய்து கொள்கிறார்கள். அஸ்வத் என்கிற மகன் பிறந்தான். காலத்தின் கட்டாயத்தால் இருவரும் பிரிய நேர்ந்தது. அவர்களின் பிரிவுக்கான காரணம் என்ன? இருவருக்கிடையில் அஸ்வத்தின் நிலை என்ன? என்பதைக் காண வாருங்கள் வாசிப்போம்...!

Languageதமிழ்
Release dateOct 28, 2023
ISBN6580140610227
Kannathil Muthathin Eeram!

Read more from R. Manimala

Related to Kannathil Muthathin Eeram!

Related ebooks

Reviews for Kannathil Muthathin Eeram!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Kannathil Muthathin Eeram! - R. Manimala

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    கன்னத்தில் முத்தத்தின் ஈரம்!

    (சிறுகதை தொகுப்பு - 2)

    Kannathil Muthathin Eeram!

    (Sirukathai Thoguppu - 2)

    Author:

    ஆர். மணிமாலா

    R. Manimala

    For more books

    https://www.pustaka.co.in/home/author/r-manimala

    பொருளடக்கம்

    அதுவரை காத்திருப்பேன்

    கல்யாணப் பரிசு

    வேண்டுமடி, நீ எனக்கு...!

    பரிகாரம்

    தாய் வலி

    வேலி

    கற்பு

    கௌரவம்

    தாய் வீடு

    மனம் விரும்புதே உன்னை

    மனித மிருகங்கள்

    சில நேரங்களில் சில நியாயங்கள்

    இரண்டாவது தாலி

    பெண்ணென்று ஏன் பிறந்தாய்?

    கண்ணே கனியமுதே

    கதாநாயகன்

    ஸ்டார்ட்... கேமரா... ஆக்ஷன்!

    கன்னத்தில் முத்தத்தின் ஈரம்!

    அதுவரை காத்திருப்பேன்

    குமாரை இறக்கிவிட்டுப் புழுதியைக் கிளப்பிவிட்டுச் சென்றது, பேருந்து.

    களைத்துப்போய் நடந்தவனைத் தடுத்து நிறுத்தியது ஒரு குரல்.

    என்னப்பா குமார், எப்படியிருக்கே? எல்லாத்தையும் கேள்விப்பட்டேன். மனசுக்குக் கஷ்டமா இருந்தது...!

    சரவணனின் தந்தை. நாலு தெரு தள்ளி வசிப்பவர்.

    என்ன விசாரிப்பு இது? கேள்விப்பட்ட பின்பும் எப்படி இருக்கே என்று கேட்க எப்படி மனசு வருது? இது ஆறுதலான விசாரிப்பா? இல்லை, கிண்டலா?

    ‘நல்லாருக்கேன்!’ அழுத்தமாய்ச் சொல்லிவிட்டு அதற்குமேல் எதுவும் பேசத் தோன்றாமல் ஒரு புன்னகையை உதிர்த்துவிட்டு வீடு நோக்கி நடந்தான்.

    பெண் இல்லாத வீடு! பொருட்கள் இங்குமங்குமாய் இறைந்து கிடந்தன. ஒழுங்குபடுத்தினான். காபி போட்டுக் குடித்துவிட்டு, பீரோவைத் திறந்து அந்த ஆல்பத்தை எடுத்தான்.

    அலுங்காமல் நலுங்காமல் அதற்கு வலிக்குமோ என்ற சிரத்தையோடு மெதுவாய்ப் பிரித்தான்.

    திருமணக் கோலத்தில் குமாரும், செல்வியும்.

    தன்னிச்சையாக விரல்கள் அந்தப் போட்டோவைத் தடவிக் கொடுத்தன.

    செல்வி! உதடுகள் மெல்ல உச்சரித்தன.

    நீ என்னை வெறுத்தாலும், அவமானப்படுத்தினாலும் ஸ்டில் ஐ லவ் யூ செல்வி! ஏன்... இப்படிச் செய்தாய்? மூடிய கண்களின் ஓரம் ஈரம் படர்ந்தது.

    செல்வி அவனின் முறைப்பெண். குமாருக்குத் தனியார் நிறுவனத்தில் குமாஸ்தா வேலை.

    செல்வி அழகானவள். அவள் படபடவென்று இமைகளைக் கொட்டி ஒரு பார்வை பார்த்தாலே போதும். ஆள் அம்பேல்!

    திருமணமானது. முதலிரவின்போதே செல்வியின் ஆடம்பர மோகம் வெளிப்பட்டது.

    இதென்ன ஃபேன், ஆஸ்துமா பேஷன்ட் போல இவ்ளோ மெதுவா ஓடுது? அந்தக் காலத்து ஃபேனா? புதுசா வாங்கிப் போடுங்க. அடுப்படியில் ஒரு டேபிள் ஃபேனும் இருந்தா நல்லது!

    ஏங்க... ஒரு பட்டுச்சேலை எடுத்துக்கட்டுமா? மாசம் நூறு ரூபாய் கொடுத்து அடைச்சிடலாம்!

    எத்தனை நாளைக்குத்தான் இந்தக் கறுப்பு டி.வி. யைப் பார்த்துக்கிட்டு இருப்பது? ஒரு கலர் டி.வி. வாங்கிடலாம்ங்க! இப்பல்லாம் நெறைய ப்ரோக்ராம் காட்றாங்க! அதெல்லாம் கலர்ல பார்த்தாதான் பந்தாவா இருக்கும்!

    அவன் சக்திக்கு மீறி ஆசை மனைவியின் அபிலாசைகளை ஓரளவுதான் நிறைவேற்ற முடிந்தது.

    ஒரு மிக்ஸி வாங்குங்களேன்!

    இப்ப எதுக்கும்மா அதெல்லாம்? கொஞ்ச நாள் போகட்டும். டி.வி., ஃபேன் வாங்கின கடனெல்லாம் முதல்ல அடையட்டும்!

    சே! ஒரு சின்ன ஆசையைக்கூட நிறைவேத்திக்க முடியலியே! அப்பவே தலைதலையா அடிச்சுக்கிட்டேன். கேட்டாத்தானே? பாவி... பெத்தவளே எனக்கு எமனா ஆயிட்டாளே! குமாரை கட்டிக்கடி... சொந்தம்விட்டுப் போயிடக் கூடாதுடி’ன்னு. ஒரேயடியா பாலைவனத்தில் தள்ளிவிட்டுட்டாளே... என் ஆசையென்ன? கனவென்ன? எல்லாமே கானல்நீரா போயிடுச்சே! ஒவ்வொரு பொருளுக்கும் யுகம் யுகமா காத்திருக்க வேண்டியதாகிவிட்டதே! என் விதி... யாரைச் சொல்லி என்ன இருக்கு?

    விடிந்தது முதல் படுப்பது வரை இந்தப் புலம்பல் இருக்கும். ஆசையோடு அவன் நெருங்கும்போதெல்லாம் அமிலமாய் வார்த்தைகள் வந்து விழும்.

    ஓகோ... நான் இதுக்கு மட்டும்தான் ஆளா? பொண்டாட்டி ஆசையா கேக்கிறாளேன்னு வாங்கித் தரத் துப்பில்லே! எந்த மூஞ்சியை வச்சுக்கிட்டு என்கிட்டே வர்றே?

    குன்றிப்போவான், குமார்!

    சே! ஏதாவது வாங்கிக் கொடுத்துவிட்டுத்தான் அவளைத் தொடணும்னா... அதுக்குப் பேர் என்ன? மனதில் வெறுப்பைவிட வேதனைதான் ஆக்கிரமிக்கும். செல்வியின் பிடிவாதத்தின்மீது சலிப்புத்தான் ஏற்படுமே தவிர, கோபமே வராது. அவளை ஒரு குழந்தை போலவே நினைத்தான். நாளுக்குநாள் பிடிவாதம் அதிகரிக்க... கவலைப்பட்டான்.

    அரசல் புரசலாகக் காதில் வந்து விழுந்த செய்திகளால் கலவரப்பட்டான். ஆனால், நம்ப மறுத்தான்.

    செல்வி யாருடனோ தொடர்பு வைத்திருக்கிறாள் என்பதுதான் அச்செய்தி.

    என்னதான் பிடிவாதக்காரியாக, அடங்காப்பிடாரியாக, உதாசீனப்படுத்துபவளாக இருந்தாலும், செல்வியை அந்தக் கோணத்தில் கற்பனை செய்ய மறுத்தான்.

    ஆனால்... அன்று...

    அந்த நாள் வராமலே இருந்திருக்கலாம். அந்தக் கண்றாவிக் காட்சியைப் பார்க்காமலே இருந்திருக்கலாம். ஆனால், எல்லாவற்றையும் மீறிய சக்தி ஒன்றிருக்கிறதே...!

    ஆபீஸ் பைலை மறந்து வைத்துவிட்டுப் போன தன் மறதியை நொந்துகொண்டே வீட்டிற்கு வந்த குமாரின் கண்கள் பாவம் செய்தவை.

    கட்டிலில் செல்வி வேறு ஓர் ஆடவனுடன்... எந்த தைரியத்திலோ தாழ்கூடப் போடாமல்...

    மனம் பொங்கிச் செயலற்று, சந்தடியின்றி வெளியேறித் தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டு அவர்களுக்காகக் காத்திருந்தான்.

    செல்வி பெரிதும் திடுக்கிட்டுப் போனாள். அவனை ஏறிட்டுப் பார்க்கவே அச்சப்பட்டாள்.

    அவன் சங்கர்! இப்படியொரு அதிர்ச்சியை எதிர்பார்க்கவில்லை.

    அங்கு அசாத்திய மவுனம் நிலவியது.

    மேலும் அதை நீடிக்கவிடாமல் குமாரே கலைத்தான்.

    செல்வி! எந்தக் கணவனும் பார்க்கக்கூடாத ஒரு விபத்தை நான் பார்த்துட்டேன். இந்த விபத்துக்கு உன்னை மட்டுமே காரணமா சொல்ல மாட்டேன். ஒருவேளை உன்னோட அன்பை முழுசா பெற நான் சரியா முயற்சிக்காததும்கூட இருக்கலாம். எது எப்படியோ... இன்னும் நீ என் மனைவிதான். இதெல்லாம் நீ முழு மனசோட சம்பந்தப்பட்டு நடந்ததா என்பதெல்லாம் எனக்குத் தெரியாது. இதை நீ சபலப்பட்டுச் செஞ்சிருந்தா... இப்பவும்கூட எல்லாத்தையும் மறந்து நாம வாழலாம். இல்லை... இதுநாள் வரைக்கும் என்னோடு போலித் தனமா வாழ்ந்து... மனப்பூர்வமா இப்படியொரு தப்பு... இல்லை... விபத்து நடந்திருந்தா... நீயே ஒரு முடிவுக்கு வா... எனக்கு ஆபீசுக்கு நேரமாச்சு. நான் வர்றேன்!

    குமாருக்கு ஆச்சரியம்! எப்படி இவ்வளவு பொறுமையாக இருந்தேன்? என் இதயமே எரிமலையாக வெடித்துவிட்ட பின்பும் அந்த தீக்கங்குகள் என் வார்த்தையில் வெளிப்படவில்லையே... ஏன்?

    ‘செல்வி... செல்விதான்! என் உயிர் முழுக்க அவள் ஆக்கிரமித்திருப்பதால்... எனக்குக் கோபமே வரலியா? என்ன முடிவு எடுப்பார்கள்? என் செல்வி எனக்கு மீண்டும் கிடைப்பாளா?’

    குழந்தையாய்ப் பரிதவித்தான், குமார். மாலையில் அவன் வீட்டிற்கு வந்தபோது மேசை மேல் கடிதம் வைக்கப்பட்டுப் பறந்துவிடாமல் இருக்க அதன் மேல் அலாரம் வைத்துவிட்டு, அவள் பறந்துவிட்டாள்.

    "குமார்! சங்கர் நம் திருமணத்திற்கு முன்பே என் அன்புக்கு உரியவர். சந்தர்ப்ப சூழ்நிலை, வற்புறுத்தல் காரணமாக உங்களை மணக்க நேர்ந்தது. சங்கர் வசதியானவர். இன்னமும் என் நினைவால் வாடுபவர். இதயத்தில் புகைந்துகொண்டிருந்த எங்கள் காதல் மீண்டும் பற்றிக்கொண்டது.

    விரைவில் தெரியப்படுத்தி உங்களிடமிருந்து விலகிவிட நினைத்தேன். ஆனால்... அதற்குள்? ஒருவகையில் இதுவும் என் நன்மைக்குத்தான். எங்களுக்கு ஒரு மறுவாழ்வை ஏற்படுத்தித் தந்த உங்களுக்கு நன்றி!

    இப்படிக்கு

    செல்வி சங்கர்.

    இதயத்தில் ‘சுருக்’கென்ற வலி, குமாருக்கு! செல்வி சங்கர்! அவ்வளவு சீக்கிரத்திலா?

    சிகரெட் கையைச் சுட்டதும் சுயநினைவிற்கு வந்தான், குமார்.

    ‘நான் நம்புகிறேன், செல்வி! என்றைக்காவது ஒருநாள் நீ என்னிடம் திரும்பி வருவாய். சங்கர் பற்றி நான் கேள்விப்பட்டவரை அவன் நல்லவன் இல்லை. உன் அழகும், இளமையும்தான் அவன் தேவை! அந்த ஆசை ஈடேறிய பின் அவன் உதறி விடுவான். அப்போதாவது இந்தக் குமாரின் காதலை மதித்தால்... நீ வா! வருவாய்... என் காதல் ஆதாயம் தேடாதது. தூய்மையானது. அது நிச்சயம் உன்னை என்னிடம் சேர்க்கும். அதுவரை காத்திருப்பான், இந்தக் குமார். எத்தனை காலம் ஆனாலும் சரி! வருவாயா, என் கண்மணி?’

    குமாரின் கன்னத்தில் இருந்து உருண்ட நீர் தரையில் விழுந்து நட்சத்திரமாய்க் கோலம் போட்டது.

    கல்யாணப் பரிசு

    கோமதியின் நெடுநாள் கனவு இப்போதுதான் நிறைவேறியது. இரண்டு கிரவுண்டில் ஒரு அடுக்கு மாடி கொண்ட அழகான வீடு. கதவும், ஜன்னலும் தேக்கு மரத்தால் இழைத்தவை.

    வீட்டின் பின்பக்கம் நாலு தென்னை, இரண்டு மாமரங்கள், முன்பக்கம் சப்போட்டாவும், ஆரஞ்சும். பக்கவாட்டில் கீரை, காய்கறித் தோட்டம்.

    ஒட்டு மொத்தமாய் எல்லோருக்குமே பிடித்துவிட... நாலு லட்சத்திற்கு விலைக்கு வந்த இந்த வீட்டை வாங்கிவிட்டனர். யோகநாதனின் ஹவுஸிங் லோன், அவன் தங்கை அன்னலட்சுமியின் பாங்க் சேவிங்ஸ், கோமதியின் நகைகள் எல்லாமுமாக வீடாக உருமாறின.

    கட்டிலும், பீரோவும் மட்டும்தான் இடம் தேடி அமர்ந்திருந்தன. மீதிச் சாமான்கள் மூட்டை மூட்டையாய்க் கொலுவீற்றிருக்க... அன்னலட்சுமி கூடையில் இருந்த சாமான்களை எடுத்து ஷெல்ப்பில் அடுக்கிக் கொண்டிருந்தாள்.

    தற்செயலாகப் பின்பக்கத் தோட்டத்தைப் பார்த்த கோமதி, நெற்றி சுருங்க நின்றுவிட்டாள்.

    "லட்சுமி...

    Enjoying the preview?
    Page 1 of 1